வெள்ளி, 5 அக்டோபர், 2018

வெள்ளி வீடியோ 181005 : மழை முத்தங்கள் நகை மின்னல்கள் சிரிக்கின்ற பெண்கள் காவியங்கள்



காலங்கள்...  மழைக்காலங்கள்.... 



இதயத்தில் ஒரு இடம்.  1982  இல் வெளி வந்த படத்தில் இளையராஜா இசையில் மலேஷியா வாசுதேவன் - எஸ் ஜானகி பாடிய பாடல்.  



ஸ்ரீகாந்த் - ராதிகா நடித்த இப்படத்தின் இயக்குநர் முக்தா ஸ்ரீநிவாசன்.  இந்தப் படம் வெளிவந்த நினைவே இல்லை.  ஆனால் பாடல் மனதில் நின்ற பாடல்.



வெயில் காலங்களில் கேட்டால் மழையின் குளிர் காதலின் குளிராய் கேட்கத் தோன்றும்.  மழைக் காலத்திலேயே கேட்டால்?  

 காதல் குளிரின் அருமை தெரியாது!  போதாதற்கு சமீப கால வெள்ளத்தின் பயங்கள் வேறு.

இதெல்லாம் பாடலின் இனிமையைக் குறைக்கவில்லை.  



முக்கியமாய் இளையராஜாவின் இசை.  பாடலின் தொடக்கத்திலும் சரி, இடை இடையிலும் சரி.  

பாடலின் தொடக்கம் எனக்கு சற்றே "நான் போட்ட சவால்" படத்தின் இன்னொரு இனிமையான பாடலை நினைவு படுத்தும்.

ஒருவேளை நீங்கள் இந்தப் படம் பார்த்திருந்தாலும் சரி, பார்க்கா விட்டாலும் சரி..  பாடலைக் கேட்டு காட்சியை மனதில் உங்கள் கற்பனையில் கொண்டு வாருங்கள்.  படத்தில் வரும் காட்சியை மறந்து விடுங்கள்.  இளையராஜாவின் இசை நம் மனதில் அந்தச் சூழலைக் கொண்டு வரும்.

மலேஷியா வாசுதேவன் குரலும் சரி, ஜானகியம்மாவின் குரலும் சரி...  இனிமை.



காலங்கள்...  மழைக்காலங்கள் 
புதுக்கோலங்கள் 
ராகங்களே சுகங்கள் 
நாங்கள் 
கலை மான்கள் பூக்கள்....  காலங்கள் ..

மழைக்காலங்கள்... புதுக்கோலங்கள் 
ராகங்களே சுகங்கள் 
நாங்கள் 
கலை மான்கள் பூக்கள் 


மழை முத்தங்கள் நகை மின்னல்கள் 
சிரிக்கின்ற பெண்கள் காவியங்கள் 
மலர் மொட்டுகள் இளம் சிட்டுகள் 
அணைக்கின்ற ஆண்கள் ஓவியங்கள் 
நேரங்கள் நதி ஓரங்கள் 
ஆனந்த கானங்கள் ...  காலங்கள்.. 


என்னை அள்ளுங்கள் கதை சொல்லுங்கள் 
அழகென்னும் தேரில் நடைபோடுங்கள் 
மலர் மஞ்சங்கள் இரு நெஞ்சங்கள்  
பிறர்காண  வேண்டாம் திரை போடுங்கள் 
பாருங்கள் என்னைச் சேருங்கள் 
வேறென்ன சொந்தங்கள்...   காலங்கள் 


63 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா அண்ட் எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... டெல்லியிலிருந்து ஒரே தாவாக சென்னையில் குதித்து விட்டீர்கள் போல! இனிய காலை வணக்கம்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஆமாம் பாடல் கேட்டுக் கொண்டே டெல்லியில் வாசிப்பும் ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. // டெல்லியிலிருந்து ஒரே தாவாக சென்னையில் குதித்து..//

      ஓஹோ..

      அதனால் தான்
      இங்கே அலைபேசி Restart ஆகி விட்டது....

      நீக்கு
  2. ஹை! காலத்திற்கு ஏற்ற பாடலோ!!??

    இதோ கேட்டுட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் இது அடுத்த வாரத்துக்கு ஷெட்யூல் செய்யப்பட்டிருந்த பாடல்... மழையைப் பார்த்து விட்டு அட்வான்ஸ் செய்து விட்டேன்!!!

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஙே யா? ஏன் கீதாக்கா? காலை வணக்கம்!

      நீக்கு
    2. கீதாக்கா எதுக்கு ஞே!!!! (அந்த ங்கா எனக்கு அடிக்க வரலியே!!!)

      படம் மற்றும் பாடல் பற்றி தெரியலைனா?!!!!!! ஹா ஹா ஹா மீ டூ எனக்கும் இந்தப் படம் பற்றியும் பாடல் பற்றியும் தெரியலை...பாட்டு கேட்டதும் கேட்டுருக்கமோ அப்படினு தோணிச்சே தவிர நினைவுக்கு வரலை...ஏன்னா 1982 வில் எங்க வீட்டுல ரேடியோ பொட்டி ஆப்பரேட் பண்ணுற எங்க மூத்த கஸினுக்கு கல்யாணம் ஆகி சென்னை வந்துவிட்டாள். எனவே நோ ரேடியோ வீட்டில பஸ்டான்ட்ல டீ கடைல கேட்டதுதான்..ஸோ அத்தனை நினைவில்லை

      கீதா

      கீதா

      நீக்கு
    3. //பாட்டு கேட்டதும் //

      எல்லோரும் பாட்டைப் போட்டுக் கேப்பாங்களோ கீதா? எனக்கு அந்த சந்தேகம் உண்டு!

      நீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  5. காதல் குளிரின் அருமை தெரியாது! போதாதற்கு சமீப கால வெள்ளத்தின் பயங்கள் வேறு.//

    ஆமாம் ஸ்ரீராம் ஆரம்பம் ஏதோ ஒரு பாடலை நினைவு படுத்துகிறது ஆனால் என்ன பாடல் என்று தெரியவில்லையே டக்கென்று! வார்த்தைகள் கிடைக்கவில்லை..

    மோகன ராகம் !! வித்தியாசமாய்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பம் நினைவு படுத்துவது சட்டென "சுகம் சுகமே" பாடலை கீதா.

      நீக்கு
    2. ஸ்ரீராம் கேட்டேன்...யெஸ் யெஸ் ஏனென்றால் இரண்டும் ஒரே ராகம்!!! அதான்....

      கீதா

      நீக்கு
    3. காதல் குளிரின் அருமை தெரியாது! போதாதற்கு சமீப கால வெள்ளத்தின் பயங்கள் வேறு.//

      இந்த வ்ரியை எழுதிட்டு கருத்து அடிக்காம எங்கேயோ தாவிட்டேன் அடுத்த வரி..ஹிஹிஹி...இப்பல்லாம் இப்படித்தான் ஆகுது பல சமயங்களில்...

      மழை பயம் வேண்டாம்னு சொல்லுறாங்களே ஸ்ரீராம்...தினமணி கூட சொல்லிருக்கு போல....வாட்சப்பில் வந்துச்சு...

      கீதா

      நீக்கு

    4. //யெஸ் யெஸ் ஏனென்றால் இரண்டும் ஒரே ராகம்!!!//

      அதைச் சொல்லுங்க... ராகம் சொல்ல எப்போதுமே கீதா வரணும்! ஒரு கணக்கீட்டில் பார்க்கும்போது மோகனராகப் பாடல்கள் எனக்கு அதிகம் கவர்கிறது என்று தெரிகிறது.

      நீக்கு
    5. //தினமணி கூட சொல்லிருக்கு போல//

      இப்போ சொல்றாங்க.. 7 ஆம் தேதி மிக கன மழைக்கு வாய்ப்பாம். அன்றுதான் எங்கள் வீட்டில் மகாளயபட்ச தர்ப்பணம்... வாத்தியார் தடங்கல் இல்லாமல் வரணும்!

      நீக்கு
    6. ஶ்ரீராம்... மஹாளய பட்ச தர்ப்பணத்திற்கு எதுக்கு வாத்தியார்? அன்றைக்கு மகூர்த்த நாள்னு நினைக்கிறேன். ஒரு சதாபிஷேகம் இருக்கிறது.

      நீக்கு
    7. எங்க வீட்டிலேயும் மகாலய தர்ப்பணத்துக்குக் குடும்பப் புரோகிதர் உட்பட 5 நபர்கள் வருவது உண்டு. முதலில் இரண்ய சிராத்தம், பின்னர் பித்ரு தர்ப்பணம், காருண்ய தர்ப்பணம். பித்ரு தரப்பணம் எனப் பித்ருக்களில் அவர் அம்மாவழி, அப்பாவழி உறவினர்கள், என் அப்பா, அம்மா, அவருடைய மற்ற உறவினர்கள், சந்ததியில்லாமல் இறந்த 2 மாப்பிள்ளைகள், காருண்ய தர்ப்பணத்தில் விட்டுப் போனவர்கள், மிருகங்கள் வளர்ப்புகள் என எங்க வீட்டு மோதியிலிருந்து புழு, பூச்சி வரை காருண்யதர்ப்பணத்தில் அடங்குவார்கள்.

      நீக்கு
    8. அதோடு இல்லாமல் புரட்டாசி மாதம் மகாலயத்தில் முகூர்த்த நாளெல்லாம் வராது. சஷ்டி அப்தபூர்த்தி, சதாபிஷேனம் எனில் அன்னிக்கு அவங்க ஜன்ம நக்ஷத்திரமாக இருக்கும். புரட்டாசி மாசம் குறிப்பிட்ட நக்ஷத்திரத்தில் பிறந்தால் மகாலயம் என்று பார்க்காமல் சஷ்டி அப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்வது உண்டு. மற்றபடி ஓரிருவர் ஸ்ரீமந்தம் செய்கின்றனர். எட்டாவது மாசமாக இருந்தால்! மற்றபடி கல்யாணம் செய்வது இல்லை. மாத்வர்களுக்கும், கன்னட மக்களுக்கும் ஆந்திர மக்களுக்கும் நம்மைவிடப் பத்து நாள் முன்னாடி புது மாசம் பிறந்து விடும் என்றாலும் மகாலயம் பித்ரு பக்ஷம் என்பதால் அது கழிந்தே திருமணம், கிரகப்பிரவேசம் போன்றவை வைச்சுப்பாங்க.

      நீக்கு
    9. என் அப்பா, மாமனார், பெரியப்பாக்கள், மாமாக்கள் இப்போ அண்ணாகள் உட்பட அனைவரும் புரோகிதர் வைச்சே மகாலய தர்ப்பணம் செய்வார்கள்/செய்கின்றார்கள். இதைத் தவிர்த்து சாப்பாடும் உண்டு. எங்க வீட்டில் குறைந்தது ஐந்து பேர்(புரோகிதர்கள்) சாப்பிடுவாங்க! சாப்பாடு போடுவது எங்க குடும்பத்தில் மிக முக்கியமாய்க் கருதுவோம்.

      நீக்கு
    10. ஹிரண்யமாகத்தான் செய்கிறோம். அண்ணன் மதுரையிலிருந்து வரவேண்டியிருந்த காரணத்தால் தாமதம்!

      நீக்கு
    11. ஸ்ரீராம் மீண்டும் கேட்டேன் பாடலை...என்ன அருமையான பாடல் இல்லையா?

      //ஒரு கணக்கீட்டில் பார்க்கும்போது மோகனராகப் பாடல்கள் எனக்கு அதிகம் கவர்கிறது என்று தெரிகிறது.//

      ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் 'மோக'னாங்கி அவள்! ஈர்க்காமல் இருப்பாளா!!!!

      இந்த வீடியோவில் 1.16 லிருந்து நோட் பண்ணுங்க அப்ப ஜஸ்ட் 1.24 வரை வரும் பிட்..ரொம்ப சின்ன பிட் தான் மோகனத்தின் ஸ்வரம்....அடுத்த இன்டெர் லூடிலும் வரும்.....இதே கொஞ்சம் எக்ஸ்டெண்ட் பண்ணி மோகனம் முழு டச்சுடன் ஏழாம் அறிவு படத்தில் பாடலில் வரும்...ஆரம்பத்திலேயே வந்துவிடும்..

      https://www.youtube.com/watch?v=6rUBkX-HjSk

      கீதா

      நீக்கு
  6. இடையில் வரும் ஒரு குறிப்பிட்ட மோகனத்தின் ஸ்வரம் ...அந்த பிட் அப்படியே ஏழாம் அறிவு படத்தின் அந்த சைனீஸ் மொழி பாடலில் வரும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... எந்தப் பாடல் என்று சரியாய்ச் சொல்லுங்கள் கேட்டுப் பார்க்கிறேன்.

      நீக்கு
    2. The Rise of Damo (Mandarin) பாடல் படம் ஏழாம் அறிவு..

      நீங்க சொல்லுற பாட்டையும் கேட்டுப் பார்க்கிறேன்..ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. மனசுக்கு இதமான ஈரம் சிந்தும் பாடல். இசையும் குரல்கள்
    பின்னணி இசையில் மனசை ஈர்க்கின்றன. சென்னையில் மழைபெய்து எங்கள் வீட்டு முன்னாடி தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    இன்னும் ஒரு வாரம் மழையாமே.
    குளிர்ந்திருக்கட்டும் சென்னை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையிலிருந்து வெளிச்சத்தையே காணோம். மழை மெதுவா பயமுறுத்தத் தொடங்கியிருக்கு வல்லிம்மா... நன்றி.

      நீக்கு
  8. இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

    மலேசியா வாசுதேவனின் முத்திரை பதித்த பாடல்களில் முக்கியமான பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலங்கை வானொலி செய்த சேவைகளில் இப்படி இனிமையான பாடல்களை டிக்கடி கேட்கவைத்தது ஒன்று. நன்றி கில்லர்ஜி. மலேஷியா வாசுதேவனுக்கு மார்க்கெட் ஏற்படுத்திக் கொடுத்தது இளையராஜாதான்.

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  10. மழை இல்லை, மழை இல்லை வெயில் கொளுத்துகிறது என்ற சென்னைவாசிகளுக்கு மழை வருது மகிழ்ச்சி தானே?
    அதுதான் இந்த பாட்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழை தருவது மகிழ்ச்சி எனும் உணர்ச்சியைவிட பயம் தருகிறது!!!

      நீக்கு
  11. இனிமையான பாடல்.
    மகன் ஊரிலும் மழை அவன் அதை ரசித்து புது பாடலுடன் காணொளி அனுப்பி இருந்தான்.
    புது பாடல் எனக்கு தெரியவில்லை எந்த பட பாடல் என்றேன்? "செக்கசிவந்த வானம்" பாடல் என்றான்.
    வைரமுத்து அவர்களின் மழை தொகுப்பு கவிதையிலிருந்து ஒரு பாடல்.
    நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செக்கச்சிவந்த வானம் படத்தில் மழைப்பாடல் என்றால் அந்தப் பாடல்தான். ஏ ஆர் ரெஹ்மான் குரலில் "நீ.....ல ம(லை)ழைச்சாரல்.." பரவாயில்லை. அந்தப் பாடலை ரசிக்கலாம். கேட்டீர்களா கோமதி அக்கா?

      நீக்கு
    2. கேட்டேன் ஸ்ரீராம்.
      இப்போது உள்ள குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும், எனக்கு கொஞ்சம் பிடிக்குது.
      கேட்க கேட்க பிடிக்கும்.

      நீக்கு
    3. ஹை கோமதிக்கா உங்கள் மகனும் உங்களைப் போலவே ரசித்து அனுப்புகிறார் போல!! சூப்பர்!

      அந்தப் பாடலை ஸ்ரீராம் சொல்லிவிட்டார்...ஸ்ரீராமின் கருத்தேதான் என் கருத்தும் அப்பாடலைப் பற்றி...

      கீதா

      நீக்கு
  12. முதல் தடவையாக கேட்கிறேன். இசையும் குரல்களும் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  13. ஆஆஆஆஆ இதுவும் என் பாட்டுத்தான்ன்ன்ன்ன்ன்ன் ஹையோ நேக்கு லெக்கும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல... பல தடவை கேட்டிருப்பேன்ன்ன்ன்

    பதிலளிநீக்கு
  14. ஆனா மை ஜேசுதாஸ் அங்கிள் எல்லோ பாடினார் என நினைச்சிருந்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி அப்படி நினைக்கலாம் நீங்கள்?!! குரல் கேட்டால் தெரிகிறதே...!!

      நீக்கு
  15. எனக்கும் பாடலை கேட்டதா நினைவில்ல. அட, இப்படி ஒரு படம் வந்திருக்கான்னே தெரிலப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தை விடுங்க... பாட்டை எப்படி மிஸ் பண்ணினீங்க ராஜி? நல்ல பாட்டாச்சே...

      நீக்கு
  16. சித்தி இந்த அங்கிள் கூட எல்லாம் நடிச்சிருக்காங்களா !!!
    ஹீ ஹீ நல்லவேளை காணொளி போடாததால் பாட்டை முழுதுமே கேட்டு ரசித்தேன் .
    ஜானகி அம்மா குரல் எல்லாத்தையும் தாண்டி தனித்துவமான இருக்கு இசையும் இனிமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்...


      //இசையும் இனிமை/

      பின்னே? இளையராஜான்னா சும்மாவா?

      நீக்கு
  17. மாலை வணக்கம் 🙏.

    பாடல் கேட்ட நினைவில்லை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. இனிய கீதம் கேட்டதில் மனம் திருப்தி பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. ராகங்களே சுகங்கள்,
    அதிலும் இளையராஜா அவர்களின் ராகங்களுக்கு
    கேட்கவா வேண்டும்?

    பதிலளிநீக்கு
  20. இனிமையான பாடல். காலத்தை வென்ற maestroவிடம் இருந்து காலத்தை பற்றிய பாடல்

    பதிலளிநீக்கு
  21. பழைய பாடல்களை எல்லாம்தொலைக் காட்சிகளில் கேட்கிறேன் இருந்தாலும் உங்களைப்போல் ரசிக்க முடிவதில்லை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!