மகாலக்ஷ்மி
துரை செல்வராஜூ
" இன்னிக்கு நாள் நல்லாருக்கு.. வெளக்கு வச்சதும் பிள்ளையார் கோயிலுக்குப் போய்ட்டு அப்படியே காசிமுத்து அண்ணன் வீட்டுக்குப் போய் அவுக மகளையும் பார்த்துட்டு வருவோம்.. "
காமாட்சி அம்மாளின் கண்களில் மலர்ச்சி..
" ஏன்.. அந்தப் பொண்ணுக்கு என்ன?.. "
சுந்தரத்தின் கண்களில் கேள்விக்குறி..
சுந்தரம் - தொலைபேசியில் இருந்து ஓய்வு பெற்று ஓராண்டு ஆகின்றது..
ஒரே மகன்.. பெங்களூரில் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை.. கை நிறைந்த சம்பளம்.. அது அவனுக்குத் தான்..
குடும்பமும் ஓரளவுக்கு வசதி..
ஒரத்தநாட்டுக்குப் பக்கம் பத்து ஏக்கர் சாகுபடி நிலம்.. இவர் போய் பார்ப்பதில்லை..
வையாபுரி தான் பயிர் செலவு எல்லாம்.. வருடாந்திரம் நெல்லும் கடலையும் வந்து கொண்டிருக்கின்றன..
வீட்டுக்குக் கொண்டு வந்து அளந்து விட்டு செலவுத் தொகையை வாங்கிக் கொள்வான்..
சாகுபடி நிலத்தை விலைக்குக் கேட்டு நச்சரித்த நன்செய் நாசகாரிகளை விரட்டியடித்து விட்டுத் தான் உட்கார்ந்தார்..
" அந்தப் பொண்ணு நல்லாத் தான் இருக்கா!.. அவளுக்கு என்ன!.. "
சுந்தரம் ஏகத்துக்கும் குழம்பி விட்டார்..
" ஒண்ணும் புரியலையே... "
" பிரவீனை நினைச்சுப் பாருங்க.. எல்லாம் புரியும்.. அவனுக்கும் இருவத்தேழு ஆவுது.. "
" ஓ!.. கதை இப்படிப் போகுதோ.. " - இப்போது எல்லாம் விளங்கிற்று..
" நீ எங்கே பார்த்தே அந்தப் பொண்ண?.. "
" ஈவினிங் மார்க்கெட்... ல.. செம்பகம் அத்தாச்சி கூட்டிட்டு வந்திருந்தாக.. பார்த்து மூணு நாலு வருசம் ஆச்சு.. அவ்ளோ அழகா இருக்கா அந்தப் பொண்ணு!.. "
" அதெல்லாம் நமக்கு ஒத்து வருமா?.. "
" ஏன் ஒத்து வராது!.. உங்க குடி படையோட நான் இருந்து இத்தன வருசம் ஓட்டலயா?.. "
" அந்தக் காலம் மாதிரியா இருக்கு இப்போ.. அடுத்தத் தெருவுக்குப் போறதுக்கே பொண்ணுங்க பயப்படும்.. "
" அப்போ ஊரெல்லாம் புளிய மரம்... பேய் பிசாசுன்னு ஏகப்பட்டது இருக்கும்.. அதெல்லாம் ஒழியட்டும்.. ன்னு தானே புளிய மரம் எல்லாத்தையும் புடுங்கிப் போட்டுட்டானுங்க... "
" சரி.. சரி.. அதை விடு.. அந்தப் புள்ளப் பத்திச் சொல்லு... "
" ஒரே பொண்ணு.. பேரு தர்ஷனியாம்.. இருவத்தஞ்சு நடக்குதாம்.. "
" என்ன படிச்சிருக்கா?.. "
" அது என்னமோ ஒரு படிப்பு... எனக்கு வெளங்கலை.. மாசம் அம்பதாயிரம் சம்பளத்துக்குக் கூப்புட்டாங்களாம்... போகலையாம்... "
" ஏன்!.. " - சுந்தரத்திற்கு ஆச்சர்யம்..
" அந்த அண்ணனுக்கு கலெக்டர் ஆபீஸ் உத்தியோகம்.. அடுத்த வருசம் வேலை முடியுதாம்.. ஒத்தப் பூவா இருக்கிறதால பெத்தவங்கள விட்டுட்டு தூர தேசமா போயி வேலை பார்க்க அந்தப் பொண்ணுக்கு இஷ்டமில்ல.. உள்ளூர்லய நல்ல எடமா பார்த்து வாக்கப்படுறது தான் அதுக்கு இஷ்டமாம்.. "
" அவ்ளோ பெரிய படிப்பு படிச்சிட்டு உள்ளூர்ல வேலை பார்க்கனும்.. ன்னா இங்கே முடியுமா!.. இதுதான் கிராமத்துலயும் கிராமம் - பெரிய கிராமமா இருக்கே.. "
" படிச்சது ஒருத்தங்கிட்ட கை கட்டி நிக்கிறதுக்கு இல்லையாம்... "
" அடடே... " - சுந்தர்த்திற்கு வியப்பு..
" பூர்வீக சொத்து சாத்தூர்ல காடு கரையா கிடக்குதாம்.. எல்லாம் மிளகா சாகுபடி.. இங்கே பட்டுக்கோட்டைக்குப் பக்கமா பத்து ஏக்கர் தென்னந்தோப்பு.. எல்லாம் இப்போ ஆளு வச்சிப் பார்த்துக்கிட்டு இருக்கு.. கல்யாணம் கட்டிக்கிட்டு நாட்டாமை மாதிரி காடு கரை வாய்க்கா வரப்புன்னு மேம்பார்வை பார்த்து விருத்தி செய்யணுமாம்... "
" அதுக்கு கூஜா தூக்கிக்கிட்டு குடை பிடிக்க ஒரு ஆளு வேணும்.. அதுக்கு நம்ம பையன் தோதுபடுவான்னு நீ சொல்றே!.. "
சுந்தரம் சிரித்தார்..
" அந்த மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை.. நமக்கும் தூரத்து சொந்தம்.. நல்ல புள்ளயாவும் இருக்கா!.. இந்த வருசம் கல்யாண யோகம்.. ன்னு ஜோசியரும் சொல்லியிருக்கார்!.. "
ஆனா நீ சொல்றது தானே யோசனையா இருக்கு.. "
" என்னமோ டானிக் சாகுபடியாமே!.."
" அது டானிக் சாகுபடியும் இல்லே.. சமையலும் இல்லே.. ஆர்கானிக் சாகுபடி.. "
" ஆமா.. அதே தான்.. அந்த மாதிரியில தேங்கா சாகுபடி செஞ்சு அதுல இருந்து என்னென்னமோ தயார் பண்ணி இங்கே பிசினஸ் பண்றதுக்கும் வெளிநாட்டுக்கு அனுப்புறதுக்கும் திட்டம் இருக்குதாம் அந்தப் பொண்ணு கையில.. ஆனா என்ன செஞ்சாலும் இருக்குற ஊர விட்டு வேற ஊருக்கு குடித்தனம் போகாதாம்.. "
" அந்த மாதிரி பொண்ணு - அதாவது வெளி நாட்டுல பிசினஸ் பண்ற ஐடியாவோட இருக்கிற பொண்ணப் பெத்தவங்க நம்மளோட சம்பந்தம் வச்சுக்குவாங்க.. ன்னா நீ நினைக்கிறே!.."
" நீங்க வேற .. சிவகாசி மதுரன்னு பெரிய இடத்து சம்பந்தம் வந்தப்போ இந்தப் பொண்ணு ஒரேயடியா வேணாம்ன்னுட்டாளாம்.. "
ஒரு நிமிடம் நிறுத்திய காமாட்சியம்மாள் தொடர்ந்தார்கள்..
" பிசினஸ் பண்றத விட அம்மா அப்பா தான் முக்கியம்.. ன்னு சொல்லிட்டாளாம்.. "
" அப்போ கல்யாணத்துக்கு அப்புறம் மாப்பிள்ள அவங்க வீட்டோடயாக்கும்!.. "
" நீங்க ஏந்தான் இப்படி டியூப் லைட்டா இருக்கீங்களோ!.. "
" ஏன்!?... "
" கல்யாணத்துக்கு அப்புறம் புருசன் வீட்டோட தான் இருப்பா.. புள்ள குட்டி பெத்துக் கொடுப்பா.. மாமியாருக்கு ஒத்தாசையா இருப்பா.. அப்பப்போ அவங்க வீட்டுக்கும் போய் பெத்தவங்களப் பார்த்துட்டு வருவா... லச்சக் கணக்குல அன்பளிப்பு கேக்காம இருந்தா கம்பெனியும் நடத்துவா.. "
" கம்பேனி நடத்தப்போற மருமக வீட்ல கரித்துணிய கையில எடுப்பா.. ன்னு நெனக்கிறியா?.."
" கம்பெனி நடத்துற மருமக வீட்டு கரித்துணிய எதுக்கு கையில எடுக்கணும்?.. "
" இல்லே... உனக்குந்தான் மூட்டு வலி... முழங்கால் வலி.. வெளக்கேத்தி வைச்சு பொங்கிப் போடறதுக்கு மருமக எப்போ வருவாளோ .. ன்னு வேண்டிக்கிட்டு இருக்கியே.. இந்த மாதிரி கம்பெனி ஒனர் எல்லாம் நம்ம வீட்டுக்கு ஒத்து வருமா.. ன்னு யோசிக்கிறேன்.. " - என்றார் சுந்தரம்..
" ஏன்.. அதுக்கென்ன?... இப்போ கை வேலைக்கு முனியம்மா கூட இருக்கிறா.. இன்னொரு முத்தம்மாவும் வந்துட்டுப் போகட்டுமே... மருமக கம்பேனி ஓனர்ன்னா நமக்குப் பெருமை தானே!.. "
" இதுக்கு இவன் ஒத்துக்குவானா!.. "
" அதெல்லாம் ஒத்துக்குவான் உனக்கு ஒத்தாசையா இருக்குற மாதிரி நல்ல பொண்ணா பாரும்மான்னு அவன் சொல்லி ரெண்டு மாசம் ஆச்சு.. "
" அவனும் சொல்லிட்டானா!.. குடும்பத்தை ரெண்டு படுத்தாம விருத்தி பண்ணனும்ன்னு ஒரு பொண்ணு சொல்றான்னா.. நிச்சயம் அவ மகாலக்ஷ்மி தான்!.. "
" சரி.. வா.. போய் பார்த்துட்டு வருவோம்.. பிள்ளையார் கோயில்ல இருந்து தூரமா அவங்க வீடு?.. "
காமாட்சியம்மாளுக்கு சந்தோஷம்... வீட்டுக்கு மருமகள் வந்தே விட்டாள் என்று..
" பிள்ளையார் கோயில்ல இருந்து ரெண்டாவது குறுக்குத் தெருவுல மூணாவது வீடு.. சித்திரைக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு.. எல்லாம் சரியா வரணும்.. பையனை வரச் சொல்லி நேருக்கு நேர் பார்த்து பூ வச்சிட்டு ஆனியில முகூர்த்தம் வச்சிக்கலாம்!.. "
" உன்னோட வாய் முகூர்த்தம் எல்லாம் நல்லபடியாவே நடக்கட்டும்!.. "
சுந்தரம் புன்னகைத்தார்
காமாட்சியம்மாளுக்கு மடியில் பேத்தி துள்ளுவதைப் போல் இருந்தது..
அன்றிரவு ஏழு மணியளவில் பெங்களூர் சிட்டி ஸ்டேஷனில் வந்து நின்ற மயிலாடுதுறை விரைவு வண்டியில் பத்து நாள் விடுமுறை என்ற மகிழ்ச்சியுடன் ஏறி அமர்ந்தான் பிரவீன்..
அவனைத் தொடர்ந்து ஏறிய தம்பதியர் எதிர்ப்புறமாக அமர்ந்து கொண்டனர்..
அவரது நெற்றித் திருமண் எதையோ சொல்லாமல் சொல்லிற்று..
" நாங்கள் ஸ்ரீரங்கம்!.." - என்றபடி பேச்சைத் தொடங்கிய அவர் பிரவீனைப் பற்றித் தெரிந்து கொண்டு, - " சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து!.." - என்றார் புன்னகையுடன்..
எக்ஸ்பிரஸ் விரைந்து கொண்டிருந்தது..
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குஅனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
கதை நன்று, துரை அண்ணா
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ..
நலம் வாழ்க..
வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே.
பதிலளிநீக்குஇன்றைய கதை நன்றாக உள்ளது. காமாட்சி அம்மா பார்த்த அந்த பெண் மகாலக்ஷ்மி பெயருக்கேற்றபடி குணவதியாகவே இருப்பாள். வரப்போகும் மருமகளின் கல்வி, கேள்வி மனப்பான்மைக்கு மதிப்பு கொடுத்து புரிந்து கொள்ளும் அந்த நல்ல மாமியாரின் மனம் கோணாதபடி நடந்து குடும்பத்திற்கே நல்ல பெருமையையும் சேர்ப்பாள் .
/" நாங்கள் ஸ்ரீரங்கம்!.." - என்றபடி பேச்சைத் தொடங்கிய அவர் பிரவீனைப் பற்றித் தெரிந்து கொண்டு, - " சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து!.." - என்றார் புன்னகையுடன்/
ஸ்ரீ ரங்கநாதனே தன் அடியவர் மூலம் நல்வாக்கு தந்து விட்டார். இனி என்ன..! அந்த மனமொத்துபோன இரு குடும்பங்களும் சகல சௌபாக்கியங்களோடு சந்தோஷமாக இருக்கட்டும் என நானும் மனதார வாழ்த்துகிறேன். நல்ல நிறைவான கதையை தந்தமைக்கு தங்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
/// மருமகளின் கல்வி, கேள்வி மனப்பான்மைக்கு மதிப்பு கொடுத்து புரிந்து கொள்ளும் அந்த நல்ல மாமியாரின் மனம் கோணாதபடி நடந்து குடும்பத்திற்கே நல்ல பெருமையையும் சேர்ப்பாள். ///
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ..
நலம் வாழ்க..
வணக்கம் கௌதமன் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதைக்கேற்றபடி தாங்கள் வரைந்த ஓவியம் நன்றாக உள்ளது. பெண் அழகாக மகாலக்ஷ்மி மாதிரியே உள்ளாள். பாராட்டுக்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா நன்றி
நீக்குஅட க ஹ மேடமும் மஹாலக்ஷ்மியை பார்த்திருக்காங்களோ? எல்லாம் தெய்வ க்ருபை அவங்க தரிசனம் கொடுத்தது
நீக்குசித்திரம் சிறப்பு..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
இதை என்னைக் கவர்ந்தது.
பதிலளிநீக்குதிருமண வயதில் பெண்ணோ பையனோ உள்ளவர்கள் எதுக்கு முன்னுரிமை கொடுக்கணும் என்பதை அறிவார்கள்
கதை
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி...
நலம் வாழ்க..
பிறகு வருகிறேன். சென்னையில் திருமணம் ஒன்றிர்க்கு வந்துள்ளேன்
பதிலளிநீக்குசிறப்பு..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
காக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
நோக்க நோக்க
நொடியில் நோக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க நலம்.
நீக்குஇன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..
பதிலளிநீக்குஇன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்
கண் கவரும் சித்திரத்தால் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
நன்றி.
நீக்கு
பதிலளிநீக்குகதை ஒருபக்கம் அழகு என்றால் கதைக்கேற்றபடி கௌதம் ஜி அவர்களது ஓவியம் நன்றாக உள்ளது. அழகாக மகாலக்ஷ்மி மாதிரியே..
பாராட்டுக்கள். நன்றி..
ஆஹா மிக்க நன்றி!
நீக்குபுதன் கேள்வி - பொண்ணு மஹாஸஹ்மி மாதிரியே இருக்கான்னா என்ன அர்த்தம்? எங்கேயாவது பையனை, விஷ்ணு மாதிரி இருக்கான்னு சொல்றோமா?
நீக்குஅப்படி ஒன்றும் சொல்ல வேண்டுவதில்லை..
நீக்குஅந்தப் பெண் மஹாலக்ஷ்மி என்றால் மணவாளன் மஹாவிஷ்ணுவே தான்!...
மாப்பிள்ளையை மஹா விஷ்ணுவாகப் பாவிப்பதே எங்க குடும்பங்களில் வழக்கம். அதான் மாமனார் மாப்பிள்ளைக்குப் பாத பூஜை கூடச் செய்வாரே!
நீக்குதங்கள் அன்பின் வருகையும் மேலதிக விவரமும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியக்கா..
நலம் வாழ்க..
/// அவனைத் தொடர்ந்து ஏறிய தம்பதியர் எதிர்ப்புறமாக அமர்ந்து கொண்டனர்..
பதிலளிநீக்குஅவரது நெற்றித் திருமண் எதையோ சொல்லாமல் சொல்லிற்று.. ///
கதையில் இந்த வரிகளை எழுதும்போது நெல்லைத் தமிழன் அவர்களைத் தான் நினைத்துக் கொண்டேன்..
துரை செல்வராஜு சார்... நான் கம்யூட்டர் கற்றுக்கொண்டு படித்த இன்ஸ்ட்டிடியூட்டில் ட்ரெயினியாக தி நகரில் வேலை பார்த்த காலம். என்னுடன் வேலைபார்த்த என் ஒரே நண்பனும் நானும் ஹென்ஸ்மன் (இப்போ கண்ணதாசன்) சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, நம்ம வாழ்க்கை எப்படி இருக்குமோ, நல்ல வேலை கிடைத்து முன்னேறுவோமா என்றெல்லாம் பேசிக்கொண்டுவந்தேன், கொஞ்சம் சப்தமா பேசினேனா என் நினைவில்லை. எங்களுக்குக் கொஞ்சம் பின்னால் வந்துகொண்டிருந்த பெரியவர் வேகமாக என்னிடம் வந்து, வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும், முன்னேறுவீங்க, கவலையே வேண்டாம்னு சொன்னார், அந்த நல்வார்த்தை எனக்கு கடவுளே சொன்ன மாதிரி தோன்றியது.
நீக்குகதையில் இந்த வரியைப் படித்தபோது அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது
89ல் நடந்தது இது
நீக்கு/கதையில் இந்த வரிகளை எழுதும்போது நெல்லைத் தமிழன் அவர்களைத் தான் நினைத்துக் கொண்டேன்../
நீக்குநானும் கதை படிக்கையில் உண்மையிலேயே அப்படியேதான் நினைத்தேன். சகோதரர் நெல்லைத் தமிழருக்கு நடந்த சம்பவமும் (அவர்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் குறித்து சாலையில் பேசி வந்ததை கூறுகிறேன்.) நெகிழ்வூட்டுகின்றன. இறைவன் மனித ரூபத்தில் வந்துதான் ஆறுதல் அளிப்பான். நானும் "அவனி" டமிருந்து இத்தகைய ஆறுதலை எதிர்பார்த்துக் கொண்டேயுள்ளேன். எப்படியும் வருவான் என்ற நம்பிக்கைத்தான் நம்மை வாழ வைத்துக் கொண்டுள்ளது. நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இது மாதியான மங்களகரமான வார்த்தைகளைக் கேட்டு மனத்தளர்வு நீங்கிய சந்தர்ப்பங்கள் என் வாழ்க்கையிலும் எத்தனையோ..
நீக்குதங்கள் அன்பின் மீள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
@ நெல்லை..
நீக்கு/// பெரியவர் வேகமாக என்னிடம் வந்து, வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும், முன்னேறுவீங்க, கவலையே வேண்டாம்னு சொன்னார்,///
தெய்வ வாக்கு..
நெல்லை அவர்களின் அன்பு மீள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
சுபமாகட்டும் மங்களம் சுபமங்களம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
நலம் வாழ்க..
திரு நெல்லைத் தமிழன் அவர்களது கருத்தும் திருமதி கமலா ஹரிஹரன் அவர்களது கருத்தும் மனதை நெகிழ்வித்தன..
பதிலளிநீக்குஇது மாதியான மங்களகரமான வார்த்தைகளைக் கேட்டு மனத்தளர்வு நீங்கிய சந்தர்ப்பங்கள் என் வாழ்க்கையிலும் எத்தனையோ..
இத்தகைய பாராட்டுகளே எனக்கு உற்சாகம் அளிக்கின்றன..
இதுவே கதையின் வெற்றி..
ஸ்ரீ ரங்கநாதாய மங்களம்..
தெய்வம் மனுஷ்ய ரூபேண.. - என்பது பெரியோர் வாக்கு..
பதிலளிநீக்குகதை இத்துடன் முடிந்து விட்டதா? அல்லது இது ஆரம்பமா? படித்தவரை நிறைவாக உள்ளது. பெண்ணும் அழகாய் இருக்காளே! அதே போல் ரயில் பயணத்தில் பிள்ளையையும் சேர்த்திருக்கலாமோ?
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியக்கா..
நலம் வாழ்க..
காமாட்சியம்மாளுக்கு மடியில் பேத்தி துள்ளுவதைப் போல் இருந்தது..//
பதிலளிநீக்குஇந்தக் கல்பனாசக்தியை மட்டும் கடவுள் மனிதனுக்குக் கொடுக்காதுபோயிருந்தால்.. அவன் கதி என்னவாகியிருக்குமோ என நினைக்கையில்.. கற்பனை ஓட ஆரம்பிக்கிறது!
அது தான்..
நீக்குஅதுவே தான்..
இறைவனுக்கு நன்றி..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஏகாந்தன்..
நலம் வாழ்க..
நெட் முடிந்து விட்டது..
பதிலளிநீக்குநாளை சந்திக்கலாம்..
அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குவந்தாள் மகாலக்ஷ்மியே! எல்லோர் வீட்டிலும் அவள் ஆட்சியே! நல்லதொரு கதைக்கு நன்றி துரை அண்ணா!
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ..
நலம் வாழ்க..
அருமையான கதை திரை அண்ணா!
பதிலளிநீக்குவந்தாள் மகாலக்ஷ்மியே ! நம் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே!
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நீக்குநலம் வாழ்க..
கிராமத்தை விட்டு நீங்காத பெண் குடும்பத்துக்கு ஏற்ற பெண் கொடுத்துவைத்த மாமனார் மாமியார் மகிழ்ச்சிக்கு குறைவு இல்லை. பத்துநாள் லீவில் மகிழ்ச்சியுடன் வரும் மாப்பிள்ளை எனகதை நன்றாக நகர்ந்து செல்கிறது..
பதிலளிநீக்குபடம் அருமை.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ..
நலம் வாழ்க..
அருமையான கதை துரை அண்ணா!
பதிலளிநீக்குவந்தாள் மகாலக்ஷ்மியே!
நம் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே!
மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..