சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல். வரிகளை டைப் செய்யாமல் இணையத்திலிருந்து எடுத்துப் போட்டு விட்டு ஒருமுறை பாடலை ஓடவிட்டு சோதித்துப் பார்ப்பேன்.
அப்படிப் பார்த்ததில் இந்தப் பாடலை எல்லோரும் திரு வரகூர் நாராயணனை பிரதி எடுத்து தவறாய் எழுதி இருக்கிறார்கள் என்று தெரிந்தது. மேலும், சகோதரிகள் பாடும்போது சில வரிகளில் வார்த்தைகள் புரிவதில்லை.
ஓதுகின்ற வா? ஓடுகின்றவா? ஒடுக்கின்ற வா?
வந்தேற்கும் எழுத்துகளா, வேறு ஏதாவதா?
முன் நிற்குமா, முகிழ்ந்து நிற்குமா?
தேங்காய் இளநீரா, திருநீறா? கிழ்நீர் என்பது போல் பாடுகிறார்கள் சகோதரிகள். எழுதியவருக்கே வெளிச்சம்.
இது மாதிரி பிரபலமான பாடல்களை பெரும்பாலும் யார் எழுதிய பாடல் என்றோ, யார் இசை அமைத்தது என்றோ தெரியாமல், விவரம் இல்லாமல்தான் பார்க்க முடிகிறது.
இசைத்தட்டுகளிலிருந்து பிரதியெடுத்து பகிரும்போது, தப்பாமல் தவறாமல் இந்த விவரங்களையும் சேர்த்தால் எழுதியவருக்கும் பெருமை; இசை அமைத்திருக்கும் பெருமை. முடிந்தால் எந்த வருடம் வெளியான பாடல் என்றும் எழுதலாம். கூடுமானவரை விவரங்கள் அளிப்பது அந்த படைப்பாளிகளுக்கு நாம் செய்யும் கெளரவம்.
எப்படியோ, இனிமையான பாடல். எழுதியவர் பாவம். இசை சகோதரிகளே இசை அமைத்து பாடி இருக்கக் கூடும்!
நாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன்
விநாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன் [நாயகனைப்பாட]
மூவுலகின் முதற்பொருளே முதல் பிள்ளை ஒளிவடிவே
முக்கண்ணின் அருட்பொருளே
முக்கனியின் வேதப் பொருளாய் அமர்ந்த [நாயகனைப்பாட]
அரசமரம் சுற்றிவந்து முரசம் பல கொட்டி நின்று
அரசமரம் சுற்றிவந்து முரசம் பல கொட்டி நின்று
பன்னீர்ப்பூ எடுத்துவந்து பழரச அபிஷேகம் செய்து
பருப்போடு பாகும் பக்குவமாய் இனிக்கும்
தேங்காய் திருநீறும் தீர்த்தமும் மணக்கும்
வெள்ளிரத ஊஞ்சல் ஆட விருப்பமுடன் மனம் பாட
வெள்ளிரத ஊஞ்சல் ஆட விருப்பமுடன் மனம் பாட
வினைதீர்க்க அருள் கொடுக்க பொருள் குவிக்க மனம் இனிக்க [நாயகனைப்பாட]
எருக்கம்பூ மாலையிலே இருக்கின்ற நாயகனே
எருக்கம்பூ மாலையிலே இருக்கின்ற நாயகனே
கொடுக்கின்ற மனதினிலே பூக்கின்ற மூலவனே
சிரிக்கின்ற சிரிப்பினிலே செல்வமெல்லாம் தருபவனே
சிரிக்கின்ற சிரிப்பினிலே செல்வமெல்லாம் தருபவனே
தேனமுதை தெளிப்பவனே சிவசக்தி விநாயகனே
தேனமுதை தெளிப்பவனே சிவசக்தி விநாயகனே
நாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன் (நாயகனை)
==========================================================================================================
கமல் நடித்த படத்திலிருந்து ஒரு பாடல் இன்று.
படம் வெளியான ஆண்டு 1963. ஜி ஆர் நாதன் இயக்கத்தில் முருகேசன் என்பவருடன் கண்ணதாசன் இணைந்து தயாரித்த படம். வங்காள மூலம். எஸ் எஸ் ராஜேந்திரன், தேவிகா, முத்துராமன், டி ஆர் ராஜகுமாரி, டி ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் நடித்த படம். இதுதான் டி ஆர் ராஜகுமாரியின் கடைசிப் படமாம். இந்தப் பாடலில் அவர் குரல் இடம்பெற்றிருக்கிறது.
இன்றைய பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். கே வி மகாதேவன் இசை அமைப்பில் சுசீலாம்மா குரல் கொடுத்திருக்கிறார். பாடல் ஏன் பிடித்திருக்கிறது என்று பார்த்தால், பாடல் ஆபேரி ராகத்தில் அமைந்திருக்கிறதாம்!
கண்ணன் பாடல்கள் எழுத கண்ணதாசனுக்கு கசக்குமா? இனிக்க இனிக்க கண்ணன் பாடல்கள் தருபவராச்சே கண்ண தாசன். இதிலும் குழையக் குழைய கொடுத்திருக்கிறார். தேன்குரலில் அதை வடித்தெடுத்திருக்கிறார் சுசீலாம்மா.
'கண்திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை என்று பாடும்போதே உங்கள் கண்கள் பனிக்க ஆரம்பித்து விடும். அடுத்த சரணத்தில் 'கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ' என்று பாடும்போது கலங்கி விடும் நம் கண்கள். ஆபேரியும் கண்ணதாசனும் சுசீலாம்மாவும் கே வி எம்மும் என்றென்றும் நினைவு கொள்ளத் தக்கவர்கள்
படத்தின் பெயர் வானம்பாடி.
கங்கைக்கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே ஓ ஓ
கண்ணன் நடுவினிலே
காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே ஓ ஓ ஓ
எதிலும் அவன் குரலே
கங்கைக்கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே ஓ ஓ
கண்ணன் நடுவினிலே
காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே ஓ ஓ ஓ
எதிலும் அவன் குரலே
கண்ணன் முக தோ(ட்ட)ற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்ணன் முக தோ(ட்ட)ற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண் மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாக நின்றேன்
கண் மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாக நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ
கண்ணீர் பெருகியதே ஓ ஹோ
கண்ணீர் பெருகியதே [கங்கைக்கரை தோட்டம்]
கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக் கொண்டான்
கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடி தந்தான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடி தந்தான்
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே ஓ
கண்ணீர் பெருகியதே
அன்று வந்த கண்ணன் இன்று வரவில்லை
என்றோ அவன் வருவான் ஓ ஹோ
என்றோ அவன் வருவான்
கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணனுக்கு தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணனுக்கு தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ ஓ ஓ
காற்றில் மறைவேனோ ஓ
நாடி வரும் கண்ணன்
கோலமணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன் ஓ
நானே தவழ்ந்திருப்பேன்
கண்ணா ஆ ஆ ஆ ஆஆஆ
கங்கைக்கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே ஓ ஓ
கண்ணன் நடுவினிலே
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று..
பதிலளிநீக்குவாழ்க தமிழ்..
வாழ்க தமிழ்.
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.
நீக்குஇன்றைய பதிவின் பாடல்கள் இரண்டுமே அருமை.. இனிமை..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசூலமங்கலம் சகோதரிகள் பாடலில் மேற்கொண்ட ஆராய்ச்சி அழகு..
பதிலளிநீக்குபாடல் நெல்லை கணபதி என்பதாக நினைவு..
எங்கே சொல்கிறார்கள்? இசைத்தட்டு இருந்தால் பார்க்கலாம் - அச்சிட்டிருந்தால்!
நீக்குஇசைத்தட்டா?..
நீக்குஅதையெல்லாம் தான் ஒடைச்சிப் போட்டாச்சே..
போட்டு ஒடைச்சாச்சே!..
இருக்கிறது. இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. அலைந்து வாங்க வேண்டும். அருகிப் போனதால் ஆனை விலை! இப்போது கூட பேஸ்புக்கில் ரெகார்ட் பிளேயர், கேசெட் பிளேயர், பென் டிரைவ், இன்னும் ஏதோ என்று பத்து விதமாய் இயங்கும் பிளேயர் ஒன்றை விளம்பரப்பப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
நீக்குமுதல் பாடலின் எடுப்பும் முடிப்பும் அருமை.
பதிலளிநீக்குவெள்ளி ரத ஊஞ்சலாட
விருப்பமுடன் மனம் பாட ..
ஆஹா...
ஆஹா.. ரசனை.
நீக்குஇசைத் தட்டு..
பதிலளிநீக்குதட்டுக்கு இசையா?..
இசைக்குத் தட்டா?..
இங்கே மொழிக்குத தட்டு..
( தட்டுப்பாடு)
தகர டப்பா சொன்ன மாதிரி
தமிழுக்குப் பஞ்சம்!..
அடா!..
தமிழ் அமிழ்து..
அதற்கேது பஞ்சம்..
இவனுங்க அறிந்து கொள்வதில் தெரிந்து கொள்வதில் தான் பஞ்சம்!..
:))
நீக்கு'கங்கைக்கரைத் தோட்டம்'
பதிலளிநீக்குஅந்நாட்களில் மிகப் பிரபலமான பலர் மனம் ஒன்றி 'நாமும் தான் பாடுவோமே' என்று பாடிப் பார்த்த பாடல்.
'கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை' ..
கண்ணதாசன் தன் நிலையில் தன்னை வைத்து தனக்குத் தானே எழுதிய வரிகள் என்றுமே சிறப்பாக அமைந்து விடுவது அவரது ராசி!..
ஆமாம் ஜீவி ஸார்... எந்த வரியையும் விட முடியாதபடி எல்லா வரிகளிலும் இனிமையை, உணர்வைப் புகுத்தி இருக்கிறார் கவிஞர். முன்பு பி சுசீலா பாடல்கள் என்று தனியாக வைத்திருந்த கேஸட்களில் இந்தப் பாடல்கள் அணிவகுக்கும்.
நீக்குவந்தேற்கும் எழுத்துகளை - அர்த்தம் இல்லை. பன்னீர்ப்பூ எடுத்துவந்து. சரியான வார்த்தைகள்.
பதிலளிநீக்குஓதுகின்ற மனத்தினிலே...... - கொடுக்கின்ற மனதினிலே பூக்கின்ற மூலவனே
எனக்கு மிகவும் பிடித்த, பலமுறை கேட்ட பாடல். எம் எஸ் எஸ் வார்த்தைகளை ஸ்பஷ்டமாகப் பாடுவார். சூலமங்கலம் பாடியதும் காலப்போக்கில் சிறிது அழிந்திருக்கலாம், தெளிவில்லை.
காலப்போக்கில் அழிய வாய்ப்பில்லை. உச்சரிப்பு சரியில்லை என்றுதான் சோளல்வேண்டும். நீங்கள் சொல்லியிருப்பது பொருத்தமாக இருப்பதால் அதையே மாற்றி விடுகிறேன்.
நீக்குபி சுசீலாவின் பத்தே பாடல்கள்தாம் பதியப் போகிறோம் என்றால் இந்தப் பாடல் விட்டுப்போகும் வாய்ப்பு குறைவு. தலைப்பைப் படித்ததும் பாடல் வரிகள் எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது.
பதிலளிநீக்குஎவ்வளவு பாடல்கள் என் லிஸ்ட்டில் இருக்கிறது தெரியுமா? 'கண்ணன் என்னும் மன்னன் பேரை' பாடல் ஆரம்ப இசையே... என்ன சொல்ல.. உற்சாகத்தைத் தோற்றுவிக்கும்.
நீக்குமேட்டூரில் வேலைக்குப் போன புதிதில் எனக்குக் கொடுத்திருந்த பெரிய அறையில் ஸ்பீக்கர்்செட் செய்து இந்த மாதிரி பல பாடல்களை அலர விடுவேன். ஆபீஸர் கேடகரி என்பதால் பலர் ஒன்றும் சொல்லவில்லை. தயக்கமாகச் சிலர் வந்து, நைட் ஷிஃப்ட் போன்றவை முடித்துவிட்டு அயர்ந்து படுக்கும்போது இது மிகவும் தொந்தரவாக இருக்கிறது என்றனர். பிறகு பாடல் ப்ராக்டிஸ் செய்வதையும் அலர விடுவதையும் நிறுத்தினேன். வேறு எந்த வேலைக்கும் மாறாமல் அங்கேயே தொடர்ந்திருந்தால் வாழ்க்கு எப்படி இருந்திருக்கும் என யோசிக்கிறேன்.
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... நம் சுவாரஸ்யம் பிறருக்கு தொந்தரவில்லாமல் இருக்க வேண்டும்., எனக்கும் ஸ்பீக்கர் செட்களின் மேல் என்றும் தீராக்காதல் உண்டு. இப்போதும் தரமான புதிய ஸ்பீக்கர் செட்களை கடைகளில் பார்க்கும்போது தாண்டி வரவே மனசு வராது!
நீக்குஇப்போதுள்ள அநிருத் இசையை ரசிக்கும் தலைமுறையைப் பார்த்து பரிதாப்ப்படவேண்டியுள்ளது. வாலிகூட இக்காலத்தில் பிழைத்துக்கொள்வார். கண்ணதாசனால் முடியாது.
பதிலளிநீக்குஅதெல்லாம்
நீக்குதெய்வீகமான காலங்கள்...
இனிமை தொலைந்து விட்டது.
நீக்குஅநிருத் இசை ஒருபக்கம் கிடக்கட்டும். இப்பொழுது திரைப் பாடல்(!) எழுதும் கவிஞ்ஜர்கள்பற்றி இங்கு பேச ஆரம்பித்தால்... நீளும் கதை....
நீக்குகண்ணதாசன், வாலி காலத்தில் நாம் வாழ்ந்துவைத்தோம், அவர்களுக்கு முந்தைய கவிஞர்களின் பாடல்களையும் நாம் ஆசையாகக் கேட்டுவைத்தோம் என நினைத்துத் திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான்.
/// இந்தப் பாடலில் டி.ஆர். ராஜகுமாரி அவர்களது குரல் இடம் பெற்றிருக்கிறது.. ///
பதிலளிநீக்குஇப்போது பாடலை நவீனத்துவம் செய்கின்றேன். என்று சிதைக்கின்றார்கள்...
ஜீவன் இல்லாமல் போகின்றது..
ஆம். இந்த ரீமிக்ஸ் கலாச்சாரம் ஆட்டி வைக்கிறது.
நீக்குகங்கைக்கரைத் தோட்டம்..
பதிலளிநீக்குசின்ன வயதில், சிக்கலில்லா மனதில் இதமாக வந்து உட்கார்ந்துகொண்ட பாடல். சுசீலாவின் குரலில்தான் இத்தகைய அழகு வரிகளை ஆனந்தமாக அனுபவிக்கமுடியும்...
ஆம். இளமையிலிருந்து ரசிக்கும் பாடல்களில் ஒன்று.
நீக்கு/// அரசமரம் சுற்றி வந்து முரசம் பல கொட்டி நின்று
பதிலளிநீக்குபன்னீர்ப்பூ எடுத்துவந்து பழரச அபிஷேகம் செய்து
பருப்போடு பாகும் பக்குவமாய் இனிக்கும்
தேங்காய் திருநீறும்
தீர்த்தமும் மணக்கும் .. ///
(பக்குவமான) பருப்புடன் பாகும் சேர்ந்து இனிக்கின்ற நிலையில் (அவனது சந்நிதியில் உடைக்கப்பட்ட)
தேங்காயும் திருநீறும்
தீர்த்தமும் (அவனருளால்) அருள் மணக்கும்..
இதற்கு மேல் தட்டச்சு இயலாது..
அருள் (மணக்கும்) என்பது உணரப்பட வேண்டியது..
திருத்தி விட்டேன்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஇன்று சதுர்த்திக்கு பிள்ளையார் பாட்டு பொருத்தம். நல்ல பாட்டு கேட்டு மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குஅடுத்த பாடல் சிறு வயதிலிருந்து கேட்டு மகிழ்ந்த பாடல். மிகவும் பிடித்த பாடல்.
பாடல்கள் பகிர்வுக்கு நன்றி.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஇனிமையான பாடல்கள்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குகண்ணன் முகம் கண்ட கண்கள்
பதிலளிநீக்குமன்னர் முகம்
காண்பதில்லை
கண்ணனுக்குத்
தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை..
கவியரசரின் கண்ணன் பாடல்களில் சிகரம் இது என்று சொல்லலாம்...
பசுபதி தத்துவத்தின் விளக்கம் இதுவே..
இதுவே சரணாகதி!..
மனதில் நின்று விடுகிறது.
நீக்குஇந்தப் பாடலின் ஒரு வரியைக் கொண்டு
பதிலளிநீக்குஇன்னொரு பாடலும் இருக்கின்றது..
அதிலும்
கவியரசர்
சுசிலா
தேவிகா தான்!..
ஒரே வித்தியாசம்
அந்தப் பாடல் மெல்லிசை மன்னரது கை வண்ணம்..
சட்டென நினைவுக்கு வரவில்லை. ஆனால் வேறொரு பாடலின் வரியைச் சொல்கிறேன். கவர்ந்த வரி.. "உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்... ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்... -------------- உண்மையை அதிலே உறங்க வைத்தான் "
நீக்குஓய்.. வாத்யாரே!.. இந்தப் பாட்டைப் பாடிக்கினு இருந்தாக்க மோச்சத்துக்குப் போய்டலாம்.. ங்கிறியா?..
பதிலளிநீக்குஆமாம்..
மெய்யாலுமா!..
ஆமாய்யா.. ஆமா!..
பாடவேண்டாம், கேட்டாலே போதும்.
நீக்குகாலத்தால் அழியாத பாடலை இன்றைக்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்ததற்கு அன்பு நன்றி!
பதிலளிநீக்குஇந்தப்பக்கத்திலிருந்து வெளியே போன பின்பும் கூட, மனதிற்குள்ளேயே இசைத்துக்கொண்டிருக்கிறது!
// இந்தப்பக்கத்திலிருந்து வெளியே போன பின்பும் கூட, மனதிற்குள்ளேயே இசைத்துக்கொண்டிருக்கிறது! //
நீக்குசரியாய்ச் சொன்னீர்கள். சென்ற வாரமே ஷெட்யூல் செய்து விட்டேன். ஒரு வாரமாய் மனதைப் படுத்துகிறது பாடல்.
இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள். முதல் பாடல் சிறுவயதில் எங்கள் வீட்டில் ஒலிக்கும் பாடல்களுள் ஒன்று.
பதிலளிநீக்குஇரண்டாவது வானொலியில் கேட்டு ரசித்த பாடல். மிகவும் அருமையான பாடல் கேட்கும்போது மனம் உருகி நிற்கும்.
இன்றைய பாடல் பகிர்வு சிறப்பு. நன்றி.
நன்றி மாதேவி.
நீக்குமுதல் பாடல் கேட்டுருக்கிறேண். அருமையான பாடல்.
பதிலளிநீக்குகங்கைகரைத் தோட்டம் அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல், சுசீலா அவர்களின் குரல் தெய்வீகம் உதட்டசைவில்., அருமையான விருந்து. கண்ணுக்கும் காதுக்கும்,
துளசிதரன்
நன்றி துளஸிஜி.
நீக்குஸ்ரீராம் முதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் இதே மெட்டில் அப்படியே வேறு வரிகளுடன் பாடல் இருக்கிறதா? அப்படியும் கேட்ட நினைவு ஆனால் எனக்குதான் வரிகள் சட்டென்று நினைவுக்கு வராதே...
பதிலளிநீக்குஅழகான பாடல். பாடல் கேட்டதும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறாது.
இரண்டாவது பாடலும் நிறைய கேட்டு மிகவும் பிடித்த பாடல். சிலோன் வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல்.
கீதா
இதே மெட்டில் இன்னொரு பாடலா? எனக்கொன்றும் தோன்றவிலையே கீதா....
நீக்குகங்கைக்கரைத் தோட்டம்! என்ன ஒரு அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. கண்களில் நீருடனேயே கேட்க வேண்டும். இந்தப் பாடலின் வரிகளை என்னோட கண்ணன் வந்தான் தொடரில் ருக்மிணி கல்யாண அத்தியாயங்களில் பயன்படுத்திக் கொண்டேன். கூடவே பாரதியின் கண்ணன் பாடல்களும். கண்ணனைப் பற்றிய எந்தச் சின்னச் செய்தியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. படித்துப் படித்து இன்புற வேண்டியது.
பதிலளிநீக்குஅப்பா.. கீதா அக்கா... எனக்குத் தெரிந்து முதன்முறையாக ஒரு பாடலை இந்த அளவு சிலாகித்திருக்கிறீர்கள்.
நீக்குமுதல் பாடல் அதிகம் கேட்டதில்லை என்றாலும் ஓரளவு தெரியும். ஆனால் சூலமங்கலம் சகோதரிகள் குரலில் இல்லையோனு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவேறு யார் குரலில்? வேறு யார் பாடியும் நான் கேட்டதில்லை.
நீக்கு"கண்ணனுக்கு தந்த உள்ளம்
பதிலளிநீக்குஇன்னொருவர் கொள்வதில்லை".
அருமையான வரிகள். இதே கருத்தை நினைவுபடுத்தும் இன்னொரு பாடல், " தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா? தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா?"
நெஞ்சில் ஓர் ஆலயம். அருமையான நினைவூட்டல். வாங்க கோ.. எப்படி இருக்கீங்க?
நீக்குசரியாகப் பிடித்தீர்கள்.. அருமையான உணர்வு, வார்த்தைகள்.
நீக்குகவியரசர், சுசிலா அம்மா, தேவிகா, மெல்லிசை மன்னர்..
பதிலளிநீக்குஇன்னும் கண்டு பிடிக்க முடிய வில்லையா!..
அடுத்த வாரம்..
உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யார் அறிவார் பாடலா?
நீக்குஆகா!...
நீக்குஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுகென்றே
சொல் சொல் சொல்!..
Aahaa... lovely !
நீக்கு