பானுமதி வெங்கடேஸ்வரன் :
1. கோடையில் குளிர் பானங்கள் அருந்துவது, குளிர் காலத்தில் சூடான காபி, டீ - எதை விரும்புவீர்கள்?
# தற்போது சுமார் 15 ஆண்டுகளாக டீ மட்டும்தான். காஃபி பிடிக்கவில்லை. வெயிலில் அலைந்தால் இளநீர் நுங்கு . எப்போதாவது குளிர் பானம்.
$ காபி.
& எந்தக் காலத்திலும் காபி & டீ கிடையாது. எல்லா காலத்திலும் சூடு இல்லாத காலையில் ஜிஞ்சர் துளசி எலுமிச்சை டீ with தேன்.
2. கோடையில் ஜில்லென்ற தண்ணீரில் குளிப்பது, குளிர் காலத்தில் இதமான சுடு நீர் ஸ்நானம், எதை ரசிப்பீர்கள்?
# நான் புனிதத் தல யாத்திரை சென்றால் நிர்பந்தம் காரணமாக குளிர் நீர்க்குளியல் செய்ததுண்டு. மற்றபடி ஆண்டாண்டு காலமாக வெந்நீர்தான்.
$ எப்போதும் வெந்நீர்.
& சென்னையில் இருக்கும்போது கோடையில் மட்டும் குளிர் நீர். பெங்களூரில் எல்லா காலங்களிலும் வெந்நீர்.
நெல்லைத்தமிழன்:
எதனால் பாடப் புத்தகங்கள் மனப்பாடம் ஆவதில்லை ஆனால் சினிமா பாட்டுகள், வசனங்கள் சட்னு மனப்பாடம் ஆகிவிடுகிறது?
# ஈடுபாடு காரணமாகத்தான்.
& சினிமா பாட்டுகள் அடிக்கடி கேட்டு revision ஆவதால், மனப்பாடம் ஆகிறது.
பள்ளிக்கூட நாட்களில் படித்த மனப்பாட செய்யுள்கள் / பாடல்கள், இப்பொழுதும் நினைவில் உள்ளனவா?
$ 70%
# ஒரு சில முழுவதும் நினைவில் உள்ளன. மேலும் சில அரை குறையாக..
& 50 %
பிரபலங்களை பேட்டி எடுக்கும்போது, அவங்க துறையைப் பற்றி, அதில் அவங்க எப்படி வெற்றி பெற்றார்கள் என்றெல்லாம் கேட்பதை விட்டுவிட்டு, உங்களுக்குப் பிடித்த உணவு என்ன? ஐஸ்க்ரீமில் என்ன ஃப்ளேவர் பிடிக்கும்? உடையில் என்ன நிறத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்பதுபோல பொது அறிவுக் கேள்விகளை இந்தப் பேட்டியாளர்கள் ஏன் கேட்கறாங்க? அந்த பிரபலங்களைப்போல அவ்வளவு knowledge இல்லாததாலா?
# ஊடகப் பேட்டிகளுக்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கும் போல் தெரிகிறது. அதில் சப்ஜெக்ட் பற்றி இன்னது, பொது சுவரசியத்துக்கு இன்னது என்று முன்பே எழுதி எடுத்துக் கொண்டு வருவார்கள். Human interest aspect.
& ஜனாதிபதி பதவியிலிருந்து ரிடயர் ஆன பிறகு ஏ பி ஜெ அப்துல் கலாமை சன் டி வி க்காக (என்று நினைக்கிறேன்) பேட்டி கண்டார் நடிகர் விவேக். அப்போது அவரிடம், "சிறிய வயதில் யாரையாவது லவ் செய்தீர்களா? ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை?" என்று கேட்டார். நல்ல வேளை - அந்தக் கேள்விக்கு ஏ பி ஜெ பதில் எதுவும் சொல்லாமல் சிரித்து வைத்தார்.
பொண்ணு மஹாலட்சுமி மாதிரியே இருக்கான்னா என்ன அர்த்தம்? எங்கேயாவது பையனை, விஷ்ணு மாதிரி இருக்கான்னு சொல்றோமா?
# லட்சுமி களை என்பது கிளர்ச்சி ஊட்டாத , சாந்த ஸ்வரூபமான சௌந்தர்யம் என்பது வழி வழியாக வந்த வழக்கு.பையன் ராஜா மாதிரி என்று சொல்வது வழக்கம். ராஜா விஷ்ணு அம்சம் என்கிறது சாஸ்திரம்.
= = = = = =
' எங்கள் ' சார்பில், வாசகர்களைக் கேள்விகள் கேட்டிருப்பவர் :
நெல்லைத்தமிழன்.
வாசகர்களுக்கான கேள்விகள்.
1. நல்ல திருமண வாழ்க்கைக்கு எது முக்கியம்?
2. எதற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டும்?
3. இந்தப் பழக்கத்தில் மாட்டிக்கொண்டோமே என்று வருந்தும்படியான பழக்கம் ஏதேனும் உங்களுக்கு உண்டா?
4. உங்கள் குணங்களில் உங்களுக்குப் பிடிக்காதது என்ன?
= = = = =
KGG பக்கம் :
சென்ற வாரம் ..
இந்தக் குழப்பத்தைத் தீர்க்க என்னுடைய அக்கா ஒரு பிட் பேப்பரில், " பதம் X எதிர்ப்பதம்" என்று வரிசையாக இருபது எழுதி என்னிடம் கொடுத்திருந்தார். அது பரீட்சையில் காப்பி அடிப்பதற்கு அல்ல - நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவற்றைப் படித்து நெட்டுரு போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக.
இப்படி இருக்கையில் ஒருநாள் ..
****
பக்கத்துப் பையன் கோவிந்தராஜு பற்றிச் சொல்லியிருந்தேன் அல்லவா? அந்தக் காலத்திலேயே அவன், எங்கள் வரிசைக்கு எதிர் வரிசையில் உட்கார்ந்திருந்த பெண்களில், லட்சுமி என்ற ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விடுவான். எதிர் வரிசையில் எங்களுக்கு நேராக லட்சுமி, மங்களம், சந்திரா என்று மூன்று பெண்கள். அவர்களுக்குள் ஏதேனும் அரட்டை அடித்துக்கொண்டு, விளையாடிக்கொண்டிருப்பார்கள் ( வகுப்பில் ஆசிரியர் இல்லாத நேரங்களில்தான் ) அவர்களின் விளையாட்டில், லட்சுமி ஜெயிக்கும்போதெல்லாம் கோவிந்து கையைத் தட்டிக் கொண்டாடுவான்.
அடிக்கடி என்னிடம், " லட்சுமி ரொம்ப அழகா இருக்கா - நல்லா படிக்கிறா " என்று சிலாகித்துச் சொல்லிக்கொண்டே இருப்பான். (எனக்கு என்னவோ லட்சுமியை விட மங்களம் அழகு என்று தோன்றும்!)
என்னுடைய புத்தகங்கள், நோட்டுகள் எல்லாம் அண்ணன், அக்கா இருவரும் அட்டை போட்டுக் கொடுத்ததால், ஓரம் மடங்காமல், புதியதாக இருக்கும்.
வகுப்பில் தமிழ்ப் பாடம் நடத்த வந்த ஆசிரியை, " யாராவது ஒருத்தர், உங்க தமிழ்ப் புத்தகத்தை (பாடம் நடத்த) எனக்குக் கொடுங்கள். கொடுப்பவர் நான் பாடம் நடத்தும்போது, பக்கத்துப் பையன் புத்தகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.
புயலென எழுந்தான் கோவிந்து. பரபரவென்று என்னுடைய புத்தகப் பையிலிருந்து, என் தமிழ்ப் புத்தகத்தை எடுத்து, " டீச்சர் - இதோ புத்தகம்" என்று ஓடிச் சென்று ஆசிரியையிடம் கொடுத்துவிட்டு வந்தான். அப்படி அவன் என்னுடைய புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஓடிய போது, புத்தகத்தின் உள்ளே நான் வைத்திருந்த 'பதம் X எதிர்ப்பதம்' பேப்பர் கீழே விழுந்துவிட்டது போலிருக்கு. கோவிந்து என்னுடைய புத்தகத்தை எடுத்து ஓடிய அதிர்ச்சியில் இருந்த நான் அதை கவனிக்கவில்லை. இடத்திற்கு பெருமையுடன் திரும்பி வந்த கோவிந்து, மடிந்து கிடந்த அந்தப் பேப்பரை கையில் எடுத்து தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.
என்னுடைய கவனம் முழுவதும், என்னுடைய புத்தகத்திலேயே இருந்தது. 'ஆசிரியை அதை திருப்பிக் கொடுப்பாரா, கொடுத்தாலும் அதை கோவிந்துவிடம்தான் கொடுப்பாரா, என்னுடைய புத்தகம் எனக்குத் திரும்பக் கிடைக்குமா' என்றெல்லாம் கவலை.
வகுப்பு முடிந்ததும், ஆசிரியை, புத்தகத்தை கோவிந்துவிடம் கொடுத்துவிட்டு சென்றார். அந்த வகுப்பு முடிந்ததும், 'ஒண்ணுக்கு பெல்' அடித்தது. அதை அப்படித்தான் சொல்லுவோம். பத்து நிமிட இடைவேளை.
எல்லோரும் திரும்ப வகுப்புக்கு வந்து சேர்ந்தவுடன்தான், நான் கோவிந்தராஜு கையில் வைத்திருந்த என் 'துண்டு பேப்பரை'ப் பார்த்தேன். ஆனால், அதற்குள் அவன் மேலும் ஒரு திடுக்கிடும் வேலையை செய்துவிட்டான்.
பேப்பர் பார்த்து அவன், " ஆஹா - என்ன ஒரு அழகான கையெழுத்து! இது நிச்சயம் லட்சுமியின் கையெழுத்துதான்" என்று judgement பாஸ் செய்து, " லட்சுமி - இந்தா உன்னுடைய பேப்பர் " என்று சொல்லி லட்சுமியிடம் கொடுத்துவிட்டான். அந்தப் பெண்ணும் அதை மறுப்பு எதுவும் சொல்லாமல் வாங்கி வைத்துக்கொண்டுவிட்டாள்.
நான் கோவிந்துவிடம், " டேய் - அது நான் வைத்திருந்த பேப்பர்டா - என்னோடது " என்றேன். அதற்கு அவன், " சீச்சீ - அது உன்னுடைய கையெழுத்து இல்லை. அவ்வளவு அழகா எழுதுவது, லட்சுமி மட்டும்தான்" என்று சொல்லிவிட்டான்.
வேறு வழி தெரியாமல், அக்காவிடம், " நீ கொடுத்த பேப்பர் காணாமல் போயிடுச்சு - வேற ஒரு பேப்பர்ல 'பதம், எதிர்ப்பதம்' எழுதிக்கொடு" என்று கேட்டு வாங்கிக்கொண்டேன்.
(கோவிந்து பிரதாபங்கள் தொடரும் .. )
= = = = = = =
அப்பாதுரை பக்கம் :
வேலை(ளை)
கல்லூரி முதல் வருடத்துடன் படிப்பு நிறுத்தம், இந்திய ராணுவத்தில் மூன்று வருட சிப்பாய் வேலை, இரண்டு விவாகரத்துகள், தொடர்பறுத்த மகன், வருடம் ஒரு முறை மட்டும் அன்புடன் விசாரிக்கும் மகள், 25க்கும் மேற்பட்ட கம்பெனிகளில் விட்டு விட்டு வேலை அனுபவம் - இது மனு அகர்வாலின் 53 வயது வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம். ஓ.. இதையும் சேர்த்துக் கொள்ளவும்: கடந்த மூன்று மாதங்களாக வேலை தேடும் வேலை.
அன்று கான்பூர் ஐஐடி ரோடு பிரபல சேவாசதன் ஓட்டலில் டேபிள் செக்ஷன் சூபர்வைசர் வேலைக்கு இன்டர்வ்யூ நடந்து கொண்டிருந்தது. இந்த வேலையை வாங்கியே தீர்வது என்று திட்டமாக இருந்தார் மனு. ஓரளவுக்கு நேர்த்தியாக உடையணிந்து பணிவுடன் பேசினார்.
இன்டர்வ்யூ முடிந்ததும், "சொல்லி அனுப்பறோம். போய் வாங்க" என்றார் ஓட்டல் நிர்வாகி.
"சார், இந்த வேலையை நிச்சயமாக என்னால் செய்ய முடியும். பாருங்க.. இங்க வந்து பத்து நிமிஷத்துக்குள்ள உங்க மெனு மனப்பாடம் செய்துட்டேன். உங்க ஓட்டல்ல நாலு டேபிள் செக்ஷன் இருக்கு. தவிர ரெண்டு மெகா டேபிள் வச்சிருக்கீங்க. வாடிக்கையாளர்கள் சராசரியா நிமிஷத்துக்கு ரெண்டு பேர்" என்ற மனு தயங்கி, "இந்த வேலை எனக்கு முக்கியம் சார்" என்றார்.
"சொல்லி அனுப்புறோம் மிஸ்டர் அகர்வால். டேபிள் மேனேஜருக்கு பொருத்தமான அனுபவத்தோட இன்னும் நிறைய பேர் அப்ளை பண்ணியிருக்காங்க.. அவங்களையும் இன்டர்வ்யூ செய்யணும் இல்லையா? நீங்க போங்க. நாலு நாள்ல சொல்லி அனுப்பறோம்" என்றார் நிர்வாகி.
அவநம்பிக்கையுடன் தலையசைத்த மனு வெளியேற எழுந்தார். ஏதோ கவனத்தில் தன் செல்போனைத் தவறவிட்டார். எடுக்கத் திரும்பி கண்ணாடிக் கதவுக்கப்பால் தெருவைப் பார்த்த போது அவர் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது.
வெளியே ஒரு முதிய பெண்மணி தடுமாறிக் கீழே விழுந்தார். கைப்பிடிக்காக அருகிலிருந்த ஒரு கைக்குழந்தைத் தள்ளுவண்டியை ஊன்றிப் பிடிக்க முயன்ற போது அது வழுகி தெருவில் ஓடத் தொடங்கியது. வெளிக்கடையில் அதுவரை சுவாரசியமாகக் காரபோளி சாப்பிட்டுக் கொண்டிருந்த
தள்ளுவண்டி சொந்தக்காரப் பெண் திடீர் ஞானோதயத்துடன் "ஐயோ என் குழந்தை என் குழந்தை" என்று அலறியபடி தெருவில் ஓடினார்.
மின்னல் வேகத்தில் கண்ணாடிக் கதவைத் திறந்து தெருவில் பாய்ந்தார் மனு. தள்ளுவண்டி சொந்தக்காரப் பெண்ணை ஒரு கையில் நிறுத்தி, தாவித் தள்ளுவண்டியைக் குழந்தையுடன் அலாக்காக இன்னொரு கையில் தூக்கி எடுத்து பாதுகாப்பாக வைத்தார். ஓடி வந்து முதிய பெண்மணியை எழுப்பிக் கைத்தாங்கலாக உட்கார வைத்தார்.
தெருவில் அனைவரும் மனுவுக்கு நன்றி சொல்லி நடந்ததை வியந்து பேசினர். வெளியே வந்த நிர்வாகி, "மிஸ்டர் மனு.. உங்க அசாதாரண நடத்தை ஒரு பெரிய மனிதாபிமான உதாரணம். உங்களுக்கு இந்த வேலையைத் தருவதில் எங்களுக்குத்தான் பெருமை. நாளைக்கே நீங்க வேலைக்கு சேரலாம்" என்று நெகிழ்ந்து கை குலுக்கினார். "ஓ.. இந்தாங்க தவறவிட்ட உங்க செல்போன்.. டிஸ்ப்லே உடைஞ்சிருக்கு. எங்க செலவுல ரிபேர் பண்ணிக்குங்க".
மனு கண்களில் நீர் தளும்ப நன்றி சொன்னார். "எல்லாம் கடவுள் செயல். யாருக்கும் கஷ்டம் தராமல் இப்படி ஒரு நாடகத்தை ஆண்டவன் ஒருவனால் மட்டுமே நடத்த முடியும்" என்றார்.
** அன்று மாலை ஐஐடி ஹால்13 வளாகத்தில் தள்ளுவண்டி சொந்தக்காரர், முதிய பெண்மணி இருவருக்கும் நன்றி சொன்னார் மனு. "இந்தாங்க 200 ரூபாய். நான் செல்போன் தவறவிட்டதும் உடனே கச்சிதமா நடிச்சிங்க. எனக்கும் வேலை கிடைச்சிருச்சு. அடுத்த மாசம் ராம்லீலா பார்க்குல கிட்நேப்பிங் தடுக்குற திட்டம். விவரம் சொல்லியனுப்புறேன்".
- US man leaves job interview rescues baby. மே 10, 2023 செய்தி.
- விரும்பினால் இதே தலைப்பில் தேடி யுட்யூப் விடியோ பார்க்கலாம்.
வால்:
** அசல் செய்தியின் ரான் நெஸ்மன் அசல் பரோபகாரியாகத் தெரிகிறார். நம் புத்தி (என்) குதர்க்கமாக யோசித்தால் என்ன செய்ய?
கொசுறு:
ரான் நெஸ்மனின் சாகசம் ஒரு மாதமாக டிவி நிகழ்ச்சிகளில் பறந்துபட்டு, இப்போது அவருக்கு ஒரு பெரிய ஷாப்பிங் மாலில் சீனியர் செக்யூரிடி மானிடர் வேலை கிடைத்து விட்டதாம்.
= = = = = =
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா வணக்கம்.
நீக்குவணக்கம், நன்றி.
நீக்குநெல்லைத்தமிழருக்கானது....
பதிலளிநீக்கு1) முக்கியமானது நல்ல மனைவி அமைவது....
2) வம்சவிருத்தியை பெருக்குவதற்காக...
3) போலிகளிடமும் உண்மையான பாசம் வைத்து விடுவது...
4) வாழ்வு முடியப் போவதால் இப்பொழுது என்னை எனக்கே முழுமையாக பிடிக்கவில்லை.
-கில்லர்ஜி
நல்ல மனைவி... நல்ல பிள்ளை... நல்ல குடும்பம் தெய்வீகம்...
நீக்குhttps://www.youtube.com/watch?v=ETpBKjWaaT4.
உங்கள் கருத்து படிக்க வருத்தமாக இருக்கிறது கில்லர்ஜி
நீக்கு// 4) வாழ்வு முடியப் போவதால் இப்பொழுது என்னை எனக்கே முழுமையாக பிடிக்கவில்லை.// இந்த மனநிலையிலிருந்து, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளிவருவது நல்லது. உலகம் விசாலமானது, இனியது.
நீக்கு2 க்கான பதிலில் எல்லோரும் வம்ச விருத்தி என் நினைப்பாங்க. அது byproduct. திருமண வயது வந்தவங்களுக்கு அவங்களுக்குப் பொருத்தமான துணை, நட்புக்கு, இயற்கைத் தேவைகளுக்கு வேணும் என்பதால்தான் திருமணம். இது இயற்கையானது. வம்சவிருத்தின்னா வதவதன்னுனா பெத்துக்கணும்?
நீக்கு50 வயசுக்காரன் குழந்தை பெத்துக்க மாட்டானா? ஏன் 21 வயசு பெண்ணை 55க்கு வம்சவிருத்திக்கு திருமணம் செய்வதில்லை? So வம்சவிருத்திதான் காரணம் இல்லை
நீக்குகாரணம் இல்லைனா ஜீவன் இந்த உலகில் இருக்காது. நீங்க இறைப்பணியில் ஈடுபடுவது, வாய்ப்பு கிடைப்பது அதனால்தான்.நீங்க கொடுத்த வாழ்க்கை பசங்களோடது. அவங்களிடமிருந்து உங்களுக்கு ஏதேனும், அன்பு உட்பட, வரணும்னு விதி இருந்தாலொழிய வரப்போவதில்லை. இழப்பு உங்களுடையதல்ல
நீக்குகேள்வி பதில் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
நோக்க நோக்க
நொடியில் நோக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க, வாங்க துரை அண்ணா.
நீக்குநல்லருள் வேண்டுவோம்.
நீக்குஎந்த நாளிலும் மிதமான குளிர் நீர் குளியல் சுகம்.
பதிலளிநீக்குகுளிப்பில் உண்டாகும் ராகத்தில் பிறக்கும் சங்கீதமே....
நீக்கு:)))
நீக்குவெயிலில் அலைந்தால் இளநீர் நுங்கா? எங்க கிடைக்குது நுங்கு?
பதிலளிநீக்கு
நீக்குசென்னைல போன மாசம்லாம் மூலைக்கு மூலை வச்சு வித்தாங்க... இன்னமும் கூட அங்கங்க கண்ல படுது! ஆனால் நிறைய இடங்களில் தேங்காய் மாதிரி இருக்கும்!
பெங்களூரில் விலை பயங்கரம்.
நீக்குபெங்களூரில் நுங்கு கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். விலை என்ன சஸ்தாவாவாகவா இருக்கும்!
நீக்குஒரு நுங்கு 50 ரூ. எங்கள் ஏரியாவில். இரண்டு வாரம் முன்பு சீவித்தரச் சொல்லி நாலு வாங்கிவந்தேன். நான் எதிர்பார்த்தது நுங்கு 30 ரூ சொல்வான் என்று.. கூடச் சொல்கிறான் என்று வாங்காமல் போய்விட முடியுமா! தள்ளுவண்டியில் நம்ப தமிழ்க்காரப்பையன்வேறு....
இரண்டு நாட்கள் முன்பு கூட அசோக் நகரில் நிரைய நுங்கு விற்றுக் கொண்டிருந்தார்கள்.
நீக்குபெங்களூர் ல நுங்கு 40 ரூ. 3-100 ரூன்னு வாங்கியிருக்கேன் ப பழம் சுளை கிலோ 120 ரூ. இளனி 30-40ரூ
நீக்கு1. நல்ல திருமண வாழ்க்கைக்கு எது முக்கியம்?
பதிலளிநீக்குநல்ல பார்ட்னர் அவசியம். புரிந்து கொண்டு இணைந்து செல்லும் சகிப்புத்தன்மை அவசியம்.
2. எதற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டும்?
திருமணம் என்பது சட்ட திட்டங்கள் உருவான பின் உண்டானது தானே? திருமணம் அவசியமில்லை என்று கருதுவோர் திருமணம் என்ற சடங்கை செய்யாமலே சேர்ந்து வாழலாம்.
3. இந்தப் பழக்கத்தில் மாட்டிக்கொண்டோமே என்று வருந்தும்படியான பழக்கம் ஏதேனும் உங்களுக்கு உண்டா?
உண்டு ஆனால் பழக்கம் தற்போது இல்லை. சிகரெட்/பீடி.
4. உங்கள் குணங்களில் உங்களுக்குப் பிடிக்காதது என்ன
விதி மீறல்களை மற்றவர்கள் செய்யும்போது, அல்லது பொய் சொல்லும்போது, அல்லது என்னை ஏமாற்றும்போது எனக்குப் பிடிக்காது. எல்லோரும் நேர்மையாக நடக்க வேண்டும் என்று கருதுபவன் நான். இதன் காரணம் அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளையும் இழந்திருக்கிறேன். இதன் காரணம் எனக்கு வீண் சண்டைகள் ஏற்பட்டது உண்டு. அத்தகைய சமயங்களில் பாஸ் குறுக்கிட்டு களத்தில் இருந்து மீட்டு கொண்டு போய் விடுவார்.
Jayakumar
விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குநல்ல கேள்வி பதில்கள்.
பதிலளிநீக்கு1) புரிதல் , விட்டுக்கொடுக்கும் தன்மை இருந்தால் சிறப்பு.
2) பெண்ணுக்கு பாதுகாப்பு என கருதுவதும், வம்சவிருத்தியும்.
3) 4) என்னைப் பொறுத்தவரை திருப்தி என நினைக்கிறேன் . என்னுடன் பழகுபவர்கள்தான் கூறவேண்டும் :)
பிள்ளைக்கு பாதுகாப்பு வேண்டாமா? கால்கட்டு போடலைனா கெட்டுப்நொயிட மாட்டாங்க?
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்கு1. இருவரின் புரிதல்.
2. திருமண பந்தம் , இரு மனங்களை இணைத்து, இரு குடும்பங்களை இணைத்து ஆரோக்கியமான நல்ல எதிர்காலத்திற்கும் , எதிர்கால சந்ததிக்கும் வழிவகுக்கிறது.
3. நகம் கடிக்கும் பழக்கம்.
4. கோபம்.
பதில்களுக்கு நன்றி.
நீக்குசிறப்பான பதிவு..
பதிலளிநீக்குஅப்பாதுரை அவர்களது பகுதி வழக்கம் போல!..
அ சா நன்றி.
நீக்குகௌதம் அடித்து விளையாடுகின்றார்..
பதிலளிநீக்குசிறப்பு..
நன்றி, நன்றி.
நீக்குகௌதம் ஜி க்கு ஒரு கோவிந்து போல என்னுடனும் குணசேகரன் என்று குறும்புத் தோழன்...
பதிலளிநீக்குஆகா.. அந்த நாளும் வந்திடாதோ!..
அவரைப் பற்றி எழுதி அனுப்புங்கள். புதன் பதிவில் போட்டுவிடலாம்.
நீக்குபானுக்காவின் முதல் கேள்வி - எனக்கு இரண்டுமே பிடிக்கும் என்றாலும் குளிர்பானங்கள் அதுவும் பழ ஜூஸ் என்று அருந்துவதில்லை மாறாக மோர்....பழங்களை அப்படியே...
பதிலளிநீக்குகீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகுளிர்ந்த நீரில் - சாதாரண வெப்ப நிலையில் இருக்கும் நீரில் குளிக்க ரொம்பப் பிடிக்கும். சூடு நீர் என்பது எதற்காகவேனும் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு மட்டும்.
பதிலளிநீக்குகுடிப்பது வெந்நீர்தான்...
கீதா
நான் செப் 1-2021 லேர்ந்து கிடைக்கும் நீரில்தான் குளியல். குளிர்காலம் ஊசி மாதிரி நீர் குத்தும் ஆனாலும் குளிர் நீர்தான்
நீக்குநெல்லைத்தமிழனின் வைராக்கியம் வியக்கவைக்கிறது.
நீக்கு.. இப்போது அவருக்கு ஒரு பெரிய ஷாப்பிங் மாலில் சீனியர் செக்யூரிடி மானிடர் வேலை கிடைத்து விட்டதாம்.//
பதிலளிநீக்குபொழச்சுப்போகட்டும். விடுங்கள்!
:)))
நீக்குநெல்லை கேள்வி - பாடப்புத்தகம் மனப்பாடம் ஆக வேண்டும் என்றால் ஈடுபாடுதான் முக்கியம். அது சினிமா பாட்டு என்றாலுமே ...
பதிலளிநீக்குகீதா
ஆம், அதே!
நீக்குஹையோ பேட்டியாளர்களை என்ன சொல்ல....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் useless questions. உருப்படியா ஒன்னும் கேட்பதில்லை. ஏன்னா இதுதான் வைரல் ஆகும்!
பதிலளிநீக்குஹையோ நடிகர் விவேக்குமா அப்படிக்கேட்டார்!!! என்னவோ அவரை அறிவுஜீவின்னு சொல்வாங்களே!!
கீதா
ஆனைக்கும் அடி சறுக்கும்!
நீக்குஎங்கள் ' சார்பில், வாசகர்களைக் கேள்விகள் கேட்டிருப்பவர் :
பதிலளிநீக்குநெல்லைத்தமிழன். வாசகர்களுக்கான கேள்விகள்.
1. நல்ல புரிதல்.. கணவன் மனைவி இருவருக்குமே வேண்டும்.
2. திருமணம் என்பது இல்லாமலும் வாழ முடிந்தால் எதற்கு? அதாவது தனியாகவே....திருமணம் என்பது கட்டாயம் அல்லவே. அவரவர் விருப்பம். பொதுவாக இந்த சமூகம் ஒருவர் வாழ்க்கையில் கல்யாணம்தான் கடைசி என்று ஒரு நியதியை சும்மானாலும் புகுத்தி இருப்பதால் இந்தக் கேள்வி.
கல்யாணம் ஆகலைனா ஏன் இன்னும் ஆகலை. ஆயிடுச்சுனா ரெண்டாமாசமே ஏன் இன்னும் கன்சீவ் ஆகலை ஏன் குழந்தை இல்லைன்னுகேள்விகள்....அடுத்து குழந்தை ஒன்று என்றால் ஏன்....ஒன்னே ஒண்ணு அடுத்து ஆணோ/பெண்ணோ வேண்டாமா வேண்டாம்னு வைச்சிட்டீங்களா? ப்ளானிங்கா ....ஹையோ என்ன கேள்விகளோ இப்படி சில நியதிகளான கேள்விகள்...அதே இது ஒரு குழந்தையைப் பார்த்து நீ சந்தோஷமா இருக்கியா? இப்ப நீ என்ன செய்யற? அடுத்து என்ன வாழ்க்கையில் முன்னேற என்ன திட்டம்னு ஒரு கேள்வி?
விவேக் அதுவும் ஒரு அறிவியலாளரைப் பார்த்துக் கேட்டப்ல ஹையோ...
4. நிறைய இருந்தன....இப்ப அதெல்லாம் நிறைய மாறிவிட்டன...ஒன்று சொல்லணும்னா, யாராச்சும் அவங்க வருத்தங்களைச் சொன்னா அவங்க ஐடியா கேட்காமலேயே என்னவோ பெரிசா நல்லது செய்யறோம்னு சொல்லும் பழக்கம்...
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகுணசேகரன்..
பதிலளிநீக்குஅவன் திடீர் திடீர் என (ஆபாசமில்லாத) இரட்டை அர்த்தங்களை எடுத்து விடுவான்..
பசங்க சிரிப்பு அடங்கினாலும் அந்தப் பக்கத்தில் அடங்காது..
நினைத்து நினைத்து சிரித்து வைப்பார்கள்..
வரட்டும் குணசேகரன்...
நீக்குகுணசேகரணை சந்திக்க ஆவலாக உள்ளோம்.
நீக்கு2 - ற்கு என் மற்றொரு பதில் - கேள்விக்கான பொதுவான பதில் நிரந்தர நட்பு தன் எண்ணங்களைப் புரிந்து கொண்ட ஒரு நல்ல நட்பு, துணை என்ற ஒரு நம்பிக்கையில். அது நல்லா அமைஞ்சா ஓகே இல்லைனா பிரிதல் அல்லது அட்ஜஸ்ட்மென்ட். அதனாலதான் 50க்குப் பிறகு கூடச் சிலர் கல்யாணம் செய்துக்க்கறாங்க அலல்து முதல் மணம் முறிவுக்குப் பின்னும் கூடச் சிலர் 60ல் கூடச் செய்துப்பாங்க.
பதிலளிநீக்குசிலர் அதாவது ஒரு சிலர் - தியாகமனப்பான்மையுடன் செய்துகொள்பவர்களும் இருக்காங்க..
இதுக்கு வேறு சில காரணங்களும் உண்டு. அதை இங்கு நான் சொல்லவில்லை...வேண்டாம் என்பதால்,...
இதுல மய்யம் தலைவரை எல்லாம் சேர்த்துக்கூடாதுங்கோ!!!
பொதுவாக நம் சமூகத்தைப் பொறுத்தவரை குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய - தன் கருத்துகளைச் சொல்ல முடியாமல், சமூகத்திற்காக என்றுதான் தோன்றும்.
கீதா
விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குகௌ அண்ணா உங்க ஃப்ரென்ட் கோவிந்து ரொம்பவே லூட்டி போல!!!!
பதிலளிநீக்குகீதா
ஆம்!
நீக்குசெய்தி சார்ந்த அப்பாதுரை அவர்களின் புனைவு செம...என்னடா ட்விஸ்ட் காணுமேன்னு நினைச்சா, ...அதானே பார்த்தேன்.....கடைசில
பதிலளிநீக்குகீதா
:)))
நீக்குஅருமை பகிர்வுக்கு நன்றி...
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு2 இல்லையெனில் நாலும் தேவையில்லை...
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குநல்ல திருமண வாழ்க்கைக்கு எது அவசியம்? எல்லோரும் புரிதல் என்கிறார்கள், ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மை அவசியம். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் அளவிற்காவது வசதி வேண்டும். என்னடா இப்படி சொல்கிறாளே? என்று நினைக்க வேண்டாம். 'இல்லானை இல்லாளும் வேண்டாள்,மற்றீண்டெடுத்த தாய் வேண்டாள்..' என்பது குரூரமான உண்மை.
பதிலளிநீக்குமகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர், நல்ல தெய்வ பக்தியுள்ள, கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாத, நன்றாக படித்திருக்கும், ஆனால் சுய சம்பாத்தியம் இல்லாத ஒரு வரனுக்கு தன் மகளை கொடுக்க முன்வருவாரா?
நீக்குதிருமணம் செய்ய ஆண/பெண்ணுக்கு எது அவசியம்னு கேட்கலை. கேட்டிருந்தால் என் வரிசை Age difference, Qualification, Salary, .. General profile அப்புறம்தான் ஜாதகப் பொருத்தம், படம். If both families agree above, அப்புறம் பசங்க பேசி முடிவெடுப்பது. Then other terms, Families compatibility. அப்புறம் திருமணம். ஜா பொருத்தம்போதே சம்பாதிப்பது, கடன் etc குணம் சொல்லிடுவாங்க.
நீக்குஅப்புறம் பாவெ மேடம்.. கெட்டவழக்கம் என்பதன் definitions has changed in this generation
திருமணம் செய்தால்தானே திருமண வாழ்க்கை?
நீக்குஒரிரண்டில் இது முக்கியம்னு பதில் சொல்லவே முடியாது. ஒரு நெகடிவ்வே நிராகரிக்க போதும்
நீக்குநீங்கள் உங்கள் மகளுக்கு வரன் பார்க்கிறீர்களா? எனக்குத் தெரியாது, நான் பொதுவாகத்தான் குறிப்பிட்டேன்.
நீக்குகருத்துரைகளுக்கு நன்றி.
நீக்கு//நீங்கள் உங்கள் மகளுக்கு வரன் பார்க்கிறீர்களா? எனக்குத் தெரியாது,// அதற்காக பதிலளிக்கவில்லை. பதிலளிக்கவேண்டும் என்று நினைத்த கருத்தாக இருந்தால் மாத்திரம்தான் பதிலளிப்பேன்.
நீக்குஎதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும்?// நல்ல கேள்வி. சம்சாரே கிம் சாரம்? என்று தெய்வத்தின் குரல் முதல் பாகத்தில் ஒரு அத்தியாயம் உண்டு. படித்துப் பாருங்கள். சமீபத்தில் மாடர்ன் லவ் சென்னை என்று ஒரு சீரீஸ் பார்த்தேன். அதில் ஒரு பெண்,"ஆம்பளையோடு வாழ முடியாது, ஆம்பிளை இல்லாமலும் வாழ முடியாது" என்பாள், ஒரு ஆண்,"பொம்பளையோடு வாழ முடியாது, பொம்பளை இல்லாமலும் வாழ முடியாது" என்பான். அதுதான் உண்மை.
பதிலளிநீக்குஇன்னாபா கேள்வி கேட்டால் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்னு ஜகா வாங்கறாங்க
நீக்குசம்சாரே கிம் சாரம்? என்றால், இந்த சம்சாரத்தில் என்ன சாரம்? என்று பொருளாம். இப்படி இந்த வாழ்க்கையில் என்ன சாரம்? என்று கேட்டு, எதுவும் இல்லை என்று உணர்வதுதான் சாரம் என்று நீலகண்ட தீக்ஷதர் எழுதியிருப்பதாக அழகாக விளக்கியிருப்பார். அதை நீங்கள் படித்து, ரசிக்க வேண்டும் என்பதற்காக படியுங்கள் என்றேன் வீர வைஷ்ணவரே!
நீக்கு:)))
நீக்குஇந்தப் பழக்கத்தில் மாட்திக் கொண்டோமே என்று வருந்தும்படியான பழக்கம்?? தினசரி மதியம் தொலைகாட்சியிலோ, ஓ.டி.டி.யிலோ ஒரு படம் பார்க்கிறேன், இதனால் படிப்பது குறைந்து விட்டது. இரவில் கண் விழித்து படிப்பது, எழுதுவது போன்றவைகளை செய்வதால் காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியவில்லை.
பதிலளிநீக்குஎன் குணங்களில் எங்க்குப் பிடிக்காதது//மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லி விடுவேன். பிடித்ததும் அதுதான், இப்படி மனதில் பட்டதை பேச ஒரு நேர்மை, தைரியம் கொஞ்சம் அசட்டுத்தனம் எல்லாம் வேண்டும். எல்லோரும் யோசித்து, யோசித்து பூசி மொழிகினால், உண்மையை உடைத்துப் பேச என்னைப் போல ரெண்டு அசடுகள் வேண்டாமா?
ம ப. பளிச்னு சொல்றது அ பி தனம். கேட்டால் என்ன நோக்கத்தில் கேட்கறாங்கன்னு புரிஞ்சு பதில் சொல்லணும் இல்லை கம்மென இருக்கணும்.
நீக்குஇப்போது நீங்களும் அ.பிதனம்தான் செய்திருக்கிறீர்கள் :))
நீக்குஆ - குழப்பறாங்களே ! அ பி என்றால் எ ??
நீக்குநேரடியா கேட்டாலும் நான் எப்போதுமே அப்படித்தான் (assuming they ask my real opinion). ஆனால் நெருங்கியவர்கள் அல்லாதவர்களிடம் பூசி மொழுகி அவர்கள் எதிர்பார்ப்பதைத்தான் சொல்லுவேன். ஆனால் எழுத்தில், பளிச்சுனு எனக்குப் பட்டதைச் சொல்லுவேன். எனக்கு திருப்தியில்லை ஆனாலும் பொ.செ. சூப்பர் என்பது என் அபிப்ராயம், பொது அபிப்ராயத்துக்கு மாற்று.
நீக்குகல்யாணம் ஆன புதுசில் நான் அப்படித்தான் மனதில் பட்டதைப் பளிச்சென்று அ.பி.தனமாகச் சொல்லிடுவேன். அதோடு எல்லோரிடமும் சிரிப்பும் கேலியுமாகப் பேசிடுவேன். இதெல்லாம் அ.பி.தனம் என்றோ, மரியாதை இல்லாத பேச்சுக்கள் என்றோ புரியச் சில காலம் ஆனது. அப்புறமா நத்தையைப் போல் மனம் சுருங்கிக் கொண்டது. இப்போல்லாம் அவ்வளவு இலகுவாகப் பழகுவதில்லை. தீவிரமாகவே இருப்பதாய் நினைச்சுப்பாங்க. ரொம்ப நெருங்கியவர்களிடம் அதாவது என் அம்மாவழி கசின்களிடம் மட்டும் நெருக்கம் இப்போதும் உண்டு.
நீக்குதினமெல்லாம் படம் பார்ப்பதில்லை. ஒரு படத்தையே வைச்சு வைச்சு 4,5 நாட்கள் பார்க்கிறேன். இப்போ ஊஞ்சாயி மட்டும் 2,3 நாட்களில் பார்த்து முடிச்சுட்டேன். அற்புதமான படம். படம் பார்த்ததும் இதைத் தமிழில் எடுக்கிறேன்னு சொல்லிக் கெடுத்துடாம இருக்கணுமே பகவானே! என வேண்டிக் கொண்டேன்.
நீக்குஅதிகப் பிரசங்கித்தனம் அ/பி.
நீக்குகோவிந்து என்று பெயர் இருந்தாலே,இப்படி ஏடாகூடம்தானா? எங்கள் பெரிய அத்திம்பேர் அவருடைய ரூம் மேட்டான கோவிந்து பற்றி நிறைய கதைகள் சொல்லுவார்.
பதிலளிநீக்குநீங்கள் கேட்டவைகளை எங்களுக்கும் எழுதி அனுப்புங்களேன்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவு அருமை. கேள்வி பதில்கள் எப்போதும் போல் சிறப்பு.
பிறந்த இடத்தில், மற்றும் சென்னை, மதுரை என கண்டிப்பாக வெந்நீர் குளியல் கிடையாது. ஆனால், இங்கு வந்த பின் சட்டென்று மாறும் வானிலையால் கண்டிப்பாக வெந்நீரில்தான் குளியல். அப்படி பழகி விட்டது.
திருமண பந்தம் சிறப்பாக அமைவது, இருவருமே ஒருவருக்கொருவர் காலம் முழுக்க பிடித்தமானவர்களாக அமைவது எல்லாமே ஒரு யோகந்தான். ஒன்றிருந்தால் ஒன்றில்லாமல் போவதும் அவரவர் ஜாதகப்பலன்கள்.
சமூகத்தின் பார்வையில் நம் மதிப்பை இழக்காமல் இருப்பதற்காக அன்றிலிருந்தே நம் வீட்டு பெரியவர்கள் எடுக்கும் முடிவிது.
நாம் அவசரமாக முடிவு செய்யும், அல்லது தொன்றுதொட்டு இப்படித்தான் என்கிற மாதிரியான ஏதாவது பழக்கவழக்கங்கள், வீட்டில் மற்றவர்களை துன்புறுத்துகிற மாதிரி அமைந்தால் அதை நாம் மாற்றிக் கொள்வதில் தவறில்லை.
முன்பு சிறு வயதிலிருந்தே கோபம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருந்து விட்டு, இப்போது அடிக்கடி விதி வசத்தாலோ , அல்லது இயலாமையாலோ அது வரும் போது, அதனிடமே "ஏன் வருகிறாய்? என உரிமையாக கோபபடுகிறேன். அந்த குணத்தை முன்பு மாதிரியே மாற்ற இறைவன் அருள வேண்டும்.
கௌளதன் சகோதரர் பக்கம் சுவாரஸ்யமாக இருந்தது. . கோவிந்து இயல்பாக செய்வது கூட நகைச்சுவையாக முடிகிறது.
சகோதரர் அப்பாதுரை எழுதியதும் நன்றாக உள்ளது.
காலையில் பதிவுக்கு வந்து வணக்கத்துடன் ஆரம்பித்து வைத்ததை நானே இரவில் முடிக்கிறேன் போலும். இடையில் வர இயலாத சில காரணங்களால், மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சகோதரர் அப்பாத்துரை பக்கம் "புத்திமான் பலசாலி" என்பதை குறிக்கிறது. இது எழுத நினைத்து விடுபட்டு போய் விட்டது. நன்றி.
நீக்குகருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குநல்ல திருமண வாழ்க்கைக்குப் புரிதல் அவசியம்னு எல்லோருமே சொல்றாங்க. ஆனால் பழகப் பழகத்தானே புரியும்?
பதிலளிநீக்கு2. முன்னெல்லாம் புத் என்னும் நரகத்திலிருந்து நம்மை விடுவிக்கப் புத்திரர்களைப் பெற்றுப் பித்ருக்களை மகிழ்விக்க என்பார்கள். ஆனால் இப்போதைய காலங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளுவதையே பெரும்பாலோர் விரும்புவதில்லை. ஆதரவற்ற குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணிடறாங்க. பெற்றுக் கொண்டாலும் ஒன்றே ஒன்று தான், ஆணோ/ பெண்ணோ!
3.அப்படி எந்தப் பழக்கமும் இல்லை. குறிப்பிட்ட பழக்கங்களை ஏற்படுத்திக்கவும் இல்லை. முன்னெல்லாம் சாப்பிடும்போது கூடப் புத்தகம் படிப்பேன். கணினியில் உட்கார்ந்து பதிவுகள் எழுதி/படித்து./பதில் சொல்லினு ஆரம்பம் ஆனதும் படிக்கும் வழக்கம் குறைந்துள்ளது. இது தான் எனக்கு வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது.
4.தகுதி இல்லாதவர்களுக்கு மாய்ந்து மாய்ந்து உதவி செய்துவிட்டுப் பின்னர் அவர்களாலேயே அவமானப் பட்டுக் கொண்டு திரும்பவும் அவர்களுக்கே உதவி செய்ய ஓடுவது தான், என்னிடம் இருக்கும் மிகக் கெட்ட குணம். நிறையப் பட்டாச்சு. ஆனாலும் நான் திருந்துவதாய்த் தெரியலை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு