சுஜாதாவின் கதை ஒன்றில் கண்கட்டு வித்தை போல ஒன்றை விளக்கி இருப்பார்.
ரயில் பயணத்தில் உடன் வரும் ஒருவர் மற்றவருடன் பேச ஆரம்பித்து இவருக்கு விருப்பமில்லை என்றாலும் அவர் பேச்சை கவனிக்க வைத்து வசியப்படுத்துவது. கதையின் முடிவு இன்னும் வித்தியாசமாக இருக்கும்! அதில் கண்களை நம்ப வைப்பது பற்றி விளக்க அவர் ஒரு பாம்புக் கூடையை காட்டிப் பேசுவார். பாம்பைப் பற்றி பளபளவென்று கரிய நிறமாக சுருண்டு படுத்திருக்கிறது என்றெல்லாம் நீளமாக விடாது வர்ணித்து கூடையின் மூடியை சட்டென திறக்க, ஒரு வினாடி அந்த வெற்றுக் கூடைக்குள் கருப்பு நிற பாம்பு நெளிவது போன்ற பிரமை இவரின் கண்ணில் தெரியும்.மனம் சொல்வதை, நம்புவதை கண்கள் காட்சியாக பார்த்து விடுகிறது!
சில சமயங்களில் தன் மனம் சொல்வதை தீவிரமாக நம்பும் ஒருவர் இப்படிதான் அவற்றை காட்சியாகக் கண்டது போல உணர்ந்து உண்மையில் இல்லாததை மற்றவர்களிடம் பேசுவார்களோ....
ஒரு சம்பவம். சென்ற வாரம் ஹோட்டலுக்குப் போயிருந்தேன் என்று சொன்னேன் இல்லையா? அதில் எனக்குப் பிடித்தது காஃபி மட்டும்தான் என்றும் சொல்லி இருந்தேன்.
காஃபி தனி பில் என்றதும் மூன்று காஃபி ஆர்டர் செய்தேன்.
"ஒன்று சுகர் இல்லாமல்...."
"ஸ்ட்ராங்கா லைட்டா ஸார்"
'அட என் உத்தமராசா' என்று மனதுக்குள் சிலாகித்துக் கொண்டு (கொஞ்ச நாட்கள் முன்பு எழுதிய காஃபி புராணத்தில் சர்க்கரை இல்லாமல் காஃபி என்றாலே ஸ்ட்ராங்காகத்தான் தரவேண்டும் என்கிற அவர்கள் மனோபாவம் பற்றி சொல்லி இருந்தேன். அதை நிரூபிக்கிறார் இவர். ஆனால், நல்லவேளை கேட்டுச் செய்கிறார்) 'நார்மலா தான்' என்று அவர் கேள்விக்கு பதிலளித்து விட்டு, 'இன்னொரு காஃபியில் கொஞ்...சமாக சர்க்கரை, இன்னொரு காபியில் நார்மல் சுகர்' என்றேன்.
அவர் ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டவர் கிளம்பி ஒரு அடி சென்று விட்டு திரும்பி வந்தார்.
"நான் காஃபியை சர்க்கரையை தனித்தனியாகக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
"சரி.. ரொம்ப நல்லது"
சற்று நேரம் கழித்து வந்தார். எந்த காஃபியை எடுத்தாலும் சர்க்கரை இருக்காது என்பதால் நான் ஒரு காஃபியை எடுத்துக் கொண்டு விட்டேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பு இப்படிச் சொன்னபோது கொண்டு வ்நதவரே குழம்பி சர்க்கரை இல்லாத காஃபியை என் மகனுக்கும், சர்க்கரை உள்ள காஃபியை எனக்கும் மாற்றித் தந்து நாங்களும் வாய் வைத்து விட்டதும் ஒரு அனுபவம்!
மற்ற காஃபிக்களில் சர்க்கரை சேர்த்துக்கொள்ள சர்க்கரை கியூப் ஒரு கோப்பையில் வைத்துக் கொடுத்திருந்தார். கூடவே சுகர் ஃப்ரீ பாக்கெட் இரண்டு மூன்று.
அதை எடுக்கப் போன பாஸிடம் என் மகன் ''பாச்சா உருண்டை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். கவரை மட்டும் பத்திரமா எடு'' என்றதும் ஒரு கணம் கோப்பையை சட்டென தள்ளி வைத்து விட்டார் பாஸ்.
பாச்சா உருண்டை என்றால் தெரியும்தானே? அந்துருண்டை!
அடக்க மாட்டாமல் நானும் இளையவனும் சிரிக்க, சட்டென புரிந்துபோன பாஸும் உணர்ந்து சிரித்தார். அப்படி சேர்ந்து சிரித்துதான் ரொம்ப நாளாச்சு போங்க!
அப்படி சிரித்ததே ஒரு அனுபவமாக மனதில் தங்கிப் போனதாலேயே அதை எழுதத்தோன்றியது என்று கூடச் சொல்லலாம்!
சர்க்கரை கியூப்ஸைத் தொட்டு நாங்கள் ஏன் சிரிக்கிறோம் என்று தெரியாமல், தொலைவில் நின்றதால் காது கேட்காத, எங்களை(யும்) கவனித்துக் கொண்டிருந்த சர்வர் புதிராகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
என்ன நினைத்தாரோ...
சாதாரணமாக ஒரு அபிப்ராயத்தை உருவாக்குவது எவ்வளவு எளிதாக இருக்கிறது பாருங்கள்.. இங்கு நகைச்சுவையாக சென்று விட்டாலும் சில இடங்களில் இதில் எனக்கு வேறு அனுபவமும் உண்டு.
ஒருவர் நல்ல பெயர் எடுத்திருக்கிறார் என்று தெரிந்தால் சிலருக்கு உடம்பை என்னவோ செய்கிறது. மனதைப் பிசைகிறது. தன்னுடைய வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அந்த ஒருவரை 'கவனிப்பதிலேயே', அவர் பெயரை கெடுப்பதிலேயே கவனம் செல்கிறது.
=========================================================================================================
பிப்ரவரி 27 - சுஜாதா மறைவு நாள்...
சுஜாதாவுக்கு முன்பு வரை தமிழில் இரண்டு விதமான எழுத்தாளர்கள் இருந்தார்கள். ஒன்று வணிகப் பத்திரிகைகளில் எழுதுபவர்கள். இரண்டு தீவிரமான இலக்கியப் பத்திரிகைகளில் எழுதுபவர்கள். க.நா.சு, சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன் போன்றவர்கள் சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் என்றால் அகிலன், நா. பார்த்தசாரதி, சாண்டில்யன் போன்றவர்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்கள். ஒரு எழுத்தாளர் ஏக காலத்தில் வெகுஜனப் பத்திரிகையிலும் எழுதலாம்; சிறுபத்திரிகையிலும் எழுதலாம் என்று நிரூபித்துக் காட்டியவர் சுஜாதா. இத்தகைய போக்கை ஆரம்பித்து வைத்தவரும் அவரே. அவரால் குமுதத்தில் கணேஷ்_வஸந்த் கதையை எழுதிக் கொண்டே, கணையாழியில் கடைசிப் பக்கங்களையும் எழுத முடிந்தது. இது ஒரு வினோதம். இலக்கியத்தை சட்டகத்தில் போட்டு அடைக்க வேண்டியதில்லை. எழுத்து பல்வேறு சாத்தியங்கள் கொண்டது. குமுதத்தில் எழுதினாலும் கணையாழியில் எழுதினாலும் எழுத்து எழுத்துதான் என்று அவர் சொல்ல வருவதாக நாம் கருதலாம்.
சுஜாதா நிறைய எழுதியிருக்கிறார். அவர் எழுதியவற்றில் பெரும்பாலான எழுத்துக்களை நான் வாசித்திருக்கிறேன். அவரது பிரதிகள் வாசிப்பு இன்பம் கொண்டவை. அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் கதைகளைப் படிக்கும் எந்த ஒரு சிடுமூஞ்சியும் புன்னகை மன்னனாக மாறிவிடுவான் என்பதில் சந்தேகமில்லை. இது போன்ற கதைகள் எழுதுவதில் அவரை கல்கியின் வாரிசு எனலாம். அதே போல் நகரம் போன்ற கதைகள் அவரைப் புதுமைப்பித்தனின் வாரிசாக ஆக்குகின்றன.
நான் சுஜாதாவை எழுபதுகளில் தான் முதல் முறையாக நேரில் சந்தித்தேன். அப்போது சாவி தினமணி கதிர் ஆசிரியராக இருந்தார். அவர் சுஜாதாவுடனான வாசகர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது சுஜாதா ஒடிசலாக, உயரமாக, தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவின் சாயலில் இருந்தார். நிறைய கூச்சப்பட்டார். தயங்கித் தடுமாறி பேசினார். இன்னொரு சந்தர்ப்பத்தில் சென்னையில் இலக்கியச் சிந்தனை நடத்திய கூட்டம் ஒன்றில் பேசினார். இந்த இரண்டு சந்திப்புகளிலும் சுஜாதாவின் பேச்சு வசீகரமாக இருக்கவில்லை. அவர் எழுத்தில் இருக்கும் சாதுர்யம் பேச்சில் இல்லை. பின்னர் அவர் சென்னையிலேயே செட்டில் ஆன பிறகு பலமுறை சந்தித்திருக்கிறேன். என்னுடைய புத்தகங்கள் வெளியாகும் போதெல்லாம் அவருக்கு அனுப்பி வைத்துத் தொல்லைப்படுத்தியிருக்கிறேன். அவரும் பொறுமையாகப் படித்துத் தன் அபிப்ராயங்களைத் தெரிவித்திருக்கிறார். என்னுடைய அட்லாண்டிஸ் மனிதன் நாவலைப் பற்றி நிறைய விசாரித்தார். ‘இது போன்ற நாவலுக்கு வாசகர் வரவேற்பு எப்படி இருக்கிறது?’ என்று கேட்டார். அவருக்கு நவீன இலக்கிய முயற்சிகளில் ஆர்வம் இருந்தது. ஸ்ரேயாவின் மார்பக நடுநீரோடை முதல் டெரிடாவின் கட்டவிழ்ப்புச் சிந்தனை வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் அவரால் எழுத முடியும். எந்த ஒரு விஷயத்தையும் விலகி நின்று பார்க்க அவரால் முடியும்.
ஒரு பத்துப் பேர் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாலே, ஒரு அதிகார மையத்தைக் கட்டமைக்கும். இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தனை பெரிய புகழும் அங்கீகாரமும் கிடைத்தும் அவர் தனக்கென்று ஒரு அதிகார மையத்தைக் கட்டமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- எம்.ஜி.சுரேஷ்
நன்றி: தீரா நதி
கந்தசாமி சார் பகிர்விலிருந்து......
=========================================================================================================================
படித்ததிலிருந்து...
திருப்பூர் கிருஷ்ணனின் வார்த்தைகளில்:
கொத்தமங்கலம் சுப்பு என்றதும் உடனே நினைவுக்கு வருகிற படைப்பு தில்லானா மோகனாம்பாள். ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நாவல் அது.
நடனமணி மோகனாம்பாள், நாதஸ்வரக் கலைஞன் சண்முக சுந்தரம் இருவரின் காவியக் காதலைச் சொன்ன அந்த நாவல், கூடவே நம் பாரம்பரியக் கலைகளான நாட்டியம், சங்கீதம் போன்றவற்றின் உன்னதங்களையும் சேர்த்துச் சொல்லிற்று. தமிழ் வாசகர்களைப் பித்துப் பிடித்துப் படிக்கச் செய்த தொடர் அது.
பிரபல நாவலாசிரியை வசுமதி ராமசாமி அவர்களிடம் ஒருமுறை பேட்டியெடுக்கச் சென்றிருந்தேன். அவரது நாவலான காப்டன் கல்யாணம் பற்றி அவரிடம் கேட்டேன்.
“என்னுடைய அந்த நாவல் விகடனில் தொடராக வந்தபோது கூடவே தில்லானா மோகனாம்பாள் நாவலும் வந்தது. அதைப் பல்லாயிரக்கணக்கான பேர் ரசித்து வாசித்தார்கள். அதே இதழில் என் தொடர்கதை வந்ததால் அதை வாசித்த அத்தனை வாசகர்களும் என் கதையையும் வாசித்தார்கள் என்பதில்தான் எனக்குப் பெருமை. நான் கொத்தமங்கலம் சுப்பு எழுத்துக்களின் தீவிர ரசிகை!” என்று பண்பட்ட அடக்கத்துடன் தெரிவித்துக் கொண்டார் அவர்.
கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செம்மொழி மாநாடு விமரிசையாக நடைபெற்றது. அதில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடாகியிருந்தது. பட்டிமன்றத்தில் நான் ஓர் அணியில் கலந்துகொண்டு பேசினேன்.
அப்போது தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பலரைப் பற்றிக் குறிப்பிட்டபோது தில்லானா மோகனாம்பாள் புகழ் கொத்தமங்கலம் சுப்பு பெயரையும் குறிப்பிட்டேன்.
பட்டிமன்றம் முடிந்தபிறகு என்னை ஏராளமான பேர் தொலைபேசியில் அழைத்து நான் கொத்தமங்கலம் சுப்பு பெயரைச் சொன்னது பற்றிக் கூறி, அதன் பொருட்டாகவே என்னைப் பாராட்டினார்கள். நானும் அவரது ரசிகன்தான் என்றாலும் அவருக்கு எத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன்.
விமர்சகர்கள் வலியத் தூக்கிப் பிடித்து நிறுத்துகிற எழுத்தாளர்கள் கொஞ்சம்பேர் உண்டு. கால வெள்ளத்தில் மக்களால் அவர்கள் மறக்கப்பட்டு விடுவார்கள். தன் எழுத்தின் வலிமையை நம்பாமல், விமர்சகர்களது வாதத்தின் வலிமையை நம்பி இலக்கியம் படைப்பவர்களுக்கு அந்த கதி நேர்வது ஆச்சரியமல்ல.
ஆனால் எழுத்தின் தரத்திலேயே முக்கிய கவனம் செலுத்தி, சமுதாய உணர்வோடு எழுத்தைப் படைத்து, அதன்பொருட்டு வாசகர்களின் ரசனையை மட்டுமே நம்பி வேறு செல்வாக்கைத் தேடாத எழுத்தாளர்களும் சிலர் இருக்கிறார்கள். அவர்களை மக்கள் என்றும் மறப்பதில்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாசகர்கள் ஒருபோதும் அவரை மறக்க மாட்டார்கள்.
தமிழில் எழுதப்பட்ட ஓர் எழுத்து திரைப்படமாகவும் வந்து, எழுத்து பெற்ற அதே வெற்றியைப் பெற்றது என்றால் அந்தப் பெருமை தில்லானா மோகனாம்பாள் நாவலுக்கு மட்டும்தான் உண்டு என்று தோன்றுகிறது. நாட்டியப் பேரொளி பத்மினியையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் மோகனாம்பாளாகவும் சண்முகசுந்தரமாகவுமே மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
தில்லானா மோகனாம்பாளின் இன்னொரு பெருமை கோபுலுவின் கண்ணைக் கட்டி நிறுத்தும் அழகிய சித்திரங்கள். ராவ்பகதூர் சிங்காரம், பந்தநல்லூர் பாமா போன்ற கொத்தமங்கலம் சுப்புவின் மற்ற நாவல்களுக்கும் கோபுலுவே ஓவியம் வரைந்தார் என்றாலும், தில்லானா மோகனாம்பாள் நாவலில் கோபுலு பெற்ற புகழ் அலாதியானது.
நன்றி: சிலிகான் ஷெல்ப்
======================================================================================================
பார்த்ததில் நெகிழ்ந்தது.....
நீண்ட நாட்கள் நடந்த வியட்நாம் சண்டையில் மனிதாபிமானம் செத்து விடவில்லை என்று நிரூபித்த ஒரு காட்சி.. சண்டை ஆட்சியாளர்களுக்குள்தான்.. மக்களுக்குள் அல்ல என்று மனதில் பட்டதோ என்னவோ.. அமெரிக்க வீரர் ஒருவர் காயம் பட்ட வியட்நாம் முதியவள் ஒருவரை பாதுகாப்பான இடத்துக்கு சுமந்து செல்லும் நெகிழ்வான காட்சி...
நன்றி இணையம்.
==========================================================================================================
ஓய்வில்லாத 'அலை'ச்சல் ...
ஆர்ப்பரித்துக் கிளம்பி வந்து
அமைதியாகும் இடத்தில்
கிடைக்கும்
சில நொடிகளே
அலைகளுக்கு ஒய்வு.
அடுத்த நொடி மறுபடி
அவசரமாக
கிளர்ந்து வரவேண்டும்.
ஓய்வு பெற்று
ஆழமான பின்பகுதியில்
அமைதியாக ஓய்வெடுக்கும்
முதிய அலைகள்
முன்தள்ளி
முன்னேற்றிக் கொண்டிருக்கின்றன
இளைய அலைகளை
===================================================================================================
சிறந்த புகைப்படத்துக்கான விருது கிடைத்ததாம் இதற்கு.. கழுகுக்கும் கொஞ்சம் கருணை இருந்தது போலும்.. அது நினைத்தால் காத்திருக்காமல் அப்போதே தூக்கிக் கொண்டு சென்றிருக்க முடியும்...
===========================================================================================
நன்றி 'ரைட்மந்த்ரா' தளம்.
பொக்கிஷம்..
ரம்பம் போட்டு கழுத்தறுக்கிறார்கள்!
"ஹிஹிஹி.. நீங்களே சொல்லும்போது செய்யாமல் இருப்பேனா?!"
ரத்தம் வேலை செய்கிறது!
அட மாங்கா....
ஹோட்டலுக்குப் போனால் சிலபேர் 'ரெண்டு இட்லி, ஒரு தோசை' யை விட்டு வெளியே வராததன் காரணம்!
இந்த நாளும் இனிய நாளே..
பதிலளிநீக்குஎல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க துரை செல்வராஜூ அண்ணா..
நீக்குகாஃபியின் கதை மெல்லிய புன்னகை...
பதிலளிநீக்கு- பதில் புன்னகை -
நீக்கு// அந்த ஒருவரை 'கவனிப்பதிலேயே', அவர் பெயரை கெடுப்பதிலேயே கவனம் செல்கிறது. ..//
பதிலளிநீக்குஎன்னா ஒரு வில்லத்தனம்!..
அது ஒரு கொடுமையான அனுபவமாகத் தொடர்கிறது. வெற்றி கொள்ளப் போராடுகிறேன் - கவனியாமல் மதிக்காமல் இருப்பதன் மூலம்!
நீக்குபதிவிலேயே புரிந்தது ஸ்ரீராம்.
நீக்கு//கவனியாமல் மதிக்காமல் இருப்பதன் மூலம்!//
கண்டிப்பா இது வொர்க் அவுட் ஆகும், ஸ்ரீராம்...
கீதா
கொத்தமங்கலம் சுப்பு அவர்களை மறக்கவும் கூடுமோ?...
பதிலளிநீக்குஉண்மை. ஒரு விஷயம்... காஃபிக்கும் கொத்தமங்கலத்துக்கும் நடுவில் பிற்சேர்க்கை ஒன்று உளது! கவனிக்கவும்.
நீக்குசுஜாதா - என்றும் புதியவர்..
நீக்குஅந்த காலகட்டத்தில் எட்டியிருந்து அதிசயப்படத்தான் முடிந்தது..
அவர் ஒரு அறிவியல் சரித்திரம்!
நீக்குஅவர் ஒரு அறிவியல் சரித்திரம்!//
நீக்குஆமாம் ஸ்ரீராம்...
துரை அண்ணா நானும் அதே...இத்தனைக்கும் வாய்ப்பு மீண்டும் மீண்டும் வந்தும் கூட....போகவில்லை. போயிருந்தால் நான் என்ன பேசியிருப்பேன்? ஆளுமையுடன் பேசத் தயக்கம்....சுஜாதா மாமி திங்க என்ன தருவாங்கன்னு யோசிச்சு மாமி எனி ஹெல்ப்? என்று நைசா கிச்சனுக்குப் போகப் பார்த்திருப்பேனோ!!!!!? ஹிஹிஹிஹி...என் கசின் சர்வ சுதந்திரமாகச் சென்று வருவான் அவங்க செல்லத்துக்கு டீரீட்மென்ட் என்று...
கீதா
இன்னமும் அவர் மீது அபிமானம் இருப்பதற்கு போகாததே கூட காரணமாயிருக்கலாம்!
நீக்கு//போகாததே கூட காரணமாயிருக்கலாம்!// அப்படி இல்லை ஸ்ரீராம். நாம ஒருத்தர் அச்சீவ்மெண்டையும், அவரது சொந்த இயல்பையும் பிரிக்கத் தெரிஞ்சுருக்கணும். ஒருத்தரோட உண்மையான சுபாவம், அவரது மனைவி/கணவருக்குத்தான் தெரியும். இதனால்தான் சுஜாதா அவர்கள் அவரது கணவர் எழுத்தாளர் சுஜாதா பற்றிச் சொல்லியிருந்ததை பலரால் இயல்பாக எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை. வீட்டுத் தலைவர்/கணவர் ரங்கராஜன் வேறு, எழுத்தாளர் சுஜாதா வேறு. எழுத்தை வைத்து எழுத்தாளருக்கு பிம்பம் கொடுக்கவே கூடாது.
நீக்குஉண்மை. இந்த ஞானம் எல்லோருக்கும் வராது. எல்லா நேரமும் வராது!
நீக்குகாத்திருக்கும்
பதிலளிநீக்குகழுகு -
படம் பற்பல கண்டனங்களையும் பெற்றதாம்...
இதே போல இன்னொன்று ஹிரோஷிமா அணு குண்டு வீச்சின் போது உடைகள் தீப்பற்றிய நிலையில் ஓடி வந்த சிறுமி...
இதே மாதிரி
சில ஆண்டுகளுக்கு முன் தென் தமிழகத்தில் அரசு உயர் அலுவலகத்தின் முன்பு கந்து வட்டிக் கொடுமையால் தீயிடப்பட்ட - ....
சொல்ல விரும்பவில்லை..மனம் வலிக்கின்றது
ஆம், சில படங்கள் மனதைப் பேதலிக்க வைத்துவிடும்.
நீக்குபாஸுக்கு எல்லாம் தெரியும். சில சமயம் இப்படி வடிவேலு காமெடி யையும் எடுத்து விடுவார்கள். 'சிரித்து வாழ வேண்டும்' .
பதிலளிநீக்கு///ஒருவர் நல்ல பெயர் எடுத்திருக்கிறார் என்று தெரிந்தால் சிலருக்கு உடம்பை என்னவோ செய்கிறது. மனதைப் பிசைகிறது. தன்னுடைய வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அந்த ஒருவரை 'கவனப்பதிலேயே', அவர் பெயரை கெடுப்பதிலேயே கவனம் செல்கிறது. //
context ? பாச்சா உருண்டை கதைக்கு இது எந்த வழியில் பொருந்தும்?
கவிதை கொஞ்சம் முரண்பட்டு தோன்றுகிறது. ஓய்வெடுக்கும் முதிய அலைகள் என்கிறீர்கள். அவை இளைய அலைகளை முன் தள்ளி முன்னேற்றுகின்றன என்று சொல்கிறீர்கள். தள்ளுவது வேலை இல்லையா?
ஆர்ப்பரித்து அடங்கிய அலை
ஆர்ப்பரிக்க வைக்கும்
அடுத்த அலையை.
அலைகள் ஓய்வதில்லை.
தலைவர்களும்
தலைவர்களை
உருவாக்குகிறார்கள்.
ரத்தத்தில் ஊறிய சிக்கனம் ? சிக்கனம் என்கிறீர்கள் எப்படி தானம்? அதுவும் மூன்று முறை கொடுக்க மனசு வந்தது.
Jayakumar
ஸ்பான்டேனியஸ் ஆக வந்த அந்த ஒரு நொடி தள்ளல் மனமயக்கம்!
நீக்கு//context ? பாச்சா உருண்டை கதைக்கு இது எந்த வழியில் பொருந்தும்? //
அதை நான் சம்பவமாக எழுதினால் விளக்குவேன். எழுதவேணும் என்று இதுவரை தோன்றவில்லை.
பின்னால் திண்ணையில் இருக்கும் அலைகள், விளையாடும் அலைகளை ஊக்குவிக்கின்றன! ஒரு லெவெலுக்கு பின் அமைதியான கடலைத்தானே பார்க்கிறோம், ஆர்ப்பரிக்கும் அலையை அல்லவே...
ஓரொரு முறை ரத்தம் கொடுக்கும்போதும் ஓரொரு முறை பணம் கொடுத்ததாய் ஜோக்!
context ? பாச்சா உருண்டை கதைக்கு இது எந்த வழியில் பொருந்தும்? //
நீக்குஜெகே அண்ணா சுஜாதா கதையில் வருவது போலத்தான்.....
ஒருவர் ஒன்று சொல்லிவிட்டால் மனதில் அது பதிந்து அது சர்க்கரைக் கட்டிதான் என்று தெரிந்தாலும் மனதில் ஒரு சந்தேகம் புகுந்துவிடுகிறதே..ஏனென்றால் அதைக் குறித்து பாஸுக்கு ஏதேனும் அனுபவம் இருக்கலாம்....பலருக்கும் அது தன்னிச்சையாக நுகர்ந்து பார்க்கத் தோன்றும்...இதுதான் மனம் என்பது!!!
கீதா
கீதா, அதேதான்
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்கு//அடக்க மாட்டாமல் நானும் இளையவனும் சிரிக்க, சட்டென புரிந்துபோன பாஸும் உணர்ந்து சிரித்தார். அப்படி சேர்ந்து சிரித்துதான் ரொம்ப நாளாச்சு போங்க!//
பதிலளிநீக்குகேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அடிக்கடி சிரிங்க.
உங்கள் கவிதை முதிய , இளைய அலைகளை ரசித்தேன்., கடற்கரை காணொளி நன்றாக இருக்கிறது. அடுத்த கவிதையும் படமும் மனதை கனக்க வைக்கிறது.
மனம் விட்டு எப்போது சிரித்தோம் என்று சில சமயம் நம்மை கணக்குப் பார்த்து எண்ண வைத்து விடும் காலம்!
நீக்குநன்றி. படத்துக்கான வரிகள் இளையாராஜா பாடும் திரைப்படப் பாடல் வரிகள்..
//ஒருவர் நல்ல பெயர் எடுத்திருக்கிறார் என்று தெரிந்தால் சிலருக்கு உடம்பை என்னவோ செய்கிறது. மனதைப் பிசைகிறது. தன்னுடைய வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அந்த ஒருவரை 'கவனிப்பதிலேயே', அவர் பெயரை கெடுப்பதிலேயே கவனம் செல்கிறது. // இன்னமும் அனுபவித்துக் கொண்டு இருக்கேன். :(
பதிலளிநீக்குஎன்ன செய்ய.. இப்படியும் சில நல்ல உள்ளங்கள்..
நீக்குஸ்ரீராம்...இது மனித இயல்பு என்பது என் எண்ணம். ஒருத்தர், அவங்க மனைவியையோ அல்லது பசங்களையோ, ஆஹா ஓஹோ என்று அவர்கள் செய்த செயல்களையெல்லாம் சொல்லிப் புகழ்ந்தால், கேட்பவர்களில் பலருக்கு, ஒன்று மனதில் புழுங்கும், இல்லைனா, இது என்ன, என் மனைவி, என் பசங்க என்று தாங்களும் சொல்வாங்க, இல்லைனா, பிறரிடம், அவரோட மனைவி, பசங்களைக் குறை சொல்லி, இப்படிப்பட்டவரை அந்த நண்பர் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தார் என்று சொல்லி தன் வயிற்றெரிச்சலைத் தணிச்சுப்பாங்க. அலுவலகத்திலும் தனக்குக் கீழ் வேலை பார்ப்பவரை, தன் பாஸ் புகழ்ந்தால், உடனே மட்டம் தட்டி வைக்கத்தான் தோன்றும். நாமும், ஆமாம் அவர் மிகத் திறமையானவர் என்றெல்லாம் சொல்வது அபூர்வம். (நான் பிறர் செய்த வேலையை, என்னுடைய வேலை என்று எப்போதுமே சொல்லிக்கொண்டது கிடையாது. நான் இதைச் சொன்னேன், இப்படிச் செய்யலாம் என ஆலோசனை சொன்னேன், அதைவிடச் சிறப்பாக இப்படி இப்படிச் செய்திருக்கிறார் என்றே சொல்வது வழக்கம். அதனால சீனியர் மேனேஜ்மெண்ட் மீட்டிங்ல என்னைப் புகழும்போது, நான் யார் செய்தாரோ அவரைப் பற்றி அங்கு சொல்லிவிடுவேன்.
நீக்குநீங்கள் சொல்வது பொது மனித இயல்பு. ஒருவர் அதுவும் மாற்றார் சொல்வதை அப்படியே ஏற்க மனம் வருவது சிரமம். மேலும் நான் சொல்வதிலிருந்து இது முற்றிலும் வேறு வகை. கற்பனைக்கு அப்பாற்பட்டவர் என் வில்லன்!
நீக்குஒரு வியாழன் பதிவா வரும் போலிருக்கு
நீக்குதயக்கம்.் எழுதுவதற்கு தயக்கம். ஏற்கனவே இரண்டு முறை எழுத நினைத்து, அவ்வளவு விளக்கமாக எழுதவும் முடியாது, விவரித்து சொல்லவும் கூடாது என்று விட்டுவிட்டேன்!
நீக்குஒரு வாரம் முன்னாடியே சுஜாதாவிற்கு அஞ்சலியா? அது சரி, கஞ்சனுக்கு ரத்தம் கொடுக்க மட்டும் எப்படி மனசு வந்தது? அதுவும் 3 தரம்?
பதிலளிநீக்கு27 தாண்டிதானே அடுத்த வியாழன் வருகிறது! அதுதான்!
நீக்குசுஜாதா மறைவு நாள் கட்டுரை, படித்த கட்டுரை எல்லாம் படித்தேன்.
பதிலளிநீக்குமனம் நெகிழ வைத்த படம்.
பொக்கிஷ நகைச்சுவை எல்லாம் நன்றாக இருக்கிறது.
உணவு பேர் பயத்தை கொடுக்கிறது
கையிருப்புக்கு ஏற்ற மாதிரி உணவு கேட்பது ! 46 பைசாவுக்கு எவ்வளவு கிடைக்கும்? என்ற வியப்பு. காப்பி முக்கியம் அது போக மீதிக்கு பலகாரம்.
எந்த வருஷம்?
1962 என்று நினைவு. அப்போது நிறைய கிடைத்திருக்கும். நன்றி கோமதி அக்கா.
நீக்குகொத்தமங்கலம் சுப்பு அவர்களின் "தில்லானா மோகனாம்பாள்" நாவலுக்கு ஈடு, இணை இல்லை.. அடுத்ததாக "ராவ் பஹதூர் சிங்காரம்". கொ.ம.சு.வின் ஒரு நாவல் தான் "மோட்டார் சுந்தரம் பிள்ளை" என்னும் திரைப்படமாக வந்ததுனு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஎனக்கும் அப்படி தான் படித்த நினைவு.
நீக்குமுதிய அலைகள்? ம்ஹூம்! எல்லாமே புத்தம்புதிதாய்த் தோன்றி மறைபவை அல்லவோ? கவிதை நன்று. சிரிப்புத்துணுக்குகள் கொஞ்சமானும் புன்னகைக்க வைத்தன. ஓட்டல்களில் இம்மாதிரி வட இந்திய உணவுகள் அந்தக் காலத்திலேயே பிரபலம் போல!
பதிலளிநீக்குபின்னால் அசையாமல் இருக்கும் கடல்நீர்தான் முன்னால் ஓடிவரும் இளைய அலைகளைத் தள்ளுவதாய் கற்பனை!
நீக்கு//ஓட்டல்களில் இம்மாதிரி வட இந்திய உணவுகள் அந்தக் காலத்திலேயே பிரபலம் போல!//
எனக்கும் தோன்றியது.
அதென்னமோ இப்போதெல்லாம் எந்த ஓட்டல் உணவும் சாப்பிடப் பிடிப்பதில்லை. பயமாகவும் இருக்கு. அந்த அளவுக்கு வயிறு தொந்திரவு கொடுத்துவிட்டது. இப்போ ஒரு மாசமாய்த் தான் கொஞ்சம் பரவாயில்லை ரகம். ஆனாலும் கட்டுப்பாடான உணவே! சாம்பார், வெறும் குழம்பு, வத்தக்குழம்பெல்லாம் ஸ்பூனில் தான்! :)))))
பதிலளிநீக்குபாவம்.. உங்க உடம்பு வாகு அப்படி... ஹோட்டலில் சாப்பிட்டு அலுத்து விட்டதுதான். ஆனால் சந்தர்ப்பங்கள் அப்படி அமைகின்றன.
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உடம்பெல்லாம் ஒண்ணும் இல்லை. வயிறு தான் துரோகியாக இருக்கு! :))))) அதிலும் சில ஓட்டல்களின் உணவுகள்! பையர் வந்தால் தான் ஓட்டல் உணவு. அவர் தேர்ந்தெடுப்பதே வட இந்திய நான், பட்டர் பராந்தா, பனீர் சப்ஜி. என்னதான் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் வயிறு தகராறு பண்ணும். நான் வரலைனாலும் விடமாட்டாங்க! அம்மாவுக்கு ஒரு நாளாவது சமையலில் இருந்து ஓய்வு என அவங்க நினைப்பு! அன்புத்தொல்லை!
நீக்குஆம். இன்று கூட பாஸுக்கு ஜுரம். ஆனால் எனக்கு ஆபீஸுக்கு கட்டித்தருவேன் என்று ஒற்றைக் காலில் பிடிவாதம். வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன். ரெஸ்ட் எடுக்கச் சொல்லி இருக்கிறேன்.
நீக்குவயிறு துரோகியல்ல என்றும். அது பலவருட காலம் ஒங்களுக்காக ஒழச்சு ஒழச்சு இப்பக் கொஞ்சம் ஓரமா ஒக்காரப் பாக்குது. நீங்க என்னடான்னா பராண்ட்டா, பனீர்,பட்டர் நான், மட்டர் நீ.... என அதன் தலை மேல அடுக்கிக்கிட்டே போறீங்கன்னு வருத்தப்படுது..!
நீக்குgrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr எனக்கு இந்த "நான்" வகைகளோ பனீர்/பட்டர் பராந்தா வகைகளோ பிடிக்கவே பிடிக்காது. நான் கேட்பது ஃபுல்கா தான். துரதிர்ஷ்டவசமாக இங்கே இருக்கும் ஓட்டல்காரங்களுக்கு ஃபுல்கானா என்னனே தெரியலை. :( தோல் மாதிரி தடிமனில் கோதுமை மாவில் எண்ணெய் விட்டுக் கடிக்க முடியாத ஒரு வஸ்துவைக் கொடுக்கிறாங்க. சப்பாத்தினு கேட்டாலும் அதான். ஃபுல்காவுக்கும் அதான். அநேகமா அதான் ஒத்துக்கலையோனு நினைக்கிறேன்.
நீக்குஎனக்கு இந்த புல்கா, நான் எல்லாமே அலர்ஜி. வாங்குவதே இல்லை.
நீக்குஇப்போதெல்லாம் சப்பாத்தியே கடைகளில் கன்றாவியாகத் தருகிறார்கள். கையால் இட்டு எடுத்த சாப்பாத்தி மிருதுவாக ஒரு மாதிரி சாப்பிட நன்றாயிருக்கும். மெஷினில் அமுக்கியது, அல்லது அதிலேயே சுட வைத்தது எனக்குப் பிடிப்பதில்லை. கையால் இடவேண்டும். தோசைக்கல்லில் இட்டு எண்ணெய் விட்டு திருப்ப வேண்டும்.
நீக்குஎனக்கு நார்த் இன்டியன் உணவு (பலவும்) இலர்ஜியை உண்டாக்குகிறது. அதனால் இனி அவற்றைச் சாப்பிடும் எண்ணம் இல்லை. சமீபத்தில் சாப்பிட்ட ISKON வட இந்திய ரிசப்ஷன் விருந்து ஒன்றும் செய்யவில்லை, இருந்தாலும் சாப்பிட்டு அடுத்த ஒன்றரை மணி நேரம் டென்ஷனாகவே இருந்தது, பயத்தால்
நீக்குஎனக்கும்! இந்த பேல்பூரி, பானி பூரி எல்லாம் ஆதியிலிருந்தே பிடிப்பதில்லை!
நீக்குஎனக்கும் அப்படித்தான். இன்றுவரை ஏதோ புளித்தண்ணீர் விட்டுக்கொண்டு சாப்பிடும் பானிபூரி பக்கமே திரும்பமாட்டேன். பேல்பூரி தாஹிபூரி போன்றவற்றை வேறு வழியில்லாமல் ஒருமுறை சாப்பிட்டு, அதன் ருசி பழகிவிட்டது, விருப்பமாகவும் ஆகிவிட்டது.
நீக்குஎனக்கு இப்போதும் பிடிப்பதில்லை!!
நீக்கு..துரதிர்ஷ்டவசமாக இங்கே இருக்கும் ஓட்டல்காரங்களுக்கு ஃபுல்கானா என்னனே தெரியலை//
நீக்குஃபுல் கானா (khana) கேக்கறாங்க போலருக்கு.. ன்னு நெனச்சு இன்னும் எதயாவது கொண்டு வந்து வச்சிடப்போறாங்க.. வடநாட்டு சாப்பாட்டைத் தமிழ்நாட்டில் ஆர்டர் செய்வது போன்ற அனுபவம்.. வேறெங்கும் கிடைக்காதது!
இங்கே பெட்டிக்கடையிலிருந்து பெரிய கடைவரை வடநாட்டவர்கள் ஆதிக்கம்தானே.. பொருள் தெரியாமலிருக்க வழியில்லையே...!
நீக்குஇந்த புகைப்படம் எடுக்க எப்படி மனசு வந்தது என்று நினைத்துக் கொண்டேன். :( ஒரு சில படங்கள் விளக்கம் ஏதும் இல்லாமலேயே மனதைப் பிழிந்து எடுத்துவிடுகிறது.
பதிலளிநீக்குகண்முன்னே காட்சி தெரியும்போது பின்னே ஆவணபப்டுத்த வேண்டாமா?
நீக்குஇந்த புகைப்படத்தை எடுத்தவர் தவறை உணர்ந்து பின்னாளில் தற்கொலை செய்து கொண்டார் (இதற்கு விருது வாங்கிய பிறகு)
நீக்குஅலைகள் ஓய்வதில்லை படம் நல்லா இருந்தாலும் சீக்கிரமா முடிஞ்சுடுதே?
பதிலளிநீக்குசும்மா சிறு காணொளி.
நீக்குபுகைப்படம் எடுப்பது என்பது கலை, போதை. அப்படிப்பட்ட கலைஞர்களுக்கு எதையும் சட்னு படம் எடுக்கணும் என்ற நினைப்பே முதலில் இருக்கும். அந்தக் கழுகு இன்னும் அருகில் வந்தால் புகைப்படம் சிறப்பாக அமையுமா இல்லை முதல் முறை கொத்தும்போது சிறுவனின் ரியாக்ஷனோடு எடுக்கலாமா என்றே தோன்றும்.
பதிலளிநீக்குசமீபத்தில் ரிஷப் பந்த் கார் விபத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட வெளியே தடுமாறி வந்தபோது, அட ரிஷப் பந்த் என்று போட்டோ எடுத்தவர்களும் உண்டு. இந்த ஆள் யாருன்னே தெரியாமல், அவரைத் தாங்கிப் பிடித்து மருத்துவதனையில் ஒருவர் காப்பாற்றி அரசாங்க விருது பெற்றார். யாரை ரிஷப் பந்தால் வாழ்க்கை முழுவதும் மறக்க இயலாது?
கழுகு சிறுவனின் மரணத்துக்கு காத்திருக்கிறதா, இல்லை இன்னும் சில நிமிடங்களில் கொத்தித் தூக்கிக் கொண்டு போய்விடுமா.. கேள்வியே விபரீதம்தான்.
நீக்குரிஷப் பந்த் காப்பாற்றியவரை மறக்க மாட்டார். புகைபபடம் எடுத்தவர்கள் மற்றொன்றை மறக்க மாட்டார்கள்!
சில்க் மரணமடைந்தபின் அவர் உடலை வைத்திருந்த மருத்துவதனையில் சில பல டாக்டர்கள் கண்டு களித்துவிட்டுச் சென்றதாகப் படித்திருக்கிறேன்.
நீக்குஎன்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அதேபோலவே நானும் ஒரு சம்பவம் நக்மா சம்பந்தமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்!
நீக்குஅதாவது மனிதாபிமானத்தை க்யூரியாசிட்டி, அதிலும் தாழ்ந்த க்யூரியாசிட்டி வென்றுவிடும் நிகழ்வு அது
நீக்குஓ.. புரிந்தது.
நீக்கு..சில பல டாக்டர்கள் கண்டு களித்துவிட்டுச் சென்றதாகப் படித்திருக்கிறேன்//
நீக்குகளிப்பவர்கள் டாக்டர்கள் மட்டுந்தானா?
மனித வக்ரம் பல விதம். எப்போதும், எங்கும், இருந்து வருவது. எல்லாமும் வெளிவருவதில்லை. வராமலிருப்பதே நல்லது.
பிணவறைக் காப்பாளன் என்றொரு புத்தகம். சாருன்னு ஒரு ஆனானப்பட்ட எழுத்தாளர் எழுதியது. ஆங்கிலத்துல வேற மொழியாக்கி வச்சிருக்கு அத! சரி, விடுங்க..
//களிப்பவர்கள் டாக்டர்கள் மட்டுந்தானா?/
நீக்குவாய்ப்பு கிடைக்கும் எல்லோரும்!!
பிணவறைக் காப்பாளன் எது பற்றி என்று புரிகிறது. அதற்கு ஒரு ஆங்கில வார்த்தை வேறு உண்டு.
மனித வக்ரம் உள்ளவர்கள் எல்லோருமே....இதைவிடக் கொடுமையும் நடக்கிறதே.... இறந்த சடலத்தோடு ....ஹையோ வக்ரம்...
நீக்குகீதா
சொல்லாதீங்க...
நீக்குகுடும்பத்தில் அனைவரும் சேர்ந்து சிரிப்பது அபூர்வமாகத்தான் நிகழ்கிறது. ஆனால் அது கொடுக்கும் மனத் திருப்தி தனிதான்.
பதிலளிநீக்குநான் சமீபத்தில் என்னையே கேட்டுக்கொண்ட கேள்வி அது. அதேபோல மனம் விட்டு வாய்விட்டு எப்போது பாடினேன் என்றும் யோசிப்பேன்!!!
நீக்குஅதேபோல மனம் விட்டு வாய்விட்டு எப்போது பாடினேன் என்றும் யோசிப்பேன்!!!//
நீக்குஹைஃபைவ்!!! மீயும் அதே....ராகங்கள் எல்லாம் மறந்து போவதற்குள் மீள் பதிவு செய்யணும் மூளைக்குள்!!!
இப்ப விண்ணிலிருந்து வந்த நட்சத்திரக் குழந்தைகளுக்காகப் பாட்டு எளிய சிறிய பாட்டுகளை மெட்டு அமைத்து அவர்களுக்கு சில ராகங்கள் உதவும் என்ற ஆய்வின் படி அந்த ராகங்களில் அமைத்துப் பாடி முயற்சி. ஆத்திச் சூடி, அம்மா இங்கே வா வா...போன்றவை. நான் மீண்டும் பாட வேண்டும் என்று உத்வேகப்படுத்திக் கொண்டு..முயற்சியில் இருக்கிறேன்...
கீதா
நீங்கள் செய்வது ஆக்கபூர்வமான முயற்சி. நான் சொல்வது வீட்டில் மனதுக்குப் பிடித்த பாடல்களை எல்லோரும் இருக்கும்போது சத்தமாக வாய்விட்டு பாடுவது!
நீக்குஒருவரை வைத்து மற்றவர்கள் எல்லோரும் சிரிப்பது அவ்வப்போது நடக்கும். ஆனால் அது சாதாரண நிகழ்வு
பதிலளிநீக்குஇதில் மனம் புண்படும் நிகழ்வு இல்லை. ஜஸ்ட் ஜாலி!
நீக்குஅது புரிந்தது. சில முறை அம்மா அல்லது அப்பா, பையன் செய்யும் தவறை மற்ற எல்லோரும் சேர்ந்து கலாய்த்துச் சிரிப்போம். சில நேரங்களில் அது, சம்பந்தப்பட்டவருக்கு நகைச்சுவையாக இருக்காது
நீக்குமகன் அமெரிக்காவில் இருந்து அம்மாவிடம் போனில் "அம்மா நான் நயாகரா
நீக்குபோறேன்"
பாஸ் "டேய் நயகராவில் குளிச்சிடாதே, சளி பிடிச்சிடும்"
தம்பி மனைவி " கனடா பக்கம் போய் பார். அழகா இருக்கும்."
மகன் " ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க"
நான் ஹா ஹா
Jayakumar
:))
நீக்கு..இந்த இரண்டு சந்திப்புகளிலும் சுஜாதாவின் பேச்சு வசீகரமாக இருக்கவில்லை. அவர் எழுத்தில் இருக்கும் சாதுர்யம் பேச்சில் இல்லை.//
பதிலளிநீக்குநல்ல எழுத்தாளர்கள் எல்லாம் திறனான பேச்சாளர்களாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அப்படி எதிர்பார்த்தால், தப்பு எதிர்பார்ப்பவருடையது.
ஆம். அதேபோல ஒருவர் எழுத்தை ரசித்து விட்டு நேராகச் சென்று பார்த்து சில எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்வதும் சரியல்ல என்று தோன்றும்.
நீக்குவாசகன் எழுத்தாளனை சந்திக்காமல் இருப்பதே நல்லது - எனக் கூறியிருக்கிறார் சுஜாதா!
நீக்குசரியான கருத்து. சுஜாதா காலமானவுடன் அன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரலாம் என்று நானும் என் நண்பனும் மிகவும் யோசித்து கடைசியில் முடிவை கைவிட்டோம். கடைசி வரை பார்க்காமலேயே இருந்து விட்டோம்.
நீக்குசுஜாதா சம்பந்தப்பட்டதை ஏற்கனவே படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குசுஜாதா தேசிகன் என்பவரின் எழுத்தைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் (சுஜாதாவுடன் கடைசியில் தொடர்பில் இருந்தவர்...ஆன்மீக எழுத்து). அவர் எழுத்து மிகவும் ரசிக்க வைக்கும். ஆனால் அவர் ஒரு இரங்கல் கூட்டத்தில் பேசியதைக் கேட்டு, எழுத்து வன்மை வேறு, பேச்சு வன்மை வேறு என்று புரிந்துகொண்டேன்.
சுஜாதா சம்பந்தமாக எதைத்தான் நாம் மிஸ் செய்திருப்போம்! தேசிகன் - அறிவேன். அவருக்கு ஒரு வலைப்பக்கம் கூட உண்டு. ஆம், எழுத்து வன்மை வேறு. பேச்சு வன்மை வேறு.
நீக்குபேச்சு வன்மை என்பது பேச்சு வன்மமாகவும் தமிழ்நாட்டில் குறிப்பாக, ஆகிவிட்டிருக்கிறது. தொடர்ந்து கைதட்டும் ஜனங்களின் சிறப்புப் பங்களிப்பு வேற!
நீக்குஅது அப்படி மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன. நாகரீகம் என்பது தொலைந்தே போனது!
நீக்குசுஜாதா தேசிகன் வாசிக்கப்படவேண்டிய எழுத்தாளர்/பதிவர்.
பதிலளிநீக்குமறைவுக்கு சில மாதங்கள் முன், அவர் கேட்டுக்கொண்டதின் பேரில், சுஜாதாவை ஸ்ரீரங்கம் அழைத்துவந்து ரெங்கநாதப் பெருமாளை அமைதியாக தரிசிக்க உதவியவர் சுஜாதா தேசிகன். அதுபற்றி அவர் எழுதியிருந்த ஒரு வலைப்பக்கம் வாட்ஸப்பில் சமீபத்தில் உறவினர் ஒருவரால் அனுப்பட்டிருந்தது. வாசித்தேன். விஷயம். சுவாரஸ்யம். உருக்கம்..
அது ஒரு புத்தகமாகவே வெளிவந்திருக்கிறது என்று நினைவு. குமுதம் பிரசுரம்?
நீக்குபுத்தகமாகவா? தெரியவில்லை.
பதிலளிநீக்கு@ கீதாக்கா..
பதிலளிநீக்கு//அடுத்ததாக "ராவ் பஹதூர் சிங்காரம்". கொ.ம.சு.வின் ஒரு நாவல் தான் "மோட்டார் சுந்தரம் பிள்ளை" என்னும் திரைப்படமாக வந்ததுனு நினைக்கிறேன்..//
இல்லை.. இல்லை..
கொத்தமங்கலம் சுப்பு அவர்களது ராவ் பகதூர் சிங்காரம் - கதை
பதிலளிநீக்குவிளையாட்டு பிள்ளை என்ற பெயரில் திரைப்படமாக ஏ.பி.நாகராஜன் அவர்கள் இயக்கத்தில் 1970 களில் வெளிவந்தது..
திரைக்கதையின்படி - படத்தில் விழாவுக்கென்று வந்த யானைக்கு மதம் பிடித்து ஜமீன்தார் மகளைத் துரத்த -
தலைவர் தான் யானையை மடக்கிப் பிடித்து நாலு சத்து சாத்தி - வழிக்குக் கொண்டு வருவார்..
தலீ... வர்.. ன்னா!.. வாத்யாரா?
ஜிவாஜி!..
அட.. அதான் படம்..
அது வெற்றிப் படம்.. யா!!.
நூறு நாளைக்கு மேல ஓடிச்சி!..
கும்பகோணம் கற்பகம் தியேட்டரில் இப்படத்தைப் பார்த்தேன்..
நான் சொன்னது ராவ் பஹதூர் சிங்காரம் நாவலை அல்ல. அது விளையாட்டுப் பிள்ளையாக வந்து நானும் பார்த்து ஜிவாஜியை ரசிச்சிருக்கேனாக்கும். ஜெமினி தயாரிப்புப் படங்களுக்கு எல்லாம் தாத்தாவுக்குப் பாஸ் கிடைச்சுடும். எங்களுக்குக் கொடுத்துடுவார். நான் சொல்வது கொ.ம.சு. எழுதின வேறே ஏதோ ஒரு நாவல் மோட்டார் சுந்தரம் பிள்ளையாக வந்தது என்பதே!
நீக்குஓ!... முன் பின் வாக்கியங்கள் குழப்பி விட்டன...
நீக்குசுஜாதாவின் எழுத்தை நான் அதிகம் வாசித்தது இல்லை.
பதிலளிநீக்குசிறந்த எழுத்தாளர்
//நான் அதிகம் வாசித்தது இல்லை.
நீக்குசிறந்த எழுத்தாளர்//
:)))
இந்த கழுகு புகைப்படத்தை எடுத்தவர் தவறை உணர்ந்து பின்னாளில் தற்கொலை செய்து கொண்டார்.
பதிலளிநீக்கு(இதற்கு விருது வாங்கிய பிறகு)
ஆமாம். படித்த மாதிரி நினைவிருக்கிறது.
நீக்குகாப்பியும் சிரிப்பும் மகிழ்ச்சியான தருணம்.
பதிலளிநீக்குபரிசுடன் பல கண்டனங்களையும் பெற்ற கழுகு குழந்தை படம் முதன்முதல் அந்தப் படத்தைப் பார்த்தபோது நான்பட்ட வேதனை இன்னும் மறப்பதற்கில்லை.
கவிதைகள் சிறப்பு.
ஜோக்ஸ் ரசனை.
தில்லானா மோகனாம்பாள் கதை படித்ததில்லை. படம் பார்த்திருக்கிறேன்.
சுஜாதா பகிர்வு அருமை.
மகாபெரியவாள் கருத்து என அனைத்து பகிர்வுகள் நன்று.
ரசித்ததற்கு நன்றி மாதேவி.
நீக்கு
சில சமயங்களில் தன் மனம் சொல்வதை தீவிரமாக நம்பும் ஒருவர் இப்படிதான் அவற்றை காட்சியாகக் கண்டது போல உணர்ந்து உண்மையில் இல்லாததை மற்றவர்களிடம் பேசுவார்களோ....//
பதிலளிநீக்குஆமாம்!! உண்டு ஸ்ரீராம். உண்டே..
இதில் மற்றொன்று தன் மனதில் இருக்கும் எண்ணத்தை அல்லது ஆணித்தரமாக நம்புவதை, நம்மிடம் நேரடியாகச் சொன்னால் நாம் நம்பமாட்டோம் என்று நாம் நம்பும் வேறொருவர் - அவர் சொல்லியே இருக்க மாட்டார் - சொன்னது போல...'அவரே சொன்னார்' என்று தன் ஆணித்தரமான கருத்தைச் சொல்பவர்களும் உண்டே....இது காட்சிக்கும் கூடப் பொருந்தும்!!
சுஜாதா கதை இது வாசித்ததில்லையே...பார்க்கிறேன் கதை கிடைக்குதா என்று
கீதா
அடுத்தவர் சொல்லாதிருக்கும்போது சொன்னார் என்று சொன்னால் கூட சந்தேகப்பட வழியிருக்கும்.
நீக்குஹாஹாஹா காஃபி டெஃப்ஃபனிஷன் பல பேரர்களுக்கும் குழப்பம் வந்துவிடும்....தனித் தனியா வைச்சுட்டா பிரச்சனையே இல்லை பாருங்க...அதான் நல்ல விஷயம்...
பதிலளிநீக்குசரி அடுத்து வாசிக்கலை...அதுக்குள்ள இந்தக் கருத்தைச் சொல்லி விடுகிறேன்...கொண்டு வைச்ச காஃபில குழம்பிய பேரர் சர்க்கரை போடவில்லைதானே!!!!
கீதா
ஹா.. ஹா.. ஹா.. எஸ்கேப் ஆகிவிட்டார்!
நீக்குஅந்தக் கட்டி அந்துருண்டை/பாச்சா உருண்டை போலத்தான் இருக்கும்!!ஹிஹிஹிஹி...நான் அப்படித்தான் சொல்வது...ஹைஃபைவ் வித் ராகுல்!!
பதிலளிநீக்குபாவம்பா பாஸ்!!!! அவங்களை ரொம்பவே பயப்படுத்திட்டீங்க. சரி சர்க்கரை போட்டுக்கிட்டாங்களா இல்லையா? அந்துருண்டை என்று சொன்னதால் சந்தேகமும் வந்துருச்சுனா முகர்ந்து பார்த்தால்கூட அந்த வாசனை வருவது போலவே இருக்குமே...மேலே தலைவர் கதை!!!
கீதா
அப்புறம் போட்டுக்கிட்டாங்க... அதுல இனிப்பு பத்தலைன்னும் சொன்னாங்க!
நீக்குகாஃபி நகைச்சுவைலருந்து வேறு ஒன்றிற்குத் தாவிட்டீங்க!! அந்து என்னன்னு ஓரளவு புரிகிறது!!!!!
பதிலளிநீக்குகீதா
Sharp கீதா. சிறுபொறி!
நீக்குகண்கட்டு வித்தை - ஆம் மனதைக் கட்டிப் போடும் வித்தை மனனம் போல...மனமே ஒரு விந்தையான ஒன்று...யாரேனும் ஒருவர் ஒருவரைப் பற்றி அபிப்ராயம் சும்மா சொல்லப் போக ஒரு சிலருக்கு அவரைப் பார்க்கும் போதெல்லாம் அதுதான் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கும்...!!
பதிலளிநீக்குகீதா
அதைத் தெரிந்தும் தெரியாமலும் செய்து கொண்டிருக்கிறார் ஒரு நண்பர்.
நீக்குஅவரால் குமுதத்தில் கணேஷ்_வஸந்த் கதையை எழுதிக் கொண்டே, கணையாழியில் கடைசிப் பக்கங்களையும் எழுத முடிந்தது. இது ஒரு வினோதம். //
பதிலளிநீக்குஆம் ஸ்ரீராம் ரொம்ப வியக்க வைத்த விஷயம். அவரைப் பற்றிய அப்பகுதியை ரொம்ப ரசித்து வாசித்தேன். எனக்கு ரொம்பப் பிடிக்கும்...
சிலருக்கு எழுத்தில் இருக்கும் திறன் பேச்சில் இருப்பதில்லை. வைஸ் வெர்சா. ஒரு சிலருக்கு மட்டுமே இரண்டு ஆற்றல்களும் ஆசிர்வதிக்கப்படுகின்றன!
கீதா
கற்றதும் பெற்றதும், ஏன் எதற்கு எப்படி ஆகியவையும் அவர் ஸ்பெஷல்கள்.
நீக்குஅவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் கதைகளைப் படிக்கும் எந்த ஒரு சிடுமூஞ்சியும் புன்னகை மன்னனாக மாறிவிடுவான் என்பதில் சந்தேகமில்லை. //
பதிலளிநீக்குஅதே அதே...
கீதா
நமக்கு நம் அனுபவங்கள் நினைவுக்கு வரும்!
நீக்குசுஜாதா என்றதும் டக்கென்று நினைவுக்கு வருபவர் - சுஜாதா தேசிகன். இப்பகுதி முதலில் அவர் எழுதியதோ என்று நினைத்தேன் ஆனால் இல்லை என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅவர் வலைத்தளத்திலும் சுஜாதா பற்றி வாசித்ததுண்டு. சுஜாதா தேசிகனின் எழுத்தையும். அவர் எப்படி சுஜாதாவுடன் நெருங்கிப் பழக நேர்ந்தது என்பதும் வாசித்திருக்கிறேன். அவரது கடைசி காலத்தில் சுஜாதா தேசிகன் இருந்தது பற்றியும் சொல்லியிருக்கிறார்.
கீதா
ஆனால் நான் அதிகம் அவர் பக்கம் செல்வதில்லை.
நீக்குகொத்தமங்கலம் சுப்பு - தில்லானா மோகனாம்பாள் என்றாலே அவர் நினைவு வந்துவிடும். பலர் எழுத்தும் திரைப்படமாக வரும் வேளையில் எழுத்து அலல்து திரைப்படம் மனதில் நிற்கும் ஆனால் இவர் எழுதியது திரைப்படமாக வந்த போதும் சக்கை போடு போட்டது என்பதோடு இப்போது வரை பேசப்படும் கதாபாத்திரங்கள்!
பதிலளிநீக்குகீதா
ஜெமினி பிக்சர்ஸின் கதை இலாகாவில் தான் கொ.ம.சு. இருந்ததாகச் சித்தப்பா சொல்லி இருக்கார். கொ.ம.சு.வுடைய காந்தி கதை வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நான் சின்ன வயசில் நேரில் பார்த்துக் கேட்டு, அழுது ரசிச்சிருக்கேன்.
நீக்குஇமயங்கள்.
நீக்குபுகைப்படம் நெகிழ்ச்சி. இப்படி ஒவ்வொரு போரிலும் நடப்பதுண்டு இல்லையா....சமீபத்திய உக்ரைன் போரில் ஏதேனும் இப்படி வந்ததா என்று தெரியவில்லை,
பதிலளிநீக்குகீதா
நாம் பார்க்கவில்லை; பார்க்க விரும்பவில்லை!
நீக்குகவிதையின் இரண்டாம் பகுதியை ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம். பின்னால் அமைதி - எல்லாம் அடிச்சு அடிச்சு ஓஞ்சு செட்டில் ஆகிடுச்சு போல!!! இளைய, முதிய - கற்பனையை ரசித்தேன்...
பதிலளிநீக்குகாணொளி செம...
கீதா
நீங்கள் கேட்டதால் காணொளி இணைத்தேன். இணைத்தபிறகு மனதில் தோன்றியதை கிறுக்கினேன்!
நீக்குசிறந்த புகைப்படத்துக்கான விருது...ஆம் இது பார்த்திருக்கிறேன் ஸ்ரீராம். இது போல ஒரு தொகுப்பை எங்கள் தளத்தில் கூட துளசி ஒரு பதிவு போட்டிருந்ததில் இப்படமும் இருந்தது என்று நினைக்கிறேன்..
பதிலளிநீக்குஇப்படியான படங்களைப் பார்க்கறப்ப மனம் ரொம்ப வேதனைப்படும்
கீதா
பெரியவா அருள்வாக்கு - மீண்டும் ரசித்தேன். ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குபொக்கிஷங்கள் ரசித்தேன். தாராள பிரபுவுக்கு நோய் வந்ததும் மனம் குணங்கிவிட்டதோ...!!
சிக்கனக்காரருக்குத் தன் வினை!
கீதா
இவர் ரத்தம் அவரிடம் செய்யும் மாயம்.
நீக்குஇன்றைய பதிவிலேயே நான் மிகவும் மகிழ்ந்த வரி இதுதான்!!!
பதிலளிநீக்கு//அப்படி சேர்ந்து சிரித்துதான் ரொம்ப நாளாச்சு போங்க!
அப்படி சிரித்ததே ஒரு அனுபவமாக மனதில் தங்கிப் போனதாலேயே அதை எழுதத்தோன்றியது என்று கூடச் சொல்லலாம்!//
கீதா
உண்மை கீதா.
நீக்குசர்க்கரை கியூப் - கலகல...
பதிலளிநீக்குஅலைகள் ஓய்வதில்லை... ஆனால் எப்போதும் மனதில் உள்ள பாரத்தை கரைக்காமல் விடுவதில்லை...
நன்றி DD.
நீக்குகல்யாணம் ஆன புதிதில் குடும்பத்தார் சென்னை வருகை :-
பதிலளிநீக்கு"நாளைக்கு விடுமுறை... எல்லோரும் பார்க்கிற்கு போகிறோம்... ரெடியா இருங்க..."
காலையில் புளியோதரை, தயிர் சாதம், சுண்டல், ஊறுகாய் + + +
என்னவென்று அண்ணியிடம் கேட்டல், "பார்க்கிற்கு போகலையா...?"
அன்றைக்கு தியேட்டர் முழுக்க புளியோதரை மணம்...!
சென்றது :- ஜுராசிக் "பார்க்" திரைப்படம்...
ஹா.. ஹா.. ஹா... சொல்வதை தெளிவாகச் சொல்லி இருக்கக் கூடாதோ!
நீக்கு//அன்றைக்கு தியேட்டர் முழுக்க புளியோதரை மணம்...// இப்பத்தான் புரிகிறது. ஏதுடா தியேட்டர்களில் நம்மை தண்ணீர் பாட்டிலைக்கூட கொண்டுவர அனுமதிக்கமாட்டேன் என்கிறார்கள் என்பது...ஹாஹாஹா.
நீக்குசர்க்கரை க்யூப் சம்பவம் 'இனிய' நினைவாக நிற்கும் :). கவிதை அருமை. விருது பெற்ற புகைப்படமும், அதற்கான தங்கள் வரிகளும், வியட்நாம் போர் புகைப்படமும் நெகிழ்வு.
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு.
நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு