நெல்லைத்தமிழன் :
இது தனிப்பட்ட விஷயம் என்றாலும், வயது 45-50க்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்வது, அந்தக் குழந்தைக்கான தேவைகளைத் தரமுடியாது என்ற நிலைக்கு இட்டுச் செல்லுமல்லவா? (சில பலரின் வாழ்வில் இது நடந்தது, இப்போதும் நடக்கிறது).
# நடக்கிறது என்று சொன்ன பின் கேள்விக்கு இடம் இல்லாமல் போய் விடுகிறதே. எனினும் தகுந்த ஏற்பாடுகள் செய்து கொண்டால் பெரும்பாலும் பெரிய சங்கடம் இல்லாது வாழ்க்கையை இனிதே கடக்கவும் செய்யலாம். அதிர்ஷ்டம் ?
அப்பாதுரை:
பெற்றோர் சொத்தை பிள்ளைகள் உரிமையுடன் செலவழிப்பது சரியா?
# அது பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயான உறவின் தரத்தையும், பிள்ளைகள் செலவழிக்கும் விதத்தையும் பொறுத்தது. பொதுவாக அப்பாவின் பணத்தின் மேல் பிள்ளைகளுக்கு உரிமை உண்டு என்றாலும், எவ்வளவு, எதற்காக செலவிடப்பட்டது என்பதுதான் முதன்மையான அளவுகோலாக இருக்கும்.
கீதா சாம்பசிவம் :
முதியோர் இல்லம் வேறே! பென்ஷன் வாங்கும் ஆசாமிகள் தங்கும் ஹோம்கள் வேறே என்கின்றனர். இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
# ஆதரவற்ற வசதி இல்லாத ஏழை முதியவர்களுக்கு அடிப்படை உணவு உடை தங்குமிடம், அடிப்படை மருத்துவ வசதி செய்து கொடுப்பது முதியோர் இல்லம், விலைக்குத் தக்க படி சௌகரியமாக ( ஆடம்பரமாகக் கூட இருக்கலாம் ) வயது முதிர்ந்தவர்கள் வாழுமிடம் Home என்று சொல்கிறார்கள் போலும்.
ஜெயகுமார் சந்திரசேகரன்:
நீங்கள் முதல் முறையாக உபயோகித்த கம்ப்யூட்டர் எது. (PC, mini, mainframe) make, model, மற்றும் appilication or language எவை?
# முதலில் என்று கேட்டதால் பதில் எளிதாகி விட்டது.
Casio PB 700 pocket mini computer. மொழி Basic.
App எல்லாம் நானே தயாரித்த அரிச்சுவடி புரோகிராம்.
& அலுவலகத்தில் ஒரு டைப் ரைட்டர் போன்ற ஒரு வஸ்து - பெயர் மறந்துபோய்விட்டது - அதில்தான் முதலில் inch to mm - conversions program செய்து சில பிரிட்டிஷ் அளவு டிராயிங் எல்லாவற்றையும் மெட்ரிக் அளவு குறிப்பிடும் டிராயிங் ஆக மாற்றி வரைந்தேன்.
பிறகு ஒரு கம்ப்யூட்டரில் properties of circle - என்னும் fortran program எழுதி அதைப் பயன்படுத்தி வண்டியின் leaf ஸ்பிரிங் - span length & load deflection data கொடுத்தால், fitted length கண்டுபிடிக்கும் program உபயோகப்படுத்தினேன்.
கற்றுக்கொண்ட language Basic & " Fortran" ( A M I E - Computer Programming & Numerical Analysis - பாடத்திற்காக) Basic பயன்படுத்தி, கம்ப்யூட்டரை ஸ ரி க ம ப த நி ஸா இசைக்க வைக்கக் கற்றுக்கொண்டேன்.
அலுவலகத்தில் முதலில் நிறுவப்பட்ட கம்ப்யூட்டர் - main frame PDP 11/44 என்று ஞாபகம்.
முதலில் விலை கொடுத்து வாங்கிய டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் Brand HCL? Not sure.
தற்போது கம்ப்யூட்டர் துறையில் எந்த எந்த application, and programming language உங்களுக்கு தெரியும் ?
# எனக்கு அதிகம் தெரியாது. நிறைய பயன் படுத்துகிறேன். அவ்வளவுதான்.
& C Programming கொஞ்சம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அப்புறம் touch விட்டுப் போயிடுச்சு.
Intelligence என்பது புத்திசாலித்தனம் என்று வைத்தால் AI எனப்படும் artificial intelligence செயற்கை புத்திசாலித்தனம் ஆகுமா? புத்திசாலித்தனம் எப்படி செயற்கையாக உண்டாகும்?
# புத்திசாலித்தனம் என்பது படிப்படியான யோசனை அடுக்குகள் தான். ஒரு பணி அல்லது பிரச்சனையை உள்வாங்கி அதைத் தீர்வு செய்யும் எண்ண அடுக்குகளை தேடி எடுத்து நிறைவேற்றுவது புத்திசாலித்தனம் தானே. அதை இயந்திரம் செய்தால் man made= செயற்கை.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
இளம் வயதில் மிகவும் ரசித்த புத்தகம்/சினிமா இப்போது,"இதைப் போய் எப்படி ரசித்தோம்? என்று தோன்ற வைத்த & vice versa புத்தகம் அல்லது சினிமா எவை?
# சினிமா கிட்டத் தட்ட எல்லாமே தான்.
புத்தகம் அதற்கு நேர் எதிர். நிறைய யோசித்தும் ஒன்றிரண்டு கூட கிடைக்கவில்லை. கல்கியின் மலர் விழி மான் போன்ற குறு நாவல்கள் சில. அவை கூட அன்றும் ரசிக்கவில்லை . இன்றும் அதே அதே.
& இளம் வயதில் ரசித்த 'எல்லாமே' இப்போ ' ஹூம் இதையா அப்படி ரசித்தோம் என்று தோன்றுகிறது.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதாமே? ஏன் அப்படி?
# 'உ'னாவுக்கு 'உ'னா என்பதால்தான்.
= = = = = =
KGG பக்கம் :
கோவிந்து தந்த ஜாங்கிரியால் என்ன சங்கடம் வந்தது?
ஒரு வாரம் கழித்து, கோவிந்துவுக்கும் எனக்கும் ஒரு சிறு தகராறு வந்தது. அவன் என்னிடம் கேட்ட 'கலர் பலப்ப'த்தை நான் கொடுக்க முடியாது என்று சொன்னதுதான் காரணம்.
என்னிடம் இருந்தது ஒரே ஒரு கலர் பலப்பம். அது சிவப்பு, மஞ்சள், பச்சை - கொண்ட முப்பட்டை பலப்பம். அதை பயன்படுத்தி நான் சிலேட்டில் கொடி வரைந்து, வர்ணம் அடித்து அதற்குக் கீழே " நமது தெசிய கோடி (!) " என்று பெருமையாக எழுதி வைப்பேன். அந்தக் காலத்திலேயே எவ்வளவு தேச பக்தி பாருங்கள்!
பலப்பத்தை ஓடித்தால் வீட்டில் என் அண்ணன் kayjee என் காதைத் திருகி விடுவார். கீழே விழுந்து உடைந்தாலும் உடைந்த துண்டையும் ஒரிஜினல் பலப்பத்தையும் கொண்டு போய் அவரிடம் சமர்ப்பிக்கவேண்டும். அவர் அந்த துண்டுகளைப் பொருத்திப் பார்த்து அதற்கேற்ப நீதி வழங்குவார்.
'பலப்பத்தை கொடுக்கமாட்டேன்' என்று நான் சொன்னதும், அவன், " அன்னிக்கு நான் கொடுத்த ஜாங்கிரியை திருப்பிக் கொடு" என்றான்.
எனக்கு இது மிகவும் அதிசயமாக இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு நான் கபளீகரம் செய்த ஜாங்கிரி துண்டை எப்படி திருப்பி கொடுக்கமுடியும்! " முடியாது போடா"
" அப்போ கலர் பலப்பம் கொடு !"
ஒரு அரை inch நீள ஜாங்கிரித் துண்டை வைத்து என்னை எப்படி black mail செய்திருக்கிறான் பாருங்கள்!
'அப்போ சாப்பிட்ட ஜாங்கிரித் துண்டா அல்லது கலர் பலப்பமா ? ' என்ற பட்டிமன்ற விவாதத்தில் நடுவர் தீர்ப்பு எதுவும் வர வாய்ப்பு இல்லாத நிலையில் எனக்குக் கோபம் வந்தது. உடனே ' ஜவுளிக் கடை விலை அட்டை எடுத்து, கோவிந்துவிடம், ' இதில் உன் பெயரை எழுதி என் அப்பாவிடம் கொடுக்கப் போகிறேன். நாளைக்கு என் அப்பா வந்து ஹெட் மாஸ்டரைப் பார்த்து உனக்கு அடி கொடுக்கச் சொல்லுவார்" என்றேன்.
அவன் கலவரமடைந்து அந்த விலை அட்டையை என்னிடமிருந்து கைப்பற்ற முயற்சிக்க - அவனுடைய கையில் என் விரல் நகங்களால் நன்றாகக் கீறி விட்டேன். அவ்வளவுதான் - கோவிந்து உடனே செந்தில் பாலாஜி போல ஒரு கையால் கண்களை மூடிக்கொண்டு மற்றொரு கையை ' பிறந்த குழந்தை' போல விலுக் விலுக் என்று ஆட்டியபடி ஆக்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டான்.
எனக்கு பயம் வந்துவிட்டது. வகுப்புக்கு ஆசிரியர் வருவதற்குள் கோவிந்துவை சமாதானப்படுத்த வேண்டுமே.!
'சரி, வருவது வரட்டும்' என்று தீர்மானித்து என்னுடைய கலர் பலப்பத்தை அப்படியே கோவிந்துவிடம் கொடுத்துவிட்டேன். உடைந்தால்தானே அண்ணனிடம் உடைந்த பாகங்களை சமர்ப்பிக்கவேண்டும்? கலர் பலப்பம் முழுவதையுமே காணோம் என்று சொல்லிவிடலாம். தடயங்கள் எதுவும் கிடைக்காது என்று தீர்மானித்தேன்.
அப்புறம்?
கோவிந்து தன் கையில் இருந்த என் நகக் கீறல்களை வைத்து என்னை black mail செய்ய ஆரம்பித்தான்.
அது எப்படி?
(தொடரும்)
= = = = = =
அப்பாதுரை பக்கம் :
வஞ்சனை
நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்ததும் அன்றைய முதல் வழக்கு அறிவிக்கப்பட்டது. "ஜான் பர்வெல் எபிங்டன் ஐபிஎம் கம்பெனிக்கு எதிராகத் தொடுத்த வழக்கு எண் 11323162 விசாரணைக்கு ஏற்கப்படுகிறது".
ஜான் தனக்குத் தானே வக்கீலாக ஆஜராவதாக அறிவித்தார். வழக்கை விவரிக்கத் தொடங்கினார். "நீதிபதி அவர்களே. வேலை பார்க்கும் பொழுது உட்கார்ந்திருந்த என் நாற்காலி உடைந்து என் கையில் எலும்பு முறிந்து, என் வலது காலில் நாற்காலியின் கட்டையும் இரும்பும் துளைத்து இரண்டு வருடங்கள் நடக்கவியலாமல் கிடந்து, இப்பொழுதும் சரியாக நடக்க முடியாதபடி ஊனமானேன். முன் போல் வேலை செய்ய முடியாமல் போனேன். இதைக் காரணம் காட்டி பதினைந்து வருடங்களாக ஐபிஎம் கம்பெனி எனக்கு சம்பள உயர்வே வழங்கவில்லை. இதே பதினைந்து வருடங்களில் மற்ற ஊழியர்களுக்கு வருடாவருடம் மூன்றிலிருந்து பதினைந்து சதவிகிதம் வரை சம்பள உயர்வு கொடுத்த ஐபிம் எனக்கு மட்டும் எதுவும் தரவுல்லை. இந்த பாரபட்ச ஓரவஞ்சனை செயலை விசாரித்து பதினைந்து ஆண்டுகளுக்கான உயர்வும் கூடுதல் அபராதமும் விதித்து நீதி வழங்கக் கோருகிறேன்".
ஐபிஎம் வக்கீல் ராஜர் ஸ்காட் எழுந்து நீதிமன்றத்துக்கு ஒரு ஸல்யூட் வைத்தார். "நீதிபதி அவர்களே, ஜான் எபிங்டன் ஊனமுற்றது கம்பெனி பணியில் இருந்த நேரத்தில் நிகழ்ந்த ஒரு விபத்து. இதற்காக அவருடைய மருத்துவ செலவுகள் அத்தனையும் ஏற்று, வேலையிலிருந்த போது கொடுத்த சம்பளத்தில் 75% தொகையை மானியமாகவும் சென்ற பதினைந்து வருடங்களாக அவருக்கு ஐபிஎம் கொடுத்து வருகிறது. ஜான் வீட்டில் இருந்தபடி முடிந்தபோது வேலை பார்க்கலாம், அலுவலகம் வர வேண்டாம் என்றும் கம்பெனி சலுகை கொடுத்திருக்கிறது. அவருடைய அறுபது வயது வரை இந்த மானியமும் சலுகைகளும் தொடரும். இதில் எந்த பாரபட்சமும் இல்லை. வஞ்சனையும் இல்லை. வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோருகிறேன்" என்றார்.
நீதிபதி ஜானையும் வக்கீலையும் பார்த்தார். பிறகு கொஞ்ச நேரம் நீதிபதிக்குரிய பாரம்பரியத்தோடு மோட்டுவளையைப் பார்த்தார். பிறகு அன்றைய மதிய சாப்பாட்டு மெனுவில் சிக்கன் சாலட் நன்றாக இருக்க வேண்டுமே என்று தோன்றிய கவலையை மறந்து ஜானை மறுபடி பார்த்தார். "ஜான், சென்ற 15 வருடங்களில் எத்தனை முறை அலுவலகம் சென்றிருக்கிறீர்கள்?" என்றார்.
"10 முறை யுவர் ஆனர்"
"ஏன் போனீர்கள்? கம்பெனி உங்களை வீட்டில் இருக்கலாம், முடிந்தால் வேலை பார்க்கலாம் என்ற சலுகை கொடுத்திருக்கிறதே?"
"அலுவலக வருடாந்திர விழா மற்றும் என் நண்பர்களைச் சந்திக்கவும் யுவர் ஆனர்.. வீட்டிலேயே இருந்தால் என் அலுவலகம் பற்றி நான் மறந்துவிடக்கூடாதே யுவர் ஆனர்"
"சரியே" என்று தலையசைத்த நீதிபதி கேட்டார். "இந்த விழாக்களுக்கு அழைப்பு உங்களுக்கு வந்ததா? நீங்களாகவே போனீர்களா?".
"வருடாவருடம் அழைப்பு வந்தது யுவர் ஆனர்".
"நன்றி ஜான்" என்ற நீதிபதி ராஜரைப் பார்த்தார். "மிஸ்டர் ஸ்காட். உங்களுக்கு ஐபிஎம்மில் வருடா வருடம் சம்பள உயர்வு கிடைக்கிறதா?"
"ஆம் யுவர் ஆனர்.. ஆனால் நான் தினம்.."
"ம்.. அலுவலகம் வந்து சம்பளம் வாங்கும் அனைவருக்கும் ஐபிஎம் சம்பள உயர்வு கொடுத்திருக்கிறதா?"
"பெரும்பாலானோருக்கு சம்பள உயர்வு வருடா வருடம் கிடைத்திருக்கிறது யுவர் ஆனர். ஆனால்.."
"சம்பள உயர்வு கிடைத்த அத்தனை பேரும் முழு நேரம் கம்பெனி வேலையிலேயே இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா?"
"அவர்கள் அலுவலகம் வந்து போன நேரத்தை பதிவு செய்கிறோம்"
"ஆகா! சரி, உங்களுக்கு வருடாவருடம் கம்பெனி விழாவுக்கான அழைப்பு வருகிறதா?"
"ஆம் யுவர் ஆனர்.. ஆனால் நான்.."
"மிஸ்டர் ஸ்காட். உங்களுக்கும் நீங்கள் சொன்ன பெருபாலோருக்கும் இங்கு நிற்கும் ஜானுக்கும் அலுவலக பழக்க வகையில் எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லையே? நீங்களும் சம்பள உயர்வு வாங்கும் பெரும்பாலோரும் கம்பெனி பாலிஸிபடி நடக்கிறீர்கள். ஜானும் அப்படித்தானே நடக்கிறார்? எனில் அவருக்கு வரவேண்டிய சம்பள உயர்வை மறுப்பது ஏன் பாரபட்சமாகாது? ஏன் வஞ்சனையாகாது?"
"யுவர் ஆனர்.." என்ற ராஜரை மறித்த நீதிபதி, "இது பாரபட்சம் என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. இனி இதற்கான தீர்வுளைப் பார்ப்போம்" என்றார்.
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்த ஜானைப் பார்த்தார் நீதிபதி. "மிஸ்டர் ஜான். உங்கள் கம்பெனி பாலிஸியின்படி நீங்கள் கோருவது சரியென்று தீர்ப்பளிக்கும் பட்சத்தில் நீதிக்கு ஒரு சிக்கல் வருகிறது. வழக்கு என்பது சட்டத்துக்குட்பட்ட ஒரு விளையாட்டு என்ற பார்வையிலே மட்டும் அந்த வழக்கின் வெற்றி தோல்வியைப் பார்த்தால் நீதியைத் தெளிவாகக் காண முடியாது. வழக்கின் வெற்றி தோல்வி என்பது வழக்கின் வாதி, பிரதிவாதிகளோடு நின்றுவிடும். நீதி அப்படியல்ல. வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நீதியின் பார்வையில் வாழ்க்கை முறைகளின் சரி தவறு என்ற சீர்தூக்கலில் ஒரு முன்னுதாரணமாகவும் அமைந்து விடுவதே அந்த சிக்கல்" என்று நிறுத்தினார். மோட்டுவளையைப் பார்த்தார். அன்று மாலை மனைவிக்கு அவசியம் ஷனல் வாசனைப் பொருள் வாங்க வேண்டும், மறந்துவிடக்கூடாது எனறு நினைவூட்டிக் கொண்டார். பிறகு ஜானை நேராகப் பார்த்தார்.
"மிஸ்டர் ஜான் பர்வெல் எபிங்டன். பதினைந்து வருடங்களாக நீங்கள் ஒரு வேலையும் செய்யாமல் 75% சம்பளம் வாங்கியபடி வீட்டில் இருந்திருக்கிறீர்கள். அதற்கு மேல் வருடாவருடம் கம்பெனி விழாவில் கலந்து கொண்டு என்ன நடக்கிறது என்பதை உளவறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விபத்து காரணமாகக் காலில் ஊனமுற்றாலும் இப்பொழுது உங்களால் எழுந்து நடமாட முடிகிறது. சென்ற பதினாலு வருடங்களாக கிடைக்காத உயர்வு திடீரென்று இந்த வருடம் ஏன் உங்களைப் பாதிக்கிறது என்று நினைத்துப் பார்க்கிறேன். சம்பளத்துக்கு வழியில்லாமல் எத்தனையோ உடல் மற்றும் மன ஊனமுற்ற பிறரையும் நினைத்துப் பார்க்கிறேன். உங்களுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் பிறருக்கு ஏன் அமையவில்லை என்ற பார்வை நீதிக்குக் கிடையாது. உங்களுக்குக் கிடைத்த 75% ஊதியமே அதிகம் அதை நிறுத்த வேண்டும் என்ற தீர்ப்பு சொல்லவும் இந்த மன்றத்துக்கோ எனக்கோ அதிகாரம் இல்லை. அது இந்த மன்றத்தின் கருத்து மட்டுமே. ஆனால் நீங்கள் கேட்கும் சம்பள உயர்வைத் தரவேண்டும் என்ற தீர்ப்பை வழங்கினால் உழைத்துப் பிழைக்கும் சமுதாயத்துக்கு மாறாக்கேட்டை விளைவிக்கும் என்ற ஆழமான நம்பிக்கையுடன் இந்த மன்றம் பின்வரும் தீர்ப்பை வழங்குகிறது. உங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையில் சம்பளப்படி உயர்வு வழங்க வேண்டியதில்லை என்றும், மாறாக, ஐபிஎம் இந்த வழக்கில் செலவழித்த தொகையும் இந்த மன்றம் செலவழித்த நேரத்துக்கான ஈட்டுத்தொகையும் அபராதமாக நீங்கள் செலுத்த வேண்டுமென்றும் இந்த மன்றம் தீர்ப்பளிக்கிறது. இனி மன்றம் மதிய உணவு இடைவேளைக்குக் கலையலாம்" என்று நீதிபதிகள் வழக்கப்படி மேஜையில் தட்டினார். எழுந்தார். சிக்கன் சாலட் நினைவோடு இறங்கித் தன் தனியறைக்குள் நுழைந்தார்.
செய்தி: IBM Employee On Sick Leave For 15 Years Sues Company For No Pay Rise.
வால்: நீதிபதியின் துணிச்சல் பாராட்டுக்குரியது. எனினும் இன்னும் எத்தனை நாள் நீதிபதியாக நீடிப்பார் என்று நினைக்கையில் கவலையாக இருக்கிறது.
= = = = = = =
IBM வேலை செய்யாமல் சலுகைகளை அனுபவித்து வந்த வேலையாளின் துணிச்சல் வியக்க வைக்கிறது. நல்லவனா எம்ப்ளாயர் இருப்பது குத்தமா?
பதிலளிநீக்குஅதானே!!
நீக்கு"அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல".
நீக்குஆமா... ஆமா!...
நீக்குஅலுவலரை 15 வருடங்களுக்கு வேலை வெட்டி இல்லாமல் மானிய பணம் கொடுத்துக் கொழுக்க வைத்த காரணத்துக்காக கம்பெனியை தண்டித்திருக்கலாம் நீதிபதி என்று நினைக்கிறேன்.
நீக்கு:)))
நீக்குபஹ்ரைன்ல, பெரிய டவர்களின் வெளிப்புற கண்ணாடிச் சுவர்களை, கயிறுதூக்கியில் இருந்து சுத்தம் செய்பவருக்கு, க்ளீனிங் கம்பெனி மாதம் 50 தினார் அலவன்சாக்க் கொடுக்கும் (மற்ற இடங்களைச் சுத்தம் செய்பவருக்கு இந்த ஸ்பெஷல் அலவன்ஸ் கிடையாது) அதுக்கு பெரும்பாலும் ஆந்திரா தொழிலாளிகள் விருப்பப்படுவாங்க. ஆக்சிடன்ட் ஆனாலோ உயிர் போனாலோ ஒத்தப் பைசா கிடைக்காது.
நீக்குஅடப்பாவமே!
நீக்குAI க்கும் Intelligence தேவையாச்சே!!! அதுக்குப் பிறகு அதாவது AI மூலம் வடிவமைக்கப்பட்டவற்றை இயக்கவோ பிரச்சனை வந்தால் சமாளிக்கவும் Intelligence தேவையாச்சே. இயற்கை நுண்ணறிவு என்பதைப் பயன்படுத்தித்தான் செயற்கை நுண்ணறிவு உருவாகிறது இல்லை என்றால் தனியாக AI என்ற ஒன்று வந்திருக்காது இல்லையா? மேலும் எல்லாமே AI என்றால் இயக்கம் செயற்கையாக - ரோபோவாக இருக்குமே அல்லாமல் சமயோஜித புத்தி இருக்குமா? நாம் பல இடங்களில் சமயோஜித புத்தியால் செயல்படுவது போல் உணர்வுகளுடன் செயல்படுவது போல் AI செயல்படாது என்பதே நான் அறிந்தது. எத்தனை சமயோஜித புத்தியை, உணர்வுகளை பல சூழல்களுக்கு AI யில் புகுத்த வேண்டும் இல்லையா அது சாத்தியாமா? என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குகீதா
சாத்தியம் இல்லை.
நீக்குஅதெல்லாம் எதுக்கு கீதா ரங்கன். நாம் பேசினால் மாத்திரம் பேசி, ஒரு கம்பேனியன்ஷிப் கொடுக்கிற AI beauty ஒண்ணு போதாதோ காலத்தை ஓட்ட? அதுக்கு வயதாகாது, வாங்கினபோதிருந்த அழகு அப்படியே இருக்கும் என்பது கூடுதல் போனஸ் இல்லையா கீதா ரங்கன்(க்கா)
நீக்கு:)))
நீக்குஇன்று புதன்.... புதன் ஆக எ பி யில் திகழ்கிறது. கேள்வி பதில் சுவாரசியம என்றால் இனிப்பு ஜாங்கிரியும், IBM கருணையும் ஜோர், .
பதிலளிநீக்குஅப்பாதுரை சார்.
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
காவிதான் போயினபின் (பி)யாரே யநுபவிப்பார்
பாவிகள் அந்தப் பணம். (22)
நம் நலம் பேண அவசியம் உள்ளதை மட்டும் சேர்த்துவைத்துக்கொண்டு மீதியை மக்களிடம் கொடுத்து விடலாம். செல்வம் என்பதே செல்வோம் என்பதின் மருஊ தானே.
உண்மை
நீக்குவெண்பா யாருடையது?
வெண்பா ஔவையாருடையது..
நீக்குஆகா! நன்றி.
நீக்குஔவையாருக்கு என்ன... சொல்லிட்டுப் போயிட்டார். அரச நண்பர்கள் தனக்குக் கஷ்டம் வந்தால் பார்த்துக்கொள்ளுவார்கள் என்ற தெம்பில்.
நீக்குஇல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்.இவங்களே இப்படீன்னா நம்ம பசங்களைச் சொல்லவே வேண்டாம்.
பாவிகள் அந்தப் பணம்.. அல்ல, பாவிகாள் அந்தப் பணம் !
நீக்கு(பி)யாரே.. அல்ல, யாரே..
ஔவையாருக்குப் பாவம், இந்தி தெரியாது!
Sorry, JC Sir. No offence meant!
வெண்பா காபி பேஸ்ட் செய்யப்பட்டது. அப்படி அமைந்து விட்டது. இனி திருத்த முடியாது. கௌ சார் செய்யலாம்.
நீக்குJayakumar
அவராலும் முடியாது!!
நீக்குஅதனாலென்ன, அவ்வைக்கு இந்திப் புலமை உண்டுனு வச்சுக்குவோம்.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
நோக்க நோக்க
நொடியில் நோக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.
நீக்குகோயிந்துவின் புராணம் அருமை..
பதிலளிநீக்குஎன்னா ஒரு வில்லத்தனம்!..
:)))
நீக்குநீதிபதி மோட்டு வளையை பார்த்துக் கொண்டே இருந்திருக்கலாம்..
பதிலளிநீக்கு:-)
நீக்கு:))
நீக்குயுகே வில் நடக்கும் அநியாயம் மிக அதிகம். மாதா மாதம் குழந்தைகளுக்கு அரசு பண உதவி செய்கிறது என்பதால் குழந்தைகளை மாத்திரம் பல்கிப் பெருக்கி அரசாங்கச் செலவில் ராஜவாழ்க்கை வாழுகின்றனர் பல குடியேறிகள். அரசால் ஒன்றும் செய்ய இயலாத நிலைமை
நீக்குகனடாவிலும் இது உண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன்.
நீக்குசுவாரஸ்யமான கேள்வி பதில்கள்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஸ்காண்டினேவியன் நாடுகளில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதால் மூன்று குழந்தை பெற்றுக் கொண்டால் மூன்றாவது குழந்தை பிறப்புக்கு பேறு கால விடுமுறை, அலவன்ஸ் எல்லாமே அதிகம்.
நீக்கு//இளம் வயதில் மிகவும் ரசித்த புத்தகம்/சினிமா ...
பதிலளிநீக்குசுஜாதாவின் கதைகள் பல இன்று 'இதையா படித்து ரசித்தோம்' ரகம்.
ஆம்.
நீக்குஎனக்கு அப்போதே அப்படித்தான் இருக்கும். சுஜாதவின் கதைகளை விட, கட்டுரைகள் பிடிக்கும்.
நீக்குhaha!
நீக்கு'உ'னாவுக்கு 'உ'னாவா? நியாயமானா? சொல்லுங்னா..
பதிலளிநீக்குஉறங்காது என்ற சொல் இங்கே ஓயாது, சாயாது, மரணம் அடையாது என்ற பொருளில் வருகிறது. நல்ல உள்ளங்களுக்கு மரணம் இல்லை (அதனால் பிறவி இல்லை, அல்லது சிரஞ்சீவி நிலை அடையும்) என்ற பொருளும் உண்டு. வல்லவன் (இறைவன்) வகுத்தது என்று தொடர்ந்து வருவதால் மரணம் இல்லை என்ற பொருள் சரிப்படும்.
விளக்கத்திற்கு நன்றி. அது தெரிந்தே நாங்க சும்மா சொன்ன பதில். ஏற்கனவே இந்தக் கேள்வியை கீ சா கேட்டு, அப்போ சரியான பதில் கூறியுள்ளோம்!
நீக்குyessu! இப்போவும் ஆழ்ந்த உறக்கம் என்பதே எனக்கு இல்லை. ஆகவே "உள்ளத்தில் நல்ல உள்ளம்" நு நினைச்சு சமாதானப்படுத்திக்கிறேன். :))))
நீக்குகீசா மேடம்... அன்றன்றைக்கு உள்ள என்னுடைய வேலைகளை முடித்துவிடுவதாலும் பெண்டிங் வைப்பதில்லை என்பதாலும், எது மிஞ்சினாலும் எப்படி இதை உபயோகிக்கலாம் என்று யோசிப்பதில்லை என்பதாலும் படுத்த உடன் எனக்குத் தூக்கம் வந்துவிடுகிறது. ஹா ஹா ஹா
நீக்குஆமா இல்ல? நான் அன்றன்று செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப் போடுகிறேன்னு எப்படியோ கண்டு பிடிச்சுட்டீங்களே! சவ்வாசு!
நீக்குநல்ல விளக்கத்திற்கு நன்றி அப்பாதுரை ஐயா
நீக்குஅப்பாதுரை ஐயா என்று எழுதியதை தவராக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அப்பாதுரை என்றால் மொட்டையாக இருக்கு. அப்பாதுரை சார் என்பதற்கு பதிலாக ஐயா விகுதி.
நீக்குஉடைந்தால்தானே அண்ணனிடம் உடைந்த பாகங்களை சமர்ப்பிக்கவேண்டும்?//
பதிலளிநீக்குஹாஹாஹாஹா அந்த அண்ணன் இங்கு ஆசிரியர்களில் இருக்கிறாரா!!!! அவரும் இதுக்கு (அந்த நாளைய விஷயங்கள் நினைவிருந்தால்) பதில் சொன்னால் சுவாரசியமா இருக்கும். இந்தத் தம்பி என்னென்ன குறும்பு செய்தார்னு இன்னொரு பக்கம் தெரியும்ல!!!!!
கீதா
இருக்கார். ஆனால் புன்னகை மட்டும் செய்துவிட்டு சும்மா இருந்துவிடுவார்!
நீக்குபானுக்காவின் கேள்வி - உறங்காது என்றால் உள்ளத்தில் "நல்ல உள்ளம் உறங்காது" அதிலேயே பதில் இருக்கிறதே! நல்ல உள்ளம் என்றும் ஜீவிக்கும். ஆழ்துயில் கிடையாது. "சிரஞ்சீவி பவ" என்று சொல்வதன் பொருள் இதுதான் என்பது என் தனிப்பட்டக்கருத்து. ஆயுசு அல்ல.
பதிலளிநீக்குகீதா
அதாவது நல்ல உள்ளத்தோடு வாழ்க...நீடுழி வாழ்க!! என்ற பொருள்.
நீக்குஆனா இப்பல்லாம் கெட்டதும் செஞ்சுட்டு நீடுழி வாழ்ந்துட்டுருக்காங்க!!!!!!!!
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநீடூழி வாழறதுதான் உங்க பிரச்சனையா கீதா ரங்கன்(க்கா). பிடிங்க வரம். 160 வயது வரை நீங்கள் நீடூழி வாழுங்க.
நீக்குஹாஹாஹாஹா நெல்லை....பிடிச்சிக்கிட்டேன் உங்கள் வரத்தை...அடுத்தடுத்த தலைமுறைகளில் என் பெயர் வாழ்வதுதானே அதன் அர்த்தம்!! அந்த அர்த்தமாக்கும் நான் சொன்னது....
நீக்கு//ஆனா இப்பல்லாம் கெட்டதும் செஞ்சுட்டு நீடுழி வாழ்ந்துட்டுருக்காங்க!!!!!!!!//
இது உங்களுக்குப் புரிஞ்சிருக்கணுமே!!!! இதன் உள் அர்த்தம்
கீதா
கருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குஅப்பாதுரை சொன்ன பதிலை அப்படியே நீங்களும் சொல்லியிருகிறீர்கள். இதைத்தான் க்ரேட் பீபிள் திங்க் அலைக் என்பார்களோ?
நீக்கு//பிடிங்க வரம். 160 வயது வரை நீங்கள் நீடூழி வாழுங்க.// சிறியவர்கள் பெரியவர்களை வாழ்த்த முடியுமா? கீதா உங்களுக்கு அக்காவாச்சே?
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் சிந்திக்க வைத்து அருமையாக உள்ளது.
அந்த சிறு வயதிலேயே நண்பன் கோவிந்துவின் அட்டகாசமான ஐடியாக்கள் திகைக்க வைக்கின்றன. அடுத்து கலர் பலப்பம் என்னாச்சோ என எங்களையும் கவலைப்பட வைத்து விட்டீர்கள். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குபதிவு - அற்புதம்!..
பதிலளிநீக்குகருத்துகள் - அதியற்புதம்!!..
கருத்துரை அதியதி அற்புதம்!!
நீக்குபதிவு - ரசம்..
பதிலளிநீக்குகருத்துகள் - அதிரசம்!..
கருத்துரை ஆப்பிள் ரசம்!
நீக்குஅப்பாதுரை சார் சொன்னது போன்ற ஒரு நிகழ்வு எங்களுடைய அலுவலகத்திலும் நடந்தது. ராக்கெட் எரிபொருள் அரைக்கும் யந்திரத்தில் இருந்து எரிபொருளை (இட்டிலி மாவு போல் இருக்கும்) எடுத்துக் கொண்டிருக்கும் போது வேறு ஒரு ஆள் மெசினை ஆன் செய்து விட்டார். வலது கையில் 4 விரல்கள் துண்டிக்கப்பட்டன.
பதிலளிநீக்குவிபத்திற்குப் பிறகும் அவர் வேலையில் தொடர்நது பணியாற்ற அனுமதி்க்கப் பட்டார். ஆனால் நிர்வாத்திற்கு இழப்பீடு எவ்வாறு தருவது என்பதில் குழப்பம். ஊழியர் நீதிமன்றத்தை நாடினார். அவர்கள் workmen compensation act பிரகாரம் இழப்பீடு வழங்க ஆணையிட்டனர். அவ்வாறே இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் அவர் தொடர்ந்து பணியாற்றவும் நிர்வாகம் சம்மதித்தது.
அவ்வாறு அவர் தொடர்ந்து பணியாற்றினார். ஆனால் வேலையில் சுணக்கம்.வேலைக்கு வருவார கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி வேலைகளை பார்ப்பார். மாதா மாதம் சம்பளம் வாங்குவார். ஒவ்வொரு வருடமும் கிடைக்க வேண்டிய இன்கிரிமெண்ட்டும் கிடைத்தது.
இவ்வாறு இருக்கும்போது சில வருடங்களில் அவருடன் பணியாற்றிய மற்றவர்கள் பதவி உயர்வு பெறுவது கண்டு மேலதிகாரியுடன் சண்டை போட்டு அறைந்து விட்டார். மேலதிகாரி பெருந்தன்மையுடன் ிட்டு விட்டார்.
(ஒரு சிறு குறிப்பு. அடித்தவரும் அடி வாங்கியவரும் ஐயர்.)
கடைசி காலம் வரை அவ்வாறு பணியாற்றி 60 வயதில் ஒய்வு பெற்றார். மிகப் பெரிய தண்டனை எதுவும் பெறவில்லை.
Jayakumar
:(((
நீக்குநீதிபதி ஏன் மோட்டுவளைய பார்த்தார்னு காரணம் புரியுது தீர்ப்பில்!!!!
பதிலளிநீக்குநல்ல தீர்ப்பு.
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்வி பதில்கள் நன்று. ஐ.பி.எம். குறித்த வழக்கு - ஸ்வாரஸ்யம்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎன்னோட மற்றக் கேள்விகளை சாய்சில் விட்டுட்டீங்க போல! போகட்டும். ஜாங்கிரி? /ஜிலேபியைத் தான் திரும்பக் கேட்டிருப்பார் உங்க நண்பர்னு நினைச்சேன். சரியாப் போயிடுத்து!
பதிலளிநீக்கு:)))
நீக்குமற்றக் கேள்விகள்? எங்கே கேட்டீர்கள்? என்ன கேட்டீர்கள்? மறுபடி கேளுங்கள்.
நீக்குஇந்த சிலேட்டுக்குச்சி விஷ்யத்தில் உங்களுக்கு அண்ணா எனில் எங்களுக்கெல்லாம் அப்பா! ஒரு குச்சியை 3 பாகமாக்கிக் கொடுப்பார். முதல்லே நானும் அண்ணாவும் தான். மூன்றாவது பாகம் அவரிடமே இருக்கும். பின்னாட்களில் நானும், தம்பியும் மட்டும் என்னும்போதும் 3 ஆவது பாகம் அவரிடமே இருக்கும். ஒரு எல்.ஜி. பெருங்காய டப்பா (அந்தக் காலத்து டப்பா) நிறையச் சேர்ந்து விட்டது குச்சிகள். :))))
பதிலளிநீக்குஆமாம்! குச்சி டப்பா நிறைய 1 செ மீ முதல் 5 செ மீ வரை வகை வகையான குச்சிகள் இருக்கும்.
நீக்குஅது சரி! இருந்த ஒரே குச்சியையும் கோவிந்துவுக்குக் கொடுத்துட்டு மத்தியான வகுப்பில் நீங்க எதை வைச்சு எழுதினீங்க? எனக்கு அதான் மண்டையை உடைக்கிறது.
பதிலளிநீக்குகலர் குச்சி டிராயிங் வரைய மட்டும். சாதா சிலேட்டு குச்சி அல்லது அச்சுப் பால் குச்சி மற்ற பாடங்களுக்கு.
நீக்குசெங்கல் குச்சினு ஒண்ணு உண்டே! பென்சில் சீவினாப்போல் நுனியில் சீவி இருப்பாங்க. எழுதினால் அச்சுப் பொரியும் எழுத்துகள்.
நீக்குஎங்க ஊர்ல அப்போ டெக்னாலஜி அவ்வளவு முன்னேறியிருக்கவில்லை.
நீக்குஇஃகி,இஃகி,இஃகி
நீக்குசின்ன வயசிலே ரசித்த திரைப்படம் எனில் ஸ்ரீராம பக்த ஹனுமான், மாயா பஜார். மாயா பஜார் படத்தை நினைச்சால் இப்போக் கூடப் பார்ப்பேன். அடுத்து லவகுசா!
பதிலளிநீக்குபக்தி பரவச ரசிகை போலிருக்கு!
நீக்குஒரு வகையில் அப்படித்தான். ஜிவாஜி நடிப்புன்னால் சிப்பு சிப்பாய் வந்தாலும் திருவிளையாடல் படத்தையும் முதல் மரியாதை படத்தையும் எத்தனை முறை ரசிச்சிருக்கேன் தெர்யுமோ? அதிலும் முதல் மரியாதையில் மட்டுமே ஜிவாஜி வாழ்ந்திருப்பார்.நடிக்கிறேன் பேர்வழினு உதடு துடிப்பு, புருவ நெளிப்பு, காதுமடல்கள் ஆடுதல்னு இல்லாமல் சாதாரண மனிதனா வந்துட்டுப் போவார். க்ளாசிக்/
நீக்குசிவாஜியை எப்பவுமே ரசிக்கலாம். ஐந்து நிமிடம்.
நீக்குமுதல் ஐந்து நிமிடமா இல்லை கடைசி (க்ளைமாக்ஸ்) ஐந்து நிமிடங்களா அப்பாதுரை சார்? (இந்தக் கருத்தை எழுதுமுன்பு லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, ஹிட்லர் உமாநாத் போன்ற படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?)
நீக்கு🤣🤣🤣🤣🤣
நீக்குரொம்ப முக்கியமா ஹிட்லர் உமாநாத் படம் நினைவூட்டியதற்கு எப்படி நன்றி சொல்வேன்?!
நீக்கு//மாயா பஜார்.// நீங்கள் சொல்வது சாவித்திரி நடித்த மாயாபஜார் என்று நினைக்கிறேன். ஊர்வசி நடித்து மாயாபஜார்1990 என்று ஒன்று வந்ததே? எனக்கு அதுவும் பிடிக்கும்.
நீக்குஊர்வசி மாயாபஜார் கேள்விப்பட்டது கூட இல்லை :-)
நீக்குநான் சொல்வது எஸ்.வி.ரங்காராவ், சாவித்திரி, என்.டி.ஆர் நடிச்ச மாயா பஜார் தான். ஊர்வசி நடிச்சதும் பார்த்திருக்கேன். அதிலே ராம்கினு ஒருத்தர் நடிச்சிருந்த நினைவு. பின்னாட்களில் ராதிகாவின் தங்கையைக் கல்யாணம் செய்து கொண்டதாகச் சொல்லுவார்கள்.
நீக்குபுத்தகம் எனில் ஒரு சில பாலகுமாரன் நாவல்கள். ஆரம்ப காலத்தில் ரசிச்சிருக்கேன். பின்னால் பிடிக்கலை. ஓர் அலுப்பு, எரிச்சல் வந்து விட்டது.
பதிலளிநீக்குகாலத்தை மீறி, நாம் இப்போது படித்தாலும் படிக்க ஆர்வமாக இருப்பது ஒரு சில நாவல்கள்தாம். அதனால்தான், ஒரு நாவலாசிரியர் சூப்பர் என்று எப்போதும் (எல்லா வயதிலும்) நினைக்க இயலாது.
நீக்குசிறுவயதில் பார்த்து பின்னால் சலித்த படங்கள் ஏராளம். அநேக ரஜினி படங்கள் இதில் அடங்கும். முள்ளும் மலரும் இப்போதும் பார்க்க முடிகிறது. பின்னாளில் பார்த்து அடடா முன்பே பார்க்காமல் போனோமே என்று வருந்திய படங்கள் சில உண்டு. ஷோலே (vcd வந்தபிறகு பார்த்தது), சங்கராபரணம், it happened one night இன்னும் சில. அப்போது இப்போது எப்போதும் (?) ரசிக்கும் படம் மாயா பஜார், அனுபவி ராஜா அனுபவி.
நீக்குசலிக்காமல் படிப்பதென்றால் மகாபாரதம். இதை இதில் சேர்ப்பது?
நீக்குpg wodehouse சூப்பர் என்று இப்போதும் நினைக்கிறேன்.
நீக்குதமிழில் இன்றைக்கும் படிக்க முடிகிற எழுத்து என்று உடனே யாரையும் என்னால் சொல்ல முடியாமல் போவது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. வருத்தமாகவும்.
ஆங்கிலத்தில் (preferably illustrated) பகவத்கீதை பரிந்துரை ஏதும் உண்டா? local நண்பர்கள் பலர் பகவத்கீதை படிக்கிறார்கள். பரிசளிக்கலாம் என்று நினைக்கிறேன். என்னிடம் கீதை பற்றிக் கேட்கிறார்கள் (நானே படித்ததில்லை எனக்குத் தெரியாது என்று ஏன் சொல்லத் தயங்குகிறேன் என்று எனக்கு தெரியவில்லை :-)
நீக்குதமிழில் புதுமைப்பித்தன் சமீபமாகப் படிக்கவில்லை என்றாலும் இப்போதும் படிக்க முடிகிற எழுத்து. (அப்பாடா!)
நீக்குஇலக்கியம் என்று போனால்... கம்ப ராமாயணம் என்றைக்கும் படிப்பேன் என்று நினைக்கிறேன். சில நேரம் திருவாசகம் படிக்கும் போது ஏன் அடிக்கடி படிப்பதில்லை என்று தோன்றும். சேக்குபியரும் என்றைக்கும் படிப்பேன்.
கருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குஅப்படி எல்லாம் இல்லை. தேவனின் எழுத்துகளும் கல்கியின் பொன்னியின் செல்வன், அமரதாரா போன்ற நாவல்களும் எத்தனை முறை படிச்சிருப்பேனோ! கணக்கே இல்லை.
நீக்குதேவன் இப்ப படிக்க முடியலே.
நீக்குகல்கி அப்பவே படிக்க முடியலே :-)
//தேவனின் எழுத்துகளும் கல்கியின் பொன்னியின் செல்வன், அமரதாரா போன்ற நாவல்களும் எத்தனை முறை படிச்சிருப்பேனோ! // - அதனால தப்பில்லை கீசா மேடம். வயசாவுது இல்ல. மறதி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் ஹி ஹி.
நீக்கு:)))
நீக்குபுதுமைப் பித்தனெல்லாம் என்ன மாதிரி எழுத்தாளர்! அவருடைய கதை ஒன்றை சனியன்று பகிர ஆசை.
நீக்குதி.ஜானகிராமனின் மோகமுள் இரண்டு மூன்று முறை படித்திருப்பேன். சாகும் பொழுது மோக முள் படித்துக் கொண்டே உயிர் விட வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. அம்மா வந்தாள் முதலில் படித்த பொழுது நடையில் நடையில் சொக்கிப் போனேன். ஜெயகாந்தன் அந்த நாவலுக்காக தி.ஜ.ரா.வை திட்டியது ஏனென்று புரியவில்லை. சமீபத்தில் பவா செல்லத்துரை அம்மா வந்தாள் கதையை சரியாக சொல்லவில்லை என்று தோன்றியதால் மீண்டும் படித்தேன். ஆஹா! என்ன நடை! மீண்டும் சொக்கினேன். மிக சமீபத்தில் ஒரு தோழி அம்மா வந்தாளை கடுமையாக சாடிய பொழுது மீண்டும் படித்தேன். இந்த முறை நாவல் பிடிக்காமல் போகவில்லை, ஆனால் அந்த அலங்காரத்தம்மாள் பாத்திரப் படைப்பின் மீது அருவெறுப்பு வந்து விட்டது.
அசோகமித்திரன், ஆர். சூடாமணி கதைகளெல்லாம் எப்போது வேண்டுமானலும் படிக்கலாம்.
நானும் மஹாபாரதம் மீண்டும் மீண்டும் படிப்பேன்.
கல்லூரி காலத்தில் மிகவும் ரசித்துப் பார்த்த நினைத்தாலே இனிக்கும் பட்த்தை இப்போது பார்த்தபொழுது இந்தப் படத்தை எப்படி ரசித்தோம் என்று தோன்றியது. ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி இவர்கள் நடித்திருந்த படங்களைப் பார்க்கும் பொழுது, 'நன்றாகத்தானே நடிக்கிறார்கள், இவர்களைப் போய் சாம்பார், அழுமூஞ்சி என்றெல்லாம் சொன்னோமே என்று தோன்றும்.
நீக்குசௌகார் ஜானகி என்றைக்குமே பிடிக்கும். top talent.
நீக்குசாம்பார் தான் பின்னாளில் ரசிக்கத் தொடங்கினேன். திறமையான நடிகர் என்றே நினைக்கிறேன். சமகால சிவாஜி எம்ஜிஆர் இருவரின் செல்வாக்கு, அழுத்தம் மற்றும் அரசியல் காரணமாக கொஞ்சம் நிழலாகவே இருந்துவிட்டார். ஜெமினி ஒருவரால் மட்டுமே இந்தப் படத்தை செய்திருக்க முடியும் என்று சொல்லும் அளவுக்கு ஒரு படமும் பண்ணவில்லை அவர் என்பது unfortunate.
சிறுவயதில் ஹிந்தி பிரசார சபா அருகே ஜெமினியைப் பார்த்துவிட்டு "டே சாம்பார்டா!" என்று நண்பன் கூவ, ஜெமினி கோபத்துடன் எங்களை துரத்திக் கொண்டு வந்துவிட்டார். அடிச்சு பிடிச்சு ஓடினோம்
நீக்குஎனக்கு தேவனின் எழுத்து அலுத்தெல்லாம் போனதில்லை. மனசு சரியில்லை எனில் கல்யாணி, மிஸ் ஜானகி, ஸ்ரீமான் சுதர்சனம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன் என எதையானும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவேன். இறுக்கம் தளர்ந்து விடும். அதே போல் பொன்னியின் செல்வனும்! சில இடங்கள் கிட்டத்தட்ட மனப்பாடம்.
நீக்குசுவாரசியமான ஐபிஎம் வழக்கு.
பதிலளிநீக்குஆம்.
நீக்குகேள்வி பதில்கள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குபல்பமும் ஜாங்கிரியும் சிறுவயதுகால வேடிக்கைகள் ரசனை.
நன்றி.
நீக்கு