சிட்டி பிட்டி என்றெல்லாம் இல்லாமல் அந்தக் காலத்தில் நல்ல பெரிதாகவே கத்தரிக்காய் கிடைக்கும். சிறுசிறு வயலட் கத்தரிக்காயும் கிடைக்கும். பார்த்தாலே வாங்கத் தூண்டும்! அப்படிப் பட்ட தானாய் விளைந்த கத்தரியை வாங்கிதான் அம்மா கொத்சு செய்வார். அப்போது நாங்கள் தஞ்சாவூரில் இருந்தோம். தலைமை தபால் நிலையம் தாண்டி சாந்தப்பிள்ளை கேட் செல்லும் வழியில் 'ஈவ்னிங் பஜார்' தினசரி மாலை களைகட்டும்.
அப்பா காய்கறி வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தால் வழக்கமாய் ஒரு வசனம் சொல்வார்...
"ஹேமா.. கத்தரிக்காய்னு கூப்பிடு.. 'ஓவ்'ன்னு கேட்கும்" என்பார்.
அம்மாவும் "கத்தரிக்கா" ன்று குரல் கொடுப்பார்.
அப்பா பையிலிருந்து கத்தரிக்காய்களை வெளியில் கொட்டியபடி குரலை மாற்றி "ஓவ்" என்பார். நல்ல காய்கறிகள் வாங்கி வந்தால் வீட்டில் எப்போதும் நிகழும் ஜாலி உரையாடல் இது!
பசுபசு காய்கள் என்ன, கீரை என்ன என்று மார்க்கெட்டில் சுற்றி வரவே ஆனந்தமாயிருக்கும். என்னுடன் ஆறாவது, ஏழாவது படித்த கென்னடி கூட அங்கு கடை வைத்திருந்தான். வகுப்பில் நன்றாய்ப் பேசுவான். ஆனால் மார்க்கெட்டில் நான் அப்பாவுடன் கூட காய்கறி வாங்கச் செல்லும்போது தெரிந்ததாய் காட்டிக்கொள்ள மாட்டான். ஏனோ தெரியாது!
நானும் ஏன் அப்படி நடந்து கொள்கிறாய் என்று கேட்டதில்லை. ஆனால் ஸ்கூல் வந்த உடன் நாங்கள் வகுப்பிலும் விளையாட்டிலும் தோழர்கள். ஒரு காதில் கடுக்கன் போட்டிருப்பான். பூக்கார தெரு போகும் வழியில் ஒரு குடில் போல சொந்த வீடு. அவன் வீடு எனக்கு மிகவும் பிடிக்கும்.
கத்தரிக்காய் பற்றி பேசினால் தஞ்சாவூர் ஞாபகம் வந்து விடும். தஞ்சாவூர் ஞாபகம் வந்துவிட்டால் ஈவ்னிங் பஜார் ஞாபகம் வந்து விடும். அது நினைவுக்கு வந்து விட்டால் ஜான் கென்னடியும் நினைவுக்கு வந்து விடுவான். குள்ளமான உருவம். எங்கிருக்கிறானோ இப்போது!
ஆக, கத்தரிக்காய் என்றாலே தஞ்சாவூர் ஞாபகம், கொத்ஸு என்றால் அம்மா ஞாபகம், அம்மாவின் கைமணம் ஞாபகம் எல்லாம் வந்து விடும்.
சரி, நட்பின் நினைவு மையலை விட்டு சமையலுக்கு வருகிறேன்.
இப்போதெல்லாம் பெரிய கத்தரிக்காய் என்றாலே செயற்கைக் கத்தரிக்காய் என்கிறார்கள்.
மார்க்கெட்டிலிருந்து நல்ல கத்தரிக்ககாயொன்றை வாங்கிக்கொண்டு வரவும்.
மறுநாள் காலை அதை அடுப்பில் - நெருப்பில் வைத்து வாட்டவும். அப்போதெல்லாம் அழகாய் கரியடுப்பு இருக்கும். அப்பளம் சுட்டு சாப்பிடுவதற்கும், இது மாதிரி கத்தரிக்காய் சுட்டு சமைப்பதற்கும் ரொம்ப வசதி. இப்போது 99 சதவிகிதம் பேர்கள் அதை உபயோகிப்பதில்லை.
ஒரு கரண்டியின் காம்பில் கத்தரிக்காயைச் சொருகி அடுப்பில் நெருப்பில் வைத்து வாட்டலாம். ஒவ்வொரு இடமாக திருப்பி, திருப்பி வாட்டவும். தோல் - கத்தரிக்காயின் தோல் நன்றாய் கருகும் வரை சுட்டு எடுத்து வைக்கவும். சற்றே ஆறியபின் தோலை நீக்கவும். அதை சிறு பாகங்களாய் பிசைத்து தனியே வைக்கவும்.
கொஞ்சம் புளியை எடுத்து ஊறவைத்து நீரில் கரைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ளவும். அதையும் ஓரமாக மூடி வைக்கவும்!
வாணலியில் வெந்தயம், மல்லி மிளகாய் வத்தல் ஆகியவற்றை வெறுமனே வதக்கிக் கொண்டு போடி செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, மிளகாய் வத்தல் (கொஞ்சம் கூடுதலாகவே வைத்துக் கொள்வோம்) பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து கத்தரிக்காயை அதில் சேர்த்து புளித்தண்ணீரை வாணலியிலிட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விட்டு இறக்கி விடலாம்.
கொத்சு ரெடிங்க.. பொங்கல் இட்லிக்கெல்லாம் காம்பினேஷன்! நான் பொங்கலுக்குதான் தொட்டுக்கொண்டு சாப்பிடுவேன். எங்கள் ஆபீசில் பொங்கல் காலியானதும் இந்த கொத்ஸுவை தனியாய் பாத்திரத்திலிருந்து ஸ்பூனில் எடுத்து வாயில் விட்டபடி இருப்பர்!
ஐயோ ஐயோ! சின்ன வெங்காயம் கொத்தமல்லி (விதை, தழை) இல்லாமல் கொத்சு? மேலும் புளி புளிப்பைக் கூட்டும். அதற்கு பதில் தக்காளி அரைத்து சேர்க்கலாம்.
பதிலளிநீக்குJayakumar
தக்காளி சேர்க்க மாட்டோம். கொத்ஸு கொஞ்சம் புளிப்பாகத்தான் இருக்க வேண்டும். வெங்காயம் நாங்கள் சேர்க்கவில்லை. மல்லி சொல்லி இருக்கிறேனே...
நீக்குஇந்த நாளும் இனிய நாளே..
பதிலளிநீக்குஎல்லாருக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க நலம். வாங்க துரை செல்வராஜூ அண்ணா.
நீக்குகத்தரிக்காயை சில வருடங்களாகவே சேர்த்துக் கொள்வதில்லை.. இப்போது புளியையும் சேர்த்துக் கொள்வதில்லை..
பதிலளிநீக்குகத்தரிக்காய் வாழ்க!..
பிடித்த ஐட்டங்களை ஒதுக்குவது சிரமம்தான்.
நீக்குஇங்கே சொல்லப்பட்டிருக்கும் கத்தரி மரபணு மாற்றப் பட்டதாக இருக்கும்..
பதிலளிநீக்குஅதாவது உயிரணு நீக்கம் செய்யப்பட்டவை..
வளைகுடா நாடுகளில் இவை மிகவும் பிரசித்தம்..
விதைத் திரள் அரிதாக இருக்கும்.. சதைப் பொதிவு மட்டுமே..
இப்படி கத்தரிக்காய்களை அனலில் வாட்டி எடுத்து வெள்ளை எள்ளுடன் அரைத்து எலுமிச்சை சாறு கலந்து 'முத்தாபல்' எனச் செய்வார்கள்..
அராபிய் ரொட்டிக்கு முத்தாபல் பக்கத் துணை!..
முத்தாபல்லா...? வித்தியாசமாக இருக்கிறதே..
நீக்குமுத்தாபல் அரைக்கும் போது ஊறிய கொண்டைக் கடலையையும் சேர்த்துக் கொள்வதுண்டு.. இது செய்யும் போது எலுமிச்சை சாற்றுக்குப் பதிலாக லெமன் ஜூஸ் என்ற பேரில் சிட்ரிக் ஆசிட் அல்லது வினிகர் ஊற்றுவார்கள் அங்கிருக்கும் ஏழரைகள்...
பதிலளிநீக்குசிட்ரிக் ஆசிட் , வினிகர் இரண்டும் அராபியச் சமையலில் அனுமதிக்கப் பட்டவைகளே..
சிட்ரிக் ஆசிட் , வினிகர் இவற்றை அலுமினிய பாத்திரத்தில் வைத்தால் சில நாட்களில் பாத்திரம் ஓட்டையாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது..
சிட்ரிக் ஆசிட்/ வினிகர் ஊற்றி கறைபடிந்த குலியலறை, களிவறைகளைக் ( நவீனத் தமிழ்) கழுவலாம்..
ஊறுகாயில் வினிகர் போட்டாலே எனக்குப் பிடிக்காது. ஆனால் எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஊற்றி இருக்கிறேன்.
நீக்குமிக நல்ல சமையல் குறிப்பு. எழுத்து ரசிக்கும் விதம்
பதிலளிநீக்குமிகுதி பதினொரு மணிக்கு மேல்தான். அல்லது பனிரெண்டு மணி
நன்றி நெல்லை. வாங்க.. நான் மாலைதான் வருவேன்!
நீக்குபி டி கத்தரி கைக்காது. துவையல் செய்ய வாங்குவேன் (வெளிநாடுகளில்). இங்கு நம் வயலட் கத்தரிதான்
பதிலளிநீக்குதஞ்சாவூர் மார்க்கெட் கத்தரிக்காய் பார்த்தபிறகு வேறு எதையும் பார்க்காத தோன்றாதுதான்.. என்ன செய்ய..
நீக்குகொத்சின் செய்முறை அருமை.... பொங்கலுக்கு நல்லா இருக்குமா இல்லை அரிசி உப்புமாவிற்கா?
பதிலளிநீக்குஇரண்டுக்குமே தொட்டுக்க கொள்ளலாம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம். நேத்திக்குப் போட்ட தமிழ்த்தாத்தாவின் அஞ்சலிக்கு ஸ்ரீராமைத் தவிர்த்து யாருமே வரலை! :( நான் வருவதில்லை என்பதாலோ??????? போகட்டும். தினம் கணினியில் உட்காருவது தடை செய்யப்பட்டிருக்கு. இப்படி எப்போவானும் வருவேன். :)))) இன்னொரு கண் அறுவை சிகிச்சை முடியும்வரை கொஞ்சம் சிரமம் தான். :(
பதிலளிநீக்குநேற்று எப்படியும் உங்கள் பதிவு வந்து விடும் என்று தெரியுமே...
நீக்கு//அஞ்சலிக்கு ஸ்ரீராமைத் தவிர்த்து யாருமே வரலை! :( நான் வருவதில்லை என்பதாலோ??????? போகட்டும்// - இத்தனை நாள் கணிணி பக்கமே போகக்கூடாது கபர்தார் என்று டாக்டர் ரெஸ்ட் கொடுத்துவிட்டதால், கீசா மேடத்தின் கற்பனை வளம் அதிகமாயிடுச்சோ?
நீக்குஎன் கதை, என் ஆசிரியர், ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் என்ற மூன்று புத்தகங்களையும் என் பெண் பெசண்ட் நகரில் இருக்கும் உ.வெ.சா லைப்ரரில இருந்து வாங்கிக்கொண்டுவந்து கொடுத்துட்டா (25 சதம் டிஸ்கவுண்ட்). இப்போதான் 'என் ஆசிரியர்' என்ற கிவாஜெ புத்தகம் படிச்சு முடிச்சேன். அதுல ஒரு பக்கத்தைப் போட்டால் எப்படி?
இது கி.வா.ஜ.வின் புத்தகத்திலிருந்து எடுக்கலை. உவேசா அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டது. நினைவு மஞ்சரி தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். ரொம்ப நேரம் கணினியில் உட்காரக் கூடாது என்பதால் அதைப் போடலை.
நீக்குஎன்னிடம் அப்பா உபயத்தில் உ வே சாவின் 'என் சரித்திரம்' இருக்கிறது. இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை!!
நீக்குபுளிக்கரைசலில் கத்திரிக்காய் விழுதை நன்றாகச் சேர்த்துப் பிசைந்து உப்புச் சேர்த்துத் தாளிதத்தைக் கொட்டி நன்கு கலந்து சூடாக்காமல் அப்படியே சாப்பிட்டது உண்டு. என் பாட்டி (அம்மாவின் அம்மா) அப்படிச் செய்வார். என் அம்மாவும் எப்போதேனும் பண்ணி இருக்கார். எனக்குக் கத்திரிக்காயைச் சுட்டுத் தயிரில் கலந்து பச்சடியாகச் சாப்பிட ரொம்பப் பிடிக்கும்.
பதிலளிநீக்குதயிரில் கலந்தா... ஒருமுறை முயற்சித்துப் பார்த்து விடுகிறேன்!
நீக்கு//புளிக்கரைசலில் கத்திரிக்காய் விழுதை// - என்னப்பா..இந்த அம்மா இப்படிக் கொடுமை பண்ணறாங்க? பச்சை புளிஜலம்..நினைக்கவே பாரீஸில் பாண்டிச்சேரி காரங்க ஹோட்டல்ல சாப்பிட்ட ரசம் நினைவுக்கு வருது. அவங்க புளிஜலத்தை கடைசியில் விடறாங்க, கொதிக்கவில்லை, பச்சைப் புளி வாசனை வந்து சாப்பிடவே முடியலை.
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நெ.த. இந்தக் கத்திரிக்காய் கொத்சுவே புளி ஜலத்தைக் கொதிக்க விடாமல் பச்சைப் புளி ஜலத்தில் தான் முன்னெல்லாம் பண்ணுவாங்க. அது தெரியுமா? அதோடு பானகத்திற்கு நீர்க்கப் புளி ஜலமும் விடுவாங்க. அதை ஏனோ "பானகரம்" என்பாங்க.
நீக்குபானகம் ஓகே. எனக்கும் பச்சையாக புளிஜலத்தை கொத்ஸுவுக்க்கு கற்பனை பண்ண முடியவில்லை யுவர் ஆனர்!
நீக்குஏற்கனவே அப்படி எழுதுனதுக்கு எனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நீங்களும் ஏன் வாண்டடா வந்து கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐ வாங்கிக்கட்டிக்கிறீங்க?
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குgrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr blogger velai!
பதிலளிநீக்குஎன்னவாக்கும்?
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎன்னவாக்கும்?
நீக்குoohoo moderation?
பதிலளிநீக்குஆமாம். அது ஒரு கதை!
நீக்குகீதாக்கா அதேதான் என் பாட்டியும் செய்வாங்க...இங்க எபில கூட ரெசிப்பு அனுப்பிய நினைவு...
நீக்குஎனக்கும் கத்தரிக்காயைச் சுட்டு தயிரில் கலந்து சாப்பிடப் பிடிக்கும் தயிர் பச்சடியாக தேங்காய் எதுவும் அரைத்துவிடாமல் நம் வீட்டில் செய்வதுண்டு...
கீதா
//ஆமாம். அது ஒரு கதை!// சொல்லுங்க, கேட்கலாம்.
நீக்கு//oohoo moderation?// //கீதாக்கா அதேதான் என் பாட்டியும் செய்வாங்க.// - இந்த கீதா ரங்கன்(க்கா)வுக்கு என்னாச்சு?
நீக்கு"என்ன கதை சொல்லச்சொன்னா என்ன கதை சொல்லுறது.. சொந்தக் கதை சோகக்கதை நெஞ்சுக்குள்ள நிக்கறது...!"
நீக்குஅரிசி உப்புமாவுக்குத் தான் இந்த கொத்சு பிடிக்கும். கத்திரிக்காய் புளி கொத்சு என்றே சொல்வோம். பொங்கல், இட்லிக்கெல்லாம் சின்ன வெங்காயம் +கத்திரிக்காய் போட்டு கொத்சு.
பதிலளிநீக்குஆம். சின்ன வெங்காயம் போடுவோம். அன்று போடவில்லை.
நீக்குநாங்க முதல் முதலாக ராஜஸ்தான் போனப்போக் காய்கறிச் சந்தையில் கிடைக்கும் பெரிய பெரிய கத்திரிக்காய்களைப் பார்த்து அதிசயப் பட்டிருக்கோம். ஒரி கத்திரிக்காய் அரைக்கிலோவுக்குக் குறையாது. அப்போல்லாம் கரி அடுப்பும் உண்டே. அதில் போட்டுச் சுட்டால் வெண்ணெயாகிடும். சுட்டுச் சப்பாத்திக்கு பர்த்தா பண்ணுவாங்க அங்கெல்லாம். அப்போல்லாம் அவ்வளவாஅது பத்தித் தெரியாது.
பதிலளிநீக்குஓ.... அப்பொழுதே சிட்டிப்பிட்டி வந்து விட்டதா?
நீக்குஎன்ன சொல்லுங்க..
தஞ்சாவூர் பிஞ்சு கத்தரிக்காய் குட்டி குட்டியாய் குண்டு காம்புடன் நல்ல வயலட் கலரில் இருக்குமே.. அதற்கு ஈடாகாது!
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சிட்டிப்பிட்டி எல்லாம் அப்போ என்னன்னே தெரியாது. கத்திரிக்காய் எங்க வீட்டுத் தோட்டத்திலேயே அப்படித் தான் பெரிசு பெரிசாகக் காய்க்கும். நல்ல நாட்டுக் கத்திரிக்காய். ஊதா நிறக் கத்திரி.
நீக்கு//பர்த்தா// - இதுக்கு அர்த்தம் ஹஸ்பண்ட் இல்லையோ? சப்பாத்தியை பர்த்தா பண்ணுவாரா? புரியலையே (ஹா ஹா ஹா)
நீக்கு//தோட்டத்திலேயே அப்படித் தான் பெரிசு பெரிசாகக் காய்க்கும்// - அப்போ சின்னப் பெண்ணாக இருந்திருப்பீங்க. சின்னக் கத்திரிக்காயே பெருசு பெருசா உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்
நீக்கு:))
நீக்குதகவல்களும் சுவாரஸ்யமாக இருந்தது
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குவாணலியில் வெந்தயம், மல்லி மிளகாய் வத்தல் ஆகியவற்றை வெறுமனே வதக்கிக் கொண்டு போடி செய்து வைத்துக் கொள்ளவும்.
பதிலளிநீக்குவாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, மிளகாய் வத்தல் (கொஞ்சம் கூடுதலாகவே வைத்துக் கொள்வோம்) பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து கத்தரிக்காயை அதில் சேர்த்து புளித்தண்ணீரை வாணலியிலிட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விட்டு இறக்கி விடலாம்.//
வறுத்து பொடிக்கும் பொடி சேர்ப்பது விட்டுப் போச்சோ.....பரவால்ல இங்க வரவங்களூக்கு ஓகே...சமையல் கலையில் முதல்படியில் இருப்பவங்களுக்காகச் சொன்னேன் ஸ்ரீராம்....
கீதா
அடடா.. வறுத்து வச்சதைச் சேர்க்கலையா? ்வேஸ்ட்!!!!
நீக்குநக்கீரனுக்குப் பெண்பால் நக்கீரியா? இதை புதன் கேள்வியா கேட்டுருக்கணுமோ?
நீக்குஇதே முறைதான் ஸ்ரீராம்...ஆம் புளிப்பு சற்று தூக்கலாக இருக்கும்....
பதிலளிநீக்குநான் கூட என் பாட்டி செய்யும் புளிக்கோஸு சொல்லியிருந்தேனோ இங்கு...
அவங்க கத்தரிக்காய் சுட்டு உரித்து புளித்தண்ணீரில் போட்டு பிசைந்து தாளித்து உப்பு போட்டு வைச்சிருவாங்க...பச்சைப் புளிகோஸு (கொத்ஸு என் பாட்டியின் உச்சரிப்பு!!!)
நான் பாட்டி செய்யும் முறையிலும் செய்வதுண்டு....நீங்கள் செய்யும் முறையிலும்.
கூடவே சி வெ போட்டும் செய்வதுண்டு. சிவெ தக்காளி போட்டு வதக்கிச் சேர்த்தும் செய்வதுண்டு.
கீதா
ஆமாம். செய்யலாம்.
நீக்குபெய்ங்கன் பர்த்தா செய்து படங்கள் இருக்கு எழுத வேண்டும். எப்ப அனுப்புவேனோ!!! ஹிஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
அனுப்புங்க..
நீக்குசொன்ன விதம் அசத்தல்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குநாவூற வைக்கும் கத்தரிக்காய் புளி கொத்சு அருமை! பொடிக்கான அளவுகளைப்போட்டிருக்கலாமே? அப்புறம் பொடியை கொத்ஸில் எப்போது சேர்ப்பது என்பதையும் குறிப்பிடவில்லை!
பதிலளிநீக்குசுட்ட கத்தரிக்காய் எங்கள் வீட்டு சமையலில் அடிக்கடி இருக்கும். சின்ன வெங்காயத்தையும் தக்காளியையும் நல்லெண்ணெயில் வதக்கியெடுத்து புளி, வற்றல் மிளகாய், உப்பு, சுட்ட கத்தரிக்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் சுட்ட கத்தரிக்காய் சட்னி!! நீங்கள் சொன்னது போல தஞ்சாவூரில் கிடைக்கும் கிராமத்தில் விளைந்த சின்ன சின்ன கத்தரிக்காய் மிக அருமையான சுவை கிடைக்கும்!!
வாங்க மனோ அக்கா... வணக்கம்.எல்லாம் எங்க அம்மா சொல்வது போல கண்ணளவு, கையளவுதான்! வெங்காயம் தக்காளி சேர்க்காமல் சட்னி என்றில்லாமல் சுட்ட கத்தரிக்காயில் துவையல் செய்வதுண்டு. சிலபேருக்குப் பிடிக்கும், சில பேருக்கு பிடிக்காது. நான் முதல் ரகம்!
நீக்குகொஸ்சு நன்றாக இருக்கிறது. நாங்கள் வெங்காயம் சேர்ப்போம்.
பதிலளிநீக்குபச்சடியும் செய்வோம்.
நன்றி மாதேவி. அன்று சேர்க்கவிலையே தவிர, நாங்களும் வெங்காயம் சேர்ப்போம். பச்சடி செய்முறை செய்து அனுப்புங்களேன்... ஒரு திங்களில் போடுவோம்.
நீக்குநீங்கள் செய்த கத்திரிக்காய் கொத்சு புது மாதிரியாக இருக்கிறது.
பதிலளிநீக்குசுட்டு செய்வோம் நாங்களும். செய்முறை படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. செய்முறையும் எளிதாக இருக்கிறது.
இரண்டு நாள் வெளியூர் அதுதான் வரவில்லை.நேற்று.
புதுசாக இருக்கிறது என்பது ஆச்சர்யம் கோமதி அக்கா. ரொம்பப் பழைய முறைதான்... நன்றி கோமதி அக்கா.
நீக்கு