.. அ : " ரீட்டாவைப் பிரிந்தபிறகு, அவளை மீண்டும் சந்திக்க நீங்கள் முயற்சி செய்யவில்லையா? " ..
அருண் கேட்ட கேள்விக்கு ஆனந்த் பதில் ..
ஆ : " ரீட்டா என்னை உதாசீனம் செய்ய ஆரம்பித்தவுடன், அவளைத் தொடர்பு கொள்ளவோ, பார்க்கவோ முயற்சி செய்யாமல் இருந்தேன். சென்னை ரீத்திகா ஆட்டோ ஆன்சிலரீஸ் கம்பெனியில் வேலை கிடைத்தபோது கூட, அவளைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யவில்லை. ரீஜனல் மேனேஜராக பதவி உயர்வு பெற்றபின் ரீட்டாவின் மொபைல் எண் மூலம் அவளை அழைக்க முயற்சி செய்தேன். ஆனால் ' நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை ' என்ற செய்திதான் கிடைத்தது. "
அ : " அப்புறம் ?"
ஆ : " மேலும் பதவி உயர்வு பெற்று, நிரந்தரமாக ஹைதராபாத் வரவேண்டிய சூழ்நிலையில், எப்படியாவது ரீட்டாவைப் பார்த்து என்னுடைய வேலை, பதவி உயர்வு பற்றி சொல்ல நினைத்தேன். அவள் தங்கியிருந்த ஹாஸ்டல் அலுவலகத்திற்குச் சென்று அவளைப் பற்றி விசாரித்தேன். அவர்கள், இறுதியாண்டு பரிட்சை எழுதி முடித்தபின் ரீட்டா ஹாஸ்டல் அறையைக் காலி செய்து விட்டு சென்றுவிட்டதாகவும், ஒரு விலாசம் கொடுத்துள்ளதாகவும் சொல்லி, அண்ணா நகர் விலாசம் ஒன்று தந்தார்கள். அங்கு சென்று தேடும்போது, அந்த விலாசத்தில் ரீட்டாவும் அவளுடைய பெரியம்மாவும் இரண்டு மூன்று மாதங்கள் மட்டும் இருந்துவிட்டு, பிறகு காலி செய்து சென்றுவிட்டதாக கூறினார்கள். மொபைல் எண்ணும் இல்லை; விலாசமும் கிடைக்கவில்லை என்பதால், ரீட்டாவைத் தேடுவதை அன்றோடு நிறுத்திவிட்டேன்.
அ : "ரீத்திகாவைக் கல்யாணம் செய்துகொள்வது என்று எப்போது தீர்மானம் செய்தீர்கள்?"
ஆ : " ரீத்திகா இண்டஸ்ட்ரீஸ் வேலையில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை எனக்கு ரீத்திகா யார் என்றே தெரியாது. அவளுடைய அப்பா திடீரென்று ஒரு போர்ட் மீட்டிங் சமயத்தில், எங்கள் எல்லோருக்கும் ரீத்திகாவை அறிமுகம் செய்து, விரைவில் அவருடைய ஒரே வாரிசான ரீத்திகா கம்பெனியின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள இருக்கிறாள் என்று கூறினார். அதிலிருந்து அடிக்கடி, அலுவல் சம்பந்தமாக ரீத்திகா எங்களை அழைக்கும்போதெல்லாம் சென்று அவளுக்கு கம்பெனி நிலைமை பற்றியும் கம்பெனி முன்னேற்றத்திற்காக நாங்கள் எடுத்து வரும் முயற்சிகள் பற்றியும் கூறுவோம். போர்ட் உறுப்பினர்களில் மிகவும் இளையவனாகவும், கல்யாணம் ஆகாதவனாகவும் இருந்தவன் நான் ஒருவன்தான்."
அ : " அதனால் உங்களுக்குள் காதல் மலர்ந்ததா? "
ஆ : " காதல், கத்தரிக்காய் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. என்னைப் பொருத்தவரை, ரீத்திகா முதலாளியின் மகள்; நான் அவர்களிடம் சம்பளம் வாங்கும் ஒரு மேனேஜர். "
அ : " அப்புறம் எப்படித்தான் ரீத்திகா உங்களைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டி வந்தது?"
ஆ : " இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள், பிசினஸ் ப்ராக்ரஸ் பற்றி ரீத்திகாவிடம் ஒரு மணி நேரம் விவரமாக எடுத்துக்கூறி பிறகு கிளம்பும்போது ரீத்திகா என்னிடம், 'மிஸ்டர் ஆனந்த் - ரீத்திகா இண்டஸ்ட்ரீஸில் சேர்ந்த இரண்டு வருடங்களுக்குள், இந்த ஸ்தாபனத்தை அதிக லாபம் ஈட்டும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். பாராட்டுகள். உங்களிடம் ஒரு பெர்சனல் கேள்வி - கேட்கலாமா?' என்று கேட்டாள்."
அ : " அப்புறம்?"
ஆ : " அப்போது ரீத்திகா என்னிடம் கேட்டது, ' உங்கள் வாழ்க்கையில் இது வரை எந்தப் பெண்ணையாவது காதலித்திருக்கிறீர்களா ?' என்று."
அ : "நீங்கள் என்ன சொன்னீர்கள்?"
ஆ : " ஒரு வினாடி ரீட்டா என மனதில் வந்து போனாலும் - ரீட்டா பற்றி இனி நினைத்துப் பயன் இல்லை என்ற உண்மை மனதில் பட, ரீத்திகாவிடம் ' இல்லை இதுவரை அப்படி எந்தப் பெண்ணும் இல்லை. குறிப்பாக இங்கு வேலையில் சேர்ந்ததிலிருந்து, எனக்கு 24 மணி நேரமும், இந்த நிறுவனத்தை எப்படி எல்லாம் முன்னேற்றுவது என்கிற ஒரே சிந்தனைதான்' என்றேன். "
அ : " பிறகு ? "
ஆ : " சற்றும் எதிர்பாராத விதமாக ரீத்திகா, ' என்னை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதமா? ' என்று கேட்டாள். "
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குமுருகன் அருள் வேண்டுவோம்.
நீக்குபோட்டோவுல நல்ல புள்ளயா தெரியறாளே யா!
பதிலளிநீக்குஇவளுக்கா இந்த கதி!..
ஓய்.. நெய்யெல்லாம் நெய்யில்லை ன்ற மாதிரி தான் இதுவும்...
பேசாம படிச்சுட்டு வாரும்!...
:)))
நீக்குபோட்டோவுல நல்ல புள்ளயா தெரியறாளே யா!
பதிலளிநீக்குஇவளுக்கா இந்த கதி!..
ஓய்.. நெய்யெல்லாம் நெய்யில்லை ன்ற மாதிரி தான் இதுவும்...
பேசாம படிச்சுட்டு வாரும்!...
ஃபோட்டோவில் இருப்பவர் ரீத்திகா. ( ரீட்டா அல்ல!)
நீக்குகௌதம் ஜி அவர்களது திறமையே திறமை..
பதிலளிநீக்குமீட்டாவுக்கு நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதையமைப்பும் சுவாரஸ்யமாகவே தொடர்கிறது. ஒரளவு உண்மைகளையே ஆனந்த் கூறி வருகிறார். அவர் கூறி வருவதும் அருணுக்கு ஏற்கனவே தெரிந்த விபரங்களோடு ஒத்துப் போகிறது. எந்த நேரத்தில், சந்தேகத்தின் தீப்பொறிகள் வெடித்து சிதறுமோ .? பார்க்கலாம்..! ரீத்திகாவின் படம் நன்றாக உள்ளது. அடுத்தப்பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விளக்கமான கருத்துரைக்கு நன்றி. பொறுத்திருந்து பார்ப்போம்.
நீக்குகதை சுவாரசியமாக செல்கிறது. அடுத்து .....வெயிட்டிங்.
பதிலளிநீக்குநன்றி. பொறுத்திருந்து பார்ப்போம்.
நீக்குஏதோ ட்விஸ்ட் இருக்கப் போகிறது என்று தெரிகிறது. இப்ப சொல்லலை. கௌ அண்ணா கதையை முடித்ததும் அப்ப கருத்தில் சொல்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
ட்விஸ்ட் இல்லாவிட்டால் இது கதையே இல்லை. ட்விஸ்ட் நிச்சயம். ஆனால் ..
நீக்குரீத்திகா படம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅருண் கேட்ட கேள்விகளுக்கு ஆனந்த் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்கிறது.
பார்ப்போம் கதையில் திருப்பம் வரும் என்று நினைக்கிறேன்.
நானும் காத்திருக்கிறேன். கருத்துரைக்கு நன்றி.
நீக்கு''ரீட்டாவைப் பிரிந்த பிறகு அவளை மீண்டும் சந்திக்க நீங்கள் முயற்சி செய்ய வில்லையா?" -- அருண்
பதிலளிநீக்கு"ரீஜனல் மேனேஜராக பதவி உயர்வு பெற்றவுடன் மொபைலில் அவளை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன்" -- ஆனந்த்
எனக்கென்னவோ அப்பொழுது ரீட்டா கிடைத்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.. கிடைந்திருந்தால்?... அடடா! வேறு டிராக்கில் என்ன ஒரு சுகமான கற்பனை!
நல்லவேளை - அப்பொழுது ரீட்டா கிடைக்கவில்லை !!
நீக்குஹி..ஹி...
நீக்குதொடர்கிறேன். இன்னும் என்ன நடக்கப் போகிறதோ பார்த்து விடுவோம்! 🙂
பதிலளிநீக்குபார்த்துவிடுவோம் + படித்துவிடுவோம் !!
நீக்கு