முளைகட்டிய தானிய பூரண கேழ்வரகு மாவு கொழுக்கட்டை
No
முன்னுரை, கதை. Only செய்முறை.
பிடித்தவர்கள்
செய்து பார்க்கலாம்.
கேழ்வரகு மாவு ஒரு பங்கு எடுத்துக் கொண்டால் கொழுக்கட்டை அரிசி மாவு கால்பங்கு எடுத்துக்கோங்க. சூடு வரும் அளவு மட்டும் வறுத்துக் கொள்ள வேண்டும். சிவக்கவோ ரொம்ப மணம் வரும் வரை வறுக்கக் கூடாது.
கேழ்வரகு மாவுக்கு இரண்டு பங்கு தண்ணீர், அரிசி மாவுக்கு சம அளவு தண்ணீர் எடுத்துக் கொதிக்க வைக்கும் போது தேவையான அளவு உப்பு, ஒருஸ்பூன் நல்லெண்ணை விட்டு கொதித்ததும் மாவில் விட்டு நன்றாகக் கிளறி் கெட்டியாகத் திரண்டு வரும் போது அடுப்பை அணைத்து மாவு ஆறியதும் நன்றாகப் பிசைந்து வைத்துக் கொண்டு விடலாம்
முளைகட்டிய பயறு அல்லது எல்லா பயறுகளின், தானியங்களின் கலவையை 10 நிமிடம் ஆவியில் வைத்து சிறிதாக மசித்துக் கொண்டு அதோடு தேங்காய், மாங்காய், விருப்பப்பட்டால் வேறு பச்சைக்காய்களும் கலந்து கொண்டு உப்பு மிளகுப் பொடி கலந்து கடுகும் பெருங்காயமும் தாளித்து கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்துவிட்டால் பூரணம் தயார்.
பிசைந்த மாவில் சிறிய கிண்ணமாகச் செய்து பூரணம் வைத்து மூடி ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைத்தால் முளைகட்டிய தானிய பூரண கேழ்வரகு மாவு கொழுக்கட்டை தயார்.
https://youtube.com/shorts/LlpC4W9CduA
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் ஜீ வி அண்ணா...
நீக்குஇன்று ஏதேச்சையாக யார் பதிவுன்னு பார்க்கலாம்னு வந்தான் நம்மது...தேதி மறந்தே போச்சு
வேலைப்பளு....
கீதா
புதிய முயற்சி. மொபைல் போட்டோக்கள் நன்றாக இல்லை. ஒரு போட்டோகிராபரை (அதாங்க வீட்டுக்காரரை) போட்டோ எடுக்க சொல்லியிருக்கலாம். millet momos என்று தலைப்பிட்டால் நிறைய பேர் ஓடி வருவார்கள்----பதிவை காண சாப்பிட அல்ல.
பதிலளிநீக்குJayakumar
ஒரு கையில் மொபைல், மறு கையால் செய்வது என்பது சிரமம் ஆனால் நம் வீட்டில் தன் கையே தனக்கு உதவி என்பதால் நானே தான் படங்களும் எடுக்க வேண்டும். கண்டிப்பாக ஜெ கே அண்ணா படங்கள்/வீடியோவைச் சுட்டிக் காட்டுவார். அதற்கு முன்னே நானே சொல்லிவிடுகிறேன்!!!!!!//
நீக்குஜெ கே அண்ணா நீங்க இப்படிச் சொல்வீங்கன்னு எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் இப்படி வீடியோவின் கீழ் சொல்லியிருந்தேன். கடைசியில் எடுத்துவிட்டேன். ஸ்ரீராமிடமும் சொன்னேன்!!!!!
நீங்கள் யதார்த்த பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1. இதற்கெல்லாம் அதாவது படங்கள் காணொளிகள் எடுப்பதற்கு வீட்டில் உதவி கிடையாது நானே தான் செய்ய வேண்டும். சமைத்துக் கொண்டே படங்கள் காணொளிகள் எடுபப்து மிகவும் சிரமம் மொபைல் காமரா ஆவி பட்டு சில நாட்கள் பனி சூழ் உலகம் போல இருந்தது!!!!!
2., நான் செய்வது அதிகாலையில். 4.30 - 5 மணி போல.
விடிந்தாலுமே அடுக்களைக்குள் இயற்கை வெளிச்சம் வராது சுற்றிலும் வீடுகள். கிச்சனில் ஒரே ஒரு ஜன்னல் அதுவும் கொசு வலை போடப்பட்டிருக்கும். வாடை வீடு.
3. இங்கு வாடகை வீடுகளில் அடுக்களை என்பது மிகவும் சிறியதாக இருக்கும் பெங்களூர்வாசிகளைக் கேட்டால் சொல்வாங்க.....ஸ்விக்கி, ஜொமாட்டோவை நம்பி வாழும் மக்கள் என்பதால் புது வீடுகள் கட்டும் கான்ட்ராக்டர்ஸ் கூட அடுக்களையை வசதியற்றதாகச் சின்னதாகச் செய்வார்கள் சமைத்து இறக்கி வைக்கக் கூட இடம் கொள்ளாத அளவு மேடை இருக்கும். (நம் மிக்சி., அடுப்பு, பாத்திரம் கழுவி வைபப்து என்று பல மேடையில் தானே! நான் இருக்கும் வீடு மிகச் சிறியது)
இத்தனைப் பிரச்சனைகளுக்கு நடுவில்தான் நான் இதை அனுப்புவது. ஒன்று நான் அனுப்பாமல் இருக்க வேண்டும். இல்லை என்றால் எதையும் கண்டுக்காம அனுப்பணும்.
என் யதார்த்தப் பிரச்சனைகள் எனக்கு மட்டும் தான் தெரியும்.
கீதா
millet momos என்று தலைப்பிட்டால் நிறைய பேர் ஓடி வருவார்கள்----பதிவை காண சாப்பிட அல்ல.//
நீக்குஹாஹாஹாஹா அதென்னவோ சரிதான்! இதுவும் மோமோஸ் போன்றுதானே!!! அரிசி மாவுல கொழுக்கட்டை! அவங்க மைதாவில் செய்யறாங்க!!
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
புதிய முயற்சி. //
நீக்குமிக்க நன்றி ஜெ கே அண்ணா. இதை போட்டது வரவே இல்லை பாருங்க!
இப்பதான் கவனிச்சேன்!
கீதா
விநாயகர் சதுர்த்திக்கேற்ற பிரசித்திபெற்ற நைவேந்தியம் தேங்காய் பூரண கொழுக்கட்டைக்கு துணையாக அருமையான பரிந்துரை
பதிலளிநீக்குபிரமாதம், சகோ.
அம்மாடி.. ரயில் வண்டி போல எவ்வளவு நீளமான பெயர்! முளைக்கட்டிய தானிய பூரண கொள்வார்கள் மாவு கொழுக்கட்டை!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குமிக்க நன்றி ஜீ வி அண்ணா.
நீக்குஅம்மாடி.. ரயில் வண்டி போல எவ்வளவு நீளமான பெயர்!//
ஹாஹாஹா வேறு என்ன சொல்ல என்று டக்கென்று தெரியலை....ஜெ கே அண்ணா சொல்லியிருக்காப்ல கேழ்வரகு மாவில் ஹெல்தி மோமோஸ் என்று சொல்லியிருக்கலாம்.
இப்ப ஆரோக்கியமோ இல்லையோ ஆனால் ஹெல்தி என்று சொல்வதுதான் Trend!!!
கீதா
கேழ்வரகு என்று தட்டச்சு செய்யப் போய் அதுவாகவே கொள்வார்கள் என்று தன்னைத் தானே திருத்திக் கொண்டிருக்கிறது, பாருங்கள்! எந்த அளவுக்கு இந்தக் கொழுக்கடைக்கு முன்கூட்டிய வரவேற்பு பாருங்கள்!
பதிலளிநீக்குஆட்டோ கரெக்ஷன்! அது படுத்தும் பாடு ரொம்பவே.
நீக்குஎந்த அளவுக்கு இந்தக் கொழுக்கடைக்கு முன்கூட்டிய வரவேற்பு பாருங்கள்!//
ஹாஹாஹாஹா அப்படீன்றீங்க!!!!?
நன்றி ஜீவி அண்ணா
கீதா
முளைக்கட்டிய எந்த தானியத்திற்கு இயல்பாகவே சத்து அதிகம். + கேழ்வரகுக்கே உண்டான ஆபத்தில்லா
பதிலளிநீக்குஇனிப்பு வேறே!
கேடக வேண்டுமா?
மிக்க நன்றி ஜீ வி அண்ணா.
நீக்குஇது பிடிப்பவர்களுக்கு நன்றாக இருக்கும் ஜீ வி அண்ணா. விநாயக சதுர்த்தி அன்றும் இதுவும், காரக் கொழுக்கட்டையும் மட்டும்தான் செய்தேன்!
கீதா
மற்ற கருத்துகளுக்குப் பதில் சொல்ல பின்னர் வருகிறேன். கொஞ்சம் வேலைகள்
பதிலளிநீக்குகீதா
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குகீதா ரங்கன் க்கா.. இது இதுதான் எனது இப்போது தேவையான ரெசிப்பி. ரொம்ப உபயோகம். இந்த வாரம் மனைவியைப் பண்ணச் சொல்லறேன். பயந்துக்கிட்டே படிச்சேன் வெல்லம் போட்டதோன்னு. இனிப்புக்கு மூணு மாசம் தடா போட்டிருக்கேன்
பதிலளிநீக்குஹாஹாஹாஹாஹா அதாரு எங்கண்ணனா? 3 மாதம் இனிப்புக்குத் தடா போட்டிருக்கறது?!!!!! பார்ப்போம்....இந்த வீர சபதம் எத்தனை நாளைக்குன்னு! இதுக்குன்னே நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டிய ட்யூவான சிரோட்டி செஞ்சு கொண்டு வந்து உங்க முன்னாடி வைப்பேன்! உங்க பொண்ணுகிட்ட சொல்லிட்டீங்களா!!!!!!? இனிப்பு சாப்பிடப் போறதில்லைனு...அவங்க வேற இங்க இல்லை உங்களை கன்ட்ரோல் பண்ணா!!!!
நீக்குகீதா
எதுக்குப் பயம் நெல்லை. நாங்கதான் இனிப்பு செய்யறதே இல்லையே.....அதனால காரம் தான்
நீக்குகீதா
2 months. Typo error ஹாஹாஹா. நீங்க கவலையே படாதீங்கக்கா. ஸ்வீட் செய்வது ரொம்ப சுலபம். நான் கத்துத்தர்றேன். மத்தவங்கன்னா பாயசம் ஜாமூன்னு ஜல்லியடிப்பாங்க
நீக்குஇங்க கொடுத்த கருத்தைக் காணலியே!!!
நீக்குகீதா
இதே முறையில் மற்ற தானியத்தையும் முளை கட்டிச் செய்யலாம்னு நினைக்கிறேன். முளை கட்டிய தானியங்கள் வைத்து வேறு ரெசிப்பி போடுங்களேன்
பதிலளிநீக்குமுளைகட்டிய பயறு அல்லது எல்லா பயறுகளின், தானியங்களின் கலவையை //
நீக்குபதிவுக்குள்ள பாருங்க அண்ணே! மற்ற தானியங்களையும் சேர்த்துக்கலாம்னு சொல்லிருக்கேனே!!!!!!!
நன்றி நன்றி நெல்லை. செஞ்சு பாருங்க....
முளை கட்டிய தானியங்களை சுண்டல் செய்யலாம். சும்மாவே சாலட் போல மற்ற காய்கறிகள் கலந்து செய்யலாம். ரொம்ப வேக வைக்காம செய்யறது எல்லாம் செய்யலாம்.
பார்க்கிறேன் நெல்லை, வேறு செஞ்சா போடுறேன்.
நன்றி நெல்லை
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள். இன்றைய திங்களில், சகோதரி கீதாரெங்கன் அவர்களின் செய்முறையான கேழ்வரகு கொழுக்கட்டை பதிவு நன்றாக உள்ளது. படங்களும் நன்றாக உள்ளது. முளை கட்டிய தானிய வகைகளின் ருசியுடன் கேழ்வரகு மாவின் ருசியும் சேர்ந்து மிக நன்றாக இருக்குமென நினைக்கிறேன். இதுவரை இதைச் செய்ததில்லை. எங்கள் வீட்டு குழந்தைகளுக்குப் பிடிக்குமா வென தெரியவில்லை. ஆனால், பெரியவர்களுக்கு பிடிக்குமென்று நம்புகிறேன். கண்டிப்பாக இது போல் செய்து பார்க்கிறேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நேற்று வீட்டில் நாங்கள் அனைவரும் வெளியில் சென்று விட்டு இரவும் தாமதமாக வீட்டிற்கு வந்ததால், நேற்றைய அனைவரின் பதிவுகளுக்கு வர இயலவில்லை. இனிதான் அனைவரின் நேற்றைய பதிவுகளை படிக்க வேண்டும். சனியன்று வெளியிட்ட என் வலைப்பதிவில் வந்த கருத்துரைகளுக்கு கூட பதில் தர இயலவில்லை. அனைவரும் மன்னிக்கவும். 🙏. பிறகு தருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா குழந்தைகளுக்குப் பிடிக்குமா என்று சொல்ல முடியாதுதான் தித்திப்புதானே விரும்புவாங்க அதுவும் அரிசி மாவில் செய்வது.
நீக்குபெரியவர்களுக்குமே கூட எல்லாருக்கும் பிடிக்குமா என்று தெரியலை. ஆனால் டயட்டில் இருக்கறவங்க இதைச் சாப்பிடலாம்.
அக்கா பிஸியா இருக்கறப்ப கருத்து போட சிரமம் தான் இதுக்கு எல்லாம் எதுவுக்கு மன்னிப்புன்னு சொல்றீங்க!!
ஓ சனிக்கிழமை பதிவு வந்திருக்கா? நான் பார்க்கலையோ...விநாயகச் சதுர்த்தி பதிவு...
நானும் வீட்டுப் பணிகள் பிஸி கமலாக்கா. மகனுக்கு சில தயாரிப்புகள் செய்து அனுப்புவதில் பிஸி....கூடவே வேறு பணிகளும்.
இன்று முடிந்தால் பார்க்கிறேன், கமலாக்கா
மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு
கீதா
கீதா!! கேழ்வரகு கொழுக்கட்டை பிரமாதம்! ஆரோக்கியமானது என்பதால் சீக்கிரம் செய்து பார்க்கணும். பூரணத்தில் ப.மிளகாய் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ அக்கா. பச்சை மிளகாய் சேர்த்திருந்தேன் சொல்ல விட்டுப் போச்சு! ஆமாம் அது சேர்க்கறப்ப சுவையாக இருக்கும்...செஞ்சு பாருங்க!
நீக்குமிக்க நன்றி மனோ அக்கா
கீதா
கீதா! இப்படி குவித்து செய்தால் அது மோதகம்!! மடித்து செய்தால் அது கொழுக்கட்டை!! எல்லோருக்கும் மோமோஸ் ஞாபகம் வருவது தான் சோகம்!!
பதிலளிநீக்குமோமோஸ் தான் கொழுக்கட்டை இங்கொரு கும்பல் திரிந்து கொண்டு இருக்கின்றது
நீக்குஓஹோ! மனோ அக்கா குவித்துச் செய்தால் மோதகமா...மடித்துச் செய்வதுதான் கொழுக்கட்டையா...இப்பதான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி மனோ அக்கா. மோதம் என்றால் ஒரு வகை பொரித்துச் செய்வதுண்டே பிள்ளையாருக்கு இப்படிக் குவித்து அதுதான் மோதகம் என்று நம் வீட்டில் சொல்வாங்க.
நீக்குநோட்டட்!
ஆமாம் மோமோஸ் என்று இதை சில வருடங்களுக்கு முன்னர் வந்திருந்த வட இந்திய உறவினரின் குழந்தைகள் சொல்லிக் கொண்டனர் கொழுக்கட்டை என்பது அவர்களுக்குச் சொல்ல வரவில்லை!!! rice Sweet மோமோஸ் என்று சொல்லிக் கொண்டனர்.
மிக்க நன்றி மனோக்கா.
கீதா
சிறப்பான செய்முறை விளக்கம் நன்று.
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி
நீக்குகீதா
மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குமதியம் கொடுத்த கருத்தைக் காணவில்லையே
கீதா
சகோதரி கீதா அவர்கள் சில தினங்களுக்கு முன்பாக என்னை விசாரித்ததற்காக பதிவு ஒன்று எனது தளத்தில் நேற்று போட்டுள்ளேன்..
பதிலளிநீக்குநேரமிருப்பின் வாசிக்கவும்
மிக்க நன்றி துரை அண்ணா...ஆமாம் கேட்டிருந்தேன்.
நீக்குகண்டிப்பாக இன்று பார்க்கிறேன் ஆனால் கொஞ்சம் இரவு ஆகிவிடும் துரை அண்ணா. மகனுக்குச் சிலது செய்து அனுப்புவதற்காக கொஞ்சம் வேலைகள். நாளை மறு நாள் வரை ஆகும் என்று நினைக்கிறேன்.
மிக்க நன்றி துரை அண்ணா
கீதா
மதியம் கொடுத்தேன் கருத்தைக் காணவில்லை
நீக்குபார்த்துவிட்டேன் துரை அண்ணா மிக்க நன்றி
கீதா
ஆரோக்கியமான உணவு. நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ Paul Jeyaseelan!
நீக்குகீதா
மிக்க நன்றி Paul Jeyaseelan சகோ
நீக்குகீதா
ஆரோக்கியமான மோதகம். செய்முறை நன்றாக கூறியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி மாதேவி
நீக்குகீதா
முளைகட்டிய தானிய பூரண கேழ்வரகு மாவு கொழுக்கட்டை பார்க்கவும் அருமை, ருசியும் நன்றாக இருக்கும் .
பதிலளிநீக்குநானும் கேழ்வரகு மாவில் பிடி கொழுக்கட்டை, காரம், இனிப்பு செய்வேன் கீதா. முளைகட்டிய தானியங்களை வைத்து செய்தது இல்லை. செய்து பார்க்க வேண்டும்.
நானும் கேழ்வரகு மாவில் பிடி கொழுக்கட்டை, காரம், இனிப்பு செய்வேன் கீதா.//
நீக்குசூப்பர் கோமதிக்கா.
ஆமாம் கேழ்வரகு மாவில் பிடி கொழுக்கட்டை காரம், இனிப்பு நன்றாக இருக்கும் பல வருடங்களுக்கு முன்பு செய்ததுண்டு ஆனால் இனிப்பு அறவே தவிர்த்துவிட்டதால் காரக் கொழுக்கட்டை மட்டுமே செய்கிறேன்.
அப்படி கேழ்வரகு மாவைக் களிக்காகக் கிளறிய போது இதிலும் நன்றாகக் கிண்ணம் செய்ய வரும் போல என்று முன்பும் செய்து பார்த்து இப்படிச் செய்துள்ளேன். அதைத்தான் சமீபத்தில் செஞ்சப்ப படம் எடுத்திருந்தேன்.
முடிஞ்சா பூரணக் கொழுக்கட்டை செஞ்சு பாருங்க கோமதிக்கா.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
புதிய முயற்சி - கேழ்வரகு மாவில் கொழுக்கட்டை! கேழ்வரகு நல்லது. முன்பெல்லாம் கேழ்வரகு, கம்பு போன்றவற்றில் அடை செய்வார்கள். சாப்பிட்டதுண்டு. கொழுக்கட்டை செய்ததாகத் தெரியவில்லை.
பதிலளிநீக்கு