ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்

 

                அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரை– பகுதி 2 

சென்றவாரம், கீழ் அஹோபிலத்தில், லக்ஷ்மி நரசிம்ஹர்   கோவிலின் நுழைவாயிலில் இருக்கும் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டுவந்தோம்.

ஒரு இடத்திற்குச் சென்றால் முடிந்த அளவு அந்த இடத்தைச் சுற்றிப் பார்ப்பது, பார்த்தவைகளை முடிந்த அளவு புகைப்படங்கள் எடுத்துவைத்துக்கொள்வது என் இயல்பு. யாத்திரைக் குழுவில், வெகு அதிகாலையிலேயே எழுந்து குளித்துத் தயாராகிவிடுவேன். நேரம் கிடைத்தால் அருகிலுள்ள கோவிலுக்கும் சென்றுவருவேன். சமீப காலங்களாக தினமும் குறைந்தபட்சம் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது என்று வைத்துக்கொண்டுள்ளேன். GoogleFit apps உபயோகிக்கிறேன். அதுவோ, 10,000 ஸ்டெப்ஸ் என்றால், குறைந்தபட்சம் 40 heart points வரும் அளவில் நடையின் வேகம் இருக்கவேண்டும் என்று சொல்கிறது. ஒரு நாளில் 40 heart points மற்றும் 10,000 ஸ்டெப்ஸ் நடந்தால்தான், அன்றைய target வெற்றிகரமாக முடிந்தது என்று அந்த apps ஒத்துக்கொள்ளும். இந்த மாதிரி யாத்திரைகளோ, கோவில் தரிசனங்களோ மேற்கொள்ளும்போது பொதுவாக 10,000 ஸ்டெப்ஸ் நடந்துவிடமுடியும். ஆனால் தொடர்ந்து ஓரளவு வேகமாக நடந்தால்தான் heart points வரும். அதற்காக, நேரம் கிடைக்கும்போது, வேகமாக 45 நிமிடங்களாவது நடந்து heart points 40ஐக் கடந்துவிடும்படி பார்த்துக்கொள்வேன். ஒரு நாளைக்கூட விட்டுவிடாமல் இந்த டார்கெட்டைத் தொட்டுவிடவேண்டும் என்று செயல்படுவேன். நம் உடல் ஆரோக்கியத்தையும் நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். சமீபத்தில் கீதா ரங்கன்(க்கா)வின் உடல்பயிற்சிப் பதிவுகளைப் பார்த்து, கடந்த ஓராண்டாக விட்டுப்போன யோகாவையும் எப்படியாவது ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

இன்னும் நாம் த்வஜஸ்தம்பம் இருக்கும் இடத்திற்குச் செல்லவில்லை. நுழைவாயிலில் உள்ள சிற்பங்களையே கண்டுகளித்துக்கொண்டிருக்கிறோம்.





கோபுர அடிவாரத்தில், எண் கைகளுடன் ஹிரண்யகசிபுவை வதம் செய்யும் நரசிம்ஹர் (முகத்தில் கோபம் தாண்டவமாடுகிறது. குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொள்ளும் இரு கைகள், மடியில் பூமியில் படாதவாறு ஹிரண்யகசிபுவை வைத்துக்கொண்டு தன் கூரிய நகங்களால் ஹிரண்யகசிபுவின் வயிற்றைக் கிழிக்கும் இரண்டு கைகள், அவனை அசையவிடாதவாறு பிடித்துக்கொள்ளும் இரு கைகள், சங்கு சக்ரத்தைக் கையில் ஏந்தி, நானே முழுமுதற்கடவுளின் அவதாரம் என்று சொல்லும் இரு கைகள் என்று மிக அருமையாகச் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதியில், நானே திருப்பதி வெங்கடேசனும் என்று சொல்லும்படிச் செதுக்கப்பட்டுள்ள பாலாஜியின் திருவுருவம்.

எவ்வளவு நேரம்தான் நுழைவாயிலிலேயே இருப்பாய்? கோயிலின் உள்ளே வா என்று இறைவன் அழைப்பது கேட்கிறது. நுழைவாயிலை அடுத்த த்வஜஸ்தம்பத்தை வணங்கிவிட்டு, கோயிலின் அடுத்த கோபுரத்தைத் தாண்ட முனைகிறோம். கோவில்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது த்வஜஸ்தம்பத்தின் முன்னால்தான். அதைத் தாண்டிவிட்டால் எங்குமே தரையில் விழுந்து வணங்கும் மரபு கிடையாது. கோவிலுள்ளே உற்சவர் புறப்பாடு நடைபெற்றாலும் தரையில் விழுந்து வணங்கும் மரபு கிடையாது. அதைப்போலவே சமயப் பெரியவர்கள் அங்கு இருந்தாலும் அவர்களையும் விழுந்து வணங்குதல் மரபல்ல (த்வஜஸ்தம்பத்தைத் தாண்டி உட் பகுதியில்). அதே நேரத்தில் சமயப் பெரியவர்களை எங்கு கண்டாலும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல் மரபு.

த்வஜஸ்தம்பத்தைத் தாண்டி அடுத்த நுழைவாயில் வழியாகச் செல்கிறோம். இரண்டு பக்கங்களிலும் கற்களில் சிற்பங்கள் கருத்தைக் கவர்கின்றன. பொதுவாக ஆடல் மகளிர் ஒருவரின் சிற்பம் இரு புறத்திலும் சற்றுப் பெரிய அளவில் செதுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய அமைப்பை நான் பலப் பல கோவில்களில் கண்டிருக்கிறேன்சிற்ப சாஸ்திரங்கள் பொதுவானவை என்பதையே இவை உணர்த்துகின்றன. இந்த சிற்ப சாஸ்திரத்தை, ஒரு சிலர் தவிர பெரும்பாலான பிராமண சமூகம் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.






இந்த வாரம் இரண்டாம் நுழைவாயிலையும் கடந்துவிட்டோம். இனி அடுத்த வாரம் ரங்கமண்டபத்தில் உள்ள சிற்பங்களைக் காணலாம். இந்த மண்டபத்தைத் தாண்டினால்தான் கர்பக்ரஹத்துடன் கூடிய கோவில் நுழைவாயில் வரும்.

(தொடரும்) 


51 கருத்துகள்:

  1. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. விடியற்காலையில் பெருமாள் தரிசனம். மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  3. கோயில் சம்பிரதாயங்கள் பற்றிய விவரங்கள் நன்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டுவித சம்ப்ரதாயங்கள் இருக்கின்றன. பெருமாள் கோவிலில் முதலில் தாயார் தரிசனம், பிறகு மூலவர் தரிசனம். சிவன் கோயிலில் முதலில் சி தரிசனம், பிறகு அம்பாள் தரிசனம்.

      நீக்கு
  4. யாத்திரை அமைப்பாளர்கள் நீங்கள் பொறுமையுடன் ஒவ்வொரு சிற்பமாக படம் பிடித்து நேரத்தை கடத்துகிறீர்கள் என்று துரிதப்படுத்தாமல் அனுமதி தந்தார்கள் என்பது ஆச்சரியம். படங்கள் தரமாக, சிலைகளின் நுட்பங்களையும் வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பு. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் தேவையில்லாமல் நேரம் கடத்தமாட்டேன். என் வேலைகளைச் சுறுசுறுப்பாக பிறருக்கு முன்பே முடிக்கப் பார்ப்பேன் (அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து குளித்துவிடுவது, தயாராக இருப்பது, பேச்சுக்களில் நேரம் கடத்தாமை என்பது போல). சில நேரங்களில் எல்லோரும் வந்தபின் சேர்ந்து போகலாம் எனச் சொல்லும்போது, கோபுர வாயில் வரை சென்று படங்கள் எடுத்துக்கொள்ளவா என அனுமதி பெறுவேன். கேரளக் கோவில்களில் மாத்திரம் பிரசாதங்கள் வாங்கிவிடுவேன் (சில நேரங்களில், நேரமின்மையால் சாத்தியமாகாது)

      நீக்கு
    2. உங்களுக்குத் தெரியுமா? அனேகமாக எல்லா கேரளக் கோவில்களிலும் அரவணைப்பாயசம், பால்பாயசம், கடுசர்க்கரை எனச் சொல்லும் சர்க்கரைப் பொங்கல் போன்றவை தற்காலங்களில் கிடைக்கின்றன. ரொம்ப விலை அதிகமில்லை, சுத்தமாகவும் இருக்கிறது

      நீக்கு
  5. ஒரு இடத்திற்குச் சென்றால் முடிந்த அளவு அந்த இடத்தைச் சுற்றிப் பார்ப்பது, பார்த்தவைகளை முடிந்த அளவு புகைப்படங்கள் எடுத்துவைத்துக்கொள்வது என் இயல்பு. //

    எனக்கும் இதே பழக்கம். ஆனால் வாய்ப்பு கிடைப்பதுதான் சிரமம். அப்போதெல்லாம் கேமராவும் இல்லை இப்ப பிரச்சனையுடனான கேமரா இருந்தும் கூட இப்பல்லாம் எடுத்ததையும், எடுப்பதையும் கூடத் தொகுத்து தளத்தில் கொடுப்பதும் சிரமமாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பண்ணுவது? உங்களுக்கு ஏகப்பட்ட வேலைகள், கடமைகள்.

      பதிவு தயார் செய்வது நேரம் பிடிக்கும் வேலை

      நீக்கு
  6. படங்கள் எல்லாம் செமையா இருக்கு நெல்லை. தெளிவாகவும் நல்ல கோணங்களிலும் எடுத்திருக்கீங்க...பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன்(க்கா)... ஹா ஹா ஹா.. எல்லோரும் நான் உங்களைவிட இருபது வருடங்களாவது இளையவன் என்று நினைத்துக்கொள்ளப் போகிறார்கள்.

      நீக்கு
  7. நானும் நடைப்பயிற்சியை விடுவதில்லை. ஆனால் ஸ்டெப்ஸ் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. வேக நடை ஒரு மணி நேரம் அல்லது குறைந்தது 45 நிமிடங்கள். இரு முறை.

    ஒரு நிமிடத்தில் 40 ஸ்டெப்ஸ் - வயது ஏறும் போது...(ஹிஹிஹி மீக்கு வயசொன்னும் ஆகலை..நோட் திஸ் நெல்லை!!) வரும்படி வைத்துக் கொள்ள வேண்டுமாம். அதைவிட முக்கியம் நம் மனதில் நமக்கு வயதாகிறது என்ற எண்ணம் இல்லாமல் தொடர்ந்து செயல்படுவது..

    நேத்து கூட பாசிட்டிவில் முதல் செய்தி சாந்தம்மா அவங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்கள் சில நேரங்களில் மாத்திரம், தங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை நினைப்பதுல்லை. பெண்களூர் சாலைகளில் நடக்கும்போது என நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல

      நீக்கு
    2. இன்று 5:30க்கு நடக்க ஆரம்பித்தி 12000 ஸ்டெப்ஸ் முடித்துவிட்டேன் (9 கிமீ). காலையில் குளுகுளு காலநிலையில் நடப்பது நல்லா இருக்கு

      நீக்கு
  8. சமீபத்தில் கீதா ரங்கன்(க்கா)வின் உடல்பயிற்சிப் பதிவுகளைப் பார்த்து, கடந்த ஓராண்டாக விட்டுப்போன யோகாவையும் எப்படியாவது ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.//

    பதிவு motivation ஆக இருந்தால் மிக்க மகிழ்ச்சி. நன்றி நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன். தொடர்ந்து உடல்நலக் குறிப்புகள் எழுதுங்க

      நீக்கு
  9. சிற்பங்களின் தொகுப்பைப் பார்த்து அசந்துவிட்டேன். எவ்வளவு நுணுக்கமான வடிவமைப்பு. அத்தனையும் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கான அழகு அம்சங்கள்! உழைப்பு, அழகியல், கற்பனை, அதைச் செயலாக்கியவிதம், உழைப்பிற்கான நேரம் லயிப்பு, கூர்மையான அறிவு, அதீதமான கவனம் என்று பலவற்றைச் சொல்லுகின்றன. இந்தக் கோயில் என்றில்லை நெல்லை நீங்கள் முன்பு பகிர்ந்திருந்த கோயில் சிற்பங்கள் உட்பட, எல்லாக் கோயில் சிற்பங்களும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதே இப்படி நம் மனதைக் கவர்ந்தால், செய்த புதிதில் எப்படி இருந்திருக்கணும்? கல்லில் உலோகம் போன்ற சிற்பம். க்ரேட்.

      நீக்கு
  10. நுழைவாயிலில் உள்ள யோக நரசிம்மார் கோபம் தணிக்க இப்படிச் சந்தனம் பூசி வழிபடறாங்களோ.......அதுவும் உள்ள போறதுக்குள்ள அவர் உக்ரம் தணிந்து அருள் புரிய வேண்டும் என்று போவதற்கு முன்னமே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீப காலங்களில் சிற்பங்களில்கூட மஞ்சள் சந்தனம் குங்கும்ம் தடவிடறாங்க. ஆகம்ப்படி சந்நிதி தவிர மற்றச் சிற்பங்களில் இவ்வாறு செய்யக்கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனால் திருவல்லிக்கேணி உட்பட எல்லாக் கோயில்களிலும் இப்படிப் பார்க்கிறேன்.

      நீக்கு
  11. தவழும் கிருஷண்ர் - ஓம் வடிவில் - கிட்டத்தட்ட - செதுக்கப்பட்டது போல்...அப்படி முதலில் நுழைவாயிலில் எடுத்ததை நீங்க பகிர்ந்திருக்கீங்களே அதிலும் நிறைய இருக்கின்றன.

    சிற்ப சாஸ்திரம்/அறிவியல், கணக்கு எல்லாம் உண்டே நெல்லை. எப்படி நாட்டிய சாஸ்திரம், வானவியல் சாஸ்திரம் என்று இருக்கிறதோ அது போன்று.

    Sculpture science, architecture பாடங்களில் உண்டு. பல பல்கலைக்கழகங்கள் கற்பிக்கின்ற்ன. அதாவது Sculpture science. இதை மட்டும் பட்டப்படிப்பு மற்றும் நிபுணத்துவம் பெற. இதல்லாது architecture லும் கற்பிக்கப்படுகிறது. மேற்படிப்பில் சிற்பக்கலையில் நிபுணத்துவம் பெறவும் கற்கலாம். ஆர்வம் இருந்தால். எனக்குத் தெரிந்த் ஆர்க்கிடெக்சர் கற்ற குழந்தைகள் இருக்காங்க. நவீனத்துவம், பண்டைய சாஸ்திரம் என்று கலந்து கட்டி வடிவமைக்கிறாங்க.

    அதே போன்று fashion technology யில் நகை வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்று, நவீனத்துவம், மற்றும் conventional வடிவங்களை அழகாகச் செய்யும் திறமை பெற்ற என் தங்கையின் மகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் ஜி எம் பி சாருக்கு எடுத்துச் சொல்லுங்க. அவர்தான், கல்வி பிராமணர்கள் தவிர மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டது, மற்றவர்கள் கல்வியறிவு இல்லாமல் இருந்தாங்கன்னு நம்பிக்கிட்டிருக்காரு

      நீக்கு
  12. கர்ப கிரகத்துக்கு போகும் முன்னேயே இவ்வளவு சிற்பங்கள் இருக்கின்றன என்று கண்டு, நேரம் எடுத்து பார்த்து ரசிப்பதை க் கண்டு பொறாமைப்ப படுகிறேன். இதே கோயிலுக்கு இரண்டு ஆண்டுகள் முன்பு சென்றிருந்தோம், இது போன்ற சிற்பங்களை ரசிக்கவில்லை என்பது மனதில் தோன்றுகிறது., அழுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெற்குப்பை தும்பி. முதல் வருகைக்கு மகிழ்ச்சி.

      எனக்குமே 80சதம்தான் சரியாகப் பார்த்திருக்கிறேன் என்ற எண்ணம். இது இரண்டாவது முறை. அடுத்த முறை அஹோபில யாத்திரையில் இன்னும் கவனமாக, பார்க்காதவைகளையும் பார்க்கவேண்டும் என்ற எண்ணம். இந்தத் தொடர் பிறருக்கும் உபயோகமாக இருக்கும்.

      நீக்கு
  13. சிற்பங்களின் படங்கள் வழக்கம்போல மிகவும் தெளிவாக இருக்கிறது தமிழரே.

    மிகவும் பொறுமையாக எடுத்து இருக்கிறீர்கள். விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி. இது பதினைந்து வாரங்கள் வரும் நெடுந்தொடர்.

      நீக்கு
  14. நரசிம்ஹர் என்றவுடன் அவரது உக்ரம்தான் நினைவுக்கு வருகிறதோ ஜனங்களுக்கு? இந்த சாமியோடு நமக்கேன் வம்புன்னு சந்தனம், குங்குமம் தடவி, தணித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு உள்ளே செல்கிறார்கள் போலும். நுழைவாயிலிலேயே இருக்கும் விஷ்ணுவை யாரும் பார்த்ததாகவே தெரியவில்லை. அல்லது இந்த சாமியையெல்லாம் பாத்து பயந்துடமுடியுமா என்கிற எண்ணமோ, என்னவோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவ நரசிம்ஹர்களில் உக்ரம் இல்லாதவையும் அநேகம். பலருக்குத் தெரிந்த யோக நரசிம்மர் உண்டே

      நீக்கு
    2. நரசிம்மர் கோயில் என்பதால் விஷ்ணுவைக் கவனிக்கவில்லையோ என்னவோ

      நீக்கு
    3. ஏகாந்தம் சார்.. இந்திய வெற்றி தொடருமா இல்லை அடுத்த டெஸ்ட் அவுட்டா?

      நீக்கு
    4. அடுத்த டெஸ்ட் டெல்லியில். பிட்ச் கதை வேறுமாதிரியாக இருக்கும். ஸ்பின் ஓரளவு எடுபட்டாலும், வேகம் வித்தை காண்பிக்கும். அவர்களுக்கு மிட்ச்செல் ஸ்டார்க் வந்துவிடுவார். இருந்தும், போராடி இந்தியா ஜெயிக்கும் எனத் தோன்றுகிறது..

      நீக்கு
    5. இன்று நீலம் vs பச்சை. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 HD -யில் மாலை 6:30-க்கு..

      நீக்கு
    6. பொதுவாக இரண்டாவது டெஸ்ட் மேட்ச் நாம தோற்பது வழக்கம் என்பதால் அந்தக் கேள்வி ஏகாந்தன் சார். பெண்கள் கிரிக்கெட்டா? மந்தனா இல்லாமலா? ஜமாயுங்கள்

      நீக்கு
  15. சிற்பங்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது. நரசிம்ஹர் கிரேட்.

    நிறைந்த படங்கள் கண்டு மகிழ்ந்தோம். நாமும் இரண்டாம் வாயிலை கடந்து வருகின்றோம்.

    பதிலளிநீக்கு
  16. //நம் உடல் ஆரோக்கியத்தையும் நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். சமீபத்தில் கீதா ரங்கன்(க்கா)வின் உடல்பயிற்சிப் பதிவுகளைப் பார்த்து, கடந்த ஓராண்டாக விட்டுப்போன யோகாவையும் எப்படியாவது ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.//

    நல்லது . ஆரம்பித்து தொடர்ந்து செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  17. படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.
    இரண்டு பக்கங்களிலும் கற்களில் சிற்பங்கள் நன்றாக இருக்கிறது.
    மீண்டும் நாளை காலை வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்பங்கள் என் கண்ணைக் கவர்ந்தன. இன்னும் நிறைய உண்டு

      நீக்கு
  18. நுழைவாயிலில் சிற்பங்கள் ஒவ்வொன்றும் அருமை.

    கோபுர அடிவாரத்தில், எண் கைகளுடன் ஹிரண்யகசிபுவை வதம் செய்யும் நரசிம்ஹர் (முகத்தில் கோபம் தாண்டவமாடுகிறது. //

    அருமையான சிற்பம். யோக நரசிம்மரும் அருமை. அவர் மேல் சந்தனம் பூசி வைத்து இருக்கிறார்கள் இங்கு மாதிரி அங்கும்.

    தவழும் கண்ணன், விஷ்ணு, லட்சுமி நாராயணர் இடது பக்க சிலை மயில் மீது இசை கருவியை கையில் ஏந்திய சிற்பம் நன்றாக இருக்கிறது.

    தூண் சிற்பங்கள், அழகான சின்ன மண்டபம்.எல்லாம் அழகு. பழுது பார்க்கும் வேலை நடக்கிறது போல!

    படங்கள் எல்லாம் மிக அருமை. அனைத்தையும் தொகுத்து கொடுத்தது நேரில் பார்த்த உணர்வு தருகிறது.

    ரங்கமண்டப சிற்பங்களை காண வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். விவரமான ரசிப்புக்கு நன்றி. இதையெல்லாம் கவனிக்காமல், நாம் பாட்டுக்கு மூலவர் சந்நிதிக்குப் போய் சேவித்துவிட்டு, தாயார் சன்னிதிக்குச் சென்று சேவித்துவிட்டு பிரதட்சணம் செய்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் வரலாறு, சிற்பிகளின் உழைப்பு, இதனை சமூகத்துக்கு காலம் காலமாக நிற்கும் ஆவணமாக அளித்த அரசர்கள்/புரவலர்களின் பெரும் எண்ணம்...இவைகளையெல்லாம் அலட்சியம் செய்ததாக ஆகிவிடும். இன்னும் நிறைய இருக்கும், நான் கவனிக்காமல் விட்டது. நான் கவனித்த (நிச்சயம் எங்களுடன் வந்தவர்களில் என்னைத் தவிர வேறு யாரும் கவனிக்காத) சில பல மிகச் சிறிய சிற்பங்கள் உள்ளன. அவைகள் வரும், ஆனால் என் விளக்கம் இல்லாமல்...

      நீக்கு
  19. வாசித்தேன். சிற்பங்களின் படம் பார்த்தேன். ஈடுபாட்டுடன் கூடிய உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி சார்.... அஹோபிலம் செல்பவர்கள் நிச்சயம் காணவேண்டியவைகளைத் தொகுத்திருக்கிறேன்....15 வாரங்கள் வரும்படியாக. தொடர்ந்து படிக்க/காண வேண்டுகிறேன்

      நீக்கு
    2. படிக்கிறேன், பார்க்கிறேன்
      நெல்லை.

      நீக்கு
  20. வாசித்தேன். சிற்பங்களின் படம் பார்த்தேன். ஈடுபாட்டுடன் கூடிய உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!