திங்கள், 13 பிப்ரவரி, 2023

"திங்க"க்கிழமை  :  வரகரிசிக் கஞ்சி   -  துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 வரகரிசிக் கஞ்சி..

துரை செல்வராஜூ

================

வந்தால் வந்த இடம்..   போனால் போன இடம் - என்னும் பழமொழிக்கு ஏற்ப இப்போது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருப்பவை சிறுதானியங்கள்..

அந்த வகையில் ஊருக்கு ஒரு விலையாக - ஊருக்குள் கடைக்கு ஒரு விலையாக வரகு, சாமை முதலானவை விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன..



இருந்தாலும் - இன்றைக்கு சிறுகுறிப்பாக வரகரிசிக் கஞ்சி செய்முறை:

வரகரிசி 100 கிராம்
பாசிப்பருப்பு 50 கிராம்

பூண்டு 3 பற்கள்
சிறிய வெங்காயம் நடுத்தர அளவில் 6/7
தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்
கேரட் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் கால் டீ ஸ்பூன்
மிளகுத் தூள் கால் டீ ஸ்பூன்
கல் உப்பு தேவையான அளவு
கொத்தமல்லித் தழை சிறிதளவு

வரகரிசி பாசிப் பருப்பு இவற்றை இளஞ்சூட்டில் இரண்டு நிமிடங்கள் வறுத்து விட்டு 600 ml தண்ணீரில் ஊற வைத்து பத்து நிமிடங்கள் கழித்து அடுப்பில் ஏற்றி மிதமான சூட்டில் வைக்கவும்..

பூண்டு, வெங்காயத்தை சுத்தம் செய்து மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்..

இதற்கிடையே -

வரகு கொதி நிலைக்கு வந்திருக்கும்.. இந்நிலையில் பூண்டு வெங்காயம், தேங்காய்த் துருவல், கேரட் துருவல், மஞ்சள் தூள் மிளகுத் தூள், கல் உப்பு எல்லாவற்றையும் கொதிக்கும் வரகில் போட்டு கிளறி விடவும்.. 

நன்றாக வெந்து வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லித் தழையை நறுக்கி கஞ்சியில் தூவி விடவும்..

தேங்காய்த் துருவலுக்குப் பதிலாக தேங்காய்ப்பால் 50 ml சேர்க்கலாம்.. 

பிரச்னை இல்லையெனில் -
தேங்காய்த் துருவலைத் தவிர்த்து விட்டு -  பசு நெய் (ஒரு டீ ஸ்பூன்) கஞ்சியுடன்  சேர்த்துக் கொள்ளலாம்..

இது எளிதில் செரிமானம் ஆகி விடும் என்பதால் இஞ்சி சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை..
மிளகுத் தூள் உடன் வந்திருப்பதால் மிளகாய் வகையறாவிற்கு இடம் இல்லை..

செய்முறை எளிதானது. எனவே, அதற்கான படங்களை இத்துடன் சேர்க்க வில்லை.. (கைவசம் இல்லை என்பதே உண்மை!..)

நலம் வாழ்க!.. 

***

70 கருத்துகள்:

  1. கஞ்சிக் கலவை வாசிக்க சுவையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. நாங்கள் கெட்டியான ஓட்ஸ் கஞ்சி தான் வழக்கமாக காலை வேளைகளில் அருந்துவது. யு.எஸ். ஒட்ஸ்.

    காரட் துருவல், தேங்காய் துருவல், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை கஞ்சியுடன் சேர்க்கலாம் என்று இப்பொழுது தான் தெரிந்தது தகவலுக்கும்
    செய்முறை விளக்கங்களுக்கும் நன்றி தம்பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓட்ஸ் கஞ்சி போல கேழ்வரகு, குதிரைவாலியில் கூட செய்து சுவைக்கலாம்.

      நீக்கு
    2. சமீப காலமான சாதத்திற்கு Sons பச்சரிசியுடன சரிபங்கு அளவு கைக்குத்தல் அரிசி கலந்து குக்கரில் வடித்துக் கொள்கிறோம்.

      நீக்கு
    3. ஒரு கால்த்தில் நானும் ஓட்ஸ் தாசனாகத் தான் இருந்தேன்.. ஓட்ஸ் குதிரைகளுக்கானது என்றறிந்ததும் - அவ்ளோதான்..

      ஓட்ஸ் சீக்கிரம் செரிமானம் ஆவதில்லை.. அதனால் அடுத்து பசி உணர்வு தோன்றுவதில் தாமதம்...

      வாணலிக்கு தப்பி எதற்குள்ளோ விழுந்த மாதிரி தான் ஓட்ஸ் கதை...

      ஆனாலும் நம்ம ஊர் சமையல் திலகங்கள் ஓட்டஸை விடுவதாக இல்லை..

      நீக்கு
    4. ஓட்ஸ் ஏற்படுத்தும் பாதிப்புகளை நம்ம ஊர் பத்திரிக்கைகள் பேசுவதேயில்லை..

      நீக்கு
    5. சீக்கிரம் செரிமானம் ஆகாத விஷயங்கள் சக்கரை நோயாளர்களுக்கு சாதகமான விஷயம்.

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. வரகு கஞ்சி செய்முறை அருமை.
    வெண் பொங்கல் மாதிரி மிளகு சேர்த்து செய்து இருப்பது உடலுக்கு நல்லதுதான்.
    வரகு அரிசியுடன் கறுப்பு உளுந்து சேர்த்து கஞ்சி செய்யலாம், முழு பச்சைபயிறு சேர்த்து செய்யலாம். மிக அருமையாக இருக்கும்.
    எனக்கு பிடித்த உணவு கஞ்சிதான். ஆடி வெள்ளி வித விதமாக கஞ்சி செய்து அம்மனுக்கு படைத்த பின் உண்டால் இன்னும் சுவை அதிகம்.

    அம்மனுக்கு படைக்கும் போது வீட்டில் வெங்காயம் சேர்க்கமாட்டோம். மாரியம்மன் கோவிலில் வெங்காயம், தேங்காய்ப்பூ பச்சைமிளகாய் இஞ்சி எல்லாம் போடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் விவரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      அம்பாள் சாகம்பரி தானே..
      வெங்காயம் பூண்டு இவற்றால் அவளுக்கு ஒன்றும் பாதகம் இல்லை!..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. பாசிப்பருப்பின் வாய்வுத் தன்மையை நீக்க பூண்டா?

    பூண்டு வெங்காயம் இல்லாமல் இந்தவாரம் செய்யப்பார்க்கிறேன். மனைவிக்கு ஒரு வேளை கஞ்சி நல்லதுன்னு தோணுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை கஞ்சி எல்லாருக்கும் நல்லது..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ரொம்ப க்ளோசப்ல பாசிப்பருப்பு துவரைபோல் காட்சி கொடுக்குது.

    இங்க கைக்குத்தல் அரிசி கிடைக்குமான்னு பார்க்கணும். நானும் மகளும் கொலம் அரிசி. மற்றவர்கள் ப்ரௌன் ரைஸ் (60ரூ). இப்போ ராஜமுந்திரி அரிசி.

    இரவு தண்ணீரில் ஊறவைக்க கைக்குத்தல் அரிசியைத் தேடுகிறேன். தீட்டிய அரிசி வேண்டாம் என்ற எண்ணத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீட்டிய அரிசியைக் குறைத்துக் கொண்டு கைக்குத்தல் மற்றும் சிறு தானியங்களை ஆதரிப்போம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. செய்முறை சுலபம்

    இஞ்சி ஊறுகாய் தொட்டு
    வரகரிசிக் கஞ்சி குடித்தாள்
    வயலோரம் வஞ்சி ஒருத்தி.

    பதிலளிநீக்கு
  9. பாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் படித்ததில்லையா, தம்பீ?

    குதிரையின் நல்ல குணங்களும் வலிமையும் நம்மில் படிந்தால் நல்லது தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி.. கழுதைப்பால் நல்லதுன்னு விக்கறாங்களே.. அதுபற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? நெல்லை

      நீக்கு
    2. பாலகுமாரனின் குதிரைக் கவிதை வாசித்திருக்கிறீர்களா? அதைச் சொல்லாமல் அடுத்ததுக்கு போகிறீர்களே, தம்பீ?

      நீக்கு
    3. //அடுத்ததுக்கு போகிறீர்களே, தம்பீ?..//

      நான் இப்போது தான் வருகின்றேன்..

      அந்த அந்த குணங்களும் அதனதனிடம் இருப்பதே நல்லது..

      பசு அசை போடும்.. அதன் இரைப்பை அதற்கானது..

      அதற்கான வாழ்வியல் சூழல் அப்படி..

      மீன் அசை போட ஆசைப்படலாமா?..

      நீக்கு
    4. மனிதர்களும் கூடத் தான். அப்படியே லபக் லபக்கென்று விழுங்கக் கூடாது. இறைவனின் ஏற்பாடுகளே அலாதியானது.
      உமிழ் நீரில் புரட்டி,..
      அந்த உடற்கூறு விஞ்ஞானம்
      எதையும் சாப்பிடுவதற்கு முன் நினைவில் வந்தால் நல்லது.

      நீக்கு
    5. உண்மை தான்.. இறைவனின் ஏற்பாடே அலாதியானது.. சிறப்பானது..

      பறவைகளுக்கு உள்ளேயே ஒன்றுக்கொன்று எத்தனை வித்தியாசங்கள் !..

      தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி..
      நன்றி அண்ணா..

      நீக்கு
  10. ஹை! நல்ல எதிர்பார்த்த ஏற்பாடு.
    மட்டுறுத்தலை நீக்கி விட்டார்கள் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  11. ஹை! நல்ல எதிர்பார்த்த ஏற்பாடு.
    மட்டுறுத்தலை நீக்கி விட்டார்கள் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  12. நெல்லை.. காதி பவனில் நல்ல கைக்குத்தல் அரிசி கிடைக்கும்.
    எங்கள் (போரூர்) பகுதியில் இந்த சமாசாரங்களுக்காகவே கடை ஒன்று உண்டு.
    கைக்குத்தல் அரிசி கிலோ ரூ. 100/-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் காவிரி நாட்டில்ல்லவா இருக்கிறேன். அமேசானில் கிடைக்கிறது. வாங்கி உபயோகித்துப் பார்க்கணும. நெல்லை

      நீக்கு
    2. உரலில் இடப்பட்டு உலக்கையால் இடிபட்ட நெல்லில் இருந்து தான் கைக்குத்தல் அரிசி..

      இயந்திரத்தால் இடிபடுவதற்கும் இதே பெயரா?..

      நீக்கு
    3. நெல்லைப் புழுக்கி, வெயிலில் காயவைத்து, அரவைமில்லில் தோலெடுத்து வருவதுதான் புழுங்கலரிசி.

      இப்போ எல்லாமே மிஷினில்தான். இருந்தாலும் நாம் அதை Steamed rice என்று பெருமையாச் சொல்லுவதில்லையா? அதுபோலத்தான் hand pound rice என்று கைக்குத்தல் அரிசியைச் சொல்லுகிறோம். உலக்கையால் இடிபடுதோ இல்லை மிஷின் உலக்கையால் அடிபடுதோ யாருக்குத் தெரியும்?

      நீக்கு
    4. அதுதானே...
      அதோட கஷ்டம் யாருக்குத் தெரியும்?..

      நீக்கு
  13. ஹை துரை அண்ணா வரகரிசி கஞ்சி! ஆமாம் உங்க தளத்துலயே டீசர் கொடுத்திருந்தீங்களே.

    சூப்பர்! அருமையான கஞ்சி செய்முறை.

    நம்ம வீட்டில் இப்படித்தான் ஏதேனும் ஒரு சிறு தானியம் பொங்கல் கஞ்சி என்று சொல்லிச் செய்வது. சாதம் செய்தால் கேரளா சிவப்பரிதான். (கலந்த சாதம் என்று செய்வதைத் தவிர)

    இதையே சில சமயம் பருப்புக்குப் பதிலா பச்சைப்பயறு/சிறுபயறு, உளுந்து, உடைத்த ப பயறு, அல்லது ப்ரௌன் கலரில் இருக்குமே சிறு பயறு அது சேர்த்தும் செய்வதுண்டு. நான் தாளிப்பதே நெய்யில்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இதையே சில சமயம் பருப்புக்குப் பதிலா பச்சைப்பயறு/சிறுபயறு, உளுந்து, உடைத்த ப பயறு, அல்லது ப்ரௌன் கலரில் இருக்குமே சிறு பயறு அது சேர்த்தும் செய்வதுண்டு. நான் தாளிப்பதே நெய்யில்தான்.. //

      சிறப்பு.. சிறப்பு..

      மகிழ்ச்சி.. நன்றி சகோ

      நீக்கு
    2. //சிறு தானியம் பொங்கல் கஞ்சி என்று சொல்லிச் செய்வது. // எந்த அளவு தண்ணிவைக்கணுமோ அப்படிச் செய்யாமல், மொபைலை நோண்டிக்கொண்டு, 2க்குப் பதிலாக 3 அல்லது 4 கப் தண்ணீர் விட்டுவிட்டால், பொங்கல் வருவதற்குப் பதிலாக பொங்கல் கஞ்சிதான் வரும். அப்பாவி வீட்டார்கள், இன்று இதுதான் வாய்த்தது என்று சாப்பிட்டுப் போவார்கள் போலிருக்கிறது. சரியா கீதா ரங்கன்(க்கா)?

      நீக்கு
    3. கஞ்சி சரியான பதம் என்றால் ஒன்றுக்கு ஐந்து பங்கு தண்ணீர்.. சிலருக்கு வேறு வேறு பக்குவங்கள்..

      ஜீ பூம்பா என்று சொல்லி கஞ்சி வைத்தவர்களும் உண்டு..

      நீக்கு
    4. நெல்லை அண்ணே! - ஹாஹாஹாஹா எப்படி இப்படி நான் செய்யறது எல்லாம் என்னவோ வீடியோ கேமரா இருக்காப்ல சொல்றீங்க!!!!!

      கீதா

      நீக்கு
  14. நான் அப்படியே குக்கரில் வைத்துவிடுவதும் உண்டு. அதுவும் இண்டக்ஷனில் குக்கர் வைத்துவிட்டால் நேரமும் செட் செய்துவிட்டு அடுத்த வேலையைக் கவனிக்க ஏதுவாக இருக்கும் என்று அப்படிச் செய்வதுண்டு.

    கீதா



    பதிலளிநீக்கு
  15. உடலுக்கு சத்தான கஞ்சி. செய்முறை நன்று.

    எங்கள் வீட்டிலும் இடையிடையே கஞ்சி உண்டு. பச்சைமிளகாய், வெங்காயம் சேர்ப்போம் மிளகு சேர்த்ததில்லை செய்து பார்கிறேன்.

    கைக் குத்தல் அரிசியில் புளிக் கஞ்சி செய்வோம் காய்ச்சலுக்கு குடிக்க இதமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கைக் குத்தல் அரிசியில் புளிக் கஞ்சி செய்வோம்..//

      அருமை.. அருமை

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  16. வரகரிசி கஞ்சி குறிப்பு மிக அருமை! மிகத்தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்! நானும் சிறுதானியங்கள், கேரளாவின் சிவப்பரிசி, ஓட்ஸ், கோதுமை ரவாவில் இந்த மாதிரியான கஞ்சி செய்வதுண்டு. சிறிதளவு எண்ணெய், நெய்யில் சீரகம், பெருங்காயம் தாளித்து சேர்ப்பேன், மணத்துக்காகவும், சுவைக்காகவும். நீங்கள் துளியும் எண்ணெய் சேர்க்காமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் கஞ்சி செய்முறையை கொடுத்திருக்கிறீர்கள். நான் பூண்டை நிறைய சேர்ப்பேன். அதோடு, தக்காளி, பீன்ஸ் போன்றவையும் சேர்ப்பதுண்டு. அதுவும் இந்த கஞ்சியை இரவில் குறைந்த அளவில் [ ஒரு பிடி அரிசி, 2 மேசைக்கரண்டி பச்சைப்பயிறு ] செய்து சற்று நீர்ப்பதமாக சாப்பிட்டால் மறு நாள் சர்க்கரை அளவு FASTINGல் குறைவாகவே காண்பிக்கும்.
    ஓட்ஸ் கஞ்சியாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது. கொழுப்பை கரைக்கும். சர்க்கரைக்கும் நல்லது. அதிகமாக எடுத்துக்கொண்டால் மட்டுமே சில சமயங்களில் அஜீரணம் ஏற்படலாம். அது கூட ஓட்ஸ் கஞ்சியுடன் கூடவே வேறு ஏதாவது உணவை எடுத்துக்கொண்டால் தான். ஓட்ஸை 3 மேசைக்கரண்டி எடுத்து நீர்க்க கஞ்சி காய்ச்சி ஆறியதும் மோர் அல்லது தயிர், உப்பு, பெருங்காயப்பவுடர் அரை ஸ்பூன், பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் ஏழெட்டு கலந்து குடித்தால் வயிறு மிக இலேசாக இருக்கும். எளிதில் சீரணமாகி விடும். எங்கள் இல்லத்தில் வாரம் இரு முறையாவது இது தான் காலை உணவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடுதல் செய்திகள்..
      நல்ல விவரங்களுடன் கருத்துரை..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  17. கஞ்சி கண்டதும் நினைவுக்கு வருகிறது எங்கள் நாட்டில் சிங்கள மக்கள் வல்லாரை,பொன்னாங்கண்ணி சாத்தவாரி,, கறிவேப்பிலை போன்ற இலைகளை மிக்ஸியில் அடித்து சாறு எடுத்து கஞ்சியுடன் கலந்து தேங்காய் பாலும் விட்டு சமைப்பார்கள் .நானும் செய்வதுண்டு. நலத்துக்கு சிறந்தது.

    பதிலளிநீக்கு
  18. மேலே உள்ள கருத்தினை நான் பதிவு செய்ய வில்லை..

    ஸ்ரீராம் கவனம்!..

    பதிலளிநீக்கு
  19. அன்பின் பெயரிலா அவர்களே...

    தங்களது , இச்செயலகளால் நான் மிகவும் மனம் நொந்து இருக்கின்றேன்..

    விளையாட்டை நிறுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சில நபும்சகர்கள் இருக்கிறார்கள். பெயரிலா என்ற முகமூடியுடன் வந்து பொது இடத்தில் மலம் கழிக்கும் பேடி.

      நீக்கு
    2. அய்யய்யோ.. கேஜிஜிக்கு கோபம் வந்து இப்பத் தான் பார்க்கிறேன். அப்படி என்ன நடந்தது? அறியேன்.

      நீக்கு
  20. கருத்து தடை நீக்கப்பட்டது ஜீவி அண்ணா அவர்களுக்கு மகிழ்ச்சி..

    இப்போது வந்து பார்க்கட்டும்..

    இந்தப் பிரச்னை இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சில நபும்சகர்கள் இருக்கிறார்கள். பெயரிலா என்ற முகமூடியுடன் வந்து பொது இடத்தில் மலம் கழிக்கும் பேடி.

      நீக்கு
    2. ரொம்ப நாட்கள் கழித்து இந்த 'நபும்சகர்கள்' வார்த்தை கண்ணில் பட்டது. எனக்குத் தெதிந்து ஜெயகாந்தன் தான் அப்பப்போ இந்த வார்த்தையை உபயோகப்படுத்துவார்.

      நீக்கு
    3. ரொம்ப நாட்கள் கழித்து இந்த 'நபும்சகர்கள்' வார்த்தை கண்ணில் பட்டது. எனக்குத் தெதிந்து ஜெயகாந்தன் தான் அப்பப்போ இந்த வார்த்தையை உபயோகப்படுத்துவார்.

      நீக்கு
  21. கருத்துத் தடை?

    தப்பாகப் படிச்சுத் தொலைத்தேன். 'த்து'வை எடுத்து விட்டு.

    பதிலளிநீக்கு
  22. மறுபடியும் மட்டுறுத்தலா?

    இந்த மட்டுறுத்தல் --

    திங்கள்
    செவ்வாய்
    சனி

    விருந்தின பதிவர்களுக்குத் தான் சிரமம். அப்பப்போ
    கேஜிஜி இந்தப் பக்கம் வந்து சிறையுண்ட பின்னூட்டங்களை விடுவித்து விட்டால் வி. பதிவர்களும் தங்களுக்கு செளகரியப்பட்ட நேரங்களில் பின்னூட்டங்களுக்குப் பதில் அளிக்கலாம்.

    அது சரி, எதுக்காக இந்த மட்டுறுத்தல்?.. உங்களுக்கானும் தெரியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவில் ஆபாசக் கருத்துகளை ஒரு '*$#**@' அள்ளித் தெளித்துவிட்டுச் சென்றதால்.

      நீக்கு
    2. ஜீவி அண்ணா ப்ளீஸ். இங்கே வேண்டாத ஆபாசக் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. அதனால்தான்,....

      கீதா

      நீக்கு
  23. அன்பின் கௌதமன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    எக்காரணம் கொண்டும் கருத்துத் தணிக்கையை நீக்க வேண்டாம்

    பதிலளிநீக்கு
  24. நானும் துரை அண்ணாவின் கருத்தை ஆமோதிக்கிறேன். எபி ஆசிரியர்கள் கவனத்திற்கு. தயவாய் இங்கு வேண்டாத கருத்துகளை நீக்கிவிடவும். கமென்ட் மாடரேஷன் வைக்கவும்.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!