செவ்வாய், 20 ஜூன், 2023

சிறுகதை - கற்பக காமாக்ஷி - துரை செல்வராஜூ

 கற்பக காமாக்ஷி.

*** *** *** **** ***

" நடை திறந்ததும் கற்பகாம்பாள் தரிசனம் செய்துட்டு புறப்படறோம்.. "

அபயாம்பிகா டிராவல்ஸின் அட்டெண்டர் வைத்திநாதன் விவரிக்க ஆரம்பித்தான்..

அந்தப் பக்க மேஜையில் கணினியுடன் ஒரு இளம் பெண்.. வேலையா விளையாட்டா.. தெரிய வில்லை..

" ஷார்ப்பா ஆறு மணி நேரத்துல பெரம்பலூர் அரியலூர் வழியா திருவையாறு போயிடலாம்...  நைட் கல்யாண சத்திரத்தில தங்கி.. "

அம்பி எனப்படும் வைத்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மாமியின் இடைமறிப்பு..

" ஏன்.. லாட்ஜ் ஏதும் கிடைக்கலையா?.. "

" இது பட்ஜெட் டூர்.. சர்வீஸ் காசு கம்மி.. கல்யாண சத்திரந்தான்.. சத்திரமே தான்..  மாமி இப்பவே நன்னா கேட்டுக்கோங்க..  அங்க வந்து ப்ரச்னை பண்ணக் கூடாது!.. "

" இல்லேடா அம்பி.. நீ மேல சொல்லு!.. "

" சத்ரத்தில நன்னா தூங்கிட்டு காலைல ஸ்நானம் முடிஞ்சதும்.. "

" எங்கே காவேரிலயா!.. "

" மாமி..  நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க.. காவேரி காஞ்சு போய் ரெண்டு மாசம் ஆகறது.. "

 " அப்போ புரோக்ஷணம்  கூட செஞ்சுக்க முடியாதா?.. "

" ம்.. ஹூம்.. "

" எல்லாம் கலியாயிடுத்து.. மேல சொல்லு... "

" கறந்த பால் காஃபியோட காலை டிபன்.. நேரா ஐயாறப்பர் கோயில்.. அங்கே ஆயிரக் கணக்குல ஜனங்க கூடியிருப்பாங்க.. ஸ்வாமி பல்லாக்கு நந்தி பல்லாக்கு ரெண்டும்  புஷ்ய மண்டபத்துக்குப் புறப்பட்டு போனதுக்கப்புறம் தான் கோயிலுக்குள்ள போய் ஸ்வாமி தரிசனம் செய்ய. முடியும்.. "

" நீங்க தானே அழச்சிண்டுப் போவேள்?.. "

" மூலஸ்தானத்தில் சேவிக்கறது எல்லாம் அவ்வளவு ஈஸி இல்லை.. உச்சிக் காலம் ஆயிடும்.. நாம திருப்பழனம் வேற போயாகணும்.. அவா அவாளும் சாமார்த்தியம் பண்ணி ஸ்வாமி பார்த்துட்டு ராஜ கோபுரத்தாண்ட வந்துடணும்!.. இங்கே புறப்படறச்சே ஒரு பேட்ஜ் கொடுத்துடுவோம்.. அத கழுத்துல மாட்டிக்கிடணும்.. அதுல எல்லா டீடெய்ல்ஸூம் இருக்கு.. மிஸ்ஸிங் பார்ட்டி
டிராவல்ஸ் நம்பருக்கு மெசேஜ் பண்ணா நாங்க வந்து அழச்சுக்குவோம்.. அதுக்காக நந்தியாண்ட வந்து நின்னுக்கிட்டு வழி தெரியலைன்னு புலம்பக் கூடாது.. வடக்கு எது தெக்கு எதுன்னு கேக்கப்படாது!.. "

" நெஜத்துல டாம்பீகமா வர்றா. வடக்கு எது.. தெக்கு எதுன்னு கேட்டா சொல்லத் தெரியலை!.."

"நேக்கு நெஜமாலுமே திருவையாத்து கோயில்ல வடக்கு தெக்கு தெரியாதுடா அம்பி!.. "

" அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்ல.. கூட மாமா வருவார் தானே... அவரோட கைய மட்டும் விடாம புடிச்சுக்கோங்க.. எல்லாம் சரியாய்டும்!.. "

"  சரி.. பகவான் பார்த்துப்பார்.. திருப்பழனம் போறதுன்னாயே.. மேல சொல்லு!.. "

" கோபி அண்ணாவோட தம்பி அங்கே டிராவல்ஸ் நடத்றார்.. திருவையாறுல இருந்து திருப்பழனத்துக்கு  ஏசி வேன் ஏற்பாடு ஆகியிருக்கு.. அது  தான் அங்கே சரியா வரும்... "

" அதுக்கெல்லாம் எக்ஸ்ட்ரா சார்ஜ் பண்ணுவாளே!.. "

" அப்படியெல்லாம் இல்லை.. அதுக்கான சார்ஜ் இந்தப் பேக்கேஜ்லயே வந்துடுது.. கவலப்படாதேள்!.. " - வைத்தி சிரித்தான்..

" சரி.. அதுக்கு அப்புறம் எந்த ஊர்?.. "

" திருப்பழனம் பார்த்துட்டு திரும்பி திருவையாறு வந்து கண்டியூர் வழியா திருச் சோற்றுத்துறை.. திருவேதிக்குடி.. "

" ஏன் அப்படி?.. "

" அதுதான் வழி.. குறுக்கால ரெண்டு ஆறு.. காவேரி, இன்னொன்னு குடமுருட்டி..  ரெண்டுக்குமே பாலம் இல்ல..  ஆத்துல இறங்கி நடக்கணும்.. இல்லேன்னா ஊர சுத்திண்டு தான் வரணும்.. ரூரல் ரோடு.. புஷ் பேக் எல்லாம் ஊருக்கு உள்ளே போக முடியாது.. "

" அது சரி.. நாழியாயிடுத்து ன்னு கோயில் நடை அடைச்சுட மாட்டாளா... "

" பல்லாக்கு வந்துட்டுப் போறது வரைக்கும் அந்தந்தக் கோயிலும் தெறந்தே தான் இருக்கும்..இப்படியே மத்த மூணு கோயிலும் சேவிச்சுட்டு.. "

இன்னும் ஏதேதோ கேள்விகள் மாமியிடம் இருந்து வந்தன..  எல்லாவற்றுக்கும் தெளிவான பதில்கள் இருந்தன வைத்தியிடம் ..

" ஏண்டா அம்பி.. இவ்ளோ தூரம் கூட்டிண்டு போறாய்..  ரெண்டு ராப்பொழுது தங்கணும் ன்றாய்!..  சாப்பாடு  வசதி எல்லாம் எப்டி?.. அங்கே ஏதோ அன்ன தானம் போடுவாள்ன்னு சொல்றாளே!..  அதுல கொண்டு போய் ஒக்கார்த்தி வெச்சுட மாட்டியே!.. "

மினுமினுக்கிய கண்ணாடியை சுட்டு விரலால் ஏற்றி விட்டுக் கொண்ட மாமியிடம் இருந்து மறுபடியும் கேள்வி..

அம்பியாகிய வைத்தி ஏறிட்டு நோக்கினான்..

மாமியின் கூர்மையான விழிகள் இவன் என்ன சொல்லப் போகின்றான் என்ற ஆவலுடன் இருந்தன..

" அந்த அன்னதானம் எல்லாம் சாப்பிடறதுக்குக் கொடுத்து வெச்சிருக்கணும் மாமி.. பார்வதி யார்.. பரமேஸ்வரன் யார்ன்னு யாருக்கும் தெரியாது.. முப்பத்து முக்கோடி தேவர்களும் எண்ணாயிரம் ரிஷிமார்களும் ஏதாவது ஒரு ரூபத்துல வந்து தரிசனம் பண்றதா ஐதீகம்!.. நீங்க என்னடான்னா... "

 " இல்லேடா அம்பி.. மாமாவுக்கு ஃபுட் பாய்சன் ஆனதில இருந்து எங்கேயும் கை நனைக்கிறது இல்லே!.. அதுக்காகத்தான் கேட்டேன்.. "

" தர்மசம்வர்த்தனி எதுக்கு இருக்கறா?.. தைரியமா வாங்கோ.. அவ பார்த்துப்பா!..  "

" நன்னா பேசறே!... "

" தேங்க் யூ மாமி.. ஸீட் புக் பண்ணிடலாமா?.. "

" சித்த நாழி பொறு.. இன்னொரு ரிக்வெஸ்ட்..."

" சொல்லுங்கோ.. "

" இவ்ளோ தூரம் திருவையாறு வரைக்கும் போறமே.. அங்கேருந்து அரை மணி நேரம் தஞ்சாவூர்.. "

" தஞ்சாவூர் ல யாரப் பார்க்கணும்?.. "

" என்னடா இப்படிக் கேட்டுட்டே... அங்க தான காமாக்ஷி இருக்கா!.. "

" யார்.. உங்க சித்தி பொண்ணா?.. " வைத்தியின் வார்த்தைகளில் குறும்பு..

" லோக மாதா.. ஷாட்சாத் காஞ்சி காமாக்ஷி அம்பா!.. அவளத் தெரிஞ்சுக்காம என்ன டூர் நடத்தறே நீ?.. "

" ஓ!.. அந்த கோயிலுக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணச் சொல்றேளா!.. "

" ஆமா!.. "

" நேக்குத் தெரியாது.. அதெல்லாம் ஆர்கனைசர் கிட்ட பேசிக்கோங்க.. " 
கையை விரித்தான் வைத்தி..

" எங்கே அவர்!.. "

" அவர் திருப்பதி போயிருக்கார்.. ரெண்டு நாளாகும் வர்றதுக்கு.. "

" ஏப்ரல் ஆறாந்தேதி திருவையாறு திருவிழா.. அஞ்சாந்தேதி இங்கேயிருந்து புறப்படறோம்.. பிப்ரவரிலேருந்து புக்கிங் நடந்துண்டு இருக்கு..  இப்போ போய் தஞ்சாவூர்க்கும்  போறோம்.. இன்னுங் கொஞ்சம் அமௌண்ட் ஜாஸ்தியாகும் ன்னு சொல்ல முடியுமா?.. இல்லே உங்களுக்குத் தான் சிங்கிள் சார்ஜ் பண்ணிட்டு திருவையாத்துல இறக்கி விட்டுட்டு வர முடியுமா?.. அதெல்லாம் சரியா வராது மாமி.. "

" சரி.. நான் எங்க குரூப் மெம்பர்ஸ் கிட்ட சொல்லிடறேன்.. " மாமியின் கண்கள் கைத்தொலை பேசியின் அட்டவணையில் பதிந்தன..

" இவ்ளோ நாள் டூர் போட்ருக்கோம்.. இந்த மாதிரியான.. "

வைத்தி சொல்லிக் கொண்டிருந்த போது தொலைபேசி கிணுகிணுத்தது..

" ஒரு நிமிஷம்.. ஆர்கனைசர்  பேசறார்.. ' - என்ற வைத்தி - " ம்ம்.. ம்ம்.. அப்படியா!.. ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா..  ஆகா.. அப்படியா!.. ம்ம்.. ம்ம்.. உங்க குல தெய்வம் எங்கே இருக்கு?.. தஞ்சாவூர்லயா!..  சரி.. சரி.. வாங்க... வந்து பேசிக்கலாம்.. சரிங்க ண்ணா!.. " -  முகம் மலர்ந்த புன்னகையுடன் எழுந்து நின்று மாமியை நமஸ்கரித்தான்..

" க்ஷேமமா இருடா அம்பி.. எதுக்கு இந்த நமஸ்காரம்!.. " - மாமிக்கு வியப்பு..

" உங்கள அழச்சுட்டு வரச் சொல்லி அந்த அம்பாளே சொல்லிட்டா.. திருவையாறு பேக்கேஜ்ல வர்ற எல்லாருக்கும் தஞ்சாவூர் டிரிப்  போனஸ்!.. ஆர்கனைசரையே சொல்ல வச்சிட்டா!.. " 

" ஏன்.. என்ன ஆச்சு?.. ஆர்கனைசர் என்ன சொன்னார்!?... " - மாமியிடம் பரபரப்பு..

" பெஸ்ட் டிராவல் சர்வீஸ்... அப்டின்னு எங்களுக்கு சர்ட்டிபிகேட்.. அத்தோட ஒரு லட்ச ரூபாய் கேஷ் அவார்டும் கிடைச்சிருக்கு.. அதைத்தான் ஆர்கனைசர் திருப்பதியில இருந்து சொன்னார்.. "

" அப்படியா!.. ரொம்ப சந்தோஷம்.. " - மாமியிடமும் மகிழ்ச்சி..

 " அத்தோட திருப்பதி ல இருந்து திரும்பி வந்ததும் இந்த திருவையாறு பேக்கேஜ் கெஸ்ட்களோட தஞ்சாவூர்  குலதெய்வம் கோயிலுக்குப் போய்ட்டு வரப் போறதாகவும் சொன்னார்!.. "

" காமாக்ஷி!.. " - மாமியின் கண்கள் கலங்கின..

" தஞ்சாவூர்ல அவங்க குல தெய்வம் மாரியம்மன் கோயிலுக்குப் போறார்... நீங்க கூட கேட்டீங்களே.. தஞ்சாவூர் போகணும்ன்னு..  சிக்ஸர் அடிச்சுட்டேள்.. சக்சஸ் ஆயிடுத்து மாமி.. நல்ல மனசு தெய்வாம்சம்.. அதான் உங்கள நமஸ்காரம் பண்ணினேன்.. "

" காமாக்ஷிய பார்க்கனும்ன்னு தான் ஆசைப்பட்டேன்.. வர்றது வர்றே..  இங்கேயும் வந்து பார்.. ன்னு  மாரியம்மன் கூப்பிட்டுட்டா!.. "  மாமியின் குரலில் நெகிழ்ச்சி..

" பிரஹந்நாயகிய விட்டுட்டீங்களே.. மாமி!.. "

" பிரஹந்நாயகி வராஹி..  இவங்கள எல்லாம் மறக்க முடியுமாடா அம்பி.. "

கண்ணாடியைக் கழற்றி விட்டு கண்களைத் துடைத்துக் கொண்ட மாமியின் குரல் தொலைபேசியில் தீர்க்கமாக இருந்தது.. 

" ஆமாம்.. அவர் நமக்கு போனஸ்ன்னு சொல்லிட்டாலும்.. தஞ்சாவூர் போய்ட்டு வர்ற அமௌண்டை நாம  அப்படியே அன்னதான நிதிக்கு கொடுத்துடுவோம்!..  அதுதான் நியாயம்!.. "

வைத்தி உற்சாகமானான்..

" மாமி.. உங்க பேர் சொல்லுங்கோ.. சீட் ரிசர்வ் பண்ணிடறேன்.. "

மாமி சொன்னாள்..

" கற்பகாம்பாள் சந்திரசேகர்!.. "

***

38 கருத்துகள்:

  1. சிறுகதை மனதைக் கவர்ந்தது.

    உரையாடல்கள் இயல்பு.

    தெய்வம் கூப்பிட்டு தரிசனம் அளிக்கும், அதற்கு நம்முடைய மிகச் சிறிய முயற்சி, ஆர்வம் இருந்தால் போதும். பாராட்டுகள் துரை செல்வராஜு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களுக்கு வணக்கம்..

      தங்கள் அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. கோவில் உலா நடத்துவதும் ஒரு சேவைதான். பணம் சம்பாதிக்கலாம் என்று அதிலேயே குறியாக இருந்தால் யாத்திரை சிறப்பாக நடத்த முடியாது. தரிசனங்களும் கிடைக்காது, பெயரும் கெட்டுப்போகும்.

    தர்மசம்வர்த்தனி...... இது புரியலை் ஏதேனும் புகழ்பெற்ற ஹோட்டலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தர்மசம்வர்த்தனி..

      திருவையாற்று அம்பாள்!..

      கோயில் சுற்றுலா போகின்றோம். இடைஞ்சல் இல்லாமல் அவள் பார்த்துக் கொள்வாள் என்பது கருத்து..

      தங்கள் அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
    2. நெல்லை நான் சொல்ல வந்தேன், அண்ணா சொல்லிட்டார்....

      துரை அண்ணா பதிவுகளில் திருவையாறு பற்றிய பதிவில் சொல்லியிருப்பாரே!!

      கீதா

      நீக்கு
    3. அன்பின் விளக்கத்திற்கு மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
    4. அந்தப் பெண் உணவைப் பற்றிக் கேட்டபோது, தர்மசம்வர்த்தனி என்று சொல்லியதால், ஒருவேளை ஹோட்டலோ என்று நினைத்தேன்.

      என் அம்மா ஒரு கீர்த்தனை பாடுவார் (எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் வரும்).
      தர்மசம் வர்த்தனி தனுஜ சம் வர்த்தனி
      தரா தரா மஹே மஹே ..... என்று ஆரம்பிக்கும்

      நீக்கு
  3. சுவாரஸ்யமான உரையாடல் சிறப்பாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவகோட்டையாருக்கு வணக்கம்..

      அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு..

      /// அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார்.. ///

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. தங்களுக்கு நல்வரவு..

      // அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். //

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. எனது கதையினைப் பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  7. துரை அண்ணா கதை நன்று. உரையாடல்களும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ கீதா அவர்களுக்கு நல்வரவு..

      அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. கௌ அண்ணா, துரை அண்ணா சொல்லியிருக்கும் மாமிக்கு ஒரு 70 வயது இருக்காதோ!!!!?

    மாமியை ரொம்ப யங்காக்கிட்டீங்களே!!! ஹாஹாஹாஹாஹா....35-40க்குள்ள இருக்காப்ல போட்டிருக்கீங்க....ஹையோ கற்பகாம்பாள் மாமிக்கு ஒரே குஷிதான்! உங்களை கன்னாபின்னானு புகழப் போறாங்க பாருங்க!!!!!! உங்க படத்த பார்த்த மாமிக்கு முட்டு வலி கூடப் போயிடுச்சாமே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேக்கப் போட்டுக் கொண்டதால் இளமையாகத் தெரிகிறார். ஹேமமாலினி போல.

      நீக்கு
    2. சந்தேகமும் சரிதான்..
      விளக்கமும் சரிதான்..

      நீக்கு
    3. எனது பின்னுரைகள் சில தலைமறைவாகி விட்டன..

      தேடிக் கண்டு பிடித்துத் தரவும்!..

      நீக்கு
  9. கற்பகம் மாமிக்கு ஐம்பத்தைந்து வயது தான்!..

    பதிலளிநீக்கு
  10. கருத்துகள் தலைமறைவு ஆகின்றன..

    வெளியே விரட்டி விடவும்..

    பதிலளிநீக்கு
  11. சிறப்பான கதை. எல்லாம் வல்ல இறைவி பக்தர்களுக்கு தானாகவே அருள் புரிவாள். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் அவர்களுக்கு நல்வரவு..

      அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
      நலம் வாழ்க..

      நீக்கு
  12. நல்ல கதை . மாமியின் பெயர் கற்பகாம்பாள் சந்திரசேகர் என முடித்திருப்பதும் நன்று.

    மாமி படத்தில் இளமையாக தெரிகிறார்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதவி அவர்களுக்கு நல்வரவு..

      அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி .. நலம் வாழ்க..

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. தெய்வ எண்ணமும், மனித சிந்தனையும் ஒத்துப் போகும் போது இந்த மாதிரி அதிசயங்கள் இயல்பாகவே அது பாட்டுக்கு நடந்து விடுகிறது. நம் கைகளில் ஒன்றுமில்லை. நல்ல கருத்துள்ள கதையை எளிதாக கையாண்டு, தெய்வீகமான பெயர்களுடன் சிறப்பாக தந்திருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும். .

    கதைகேற்ப ஓவியமும் நன்றாக உள்ளது. கதையின் சொல்படி கண்ணாடியுடன் அந்த மாமியை பார்க்கும் போது இவர்களை எங்கோ பார்த்திருக்கிறோமோ என்ற நினைவும் வருகிறது. (ஒருவேளை ஏதாவது தெய்வ சன்னிதானத்தில் இருக்குமோ?) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// கதையை எளிதாக கையாண்டு, தெய்வீகமான பெயர்களுடன் சிறப்பாக தந்திருப்பதற்கு...///

      தங்களுக்கு நல்வரவு..

      அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி .. நலம் வாழ்க..

      நீக்கு
    2. /// கண்ணாடியுடன் அந்த மாமியை பார்க்கும் போது இவர்களை எங்கோ பார்த்திருக்கிறோமோ என்ற நினைவும் வருகிறது.. ///

      இருந்தாலும் இருக்கும்.. எல்லாம் கௌதம் ஜி அவர்களின் கை வண்ணம்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
      நலம் வாழ்க..

      நீக்கு
  14. நாமே நேரில் போய்ப் பயணச் சீட்டு வாங்கும்போது பேசறாப்போல் உணர்வு. காமாட்சி எனில் இங்கே பங்காரு காமாட்சி தானே? அம்பிகையே மாமி கேட்டதும் மனம் இரங்கி வரச் சொல்லி இருக்கிறாளே! அவள் மனம் வைத்தாலொழிய இது நடக்காது. நல்ல்படியாகப் போய் வரட்டும். அதிலும் ஏழூர்த் திருவிழாவின் போது போறாங்க போல. கூட்டம் நெரியும். என்றாலும் அவள் அருளால் அனைத்தும் நன்றாக முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// காமாட்சி எனில் இங்கே பங்காரு காமாட்சி தானே.. ///

      ஆமாம்.. பங்காரு காமாட்சியே தான்..

      அக்கா அவர்களுக்கு நல்வரவு.. அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  15. என்னதான் மேக்கப் என்றாலும் மாமி இதில் 40 வயதுக்குள் தான் தெரிகிறார். முகமும் பார்த்த ஜாடையா இருக்கு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!