நெல்லைத்தமிழன் :
பத்திரிகைகள்லாம் ரொம்ப தைரியசாலியாகவும் நேர்மையாகவும் செய்திகள் வெளிவிடுவதாகச் சொல்லுபவர்கள், ஏன் 'பிரபல ஜவுளிக்கடைகளில் ஐ டி ரெய்டு' என்று மொட்டைத் தலைப்பைக் கொடுக்கிறார்கள்? விளம்பரம் என்ற லஞ்சம் வாங்குவது கெட்டுப்போய்விடும் என்பதனாலா?
$ அது பத்திரிகை(அ)தர்மம். கேஸ் எப்படி முடியும் என்பதறியாமல் எப்படி குறிப்பிட்டு சொல்ல முடியும் ?
& விளம்பரம் என்பது லஞ்சம் அல்ல. ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் அந்தந்த நிறுவனத்தினர் ஒரு விளம்பரக் கட்டணம் வைத்திருப்பார்கள். அதை செலுத்தியே நிறுவனங்கள் விளம்பரம் வெளியிடுகிறார்கள். $ குறிப்பிட்டிருப்பது போல கேஸ் என்னவாகும் என்று தெரியாமல் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டால், நிறுவனம் தவறு செய்யவில்லை என்று கோர்ட்டில் தீர்ப்பு வந்துவிட்டால், நிறுவனம் அவதூறு செய்தி வெளியிட்டதற்காக பத்திரிக்கை மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர இயலும்.
நீங்கள் கடைசியாக (லேடஸ்டாக) தாவணி அணிந்த பெண்ணை எங்கு பார்த்திருக்கிறீர்கள்?
& நவம்பர் ஆறாம் தேதி அன்று, பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்தேன்.
# எந்த சினிமா என்று நினைவில்லை.
= = = = =
நேற்றைய பதிவில் வெளியான சுசீலாவின் படம் :
இந்தப் படத்திற்கு, துரை செல்வராஜு அவர்கள் எழுதி அனுப்பிய கவிதை இங்கே.
ஆரூரின் அழகு தனை
அள்ளி வந்த அணி மலரே
அழகுக்கு அர்ச்சனையாய்
அன்புக்குள் அருள்முகமே..
பின்னலிட்ட கூந்தலுக்குள்
ஒரு பூவாய் ஒளிந்திருக்க
மின்னலிடும் காதணியில்
ஒரு துகளாய் ஒளிர்ந்திருக்க..
நீள்முகமும் நெடுவிழியும்
நினைவுக்குள் தடுமாறும்
நெஞ்சகமும் கடலாகி
நித்தமொரு கவிபாடும்..
ஒரு வார்த்தை கூறாயோ
கரு விழியால் பாராயோ
புன்னகையை வீசாயோ
புது மலராய் பேசாயோ..
கவிதைக்குக் கவிதையாய்
கவி தந்த தமிழுக்கு
பரிசு எந்தன் பரிசு என்று
என் கவியைக் கேளாயோ..
சுந்தரர்க்குத் தூதுசென்ற
சுந்தரனும் தானுவந்து
சூட்சுமமாய் சூழ்ந்திருக்க
ஒருவரமும் தாரானோ!..
= = = = =
கீழே உள்ள கவிதையை நேற்றைய பின்னூட்டத்தில் எழுதிய >1/2 யார் ?
சுந்தரியே - உன் பெயர் என்ன ?
சுசீலாவா !
சும்மா இருந்த கவிஞர்களை
சுனாமியாய் எழ வைத்துவிட்டாயே !
= == = = = =
எங்கள் கேள்வி :
உங்களுக்கு எந்தப் பொருளின் விளம்பரங்களைப் பார்க்கும்போது, அந்தப் பொருளை வாங்கவேண்டும் என்று தோன்றும்?
ப பா க எ :
1)
2)3)
= = = = = = = = =
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்..
பதிலளிநீக்குதமிழ் வாழ்க..
அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
நீக்குவாழிய நலம்..
வாழிய வாழியவே !
நீக்குஇன்றே கவிதையைப் பதிவிட்ட தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு//சும்மா இருந்த கவிஞர்களை..//
பதிலளிநீக்குகவிஞர்கள் சும்மா இருப்பதில்லை..
இருந்தால் -
உலகம் சுகமாய்
இருப்பதில்லை!..
அதைச் சொல்லுங்க!
நீக்குஎழுதத் தெரிந்தவர்கள்
பதிலளிநீக்குஎழுதினால் என்றைக்குமே
கவிதைக்கு கை கால் முளைத்து
கூத்திடுகிறது தான்!
நம் மனமும்
கூத்தாடுகிறது தான்!
இன்னொருவரது கவிதையும் வெளியாகியிருப்பதால் தனித்தனியே கருத்து சொல்லியிருக்கலாம்..
நீக்குஜீவி சார் சொல்லியிருப்பது முதல் கவிதையாகிய உங்கள் கவிதைக்குத்தான். பின்னவர் 'அரைகுறை' என்று அவரே போட்டுக்கொண்டிருக்கிறாரே!
நீக்குஎழுதத் 'தெரிந்தவர்கள்'
நீக்குஎன்றதினால்
பன்மையென்று தமிழ் இலக்கணம் பகர்கிறது
பொதுவாகச் சொல்லுதல்
பொதுமை விரும்பிகளின்
வேட்டலுமாம்...
//சுந்தரியே - உன் பெயர் என்ன ?
பதிலளிநீக்குசுசீலாவா?..//
இல்லை..
சுந்தரி!..
சிங்காரிதான் காவேரி
நீக்குகாவேரிதான் சிங்காரி
கண்ணால் கண்டவள் காவேரி
கலந்துகொண்டவள் சிங்காரி!
கதையொன்றுக்குக் கருவிது
நீக்குஎபி வாசகர் 'உவ்வே: சொல்லார் எனில்
முயற்சிக்கிறேன்
வார இதழ் போல
எபி மலர்வதென்பது
காலத்தின் கட்டாயம்
அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குதம்பி துரையின் கவிதை எப்போதும் போல் சரளமாக இயல்பான வார்த்தைகளால் புனையப்பட்டிருக்கிறது. பாராட்டுகள். பரிசு உண்டா?
பதிலளிநீக்கு//எப்போதும் போல் சரளமாக இயல்பான வார்த்தைகளால் புனையப்பட்டிருக்கிற து..//
நீக்குதங்கள் பாராட்டிற்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..
பாராட்டுகளே பரிசு மழை. பாராட்டுவோம்.
நீக்குதாவணி அணிந்த பெண்களை இப்போதெல்லாம் கிராமங்களில் கூடப் பார்க்க முடிவதில்லை. எல்லோருமே சல்வார்/குர்த்தா தான். தமிழக பாஷையில் சூடிதார். :) இரண்டுக்கும் வித்தியாசம் இங்கே தெரியாது. போகட்டும். தொலைக்காட்சித் தொடர்களில் சுமார் 25/30வயதுள்ள கதாநாயகியாய் நடிக்கும் பெண்ணிற்குக் கதைப்படிச் சின்ன வயது எனக்காட்டுவதற்காகப் பாவாடை/தாவணியை மாட்டி விடுவாங்களே! அந்தத் துணி அதற்குப் பேர் தாவணியா? ஒரே ஒரு முழம் நீளமுள்ள துண்டு போலத்தான் இருக்கும். இடுப்பைச் சுற்றி முக்கோண வடிவத்தில் ஒரு அரை முழம் வந்திருக்கும். மேலாக்கு ஒரு முழ நீளம்! இதுக்குப் பேர் தாவணி. பாரம்பரிய முறைப்படி தாவணி அணிந்த பெண்களை இப்போது பார்ப்பது கடினம்.
பதிலளிநீக்குஎங்களைவிட கீசா மேடம் இவ்வளவு கூர்மையாக இதையெல்லாம் கண்குத்திப் பாம்பாய் கவனித்துள்ளாரே.... ஆச்சர்யம்தான்
நீக்குஎனக்கும் அதுதான் ஆச்சரியம்!!
நீக்குசாயங்காலம் ஏழு மணியில் இருந்து உட்கார்ந்து அவ்வப்போது பார்த்துக் கேட்டுக் கொண்டும் இருக்க வேண்டி இருக்கே! :( அப்போத் தெரிஞ்சுக்கறது தான்!
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குஆம். உண்மைதான்.. தங்களின் கணிப்பு சரிதான். நம் காலங்களில் தாவணி போடுவதின் மரபே வேறு. இடுப்பில் இடது பக்கம் வரும் இரண்டு மூன்று கொசுவங்களுடன் அரை புடவையளவுதான் (தாவணி துணியும் அவ்வளவு இருக்கும்) நானெல்லாம் தாவணி போட்டிருக்கிறேன். அதன் பிறகு திருமணம் நிச்சயமானவுடன் புடவைக்கு மாறியதுதான். தாவணி போடுவதே தவறென ஆகி விட்டது. அதன் பின் இந்த வி. ஷேப் தாவணிகளை நானும் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன். காலங்கள் என்ற பெயரில் எல்லாமே மாறி வருவதை நாம் பார்த்துத்தான் வளர்ந்து வந்திருக்கிறோம். என்ன செய்வது? நன்றி.
நன்றியுடன்.
கமலா ஹரிஹரன்
இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு என்னும் பெயரில் எம்.பி. திருச்சி சிவா நேற்று நடத்திய போராட்டம் கடைசியில் இந்திப்பாடலோடு முடிந்ததை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்?
பதிலளிநீக்குஅரசியல்வியாதிகள் நிகழ்ச்சிகள் எதையும் பார்ப்பதில்லை. நேரத்தை வீண் செய்வதில்லை.
நீக்குIt was in the news channels. :D
நீக்குஹிந்தி படித்தாலோ/தமிழகத்தில் கொண்டு வந்தாலோ என்ன ஆகிவிடும் எனப் பயப்படுகின்றனர்? அனைத்துத் தனியார் பள்ளிகளும் ஹிந்தி கற்பிக்கின்றனர். ஆளும் கட்சியினரால் நடத்தப்படும் பள்ளிகள் உள்பட. ஆளும் கட்சியினரின் குழந்தைகள் ஹிந்தி படிக்கின்றனர். அப்படி இருக்கையில் சாமானிய மக்கள் படித்தால் என்ன ஆகி விடும்?
பதிலளிநீக்கு//சாமானிய மக்கள் படித்தால் என்ன ஆகி விடும்?..//
நீக்குதமிழ் அழிந்து விடும் - என்று அவர்கள் சொல்கின்றார்கள்..
இவர்கள் ஆட்சியில் அழிந்ததை விடவா?..
சாமானிய மக்கள் படித்தால்.... வடவர்கள் இங்கு தேர்தல் பேச்சுக்களுக்காக வந்து உண்மைகளை மக்களுக்குப் புரியவைத்துவிட்டால்?
நீக்குஇப்போ தபிழிலேயே அண்ணாமலை அதனைச் செய்கிறாரே என்று கேட்கிறீர்களா?
பதில் அளிப்போம்.
நீக்கு
பதிலளிநீக்குஇந்திக்கு ..... கட்டுவோம்!...
தமிழுக்கு மேடை கட்டுவோம்..
67 அரசியலில் இந்த ஓலத்தைக் கேட்டிருக்கலாம்...
இவர்கள் தமிழுக்குச் செய்தது என்ன?..
மசாலா பொட்டலத்தில் கூட தமிழ் இல்லாத ஆச்சர்யம் தான் இவர்கள் ஆட்சியில்!...
:))))
நீக்குகாலையில்... பெண்ணைப் பற்றிய கவிதையா? கவிதை என்னவோ சரளமாகத்தான் இருக்கு
பதிலளிநீக்குபின்னே எப்போ?
நீக்கு// காலையில்... பெண்ணைப் பற்றிய கவிதையா?..//
நீக்குபின்னே எப்போ !
நீக்கு//நிறுவனம் தவறு செய்யவில்லை// அப்போ அப்பாவிகள் மாத்திரம்தான் தவறு செய்வார்கள் போலிருக்கு.
பதிலளிநீக்குதனக்குப் பணவரவைக் கொடுப்பவர்களைப் பாதுகாப்பதுதான் பத்திரிகையாளர்கள் பணி போலிருக்கிறது. கவர் வாங்கிச் செய்திகளைக் கவர் செய்பவர்கள் அல்லவா?
:)))
நீக்குகேஸ் எப்படி முடியும் என்பது தெரியாமல் அரசியல்வாதிகளைப் பற்றி எழுதுவது மாத்திரம் சரியான செயலா இல்லை ஒரு கட்சியிடம் லஞ்சம் பெறுவதால் அப்படி எழுதுகிறார்களா?
பதிலளிநீக்குஅப்படித்தான் இருக்கவேண்டும்!
நீக்குவாவென்று கூறாமல் வருவதில்லையா - காதல்
பதிலளிநீக்குதாவென்று கேளாமல் தருவதில்லையா...
சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா - இன்பம்
சுவையாக சுவையாக வளர்வதில்லையா...
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா - இது
பூவாடை வீசி வர பூத்த பருவமா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குதாவணி அணிபவர்களை இழிவாக பார்த்து ஒதுக்குகின்ற கலிகாலம் இது.
பதிலளிநீக்குகுவைத் ஜி அவர்களின் கவிதை தாவணியை விட அழகு.
// பாராட்டுகளே பரிசு மழை. பாராட்டுவோம்..//
பதிலளிநீக்கு# இந்தப் பூமாலையை பொன் மாலையாக #
பள்ளி இலக்கிய விழா மேடைகளில் கேட்டது!..
//மணிமாலையை மாணிக்க மாலையாக அணிகிறோம்//
நீக்குஇப்படியும் பொய் சொல்வார்களே...
ஆம்.. ஆமாம்!..
நீக்கு:))))
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய கவிதை நன்றாக உள்ளது. ஒரு புகைப்படத்தை பார்த்தவுடன் கவி பாடும் அவர் திறமைக்கு தலை வணங்குகிறேன். அவருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
படங்களும் நன்றாக உள்ளது. "அச்சமில்லை. அச்சமில்லை" என்ற பாரதியின் பாட்டுக்கு மூன்று உதாரணங்கள் போல் இன்றைய படங்கள் அமைந்துள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்கு
பதிலளிநீக்கு//ஒரு படத்தை பார்த்தவுடன் கவி
எழுதும் //
அந்தப் படத்திற்குள் உயிர் உள்ளது..
அது இல்லாவிட்டால் என்னைப் பொறுத்தவரை கவிதை ஊற்றெடுக்காது..
தங்களது பாராட்டுக்களுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
@ கௌதம்..
பதிலளிநீக்கு//கண்ணால் கண்டவள் காவேரி
கலந்துகொண்டவள் சிங்காரி!..//
ஆகா!..
ஒன்றுக்கு இரண்டு.. உபத்திரவத்துக்கு மூன்று!..
தெரியாமலா சொல்லி வைத்தார்கள்..
:))))
நீக்குவணக்கம் !
பதிலளிநீக்குதாவணியும் பிடிக்கும் தா...வணியும் பிடிக்கும்!
கவிதை அழகு வாழ்த்துகள் அனைவருக்கும் !
சீராளன் சொல் எல்லாம்
நீக்குசீராளம் உண்டதைப் போல்
தாராளம் எனக் கண்ட
தமிழ்க் கவிஞன் சொல் எடுத்தால்
போராடும் நாளில் புதுக்
கார் காலம் வாராதோ!..
மகிழ்ச்சி.. நன்றி..
திருமணங்களில் வி ஷேப் தாவணிகளை பார்க்கலாம்.
பதிலளிநீக்குபடத்துக்கு எழுதிய கவிதை சிறப்பு வாழ்த்துகள்.
கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குசகோ துரை செல்வராஜூ அவர்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
இப்போது வீட்டு விழாக்களில் குழந்தைகள் தாவணி அணிகிறார்கள்.
நவராத்திரிக்கு தம்பி பெண் அழகாய் தாவணி அணிந்து பாட்டு பாடினாள்.
// சகோ துரை செல்வராஜூ அவர்கள் கவிதை நன்றாக இருக்கிறது..//
நீக்குதங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
@ கோமதிஅரசு..
பதிலளிநீக்கு//இப்போது வீட்டு விழாக்களில் குழந்தைகள் தாவணி அணிகிறார்கள்..//
நிச்சயம் காலம் சுழன்று வரும்..
கவிதை அருமை
பதிலளிநீக்கு