திங்கள், 2 செப்டம்பர், 2024

"திங்க"க்கிழமை  :  கார்ன் ஃப்ளேக்ஸ் மிக்ஸர் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

 கார்ன் ஃப்ளேக்ஸ் மிக்ஸர்


தேவையான பொருள்கள்:

கார்ன் ஃபேளேக்ஸ் - 200 gms

காலையில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட பயன்படுத்தும் கார்ன்ஃப்ளக்ஸ் இல்லை. மிக்ஸர் செய்வதற்கு என்று அடர் மஞ்சள் நிறத்தில் சற்று தடியாக கிடைக்கும்.

பொரிக்கத் தேவையான எண்ணெய்

உப்பு  - 1 டீ ஸ்பூன்

காரப்பொடி - 1 டீ ஸ்பூன்

முந்திரி பருப்பு  10 -15

கிஸ்மிஸ் - 2 டேபிள் ஸ்பூன்

நிலக்கடலை  -  2 டேபிள் ஸ்பூன் 

கருவேப்பிலை- ஒரு ஆர்க்

செய்முறை:

ஒரு சிறிய கப்பில் உப்பு, காரப்பொடி இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், ஒரு கையளவு கார்ன் ஃப்ளேக்ஸ் போட்டு பொரித்தெடுக்கவும். பொரிந்த கார்ன்ஃபேளேக்ஸ் அடர் மஞ்சள் நிறம் குறைந்து க்ரீம் நிறமாக, மெலிதாக இருக்கும்.

பொரித்த கார்ன் ஃபேளேக்ஸை வடிதட்டில் போட்டதும் அதன் மீது கலந்து வைத்திருக்கும் உப்பு, காரத்தூள் கலவையை சிறிதளவு கைகளால் எடுத்து தூவவும். இதே  முறையில் எல்லா வற்றையும் வறுத்த பின் ஒடித்த முந்திரி, கிஸ்மிஸ், கருவேப்பிலை ஆகியவற்றையும் வறுத்து, வறுக்கப்பட்ட கார்ன் ஃப்ளக்ஸோடு சேர்த்து காற்று புகாத டப்பாவில் போட்டு குலுக்கி மூடி வைத்து விடவும். 


ருசியான, அதே நேரத்தில் செய்வதற்கு சுலபமான மிக்ஸர் இது. 

21 கருத்துகள்:

  1. பார்க்க அழகாக உள்ளது.
    வயதானபின் வீட்டில் பலகாரங்கள் செய்வது குறைந்து விட்டது. மெனக்கெடல் கூடுதல். வேண்டியவற்றை அவ்வப்போது 100 கிராம் என்று வாங்கி கொண்டால் போதும் என்ற நினைப்பு தான்.

    செய்முறை படங்கள் நன்றாக உள்ளன. சீனிச்சட்டி புதுசா? கரி படிந்ததில்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார். //சீனிச்சட்டி புதுசா? கரி படிந்ததில்லை.// இதை ஒரு பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன். 1987 முதல் பயன்படுத்தி வருகிறேன். பளிச்சென்று வைத்திருக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். பலாக்கொட்டை கறியை என் அக்கா வீட்டில் செய்தேன். இரும்பு தீஞ்செட்டியான அது கொஞ்சம் கருப்பாக இருந்ததால் பகிர தயக்கமாக இருந்தது. தி. கீதாவுக்கு அனுப்பி அபிப்ராயம் கேட்டேன், அவர் அப்ரூவல் கொடுத்தால் அனுப்பினேன். மீண்டும் நன்றி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. கார்ன் ஃப்ளேக்ஸ் மிக்ஸர் பார்க்கவே அருமையாக இருக்கிறது.
    செய்முறை குறிப்பும், படங்களும் நன்றாக இருக்கிறது.
    கடைகளில் மிக காரமாக கிடைக்கிறது. வீட்டில் செய்தால் நமக்கு வேண்டிய காரம் போட்டுக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  5. பானுக்கா சூப்பர் மிக்ஸர். பார்க்கவே கவர்ச்சியா இருக்கு!!!
    படங்களும் நல்லா வந்திருக்கு. Yummy!

    நானும் வீட்டில் செய்ததுண்டு முன்பு. இப்ப பொரிப்பது குறைந்துவிட்டதே ரொம்பவே!

    இந்த மிக்சர் ரெடியாக இருந்தால் சூப்பரா ஒரு பேல் சாட் செய்துவிடலாம்.

    எண்ணையின் பயன்பாடு குறைத்துவிட்டதும் நான் இப்படி வாங்கும் கார்ன்ஃபேளேக்ஸ் (வற்றல்?) அதை air fryer ல் போட்டு எடுத்ததுண்டு. இப்ப air fryer இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நன்றி கீதா. ,air fryer ல் பொரிப்பது உடலுக்கு நல்லதில்லை என்கிறார்களே?

    பதிலளிநீக்கு
  7. அட! ஜாக்கிசான் உங்க மிக்சர சாப்பிட்டு சூப்பர்னு சொல்றார் போல!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கோன்ப்ளக்ஸ் மிக்ஸர் படங்கள் சூப்பர்.

    இலகுவான சமையல் சுவையும் அள்ளும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இலகுவான சமையல் சுவையும் அள்ளும் .// ஆமாம். கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. மிக்ஸர் செய்யும்போது கார்ன் ஃப்ளேக்ஸ் பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது. உங்கள் செய்முறை குறிப்பும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், சிலர் ஓமப்பொடி, பூந்தி இவற்றோடு கார்ன் ஃப்ளேக்ஸும் சேர்க்கிறார்கள். கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. சுலபமாக செய்யக்கூடிய மிக்சர்! பார்க்கவே அழகாக இருக்கிறது!!
    ஒரு வாணலியை 1987லிருந்து இத்தனை சுத்தமாக, பளீரென்று வைத்திருப்பதற்கு உங்களுக்கு ஒரு மெடலே தனியாக தரவேண்டும்! வாழ்த்துக்களும் மனதார சொல்ல வேண்டும்!!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவில், தங்களின் செய்முறையான கார்ன்ஃப்ளக்ஸ் மிக்ஸர் படங்களுடன் மிக நன்றாக உள்ளது. மிக்ஸருக்கென இப்படி கார்ன்ஃப்ளக்ஸ் உள்ளதென இப்போதுதான் தெரிந்து கொண்டேன். வழக்கப்படி பிரேக்ஃபாஸ்ட்க்கு என இரு வாரம் ஒருமுறை சாப்பிட உபயோகப்படுத்தும் இந்த கார்ன் இப்போது கொஞ்ச காலமாக வீட்டில் எனக்கும் பழக்கமாகி விட்டது. அதன் முன்பு, மகன் மருமகள், குழந்தைகள் என சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி இந்த மிக்ஸர் செய்து தந்தால் வீட்டில் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதன்படி செய்கிறேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி..

    பதிவுக்கு தாமதமாக வந்துள்ளேன். சில வேலைகளின் காரணமாக காலையிலேயே வந்து கருத்துரை தர இயலவில்லை. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. சுலபமாக செய்யலாம் கமலா, டிரை பண்ணிப் பாருங்கள். ஆனால் பெங்களூரில், குறிப்பாக எலக்ட்ரானிக் சிடியில் மிக்ஸர் பண்ணக்கூடிய கார்ன்ஃளக்ஸ் கிடைப்பது அரிது. நான் சென்னையிலிருந்து வாங்கி வருவேன். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. இன்று என்னுடைய ரெசிபியை வெளியிட்ட எ.பி.க்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. நன்றி கந்தையாரே. வெகு நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!