அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருக்கும்போது பார்த்த காட்சி.
பின்னால் விட்டு விட்டு ஹார்ன் சத்தம் கேட்டது. ஆட்டோக்காரர் பார்த்துவிட்டு சற்றே ஒதுங்கி வழிவிட்டார். அந்தக் கார்க் காரருக்கு ஏதோ அவசரம். வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தார். சிறு ஹார்ன் ஒலியில் எங்கள் கவனத்தைக் கவர்ந்து வழி கேட்டு திறமையாக ஒடித்துப் பறந்தார். நாங்கள் வலதுபுறம் ஒதுங்க இடதுபுறமாக எங்களை ஓவர்டேக் செய்த கார், முன்னால் சென்ற லாரியை வலது புறமாக ஓவர்டேக் செய்து பறந்தது கார்.லாரிகளோ, பஸ்ஸோ ஒரே வரிசையில் செல்வதில்லை. சாலை முழுக்க ஆக்கிரமித்தபடி இங்கும் அங்கும் கிடைத்த இடங்களில் புகுந்து சென்று கொண்டிருந்த வண்டிகளை திறமையாக தாண்டி விரைந்து கொண்டிருந்தது கார். அரகன்ஸ் என்பது இல்லாமல் வேகம் இருந்தாலும் ஆபத்தில்லாமல் ரசிக்கும்படியான டிரைவிங்.
சாலையில் சற்றே அலட்சியமாகச் சென்று கொண்டிருந்த ஒரு இரு சக்கரர் காரின் வேகத்தை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது. கார்க்காரர் திறமையாக தாண்டிச் சென்ற பின் தடுமாறியவர், கைநீட்டி காரை சபித்துவிட்டு, சட்டென வேகத்தை அதிகப்படுத்தி காரை தொடரத் தொடங்கினார்.
நாங்களும் சென்று கொண்டிருக்க, ஒரு போக்குவரத்து நிறுத்தத்தில் காரைப் பிடித்து விட்டார் இரு சக்கரர். எனக்குத் தெரிந்து கார்க்காரர் மேல் பெரிய தவறு ஏதுமில்லை. அவர் அவசரத்தை எங்களுக்கு உணர்த்தி வழி கிடைத்ததும்தான் தாண்டிச் சென்று கொண்டிருந்தார்.
இவர் காரை நெருங்கி ஜன்னலைத் தட்டி அவரை அழைக்க, அவரும் ஜன்னலைத் திறந்தார். வாக்குவாதம் தொடங்க, கார்க்காரர் கையை நீட்டி "ஸாரி ப்ரோ.. உங்க மேல நான் இடிக்கலையே.."
"இடிச்சாத்தானா?.. பைத்தியக்காரன் மாதிரி கார் ஓட்டுறே..."
சற்றே நீண்ட இடைவெளி கிடைத்த அந்த போக்குவரத்து நிறுத்தத்தில் சுற்றி நின்ற ஆட்டோக்காரர்கள் (எங்களையும் சேர்த்து), ஓரிரு கார்க்காரர்கள், ஒரு சைக்கிள்வாலா (ஆம்.. இன்னும் சைக்கிளில் போக்குவரத்தில் செல்கிறார்கள்!) , மூன்று நான்கு இரு சக்கர வாகனர்கள் இந்த வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்தனர். ஆனால் யாரும் ஒன்றும் தலையிடவில்லை.
"ஸாரி ப்ரோ... வீ ஆர் இன் ஹரி.. வீ ஹவ் டு கேச் தி ட்ரெயின்" என்று விட்டு ஜன்னலை மூடிக் கொள்ள முயற்சித்தார். இரு சக்கரர் விடவில்லை. "சீக்கிரமே கிளம்பி இருக்கணும், எங்க உயிரோட விளையாடறே... இது தப்பு அது இது" என்று பேசிக்கொண்டே இருக்க, அவர் சும்மா இருந்தார்.
"பதில் சொல்லு.. யார் மேலயாவது இடிச்சிருந்தா.. யாருக்கு பதில் சொல்ல முடியும்? மெதுவா போகவேணாம்?"
பொறுமை இழந்த கார்க்காரர் "என்ன செய்யச் சொல்றீங்க ப்ரோ.. டைம் இல்ல... மறுபடி ஸாரி..." என்று விட்டு கிளம்பினார்.
மறுபடி வேகம் பிடித்த காருக்கு இணையாக திட்டிக்கொண்டே ஓட்ட முயன்ற இரு சக்கர வாகனர் எங்களையும் தடுமாற வைத்தார். எங்களுக்கு முன்னால் வளவளவென கத்திக்கொண்டே இரு சக்கரரும், அவருக்கு முன்னர் காரும் சென்று கொண்டிருக்க, பொறுமை இழந்த கார்க்காரர் காலியான சாலையில் இரு சக்கரரை ஒரு வேகமான கட்டில் (Cut) ஓரம் கட்டிவிட்டு பறந்து விட்டார். அசந்துபோன இரு சக்கரர் வேகத்தைக் குறைத்து பின்தங்கி விட்டார். ஓரமாக நின்று ஹெல்மெட்டைக் கழற்றி முகத்தைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்தபடி கடந்தோம். எக்மோர் ரயில்வே நிலையம் செல்லும் சாலையில் திரும்பி பறந்து விட்டது கார்.
பார்த்துக் கொண்டிருந்த நானும் என் ஆ ஆ காரரும் சிரித்துக் கொண்டோம். கார்க்காரருக்குத்தான் ஆதரவு சொன்னார் ஆ ஆ. நானும்.
இரு சக்கர வாகனர் ஒன்று அனுபவமில்லாத ஓட்டுனராய் இருக்க வேண்டும். அல்லது பயந்த ஓட்டுனராய் இருக்க வேண்டும். ஆனால் வாக்கு வாதம் செய்வதில் சளைத்தவரில்லை. வாதத்தை முடிய விடாமல் வளர்த்துக்கொண்டே இருந்தார். சாலையில், ஒரு அவசர பயணத்தில் எவ்வளவுதான் வாக்குவாதம் செய்ய முடியும்?
எனக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அது அடுத்த வாரம்.
================================================================================================================
நடிகை லக்ஷ்மியின் பழைய பேட்டி ஒன்றை பகிர்ந்திருந்தார் திரு R. கந்தசாமி. யார் அந்த தம்பதி என்கிற சஸ்பென்ஸ் நீடிக்கிறது!
ஒரு எழுத்தாளர் நண்பர் என்ற முறையில் எனக்கு அறிமுகமானார். அவரும், அவர் மனைவியும் அடிக்கடி என்னை அடிக்கடி தம் வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிடுவார்கள். சமயம் இருந்தால் நான் செல்வேன் .எப்போதாவது விருந்தாளியாக நான் சென்ற போதெல்லாம் அவர்கள் அன்பு என்னைத் திக்கு முக்காட வைத்து விடும். அவர்களைப் பற்றிய என் எண்ணம் மிக உயர்வாகவே இருந்தது.
ஒரு சமயம் எழுத்தாளரின் மனைவி தனக்கு மிக அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், ஐந்தாயிரம் ரூபாய் தந்தால் மிக்க உதவியாக இருக்கும் என்றும், அப்பணத்தை கடனாகப் பாவித்து உடனே திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் சொன்னார்.
நான் உடனே பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டேன். அதற்குப் பிறகு அவர்கள் பழகும் முறையில் வித்தியாசம் தெரிந்தது. அவர்கள் முன்பு போல அன்புடன் பேசாததையும் நான் உணர்ந்தேன். எனக்கு காரணம் புரியவில்லை.
நாளாக நாளாக அந்த பிரிவு விரிசலாக மாறியது. இதற்கிடையே ஓரிரு முறை நான் கடனாக குடுத்த பணத்தைப் பற்றிக் கேட்டேன். அவரகள் எந்தவிதமான சுமுகமான பதிலையும் சொல்லவில்லை. எனக்கு குழப்பமே ஏற்பட்டது.
கமலிடம் என் குழப்பத்தை சொன்னேன். நன்றாகத் திட்டினான். "நாலு தரம் சாப்பிடக் கூப்பிட்டவுடன் ஐந்தாயிரம் ரூபாய் குடுத்து விட்டாயாக்கும், பெரிய பரோபகாரி !" என்று கேலி பண்ணினான்.
"ஏன் கமல், ஆபத்துக்கு உதவினேன், தப்பா? அவர்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தார்களோ? ஏதோ நம்மாலான உதவி, அவ்வளவுதானே? என்றேன்.
"ம்ஹூம், உனக்கு சொன்னாப் புரியாது, தவி" என்று சபித்தான்.
அவர்களால் அந்த தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்கு ஏதேனும் கஷ்டம் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் தொடர்ந்து அவ்ர்கள் பல நண்பர்களுக்கு பார்ட்டிகள் கொடுப்பதும், அவர்களை உற்சாகப்படுத்துவதாகவும் இருப்பது கண்டு அதிர்ச்சியுற்றேன்.,
வித விதமாக விருந்தளித்து நண்பர்களை சந்தோஷப்படுத்தி, பிறகு நண்பர்களையே ஏமாற்றுவதுதான் நட்பின் இலக்கணமா?
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.07.81 இதழ்)
நன்றி: தினமணி
============================================================================================================
நட்பும் நடப்பும்...
வார இறுதியில் வழக்கம்போலவே
ஒன்று சேர்ந்து
திரைப்படம் போக
நண்பனுக்கு பேசியபோது
'ஏற்கெனவே முன்பதிவு செய்துவிட்டேன்'
என்ற அவன் வார்த்தையில்
மகிழ்ந்து போனவன்
எந்த தியேட்டர்,
எத்தனை மணி ஷோ
நான் எப்ப வரணும்
என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு
சற்று மௌனத்துக்குப்
பின்
''ஸாரி மச்சி.. நாங்க
ஃபேமிலியாய் போறோம்"
என்று வந்த பதிலில்
மௌனமாகிறான்
திருமணம் இன்னும் கைகூடா
அந்த (பழைய) உயிர் நண்பன்.
====================================================================================================================
சுவாரஸ்யமான - துல்லியமான புகைப்படங்கள்... நன்றி இணையம்.
===========================================================================================================
பொக்கிஷம்..
ஏற்கெனவே சொன்னபடி நம் பிரபல ஓவியர்களின் ஆரம்ப காலப் படங்களை வைத்து ஓவியங்களை கண்டுபிடிப்பது சற்றே சிரமமான வேலை. இந்தப் படத்தின் ஓவியர் யார் என்பது கேள்வி!
ஜோக்குதான்... ஜோக்குதான்...
டீலா? நோ டீலா?
மறுபடியும் ஓவியர் யார் கேள்வி!
பொது இடங்களில் பொடி போடுவதே ஒரு... இதில் ஆபீஸர்ஸ் போடும் பொடி என்று வேறு விளம்பரம்!
இந்த நாளும் இனிய நாளே..
பதிலளிநீக்குஎல்லாருக்கும் இறைவன் அருளட்டும்.. #₹
நலம் வாழ்க..
வாழ்க நலம்.. வாங்க துரை செல்வராஜூ அண்ணா.
நீக்குசாலை
பதிலளிநீக்குஒருவருக்கு
சாமார்த்தியம்..
மற்றவர்க்கு
சங்கடம்...
நமக்கு ஒரு பதிவு கிடைத்ததே...
அதைச் சொல்லுங்க...!!
நீக்கு// வித விதமாக விருந்தளித்து,//
பதிலளிநீக்குஓஹோ!?..
என்ன ஓஹோ... அப்படியெல்லாம் நினைக்கப்படாது!
நீக்குகார் இடிக்கவில்லை. OK ஆனால் அவர் இவ்வளவு நெரிசலான போக்குவரத்தில் முறை இல்லாமல் முறையாகச் செல்லும் மற்றவர்களை
பதிலளிநீக்குஅபாயத்தில் தள்ளுவது நியாயமில்லை என்பது என் கருத்து. ஆனால் அவசரம் என்பதால் மன்னிக்கலாம்.
லட்சுமி ஏமாந்தது போல் நானும் தெரிந்தே நண்பர்களிடமும் உறவினருடனும் ஏமாந்திருக்கிறேன். கணக்கு கிடையாது.
அது என்ன பழைய உயிர் நண்பன். தற்போது எதிரியா?
இதிகாசம் சரித்திரம் ஆகுமா என்பது எனக்கு உறுதியில்லை. ஆனால் சில சரித்திரங்கள் இதிகாசம் ஆவது உண்டு. கடலில் கண்டுபிடித்த நகரம் உண்மை. ஆனால் அதன் பெயர் துவாரகை என்பது நிச்சயமில்லை.
படம் வரைந்தவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை
ராஜினாமா போன் வழி தரலாமா?
பொடி, சிகரெட் போன்றவை ஆண்களின் அடையாளமாகக் கருதப்பட்ட காலம். என்னுடைய தந்தையும் 75 வயது வரை பொடி உபயோகித்தார். ஆனால் அவர் T A S ரத்தினம் பட்டணம் பொடி தான் போடுவார்.
மன்னிக்கலாம். அதேபோல காலை ஆறேகால் மணிக்கு பெரிய நெரிசல் எதுவும் இருக்காது!
நீக்குஎல்லோருமே ஏமாந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
திருமணத்துக்கு முன் உயிராய்ப் பழகியவன்!
துவாரகை என்பதற்கும் ஆதாரங்கள் இருப்பதாக சொல்லபப்ட்டது.
படம் வரைந்தவர் யாரென்று படம் போட்டே காட்டுகிறேன்! பின்னூட்டங்களுக்கு பதில் முடிந்ததும் அந்த இரு படங்களையும் கடைசியாக வெளியிட்டு யாரென்று சொல்கிறேன்!!
இனி போகப்போவதில்லை. எப்படி சொன்னால் என்ன!!! ஆனால் மரியாதை இல்லை. முறையும் இல்லைதான்.
ஆம். என் தாத்தாவும் ரசித்து அனுபவித்து பொடி போடுவார்!
சாலையில் காரில் செல்லும்போது ஓட்டுநர் டென்ஷனாவதும், கோபத்தில் சொற்கள் உதிர்ப்பதும், கோபத்தோடு அடுத்தவரை ஓவர்டேக் செய்ய முயல்வதுமே எனக்குப் பிடிக்காது. இதில் டூவீலர் கார்ருக்கு டென்ஷனா?
பதிலளிநீக்குஅமைதியாக பேசியவரையும் மறுபடி மறுபடி ஒரே விஷயத்தை பேசி டென்ஷானாக்கினால்?!!
நீக்குThere is no free lunch in the world என்பதற்கான அர்த்தத்தை லட்சுமி அவர்கள் அனுபவத்தில் தெரிந்துகொண்டார்களா?
பதிலளிநீக்கு(தெரிந்து கொண்டதாகத்) தெரியவில்லையே...!
நீக்குபேச்சலருக்கு பேச்சலரே நண்பராக இருக்க முடியும்.
பதிலளிநீக்குஅதே... அதே...
நீக்குசென்னை, கோவை, மதுரை போன்ற நரக நகரத்தில் இவைகள் அன்றாட நிகழ்வுகள்.
பதிலளிநீக்குஎனக்கு கிராமம்தான் பிடிக்கும்.
சாலை போக்குவரத்தை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்! கிராமங்கள் கூட நகரங்களாகின்றன!
நீக்குகடலில் மூழ்கிய துவாரகை நகரம் பற்றிப் படித்தேன். இதிகாசங்கள் நடந்ததைத்தானே சொல்லுகின்றன
பதிலளிநீக்குபடிக்க முடிந்ததா?
நீக்குபடிக்க முடிந்தது. படித்தேன் (ஐபேடில்)
நீக்குOK. Very Good.
நீக்குசென்னை, கோவை மதுரை போன்ற நரக நகரத்தில் இவைகள் அன்றாட நிகழ்வுகள்.
பதிலளிநீக்குஎனக்கு கிராமம்தான் பிடிக்கும் ஜி
கிராமங்களும் நரகங்களாகி வருகின்றன ஜி!
நீக்குஎப்போதுமே பயணம் என்பது சுவாரஸ்யம் தான்! நீங்கள் ஆட்டோவில் பார்வையாளராக, முன்னல் இரு சக்கரர், அதற்கு முன்னால் கார்...ஒரு சின்ன நிகழ்வு, ஆனால் வெகு சுவாரஸ்யமாக அழகாக எழுதியிருக்கிறீர்கள்!
பதிலளிநீக்குமுதல் ஓவியம் நடராஜன் வரைந்தது. ஏனெனில் என் ஆதர்ச ஓவியர் அவர். அதனால் தெரிகிறது. இரண்டாவது தெரியவில்லை!
நன்றி மனோ அக்கா. அந்த ஓவியர் நீங்கள் சொல்லி இருப்பவர் இல்லை!
நீக்குகாலை அவசரத்தில் ஏனோ தானோ என்று பின்னூட்டம் இடவும் மனசில்லை:
பதிலளிநீக்குபின் மாலையில் போடும் பின்னூட்டங்களும் கவனிக்கப்படுவதில்லை என்ற நிலை இப்போதெல்லாம்..
எல்லா பின்னூட்டங்களுக்கும் முடிந்தவரை பதிலளித்து விடுகிறேன். விட்டுப் போனதில்லை. சென்ற வியாழன் உங்களைத்தான் காணோம்.
நீக்குஇன்றைக்கு ஒரு மணிநேரம் முன்னதாக கிளம்பி விடவேண்டும்... கூடிய விரைவில் அது இரண்டு மணிநேரம் ஆகி விடலாம்...!
பதிலளிநீக்குரயிலைப் பிடிக்கவா? பெங்களுருவில் இன்னும் அதிகமாம் இந்தப் பிரச்னை!
நீக்குநண்பனுக்கு ஒரு "பாடம்" புரிந்திருக்கும்...!
பதிலளிநீக்குபுரியாமல் இருக்குமா?
நீக்குஅடிக்கடி விருந்தளித்தவரின் அவசரத் தேவைக்கு
பதிலளிநீக்குதனக்கு பிச்சைக் காசாக இருக்கும் ஐந்தாயிரம் உதவினோம் என்ற பெருந்தன்மை இல்லாமல் தேவையில்லாத ஆராய்ச்சி அந்த நடிகைக்கு..
இதையும் ஒரு பதிவாக்கி சினிமாக்காரர்களை சிந்தனையாளர்களாக சித்தரிக்கும் பதிவர் கந்தசாமி... வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற மாதிரி, 'யார் அந்த தம்பதியர் என்று எங்களையும் யோசிக்கச் சொல்லும் உங்கள் வியாழன் பதிவு...
இந்தக் காலத்தில் கூட ஐந்தாயிரம் பிச்சைக் காசு என முடியாது. 1981ல் நிச்சயம் பி கா இல்லை.
நீக்கு-ம ந
கந்தசாமி ஸார் பகிர்வதில் தவறில்லை. என்னால் பார்க்க முடியாதவற்றை எல்லாம் எங்கெங்கிருந்தோ கொண்டு வந்து பகிர்கிறார். ம ந சொல்லி இருப்பது போல ஐயாயிரம் ரூபாய் அந்நாளில் பிச்சைக்காசு இல்லைதான்!
நீக்கு//அவசரத் தேவைக்கு தனக்கு பிச்சைக் காசாக இருக்கும்// - ஜீவி சார்... என்னிடம் அவசரத் தேவைக்காக திருப்பித் தருகிறேன் என்று சொல்லி 20 ரூபாய் வாங்கினால், திரும்ப வரும்வரை நினைவு வைத்திருப்பேன். அதே சமயம், நானாகவே உங்களுடன் வந்து ஹோட்டலில் சாப்பிடும்போது 500 ரூபாய் பில்லைக் கட்டினால் அதனை அப்போதே மறந்துவிடுவேன். இதுதான் அனைவருக்குமான குணம் என்று நினைக்கிறேன்.
நீக்குஒரு கண்டக்டர் 10 ரூ சில்லறை தரவில்லை என்பதை நம் எல்லோரும் நிச்சயம் நினைவு வைத்திருப்போம். கொடுக்கலைனா மனதுக்குள் அவனைத் திட்டுவோமா இல்லையா?
நீக்குஉண்மையிலும் உண்மை நெல்லை.
நீக்குஎல்லோருமே 'தனக்கு'
நீக்கு(அந்த நடிகைக்கு)
என்ற வார்த்தையை
மறந்து விட்டு (ம.ந.,
ஸ்ரீராம் உட்பட) ஆளாளுக்கு அட்சதை போட்டுக் கொண்டால் எப்படி?
நீங்களும் நானும் பெயர் பெற்ற ஒரு நடிகைக்கு வீட்டுச் சாப்பாடு போடுகிற நிலையிலா இருக்கிறோம்? அப்படி கூப்பிட்டால் கூட அவர்கள் வருவார்களா என்ன?
அது அதற்கு ஒரு அந்தஸ்து அறிமுகம்
பழக்கம் எல்லாம் வேண்டியிருக்கிறது.
இந்த விஷயத்தில் பணம் என்பது முக்கியமே இல்லை.
அது முக்கியம் போல காட்டப்பட்டிருக்கு. அவ்வளவு தான்.
வேறே எது முக்கியமாகப் போனது என்பது எனக்கு ஒரு கதைக்கான சப்ஜெக்ட்.
சிறு ஹார்ன் ஒலியில் எங்கள் கவனத்தைக் கவர்ந்து வழி கேட்டு திறமையாக ஒடித்துப் பறந்தார். நாங்கள் வலதுபுறம் ஒதுங்க இடதுபுறமாக எங்களை ஓவர்டேக் செய்த கார், முன்னால் சென்ற லாரியை வலது புறமாக ஓவர்டேக் செய்து பறந்தது கார்.//
பதிலளிநீக்குடேஞ்சர்!!!! என்னதான் திறமைசாலியானாலும் உங்க உயிர் முக்கியம்க ஸ்ரீராம்!!! (அவர் திறமைசாலியானாலும் மற்ற வாகனங்களை இடிக்காமல் போனதைச் சொல்றேன்...) ஓவர்டேக்கின் ஓட்டுநரின் பக்கம் இல்லையோ....ஓ ஆட்டோ என்பதால் எந்தப்பக்கமும் வேணாலும் ஓவர் டேக் செய்யலாமோ!!!!!
கீதா
இந்த பெயரில்லா கருத்துகளை மட்டும் மட்டறுத்தால் போதாதா?
நீக்குபெரிய நெரிசல் இல்லாததால் ஆபத்தானது தெரியவில்லை கீதா.
நீக்குஹா ஹா ஹா நெல்லை... கீதாவின் கருத்துகளை மட்டுமா?!!
நீக்குபெயரில்லாமல் நுழையறவங்களை மாத்திரம். என்ன சொல்றீங்க?
நீக்குகூகுள் செய்யும் குறும்பால் கீதா ரங்கன், பானு அக்கா போன்றோர் கமெண்ட்ஸ் பெயரில்லாமல் வந்து விடுகிறது. சமயங்களில் துரை செல்வராஜூ அண்ணாவின் கமெண்ட்ஸும்... அதற்கு என்ன செய்ய.. அதைப் பார்த்தால் வேறு சில கதைகளை படிக்க நேர்கிறதே....!
நீக்குஅரகன்ஸ் என்பது இல்லாமல் வேகம் இருந்தாலும் ஆபத்தில்லாமல் ரசிக்கும்படியான டிரைவிங். //
பதிலளிநீக்குஅப்ப அவர் தப்பிச்சார்!!! ஹாஹாஹா......ஏதேனும் அவசரமா இருக்குமோ இல்லை, ஓ ரயில் பிடிக்க போகிறார் போகட்டும் பிழைத்தார்....நானும் அழகாக அநாயாசமாக ஓட்டுபவரை ரசிப்பதுண்டு. நானும் ஓட்டியிருக்கேனே!!!! ஒரு காலத்தில்! ஹாஹாஹா....நான் தைரியமாக என் மீதான நம்பிக்கையில் ஓட்டினாலும் என்னோடு வருபவர்கள் பயசாலிகள்!!!!! அதனால் அடக்கியே ஓட்டும் பழக்கம்.
கீதா
அந்தக் காலத்தில் நான் வேகமாக ஓட்டிப் பழக்கமே இல்லை. ஓரளவுக்குத்தான் வேகமாக ஓட்டுவேன். நான் என்ன ஓட்டுவேன் என்றால்
நீக்கு-
சைக்கிள்தான்!
ஓவியம் 1 - Zimha ; 2 - ஸாரதி (ஊகம்தான்)
பதிலளிநீக்குஇல்லை ஸார். தவறு. இன்னும் கொஞ்ச நேரத்தில் பதிவிலேயே படங்களோடு விடையை வெளியிடுகிறேன்!
நீக்குபதிவிலேயே ஓவியர் யார் என்று படத்துடன் பதிவின் கடைசியில் தந்திருக்கிறேன். பார்த்தீர்களா?!
நீக்கு
நன்றி
நீக்குநன்றி
நீக்குஆனால் ஸ்ரீராம் அந்த இரு சக்கரர் டென்ஷன் ஆனது யதார்த்தம்தானே....ஏனென்றால் நாம என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் கரணம் தப்பினால் மரணம் என்பதை யோசிக்கறப்ப, அவர் பயம் ப்ளஸ் ஒரு சின்ன தட்டு போதும் இரு சக்கரர் கீழே விழ. எனக்கு ரெண்டு அனுபவமும் உண்டு என்பதால்...இரு சக்கரம் ஓட்டும் போது எனக்கு நிறைய அனுபவங்கள். உரசுவது போலெல்லாம் ஓவர்டேக் பண்ணுவாங்க....
பதிலளிநீக்குகீதா
பயமோ எச்சரிக்கையா இருக்கலாம் கீதா... சொல்லவும் சொல்லலாம்.. ஆனால் எத்தனை தரம்... சொன்னதையே சொல்லிச் சொல்லி...அவர் சொல்லும் பதிலையே மதிக்காமல்!
நீக்குஅந்த எழுத்தாளர் நண்பர், மனைவி யாரோ? சஸ்பென்ஸாக இருக்கிறதே. அதுவும் பார்ட்டி கொடுக்கும் அளவு எழுத்தாளர்!!! யார் அது?
பதிலளிநீக்குகீதா
யார் அது? யார் அது?
நீக்குபழைய உயிர் நண்பன்...ஓ நண்பனுக்குத் திருமணம் ஆனதால் இப்போது பழைய உயிர் நண்பன் என்றாகியதோ.
பதிலளிநீக்குகல்யாணம் ஆன நண்பர் மனைவியோடுதானெ போவான் நண்பனோடு போக முடியுமா? அம்புட்டுத்தான்!!!
ஏன் அப்படி? மத்தபடி, திருமணம் ஆனா நட்பு போய்விடுமோ?
கீதா
நட்பு போகாது. ஆனால் பேச்சலர் நண்பர்களுக்கு அனுமதி கிடைக்காது.
நீக்குஎன் மகனின் நண்பர்கள் மனைவியரோடு ஒரு தரமும் நண்பர்கள் சேர்ந்து ஒரு தரமும் படம் பார்த்து நட்பை இன்னும் ஜோராக மெயின்டெயின் செய்கிறார்கள்.
நீக்குதிருமணம் ஆனாலும் நட்பு போகாது. ஆனால் எப்படி பேச்சலரை அழைப்பாங்க?
நீக்குமனைவியோடு போகும்போது அழைக்க மாட்டார்கள். அது தனி. இது தனி!
நீக்குயதார்த்தக் கவிதை!!! ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா. நீங்கள்தான் என் கவிதைகளை ரசிப்பீர்கள்!
நீக்குதுவாரகா கண்டுபிடிக்கப்பட்டது குறித்து முன்பு செய்திகளில் வந்தது நினைவிருக்கிறது. நிறைய படங்கள் கூட வந்தது.
பதிலளிநீக்குஅடுத்த படம் நிஜமாகவே கரெக்ட்டாக எடுக்கப்பட்ட படம் துல்லியம் பாவம் அவரது மூக்கு!!! படத்திலேயே இப்படி இருக்கிறதே நேரில் அவருக்கு எப்படி இருந்திருக்கும்?
கீதா
தன் முகம் அபப்டி நெளிந்து போனதை அவரே உணர்ந்திருக்க மாட்டார். படம் பார்த்துதான் தெரிந்து கொண்டிருந்திருப்பார்.
நீக்குஓவியர் யாரென்று தெரியவில்லை ஆனால் ஓவியம் படம் அருமை.
பதிலளிநீக்குராஜினாமா கடிதத்திலேயே தப்பிருக்கறவருக்கு வேலை!! ஓ டெலிஃபோன்ஸில் வேலை..டெலிஃபோன்லியே எல்லா வேலையும் முடித்துவிடுவார் போல!!!!
கீதா
ஓவியர்... டட்டடாய்ங்... விடை இன்னும் சற்று நேரத்தில் பதிவிலேயே தோன்றும்!!
நீக்குஅபேரம் - ஹாஹாஹா நல்ல டெக்னிக்குதான்!!!
பதிலளிநீக்குபொடி விளம்பரம் எனக்கு இளம் வயதில் பள்ளி கல்லூரிக்குப் பேருந்துப்பயணம் செய்தது நினைவு வந்தது. கூட்டம் னா செம கூட்டமா இருக்கும். இதில் புகையிலை, பொடி போடும் கூட்டம் இருக்கும். பொடி போடுபவர்கள் அந்த டப்பியைத் திறந்தது,ம் அது ஒரு விதமான மணம் வரும். அப்போது நாங்கள் சொல்லும் பொடிக் குற(ல்)ள்!!! உண்டு.
ஆனான் இங்க சொல்லல....
கீதா
சளிக்கு நல்ல மருந்து!
நீக்கு//நானும் என் ஆ.ஆ.காரரும்..//
பதிலளிநீக்குவழக்கமாக நிறைய பின்னூட்டங்களிடும்
சகோ தி.கீதாவால் மேலே காணும் வரியை முழுமை படுத்த முடியும் என்பது என் எதிர்பார்ப்பூ.
ஆஸ்தான ஆட்டோக்காரரும்!
நீக்குஎன் ஆஸ்தான ஆட்டோக்காரரும்.... நாங்களும் படிப்பதை நினைவில் வைத்துருப்போமில்ல
நீக்குநீங்களே சொன்னால் எப்படி?
நீக்குகீதா சொல்லவில்லையே...!
நீக்குதிருமணம் இன்னும் கைகூடாததுக்கு பதில்,
பதிலளிநீக்கு'கல்யாணம் ஆகியும் தனியாக என்னுடன்
எப்பொழுதும் சினிமாவுக்கு வந்தே பழக்கப்பட்ட என் உயிர் நண்பன்' -- என்றிருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
அதுதான் மறைமுக அர்த்தம் ஜீவி ஸார்.
நீக்குஅனுப்பும் பின்னூட்டம் மட்டுறுத்துதலுக்கு போயிற்றா, இல்லையா என்று கூட தெரியாத நிலை. இந்தக் கருத்து
பதிலளிநீக்குஅதைத் தெரிந்து கொள்ளும் சோதனைக்காக.
மாடரேஷன் வைக்கப்பட்ட காரணத்தை அறிவீர்கள் என்றே நினைக்கிறேன்.
நீக்குதெரியாது.
நீக்குமேடையில் பேசிக் கொண்டே அண்ணா அவர்கள் பொடி போடுவது வெளிக்குத் தெரியாத நாஸூக்காய் ரொம்ப இயல்பாய் இருக்கும். போட்டு விட்டு வலது கையை ஒரு உதறு உதறுவார், பாருங்கள்.. வேலை முடிந்து விட்டது என்று அர்த்தம்.
பதிலளிநீக்குநானும் கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்கு மேல் பொடி பழக்கம் கொண்டிருந்தேன். ஜெஸி ஸார் அப்பா போல டி.எஸ்.ஆர். ரத்தினம் தான். அனிச்சையாய் ஆரம்பித்த பழக்கம், அனிச்சையாகவே போயிற்று. பொடி போடும் நெருங்கிய நண்பர் இருந்தால் பொடி போடாமல் தப்பிப்பது அசாத்தியம்.
திருத்தம்:
நீக்குடி.ஏ.எஸ். ரத்தினம் பட்டணம் பொடி.
ஆனால் பாருங்கள்... பொடி போடுபவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் பாவம்....
நீக்குதிருமணம் கைகூடாத நண்பனுக்குப் பதில்
பதிலளிநீக்குகல்யாணம் ஆகியும் எப்பொழுதும் என் கூடத் தனியாகத் திரைப்படம் வரும் பழக்கம் கொண்டிருந்த உயிர் நண்பன் என்றிருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
அதுதானே அர்த்தம் ஜீவி சார்?
நீக்குகாலை நேர் பர பரப்பு , சாலையில் அன்றாடம் நடப்பது. அதை பார்வையாளராக இருந்து விளக்கி விட்டீர்கள்.
பதிலளிநீக்குலட்சுமி சொன்னது போல தருகிறேன் என்று வாங்கியவர்கள் தராமல் இருந்து இருக்கிறார்கள். பார்த்தாலும் , கேட்டாலும் அதை பற்றி பேசவே மாட்டார்கள்.
திருமணம் ஆனதும் பழைய நடைமுறையை பின் பற்ற முடியாது என்பதை புரிய வைத்து இருக்கும் நண்பருக்கு.
புகைப்பட பகிர்வு ,கடல் ஆராய்ச்சிகட்டுரை, மற்றும் பொக்கிஷ பகிர்வு அருமை.
கவிதை எங்கே?
//கவிதை எங்கே?//
நீக்குஅச்சச்சோ.. திருமண நண்பன் ஆகாத நண்பன்-- கவிதை முயற்சிதான் அது!!
அச்சச்சோ ! கவிதை படித்து கருத்து சொல்லி இருக்கிறேன்.
நீக்குநினைத்தேன், அது தான் கவிதையாக இருக்கும் என்று.
சே... இப்படி சொல்லி விட்டீர்களே... இனி நான் 'கவிதை' என்று தலைப்பு கொடுத்து விடுகிறேன் அக்கா! :)))
நீக்குபொக்கிஷம் முதல் ஓவியம் வர்ணம் போலிருந்தாலும் அந்த அழகுக் கண்களை வரைந்ததில் வித்தியாசம் தெரிகிறதே;...
பதிலளிநீக்குகடைசி ஓவியத்தின் ஆண் லதா வரைந்தது போல இருந்தாலும் அந்தப் பெண்ணின் முக பாவத்தில் வித்தியாசம் தெரிகிறதே!..
எது எப்படியாயினும் எழுத்துக்கள் அச்சைப் பார்த்தால் குமுதம் தான்
என்று தோன்றுகிறதே!
ஆம், ஆக, சட்டென யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதுதானே உண்மை!!
நீக்குஆர்.எஸ்.ஸ்ரீராம்
பதிலளிநீக்குசெங்கோட்டை ஸ்ரீராம்
மஞ்சரி ஆசிரியர்
My. Ramkumar
--- யார் யார், என்னன்ன என்ற குழப்பம். தீர்த்து வையுங்களேன்
படத்திலேயே விளக்கம் இருக்கிறதே...
நீக்குஎதற்கும் அவசரம் எங்கும் அவசரம் என்ற நிலைதான் .மூன்று சக்கரம்தான் இப்படி என்றால் கார் ஓட்டுநர்களும் . பறத்தலில் மகிழ்ச்சி உயிர்கள் ஆபத்து?? என்ன சொல்வது தெருவில் இறங்கினாலே இதே நிலைதான்.
பதிலளிநீக்குகாய்கறி பேரம் ரசனை.
அன்றைய நிலையில் வேறு வழியில்லை, மாதேவி. எல்லோருக்கும் ஒருதரமாவது இந்நிலை வரும்!
நீக்குஓவியர் புதிர் விடைகளை வெளியிட்டு விட்டேன்!
பதிலளிநீக்குபானுமதி வெங்கடேஸ்வரன் :
பதிலளிநீக்குநேற்றய பதிவில் ஓவியர் மாருதி என்று சரியாக கணித்து விட்டேன்.
நடிகை லக்ஷ்மிக்கு விருந்தளித்து 5000/- வாங்கிய அந்த எழுத்தாளர் இதயத்தால் பேசிய மணியானவர்தானே..?
ஓவியர் விடை... செல்லாது.. செல்லாது... விடை நான் சொன்ன பிறகு வரும் விடை செல்லாது!!!! எழுத்தாளர் யாரென்று தெரியவில்லை.
நீக்குஇருசக்கர வாலிபர்கள் முதல் அனைவரும் இன்று அவசரம் அவசரம். பறக்கிறார்கள்
பதிலளிநீக்குஇங்கு இரு சங்கரர் பறக்கவில்லையே...
நீக்குபா.வெ. யாரும் இவர் தான் அந்த எழுத்தாளர் என்று பெயர் சொல்லப் போவதில்லை.
பதிலளிநீக்குதன்னை எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட கேட்டரிங் ஆசாமி ஒருவராகக் கூட இருக்கலாம். இல்லை திரையுலகில் திரைக்கதை, வசனம் எதுக்கானும் சான்ஸ் தேடி
அலைந்த ஆசாமியாய் கூட இருக்கலாம்.
பாவம், சும்மா பணம் பெற்றுக் கொள்ளவில்லையே..
அன்பான உபசரிப்பு, வகையான சாப்பாடு போட்டுத் தானே;! இதை கடன் என்று சொல்லி அவர் பெற்றுக் கொண்டாலும், சாப்பிட்ட கடன் தானே, போனால் போகிறது என்று விட்டு விடலாமில்லையா?
ஏன் சம்பந்தம் இல்லாதவர்களையெல்லாம் இவரா, இவரா என்று கேட்டு நம் பொழுதை நாம் ஏன் வீணடிக்க வேண்டும்?
சொல்லுங்கள்.
//தன்னை எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட கேட்டரிங் ஆசாமி ஒருவராகக் கூட இருக்கலாம். இல்லை திரையுலகில் திரைக்கதை, வசனம் எதுக்கானும் சான்ஸ் தேடி
நீக்குஅலைந்த ஆசாமியாய் கூட இருக்கலாம். //
லக்ஷ்மியின் வாசிப்பு திறமைக்கு அது புரியாமல் இருந்திருக்காது. எனவே அவர் 'பெயர் போன' ழுத்தாளராய்த்தான் இருக்க வேண்டும்!
மொய்விருந்து கொடுத்திருப்பார் என்று சொல்கிறீர்களா?!
//ஏன் சம்பந்தம் இல்லாதவர்களையெல்லாம் இவரா, இவரா என்று கேட்டு நம் பொழுதை நாம் ஏன் வீணடிக்க வேண்டும்?
சொல்லுங்கள்.//
பொழுது போகவேண்டுமே...! ஒரு பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாமே என்றுதான்!
ஓவியர் மாருதி என்று நினைத்தேன், சரியாக இருக்கிறது.
பதிலளிநீக்குசொல்லியிருக்கக் கூடாதோ அக்கா?
நீக்குகந்தசாமி சார் பகிர்ந்து கொண்டதாக இங்கு பதிவாகியிருக்கும் செய்தியைக் கூர்மையகப் படித்துப் பார்த்தீர்கள் என்றால் அருமையான கதைக்கான ஒரு அடித்தளம் இருப்பது புரியும்.. உங்கள் கற்பனை எழுத்தாளரை மட்டும் உருவாக்கி விட்டீர்களென்றால் உங்கள் கதை தனக்குத் தானே உருக் கொண்டு விடும். முயற்சி செய்து தான் பாருங்களேன்.
பதிலளிநீக்குஎழுத்தாளரை வைத்து மட்டும் அல்ல, நடிகையை வைத்தும் எழுதலாம். ஆனால் பெயர் சொல்லாமல் வேறொரு நடிகையாய் இருக்க வேண்டும்!
நீக்குமொய் விருந்து கொடுத்திருக்கலாம் என்பது தான் கதைக்கான கற்பனை.
பதிலளிநீக்குஎழுத்தாளரோ
நடிகையோ
இல்லாமலும் எழுதலாம்.
ரயிலுக்கு நேரமாச்சு.. சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளீர்கள். மற்றுமொரு சம்பவம் என்னவென அறியக் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குதொகுப்பு நன்று.