செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

சிறு தொடர்கதை - மோனா, மோனிகா, மனிஷா மற்றும் புழக்கடை மோகனா 1/5 - அப்பாதுரை

 

மோனா, மோனிகா, மனிஷா மற்றும் புழக்கடை மோகனா

    மெலிதான விஸ்கி போதையிலிருந்தான் ரகு. மதன், மதனின் மனைவி டாக்டர் வைசாலி என்கிற வைஷ், ஹரியின் மனைவி ஸ்வேதா... மூவரும் சிரித்தபடி உடன் குடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கோப்பைகளில் சற்று முன் இருந்த விஸ்கியின் அடையாளம் தெரிந்தது. சிரிப்பே வராத வடிவேலு நகைச்சுவை ஒன்றை நடித்துக் கொண்டிருந்தான் மதன். பிடிக்காமல் வெளியே பார்த்தான் ரகு. இளமாலையை இடித்துக் கொண்டிருந்தது இரவு. அன்றைய நாளின் எஞ்சிய ஒளியில் வானம் பழைய கேவா கலர் படம் போலத் தெரிந்தது. தன் மனைவி ஷோபாவும் ஹரியும் வருவதைப் பார்த்த ரகு கோப்பையை உயர்த்தி, "வந்து சேந்தீங்ளா? விஸ்கியா வைனா?" என்றான்.
    "நம்ம பசங்க இங்க வந்தாங்களா?" என்ற ஷோபாவின் குரலில் அச்சம் தொனித்தது. "அரைமணியா தேடிட்டிருக்கோம், ரூம்ல பாத்துட்டோம், லாபில காணோம், எதிர்ல கடற்கரை கூட்டத்திலும் காணோம்" என்றான் ஹரி.
    "வாலுங்க எங்கயாவது விளையாடிட்டிருக்கும். இத்தனை பெரிய கடற்கரையாச்சே?" என்றான் ரகு. "நிறைய பாதுகாப்பு இருக்கு, எங்கயும் போயிட முடியாது... வாங்க.. வந்து ரிலாக்ஸ் பண்ணுங்க"
     "கவலைப்படாதிங்க, அவங்களா வருவாங்க" என்றாள் ஸ்வேதா. "ஆமாம். நோ வரீஸ். இங்க வா ஷோ, என் பக்கத்துல உக்காரு" என்றாள் வைசாலி.
    "இல்லை வைஷ். நாங்கள்லாம் டின்னர் சாப்டிட்ருந்தமா? ஐஸ்க்ரீம் எடுத்துட்டு வரேன்னு போனாங்க மனிஷாவும் மோனாவும். பத்து நிமிஷமாகியும் காணோம்" என்றான் ஹரி.
     "நான் போய் பாத்துட்டு வரேன்னு கிளம்பினேன். கூட மோனிகாவும் வந்தா" என்றாள் ஷோபா. "ஐஸ்க்ரீம் ஸ்டால்ல விசாரிச்சேன். அந்தாளு.. ஆமா இங்கே ரெண்டு பாப்பா வந்துச்சுமா. சாக்லேட் க்ரீம் அதிகமா வேணும்னு கேட்டாங்க. அதை எடுத்துட்டு வந்தா ரெண்டும் காணோம். ஒருவேளை வேணாம்னு போயிட்டாங்கனு நினைச்சேன். டேபிள்ல பாத்திங்ளானு கேட்டதும்.. பக்குனு ஆச்சு. பக்கத்துல நின்னுட்டிருந்த மோனிகாவிடம்.. நீ எதுக்கும் டேபிள்ல போய் பாத்துட்டு வானு சொல்லிட்டே திரும்பினா... மோனியைக் காணோம்... நான் திடுக்கிட்டு ஸ்டால் ஆளைப் பார்த்தா அவன் யார்ட்டமா பேசுறிங்க? தனியாத்தானே வந்திங்கன்றான்!"
    "மூணு பசங்களையும் திடீர்னு காணோம். டேய் மதன், அவங்க கைல கட்டியிருந்த ஜிபிஎஸ் பட்டிலந்து பலவீனமா ஒரு லொகேஷன் சிக்னல் வருது. தேடிப்போய் பாத்தா அது ஹோட்டலோட டேன்ஸ் ஹால். அங்கே யாருமே இல்லை" என்றான் ஹரி.

    "அங்கதான் இருக்கணும். போய் பார்க்கலாம்" என்று கிளம்பினார்கள். ஹாலில் யாரும் இல்லை என்றார் லாபி மேனேஜர் அறைக்கதவைத் திறந்து. வெளிச்சத்தில் அமைதியாக இருந்தது அறை. யாரும் வந்து போன சுவடு கூட இல்லை.     சில நொடிகளில் விவரம் உள்ளிறங்க, அங்கே பீதி நிலவியது. "மோனா" "மோனிகா" "மனிஷா" என்று ஆளுக்கு ஆள் அலறிக்கொண்டு ஹோட்டலையும் கடற்கரையையும் சுற்றினார்கள்.
    போலீஸ் வரும்போது இருட்டியிருந்தது. விடைபெறும் போது நள்ளிரவு பரவியிருந்தது. "அவசியம் கண்டுபிடிச்சுடுவோம். பயப்படாதிங்க" என்ற பெண் போலீஸ் அதிகாரியின் குரலில் கம்பீரம் தொனித்தது. "காலைல எல்லாரும் ஸ்டேஷன் வந்துருங்க. இப்ப கொஞ்சம் ஓய்வெடுங்க".
     "எனக்கு குமட்டிட்டு வருது ரகு, கொஞ்சம் கூட வா" என்றாள் ஷோபா. மனைவியை தோளணைத்து நடத்திச் சென்றான் ரகு. "இரு ஷோ, நாங்களும் வரோம்" என்று உடன் வந்தோருடன் அறைக்குள் நுழைந்ததும் கழிவறைக்குச் சென்ற மனைவியிடம் "ஷோ, உதவி வேணும்னா கூப்பிடு" என்றான் ரகு.
    "எதுக்கும் ரூம்ல தேடிப்பார்ப்போம்னு நினைச்சேன்.. ரகு.. இது உன் படுக்கைல கிடந்துச்சு" என்று ஒரு வெள்ளைக்காகிதத்தை நீட்டினாள் ஸ்வேதா.
     படித்துப் பார்த்த ரகுவின் முகம் ரத்தம் வடிந்த சக்கைத்தோல் போலானது. "என்னடா?" என்ற மதனிடம் காகிதத்தைத் தந்தான். படித்துப் பார்த்த மதன் முகமும் வெளிற, ரகுவிடம் காகிதத்தைத் திருப்பிக் கொடுத்து, "இதோ வரேன்.. ஹரி, உன் ரூம்ல செக் பண்ணு" என்றபடி அவசரமாக வெளியேறினான்.
     ஹரியும் மதனும் திரும்பிய போது அவர்களிடமும் தலா ஒரு வெள்ளைக் காகிதம் இருந்தது. ரகுவிடம் இருந்தாற்போல அதே வெள்ளைக்காகிதம். வெள்ளை என்றால் முழுக்க வெள்ளையில்லை. முனைகளில் மஞ்சளும் சிவப்பும் கலந்த வண்ணம். நடுவில் ஒரு சிறிய படம் வரைந்திருந்தது. ஒரு ரோஜாப்பூ. பளிச்சென்று சிவப்பு நிறத்தில் ஒரு ரோஜாப்பூ. கீழே "கதிர்காமம்" என்று அழகாக எழுதப்பட்டிருந்தது. மூன்றிலும்.

     மயங்கி விழப்போன மதனைத் தாங்கிப் பிடித்தான் ஹரி. சட்டென்று மூன்று காகிதங்களையும் எடுத்துக் கொண்ட ரகு, ஷோபாவின் அலறல் கேட்டு கழிவறைக்கு விரைந்தான். உள்ளே அலங்கோலமாகக் கிடந்தாள் ஷோபா. அவசரமாக உள்ளே வந்து உதவிய வைசாலி, "ஆம்பிளைங்க கொஞ்சம் வெளில இருங்க" என்றாள்."ஹோட்டல் லாபில இருங்க ப்லீஸ்".
     ஏறக்குறைய அரைமணி பொறுத்து வந்த வைசாலி, ரகுவை தனியாக அழைத்தாள். உடன் வந்த ஹரியை வைசாலி தடுத்தபோது "பரவாயில்லை வைஷ். உனக்கே தெரியும், நாங்க இன்னி நேத்து நண்பர்களில்லை. சொல்றதை சொல்லு. லெட் தெம் பி" என்றான் ரகு.
     "ஷோவோட மருத்துவரா இதைச் சொல்லலே ரகு, நம்ம நட்பு வட்டத்துல ஒருத்தியா சொல்றேன். ஷோ கர்ப்பமாயிருந்தாள். நாளைக்கு உன் பிறந்தநாள் போது சொல்லணும்னு ரகசியமா வச்சிருந்தா. ஐயம் ஸாரி. ஷோ கருவைத் தொலைச்சுட்டா"
     "கடவுளே! அவளுக்கு இப்ப எப்டி இருக்கு வைஷ்? ஆம்புலன்ஸ் சொல்லட்டா? ஆஸ்பத்திரி போகணுமா?" என்ற ரகுவை அமைதிப்படுத்திய வைஷ், "இப்ப உடனே அவசியமில்லே ரகு. அவசரகால சிகிச்சையும் மருந்தும் கொடுத்திருக்கேன். அடுத்த நாலஞ்சு மணி நேரத்துல அவ காயம் மோசமானா காலைல ஆஸ்பத்திரி போகலாம்"
    "காயமா?" என்ன சொல்றே வைஷ்?"
    "ஆமா ரகு.. இதை எப்படிச் சொல்றது.. ஷோவின் கர்ப்பம் இயற்கையா கலையலே.. ஒரு வேளை அவள் விழுந்து அடிபட்டிருக்கலாம்னு நினைச்சா கூட காயங்கள் பொருந்தி வரலே.. யாரோ அவள் கர்ப்பத்தை இழுத்து உருவி சிதைத்த மாதிரி.. நிறைய சிராய்ப்பு.. எனக்கே புரியலே.. உன்னிடம் இப்படி குரூரமா சொல்றதுக்கு மன்னிச்சுரு ரகு.." என்று அழத் தொடங்கினாள் வைசாலி. "நம் பிள்ளைகள் பற்றி ஏதாவது தெரிந்ததா?" என்று இன்னும் பலமாக அழுத வைசாலியைத் தொற்றி ஸ்வேதாவும் அழத்தொடங்கினாள். ஒரு கையால் ஹரியைப் பிடித்தபடி தன் பையிலிருந்து வெள்ளைக்காகிதங்களை எடுத்துப் பார்த்தான் ரகு. கதிர்காமம் என்ற எழுத்துக்கள் கலைந்து 'மோகனா' என்று மாறியதைப் பார்த்த நண்பர்கள் திடுக்கிட்டார்கள்.

[தொடரும்] சாத்தியம்: 94.3%

45 கருத்துகள்:

  1. செவ்வாயும் , புதனும் தொடர்கதை தினங்கள் ஆகிவிட்டன.

    இன்றைய கதை அந்த காலத்து தமிழ்வாணனை நினைவூட்டியது. ஆரம்பம் எதிர்பார்ப்புகளை தூண்டுகிறது. அதற்கேற்ப அடுத்து வரும் பாகங்கள் மேலும் சுவாரசியமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.

    பொறுப்பாசிரியர் கதையை சீர்படுத்தி, (பஞ்சுவேசன், பத்திகளுக்கு இடையில் இடைவெளி, போன்ற சங்கதிகள்) பதிப்பித்திருக்கலாம்.

    கதிர்காமமும், மோகனாவும் படங்கள் இல்லாத குறையை சரி செய்கின்றன.
    முதல் பாகம் என்பதால் அப்பாதுரை அவர்களின் போட்டோ படத்தையும் சேர்த்திருக்கலாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தமைக்கு நன்றி. வரூமி பகுதிகள் சுவாரசியமாக அமையும் என நானும் எதிரபார்க்கிறேன் :-)

      நீக்கு
    2. //வரூமி பகுதிகள் சுவாரசியமாக அமையும் என நானும் எதிரபார்க்கிறேன் :-)\ நானும்.. :))

      நீக்கு
  2. இன்று செவ்வாய்தானே!!?? டக்கென்று புதனோன்னு தோணிடுச்சு. ஏற்கனவே நாள் தேதி குழப்பவாதி நான்!!!!!!

    மஞ்சுவின் இரண்டாவது பாகம் அலமேலுவின் அட்ராசிட்டிஸ் வரும்னு நினைச்சேன்! என்னாச்சு?

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தலைப்பை பார்த்ததும் கில்லர்ஜியோன்னு ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அப்பாதுரை ஜி! ஆ!! பல்கொட்டி பேய் மாதிரி இது புழக்கடை மோகனா பேய்?!!! பழி வாங்குதோ. ஃப்ளாஷ் பேக்ல அந்த மூணு பசங்களுக்கும் மோகனாவுக்கும் கதிர்காமத்துல தீர்க்கப்படாத ஏதோ பிஸினஸ் டீல்!!!!!!! ???

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு தான், ஆட்டங்ளோஸ். இனிமே நான் என்ன எழுதுறதாம்?

      நீக்கு
  5. அப்பாதுரை அவரின் எழுத்து நடை எனக்கு எப்போதுமே பிடிக்கும்.

    மிக அருமையாகத் தொடங்கியுள்ளது.

    அவருடைய இணையதளத்தில் எல்லாப் பதிவுகளையும் மீண்டும் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன், 5/5 வராமல் போகும் சாத்தியம் அல்லது மிக சப் என்று அமையும் சாத்தியம் மிக அதிகம், அதாவது 95% ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :-) உங்க கணிப்போட நியாயம் புரியுது.
      சமீப சென்னை பயணத்துல நடேசன் பூங்கால ஒரு எழுத்தாளர் சந்திப்பு நடந்துச்சு. அழைச்சிருந்தாங்க போனேன். அதுல ஒரு எழுத்தாளர் (பழைய ப்ளாகர் பிரபலம், மிகப்பிரபலம்) என்னிடம் சொன்னது. "அப்பாதுரை, நீங்க ஏன் பிளாகர்ல வெற்றி பெறலே தெரியுமா? தொடர்ந்து எழுதமாட்டறிங்க, உங்க வாசகர்களை ஏய்க்கிறீங்க"... அப்பிடினு சொல்லிட்டே போனாரு. அவரு குடிச்சிட்டிருந்த காபியை பிடுங்கிட்டு "நான் வாங்கிக் குடுத்ததுயா அது'னூ சொல்லிட்டு ஓடிடலாமானு பார்த்தேன்.

      நீக்கு
    2. but seriously, நீங்க மணியான வாசகர். உங்க வாசிப்பு மற்றும் விமரிசன ஆழம் பத்தி அடிக்கடி வியந்திருக்கேன். சுழியை அடிக்கடி படிக்கிறீங்க என்பதே எனக்கு நிறைவா இருக்கு :-)

      நீக்கு
  6. அப்பாதுரை அவர்களின் திகில் கதை பல எதிர்பார்ப்புகளை தருகிறது. குழந்தைகள் என்ன ஆனார்கள்?
    ஷோவின் கர்ப்பம் கலைதலுக்கு யார் காரணம்? என்ற கேள்விகள் எழுகிறது.

    //கதிர்காமம் என்ற எழுத்துக்கள் கலைந்து 'மோகனா' என்று மாறியதைப் பார்த்த நண்பர்கள் திடுக்கிட்டார்கள்.//
    கதிர்காமம் மோகனாவிற்கு இந்த நண்பர்களால் இழைக்கப்பட்ட ஏதோ தீங்குக்கு பழி வாங்குகிறார் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலே, நீங்களும் கதையை போட்டுக் கொடுத்திட்டிங்களா..

      நீக்கு
  7. அப்பாதுரை ஐயா அவர்களுக்கு வணக்கம்..

    இன்று கதைக்களம்
    அருமையான தொடக்கம்...

    தொடர்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  8. பிள்ளைங்க காணாம போனது மாதிரி மோகினி பேய்???? காணாம போகாம இருந்தா சரி காணாம போகாம இருக்கற்துக்கு பேய்களின் கடவுளான Melinoe, Pazuzu (அது சரி இவங்களுக்கு என்னா கமிஷன் கொடுக்கணும்!!?) இவங்களை வேண்டிக்கிறேன்! மோகினி யாரோடதுன்னு தெரியலையே அதனால.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கதையின் முதல் பாகமே திடுக்கிட வைக்கிறது....

    தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  10. பல்கொட்டி பேய் போல இன்னும் ஒரு கதையோ... அப்பாதுரை அவர்களின் ஸ்வாரஸ்யமான எழுத்து இந்தக் கதையிலும்... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா.. உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. பல்கொட்டியை நிறைய பேர் நினைவு வச்சிருக்கிறது நிறைவா இருக்கு. நெகிழ்ச்சியாவும். (அந்த கதையை முடித்தேனா பார்க்க வேண்டும்).
      நிற்க,
      பல்கொட்டி திகில் கலந்த நகைச்சுவை கதை (முயற்சி)
      இது திகில் மட்டுமே கலந்த திகில் கதை (முயற்சி).
      இரவில் படிக்க வேண்டாம் என்று படம் காட்டலாமானு பாக்குறேன் :-)

      நீக்கு
  11. ஆகா! மர்மத்தொடர்கள் ஏபியில் த்ரில்லாக தொடக்கம் .தொடர.....வருகிறோம்.

    பதிலளிநீக்கு

  12. ஆஹா! உம்மோட கதையக் கண்டு ரொம்ப நாள் ஆகிப் போச்சு . விறுவிறுன்னு ஆரம்பம். 
    தொடரை நல்லவிதமா பூர்த்தி செய்ய அந்த கலர்சட்டை காத்தவராயன் அருள வேணும்.

    எல்லோருக்கும் என் வணக்கம்.  நலம் தானே?!

    பதிலளிநீக்கு
  13. ஆகா! நீங்களுமா? எல்லாம் காத்தவராயன் அருள் தான்.

    பதிலளிநீக்கு
  14. வாங்க, மோகன்ஜி!
    போன செவ்வாய்க்கு நம்ம ரிஷபன்ஜியை எபியில் பார்த்து மகிழ்ந்தேன். இந்த செவ்வாய்க்கு உங்களைப் பார்த்ததும் அந்த சந்தோஷம் இரட்டிப்பாகியிருக்கிறது.
    முகநூல்காரர்கள் அப்பப்போ ஒரு காலத்தில் நாம் கூடிக் குலாவிய இந்தப் பதிவு லோகத்திற்கும் வந்து எட்டிப்பார்ப்பது இங்கு எழுதுவோருக்கு உற்சாகத்தையும் எழுத்தில் செழுமையையும் கூட்டும்.
    நாளாவட்டத்தில் உங்கள் படைப்புகளையும் இங்கு பார்க்கும் கொடுப்பினை கிடைப்பின் அந்தக் கால சந்தோஷத்தையும் நாம்
    மீட்டெடுத்து விடலாம். சரியா, ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புக்கு நன்றி ஜீவி சார். என் மனதிலும் இந்த உறுத்தல் இருக்கவே செய்கிறது. இனி வருவேன். பொன்னான நாட்கள் நம் வலைப்பூ நாட்கள். வானவில் மனிதனில் மீண்டும் எழுதுகிறேனோ இல்லையோ, இங்கு அவசியம் எழுதுகிறேன்

      நீக்கு
    2. ஸ்ரீராமோட கிடுக்கிப்பிடி தெரியாம மோகன்ஜி சிக்கிக்கிட்டதில் ஸ்வீட் எடு கொண்டாடு என்று துள்ளத் தோன்றுகிறது. A1C நினைச்சா துள்ளலாவது கிள்ளலாவது.

      நீக்கு
  15. கதையின் ஆரம்பமே
    ரொம்ப காலத்துக்கு மடிசார் புடவை கட்டிய மாமியை பேண்ட்டில் பார்த்த திடுக்.

    அதென்ன pub-ஆ? பெங்களூரில் ரொம்ப காலத்திற்கு முன்னாலேயே pubs-களைப் பார்த்திருக்கிறேன். கதை நிகழ்விடம் என்ன சென்னையா? ஏன்னா இப்போலாம் பெங்களூர்காரங்க தான் சென்னை குடியில் மூழ்கித் தத்தளிப்பதாக அடிக்கடி சலிச்சிக்கிறாங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செம உவமை. ரசித்தேன்.

      சிறுகதை இலக்கணம் ஒன்றை மறந்து விட்டேன். கதை நிகழும் காலம் இடம் அறிவித்தால் முன்னும் பின்னும் போக ஏதுவாக இருந்திருக்குமே? இதுக்கு தான் மண்டபத்து எழுத்தாளர்களை சதசில் விடக்கூடாதுன்றது. (நல்லா கேட்டுக்குங்க ஸ்ரீராம்)

      நீக்கு
    2. குடி இப்ப எங்க இல்லை? போன வருடம் மகேந்திரா ரிசார்ட் வாடகைக்கு எடுத்தப்ப மாலை போட்டு வரவேற்ற கையோட ஒரு பை கொடுத்தாங்க. அதுல மூணு வகை மதுபானம் கொடுத்திருந்தாங்க.

      சென்னை fisherman coveல ரெண்டு நாள் தங்கினோம். இட்லி சாம்பார் இல்லேன்னுட்டாங்க. சரியான கடுப்பு. என்னய்யா இது தமிழ்நாட்டுல ரிஸார்ட்ட கட்டி தமிழ்நாட்டு தீனியே இல்லைனா எப்படினு சண்டை போட்டோம்.

      நீக்கு
  16. அருள் கூர்ந்து இந்தக் கதையில் பேய் புருடாவெல்லாம் வேண்டாம், அப்பாஜி.
    கு,ழந்தைத்தனமான அந்த பேய் சமாச்சாரங்கள் தாம் உங்கள் ரியலிச எழுத்து ராஜ நடையைக் கெடுத்து விடுகின்றன. உங்களில்
    புதுமைப்பித்தனின் சாயலை நான் அவ்வப்போது காண்பேன். தொடர்ந்து உண்மை வாழ்க்கைப் போக்கை மூடு திரை போட்டு மூடாத நிஜக்கதைகளை எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பேய்க்கதையா? குட்டிச்சாத்தான் கதை சார்.

      நீக்கு
    2. என்னில் பெரிய எழுத்தை எதிர்பார்க்கும் (காணும்?) சிலரில் நீங்க தான் பெரியவர். இல்லை, காஸ்யபனா சூரித்தாத்தாவா?

      அது சரி.. திருடன் ராஜமுழி கதை தான். :-)

      நீக்கு
    3. உங்க விருப்பத்துக்காக பிரேம்சந்த லெவல்ல ஒரு கதை எழுதிடறேன். அவனவள் பிச்சிக்கிட்டு போகாம இருந்தா சரி.

      நீக்கு
    4. நேரம் கிடைச்சா edgar allan poe வாசிக்க சிபாரிசு செய்கிறேன். போன நூற்றாண்டு (அதுக்கும் முன்னால இருக்கலாம்) எழுத்தாளர் - மயிர்க்கூச்செறியும் பயத்தை இலக்கியமாக்கியவர்.

      நீக்கு
  17. பேய்க்கதைகள் அக்கா என்றால் துப்பறியும் கதைகள் தங்கை. அல்லது vice versa..

    சுஜாதா அவரது சமூகக்கதைகளில் மிளிர்ந்த மாதிரி துப்பறியும் கதைகளில் எடுபடவில்லை என்பது என் சொந்த அபிப்ராயம்.
    காரணம் சமூகத்தின் கோணல் மாணல்களை எழுத்தாளன் உள்ளார்ந்து
    பார்க்கும் பார்வையை
    துப்பறியும் கதைகளில் இழக்கிறான் என்பதே.
    ஒரு விதத்தில் அதுவும் பாடம் தாம்.

    பதிலளிநீக்கு
  18. //சுஜாதா அவரது சமூகக்கதைகளில் மிளிர்ந்த மாதிரி துப்பறியும் கதைகளில் எடுபடவில்லை என்பது என் சொந்த அபிப்ராயம்.\\ உண்மை. ஆனால் சுஜாதாவை எழுத்து கடவுள் என்பவர்கள் ஏற்பார்களா?

    பதிலளிநீக்கு
  19. எனக்கு சுஜாதாவை பிடித்ததற்குக் காரணம் அவருடைய கணேஷ், வசந்த் கதைகளால்தான். அவருடைய சமூகக் கதைகளில் இருந்த சோகம் எனக்குப் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
  20. அவருடைய விதவிதமான மற்ற சமூகக்கதைகளை நீங்கள் படித்திருக்கவில்லை போலும். சாம்பிளுக்கு ஒன்று: கல்கியில் தொடராக வந்த 'இருள் வரும் நேரம்' என்ற கதை கிடைத்தால் படித்துப் பாருங்கள். உங்கள் பெங்களூரில் நடக்கும் கதை தான். மனுஷர் என்னமாய் எழுதியிருப்பார் தெதியுமா? அதுசரி, கணேஷ் - வசந்த் அறவே அண்டாத 'ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்' படித்திருக்கி றீர்களோ?.

    பதிலளிநீக்கு
  21. சுஜாதாவின் சில நாடகங்கள் எனக்குப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  22. வாசகர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள்: கதையைப் படித்து அதுவரை வெளியான கதை பற்றி மட்டும் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். மேற்கொண்டு கதை எப்படி போகும் என்கிற அனுமானங்களை தவிர்ப்பது நல்லது. அது எழுதுபவரின் inspiration ஐ பாதிக்கும். இது என்னுடைய அனுபவபூர்வமாக, சொந்த கருத்து.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!