சென்ற வாரக் கேள்விகளின் பதில்களைப் பார்ப்போம்!
அதற்குமுன் ஒரு அக்கப்போர்!
ச்யவனப்ராஸ் ஞாபகசக்திக்கு சாப்பிடறது இல்லையா? அட! ஆமாம் இல்லே!
அப்போ நான் ஞாபக சக்திக்காக சாப்பிடும் அந்த மருந்தின் பெயர் என்ன? பதிவின் கடைசியில் சொல்றேன்.
1) விடை 1 . மாதவன் லாஜிக்கைப் பிடித்துக்கொண்டு சரியாக வந்தார். ஆனால் திடீரென்று கோட்டை விட்டுவிட்டார்.
ஆமாம். பதில் சொல்லமுடியாத கேள்விகளுக்கு நான் கொடுத்திருந்த உதாரணங்களில் இருந்த எண்கள் 78, பிறகு 47. அதற்குப் பிறகு வந்திருக்கும் எண் 1. அதுதான் விடை.
(கல்லால எல்லாம் அடிக்க வரக்கூடாது. எல்லாத்தையும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கணும்!)
3 ) அடேங்கப்பா எல்லோருமே சரியான விடை சொல்லிவிட்டீர்கள்! வெரி குட்!
பாடலின் ஆரம்பம், "பதறி சிவந்ததே நெஞ்சம் ... என்பது சரி. கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ ... என்பதும் சரியே.
எல்லோரும் ரொம்ப விவரமா இருக்கீங்க!
இந்த வாரக் கேள்விகள்:
1) ஒரு அரண்மனை நந்தவனத்தில், விசேஷமான எலுமிச்சை மரம் இருந்தது. அதில் விளைகின்ற எலுமிச்சம்பழத்தின் சாறு எடுத்து, அதோடு லவங்கப்பொடி, பெருங்காயம், இஞ்சி சேர்த்து, அமாவாசை நாட்களில் ஒரு ஸ்பூன் அருந்தினால், த்ரிகால ஞான சம்பூர்ணன் ஆகிவிடுவார்களாம்.
அந்த நந்தவனத்திற்கு, ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு வாயில்கள். ஏழு வாயில்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் ஒரு வாயில் காப்போன்.
ஒவ்வொரு வாயில் காப்போனும் போடுகின்ற கண்டிஷன் இதுதான். நீ உள்ளே போய், எவ்வளவு பழங்கள் வேண்டுமானாலும் பறித்து எடுத்து வா. ஆனால், திரும்ப வரும்பொழுது, ஒவ்வொரு கேட்டிலும், உன்னிடம் இருக்கும் பழங்களில் பாதி எண்ணிக்கை பழங்களைக் கொடுக்கணும். அதை வாங்கிக்கொண்டு, நான் ஒரு பழத்தை உனக்குக் கொடுப்பேன். உதாரணமாக நூறு பழங்கள் பறித்தால், முதல் கேட்டில் ஐம்பது பழங்கள் கொடுத்து, ஒரு பழம் வாங்கிக்கொள்ளவேண்டும். எல்லா இடங்களிலும் முழு பழங்கள் மட்டுமே கொடுக்கவேண்டும். பாதிப் பழம் / பழத்தை அறுத்துக் கொடுப்பது எல்லாம் கிடையாது.
நான் போனேன், சில பழங்கள் பறித்தேன். ஏழு கேட்டுகளும் தாண்டி, வீட்டுக்கு வரும்பொழுது, நான் பறித்த பழங்கள் யாவும், என்னிடமே இருந்தன! எப்படி?
2 ) பாடலின் ஆரம்ப வரியைக் கண்டுபிடியுங்கள் :
இதோ அந்தப் பாடல்
3) What is this :
ALL 0
தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்!
முதல் கேள்விக்கு விடை ஒரு மாதிரிக் கிடைச்சிருக்கு! சொல்லவா வேண்டாமா? மற்றதுக்கு ஙே!
பதிலளிநீக்குஇதெல்லாம் சினிமா மன்னர் "ஶ்ரீராம்" மன்னி "பார்வதி ராமச்சந்திரன்" கண்டு பிடிக்க வேண்டிய வேலை! :)
பதிலளிநீக்குகண்டு பிடித்தவர்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்கு"பதறி சிவந்ததே நெஞ்சம் . என்று சொன்னேன் சரி என்றது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஇப்போது உள்ள பாடல் பழைய பாடல் யோசித்துப் பார்க்கிறேன்
2
பதிலளிநீக்குநடத்துங்க..... :)
பதிலளிநீக்குஇரண்டு பழம் மட்டும் ..
பதிலளிநீக்குசிம்பிள். ரெண்டே ரெண்டு பழத்தைப் பறித்து வந்தால் அவன் பாதியை (ஒரு பழத்தை) வாங்கிட்டு ஒரு பழத்தை தருவான். வெளிய வரும்போது நான் பறித்த ரெண்டும் என் கையில.
பதிலளிநீக்குஆல் ரவுண்டர் (அனத்து வட்டம்?) என்பதை இப்படியும் எழுதலாம்.
பதிலளிநீக்கு3 Alphanumeric
பதிலளிநீக்கு3 It denoted failure also
பதிலளிநீக்குத ம காலைலயே போட்டாச்சு. ஞாபகசக்திக்காக நீங்க சாப்பிடற மருந்தை மாத்துங்க. பதிவு கடைசில சொல்றேன்னு சொல்லி 10 வரி எழுதறதுக்குள்ளேயே மறந்துவிட்டீர்களே...
பதிலளிநீக்குஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
பதிலளிநீக்குதமிழ் செய்திகள்
///: அசத்திட்டாங்க !///
பதிலளிநீக்குkarrrrrrrrrrrrrrrrrrrrrr:)இதைப் பார்த்து எல்லா விடைகளும் சரியாக்கும் என ஓடி வந்தேன்ன்:)..
கெள அண்ணன் பரிசைத் தூக்கிக்கொண்டு வெளியே வரவும்..:) போனதடவை கேட்ட 1ம் கிளவிக்கான பதில்.. ஹையோ காலையிலயே டங்கு ஸ்லிப் ஆகுதே.. கேள்விக்கான பதில் நான் கரெக்ட்டாச் சொல்லிட்டேனே...:)
/////
asha bhosle athira said...
முதலாவது கேள்விக்கான பதில்.. 47 க்குப் பின்னால எனில்.. 16.////
நீங்க என்ன சொன்னீங்க?.. 47.... அதுக்குபின் 1... வரோணும் என... இப்போ என் பதிலை ஒண்ணு ஒண்ணாச் சொல்லவும்..
எங்க சொல்லுங்கோ... ஏழு.. எட்டு.. நாலு... ஏழு.... ஒண்டு.. ஆங்ங்ன் அத்தோடு நிறுத்திட்டுப் பரிசைத்தாங்கோ... இல்லாட்டில் ஒரு அறிவான அயகான அன்பான பண்பான சுவீட் 16 பிள்ளையை எங்கள் புளொக் இழக்கப்போகுதூஊஊஊஉ:).. மீ தேம்ஸ்ல ஜம்பிக்கிறேன்ன்ன்:)... அருகிலே ஒரு கடிதம் கடித்தத்தில்.. என் கை எழுத்து:).. புதன் புதிரில் சரியான விடை கூறியும் பரிசைத்தராமல் விட்டதால் மனமுடைந்து குதிக்கிறேன்ன்:).. கடசியாக உரையாடியது எங்கள்புளொக்கில் தான் என்பதைக் கண்டு பிடிச்சு போலீஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ரெயிட்டா இங்கின வரப்போகுதேஏஎ:)....
//நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்குத ம காலைலயே போட்டாச்சு. ஞாபகசக்திக்காக நீங்க சாப்பிடற மருந்தை மாத்துங்க. பதிவு கடைசில சொல்றேன்னு சொல்லி 10 வரி எழுதறதுக்குள்ளேயே மறந்துவிட்டீர்களே...//
ஹா ஹா ஹா அதைத்தான் நானும் நினைச்சேன்ன்... ஸ்ரீராம் டார்லிங்ஜி கமெராவைக் குலுக்கிப் பார்ப்பதைப்போல எல்லாம்.. கடசியில் குலுக்கி உற்றுப்பார்த்தெல்லாம் படிச்சேன்ன் ம்ம்ம்ம்ஹூம் நோ பதில்:).. அது கெள அண்ணன் எதுக்குச் சாப்பிடுறாரோ தெரியல்ல, எல்லோரையும் ஞாபகசக்திக்காகத்தான் சாப்பிடுறேன் என பேய்க்காட்டிட்டுத்திரிகிறார் போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
I used algebraic method (not trial and correct method).
பதிலளிநீக்குThis is the equation to be solved.
(((((((x/2.0+1.0)/2.0+1.0)/2.0+1.0)/2.0+1.0)/2.0+1.0)/2.0+1.0)/2.0+1.0)-x = 0
On solving above, I got the result 2.0, and verified with the given situation and confirmed its validity.
'All 0' represents the number of cricket matches that I, as well as You(KGG Sir) had been played (as a member of the Indian Cricket team / Indian country Cricket Team) in different forms of cricket viz. Test Match, ODI, T-20, Ranji Trophy, IPL,etc (ie All forms of cricket including Indian count(r)y level)
பதிலளிநீக்கு// 3) What is this :
பதிலளிநீக்குALL 0 // &
// அப்போ நான் ஞாபக சக்திக்காக சாப்பிடும் அந்த மருந்தின் பெயர் என்ன? பதிவின் கடைசியில் சொல்றேன். //
That's it. நீங்கள், ஞாபக சக்திக்காக சாப்பிடும் மருந்தின் பெயர்.
2 பழங்கள்.
பதிலளிநீக்குபாடல் இம்முறை கொஞ்சம் சிக்கலாக இருக்கு. பார்ப்போம்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு//காளி கோலா. எனவே, LI, K A எல்லாவற்றையும் சேர்த்து குலுக்கினால், Kali Color கிடைக்கும். OK யா! //
பதிலளிநீக்குhttp://www.classicmaz.com/uploads/4/7/4/5/4745535/9135522_orig.jpg
///Angelin said...
பதிலளிநீக்கு//காளி கோலா. எனவே, LI, K A எல்லாவற்றையும் சேர்த்து குலுக்கினால், Kali Color கிடைக்கும். OK யா! //
http://www.classicmaz.com/uploads/4/7/4/5/4745535/9135522_orig.jpg///
https://tamilphotocomments.com/cache/tamil-photo-comment/vadivelu/venaam-valikuthu-aluthuruven_595.jpg
பாட்டு மூசிக்:) கேட்கும்போது.. கரீட்டாப் பிடிச்சுட்டேஎன்ன்ன்ன்.. ஆஆஆஆஆ சொண்டின் நுனிவரை பாடல் வந்திட்டுது என நினைக்கும்போது.. அருகில சிரிக்கிற கெள அண்ணன் படம் பார்த்ததும் வந்த பாட்டு.. போயிடுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா:)..
பதிலளிநீக்குhaaahaa @ athiraa
பதிலளிநீக்குhttps://s-media-cache-ak0.pinimg.com/736x/36/01/4b/36014b3acf86de17eb256ee6cf2bef03.jpg
பட்டத்து ராணி பாடலாய் இருக்குமோ
பதிலளிநீக்கு1. 2 பழம்...
பதிலளிநீக்குபாட்டு தெரியலையே...
விடு ஜூட்..
....கீதா