புதன், 28 ஜூன், 2017

புதிர் புதன் புதன் புதிர் - பானுமதி வெங்கடேஸ்வரன்




1)
 




 a.சீனிவாசன்
    b. சூரி
    c. செல்வராஜ்
    d. மணி
    e. காதர்



இவர்களோடு சம்பந்தப்பட்ட உணவு பொருட்கள் எவையெவை?


----------------------------------------------------------------------------------------------------------------------------------

2)
 




பிறந்து முதல் வயிற்றாலே போகிறது ஏன்?


=======================================================================


3)






இரண்டு நண்பர்கள் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருவரின் காலில் முள் குத்தி விட்டது. அவர் அலற, தமிழ் புலவரான மற்றொரு நண்பர்

பத்து ரதம் புத்திரனின்
மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் 
காலெடுத்து தேய்

என்றார். 


அவர் என்ன செய்யச் சொன்னார்?


===========================================================================




இந்த மாதிரி ஜுஜூபி புதிரெல்லாம் யார் கேட்டது என்று கோபிக்க வேண்டாம். திடீரென்று கேட்டதால் நினைவில் இருப்பதை அனுப்பி விட்டேன்.

நன்றி!




தமிழ்மணம் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

19 கருத்துகள்:

  1. 1) தேங்காய் சீனிவாசன், பரோடடா சூரி, இடிச்சபுளி செல்வராஜ், போண்டா மணி, பக்கோடா காதர்.
    2) வயிறு இருப்பதனால்.
    3) பத்து ரதனின் வடமொழியாகிய தசரதனின் மகனாகிய ஸ்ரீராமனின் மித்திரனாகிய சுக்ரீவனின் சத்துருவாகிய வாலியின் பத்தினியாகிய தாரையின் காலை உடைத்து, தரையாக்கி, அதிலே தேய்க்கச் சொன்னார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் பாலா அண்ணா,

      நானும் இங்கதான் இருக்கேன் :) :)

      பதிவுலகம் திரும்புங்க அண்ணா.

      நீக்கு
  2. த ம +1

    2. பாம்புக்கு கால்கள் கிடையாது. அதனால் அது வயிற்றால் ஊர்ந்து போகிறது பிறந்தது முதல்.
    3. தசரதன்-ராமன்-செக்ரீவன்-வாலி-தாரை-தரை. தரைல காலைத் தேச்சா முள்ளு குத்தினதுக்குப் போதும்.
    1. இடது கீழ் தோசை தேங்காய் சட்னி- தேங்காய் சீனிவாசன், இடது கீழ் மத்தி பரோட்டா சூரி. மற்றவர்களின் பேரோடு சேர்ந்த உணவுக்குப் படமில்லை.

    பதிலளிநீக்கு
  3. இரண்டாவது நான் சொல்ல வந்தேன் அதற்குள் திரு. நெல்லைத் தமிழன் சொல்லி விட்டார்.

    பதிலளிநீக்கு
  4. பாலகணேஷ் ஜி சரியாக சொல்லி விட்டதால் எனக்கு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது :)

    பதிலளிநீக்கு
  5. சரியான விடைகளை சொல்லி விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  6. தரையில்தேய்க்கசொன்னார்

    பதிலளிநீக்கு
  7. வாத்தியார் வலைப்பக்கம் வந்ததே பெரிய புதிர்.................!

    பதிலளிநீக்கு
  8. 1. தேங்காயைக் காணவில்லை இருந்தாலும் தேங்காய் சீனிவாசன்.
    பரோட்டா இருக்கிறது ஸோ பரோட்டா சூரி.
    போண்டாவைக் காணவில்லை..வடைதான் இருக்கு...இருந்தாலும் போண்டா மணி
    பக்கோடாவையும் காணவில்லை இருந்தாலும் பக்கோடா காதர்...
    செல்வராஜ்???!!! தெரியவில்லையே....

    இரண்டாவது படம் தெரியவில்லை. நோ இம்மேஜ்னு வருது...அதனால மீண்டும் ரிஃப்ரெஷ் பண்ணிப்பார்த்துட்டு வரேன் அதுக்கு.

    3. பத்து ரதம்....தசரதன்...புத்திரன் - ராமன்...அவனின் மித்திரன் ஃப்ரென்ட் குகனா, சுக்கிரீவன...சரி குகனின் வைஃப் பெயர் தெரியாது....சுக்கிரீவனின் மனைவி பெயர் தாரை....அவள் காலை உடைத்தால் தரை....தரையில் தேய்க்கவும்....இது முன்னாடியே எங்கள் குடும்ப வாட்சப் குழுவில் வந்து அதில் நான் பதில் சொல்லியிருந்ததால் ஹிஹிஹிஹி இங்கும்....சரி முள் குத்தியிருக்கும் போது தேய்த்தால் முள் உள்ளே போய்விடாதோ....பானுக்கா அடிக்க வராதீங்க...ஹஹஹஹஹ்...

    கீதா




    பதிலளிநீக்கு
  9. அடித்துவிட்டுப் பார்க்காமல் அனுப்பிவிட்டேன்...சுக்ரீவனின் சத்துரு வாலியின் மனைவி தாரை என்று அடிக்காமல் மெற்கொண்டு அடித்துவிட்டேன்....பிழையாகிவிட்டது...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சகோ பாலகணேஷிடம் இருந்து தெரிஞ்சுருச்சு இடிச்சபுளி செல்வராஜ்...அது யாருன்னு தெரியலை...சரி கூகுள் இருக்கப் பயமென்....

    கீதா

    பதிலளிநீக்கு
  11. எல்லாமே சுலபம். அதிலும் பத்துரதன் புத்திரனின் மித்திரன்!

    பதிலளிநீக்கு

  12. 'நம்ம ஏரியா'வில் இப்போது வெளியாகி இருப்பது கீதா ரெங்கன் எழுதிய ஒரு உணர்வுபூர்வமான கதை. டோன்ட் மிஸ்!

    https://engalcreations.blogspot.in/2017/06/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  13. பெரும்பாலும் எல்லோரும் பதில் சொல்லிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஐ ஆம் வெரி லேற் :) :)

    பதிலளிநீக்கு
  14. கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டும் நன்றியும். வாய்ப்பளித்ததற்கும் அஃதே!
    பத்து ரதம்.. புதிர் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று ஸ்ரீராம் அப்போதே சொன்னார்.

    பதிலளிநீக்கு
  15. நல்ல புதிர்! மூன்றாவது படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!