வெள்ளி, 13 செப்டம்பர், 2024

யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு... நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு...

நெமிலி எழில்மணி எழுதிய பாடலை தானே இசை அமைத்து பாடி இருக்கிறார் T M சௌந்தர்ராஜன்.  


தேன்பாகும் சர்க்கரையும் சுவைத்தால்தான் தித்திக்கும் 
தென்பழநி முருகன் பேரை சொன்னாலே தித்திக்கும் - தேன்பாகும் சர்க்கரையும் 

வான்மீதில் மேகமென்று வருவதும் குகனல்லவா 
வான்மீதில் மேகமென்று வருவதும் குகனல்லவா 
வளரவைக்கும் மழையாக தருவதும் அவனல்லவா  - தேன்பாகும் சர்க்கரையும் 

அவன் தரும் பஞ்சாம்ருதம் தித்திக்கும் - அவன் 
அடியார் வாழ்க்கை என்றும் தித்திக்கும் 
அவன் தரும் பஞ்சாம்ருதம் தித்திக்கும் - அவன் 
அடியார் வாழ்க்கை என்றும் தித்திக்கும் 
அவன் புகழ் நிறைந்திருக்கும் எத் திக்கும் - அவன் 
அன்பர்கள் நினைத்ததெல்லாம் சித்திக்கும்  - தேன்பாகும் சர்க்கரையும்  


================================================================================================

மூன்று நாட்கள் கால்ஷீட் இருந்தும், அரைநாளில் 'காக்கி சட்டை' படத்துக்கான கம்போசிங் வேலைகள் முடிந்து விட, மிச்சம் இருந்த நாட்களில் இளையராஜா சில பாடல்களை ட்யூன் தயார் செய்து 'ஸ்ட்டாக்'கில் வைத்துள்ளார்.  அதில் ஆறு பாடல்கள் ஒரு தொகுப்பாய் வைத்திருந்தார்.  சிலர் அதிலிருந்து ஒன்றிரண்டு பாடல்களைக் கேட்டபோது தர மறுத்து, 'மொத்தமாய் ஒரே செட்' என்று சொல்லியுள்ளார்!!

இதை சவாலாக ஏற்று R சுந்தரராஜன், பஞ்சு அருணாச்சலம் துணையுடன் 'வைதேகி காத்திருந்தாள்' படத்தை தயார் செய்தார்.  கேப்டனுக்கு அது ஒரு மாறுதலான படம்.  ராகவேந்தருக்கும், கன்னடத்தில் பிரமிளா ஜோசாய் என்று அறியப்படும் பரிமளம் ஆகியோருக்கு இது முதல் படம்.


இந்தப் படத்தின் பாடல்களைஆண் குரலுக்கு ஜெயச்சந்திரன் மட்டுமே பாடி இருந்தார்.  மேலே 'விக்கி'யில் சொல்லி இருக்கிறது பாருங்கள்..  அதில் சில யானைகள் இந்தப் பாடலை  தினசரி பாடல் ஒலிக்கும் நேரத்துக்கு சரியாய் வந்து கேட்டு விட்டு செல்வது பற்றி நானும் படித்து மிக வியந்திருக்கிறேன்.



இந்தப் படத்தில் வரும் 'மேகம் கருக்கையிலே' பாடலில் நடித்திருக்கும் நடிகர் பெயர் வெள்ளை சுப்பையா.  கோயம்புத்தூரில் 1937 ல் பிறந்தவர்.  சினிமா ஆசையில் வீட்டை விட்டு ஓடிவந்தவர்.  மாணவன் படத்தில் மாணவனாக நடித்துள்ளாராம்.  அந்தப் படத்தில் கமல் கூட மாணவன்!  சுமார் 1500 படங்களுக்கு மேல் சிறு வேடங்களில் நடித்துள்ளார் என்பது செய்தி.  பாசமலரில் அவருக்கு நல்ல வேடமாம்.  படத்தில் எந்த இடத்தில் வருவார் என்று நினைவில்லை.




மேலே படத்தில் இருப்பவர் நம் அபிமான பாடகர் ஜெயச்சந்திரனேதான்.  அனைவராலும் விரும்பப்பட்ட பாடலான இந்த 'ராசாத்தி உன்னை' பாடல் எந்த ராகத்தில் அமைந்துள்ளது என்பதை கீதா ரெங்கன் சொல்வார்!

மதுரை சினிப்ரியாவில் இந்தப் படம் பார்த்தபோது முதல் மூன்று நாட்கள் ரசிகர்கள் இந்தப் பாடல், 'காத்திருந்து காத்திருந்து', மற்றும் 'இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே' பாடல்களை ஒன்ஸ்மோர் கேட்டுக் கேட்டு தியேட்டர்காரர்களை ஒரு வழி செய்தது நினைவிருக்கிறது.  நான் சென்ற அன்று இந்தப் பாடலை மட்டும் மறுபடி ஒளிபரப்பினார்கள்.

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது 
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப்போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது     -  ராசாத்தி உன்ன

கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக் குயில் 
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா - கண்ணுக்கொரு 

தத்தித் தவழும் தங்கச் சிமிழே பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம் 
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு 
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே  -  ராசாத்தி ஒன்ன 

மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகளோ மாமன் மகளோ சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட 
அம்மாடி நீதான் இல்லாத நானும் 
வெண்மேகம் வந்து நீந்தாத வானம் 
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது 
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது 
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது 
காத்தாடி போலாடுது

43 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நோக்க நோக்க நொடியில் நோக்க 

      வாங்க செல்வாண்ணா... வணக்கம்.

      நீக்கு
  2. பாடலின் தலைப்பே சட் எனப் பாடலை முழுவதும் நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது.

    வைதேகி காத்திருந்தாள் வித்தியாசமான படம். அப்போ எனக்கு மூன்று கதை என்பதால் முழு திருப்தி தரவில்லை (நினைவு சரிதானா?). விளையாட்டு வினையாகும் என்பது விஜயகாந்த் போர்ஷன் என்ற நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவு சரிதான் நெல்லை.  படத்தைவிட பாடல்களே என்னை அதிகம் கவர்ந்தன. 

      நீக்கு
  3. முதல் பாடலைக் கேட்ட நினைவே இல்லை. சுமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   கொஞ்சம் அபூர்வ பாடல்தான்.  ஆனாலும் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று.

      நீக்கு
  4. ரொம்பப் புகழ் பெற்ற திரையிசைப் பாடல்களை வெள்ளி பகுதியில் ரசிக்க முடிவதில்லை. அளவுக்கு அதிகமாக்க் கேட்டிருப்போம், சம்பந்தப்பட்டவர்களைப் பற்றியும் நிறையக் கேட்டிருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ரொம்பப் புகழ் பெற்ற திரையிசைப் பாடல்களை வெள்ளி பகுதியில் ரசிக்க முடிவதில்லை. //

      அதனால்தான் நானும் அவற்றை பெரும்பாலும் தவிர்த்து பிற பாடல்கள் பகிர்வேன்.  சில பாடல்களை சில நணபர்கள் கேட்டதே இல்லையே என்றும் சொல்லி ரசிப்பார்கள்.  ஆனால் நீங்களே கூட ஒருமுறை 'யமுனா நதி இங்கே', 'ராதா ராதா நீ எங்கே' போன்ற பாடல்களை எல்லாம் பகிரலாமே என்று கேட்டிருந்தீர்கள்.  அவ்வப்போது அப்படியும் செய்யலாமே என்று...!

      நீக்கு
    2. வெள்ளை சுப்பையாவின் வாழ்க்கையும் சோகமானது இல்லையா? கடைசிப் பகுதி. நம்மைக் கவர்ந்த நடிகர்கள் நடிகைகள் சொந்த வாழ்வில் புத்திசாலித்தனமாக வாழத் தெரியவில்லையே

      நீக்கு
    3. அவர் வாழ்க்கை பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. முதல் பாடல் கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது.
    இரண்டாம் பாடல் அடிக்கடி கேட்ட பாடல்.

    வெள்ளை சுப்பையா நிறைய பழைய படங்களில் பார்த்து இருக்கிறேன்.
    அவர் குரல் வித்தியாசமான குரல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  எனக்கும் திடீரென நினைவு வந்துதான் இந்த முதல் பாடலைப் பகிர்ந்தேன்.

      மன்னன் படத்தில் ஒர்க்ஷாப்பில் வெள்ளை சுப்பையாவை கவுண்ட்டமணியுடன் பார்த்த நினைவு வருகிறது!

      நீக்கு
  7. ஓ! இந்தப் பாடல் டி எம் சௌந்தர்ராஜன் இசையமைத்துப் பாடிய பாடலா! அருமை. நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி, ஸ்ரீராம். கேட்டு ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..  உங்கள் மகிழ்ச்சி எனக்குள்ளும் பரவுகிறது.  நன்றி துளஸிஜி.

      நீக்கு
  8. பாடல்கள் கேட்ட பாடல்களே... இரண்டாம் பாடல் எத்தனை முறை கேட்டிருப்பேன் என கணக்கில்லை. படத்தின் அனைத்து பாடல்களுமே பிடித்தவை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட், 

      ஆம் சில பாடல்களை மறுப்படி மறுபடி கேட்காமல் இருக்க முடியாது.

      நீக்கு
  9. வைதேகி காத்திருந்தாள் படப் பாடல்களை முன்பே கேட்டிருக்கிறேன். ஆமாம் இப்பாடலுக்கு யானைகள் வந்து கேட்டுச் செல்வது பற்றியும் வாசித்திருக்கிறேன். வியப்பான விஷயம்.

    இன்று நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடலை மீண்டும் கேட்டு ரசித்தேன். படமும் பார்த்திருக்கிறேன். அப்போது நாகர்கோவிலில் படித்திக் கொண்டிருந்த சமயம் என்பதால். சுவாமி தியேட்டர் என்ற நினைவு. பாடல்கள் அனைத்தும் ஹிட்டானவை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நான் படம் பார்த்து விட்டு வரும்போது நேராக மாதவ்ராவ் கடைக்கு சென்று அந்தப் படங்களின் முழுப்பாடல்கள் அடங்கிய கேசெட் வாங்கி வந்து விடுவேன்.  நாளெல்லாம் பாடல் வீட்டில் ஒலிக்கும்!

      நீக்கு
  10. ஸ்ரீராம், முதல் பாடல் கேட்டதே இல்லையே...இப்பதான் கேட்கிறேன். ஒரு வேளை எங்க ஊர் கோயில்ல போடாததுனால இருக்கலாம்.

    அருமையா இருக்கு ஸ்ரீராம். சான்ஸே இல்ல. டி எம் எஸ்!!! இசை வாவ்! மோகனத்தைக் கையாண்ட விதம் சூப்பர். மீண்டும் கேட்டேன் கேட்டுக் கொண்டேதான் இங்கு கருத்து அடித்துக் கொண்டிருக்கிறேன்.

    பஞ்சாம்ருதம் தித்திக்கும் - இந்த இடத்தில் தித்திக்கும் இடத்தில் ப்ளெய்ன்...அடுத்த வரி தித்திக்கும் இல் ஒரு சின்ன நெளிவுடன் சொல்வது தித்திக்கிறது!!!!!

    தேன்பாகும் எடுக்கும் இடமே சூப்பரா இருக்கு மோகனத்தை அருமையாகக் கையாண்டிருக்கிறார்!!!! ரசித்துக் கேட்கிறேன் ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடல்கள் எல்லாம் சிறுவயதில் ரேடியோவில் கேட்ட பாடல்கள்.  ஒவ்வொன்றாய் அவ்வப்போது நினைவுக்கு வரும்போது குறித்து வைத்துக் கொள்கிறேன்.  சட்டென நினைவுக்கு வந்த பாடல்களை பெரும்பாலும் பகிர்ந்து விட்டேன். 

      இந்த தனிப்பாடல், பக்திப்பாடல் எப்போதிலிருந்து பகிரதொடங்கினேன் என்று பார்க்க வேண்டும்.

      நீக்கு
  11. இளையராஜா டப்டப்னு இசை போடுகிறாரே பல இடங்களில் இப்ப சமீபத்தில் வாசிக்க, பேட்டிகள் கேட்க நேரிடுகிறதால் அவர் டக்குன்னு போட்டிடுவார் என்பது தெரிகிறது அதுவும் நோட்ஸ் எழுதி!!!!!!

    காக்கிச்சட்டைக்கு அரை நாள் தானா....ஆ ஆ ஆ!!!!

    வைதேகி காத்திருந்தாள் படம் பாடல்கள் செம ஹிட் அப்பவே கல்லூரில இந்தப் பாடல்களைத்தான் பலரும் பாடிட்டிருப்பாங்க. சோகப் படம் இல்லையா?

    முதல்ல இந்தப் படம் நம்ம டி ராஜேந்தர் படம்னு நினைத்திருந்தேன் அதுக்குப் பிறகுதான் தெரிந்தது சுந்த்தர்ராஜன் படம்னு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ராஜேந்தர் குழப்பமெல்லாம் கிடையாது.  இளசு சட்சட்டென பாடல் ட்யூன்களை தயார் செய்து விடுவார் என்பது ஆச்சர்யம்தான்.

      நீக்கு
    2. இளசு//

      ஹாஹாஹாஹா ரசித்தேன்!!!

      கீதா

      நீக்கு
  12. ஆஹா! கம்பம் தியேட்டர்ல இந்தப் பாட்டைக் கேட்க ஆனைங்க வந்து அந்தப் பாட்டைக் கேட்டுச் செல்லுமா!! நிஜமாவா!!! ரொம்பவே ஆச்சரியமா இருக்கு, ஸ்ரீராம்.,,,,அப்ப மத்த பாடல்கள் அதுங்களுக்குப் பிடிக்கலையோ!! ஹாஹாஹாஹா....

    வெள்ளை சுப்பையா படம் பார்த்ததும் யாரென்று தெரிகிறது....ஆனால் படங்களில்? டக்கென்று நினைவுக்கு வரமாட்டேங்குது. ஆனால் குரல் நினைவுக்கு வருது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவரஞ்சனி ராகம் யானைகளுக்கெல்லாம் ரொம்பப் பிடிக்கும் போல... இதே யானைகள் மெஹபூபா படத்தில் கிஷோர் பாடலைக் கேட்டால் என்ன செய்யுமோ...

      நீக்கு
    2. ஸ்ரீராம் காத்திருந்து காத்திருந்து பாடல்தானே சிவரஞ்சனி! யானைங்க ரசித்த பாட்டு ராசாத்தி உன்னை என்றுதானே இருக்கு அந்த மேட்டர்ல.

      //இதே யானைகள் மெஹபூபா படத்தில் கிஷோர் பாடலைக் கேட்டால் என்ன செய்யுமோ...//

      ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன். சமீபத்துல கூட ஒரு யானைக்குட்டி ஒரு குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடிச்சே அது போல ஆடுமோ என்னமோ!!!!

      கீதா

      நீக்கு
  13. ஆஅ!!! அது நம்ம ஜெயசந்திரனா? சத்தியமா, நீங்க சொல்லியிருக்கலைனா எனக்குக் கண்டு பிடித்திருக்கவே முடியாது, ஸ்ரீராம். ஏதோ ஒரு ஆன்மீக பேச்சாளரோ என்று நினைத்திருப்பேன்!!

    எனக்கு ரொம்பப் பிடிக்கும் இவர் குரல்.

    ராசாத்தி உன்னை பாடலும் ரொம்பப் பிடித்த பாடல்....இந்தப் படத்துல எந்தப் பாட்டுதான் பிடிக்காது!!!! அனைத்தும் பிடிக்கும்.

    இப்பவும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயச்சந்திரன், குரலில் வெண்ணெய் தடவிய வெல்லம் வைத்திருப்பார்.

      நீக்கு
    2. அதேஅதே!!! மலர்களே பாட்டும் ரொம்ப ரொம்ப நல்லாருக்கும் ஹம்ஸத்வனி!! ஜெ ச குரல்!!

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம் மலர்களே பாட்டு மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியதுன்னு நீங்க சொன்ன பிறகுதான் ஸ்ட்ரைக் ஆச்சு....

      அது போல நீங்க மெஹ்பூபான்னு படம் பெயர் சொல்லிருக்கீங்க பாருங்க ஆனா அதைகவனிக்காம மெஹ்பூபான்னு பாட்டுன்னு நினைச்சு கருத்து போட்டுட்டேன்!!!!!

      கீதா

      நீக்கு
  14. இந்த 'ராசாத்தி உன்னை' பாடல் எந்த ராகத்தில் அமைந்துள்ளது என்பதை கீதா ரெங்கன் சொல்வார்!//

    ஹாஹாஹாஹா ஆஸ்தான அந்தஸ்து!!!! பார்க்கிறேன் முயற்சி செய்கிறேன். இந்தப் பாட்டு நேரடியாக டக்கென்று சொல்வது சிரமம்...

    முதலில் கேட்டதும் கீரவாணியோ என்று தோன்றியது ஆனால் இல்லை. அதுக்கு அருகில் வரும் ஒன்று என்னன்னு யோசிக்கிறேன்,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றிரவு ஏதோ ஒரு பாடல் கேட்டுக் கொண்டிருந்தபோது இன்னொரு பாடலும் இன்னொரு பாடலும் நினைவுக்கு வர இரண்டுமே ஹம்சானந்தி என்று நினைவுக்கு வர, அட, இது ஹம்சானந்தி என்று சொல்ல முடிந்தது.

      நீக்கு
    2. சூப்பர்! அப்படிப் போடுங்க!!! அட்வான்ஸ் ஆகிட்டீங்க!

      கீதா

      நீக்கு
  15. இன்றைய
    பாடல்கள்
    இரண்டுமே சிறப்பானவை..

    பதிலளிநீக்கு
  16. ராசாத்தி உன்னை பாடல் நடபைரவி என்று என் சின்ன அறிவிற்குப் படுகிறது. பாடலை மீண்டும் கேட்டேன்....கீரவாணிக்கும் நடபைரவிக்கும் நி ஸ்வரம் மட்டும்தான் வித்தியாசம். ஆனால் ராகங்கள் இரண்டுமே வித்தியாசமான ராகங்கள்...

    அனுபவம் புதுமை, புத்தம் புதுகாலை, அந்த நிலாவ நான் தான் கையில புடிச்சேன் பாட்டுஎல்லாம் நடபைரவி...அப்படி இணைத்துப் பார்த்ததில் ராசாத்தி உன்னை யும் நடபைரவி என்று படுகிறது,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?  நன்றி கீதா.  கீழே ஒரு லிங்க் கொடுத்திருக்கிறேன் அதுவும் நடபைரவியா என்று சொல்லவும்!

       https://www.youtube.com/watch?v=5EgeVXqsDUk

      நீக்கு
    2. கேட்டுவிட்டு சொல்கிறேன் ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  17. கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக் குயில்
    நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா -

    ஆகா!...

    பதிலளிநீக்கு
  18. இரண்டுபாடல்களூம் கேட்டிருக்கிறேன்.அருமையான பாடல்கள்.
    ஜெயச்சந்திரன் குரல் பிடித்தமானது. படம் கண்டதும் ஆச்சரியம் அடைந்தேன்.

    பதிலளிநீக்கு
  19. சிறந்த பாடகர் ஜெயச்சந்திரன்.

    யானைகள் தினம் வந்து பாடலைக் கேட்டுச் சென்றன என்பது மிகவும் வியப்பூட்டும் செய்தி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!