வைரமுடி யாத்திரை – மேல்கோட்டை வைரமுடி, ராஜமுடி தரிசனம் – பகுதி 22
உற்சவர் செல்வப்பிள்ளைக்கு வைரமுடியை அணிவித்த பிறகு, உபய நாச்சிமார்களுடன், தங்க கருட வாகனத்தில் அமரவைக்கிறார்கள். இந்த தங்க கருட வாகனத்தின் பிரபை, இருபுறமும் யாளிகளைக் கொண்டது (படங்களில் தெளிவாகத் தெரியும்). பல்லக்கில் ஒருவர் அமர்ந்துகொள்ள (கற்பூர ஹார த்தி காண்பிக்க), பல்லக்கின் முன்பாக ஒருவர் சாமரம் வீச, பல்லக்கை இருபுறமும் பலர் சுமந்துகொண்டு வர, ஊர்வலம் நடக்கிறது. கூட்டம் மிக மிக அதிகம் என்பதால், நிறைய காவலர்களும் டியூட்டியில் இருப்பார்கள். பல்லக்கின் இரண்டு புறங்களிலும் மற்றும் பின்புறமும் இரும்பால் ஆன நகரும் தடுப்புகளை அமைத்துக்கொண்டே வருவார்கள். பல்லக்கு தெருவின் ஒரு புறம் திரும்பி அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பெருமாள் தரிசனம் தருவார் (சுமார் 1-2 நிமிடங்கள்) பிறகு பல்லக்கு தெருவின் மறுபுறம் திரும்பும். அதே நிலையில் இன்னொரு 2 நிமிடங்கள். அப்போது தெருவின் இருபுறமும் இருப்பவர்களுக்கு பல்லக்கில் பெருமாளின் முன்னழகும் பிறகு பின்னழகும் தெளிவாகத் தெரியும். பிறகு தெருவைப் பார்த்துக்கொண்டு ஒரு நிமிடம். அப்புறம் இன்னுமொரு 15-20 அடிகள் முன்னேறும். இப்படி நத்தை வேகத்தில் தான் ஊர்வலம் இருக்கும். பெருமாளின் வெகு அருகில் பக்தர்கள் செல்ல இயலாது. ஆனால் வைரமுடி தரிசனம் எனக்குக் கிடைக்கவில்லை என்று ஒரு பக்தரும் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை.
ஆனால் தெருவின் இருபுறமும் இருந்த இடத்தை விட்டுவிட்டு, பல்லக்கை நோக்கி முன்னேறினால் கூட்டம் நெருக்கித் தள்ளும். கொஞ்சம் ஆபத்துதான்.
நான்கு மாட வீதிகளும் செவ்வக வடிவத்தில் இருக்கிறது. நீண்ட பகுதி 300 மீட்டர் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த 300 மீட்டரைக் கடக்க சுமார் 1 ½ - 2 மணி நேரமாகும். இரவு 10 மணிக்கு புறப்பாடு ஆரம்பித்தால், பல்லக்கு திரும்பவும் கோவிலுக்கு வரும்போது அதிகாலை 4 மணி ஆகிவிடும். ஊர்வலம் முழுவதும் தெருக்களின் முனையில் உள்ள பெரிய திரையில் ஒளிபரப்பாகும். அதனால் பல்லக்கு எங்கு இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரியும். தேவையில்லாமல் பல்லக்கின் அருகில் சென்று தரிசனம் செய்கிறேன் என்று நினைத்தால், தடுப்புக்காகப் போடப்படும் நகரும் தடுப்புகள், காவலர்கள் அவற்றை நகர்த்தும்போது நம் கால்களைப் பதம் பார்க்கும், நெருக்கும் பக்தர் கூட்டமும் stampedeக்கு வழிவகுக்கும்.
இரண்டு
வருடங்களிலும் எனக்கு மிக நிறைவான தரிசனம் வாய்த்த து. ஒரு சிலரின் உதவியால், பல்லக்கின்
இடையில் சென்று பெருமாளை மிக அருகில் ஓரிரு நிமிடங்கள் தரிசனம் செய்ய முடிந்தது.
பல
நேரங்களில், நாமும் அங்கிருந்தோம், செல்வப் பிள்ளையைப் படம்
எடுத்தோம் என்ற ஆர்வம் பக்தர்களிடையே அதிகரித்துவிடுகிறது. அந்தக் கூட்டத்திலும் பெருமாளை
செல்ஃபோன் திரை மூலமாகக் காண்பதில் மகிழ்ச்சி.
மிக மெதுவாக
தெருவின் இரு புறமும் திரும்பி, அந்த நிலையிலேயே ஓரிரு நிமிடங்கள் தரிசனம் தருவதால், தரிசனம்
தெளிவாக இல்லை என்று யாருமே குறை சொல்ல இயலாது. எங்கெங்கிருந்தோ இந்த
தரிசனத்திற்காகப் பயணம் செய்து வரும் பக்தர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? கூட்டத்தின்
அடர்த்தி இந்தப் படங்களில் தெளிவாகத் தெரிகிறதல்லவா?
வைரமுடியுடன்
கூடிய பல்லாக்கு ஊர்வலம் காலை 4 மணி வாக்கில் நிறைவு பெறும். பல்லக்கு கோவிலுக்கு எதிரே உள்ள
பெரிய மண்டப த்திற்குச் சென்றுவிடும். முழுவதுமாக கதவைச் சாத்திய பிறகு வைரமுடி களையப்பட்டு, பாதுகாப்பு
வேனுக்கு எடுத்துச் செல்லப்படும். பிறகு உற்சவருக்கு மாற்று அலங்காரம் செய்யப்பட்டு, ராஜ முடி
அணிவித்துத் தயாரான பிறகு மண்டபத்திலிருந்து வெளியே வருவார்.
காலை 4 மணிக்கு
கோவில் கோபுரங்கள் விளக்கு வெளிச்சத்தில் அழகுறக் காட்சியளிக்கிறது
ராஜமுடி
வாஹனமண்டபத்துக்குச் செல்கிறது. ராஜமுடி அணிவித்தபிறகு, வைரமுடி கோவிலுக்குக்
கொண்டுவரப்படுகிறது (இது இரண்டும் இட்லி பானையில்தான் துணிகள் சுற்றி
வைத்திருப்பார்கள். அந்தக் காலத்தில் இருந்த நடைமுறை இப்போதும்
பின்பற்றப்படுகிறது). இதற்குப் பிறகு வாஹன மண்டபத்திலிருந்து செல்வப்பிள்ளை
ராஜமுடியுடன் கோவிலுக்கு எழுந்தருளுவார்.
ராஜமுடியுடன்
காலையில் 5 ½ மணிக்கு கோவிலுக்கு முன்பு தரிசனம். 300-500 பேர் இந்தத் தரிசனத்துக்காக
காத்திருப்பார்கள். வாஹன மண்டபத்திலிருந்து (கோவிலுக்கு எதிரே உள்ளது) கோவில்
வாசலுக்கு 80 அடி தூரம்தான் என்றாலும், மெதுவாக ஒவ்வொரு பக்கமும்
திரும்பி எல்லோரும் இறைவனை ராஜமுடியுடன் தரிசிக்க வேண்டும் என்று நிறுத்தி
நிறுத்தி தரிசனம் பெறவைப்பார்கள். ஆனால் இவ்வளவும் 10 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும்.
திருவாய்மொழியின் கீழே உள்ள பாசுரங்கள் திருநாராயணபுரம் பெருமாளைப் பற்றியது என்று பெரியோர்கள் சொல்வர், நேரடியாக ஊர் பெயர் குறிப்பிடப்படாத போதிலும்.
ஒரு
நாயகமாய்* ஓட உலகுடன் ஆண்டவர்,*
கருநாய்
கவர்ந்த காலர்* சிதைகிய பானையர்,*
பெருநாடு காண* இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,*
திரு நாரணன் தாள்* காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ.
உலகை ஆட்சி செய்த அரசனானாலும், ஒரு நேரத்தில் தரித்திரர்களாக இந்தப் பிறவியிலேயே கஷ்டமுறும் நிலையை அடைவார்கள். அதனால் நேரம் இருக்கும்போதே நாராயணனின் தாள்களைப் பற்றிக்கொள்ளுங்கள்.
வாழ்ந்தார்கள்
வாழ்ந்தது* மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து,*
ஆழ்ந்தார்
என்றல்லால்* அன்று முதல் இன்றறுதியா,*
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்* என்பதில்லை நிற்குறில்,*
ஆழ்ந்தார் கடல் பள்ளி* அண்ணல் அடியவர் ஆமினோ
இந்த உலகத்தில் எப்போதும் ராஜபோகமாக நன்றாக வாழ்ந்தவர்கள் இல்லை. வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போன்றது. நிலையான வாழ்வு கிடைக்க அந்த இறைவனைச் சரண் அடையுங்கள்
சென்ற வருடம்
இரவு முழுவதும் முழித்திருந்து வைரமுடி மற்றும் ராஜமுடி தரிசங்களைக் கண்டேன். இந்த முறை, வைரமுடியுடன்
செல்வப்பிள்ளையின் தரிசனம் முடிந்ததும், 4 மணிக்கு அலாரம் வைத்துக்கொண்டு தூங்கிவிட்டேன். காலையில்
எழுந்து கோவிலுக்குச் சென்று காத்திருந்து ராஜமுடி தரிசனம் பெற்றேன். பிறகு, காபி
முடிந்தபின், எல்லோரையும் கல்யாணி திருக்குளத்தில் குளித்துவிட்டு பெட்டி
படுக்கைகளோடு தயாராக இருக்கும்படியும், பேருந்து வந்ததும், லக்கேஜ்களை ஏற்றிவிட்டு, பெங்களூர்
நோக்கி 7 மணிக்குக் கிளம்பவேண்டியதுதான் என்று யாத்திரை நடத்துபவர்
சொன்னார். அனேகமாக குழுவில் எல்லோரும் சென்னைக்கு 2 ¼ மணி இரயிலில்
பெங்களூர் மெஜெஸ்டிக் இரயில் நிலையத்தில் ஏறணும். செல்லும் வழியில் இரண்டு
கோவில்கள் தரிசனம் வேறு இருக்கிறது. நான் கல்யாணி
திருக்குளத்துக்குச் சென்று குளித்துவிட்டு, என்னுடன் தங்கியிருந்தவர்களோடு
திரும்பினேன். வழியில், எதுக்கு மேல்கோட்டை வந்துவிட்டு விடுவானேன் என்று மெஸ்ஸில்
தட்டை இட்லி சாப்பிட்டேன். மற்றவர்களும் இட்லி, தோசை என்று சாப்பிட்டனர் (10 ½ மணிக்கு
செல்லும் வழியில் உள்ள கோவிலில் உணவு கொடுப்பார்கள். இருந்தாலும் ஆசை யாரை விட்டது?)
அதிகாலை
கல்யாணி திருக்குளம் மற்றும் மலைமேல் யோக நரசிம்மர் ஆலயத் தோற்றம்.
(தொடரும்)
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..
பதிலளிநீக்குதமிழ் வாழ்க..
வாங்க துரை செல்வராஜு சார்.. சமீபத்தில் படித்தேன். பனிரண்டு வழிகளில் இறைவனை அடையலாம் என்று. அதில் ஒன்று எப்போதும் சத்தியத்தையே பேசி அதன் வழி நடப்பது. சுலபம்றீங்க?
நீக்குஉண்மை தான்..
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குகார்த்திகை நாள் கருக்கலில் கார்வண்ணனின் கண்கவர் தரிசனம்..
பதிலளிநீக்குஸ்ரீ செல்வ நாராயணப் பெருமாள் சீர்நலம் தந்து காத்தருள்வாராக..
திருக்கார்த்திகையில் நம் வாழ்வு இன்னும் நலம் பெற ஆரம்பிக்கட்டும்.
நீக்கு/// உலகை ஆட்சி செய்த அரசனானாலும், ஒரு நேரத்தில் தரித்திரர்களாக இந்தப் பிறவியிலேயே கஷ்டமுறும் நிலையை அடைவார்கள். அதனால் நேரம் இருக்கும்போதே நாராயணனின் தாள்களைப் பற்றிக்கொள்ளுங்கள்.///
பதிலளிநீக்குபொருள் கொண்ட யாரும் உணர்ந்து கொள்வதேயில்லை..
அதுவானாலும் இதுவானாலும்
அவரவர்க்கு விதித்தபடி தான்!..
இதை எழுதும்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ரேமென்ட்ஸ் தொழிலை ஆரம்பித்துப் பெரும் பணக்கார்ரான சிங்கானியா அவர்கள் பொறுப்பு மற்றும் சொத்தை தன் மகனிடம் கொடுத்துவிட்டார். மகன் தொழிலிலிருந்தும் மற்றும் வீட்டிலிருந்தும் தந்தையை விரட்டிவிட்டான். பொலிவிழந்து அவர் இன்றுவரை கஷ்டப்படுகிறார். சமீபத்தில் மகன் செய்த தவறினால் குடும்ப இழப்பும் பெரும் பண இழப்பையும் சந்தித்தபோது அவர் சொன்னது, என் காலம் இரண்டு மூன்று வருடங்கள்தாம். எப்போதும் இறுதி வரை பெற்றோர்கள் பணத்தைத் தங்கள் கையிலேயே வைத்திருக்கவேண்டும். அவசரப்பட்டு வாரிசுகளுக்குக் கொடுத்துவிடக் கூடாது என்பதுதான்.
நீக்குஇந்த நாள் இனிதாயிற்று...
பதிலளிநீக்குஎப்போதோ எழுதி அனுப்பிவிடுகிறேன். வெளியிடும்போது நானும் இன்னொருமுறை படித்துவிடுவேன். (அதிகாலையில் முதல் வேலையாக எ.பியைப் பார்த்துவிடுவேன்)
நீக்குநேரில் சென்று சேவிக்க முடியவில்லை எனினும் படங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது. படங்கள் அழகாக வந்திருக்கின்றன.
பதிலளிநீக்குJayakumar
மிக்க நன்றி ஜெயகுமார் சார். அடுத்த வருடமும் தரிசனம் செய்ய ஆவல். ஆனால் மே மாதம் வரை நிறைய வேலைகள் இருக்கின்றன
நீக்குசிறப்பான பதிவு. பல அறியாச் செய்திகள். அதனால் வாசிக்கையிலே ஆர்வம் கூடியது. சிறப்பான படங்கள் நேரில் தரிசித்ததைப் போன்ற உணர்வைக் கொடுத்தன.
பதிலளிநீக்குநெல்லைக்கு நன்றி.
வாங்க ஜீவி சார். இப்போது சென்னையிலா?
நீக்குஇல்லை. வரும் மார்ச்சில் தான் சென்னை.
நீக்குசிறப்பு
பதிலளிநீக்குவாங்க கரந்தை சார்... நன்றி
நீக்குஅனைவருக்கும் திருக்கார்த்திகை நல் வாழ்த்துகள் ! வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குநேரில் பார்த்து தரிசனம் செய்த மகிழ்ச்சி கிடைத்தது.பதிவின் படங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்கு//பிரபையில் இரட்டை யாளி தெரிகிறதா?//
நன்றாக தெரிகிறது.
//அதிகாலை கல்யாணி திருக்குளம் மற்றும் மலைமேல் யோக நரசிம்மர் ஆலயத் தோற்றம்.//
அருமையான காட்சி.
பாசுரங்களை படித்து ராஜமுடியுடன் அழகிய தோற்றத்தில் இருக்கும் செல்வநாராயணரையும் உபய நாச்சியர்களையும் வணங்கி கொண்டேன்.
உங்கள் உதவியால் நாங்களும் வைரமுடி தரிசனம் செய்தோம், நன்றி.
கருத்துக்கு மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.... எழுத ஆரம்பித்தால் ஒவ்வொரு யாத்திரையும் பல வாரங்கள் எடுத்து விடுகின்றன. அடுத்து யாத்திரையாக எழுதலாமா படங்களாகப் போடலாமா என்று யோசிக்கிறேன்.
நீக்குவணக்கம் தமிழரே
பதிலளிநீக்குஅழகிய படங்களுடன் படிப்படியாக விளக்கிய விதம் சிறப்பாக இருக்கிறது.
வாங்க கில்லர்ஜி...இன்று விடுமுறையா இல்லை வாரத்தின் முதல் வேலை நாளா?
நீக்குஇங்கு இப்போது சனி, ஞாயிறு அரசு விடுமுறை ஆங்கிலேயரின் வேலை இது.
நீக்குஎனக்கு இன்று மட்டும் விடுமுறை (தனியார் கம்பெனி)
Self discipline உள்ள நீங்கள் நல்லா இருக்கணும், உங்களால் பலருக்கு உதவி கிடைக்கணும் என்று வாழ்த்துகிறேன்.
நீக்குஉலகத்தோடு ஒத்துப் போக வேண்டும் என்று ஐக்கிய எமிரேட்டும் தற்போது வாராந்திர விடுமுறைகளை மாற்றிக் கொண்டுள்ளது..
நீக்குகுல தர்மம் இருந்ததென்றால் எல்லா நாட்களும் வேலை தான்.. எல்லா நாட்களும் ஓய்வு தான்..
நீக்கு@ அன்பின் நெல்லை..
பதிலளிநீக்கு/// எப்போதும் இறுதி வரை பெற்றோர்கள் பணத்தைத் தங்கள் கையிலேயே வைத்திருக்கவேண்டும். அவசரப்பட்டு வாரிசுகளுக்குக் கொடுத்துவிடக் கூடாது என்பதுதான்.. ///
நிதர்சனமான உண்மை..
எப்போதோ கவியரசர் பாடி வைத்து விட்டார்..
பணத்தின் மீது தான் பக்தி என்ற பின்
பந்த பாசமே ஏதடா?..
கண்ணதாசன் வாயிலிருந்த சரஸ்வதி தேவி எப்படியெல்லாம் தீர்க்க தரிசனமாக அவரைப் பாட வைத்திருக்கிறாள் பாருங்கள்.
நீக்குகண்ணதாசன் நாவிலிருந்த சரஸ்வதி தேவி எப்படியெல்லாம் தீர்க்க தரிசனமாக அவரைப் பாட வைத்திருக்கிறாள்!..
நீக்குஉண்மை..
உண்மை..
@ அன்பின் நெல்லை..
பதிலளிநீக்குபனிரண்டு வழிகளில் இறைவனை அடையலாம் என்று...
அதையும் சொல்லி விடுங்களேன்...
பற்றிக் கொள்ள விழைவோர்க்குப் பயனுள்ளதாக இருக்கும்..
அதில் முக்கியமானதும் எளிதானதும், 'சரணாகதி' என்பதுதான். அதாவது எனக்கு உன்னை விட்டால் யாருமில்லை என்ற திட மனத்துடன் கூடிய சரணாகதி. இது சொல்ல மிக எளிதாயிருக்கும். ஆனால் கடைபிடிப்பது மிகக் கடினம். இராமாயணத்தில் ஒரு நிகழ்வைப் படித்திருப்பீர்கள். பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட ஹனுமானை, காட்டுக் கொடி தழைகளாலும் அசுரப்படைகள் கட்டும். பிற கொடிகளைக் கட்டியதால் பிரம்மாஸ்திரம் வலுவிழந்துவிடும். அதுபோல, சரணம் என்று புகுந்த பிறகு, மனது 'வேண்டுதல்' எதையும் வைக்கக்கூடாது, பயனுக்காக எதையும் செய்யக்கூடாது. திட நம்பிக்கையோடு வாழ வேண்டும். அப்படி இருந்தால், மரண காலத்தில் சரணமடைந்த தெய்வத்தின் நினைவு இல்லாத போதிலும் இறைவன் தடுத்தாட்கொள்வேன் என்று உறுதியளிக்கிறார்.
நீக்குஇந்திர ஜித் ஏவிய பாணம் பிரம்மாஸ்திரம் என்பதால் அனுமன் பணிவுடன் அதற்குக் கட்டுப்படுகின்றார்..
நீக்குநாம் வேண்டிக் கொண்டதை விட , நமக்குக் கிடைத்திருப்பவை அதிகம்.. அதிகமே..
நீக்குஇதைத்தான் அபிராம பட்டரும் சொல்கின்றார்..
நீக்குஅவளே வந்து அழைத்துச் செல்வாள்!.. - என்று..
இரண்டரை வருடங்களுக்குப் பிறகு மூன்று கிமீ., நடந்து சென்று அரசூர் முருகன் கார்த்திகை தரிசனம்..
பதிலளிநீக்குஇப்போது தான் வந்தேன்...
மூன்று கிமீ நடந்தீர்களா? அந்த அரசூர் முருகனே வரவழைத்துவிட்டான் போலிருக்கிறது.
நீக்குஇப்போதைய நிலையில் இது உடல் நலத்தில் முன்னேற்றம் தான்..
நீக்குநன்றி.. நன்றி..
தகவல்களுடன் படங்கள் அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குயாளி வைரமுடி , ராஜமுடி அணிந்து செல்வப்பிள்ளை அழகாக வருகிறார். வணங்கிக் கொண்டோம்.
பதிலளிநீக்குபடங்கள் அழகு.