வியாழன், 5 செப்டம்பர், 2024

மனசு வேறு, நாம் வேறா?

 நண்பர் சுகுமார் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.  கடிகார நேரம் பார்வையில் பட்டதே தவிர, முதலில்  மனதில் பதியவில்லை.  காருக்கு நான்கு மணிநேர pack போட்டுக்கொண்டு பார்க்கச் சென்றிருந்ததால் கிளம்பும் நேரம் முடிவு செய்து வைத்திருந்தேன்.  இல்லாவிட்டால் லொடக்கென்று நூறு ரூபாய் கூட கேட்பார் ஓட்டுநர்.  திடீரென்று கடிகாரத்தைப் பார்த்தால் மணி ஏழு என்றது.  இன்னும் அரை  மணிநேரத்தில் கிளம்ப வேண்டும் என்று பரபரப்படைந்தேன்.  பாஸிடம் சொன்னபோது அவர் செல்லை பார்த்து விட்டு மணி ஆறரைதான் ஆகிறது என்றார்.அப்போதுதான் உறைத்தது, அவர் வீட்டில்  கடிகாரத்தில் நேரத்தை திருப்பி கொஞ்சம் அட்வான்சாகவே வைத்திருப்பார். நான் கூட கேட்பதுண்டு,  'நீங்களேதான் நேரத்தைக் கூட்டி வைக்கிறீர்கள்.  கிளம்ப வேண்டும் என்றால் அதையும் கணக்கிட்டு வழக்கமான நேரத்துக்குதானே கிளம்புவீர்கள்?' என்பேன்.  சிரித்துக் கொள்வார், 'என்னவோ பழகி விட்டது' என்பார்.

முன்பு மதுரையில் இருந்த காலங்களில் பத்து நிமிடம், 15 நிமிடங்கள் அதிகம் வைத்திருப்பார்.  இப்போது சுத்தமாக 35 நிமிடங்கள்.  அப்போதாவது அலுவலகம் சென்று வந்தார்.  இப்போது வீட்டில்தான்.  பகவத்கீதை வகுப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். 

மன்னிப்பு கேட்பது, மன்னிப்பது பற்றியும் வேறு சில விஷயங்களும் பேசிக்கொண்டிருந்தோம்.  எனக்கும் சில கேள்விகளுக்கு விடை வேண்டி இருந்தது என்பதோடு இது மாதிரி விஷயங்கள் பேசுவதில் அவருக்கு சுவாரஸ்யம் அதிகம்.  ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் அவர்களுக்கும் 'பேச ஆளில்லை, என்னை யாரும் மதிப்பதில்லை' மனநிலை வந்து விடுகிறது.  என் போன்ற இளைஞர்கள்தான் அதை கவனித்து சரி செய்ய வேண்டும்.  ஏற்கெனவே என் அப்பாவிடம் இது எனக்கு பழக்கம்.

பேச்சு சுவாரஸ்யத்தோடு ஸ்விக்கியில் போட்டிருந்த கொழுக்கட்டைக்காக காத்திருந்ததில் தாமதமாகி விட்டது.  ஆனால் வந்த கொழுக்கட்டையை சாப்பிட்டு வாழ்க்கையே வெறுத்து விட்டது.  

என்னை யாராவது கடத்த நினைத்தால் "அங்க வர்றியா..  அங்கே கார கொழுக்கட்டை, தித்திப்பு கொழுக்கட்டை, அம்மிணி கொழுக்கட்டை எல்லாம் வச்சிருக்கேன்" என்றால் கேள்வி கேட்காமல் அவர்கள் கொண்டு வரும் வண்டியில் ஏறிவிடுவேன்.  கரெக்ட்..  நீங்கள் கேட்பதும் புரிகிறது.  என்னைக் கடத்தி என்ன ஆகப்போகிறது!  நான் என்ன பள்ளி மாணவி, மருத்துவ மாணவியா என்ன!

இந்த கடிகார விஷயத்தில் அப்புறம் நானும் எங்கள் வீட்டில் அதையே கடைப்பிடித்துப் பார்த்தேன்.  மகன்கள் பள்ளி சென்ற காலங்கள்.  எதில் உதவியது என்று புரிந்தது.  காலை படுக்கையை விட்டு எழும்போது ஒரு சிறிய அலுப்பு வரும்...  இப்போது எழ வேண்டுமா...  இன்னும் ஐந்து நிமிடம்....

இது அண்ணாச்சி கடை 'இன்று ரொக்கம் நாளை கடன்' போர்ட் போல ஐந்தைந்து நிமிடமாக தள்ளிப்போகும் சாத்தியக்கூறு உண்டு!  படுக்கையிலிருந்து எழும்போது நம் மனம் பச்சைக்குழந்தை போல இருக்கும்...!!  ஆமாம், நம்புங்க...  அப்போ என்ன ஆகும்னா கடிகாரம் பார்த்ததும் திடுக்கென தூக்கிப்போட்டு எழுந்து விடலாம்.  அப்படி எழுந்து விட்டால் போதும்.  அப்புறம் மீண்டும் படுக்க தோன்றாது.  படுக்கவும் விடமாட்டோம்!

இப்போதும் காலை நாலேகால் மணிக்கு (பெரும்பாலும்) அலுப்பு பார்க்காமல் சட்டென எழுந்து அமர்ந்து விடுகிறேன்.  மெதுவாக எழ நினைத்தாலே போச்!

இதை - அதாவது இந்த கடிகார சமாச்சாரத்தை - எதற்கு சொல்கிறேன் என்றால் என்னுடைய நடைப்பயிற்சியில் நான் செய்த ஒரு மாற்றம் இதை நினைவு படுத்தியது.  தினசரி காலை அரை மணி நேரம்தான் நடை பயிற்சி செய்கிறேன்.  முன்பெல்லாம் ஒரு ஆர்வக்கோளாறில் ஒவ்வொரு நாளும் நடக்கும் தூரத்தை ஏற்றிக்கொண்டே சென்றதுண்டு.  இது என்ன ஆகிறது என்றால் ஓரிரு மாதங்களில் ஒருவித அலுப்பு வந்து நடைப் பயிற்சியையே நிறுத்தி விடுவேன்.  இப்போது  இரண்டு முழங்கால்களும் வேறு ரிப்பேரா, மாறாமல் நான்கு மாதங்களாக அதே தூரம்தான் நடக்கிறேன்.  அலுக்காமல் தொடர முடிகிறது.

ஆனாலும் கொஞ்சமாவது முன்னேற்றம் இருக்க வேண்டும் அல்லவா...  காலை செய்யும் சிறிய உடற்பயிற்சிகள் பத்தில் (சில தொடக்கத்தில் ஐந்து மட்டும்) தொடங்கி பனிரெண்டு, 15, 18 என்று இப்போது 20 செய்கிறேன்! 

 ஏற்கெனவே காலை மாலை இரண்டு வேளை நடக்கலாம் என்கிற எண்ணமே செயல்படுத்த முடிவதில்லை.    அட, இப்போது போகும் சுற்றையே இரண்டு சுற்றாக சுற்றலாம் என்கிற யோசனையையும் அலுப்பால் செயல்படுத்த முடியவில்லை.

எனவே நான் என்னையே ஏமாற்றிக்கொள்ள ஒரு வழி செய்தேன்.  நான் நடக்கும் தூரத்தையே சற்றே நீளமாக்கிக் கொண்டேன்.  

அதாவது வீட்டிலிருந்து கிளம்பி இடதுபுறம் திரும்பி செல்வதற்கு பதில் வலது புறம் திரும்பி தெருக்கோடி வரை சென்று திரும்பி வீட்டைக்கடந்து தெருவைக் கடந்து நடந்து மூன்றாவது தெருவில் திரும்பும் முன் நீளமாக நடந்து அடுத்த திருப்பம் வரும்வரை நடந்து டர்ன் செய்து வழக்கமான தெருவில் திரும்பி அடுத்த தெருவில் திரும்பும் முன் சற்று அதிகமாக அதற்கும் அடுத்த திருப்பம் அல்லது ஏதாவது ஒரு அடையாளம் வரை நடந்து அப்புறம் திரும்பி வழக்கமான தெருவில் திரும்பி....  

இப்படி..    வழக்கமான பாதையில்தான் செல்கிறோம் என்று உடம்பையும் மனசையும் ஏமாற்றிக் கொள்கிறேன்.  மனசு ஏமாறுமா என்ன!  ஏமாறுகிறதே...  ஆனால் கையோடு அந்த கடிகார விஷயத்தையும் நினைவு படுத்துகிறதே...  மனசு வேறு, நாம் வேறா என்ன?  இல்லை, வேறுதானோ?

பத்து நிமிடங்கள் அதிகமாக நடக்கிறேன்.

=================================================================================================

நியூஸ் ரூம் 

- ஜெய்ப்பூரில் குடும்ப பிரச்னை காரணமாக தனது உறவினரின் குழந்தையை கடத்தியுள்ளார் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர். 14 மாதங்களாக அவருடன் வளர்ந்த குழந்தையை மீட்டு தாயிடம் கொண்டு சேர்க்கும்போது, தாயிடம் செல்ல மறுத்து கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் 2 வயது குழந்தை அழுத சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த தலைமை போலீஸ் கான்ஸ்டபிள் தனுஜ் சாஹர். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இவர், கடந்த 2023, ஜூன் 14ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனது உறவினர் ஒருவரின் பிருத்வி என்ற 11 மாத குழந்தையை கடத்தி சென்றுள்ளார். சுமார் 14 மாதங்களுக்கு பிறகு அவரது இருப்பிடத்தை அறிந்த போலீசார், தனுஜை கைது செய்து குழந்தையை மீட்டனர். குழந்தையை அவரது தாயிடம் ஒப்படைக்கும்போது, அவருடன் செல்ல மறுத்து பிருத்வி அடம்பிடித்துள்ளான். இதனைப்பார்த்து குற்றவாளி தனுஜூம் அழ, போலீசார் ஆச்சரியமாக பார்த்தனர். 

 கடந்த பத்தாண்டுகளில், உலக நாடுகளில் அதிகப்படியான பொருளாதார வளர்ச்சி கண்ட நாடாக இந்தியா இருப்பது, ஐ.எம்.எப்., வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.

 மொராதாபாத்: காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து பெண் வேடத்தில் சுற்றித்திரிந்த காதலனை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.   அவனிடம் சிறியரக துப்பாக்கி வேறு ஒன்று இருந்ததாம்.

- கடந்த 1999ம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டில்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்திற்கு கடத்திச் சென்றனர்.  அங்கு விமானப் பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு, இந்திய சிறையில் உள்ள மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தனர். அதன்பேரில், 3 பயங்கரவாதிகளும் ஒப்படைக்கப்பட்ட பிறகு, விமானப் பயணிகளை விடுத்தனர்.   இந்த சம்பவத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, IC 814 எனும் வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.   நெட்ஃப்ளெக்சில் வெளியாகியுள்ள அதில், விஜய் வர்மா, நஸ்ருதின் ஷா, பங்கஜ் கபூர், அரவிந்த் சாமி, அனுபம் திரிபாதி, தியா மிர்ஸா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு ஹிந்துக்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அமைப்பு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ஹிந்து பெயரை எப்படி வைக்கலாம் என சமூகவலைதளத்தில் விவாதம் அனல் பறந்தது.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் பகுதியில் உள்ள ஒரு வீடு மற்றும் கல்லூரியில் மர்ம கும்பல் ஒன்று புகுந்துள்ளது. 4 பேர் கொண்ட அந்த கும்பல் வெறும் உள்ளாடைகள் அணிந்தபடி வலம் வந்துள்ளது. இந்த நடமாட்டங்கள் அனைத்தும் அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது.  அந்த கும்பலில் ஒருவர் யாரேனும் வருகின்றனரா என்று கண்காணித்தபடி இருக்க, மற்ற 3 பேரும் முன்னரே திட்டமிட்டு வைத்திருந்த வீட்டில் கொள்ளையை அரங்கேற்றினர். இந்த சம்பவத்தில் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் வேற லெவலில் இருக்கிறது.  வெறும் உள்ளாடைகள் மட்டுமே அணிந்தபடி, முகங்களை மறைத்தவாறு கைகளில் கூர்மையான ஆயுதங்களுடன் சென்று உள்ளனர். பின்னர் உள்ளே சென்று கொள்ளை சம்பவத்தை முடித்து விட்டு சாவகாசமாக புறப்படுகிறது. போகும்போது அந்த கும்பல் வாழைப்பழங்களை தூக்கிச் சென்றிருப்பது தான் ஹைலைட்.

-பிரயாக்ராஜ்: சாட்சியத்தில் முரண்பாடு இருப்பதாக கூறி, 41 ஆண்டுக்கு பிறகு, கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை திரும்ப பெற்றுள்ளது அலாகாபாத் உயர்நீதிமன்றம்.  ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடந்தால் அது முடிவதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது. அதிலும் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பு வருவதற்குள் தண்டனை காலமே முடிந்துவிடும். அந்த அளவிற்கு தாமதம் ஆகும் நிலையில், ஒரு கொலை வழக்கில் விசாரணை முடிந்து ஆயுள் தண்டனை வழங்கி 41 ஆண்டுக்கு பிறகு அந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக நீதிமன்றம் அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகில் பல உயிரினங்கள் வாழ்ந்தாலும் பழமையான உயிரினமாக கருதப்படுவது முதலை. அப்படிப்பட்ட ஒரு முதலைக்கு தற்போது வயது 123 ஆகிறது. அதன் பெயர் ஹென்றி. உலகின் மிக வயதான முதலையாக ஹென்றி அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இதன் நீளம் மட்டும் 5 மீட்டர், எடை ஒரு டன் ஆகும்.  கிட்டத்தட்ட 1000 கிலோ எடையுடன் 16 அடி உயரம் கொண்டது. 6 மனைவிகள், 10,000க்கும் மேற்பட்ட குட்டி முதலைகளை ஈன்று சாதனை படைத்துள்ளது. மனிதனை உண்ணும் நைல் இனத்தைச் சேர்ந்தது ஹென்றி முதலை.

கோவை லங்கா கார்னர் பகுதியில், 'போசே புட் எக்ஸ்பிரஸ்' எனும் ரயில் பெட்டி உணவகம் செயல்பட்டு வருகிறது. இவ்வுணவகம் சார்பில், ஆறு பிரியாணிகள் உட்கொண்டால், ரூ.1 லட்சம், ஐந்து பிரியாணி உட்கொண்டால், ரூ.50 ஆயிரம், மூன்று பிரியாணி உட்கொண்டால், ரூ.25 ஆயிரம் என, அறிவிக்கப்பட்டது. போட்டி 28-8-24  மதியம், 1:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காலை முதலே ஏராளமானோர் திரண்டனர்.  போட்டியில் பங்கேற்க, 400 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். மாலை, 5:35 மணி வரை, 125 பேர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களுக்கு, 550 கிராம் பிரியாணி வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் பிரியாணியை உட்கொள்ள திணறினர். போட்டியில் பங்கேற்ற பெண்கள் சிலர், கண்கள் கலங்கியபடி பிரியாணியை உட்கொண்டனர். இரவிலும் போட்டி தொடர்ந்தது.

நாட்டின் மிகப்பெரிய சைபர் மோசடிகளில் ஒன்றாக, ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.13 கோடியை அபேஸ் செய்த சம்பவம், தெலுங்கானாவில் நடந்துள்ளது.

என்றும் இளமையுடன் இருப்பதற்கு மருந்தை கண்டுபிடிக்குமாறு ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு புடின் அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு தற்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.  அதேநேரத்தில், இந்த திட்டத்திற்கு ஆகும் செலவும் திகைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான மருந்தை உருவாக்க பல பில்லியன்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் புடினுக்கு நெருக்கமானவரும், அணு ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருபவருமான மிக்கையில் கோவல்சுக் இந்த திட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறார்.

========================================================================================== 

நடைப்பயிற்சியில் நேற்று காலை மரத்தடியில் கேட்ட பறவை ஒலி...  ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் இபப்டி ஒரு பதிவானை - அதாங்க..  ரெகார்டரை - வைத்தால் அமானுஷ்யமான ஒலிகள் எல்லாம் பதிவாகுமாம்.  கண்ணுக்கு புலப்படாத உருவங்களின் குரல்கள் கேட்குமாம்.

நான் ஒலியை மட்டுமே அலைபேசியில் பதிவு செய்தேன்.  வாட்ஸாப்பில் பகிர்வதுபோல ஆடியோ மட்டும் இங்கு பகிர முடியாததால் அதை ஒரு காணொளியொடு இணைத்திருக்கிறேன்.  ஒலி மட்டுமே என்னுது!  க்ரீச் க்ரீச் என்று கேட்கும் ஒலி சலங்கை ஒலி அல்ல...  சுவர்க்கோழியின் ரீங்காரம்!



அதிகாலை ஐந்துமணி அடர்மரத்தடி ஓசைகள்.  

'க்றீச்.. க்றீச்..'  பூச்சி ஒலியோடு, பறவைகள் குரல்..  

இந்த மரத்திலிருந்து ஒரு பறவை, "எவனோ வரான் பாரு.. லொடக் லொடக் என்று என்று அவன் நடையை பார்த்தாலே சந்தேகமாக இருக்கிறது.."  என்று குரல் கொடுக்க,  அடுத்த மரத்திலிருந்து ஒரு பறவை  "அவன் தினமும் வர்றவன்தான்பா...  ந்நோ வொர்ரீஸ்... லூசுப்பய...   லூஸுல விடு"  என்கிறது. முதல் மரத்துப்பறவையும் 'அப்ப சரி' என்று தற்காலிக அமைதி ஆகிறது.

திரும்பி வரும் போது "அவனே தான்...  ரிடர்ன் போறான்... வுட்டுடு " என்கின்றன!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வந்தது எப்படி, வைத்தது யார் என்கிற ஒரு ஃபேஸ்புக் விவாதத்தில் ஜீவி ஸார் தந்த பின்னூட்டம்.


தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன் தமிழ் நாட்டிற்கு இருந்த பெயர் என்ன?

தியாகி சங்கரலிங்கனார் தன் வீட்டின் முன் அமர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டது எதற்காக?

அவர் இறந்து எத்தனை ஆண்டுகளுக்குப் பின் தமிழ் நாடு என்ற பெயர் அதிகார பூர்வமாக சூட்டப்பட்டது?

அப்படியானால் பாரதி குறிப்பிட்ட தமிழ்நாடு செவ்வாய் கிரகத்திலா இருக்கிறது...?? அதிகார பூர்வமாக என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்...

பாரதி பற்றி எழுதிய பல புத்தகங்களை இப்பொழுது நீங்கள் படிப்பதால் ஆவேசத்தோடு கேட்கிறீர்கள் போலிருக்கு

அதிகார பூர்வமாக என்ற வார்த்தைக்கு அர்த்தமா? நான் எழுத ஆரம்பித்தால் நிறைய சொல்ல வேண்டியதாய் போய் விடும் என்ற பயம். அப்படி மாங்கு மாங்கென்று நான் எழுதினாலும் நீங்க கண்டுக்க மாட்டீங்க. வேண்டும்னா ஒரு டிக் அடிப்பீங்க, பார்த்துட்டேன் என்ற அலட்சிய பதில் போல. இந்த 82 வயதில் அரை குறை பார்வையில் நான் சொல்வதற்கு ரெண்டு வரியாவது நீங்கள் பதில் சொல்வீர்கள் என்றால் சொல்கிறேன். சரியா?

'வட வேங்கடம் தென் குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்' என்று தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடிய பனம்பாரனாரே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மொழியையும் அந்த மொழி பேசும் மக்கள் வாழும் நாட்டையும் இணைத்துக் கூறி விட்டார். பாட்டுக்கொரு புலவனும் தொல்காப்பிய பாயிரத்தை ஒட்டிய ஞானத்தில் தன் கற்பனையில் தமிழ் நாட்டை தன் சிந்தனையில் உதித்த பாடலாய் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்று உற்சாக பீறிடலாய் பாடுகிறான். 'வேதம் நிறைந்த தமிழ் நாடு' 'கம்பன் பிறந்த தமிழ் நாடு' என்கிறான். ஒரே பாடலில் 10 கண்ணிகளில் அவன் கற்பனைத் தமிழ் நாடு ஜாஜ்வல்யமாய் ஜ்வலிக்கிறது.

மொழிவாரி மாகாணங்களைப் பிரிப்பது தேசத்தின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் என்று நேரு, பட்டேல், சீதாராமையா கொண்ட ஜேவிபி கமிஷன் சொன்ன நிதர்சனம் தான் இன்றும். இருந்தும் மொழி வழி தேசத்தைப் பிரிக்க வேண்டும் என்ற ஆவேசம் வேண்டுமென்றே தூண்டப் பட்டுக் கொண்டே தான் இருந்தது. தெலுங்கு மொழி பேசும் மாநிலத்தைத் தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைக்காக 1952-ல் பொட்டி ஸ்ரீராமுலு அவர்கள் உயிர் நீத்த பொழுது மொழி வழி மாகாணங்கள் பிரிப்பு புத்துயிர் பெற்று தீவிரமாகிறது. 1956-ல் மொழி வாரி மாநிலங்கள் கமிஷன் வழி காட்டலில் அந்தந்த பகுதி மக்கள் பேசும் மொழி அடிப்படையில் 14 மொழி வாரி மாகாணங்கள் அமைகின்றன. முதன் முதல் அமைந்த மாநிலம் ஆந்திரம்.

கேரளம், ஆந்திரம், கன்னடம் என்று மாநிலங்கள் என்று மொழி வழி மாநிலங்கள் பிரிந்தும் தமிழகம் மட்டும் சென்னை மாகாணம் என்றே அழைக்கப் பட்டு வந்தது. 

மொழிவாரி மாகாண அமைப்பில் விளைந்த விளைவாய் கேரளம், ஆந்திரா, கர்னாடக மாநிலங்கள் என்று மெட்ராஸ் ஸ்டேட்டின் எல்லைப்பகுயில் சில இடங்களைச் சேர்த்துக் கொண்டு தனித்தனி மாநிலங்களாயின. தமிழகம் மட்டும் மெட்ராஸ் ஸ்டேட் (மதராஸ் மாநிலம்) என்று அழைக்கப்பட்டது.  சுற்றிலும் இருக்கும் பகுதிகள் தனிப்பெயர்கள் கொண்ட பொழுது தமிழ் மொழி பேசும் மக்கள் மட்டும் ஓர வஞ்சனை மாதிரி ஆங்கிலேயர் ஆளுகையில் கொண்டிருந்த பெயரையே மாற்றமில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

மதராஸ் பட்டினம் பெயர் மாற வேண்டுமானால் பொட்டி ஸ்ரீராமுலு காட்டிய வழியே சரியானது என்று தீர்மானித்து சங்கரலிங்கம் என்னும் காங்கிரஸ்காரர் 12 அம்சம் கொண்ட கோரிக்கையை 1956-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி தான் வசித்த விருதநகரில் மதராஸ் மாநிலத்திற்கு தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கினார். தேசம் பூராவும் மதுவிலக்கு, அரசியல்வாதிகள் ஆடம்பர செலவுகள் செய்யக்கூடாது போன்ற உன்னதக் கொள்கைகளையும் உள்ளடக்கி இருந்தது. அப்பொழுது காமராஜர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர் உண்ணாவிரதம் தொடங்கிய சில நாட்களில் காமராஜர், பொதுவுடமை கட்சி ஜீவா, ம.பொ.சி, அண்ணா போன்ற தலைவர்கள் தனித்தனியாக விருதுநகர் சென்று உண்ணாவிரதத்தை கைவிடச் சொல்லி வேண்டிக் கொண்டனர். 

ஆனால் அவர் தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையில் உறுதியோடு இருந்தார். அந்த நாட்களில் தினத்தந்தி, தினமணி போன்ற பத்திரிகைகள் இவர் உண்ணாவிரதத்தை இருட்டடிப்பு செய்யாமல் தலைப்புச் செய்தியாகப் போட்டனர். 1956 ஜூலை 27-ம் தேதி ஆரம்பித்த இவர் உண்ணாவிரதம் அக்டோபர் 13-ம் தேதி வரை மொத்தம் 79 நாட்கள் தொடர்ந்து அக்.13-ம் தேதியன்றே அவர் இறப்புக்கும் காரணமாயிற்று. சாகும் வரை உண்ணாவிரதம் என்று பேச்சுக்கு சொல்கிறார்கள். அதை உண்மையிலேயே தன் வாழ்வில் நடத்திக்காட்டிய தியாகி இவர். தியாகி சங்கரலிங்கனார் என்றே தமிழக சரித்திரம் இவருக்குப் பெயர் சூட்டியிருக்கிறது.

உண்ணாவிரத காலத்திலேயே தான் இறந்து விடுவோம் என்பதை முழு மன சம்மதத்தோடு உணர்ந்திருந்த இந்த மொழித்தியாகி, தான் இறந்து பட்டால் தன் உடலை பொதுவுடமை கட்சியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விருப்பக் கோரிக்கை எழுதி வைத்திருந்தார். அதன்படியே தோழர் கே.டி.கே. தங்கமணியும் தோழர் கே.பி.ஜானகி அம்மையாரும் அவர் புகழ் உடலை மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையில் கையெழுத்திட்டுப் பெற்றுக் கொண்டனர். பின்னர் மதுரை தத்தனேரி இடுகாட்டில் தகனம் நடந்தது.

பின் மதராஸ் மாகாணம் தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் கண்டது பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்.

வரிசையாக நிகழ்ந்த நிகழ்வுகள்:

1960-ல் சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எஸ். சின்னதுரை என்ற தோழர் மெட்ராஸ் அசெம்பிளியில் தமிழ் நாடு பெயர் மாற்றத்திற்காக தீர்மானம் கொண்டு வர, அது குரல் வாக்கெடுப்பிலேயே தோற்கடிக்கப்பட்டு, தீர்மானம் திரும்பப் பெறப்படுகிறது.

1961-ல் நடாளுமன்ற மாநிலங்கள் அவையில் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் பி.ராமமூர்த்தி (மதுரை தொகுதி உறுப்பினர்) தமிழ் நாடு பெயர் மாற்றத்திற்காக தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.. இந்தத் தீர்மானம் விவாதத்திற்கு வந்த பொழுது அவர் சிறையில் இருந்ததால் தோழர் பூபேஷ் குப்தா தீர்மானத்தை முன் மொழிந்து பேசுகிறார். இந்த விவாதத்தில் அண்ணா கலந்து கொண்டு ஆற்றிய உரை அற்புதமானது. எப்படியிருப்பினும் பின்னர் அந்தத் தீர்மானம் மாநிலங்கள் அவையில் நிராகரிக்கப்படுகிறது.

பின்னர் 1967 நடந்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று சட்டமன்றத்தில் முதல்வராக 
அண்ணா அவர்கள் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தை முன் மொழிகிறார்.

இன்னும் சொல்லப் போனால் அண்ணா கொண்டு வந்த அந்த தமிழ் நாடு பெயர் மாற்ற தீர்மானம் தமிழ் நாடு சட்டசபையில் நிறைவேறுகிறது என்ற வரியைக் கூட சேர்த்துக் கொள்ளலாம். அப்படி நிறைவேறினால் தான் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அதை சட்டமாக்க முடியும் என்பது உள்ளடக்கமாகி விடுகிறது. எழுதித் தெரிய வேண்டியதில்லை என்றும் கொள்ளலாம்.

1968 நவம்பரில் தமிழ்நாடு 
பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1969 ஜனவரி பொங்கல் தினத்தன்று பொங்கல் பரிசாக மெட்ராஸ் மாகாணம் தமிழ் நாடாகப் பெயர் சூட்டப்படுகிறது.

இவ்வளவு நடந்தும் மெட்ராஸ் என்ற பெயரே மாநிலத் தலைநகருக்கான பெயராக நீடிக்கிறது.

மெட்ராஸ், சென்னையாக பெயர் மாற்றம் கண்டது இன்னொரு வரலாற்றுக் கீற்று.

ஆக, 'அதிகாரபூர்வமாக' ன்னா என்ன சார்?'  என்று சாமிநாத
பாரதி ஐயா கேட்கப்போய், தமிழ் நாடு என்ற பெயர் மாற்றத்திற்காக என்ன பாடு பட வேண்டியதாகிப் போச்சு என்பதைச் சொல்லப் போய், இவ்வளவு எழுத வேண்டியதாகிப் போச்சு.

பரவாயில்லை, பலர் அறியாத விஷயங்களைத் தெளிவு படுத்தியதில் எனக்கும் திருப்தி தான். அதற்கான வாய்ப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

இப்பொழுது சொல்லுங்கள், ஐயா. மதராஸ் மாகாணம் தமிழ் நாடாக மாறிப் போயிடுத்து. ஒரு விதத்தில் இது தமிழ் மொழி பேசும் மக்களின் அடிப்படை கோரிக்கையும் கூட. இந்தக் கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு காண வழிவகுத்தது யார்?

அல்லது யாரால்?

=========================================================================================================

நடுவில் ஒரு சில்மிஷ வேலை பார்த்தபோது....   'புரட்சித்தலைவர் பாட்டை அவமரியாதை செய்தால்...'  என்று ஒரு கழகக் கண்மணி அப்போது கமெண்ட்டில் மிரட்டி இருந்தார்!




அவ்வப்போது ரீல்ஸ் பார்ப்பது வழக்கம்.  பதறவைக்கும் இந்த காணொளி பார்த்து அடுத்து என்ன என்று பார்த்தால் விடை கிடைக்காது.  அந்தப் பெண் எழுவதோடு முடிந்து லூப்பில் மறுபடி முதலிலிருந்து இதுவே ஓடும்.  எரிச்சலாய் இருக்கும்.  இந்த காணொளித்துண்டு பார்த்ததும் ஆர்வத்தில் அல்லது பதட்டத்தில் பின்னூட்டங்கள் சென்று பார்த்தபோது சுமார் 200 பின்னூட்டங்கள்.  எல்லாமே 'ஹர்ஹர் மஹாதேவ்' தான்!  கிர்ர்ர்ர்ர்ர்ர்....


33333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333

ஜோக்...ஜோக்....ஜோக்....

((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((


மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது....

222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222

ஏய்...   மரியாத..  மரியாத....

ஒருநாள் சற்றே தாமதமாக நடை மேற்கொண்டபோது வழியில் இவர் தென்பட்டார்.  உரிய மரியாதை கொடுத்து வலது பக்கம் மாறி விட்டேன்.  சமீப காலத்தில் ஆங்காங்கே 'சிவனே'ன்னு ஓரமாகப்போன ஆட்களைக் கூட ரிஷபங்கள் ஆக்கள் - அதாங்க மாடுகள் - பாய்ந்து தாக்கி இருப்பதைப் பார்த்த, படித்த காரணத்தால் பயம் கலந்த மரியாதை. அதிகாலையிலேயே இவர் நகர்வலம் வருவார் என்று எதிர்பார்க்கவில்லை.  ஊர்மாடோ, கோவில் காளையோ...  

இந்தப் புகைப்படம் காலை ஐந்தே முக்காலுக்கு எடுக்கப்பட்டது.  ஆனால் பார்த்தால் நல்ல வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது போல தெரிகிறது.  புகைப்படம் எடுக்கும்போதே பாய்ந்து விட்டால் எங்கு ஓடுவது, ஒதுங்குவது என்கிற சிந்தனையும் இருந்ததது. ஜல்லிக்கட்டில் எனக்கு அவ்வளவு பழக்கமில்லை.  அது புரிந்தோ என்னவோ அதுவும் 'போடா சோதா' என்று கண்டுக்காமல் விட்டு விட்டது!!




((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((


                                               ஃபேஸ்புக்கில் பார்த்த / படித்த கவிதை.


################################################################################################################

பொக்கிஷம் :  






123 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. பின்னர்1967-ல் நடந்த பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி
    பெரும்பானமை பெற்று சட்ட மன்றத்தில் முதல்வராக அண்ணா அவர்கள் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தை முன் மொழிகிறார்

    -- என்று அந்த பாரா வரிகள் இருக்க வேண்டும். திமுக கூட்டணி மற்றும் அண்ணா அவர்களின் பெயர் விட்டுப் போய் விட்டது. சேர்த்து விடவும். (கீழிருந்து மேலாக 9-வது பாரா.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றி விட்டேன்! 

      "அங்கு" அப்படி இல்லை.  அங்கிருந்து அப்படியே காபி பேஸ்ட்த்தான் இது!

      நீக்கு
    2. ஆமாம். அங்கு அப்படி இல்லை தான். கைபேசியில் ஞாபகத்தின் அடிப்படையில் தட்டச்சு செய்வதால் கோர்வையாக இல்லாமல் விட்டுப் போயிருக்கிறது. இப்பொழுது படித்துப் பார்க்கும் பொழுது விட்டுப் போன வார்த்தைகள் தெரிகின்றன. எழுத்துப் பிழைகள் வேறே. ஓரிடத்தில் மாதிரி எனற வார்த்தை இரண்டு முறைகள் வந்து குழப்புகின்றன. படிக்கப் படிக்க சரித்திர நிகழ்வுகள் படிக்க படிக்க விட்டுப்போனவை என்று திருத்தங்க்கள் இருந்து கொண்டு தான் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் அண்ணா கொண்டு வந்த அந்த தமிழ் நாடு பெயர் மாற்ற தீர்மானம் தமிழ் நாடு சட்டசபையில் நிறைவேறுகிறது என்ற வரியைக் கூட சேர்த்துக் கொள்ளலாம். அப்படி நிறைவேறினால் தான் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அதை சட்டமாக்க முடியும் என்பது உள்ளடக்கமாகி விடுகிறது. எழுதித் தெரிய வேண்டியதில்லை என்றும் கொள்ளலாம்.

      நீக்கு
    3. மறுபடி பார்த்து முடிந்தவரை நிறுத்துகிறேன்.

      நீக்கு
    4. // நிறுத்துகிறேன். //

      திருத்துகிறேன்.  இதையே திருத்த வேண்டி இருக்கிறது. 

      அதென்னவோய் கூகுள் 'திருத்துகிறேன்' என்று டைப்பினால் முதல் ஆப்ஷனாய் 'நிறுத்துகிறேன்' என்று காட்டுகிறது!

      நீக்கு
    5. அப்டேட்டியிருக்கேன். பாருங்க...

      நீக்கு
  3. கட்டுரையில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. நண்பருடன் பேச்சு. கடிகாரம் பாஸ்ட், நடைப்பயிற்சி, கடைசியில் 10 நிமிடம் அதிகம் பயிற்சி தனக்குத் தானே ஒரு சொட்டு, என்று செல்கிறதே தவிர தலைப்பான 'மனசு வேறு, நாம் வேறா' என்பதற்க்கு ஏற்ப இல்லை. . முன்னர் எல்லாம் தலையங்கம் போலிருந்த கட்டுரை இன்று உப்பு பெறாமல் இருக்கிறது.

    41 வருடங்களுக்குப்பின் தீர்ப்பு பின்வாங்கப்பட்டால் அனுபவித்த தண்டனைக்கு என்ன பரிகாரம்? பாவம் தண்டிக்கப்பட்டவர். ஏதாவது நஷ்ட ஈடு உண்டா?

    எப்படிங்க அந்த அரசு அதிகாரி அந்த 11 கோடி ரூபாயை சம்பாதித்தார். கண்ணதாசன் கூறிய தத்துவம் போல் காசு எப்படி வந்ததோ அப்படி வந்த வழியிலேயே சென்று விட்டது. திருடனை தேள் கொட்டி விட்டது.

    கோவை பிரியாணி கடை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தனவே!

    விளக்கால் ஈர்க்கப்படும் பூச்சிகள் போல பெரிய எழுத்தாளர்களும் (பா வெ, ஜீவி) வியாழன் அன்றே எழுத விரும்புகின்றனர். ஏனோ? ஒரு பகுதியை சனிக்கு போட்டால் நானும் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்.

    ஜீவி சார் எழுத்துக்கேற்ற பின்னூட்டங்கள் கிடைப்பதில்லை என்று வருத்தப்படுகிறார். நியாயம். ஆனால் பின்னூட்டம் இடும் அளவுக்கு அதில் உள்ள விஷயம் தூண்டுகோல் ஆக இருக்க வேண்டும். அது முக்கியம்.

    தமிழ்நாடு என்ற மாநிலப்பெயர் மாறியதற்குக் காரணம் காஞ்சித் தலைவன், காஞ்சித் தலைவன் மட்டுமே. தமிழ்நாடு என்றாவதற்கு முன் தமிழகம் என்ற பெயர் சிறிது நாட்கள் நிலவில் இருந்ததாக ஞாபகம். சரியா என்று ஜீவி சார் கூறட்டும்.

    தோசை வாங்கப்போன கவிதை எல்லாம் கில்லெர்ஜீ டிபார்ட்மென்ட். உங்களுக்கு புதுக்கவிதை மட்டுமே.

    சல்மான் கான் ஜோக். செல்ல விசா உண்டு. செல்வந்தர்களுக்கு செல்ல விசா. உடனடி கிடைக்கும். முதலீடு செய்தால் குடியுரிமை தரப்படும் என்று பல நாடுகள் விசா கொடுக்கின்றன.

    பசு பாதுகாவலர் யாரையும் இல்லையா? தெருவில் திரியும் இந்த மாட்டைப் பிடித்து பாதுகாக்க? தைரியமாக படம் எடுத்ததற்கு பாராட்டு !!!

    காலச்சுவடு கவிதை கவிதையே அல்ல. கவிஞர் சல்மா எழுதியது போல் உள்ளது.

    பொக்கிச ஜோக்குகளில் முதல் ஜோக் சரியில்லை. ஊஞ்சலில் இருவர் இருக்கும்போது ஊஞ்சலில் இருப்பவர் ஊஞ்சல் கொக்கியை கழட்ட முடியாது.

    கடைசி ஜோக் ஜோக்கில்லை. அன்றும் இன்றும் எப்போதும் நடப்பது தான்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கட்டுரையில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.//

      பெரிதாக ஒன்றுமில்லை.  இட்டு நிரப்பும் வேலை.  கடைசியில் ஒரு தத்துவ, மன்னிக்கவும் தத்துபித்துவ கேள்வி!  அஷ்டே.

      41 வருட தண்டனைக்குப் பின் மாற்றுத் தீர்ப்பு...   யாரைச் சொல்லி என்ன பயன் என் வழக்கு தீரவில்லை வரிதான்!

      ஜீவி ஸார் இந்த பகுதிக்காக எழுதியதல்ல அந்தக் கட்டுரை.  பேஸ்புக்கில் அவர் கொடுத்ததை அவரே அறியாமல் நான் எடுத்துக் பகிர்ந்திருக்கிறேன்.  அவருக்கே ஆச்சர்யமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்!

      சனிக்கிழமைக்கு மாற்று வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

      சமயங்களில் பின்னூட்டங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் தவறான அர்த்தத்தைத் தந்து விட்டால் அனர்த்தம் ஆகிவிடுகிறது!

      தோசை வாங்கப் போன பாடல் எழுதிய வருடத்தைப் பார்க்க வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.  

      செல்ல விசா என்பதை செல்லமான விசா என்று கொள்ளவும்!

      அது பசு மாதிரியா தெரிகிறது?

      இப்போதெல்லாம் மனுஷ்யபுத்திரன், விக்ரமாதித்யன் உள்ளிட்ட பலரும் இப்படித்தான் அக்கவிதை எழுதுகின்றனர்.

      ஜோக்கில் ரொம்ப ஆராய்ச்சி செய்தால் உதடு பீரியட் கூட வாய்ப்பில்லாமல் போகும்!!!

      நன்றி JKC ஸார்.

      நீக்கு
    2. //அது பசு மாதிரியா தெரிகிறது?// இல்லை தான். ஆனால் மாடு பாதுகாவலர்கல் தங்களை பசு காவலர் என்றல்லவா கூறிக் கொள்கிறார்கள்.

      நீக்கு
    3. அதற்குள் நான் புக விரும்பவில்லை!  (பல முக்கிய விவாதங்களில் முக்கிய தருணங்களில் இப்படி சொல்லித்தான் என்னை ஒருவர் அலுவலகத்தில் போதுமான அளவு வெறுப்பேற்றுவார்!)  ஆனால் இது காளை...  என்னைப் பார்த்ததும், என் பக்கமாகத் திரும்பி, முன்னங்காலை தரையில் இரண்டு தேய்தேய்த்து, முகத்தை பூமியை நோக்கித் தாழ்த்தி, புஸ் என்று மூச்சு விட்டு, கொஞ்சம் புழுதியைக் கிளப்பி இருந்தால் என் கதி?

      நீக்கு
  4. கேட்டவன், பாடுபட்டவன் பெரியவனா இல்லை நிறைவேற்றியவன் சாதித்தவனா? இது செயலைப் பொறுத்து மாறுபட்டு அவரவர்களுக்குத் தோன்றியவாறு சொல்வதால் இந்தக் கேள்வி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நல்ல கேள்வி நெல்லை.  பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன்!

      நீக்கு
    2. சந்தேகமில்லை. கேட்பது யாராகவும் இருக்கலாம்,. குழந்தைகள் கூட பல அறிவார்ந்த கேள்விகளை கேட்கிறார்கள். கேள்விக்கு பதிலைத் தந்தவரே பெருமை மிக்கவர், சிறந்தவர்.
      Jayakumar

      நீக்கு
    3. நெல்லை முதலில் முயற்சித்தவரா, முடித்தவரா என்று கேட்கிறார்.  ஆரம்பித்தவரா நிறைவேற்றியவரா?  இவர்கள் ஆரம்பித்திருக்கா விட்டால் முடித்தவருக்கு தெரிந்திருக்குமா?     என்று...... ஹிஹி... நெல்லை கேட்கிறார்!

      நீக்கு
    4. இது ஒரு புதன் கேள்வி ஆகட்டும். kgg சார் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
      Jayakumar

      நீக்கு
    5. சுவாமிநாத பாரதி அவர்கள் தமிழ் நாடு பெயர் மாற்றம் அடிகாரபூர்வமாக நிறைவேற வேண்டும் என்று நான் சொன்னதற்கு அது என்ன அதிகாரபூர்வம் இதில் இருக்கிறது என்று கேட்டார். ஒரு சட்டம் அதிகாரபூர்வமாக என்னன்ன இருக்கின்றன என்று 'சடங்குகள்' இருக்கின்றன என்பதற்காக நான் சொன்னது தான் இது.

      இப்பொழுது தெரிவது என்னவென்றால் 79 நாட்கள் சங்கரலிங்கனார் என்ற தியாகி இந்த தமிழ்னாடு பெயர் மாற்றத்திற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டார்
      என்ற விஷயமே ஜெஸி ஸாருக்குட் தெரியாது போலும்.
      நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. 79 (76+3) நாட்கள் ஐயா!
      (அது என்ன 76+3 என்றும் இவர்களுக்குத் தெரியாது)

      நீக்கு
    6. சரித்திரம் என்பது எழுதுபவரின் கண்னோட்டத்தைப் பொறுத்தது. 1956இல் நான் சிறுவன். 1964 வரை எனக்கு பத்திரிக்கைகள் போலும் பரிச்சயமில்லை. செய்திகள் என்பது மற்றவர் சொல்லக் கேள்வி தான்.

      பொட்டி ஸ்ரீராமுலு தனி ஆந்திர மாநிலத்திற்க்காக உண்ணாவிரதம் இருந்து மரித்தது தெரியும். அதே போன்று ம பொ சி திருப்பதி தேவிகுளம், பீர்மேடு இணைப்பிற்காக போராடியது தெரியும். ஆனால் சங்கரலிங்கத்தின் 79 நாள் உண்ணா விரதம் பற்றி தெரியாது. காரணம் இருட்டடிப்பு.

      உண்ணா விரதம் என்றவுடன் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம் ஆக இருந்த அண்ணா ஹஜாரே நினைவில் வந்தார். ஆள் இருக்கிறாரா இல்லையா?
      Jayakumar

      நீக்கு
    7. 1937 ல் பொறந்தவரு..  இன்னமும் கீறாரு...  கேஜரிவாலை வளர்த்து விட்டவர்.  அல்லது வரக்காரணமாயிருந்தவர்.  கிரண்பேடியும் அப்போதுதான் அரசியலில் கொஞ்சம் பெயர் அடிபடத்தொடங்கியது என்று நினைவு.

      நீக்கு
  5. பட்டப் பெயரிலேயே புளகாங்கிதம் (அப்படீன்னாக்எ) அடைவது, பெயர் வைத்த தந்தையைக் கேவலப்படுத்தும் செயலாகாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எதற்கான பின்னூட்டம் என்று யோசிக்கிறேன்.

      நீக்கு
    2. நீங்களும் தான் 'நெல்லைத் தமிழன்' என்று பட்ட, புனைபெயரில் புளகாங்கிதம் அடைகிறீர்கள். அப்டின்னாக்கா?

      நீக்கு
    3. மேலும் குழம்பினாலும்,

      "சபாஷ்... சரியான போட்டி!"

      நீக்கு
    4. இணையத்தில் நம் பெயரை வெளிக்காட்ட வேண்டாம் என்ற எண்ணத்தில் நான் வைத்துக்கொண்டது அது. அண்ணா, கலைஞர் என்று பட்டப்பெயரில் ஒளிந்துகொண்டு, ஒரிஜினல் பெயரை யாரேனும் குறிப்பிட்டுவிட்டால் ஏதோ அவமரியாதை செய்ததைப்போலத் துள்ளுவது எதற்காக என்பது கேள்வி.

      நீக்கு
    5. நானே கருணாநிதி என்று சொல்லி அடி வாங்கி இருக்கிறேனே...  ஆனால் அது கூட அவர் சொந்தப பெயர் இல்லை என்று நினைக்கிறேன்.  தண்டபாணி என்பது போல ஏதோ பெயர் வரும் என்று நினைவு.  தவறாகவும் இருக்கலாம்.

      நீக்கு
    6. // தண்டபாணி என்பது போல ஏதோ பெயர் வரும் என்று நினைவு. தவறாகவும் இருக்கலாம். //

      தக்ஷிணாமூர்த்தி!

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. தினம் நடைப்பயிற்சி செய்வது போரடிக்கும் வேலை. ஒவ்வொரு நாளும் மோடிவேஷன் தேவையாக இருக்கு. அதிகாலை நாலு மணிக்கு எழும் வழக்கத்தை ஶ்ரீராம்்கொண்டுள்ளது பாராட்ட வேண்டிய பழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.  பிளாக் வேலைகள் குறுக்கிடுவதாலும் இப்படி ஒரு நேரத்தை வைத்துக் கொள்வதோடு மக்கள் நடமாட்டமில்லாமல் நடை பயிற்சி செய்வது ஒரு சுகம்.

      நீக்கு
  8. நடிகை சாவித்திரி.... நல்ல வேளை... தற்காலத்தில் நடிகைகள் புத்திசாலியாக இருக்கின்றனர். ஜெமினி கணேசனைப் பார்த்தும் புத்திசாலியாகாத்து சாவித்திரியின் தவறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுதாரித்துக் கொண்டபோது டூ லேட்டாகி இருந்திருக்கலாம்.

      நீக்கு
  9. //மனசு ஏமாறுமா என்ன! ஏமாறுகிறதே... ஆனால் கையோடு அந்த கடிகார விஷயத்தையும் நினைவு படுத்துகிறதே... மனசு வேறு, நாம் வேறா என்ன? இல்லை, வேறுதானோ?

    பத்து நிமிடங்கள் அதிகமாக நடக்கிறேன்.//

    எப்படியோ மனதை ஏமாற்றி 10 நிமிடம் அதிகமாக நடந்து விட்டீர்கள்.
    அதிகாலை நடை, உடற்பயிற்சி நல்லதுதான்.


    நான் காலை 4.30க்கு எழுந்து விடுவேன், அலுப்பாக இருக்கும் நாளில் கூட கொஞ்ச நேரம் தூங்கவேண்டும் என்று நினைத்து படுத்தால் 3.30க்கு எழுப்பிவிட்டுவிடும் , மீண்டும் படுத்தால் தூக்கம் வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் அக்கா.  எழுந்திருக்கும் நேரம் வந்து விழிப்பு வந்ததும் சட்டென எழுந்து உட்கார்ந்து கைகளைத் தேய்த்து முகத்தைத் துடைத்து உள்ளங்கைகளை உற்று நோக்கி விட்டு நின்று விட்டால் போதும்...  

      நீக்கு
  10. //கொள்ளை சம்பவத்தை முடித்து விட்டு சாவகாசமாக புறப்படுகிறது. போகும்போது அந்த கும்பல் வாழைப்பழங்களை தூக்கிச் சென்றிருப்பது தான் ஹைலைட்.//

    பசிவந்து இருக்கும், போகும் வழியில் வாழைப்பழங்களை சாப்பிடலாம் என்று எடுத்து சென்று இருப்பார்கள்.
    அந்த வீட்டில் வேறு உணவு இல்லை போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ புதிய பாணிகள்! நக்கல் பிடித்த கொள்ளையர்கள்!

      நீக்கு
  11. //தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வந்தது எப்படி, வைத்தது யார் என்கிற ஒரு ஃபேஸ்புக் விவாதத்தில் ஜீவி ஸார் தந்த பின்னூட்டம்.//

    தனி பதிவாக போடும் அளவு இருக்கிறது சாரின் பின்னூட்டம்
    நீண்ட வரலாறு தான். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நானும் அங்கேயே பாராட்டி விட்டேன்.  இதை விடக்கூடாது.  மொத்தமாகத் தொகுத்து ஆவணப்படுத்தி விடவேண்டும் என்று தோன்றியதால் இங்கு எடுத்துக் பகிர்ந்து விட்டேன்.  அங்கு ஒற்றை விரலால் கண் சிரமத்துடன் தடவிதடவி பலப்பல பின்னூட்டங்களாய்க் கொடுத்திருந்தார்.

      நீக்கு
  12. காற்று வாங்க போனேன் பாடலை நிறைய பேர் மாற்றி பாடுவதை கேட்டு இருக்கிறேன் சிறு வயதில்.
    உங்கள் கவிதையும் நன்றாக இருக்கிறது.
    உங்கள் ஜோக் சிரிக்க வைக்கிறது.
    பொக்கிஷ பகிர்வுகள் அருமை.
    சாவித்திரி செய்தி படித்த செய்தி தான் படிக்கும் போது எல்லாம் வருத்தம் அளிக்கும்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதியில், மனதின் அலசல் நன்றாக உள்ளது. மனது சொல்வதைதான் நாம் பெரும்பாலும் கேட்கிறோம். மீதி தன்னிச்சையாக (தன் இச்சை என்று பிரித்தால் மறுபடி அது "நம் மனது" என்ற வேறு அர்த்தத்தை தருமோ?) நடந்து விடுகிறது.

    எங்கள் வீட்டிலும் இந்த கடிகாரங்கள், கீ கொடுக்கும் போதும் சரி, புது பேட்டரிகள் மாற்றும் போதும் ஒரு பத்து, பதினைந்து நிமிடங்கள் முன்னுக்கு தள்ளி கூட வைப்போம். ஆனால், அதைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும், நாம்தான் இந்த நேரத்தை தள்ளி வைத்திருக்கிறோம் என்று மனசாட்சி சத்திய பிரமானத்துடன் அறை கூவலிடும் . இருப்பினும் அதற்குள் ரெடியாகி விடலாம் என்ற ஒரு ஆறுதல். நமக்கு பக்க பலமாக இருந்து செயலாற்றும். ஆயினும், ஒரிரு மாதத்திற்குள், அந்த கடிகாரம் நல்ல பிள்ளையாக செயலாற்றி நம்மை ஏமாற்றி விடும். சந்தர்ப்பவசமாக மற்றொரு கடிகாரத்தை பார்வையிடும் போது குறிப்பிட்ட இதன் உண்மையான நேரம் கூட பின்னுக்கு தள்ளிக் கொண்டதை காட்டி விடும். (அப்போதுதான் நம் நேரமும் அன்று சரியில்லையென நம் பதட்டம் மிகுந்த செயல்கள் காட்டி விடும். :)) )

    நீங்கள் நடைப்பயிற்சிக்கு புது உத்திகளை கையாள்வது சிறப்பான செயல் பாராட்டுக்கள். எவ்வளவு நடந்தாலும், அந்த நேரத்திற்குள் முடிக்க வேண்டுமே..! அதன் பின்னர் நமக்கிருக்கும் கடமையை நம் மனது உணர்த்திக் கொண்டேயிருக்குமே ! நம் மனதையும், கடிகாரத்தின் மனதையும்,( நேரம்) கலந்து தந்திருக்கும், நல்ல அலசலுடன் கூடிய பதிவை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த தன்னிச்சையே மனக்குரலின் தொடர்ச்சிதானே?!!

      சில சமயங்களில் பேட்டரி (இதற்கு தமிழ் என்ன?!)  தீர்ந்துபோய் நேரம் பின்னால் காட்டாத தொடங்கி விடும்.  சரியாக கவனிக்காமல் நாமும் அசால்ட்டாய் (இதை தமிழில் எப்படி சொல்வது?  அலட்சியமாக?) இருந்து மாட்டிக் கொள்வோம்.

      ஆம். வேலைகள் வரிசை கட்டி காத்திருக்க, நடையை எட்டிப்போட வேண்டி இருக்கிறது.  எனவே எட்டு போட்டு நடப்பதெல்லாம் சாத்தியமில்லை!

      நீக்கு
  14. ஸ்ரீராம், நம்ம Commander ஏ மனசுதாங்க! ஆனா பாருங்க அந்தத் 'தலை'வர் ஒழுங்கா பயிற்சி எடுத்திருக்கணுமே!!!!! அப்பதான் அவர் ஒழுங்கா நம்மை ஆளுவார்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா...  பயிற்சியே தேவை இல்லை.  அவர் ஒழுங்காய்தான் இருக்கார்.  நாம்தான் அவரை கோதுமை மாவு மாதிரி பிசைய நினைக்கிறோம்!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்!

      அதைத்தான் சொல்லுகேன். அப்படி பிசையறதையும் ஒழுங்கா பிசையணும்லா! இல்லேனா சப்பாத்தி சப்பாத்தியா வராதுல்லா! கோணாமாணான்னுல்லா போவும்! என்ன சொல்லுதிய!

      கீதா

      நீக்கு
    3. அப்போ மனசுதான் நம்மள ஏமாத்துதுன்றீங்க....

      நீக்கு
  15. நானும் காலையில் 3.15 / 3.30 யிலிருந்து 4.30க்குள் எழுந்துவிடுவதுண்டு. பெரும்பாலும் 3.15 / 3.30. எழுந்தால் என் உடற்பயிற்சிகள் மனப்பயிற்சிகளை முடித்துக் கொண்டு வேலையைத் தொடங்க சரியா இருக்கும்.

    காலையில் நடைப்பயிற்சி - metabolism ற்கு நல்லது மாலை நடைப்பயிற்சி அன்றைய அழுத்தங்கள், அல்லது சந்தோஷங்கள் இவற்றைச் சரிக்கட்ட உதவும். உற்சாக நடை என்பது தனி பலன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது, ரொம்ப வயதாகவிட்டதால் தூக்கம் வரலை... சீக்கிரமே எழுந்துவிடுகிறேன் என்பதை இவர் பாலிஷ்டாகச் சொல்கிறாரோ?

      நீக்கு
    2. ஆ...   நான் ஒருவேளைதான் நடக்கிறேன் கீதா....  மாலையில் மனம் வருவதில்லை!  ஸாரி, மனதின் குரலுக்கு செவி சாய்ப்பதில்லை!

      நீக்கு
    3. ஹாஹாஹாஹா நினைச்சேன் எங்கண்ணென் கோரி வார வந்திருவாருன்னு!

      நாங்கல்லாம் இன்னும் சின்னப் பிள்ளையலாக்கும்! எங்க பாட்டி கொடுத்த ட்ரெயினிங்க்லா! அது எங்கன போவும்?

      கீதா

      நீக்கு
  16. நேரம் கூட்டி வைக்கும் பழக்கம் சில வீடுகளில் பார்த்திருக்கிறேன்.

    ஆனால் எனக்கு உதவுவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நலமா? தாங்கள் கருத்தும் சரிதான். அதன் உண்மையான நேரத்தை நம் மனது உள்ளது உள்ளபடி சொல்லிக் கொண்டேயிருக்கும்.

      என் முந்தைய பதிவுக்கு உங்களை ஆவலுடன் எதிர்பார்த்தேன். . நடுவில் பதிவுகள் எழுதி பல மாதங்கள் ஆகி விட்டது. (இப்படி எழுத விட்டால், நம் வேலைகளே பழக்கமாகி எழுத்துக்கள் மறந்து விடும் போலிருக்கிறது. ஆனால், எழுதி என்ன சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணமும் அடிக்கடி வந்து ஒரு சோம்பலுக்கு காரணமாகிறது அல்லவா? அதனால் நம்மை புத்துணர்ச்சி பெற வைக்க இப்படி இந்த எழுத்துக்களின் துணையை நாட வேண்டியுள்ளது. நீங்களும் உங்கள் பக்கத்தில் பதிவுகளை தந்து நாளாகிறது. நீங்களும் உங்களின் வேலைகளுக்கு நடுவில் பதிவுகளை தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.)
      அதனால் இப்போதும் ஒரு பதிவு எழுதி போட்டுள்ளேன் உங்களின் ஊக்கம் தரும் கருத்துக்களை நான் வரவேற்கிறேன். (ஆனால் நானும் உடனுக்குடன் பதில் தர முடியாது தாமதிக்கிறேன். என்பது உண்மையே..! அதற்கும் இங்கேயே அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.) தங்களுக்கு முடிந்த போது வாருங்கள். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. // ஆனால் எனக்கு உதவுவதில்லை. //

      ஒரு சோதனை முயற்சியாக கொஞ்ச நாள் வைத்துப் பாருங்களேன்...

      நீக்கு
    3. ஓ! கமலாக்கா ரொம்ப ஸாரி! இன்று பார்க்கிறேன். கொஞ்சம் வேலைப் பளு. ப்ளாகர் reading list பார்க்கவே இல்லை. தினமும் வரும் பதிவுகள் எபி, வெங்கட்ஜி, என்பது தெரியும் ஆதலால் பார்த்துவிடுகிறேன்.

      கில்லர்ஜி பதிவுகள் அவர் வாட்சப் க்ரூப்பில் பகிர்ந்துவிடுகிறார். எனவே அதுவும் நினைவுக்கு வந்துவிடும்.

      இன்று பார்க்கிறேன் அக்கா.

      கீதா

      நீக்கு
    4. இரண்டு பதிவுகள் இருக்கின்றன. தேங்காய், காஃபி!!! பார்த்துவிடுகிறேன்.

      கீதா

      நீக்கு
    5. ரெண்டுமே நான் பார்த்து விட்டேன்.   காபி பதிவுல  என்னோட அஞ்சு கமெண்ட்ல ஒரு கமெண்ட் அங்க நிக்காம வழுக்கி வழுக்கி விழுது...

      நீக்கு
    6. வைத்துப் பார்க்கிறேன் ஸ்ரீராம்...ஆனா கடிகாரம் இல்லையே. எல்லாம் மொபைல், கம்ப்யூட்டர்தான்!!! அப்புறம் இந்த பயோ க்ளாக் இருக்கே!!! அது எழுப்பிவிட்டுடும்! அதுவும் ராத்திரி அதை செட் செய்துட்டா போதும்.....ஹையோ அதுக்கு எப்படித்தான் தெரியுதோ! கரீக்டா 5 /10 நிமிஷம் முன்னாடி எழுப்பிவிட்டுடும்!!

      கீதா

      நீக்கு
    7. உண்மைதான்.  எனக்கும் அந்த அனுபவம் உண்டு கீதா,

      நீக்கு
    8. வணக்கம் சகோதரரே

      நானும் சமையல் நடுவில் வந்து பார்த்தேன். தாங்கள் உடனடியாக வருகை தந்து பின்னூட்டங்கள் அளித்திருப்பதற்கு என் பணிவான நன்றிகள். கொஞ்சம் சமையல் வேலைகள் தொடர்ச்சியாக வந்து விட்டது. பதில் கருத்து தருகிறேன்.

      /என்னோட அஞ்சு கமெண்ட்ல ஒரு கமெண்ட் அங்க நிக்காம வழுக்கி வழுக்கி விழுது.../

      ஹா ஹா ஹா. தாங்கள் பின்னூட்டங்களும் காஃபி அதிகம் (அங்கு காஃபியின் சொற்களும் அளவுக்கு அதிகமாக வந்து விழுந்துள்ளவையே..!) குடித்ததின் மயக்கத்தில்தான் இருக்கலாம்.:)) நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    9. வணக்கம் சகோதரி

      தாங்கள் என் கருத்தை உடனேயே கவனித்து பதில் தந்திருப்பதற்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      மெல்ல வாருங்கள். அவசரமேயில்லை. உங்கள் கருத்துகள் என் எழுத்துக்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கங்களையும் தரும். எனவே தங்களை காணாத ஒரு தாபத்தில் அந்த எழுத்துக்கள் என்னிடம் முறையிட்டு விட்டன. அதனால் நானும் அழைத்து விட்டேன். ஹா ஹா ஹா.

      உங்கள் வேளை பளுவும் எனக்குப் புரியும். அவசரமில்லை மெதுவாக வாருங்கள். ரொம்ப நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    10. கமலா அக்கா.  நீங்களும் மொபைலிலிருந்து பதிவுகள் வெளியிடுவதால் ஸ்பாம் பக்கம் போய்ப் பார்ப்பதில்லை.  ஸ்பாமில் ஒருமுறை சென்று அங்கு சிக்கி இருக்கும் கமெண்ட்ஸை விடுவியுங்கள்!  ஏராளமாக பலகாலமாக சிறைப்பட்டிருக்கும்!

      நீக்கு
  17. அனைவருக்கும் காலைவணக்கங்கள்

    பேடடரிக்கு தமிழில் மின்கலம்
    மின்சேமிப்பான் என்று கூறுவதுன்டு

    எனக்கு கதைபடிப்பதில் கதைபடிப்பதில் நாட்டம் இல்லை. கதை அடிப்பதிலும்
    நாட்டம் இல்லை. அதனால்தான். தினமும் நான்
    ஒன்றும் கமென்ட் எழுதவில்லை. எங்கள் ப்ளாக் பகுதியை. பார்த்து பார்த்து இப்போது கஞ்சம் கொஞ்சம்
    கதைபடிக்கிறேன்.
    ஆனால் எப்போதும் கதை அடிக்கமாட்டேன் இது உறுதி.

    சில சமயங்களில் நாம் டைப்
    செய்யும்போது அது தானாக
    வேறு வார்த்தையாக வெளியிடுகிறது உண்மை.
    எனவே டைப் செய்தபிறகு ஒரு
    முறை. மொத்தமாக சரிபார்க்கவேண்டியுள்ளது. உண்மை
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சக்ரபாணி சார்.. எதற்கு ஒவ்வொரு பொருளுக்கும் தமிழில் பெயர் தயார் செய்யணும்? பேட்டரி என்றே உபயோகிக்கலாமே. பாசிடிவ் நெகடிவ், உடல் உறுப்புகள் எனப் பல்வேறுபட்டவற்றையும் ஏற்கனவே உபயோகிக்கும் தமிழ் வார்த்தை இல்லாவிடில் தமிழ்ப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? நெகிழி வழலை அடுமனை.... இவைகளை யாரைத் திருப்திப்படுத்த கண்டுபிடிக்கிறார்கள்?

      நீக்கு
    2. வாங்க சக்ரபாணி ஸார்...   வணக்கம்.  நேற்றைய என் பின்னூட்டத்துக்கு மதிப்பளித்து இன்றும் வரவு வைத்ததற்கு நன்றி.   

      மெல்ல மெல்ல எல்லாவற்றையும் ரசிக்கலாம், படிக்கலாம்.  படிக்கப் படிக்க நாமும் எழுதலாமே என்று தோன்றலாம்.  எழுதினால் அதை இங்கு எனக்கு அனுப்பலாம்.  நான் அதை நாள் பார்த்து இங்கு வெளியிடலாம்...!

      நீக்கு
    3. உண்மைதான் நெல்லை.  பேட்டரி என்றே சொல்லி விட்டு போய்விடலாம்.  சக்ரபாணி ஸார் கமலா அக்காவுக்கான என் பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டு பதில் சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
  18. நீங்கள் கடிகாரம் பற்றி எழுதியதும், என் மனதில் தோன்றியது என் பழக்கம். எனக்கு எல்லா இடங்களிலும் (அறைகளிலும்) கடிகாரம் இருக்கணும். பெட்ரூமில் சில நேரங்களில் தலையைத் திருப்பிப் பார்க்க வேணுமே என்ற எண்ணத்தில் இரண்டு சுவர்கடிகாரங்கள். பாத்ரூமில்கூட. இதுல ஒரே பிரச்சனை, ஒரு வருடத்துக்கு ஒருமுறை எல்லாவற்றிலும் நேரவித்தியாசத்தைச் சரி செய்வது. என் பசங்க பத்து நிமிடம் அதிகமாக ஹால் கடிகாரத்தில் (எந்த வீட்டில் இருந்தபோதும்) வைத்துவிடுவார்கள். இப்போதுதான் அதனையும் ஒரே நேரத்தில் வைக்க ஆரம்பித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை...   திருமணம் போன்ற விசேஷங்களுக்கு பரிசுகள் வரும்பொழுது அதில் எப்படியும் நான்கைந்து கடிகாரங்கள் வந்து விடுகின்றன.  நாங்களும் வீட்டில் மூலைக்கு மூலை கடிகாரங்கள் மாட்டி வைத்திருக்கிறோம்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா.... எங்க வீட்டு கடிகாரம்லாம் நான் அழகா இருக்கா என்று பார்த்து வாங்கி வைத்தது.

      பஹ்ரைனிலும் அதே வழக்கம். ஆனால் பாருங்க வருடக்கணக்கா என்னிடம் இருந்த ஒரு சுவர்கடிகாரம் ஒருநாள் தானாகவே கீழே விழுந்து உடைந்தது. அதுவே எனக்கு அபசகுனமாகப் பட்டது. (எதில்லாம் சகுனம் பார்க்கிறேன் பாருங்க)

      நீக்கு
    3. ஆமாம். சட்டென மனதில் ஒரு இடறல் வரும்தான்!

      நீக்கு
  19. கஞ்சம் என்பதை கொஞ்சம் என்று
    படிக்கவும். சரியாக டைப் செய்த பிறகு தானாக மாறிவிட்டது. மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பின்னூட்டங்களில் ஏகப்பட்ட தப்புகள் வரும் சக்ரபாணி ஸார்...   கீதா அக்காவை கேட்டுப் பாருங்கள்.  ஏகப்பட்ட தடவை அவர் என்னை பெஞ்ச் மேல் ஏற்றி இம்போசிஷன் கொடுத்திருக்கார்.  ஆமாம், இம்போசிஷனுக்கு என்ன தமிழ் நெல்லை?

      நீக்கு
    2. நம் கலாச்சாரத்தில் வழக்கமில்லாத, வேற்றுக் கலாச்சாரத்திலிருந்து வந்த பழக்கங்களுக்கு தமிழ் சொல் கண்டுபிடிப்பது கடினம்.

      நீக்கு
  20. முதல் செய்தி - வித்தியாசமான செய்தி. அதுவும் குழந்தை தன் தாயிடம் செல்ல மறுத்தது!

    கடத்தியதை விட இந்தத் தப்புக்குக் கடத்தியவர் குற்ற உணர்ச்சியில் ஃபீல் பண்ணி உணர வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராவணன் படம் பார்த்திருக்கிறீர்களா? மணிரத்னம். நான் பார்த்ததில்லை. ஆனால் இந்த மாதிரியான மனநிலையில் இருக்கும் படம் என்று சொன்னதாக நினைவு.

      நீக்கு
  21. 1999 கடத்தல் போல கொஞ்சம் வேறாக பயணம்னு படம் வந்தது இல்லையாக்கா?

    கொள்ளையர்களுக்குப் பசியோ கைக்கு உதவும் னு எடுத்துட்டுப் போனாங்களோ? ரொம்ப வறுமையோ என்னவோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசியெல்லாம் இருக்காது.  கிண்டல் பிடித்த கொள்ளையர்களாக இருப்பார்கள்!

      நீக்கு
  22. 41 ஆண்டுக்கு பிறகு, கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை திரும்ப பெற்றுள்ளது அலாகாபாத் உயர்நீதிமன்றம். //

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நீதியோ! கொடுமைடா சாமி. இப்படிப் பல வழக்குகள் இப்படி இழுத்தடித்து தாமதமாக்கப்படுவதால் மன உளைச்சல்தான் மின்ஞ்சுமே தவிர நீதி கிடைச்சாலும் அதன் பலனை அனுபவிக்கும் மனநிலை இருக்குமா என்ன?

      அவர் சிறையில் இருந்தாரா? ஜாமீனில் வெளி வந்தார்ன்னு போட்டிருக்கிறது.

      கீதா

      நீக்கு
    2. கொடுமை.  படிக்கும்போது மனம் ரொம்ப வேதனைப்பட்டது நிஜம்!  (சிவசங்கரி சொல்வது போல!)

      நீக்கு
    3. இந்திய நீதித்துறையில், இருக்கும் சட்டங்களின்படி, நீதி கிடைக்காது. அது நீதித்துறையின் குற்றமல்ல. சட்டம், நீதித்துறை மற்றும் வழக்கறிஞர்களின் குற்றம்.

      பொதுவா அரபு நாடுகளில், அதிலும் சௌதி மற்றும் எமிரேட்ஸில் நீதித்துறை நன்றாகச் செயல்படுகின்றது. பஹ்ரைனில் அரசியல் தலையீடுகள் நிறைய உண்டு. சட்டம் யாவர்க்கும் பொது என்ற முறையில் எமிரேட்ஸ் முதலிடம் பெறுகிறது. விரைந்து நீதி என்பது சௌதியில் நடைமுறையில் இருக்கிறது. பொதுவாக அரபு தேசங்களில், குற்றம் சாட்டப்பட்ட உடனேயே சிறையில்தான் போடுவார்கள். ஜாமீன் என்ற, குற்றவாளிகளைத் தப்பவிடும் வாய்ப்பு அங்கெல்லாம் அறவே கிடையாது (கிரிமினல் வழக்குகளில்). அரசியல் கைதிகளைத் தவிர மற்றவர்கள் ஓரளவு நன்றாகவே நடத்தப்படுவார்கள்.

      நீக்கு
    4. நம் நாட்டில் அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாக எல்லாம் இருக்க முடியாது!  சனநாயகம்!

      நீக்கு
  23. ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.13 கோடியை அபேஸ் செய்த சம்பவம், தெலுங்கானாவில் நடந்துள்ளது.//

    கொள்ளை இருக்கட்டும்....யம்மாடியோவ் எப்படிப்பா அரசு அதிகாரிகள் இப்படி சம்பாதிக்க முடிகிறது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க கிட்ட இல்லாம யார்கிட்ட இருக்கும்?  அவர் எந்த மந்திரியோட பேனாமியோ!

      நீக்கு
  24. இன்றைய செய்திகளில் லிங்க் இருப்பவை ஸ்ரீராம் சேகரிப்போ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. புடின் அரசு செய்தி சிரிப்பை வரவழைத்தது...புடினுக்கு யாராச்சும் சொல்லுங்க நம்ம ஊர்ல ஏகப்பட்ட லேகியங்கள் விக்கிறாங்கப்பா இளமையா இருக்கன்னு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூச்சுக்காத்தை எண்ணி விட்டு சித்தன் போக்கு சிவன் போக்குன்னு இருந்தால் புடின் நீண்ட காலம் உயிர் வாழலாம்!

      நீக்கு
  26. நடைப்பயிற்சி காணொளி - குறிப்பாக பறவைகளின் பூச்சிகளின் சத்தம் செம ஸ்ரீராம் ரொம்ப ரசித்தேன். உங்க வரிகளும் மிகவும் ரசித்தேன்.

    இதை முதல் பகுதியோடு போட்டிருந்தா இன்னும் சுவாரசியமா இருந்திருக்குமோ? இயைந்தும் போயிருக்குமோ!

    இப்படி நானும் எங்க ஊர் ஏரிப்பக்கம் நடக்கும் போது நீர்ப்பறவைகளோடு மனதில் பேசுவதையும் அவை என்ன சொல்லும் என்ற கற்பனையையும் கூட எழுதி வைச்சிருக்கேன்!! பல நீர்ப்பறவைகள் உணவு உண்பது, கூடு கட்டுவது, குஞ்சுகளை மாலை வாக்கிங்க் போல நீரில் வாக்கிங்!!!!!!! ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் கூட்டிற்குக் கூட்டி வரும் காட்சி எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன்! எல்லாம் தூங்கிக் கொண்டு இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.  யாருமே சொல்லலையேன்னு நினைச்சேன்.  நன்றி.

      நீக்கு
  27. இன்றைய கதம்பம் சிறப்பு. நடைப்பயிற்சி செய்திகள் இன்றைக்கு அதிகமோ :) நடையின் போது கிடைக்கும் அனுபவங்கள் அலாதியானவை.

    பதிலளிநீக்கு
  28. ஜீவி அண்ணாவின் பின்னூட்டப் பதிவு பல விஷயங்களைச் சொல்லியிருக்கின்றது, ஒரு சில அறிந்ததுண்டு என் ஆசிரியர் மாமா மூலமாக சங்கரலிங்கனார் பற்றிய விஷயங்கள் தெரியும். அண்ணா இந்தப் பெயற்மாற்றத்தை முடித்து வைத்ததும்.

    என்னதான் இருந்தாலும், பாரதியார் இருந்த காலம் பிரிட்டிஷார் ஆண்ட காலம் என்றாலும் அன்றே தமிழ்நாடு அதுவும் செந்தமிழ்நாடு என்றே பாடியிருக்கிறார்! அவரது அந்த மூச்சு பரவி எழுத்தாகவும் கூட......அதன் பின் சங்கரலிங்கனார் விதையிட்டிருக்கிறார். எனவே எந்த ஒரு காரியத்திற்கும் விதை மிக மிக முக்கியம்! பாரதியும் கூட விதை இட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சங்கரலிங்கனார் செயல்படுத்த நினைத்து தியாகம் செய்திருக்கிறார் மிகப் பெரிய விஷயம். சில விஷயங்கள் என்றில்லை பல விஷயங்கள் செயலாக்கம் பெற வேண்டும் என்றால் அதிகாரமும் தேவைப்படுகிறது அப்படி அண்ணா அதிகாரத்தித்தில் இருந்ததால்....

    சங்கரலிங்கனாரும் அதிகாரத்தில் இருந்திருந்தால் நடந்திருக்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகாரத்தில் இருந்திருந்தால்...   கரெக்டு..

      நீக்கு
    2. //பல விஷயங்கள் செயலாக்கம் பெற வேண்டும் என்றால் அதிகாரமும் தேவைப்படுகிறது அப்படி அண்ணா அதிகாரத்தித்தில் இருந்ததால்....// - அவர் இறால் வளர்ப்புப் பண்ணைகளுக்கு எதிராகவும் போராடினார். அதிகாரத்துக்கு வருபவர்கள் நேர்மையான எண்ணம் உடையவர்களாக இருந்திருந்தால் நல்லது செய்வார்கள். இல்லையென்றால் 'தமிழ்நாடு' போன்று பாபுலர் செயல்களை மாத்திரம் நடைமுறைப்படுத்துவார்கள்.

      அது சரி..புதன் கேள்வி... இயல்பாக ஜாதிப் பெயரையும் கொண்டுள்ளவர்களின் ஜாதிப் பெயரை நீக்கி அவரை அடையாளமில்லாதவர்களாகச் செய்வதன் காரணம் என்ன? நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, முத்துராமலிங்கத் தேவர் என்றிருக்கும் பெயர்களை பிள்ளை, தேவர் என்று இல்லாமல் எழுதினால் ஜாதி ஒழிந்துவிடுமா? அப்படி ஒழியும் என்றால் 'ரெட்டி' 'ராவுத்தர்' போன்ற பல வால்களை மாத்திரம் விட்டுவைத்திருப்பதன் மர்மம் என்ன?

      நீக்கு
  29. ஸ்ரீராம் தோசை வாங்கப் போனேன் - சிரித்துவிட்டேன் ரசித்தேன்!

    நாங்க எங்க வீட்டில் இப்படி நிறைய செய்ததுண்டு குறிப்பாக நான் தான் இப்படி மாற்றிப் போட்டுப் பாடி அப்போது விக்ரம் படம் வந்த புதிது. அதில் என் ஜோடி மஞ்சக் குருவி பாட்டை மாற்றி....என் அத்தை / மாமா மகன் சாப்பிட உட்கார்ந்த போது அன்று என் சமையல் அம்மா எங்கோ போயிருந்தார். அவனிடம் சூடான வத்தக் குழம்பு, ஜோராகச் சுட்ட அப்பளம், சாப்டுப்பாருடா, டேஸ்டுப் பாருடா...உப்பு உரப்பு எப்படி இருக்கு, மணமும் சுவையும் ஒழுங்கா இருக்கா....

    இப்படி பாடிக் கொண்டே பரிமாறியதில் அவன் வேறு வார்த்தைகள் போட்டு என்னைக் கலாய்த்துத் தள்ளினான். அவனும் இப்படி இட்டுக் கட்டிப் பாடுவான். எங்களுக்குள் கலாய்த்துக் கொள்வதை எல்லாம் நாங்கள் இப்படி இட்டுக் கட்டிப் பாடி (எங்க குட்டீஸ் கூட்டம் கொஞ்சம் பெரிசு) கலாய்ப்போம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே..  நீங்க சொன்ன வரிகளை பாடிப் பார்த்தேன். சரியா வருது கீதா.

      நீக்கு
  30. அந்த ரீல்ஸ் உண்மையான பாம்பா என்ன? ரீல்ஸுக்காக என்ன வேணா செய்வாய்ங்க நம்ம மக்கள்! அதனாலதான் அது பாதில அப்படியே விட்டிடறாங்களோ? ஆனா அப்படி இவங்களாவே சர்ப்ரைஸா செய்தா அதுக்குப் பேரு இன்னொன்னு உண்டே அதென்ன...ஹாங் Prank!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வீடியோலிருந்து எடுத்த ஸ்கிரீன் ஷாட் கீதா.  உண்மையான பாம்புதான்.  ஆனால் பழகிய பாம்பா தெரியவில்லை.

      நீக்கு
  31. சாவித்திரியின் கஷ்டங்கள் வாசித்ததுண்டு. அவர் எடுத்த முடிவுகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  32. Muscle ஆளு நல்லாருக்காரே! இவரு கூட நீங்க மல்லுக்கு நிக்கணும்னா அட் லீஸ்ட் 3 pack ஆவது வைச்சிருக்கணுமே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  33. காலச்சுவடில் வந்த கவிதை - ஓ நாற்பது வயதை அடையும் பெண்ணின் நிலையைச் சொல்லியிருக்கிறாரோ? கவிதை ஒகே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பல்லாம் இப்படிதான் எழுதறாங்க... நானும் அப்படி முயற்சி செய்தால் நல்லா இல்லைங்கறீங்க...!!!

      நீக்கு
  34. சல்மான் ஜோக் - செல்ல!!! ப்ளஸ் பொக்கிஷ ஜோக்ஸ் ஓகே!

    அப்ப இதுவரை சல்மானுக்குத் தடை உத்தர்வு இருந்ததா என்ன?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மானைக் கொன்னாரோ, ஆக்சிடன்ட் செய்து Man ஐக் கொன்னாரோ...  ஏதோ ஒரு வழக்கு இருந்தது.

      நீக்கு
  35. வணக்கம் சகோதரரே

    சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் செய்தியறை பகிர்வில் மூலம் பல செய்திகளை அறிந்து கொண்டேன்.

    ஜீவி சகோதரரின் பின்னூட்ட கட்டுரை நன்றாக இருந்தது. மதராஸ் மாகாணம் தமிழ்நாடு எனப் பெயர் வருவதற்காக தன்னுயிரையும் மாய்த்துக் கொண்டபடி எத்தனை பாடுபட்டுள்ளார்கள் எனப் படிக்கும் போது மனம் கலங்கியது. அது பற்றிய விபரங்கள் அடங்கிய தொகுப்பு அருமை.பல செய்திகளை படிக்கத் தந்த ஜீவி சகோதரருக்கு நன்றி.

    தங்களின் மாற்றுப் பாடலான தோசை வாங்கப் போனேன் பாடல் நன்றாக உள்ளது. அப்போது இந்தப் பாடலுக்கு நாங்களும் ( அம்மா வீட்டில்) விதவிதமாக பாடுவோம்.

    பறவைகளின் ஒலிகள், கேட்டேன். அவைகளின் கற்பனை உரையாடலை நன்றாக எழுதியுள்ளீர்கள். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  36. அதிகாலை ஐந்துமணி அடர்மரத்தடி ஓசைகள் காணொளி மிக அருமை.
    குயிலின் இன்னிசையும், பறவைகளின் சத்தமும் அதிகாலை கேட்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

    பதிலளிநீக்கு
  37. பறவைகளின் கற்பனை உரையாடலை ரசித்தேன். அநத பறவைகள் "நம் பாடலை ரசித்து கொண்டு போனவர் மீண்டும் வருகிறார், நமக்கு தான் பாடும் மனநிலை இல்லை இப்போது" என்று பேசி இருக்கும்.

    தெருவில் மேயும் மாடு படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  38. இங்கு மகள் ஊரில் சுவர்க்கோழியின் ரீங்காரம்! பகல் பொழுதிலும் கேட்கும், கூட்டமாக சத்தம் கொடுக்கும், இரவு இன்னும் அதிகமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகலில் கேட்டதில்லை என்று நினைக்கிறேன். இரவில் அல்லது மழைக்காலங்களில் கேட்கும்.

      நீக்கு
  39. இன்னொரு பின்னூட்டம் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்பாமில் வேறு பின்னூட்டம் எதுவும் இல்லை அக்கா.

      நீக்கு
  40. நேரம் பற்றிய உங்கள் விபரம் எங்கள் வீட்டில் நேரம் சரியாகத்தான் வைப்போம் பத்து நிமிடம் முன்பே ரெடியாகி இருப்பேன் சிறுவயதில் எங்கள் அப்பா பழக்கிய பழக்கம் இன்றுவரை தொடர்கிறேன்.

    நியூஸ்ரைம் பல தகவல்களையும் தருகிறது.

    ஓசைகள் காணொளி எ.பிளாக்கில் வித்தியாசமான முயற்சி வாழ்த்துகள்.

    பொக்கிசம் தகவல்கள் என நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  41. நடைப் பயிற்சியின் போது ஆர்வ மிகுதியில் தூரத்தையோ நேரத்தையோ கூட்டி விட்டுப் பிறகு சிரமப்பட்டது அடிக்கடி நிகழ்ந்ததால் இப்போது ஒரே அளவு தூரம்-நேரம்தான்!

    மரத்தடி ஓசைகள், ந்யூஸ் ரூம், தமிழ்நாடு பெயர்க் காரணம் உட்பட தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!