1997 ல் வெளியானதாக இணையம் கூறும் கிருஷ்ணகானம் தொகுப்பிலிருந்து இன்று இன்னுமொரு பாடல்... பி சுசீலா குரலில் கண்ணதாசன் பாடல். எம் எஸ் விஸ்வநாதன் இசை.
காதலும் பக்தியும் கலந்த பாடல். சுசீலாம்மா குரலும் இசையும் மனத்தைக் குழையச்செய்யும். ராதையின் கோபத்தில் விளைந்த ஊடலும், கண்ணனின் வசியமும்!கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று
ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று
ஸ்ரீ நந்த பாலன் வந்தான் தானொரு
ஆனந்த ராகம் தந்தான்
கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று
ஸ்ரீ நந்த பாலன் வந்தான் தானொரு
ஆனந்த ராகம் தந்தான்
கோபியர் தம்மைத் தொட்டு கொஞ்சிய கைகள் எந்தன்
கூந்தலைத் தொட வேண்டாம்...
கோபியர் தம்மைத் தொட்டு கொஞ்சிய கைகள் எந்தன்
கூந்தலைத் தொட வேண்டாம்
நான் கோடியில் ஒன்று அல்ல
கோவிலின் பெண்மை என்னைக் கொஞ்சிட வர வேண்டாம்
கோவிலின் பெண்மை என்னைக் கொஞ்சிட வர வேண்டாம்
இனி என் கோலமும் கெட வேண்டாம்
கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று
ஸ்ரீ நந்த பாலன் வந்தான் தானொரு
ஆனந்த ராகம் தந்தான்
ராதையின் ஊடலுக்கும் கீதை படித்த கண்ணன்
கோதையை வசியம் செய்தான்
ராதையில் ஊடலுக்கும் கீதை படித்த கண்ணன்
கோதையை வசியம் செய்தான்
கோதையை வசியம் செய்தான்
அங்கு சோலை யமுனை வெள்ளம்
துள்ளி எழுந்து அவள் மேனியைத் தொடவும் செய்தான்
அங்கு சோலை யமுனை வெள்ளம்
துள்ளி எழுந்து அவள் மேனியைத் தொடவும் செய்தான்
கண்ணன் நீண்டொரு கலகம் செய்தான்
கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
ஏனடி ராதா என்று என்னடி சேதி என்று
ஸ்ரீ நந்த பாலன் வந்தான் தானொரு
ஆனந்த ராகம் தந்தான்
===================================================================================================
1996 ல் வெளியான படம் கோகுலத்தில் சீதை கார்த்திக், கரண், சுவலக்ஷ்மி, மணிவண்ணன், விஜய்சேதுபதி நடித்த இந்தப் படத்துக்கு இசை தேவா. பாடல்களை இயக்குனர் அகத்தியனே எழுதி இருக்கிறார்.
எஸ் பி பாலசுப்ரமணியம் சித்ரா பாடியுள்ள இந்தப் பாடல் வெகு இனிமையானது. இது மாதிரி பல இனிமையான பாடல்களைத் தந்தவர் தேவா. ஆனால் இந்தப் பாடலின் கடைசியில் அவர் குரல் ஒளிபபதுதான் திருஷ்டிப்பரிகாரம் போல இருக்கும்.
எந்த ஆர்ப்பாட்ட இசையும், குரலும் இல்லாத பாடல். ஆரம்ப இசை, சித்ரா குரல், இரண்டாவது பழல்வியில் இணையும் எஸ் பி பி குரலின் அமைந்தியான இனிமை..
என் நாவினில் இருப்பது சரஸ்வதியே
என்னை பாட வைப்பது கணபதியே
கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா
மானும் இல்லை ராமன் இல்லை கோகுலத்தில் நானா
சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை ராவணின் நெஞ்சில் காமமில்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
ஆசைக்கொரு ஆளானவன் ஆனந்தத்தில் கூத்தானவன்
கோபியர்கள் நீராடிட கோலங்களை கண்டானவன்
ஆடை அள்ளி கொண்டானவன் அழகை அள்ளி தின்றானவன்
போதையிலே நின்றானவன் பூஜைக்கின்று வந்தானவன்
அவன் உலா உலா உலா தினம் தினம் பாரீர்
தினம் விழா விழா விழா விழா வாழ்க்கையில் தேவை
கண்ணா உன்னை நாள் தோறுமே கை கூப்பியே நான் பாடுவேன்
கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா
மானும் இல்லை ராமன் இல்லை கோகுலத்தில் நானா
சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை
ராவணின் நெஞ்சில் காமமில்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
ஆசைக்கொரு ஆளாகினான் கீதை என்னும் நூலாகினான்
யமுனை நதி நீராடினான் பாண்டவர்க்கு போராடினான்
ஆடை அள்ளி கொண்டாடினான் த்ரௌபதிக்கு தந்தாடினான்
பெண்களுடன் கூத்தாடினான் பெண்ணை கண்டு கை கூப்பினான்
ஒரு நிலா நிலா நிலா நிலா வந்தது நேரில்
திருவிழா விழா விழா விழா ஆனது வீடே
என் வாழ்க்கையே பிருந்தாவனம் நானாகவே நான் வாழ்கிறேன்
கோகுலத்து கண்ணா கண்ணா லீலை விடுவாயா
கோகுலத்தில் சீதை வந்தால் நீயும் வருவாயா
ஆயிரம் பேர் உன்னை காதலித்தார் ருக்மணியை நீ கை பிடித்தாய்
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ஹரே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே
முதல் பாடல் அமிர்தம் பல்லாயிரம் முறைகள் கேட்டு ரசித்தது.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் கேட்ட ஞாபகம் வருகிறது.
விஜய்சேதுபதி நடித்து இருக்கிறாரா ? வசனம் பேசி இருக்கிறாரா ?
வாங்க ஜி.. அதில் ஒரு பார்வையாளரா வர்றாராம்.. விக்கி தகவல்!!
நீக்குஇந்த நாளும் இனிய நாளே..
பதிலளிநீக்குஎல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க நலம். வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.
நீக்குக்ருஷ்ண கானம் வெளியான வருடம் 1977 ஆக இருக்கலாம்..
பதிலளிநீக்குஇருக்கலாம். எனக்கும் அப்படியே கேட்ட ஞாபகம்.
நீக்குஅருமையான பாடல்கள்
பதிலளிநீக்குஆம்.
நீக்குமுதல் பாட்டைப் பற்றி புதிதாகச் சொல்வதற்கு
பதிலளிநீக்குஏதும் இல்லை..
அத்தனை சிறப்பு..
அதே...
நீக்குஇரண்டாவது பாடலை சில போது கேட்டிருக்கின்றேன்..
பதிலளிநீக்குஅடடா.. என்ன சாதாரணமாக சொல்லி விட்டீர்கள்...
நீக்குமுதல் பாடல் சிறப்பு...
பதிலளிநீக்குஇரண்டாவது - படமும் நன்றாக இருக்கும்...
படம் நான் இன்னும் பார்க்கவில்லை DD.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமுதல் பாடல் அடிக்கடி கேட்ட பாடல்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
இரண்டாவது பாடல் வரவில்லை. கேட்டு இருக்கிறேன்.
இரண்டாவது பாடல் வரவில்லையா? வருகிறதே...
நீக்குமுதல் பாடல் ஹப்பா எவ்வளவு முறை கேட்டிருக்கிறேன்....ரசித்திருக்கிறேன். சுசீலா அவர்களின் குரல் ....எம் எஸ் வி இசை என்று தெரிந்துவிடும்! அவர் இசை...வரிகள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குகண்ணனோடு ஊடல்!!
கீதா
ஆமாம் கீதா.. சுசீலாம்மாவின் குரல்... எம் எஸ் வி யின் குழல்...
நீக்குஇரண்டாவது பாடலும் கேட்டு ரசித்த பாடல், ஸ்ரீராம். அமைதியான அருமையான இசை - கல்யாணி ராகத்தில் ....அழகான பாடல். சித்ரா குரல் அருமை....எஸ்பிபி என்ட்ரி அருமையா இருக்கு இல்லையா....அப்படியே வெண்ணை நழுவி விழுந்து கலப்பது போல....இப்பவும் கேட்டு ரசித்தேன்
பதிலளிநீக்குரெண்டாவது சரணம் எஸ் பி பி குரல் எப்படி இருக்கு இல்லையா....ரொம்ப அமைதியா......ஆ மணிவண்ணன் என்ட்ரி உடனெ தேவா.....எஸ் பி பியையே குரல் மாத்தி பாடிருக்கலாம்...அவருக்கு வராததா...
கீதா
ஆஹா.. என்னை மாதிரியே ரசித்திருக்கிறீர்கள் கீதா.
நீக்குஸ்ரீராம், எஸ் பி பி ஆங்கிலம் பேசிக் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உச்சரிப்பு பிரமாதமாக இருக்கும், தெளிவாக இருக்கும். அதிலும் அவர் குரல் வசீகரமாக இருக்கும்!!! சிலரைப் போல் ஆங்கிலத்தை தன் புலமையை வெளிப்படுத்த தெளிவில்லாமல் ஏதோ மாதிரி பேசாமல், வசீகரமான உச்சரிப்புடன் தெளிவாகப் பேசுவார்!!
பதிலளிநீக்குகீதா
உண்மைதான் கீதா. நிறைகுடம்.
நீக்குஇரு பாடல்களுமே கண்ணன் பாடல்கள் கேட்பதற்கு இனிமை.
பதிலளிநீக்கு