இந்த வாரம் சீர்காழி குரலில் ஒலிக்கும் எனக்கென்ன மனக்கவலை பாடல் தனிப்பாடலாக....
சுத்தானந்த பாரதியார் பாடல் இசை D B ராமச்சந்திரன் அல்லது சீர்காழி கோவிந்தராஜன்.
இந்தப் பாடல் மோகன ராகத்தில் அமைந்திருக்கிறது என்கிறது ஒரு தளம். ஆனால் இதை சுத்தானந்த பாரதியார் தன்யாசி ராகத்தில் எழுதி இருக்கிறார்.
எனக்கென்ன மனக்கவலை எனக்கென்ன மனக்கவலை
என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை
எனக்கென்ன மனக்கவலை எனக்கென்ன மனக்கவலை
என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை
எனக்கென்ன மனக்கவலை எனக்கென்ன மனக்கவலை
என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை
மனத்திலும் செயலிலும் வாக்கிலும் நோக்கிலும்
மனத்திலும் செயலிலும் வாக்கிலும் நோக்கிலும்
அனைத்துமாய் இருந்தென்னை ஆண்டவள் இருக்கையில்
அனைத்துமாய் இருந்தென்னை ஆண்டவள் இருக்கையில்
மனத்திலும் செயலிலும் வாக்கிலும் நோக்கிலும்
அனைத்துமாய் இருந்தென்னை ஆண்டவள் இருக்கையில் - எனக்கென்ன மனக்கவலை
அல்லலை ஓட்டுவாள் வல்லமை நாட்டுவாள்
அல்லலை ஓட்டுவாள் வல்லமை நாட்டுவாள்
அம்புலி காட்டி நல்ல அமுதினை ஊட்டுவாள்
அல்லலை ஓட்டுவாள் வல்லமை நாட்டுவாள்
அம்புலி காட்டி நல்ல அமுதினை ஊட்டுவாள்
தொல்புவி எனக்கொரு தொட்டிலாய் ஆட்டுவாள்
தொல்புவி எனக்கொரு தொட்டிலாய் ஆட்டுவாள்
சுத்த முக்த சமத்வச் சுடரென்னுள் ஏற்றுவாள்
சுத்த முக்த சமத்வச் சுடரென்னுள் ஏற்றுவாள்
- எனக்கென்ன
கண்மலர்க்கருணையால் புண்களைத் துடைப்பாள்
கைம்மலர் ஆசியால் உய்கதி கொடுப்பாள்
தண்ணருட் புன்னகையாற் சக்திக்கு கனல் பெருக்கி
தங்கிடும் ஜெகன் மோக நான்ஜித் துணையிருக்க - எனக்கென்ன
============================================================================================
படம்: பாதை தெரியுது பார்
இயற்றியவர்: ஜெயகாந்தன்
இசை: M B ஸ்ரீநிவாசன்
பாடியோர்: P B ஸ்ரீநிவாஸ், S ஜானகி
இயற்றியவர்: ஜெயகாந்தன்
இசை: M B ஸ்ரீநிவாசன்
பாடியோர்: P B ஸ்ரீநிவாஸ், S ஜானகி
தென்னங் கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக் குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
ம்..ம்ம்ம்.. சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது
நீல மேகம் ஏழு வண்ண ஆடையோடு லாவுது
வானை பூமி அழைக்குது தொடு வானில் இரண்டும் கலக்குது
தென்னங் கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது
ம்..ம்ம்ம்.. சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது
நீலக் கடல் ஓலமிட்டு எங்கிருந்தோ கூவுது
அதுவே பாடி நடக்குது கடல் அலையில் கலக்க துடிக்குது
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்... வணக்கம்.
நீக்கு'பாதை தெரியுது, பார்!' -- படத்தின் பெயரே கெத்தாக, இல்லை?
பதிலளிநீக்குஆமாம். படம் பற்றிய விவரங்கள் முன்னரே 'சின்னச்சின்ன மூக்குத்தியாம்' பாடல் பகிர்வின்போது கொடுத்ததால் மறுபடி கொடுக்கவில்லை.
நீக்கு'குரீஇ' என்று புறநானூற்றுப் பாடல் ஒன்றில் குருவியைக் குறிப்பதான வார்த்தையாக வருகிறது. இந்தக் 'குரீஇ'- யே மருவி குருவி ஆயிற்று என்பர்.
பதிலளிநீக்குஓஹோ... எனக்கு தகவல்.
நீக்கு'தென்னங்கீற்று ஊஞ்சலிலே, சிட்டுக்குருவி ஆடுது - தன் பெட்டைத் துணையைத் தேடுது'
பதிலளிநீக்கு-- என்ன அழகான கற்பனை!
மிகக்குறைந்த வரிகளில் ஒரு பாடல்.
நீக்குமுதல் பாட்டிலும் அருமையான வரிகள்:
பதிலளிநீக்குஅம்புலி காட்டி நல்லமுதை ஊட்டுவாள்
தொல்புவி எனக்கொரு தொட்டிலாய் ஆட்டுவாள்
சுத்த முக்த சமத்து சுடர் என்னுள் ஏற்றுவாள்
அட்டா! எனக்கென்ன மனக்கவலை என் தாய் இருக்கையில்!
இறைசக்திமனத்துள் ஆழப் பதிந்து விட்டால்
எவ்வளவு நம்பிக்கை பாருங்கள்!
இந்த நிலை என்றோ நமக்கு?..
சுத்தானந்த பாரதி.
நீக்குசுற்றிச் சுற்றி அவருக்கு நாங்கள் உறவு!
** சமத்துவ
பதிலளிநீக்குபுரிந்தது.
நீக்குஆகா...
பதிலளிநீக்கு:))
நீக்குஇரண்டாவது பாடல் மிகவும் யோசிக்க வேண்டியதாயிற்று. சிட்டுக் குருவி பாடுது என்பதை ஆரம்ப வரியாகப் படித்திருந்தால் சட்டெனப் பிடிபட்டிருக்கும். மிக அருமையான பாடல். நிச்சயம் வெளிநாட்டுப் பாடலின் இசைத் தழுவலாகத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குஎம் பி எஸ் அப்படி தழுவுவாரா, தெரியவில்லை. ஆல் இந்தியா ரேடியோ கலைஞர். அவ்வப்போது ரேடியோவில் சேர்ந்திசை என்று கோஷ்டிகானம் பாடவைப்பார்.
நீக்குமுதல் பாடல் மிகவும் பிடித்தமானது. முதலிரண்டு வரிகளே நமக்கு நிம்மதியைத் தரும் பொருள்பொதிந்த வரிகள்.
பதிலளிநீக்குஉண்மை. கம்ப்ளீட் சரண்டர்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கமும், நன்றியும்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இறைவனிடம் தன்னையே ஒப்படைக்கும் நம்பிக்கைத் தரும் வரிகள். சீர்காழி அவர்களின் கம்பீரமான குரலில் நல்லதொரு பாடல்.
இரண்டாவது பாடலைப் பற்றி நீங்கள் என் பதிவில் குறிப்பிட்டவுடன் யூடியூபில் சென்று கேட்டு விபரம் அறிந்து ரசித்து வந்தேன். இன்று உங்கள் பதிவிலும் கேட்டு மகிழ்ந்தேன். பி. பி ஸ்ரீ நிவாஸன் அவர்களின் இனிமையான குரலுடன் ஜானகி அவர்களின் குரல் இழைவிலும் பாடல் அருமை. இரு பாடல்களுமே நல்ல பாடல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் அக்கா. உங்கள் பதிவில் இந்தப் பாடல் பற்றிச் சொன்ன உடன் அந்தப் பாடலையே பகிரும் எண்ணம் வந்தது.
நீக்குஇரண்டுமே மிகவும் புகழ் பெற்ற பாடல்கள்!
பதிலளிநீக்குமுதல் பாடல் சீர்காழியின் கம்பீரமான குரலில் நம்மை மெய் மறக்க வைக்கும்!
இரண்டாவது பாடலை அப்போதெல்லாம் இலங்கை வானொலியில் தான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். இந்தப்பாடலும் சரி, ' சின்ன சின்ன மூக்குத்தியும்' சரி கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாகத்தான் தோன்றும்! அதோடு மிகவும் மெதுவான பாடல்கள் இரண்டுமே!!
வாங்க மனோ அக்கா... இந்த இரண்டு பாடல்களும் ஒரே டியூன், ராகம் என்கிறீர்களா? எனக்குத் தோன்றவில்லை. சின்னச்சின்ன மூக்குத்தியாம் பாடல் சில மாதங்களுக்கு முன் பகிர்ந்திருந்தேன். எனக்கு அந்தப் பாடல் கேட்கும்போது 'சித்திரப்பூ சேலை.. சிவந்த முகம்' பாடல் நினைவுக்கு வரும்.
நீக்குமுதல் பாடல் பல்லாயிரம் முறைகள் கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் முதல் முறையாக கேட்கிறேன்....
அப்படியா ஜி... புகழ்பெற்ற பாடல் ஜி.
நீக்குதுரை அண்ணாவைக் காணலையே? அண்ணா நலம்தானே
பதிலளிநீக்குகீதா
திருச்செந்தூர், உவரி சென்று வந்தார். களைப்பாக இருப்பார் என்று நினைக்கிறேன்.
நீக்குமுதல் பாடல் இப்போதுதான் கேட்கிறேன் ஸ்ரீராம். ஆமா மோகனத்துலதான் இசை போட்டிருக்காங்க! அருமையான பாடல் வரிகளும்,.
பதிலளிநீக்குகீதா
ஆமாம். மோகனம்தான் போட்டிருந்தார்கள்! ஆனால் இதுநாள்வரை நீங்கள் இந்தப் பாடலைக் கேட்டதில்லையா? பாருங்கள்... இப்படி பகிரும் சிலருக்காவது தெரியாத பாடல்களை அறிமுகப்படுத்துகிறேன் என்பதும் சந்தோஷம்தான்.
நீக்குசீர்காழி கோவிந்தராஜன் அவர்கள். வெங்கலக்குரலில்
பதிலளிநீக்குபாடிய என்னென்ன மனக்கவலை பாட்டை. கேட்டாலே நமக்கு கவலை. யிருந்தாலும் பறந்து போய்விடும். அருமையான பாடல்.
நன்றி
கே. சக்ரபாணி
நன்றி சக்ரபாணி ஸார். உண்மைதான். சீர்காழியின் வெண்கலக்குரலில் அருமையான பாடல்.
நீக்குஇரண்டு பாடல்களுமே சிறப்பான பாடல்கள். கேட்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குமுதல் பாடல் கூட முழுவதும் கேட்டதும் நினைவுக்கு வந்தது கேட்டிருக்கிறேன் ஆனா அடிக்கடி இல்லை என்று. ஆனால் கேட்ட நினைவு வருது
பதிலளிநீக்குஆனால் இரண்டாவது பாடல்? ம்ம்ம்ம்ம்ம்ம் கேட்டிருப்பேன் ஆனால் டக்கென்று பிடிகிட்டவில்லை.
கீதா
நன்றி கீதா.
நீக்கு"எனக்கென்ன மனக்கவலை..." மனதுக்கு இதமாக பாடல் பலதடவை கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஅடுத்தபாடலும் சிறுவயதில் கேட்டபாடல் .அருமையான பாடல்கள் பகிர்வு.
நன்றி மாதேவி.
நீக்குசகோதரி கீதாவின் கருத்துரையைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன்..
பதிலளிநீக்குஉண்மையில் பலவீனப்பட்டுள்ளேன்..
கண்ணாடிக் கடைக்காரன் கெடுத்ததற்கு இன்னும் வேறு பதிய கண்ணாடி அமையவில்லை...
மேலும் இடக்கை விரல்களிலும் புதிதாக பிடரியிலும் வலி..
நாளும் ஒரு பதிவு... அது எனது தளத்தில் நான் நேர்ந்து கொண்டது..
எனவே
எனது தளத்தில் மட்டும் வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றேன்... அது நேர்ச்சை..
Fb ல் இருப்பது போல இங்கும் முத்திரையிடும் வசதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் மன்னிக்கவும்...
விரைவில் வருகின்றேன்...
நலம் வாழ்க..
வணக்கம் சகோதரரே
நீக்குஉங்களை சில தினங்களாக எபியில் கூட காணவில்லையே என கேட்க வேண்டுமென நானும் நினைத்தேன். அதற்கு பதிலாக இப்போது உங்கள் உடல் நல குறைவுப்பற்றி அறிந்து கொண்டேன். இறைவனருளால் விரைவில் நலம் பெற்று வாருங்கள். நானும் உங்கள் நலத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது பிரார்த்தனைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி....
நீக்குவிரைவில் பூரண நலம் பெற்று வருக...
நீக்குவிரைவில் பூரண நலம் பெற வேண்டுகிறோம்.
நீக்குஸ்ரீராம் அவர்களுக்கும் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நன்றி.. நன்றி..
நீக்குஸ்ரீராம் அவர்களுக்கும் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நன்றி.. நன்றி..
நீக்குசகோ துரை செல்வராஜூ அவர்கள் உடல் நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
பதிலளிநீக்குவிரைவில் நலம் பெற வேண்டும். குலதெய்வம், திருச்செந்தூர் முருகனை வணங்கி வந்து இருக்கிறீர்கள் வழி காட்டுவார்கள்.
இரண்டு பாடல்களும் மிகவும் பிடித்த பாடல் கேட்டு மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்கு