= = = = = = = =
வந்தவரை உடனே தன்னைப் பார்க்க அனுப்பச் சொன்னான் ஆனந்த்.
உள்ளே வந்தவரைப் பார்த்ததும், ஆனந்தின் அதிர்ச்சி, கோபமாக மாறியது.
உள்ளே வந்த நபர் ஆனந்துக்கு எதிரே உள்ள நாற்காலியில் உட்கார்ந்தார்.
ஆனந்த் : " மிஸ்டர் யார் நீங்கள் ? ரீட்டா யாரு ? இது என்ன விளையாட்டு? என்னுடைய நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் ? "வந்தவர் : " முதல் கேள்விக்கு பதில் : டிஎஸ்பி அருண். இரண்டாம் கேள்விக்கு பதில் : ரீட்டா யாரு என்று உங்களுக்கே தெரியும். இல்லை என்றால், அந்தத் துண்டுச் சீட்டைப் பார்த்ததும் பதறிப் போய் என்னை ஏன் உடனே உள்ளே அழைத்தீர்கள்? மூன்றாம் கேள்விக்கு பதில்: விளையாட்டு இல்லை விசாரணை. நான்காம் கேள்விக்கு பதில் : என்னுடைய நேரமும் உங்கள் நேரத்தைப் போன்றே அதிமுக்கியமானது. "
ஆ : " வரவேற்புப் பகுதியில் உங்கள் விசிட்டிங் கார்டு கொடுக்காமல், எதற்கு ரீட்டா பெயரை எழுதி அனுப்பினீர்கள்? "
அ : " ஆனந்த், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நான் நேரே வந்து, உங்கள் ரிசப்செனிஸ்ட் கிட்ட - 'நான் போலீஸ் அதிகாரி அருண். உங்கள் முதலாளியை ஒரு கொலை சம்பந்தமாக விசாரிக்க வந்துள்ளேன்' என்று சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இந்த ரூமின் கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியே ஒரு கூட்டம் கூடி இப்போ நாம் பேசுவதை எல்லாம் பார்த்துக் கொண்டு நிற்பார்கள்!"
ஆ : " ஓ ! அது சரிதான். இப்போ நான் என்ன செய்யவேண்டும்? "
அ : " இங்கே நாம் சுதந்திரமாகப் பேச முடியாது. என்னோடு கிளம்பி வாங்க. இது உணவு இடைவேளை நேரம் என்று நினைக்கிறேன். நாம் பக்கத்தில் உள்ள ஹோட்டல் எதற்காவது சென்று, உணவு சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம். இன்னும் ஒருமணி நேரத்திற்கு யாரும் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது. எல்லா அப்பாயிண்ட்மெண்டும் ஒத்திப் போடவும் - என்று ரிசப்செனிஸ்ட் கிட்ட சொல்லிட்டு வாங்க. இன்னொரு விஷயம் - மூஞ்சியை இப்படி பலி ஆடு போல வைத்துக்கொண்டு என் கூட வராதீங்க. சும்மா என்னுடைய தோளிலே கை போட்டுக்கொண்டு எதையாவது சிரித்துப் பேசிக்கொண்டே வாங்க. அப்போதான் இங்கு உள்ள யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. "
ஆனந்த் எழுந்து அருணின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு, சிரித்த படியே " அப்படியே செய்கிறேன் நண்பா !" என்று சிரித்துக்கொண்டே வந்தான். ரிசப்செனிஸ்டிடம் அருண் சொன்ன மாதிரியே சொல்லி, " கம் ஆன் அருண் - லெட் அஸ் கோ " என்றான்.
= = = = = = = = =
ஹோட்டல் ஃபேமிலி அறையில் உடக்காரந்த பின், லஞ்ச் ஆர்டர் செய்தான் ஆனந்த். பிறகு " இப்போ நான் என்ன செய்யவேண்டும்? " என்று அருணிடம் கேட்டான்.
அ : " நான் கேட்கின்ற கேள்விகளுக்கு எதையும் மறைக்காமல் பதில் சொல்லவேண்டும் "
ஆ : "சரி"
அ : " ரீட்டாவுடன் உங்களுக்கு எப்போது எப்படி பழக்கம் ஏற்பட்டது? "
ஆ : " சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு - நான் சென்னையில் பிசினஸ் மேனேஜ்மெண்ட் கன்ஸல்டண்ட் ஆக இருந்தேன். நான் படித்த கல்லூரியில் பிசினஸ் மேனேஜ்மெண்ட் வகுப்பு எடுத்தபோது, வகுப்பில் இறுதி ஆண்டு படித்த ரீட்டா என்னை விரும்புவதாக சொன்னாள். அப்பொழுது அவள் கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி என்னுடைய அலுவலகத்திற்கு வருவாள். அந்த நாட்களில், அவளுடைய அழகில் மயங்கி காதல் கடிதங்கள், கவிதைகள் என்று எழுதி அவளிடம் கொடுப்பேன். அதை அவள் ஆர்வத்துடன் படிப்பதைப் பார்த்து ரசிப்பேன்."
ஆ : " இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிய வேண்டி வந்தது. நான் பிரிந்தேன் என்று சொல்வதைவிட - அவள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு விலகி விட்டாள் என்றுதான் சொல்வேன்."
அ : " ஏன்?"
ஆ : "அவள் நான் பெரிய பணக்காரன் என்று நினைத்துப் பழக ஆரம்பித்தாள் என்று நினைக்கிறேன். அவள் படித்த கல்லூரிக்குப் பாடம் நடத்த நான் செல்லும்போது ஒரு நண்பனின் காரில் சென்று இறங்கிக்கொண்டு நண்பனுக்கு நன்றி சொல்லி அனுப்புவேன். ரீட்டா, நான் என்னுடைய சொந்தக் காரில் சென்று இறங்கி டிரைவரை திரும்ப அனுப்புகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் போலிருக்கு. ரீட்டாவின் கனவுகள் மிக மிகப் பெரியவை. ஆடம்பரம், செல்வச் செழிப்பு, கார், பங்களா, நிறைய ஏவலாட்கள் என்று பகட்டான பல விஷயங்கள்தான் அவளைக் கவர்ந்த வாழ்க்கை. எனக்கு சொந்தக் காரோ அல்லது வீடோ, மற்ற வசதிகளோ இல்லை என்று தெரிந்ததும், மெதுவாக என்னை விட்டு விலக ஆரம்பித்தாள்."
அ : "அப்புறம் என்ன செய்தீர்கள்?"
ஆ : " பணக்காரன் இல்லை என்று தெரிந்து ரீட்டா என்னை உதாசீனம் செய்யத் தொடங்கியதும், எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்ற வைராக்கியம் எனக்கு வந்தது. அதே நேரத்தில், ரீத்திகா இண்டஸ்ட்ரீஸ் குழுவின் ஒரு அங்கமாகிய Reethikaa Auto Ancillaries - Chennai கம்பெனிக்கு பிசினஸ் மேனேஜர் பதவிக்கு ஆள் வேண்டும் என்ற விளம்பரத்தை, பிசினஸ் இந்தியா பத்திரிக்கையில் பார்த்தேன். விண்ணப்பம் அனுப்பினேன். ரீத்திகாவின் அப்பா - ரீத்திகா இண்டஸ்ட்ரீஸின் அதிபர், என்னிடம் நேர்முகத் தேர்வில் 'ஒரு சவாலான வேலை இது. இதில் நீ வெற்றி பெற்றால், உனக்கு நல்ல எதிர்காலம் அமையும்' என்றார். சவாலை ஏற்று, நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த RAA வை ஆறு மாதத்தில் லாபம் ஈட்டும் கம்பெனியாக மாற்றிக் காட்டினேன்."
அ : " அப்புறம்?"
ஆ : " அடுத்த ஒன்றரை வருடத்தில் ரீத்திகா இண்டஸ்ட்ரீஸ் பல யூனிட்டுகளிலும் நிலவிய பிரச்சனைகளை தீர்க்க எல்லா வகையிலும் திறமையைக் காட்டி, படிப்படியாக ரீத்திகா இண்டஸ்ட்ரீஸின் எல்லா யூனிட்டுகளுக்கும் நான் ஒருவனே பிசினஸ் மேனேஜர் என்று பதவி உயர்வு பெற்றேன்."
அ : " ரீட்டாவைப் பிரிந்தபிறகு, அவளை மீண்டும் சந்திக்க நீங்கள் முயற்சி செய்யவில்லையா? "
(தொடரும்)
= = = = = = = = =
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குமுருகனருள் வேண்டுவோம்.
நீக்குநல்வரவு..
பதிலளிநீக்குநலம் பெருகி வாழ்க..
வாழ்த்துவோம்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குகதை சுவாரசியமாக செல்கிறது. கதையைப் பற்றி கருத்து கூற கதை முழுவதும் வெளி வந்த பின் தான் கூற வேண்டும் தற்போதைய போக்கைக் கவனித்தால் கதை இன்னும் 4 வாரங்கள் செல்லும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குJayakumar
கருத்துரைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதை நன்றாக செல்கிறது. விசாரணை வந்து விட்டது. ரீட்டா கொலை சம்பந்தமாக ஆனந்தை விசாரிக்க வேண்டுமென்ற ஐயப்பாடு டிஎஸ்பி அருணுக்கு எப்படி வந்ததோ? ஆனால், கதை சுவாரஸ்யமாக செல்ல ஆரம்பித்து விட்டது. அடுத்தப்பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருண் அது பற்றி சொல்வார் என்று நினைக்கிறேன்.
நீக்குகதை சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. சுவாரசியம். கௌ அண்ணா முதலிலேயே நீங்க இப்படிக் கொடுத்திருக்கலாம் பெரிதாக....சின்ன சின்ன பிட் போல அப்ப புதன் அன்று போட்டு வந்தீங்க. அது படிக்கவும் கொஞ்சம் சுவாரசியம் குறைந்தது. காரணம் தொடர் கதைய அதுவும் சஸ்பென்ஸ் கதைய பரீட்சை பிட் போல போட்டா!!!!!! ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குஇப்பதான் நல்லாருக்கு
கீதா
:)))
நீக்குகதை சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. சுவாரசியம். கௌ அண்ணா முதலிலேயே நீங்க இப்படிக் கொடுத்திருக்கலாம் பெரிதாக....சின்ன சின்ன பிட் போல அப்ப புதன் அன்று போட்டு வந்தீங்க. அது படிக்கவும் கொஞ்சம் சுவாரசியம் குறைந்தது. காரணம் தொடர் கதைய அதுவும் சஸ்பென்ஸ் கதைய பரீட்சை பிட் போல போட்டா!!!!!! ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குஇப்பதான் நல்லாருக்கு
கீதா
நன்றி.
நீக்குகதை நன்றாக போகிறது. யாரும் சிந்திக்காத கோணத்தில் கதை பயணிக்கிறது.
பதிலளிநீக்குஅருண் என்ன சொல்லப்போகிறார் பார்ப்போம்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குரீட்டா - தொடர்கிறேன். என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை!
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி. :))
நீக்குகதையில் போலீஸ் இன்வெஸ்டிகேஷன் வந்து கதை யதார்த்தமாக சுவாரசியமாகச் செல்லத் தொடங்கிவிட்டது.
பதிலளிநீக்குதொடர்கிறேன்
துளசிதரன்
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅருண் வந்துவிட்டார். கதையும் சூடாக திரும்பும்.......தொடர வருகிறோம்.
பதிலளிநீக்கு