சந்திரபோஸ் இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்.
பெரிய விவரம் எதுவும் இப்படத்தப் பற்றித் தெரியவில்லை. விவரம் கிடைக்கவில்லை.
ஆனால் சந்திரபோஸ் இசையில் எஸ் பி பி தனது குரலில் ஜாலத்துடன் பாடி இருக்கும் இப்பாடல் வரிகளில் ஒரு நாட்டுப்படலின் வாசனை அடிக்கும்.
அருண்குமார் தேவிஸ்ரீ காட்சியில் தோன்றும் நடிகை நடிகையர்.
எஸ் பி பியின் ஹோய்னா .. ஹோஹோ ஹோய்னா, நானிருக்கேன் சொல்லும்போது ஒரு குழைவு, கோழி எப்ப கூவும் என்று பாடும்போது வரும் உற்சாகக் கிண்டல்...
முதலில் காட்சியைப் பார்க்காமல் பாடலைக் கேட்டு எஸ் பி பி குரலை ரசித்து விடுங்கள். பின்னர் அந்தப் புது முகங்களின் நடனத்தை ஒருமுறை (வேண்டுமானால்) ரசியுங்கள்!
பாடலுக்கேற்ற உற்சாகத் துள்ளல் பின்னணி இசை.
தொடக்கத்திலும் பல்லவி, சரணங்களிலும் பாடல் ஆரம்பிக்கும் நேரம் வரும் இசை சுவாரஸ்யம்.
முக்கியக் குறிப்பு : நான் படம் பார்க்கவில்லை.
மாவெடுத்து பூக்கோலம்
போட்ட புள்ள நீதாண்டி
மனசுக்குள்ள கோலம் போட
நானிருக்கேன் வாயேண்டி
ஹோய்னா ஹோ ஹோ ஹோய்னா..
ஹோய்னா ஹோ ஹோ ஹோய்னா..
எதுத்த வூடு ஒன் வூடு எழுந்திரிச்சா ஒன் மூஞ்சி
பூவைப்போல சிரிக்கும் புள்ள புடிச்சிருக்கா என் மூஞ்சி
கோழி எப்ப கூவும் என நான்தான் எதிர்பார்க்க
பாட்டு எப்ப கேக்கும் என நீதான் உடல் வேர்க்க
ரெண்டும் சின்ன வயசு
நெஞ்சும் ரொம்ப எளசு
ஹாங்... ஹாங்.. ஹாங்...
மல்லியப்பூ காட்டோரம் பூப்பறிக்கப் போறேண்டி
பூப்பறிச்ச கையால் நானே மாலைகட்டி வாரேண்டி
மேளம் கெட்டிமேளம் கொட்டும் காலம் வரவேண்டும்
முடிச்சு... மூணு முடிச்சு பட்டுக்கழுத்தில் இட வேணும்..
அடுத்து என்ன நடக்கும்
அதுதான் ரொம்ப இனிக்கும்
ஹாங்... ஹாங்.. ஹாங்...
வாழ்க...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குநினைவுக் கூடையைக் கவிழ்த்துப் போட்டு கிளறினாலும்
பதிலளிநீக்குஇந்தப் பாடலைக் கேட்டதாக நினைவு இல்லை....
ஆனாலும்,
வாழ்க நலம்!....
அப்படியா? ஆச்சர்யம்... வரிகள் கொச்சையாக இருப்பது போல தோன்றினாலும் ரசிக்க வைத்த பாடல். கேட்டீர்களா?
நீக்குஎல்லாப் புகழும் எஸ் பி பி க்கே... வாழ்க சந்திரபோஸ்!
இனிய காலை வணக்கம். ஸ்ரீராம்,துரை செல்வராஜு.
பதிலளிநீக்குஇசையும் , பாட்டும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
கொஞ்சம் கொச்சைரகமாயிருந்தாலும்,
படம் பார்க்காமல் பாட்டை மட்டும் கேட்கலாம் .
இந்தப் படம் நினைவுக்கு வரவில்லை.
நீங்கள் சொல்வது போல உற்சாகம் SPB வரவழைத்து விடுகிறார்.
இனிய காலை வணக்கம் வல்லிம்மா... பாடலை ரசித்ததற்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் பானு அக்கா.
நீக்குஇப்பூடி எல்லாமும் படம் வந்திருக்கா? அப்போ நான் பிறந்துட்டேனா என்னனு தெரியலை! அதான் எனக்கு எதுவும் தெரியறதில்லை. :)))))))
பதிலளிநீக்குதமிழ்த் திரைப்படப் பாடல்களில் இலக்கியத்தைத் தேட முடியுமா என்ன? :)))))
பதிலளிநீக்குவாங்க கீதாக்கா... காலை வணக்கம்... தமிழ்த் திரைப்பாடல்களில் இலக்கியத்தைத் தாராளமாக காட்டலாம்... ஒரு பஞ்சு அருணாச்சலம் கூட அது மாதிரி அழகான வரிகளை எழுதியிருக்கிறார்
நீக்குபொன்னெழில் பூத்தது புதுவானில்
வெண்பனி தூவும் நிலவே நில்..
(முதலில் இளவேனில் என்று எழுதி இருந்தாராம். மெல்லிசை மன்னர் அது "இழவே நில்" என்று ஒலிப்பது போலிருக்கும் என்பதால் நிலவே நில் என்று மாற்றினாராம்...)
இது நாட்டுப்புறப் பாடல்வகை!
சரிதான். இளவேனில் காலத்தில் வெண்பனி அவ்வளவெல்லாம் தூவாது! :)
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.
நீக்குபாடல் கேட்ட நினைவு இல்லை.
பதிலளிநீக்குஇப்போது கேட்டேன்
நன்றி கோமதி அக்கா.
நீக்குபடத்தின் தலைப்பு மட்டும் கேட்டதா ஒரு நினைவு. ஆனா பாட்டு?!
பதிலளிநீக்கும்ஹூம்
நீங்களும் கேட்டதில்லை என்பது ஆச்சர்யம் ப்ளஸ் சந்தோஷம் ராஜி!
நீக்குஸ்ரீராம்ஜி அந்த காலகட்டத்தில் 1985 எனது ஃபேவரிட் பாடல்களில் இது முக்கியமானது.
பதிலளிநீக்குதினமும் தவறாமல் கேட்பேன் படம் பார்த்து விட்டேன் ஆனால் இந்தப் பாடலுக்கேற்ற காட்சி அமைப்பு படத்தில் இல்லை இதை அன்றே நான் வாதம் செய்து இருக்கிறேன்.
//எதிர்த்த வீடு உன் வீடு எழுந்திரிச்சா உன் மூஞ்சி//
பதிவு பல நினைவுகளை மீட்டி விட்டது.
ஆஹா... இப்படி கமெண்ட் வந்தால் அது ஒரு அலாதி சந்தோஷம்தான் கில்லர்ஜி. நான் படம் பார்க்கவில்லை. பாடல்கள் மட்டும் மிஸ் பண்ணமாட்டேன்!
நீக்கு////எதிர்த்த வீடு உன் வீடு எழுந்திரிச்சா உன் மூஞ்சி////
நீக்குஇப்போ வீடு மாறிட்டினமோ கில்லர்ஜி?:) ஹா ஹா ஹா..
உங்கள் கைங்கரியத்தால் ’பொன்னெழில் பூத்தது புதுவானில்’ -ஐ வெகு கால இடைவெளிக்கப்புறம் இன்று பார்க்கில் உட்கார்ந்து கேட்டேன். பஞ்சுவிடம் தமிழ் கொஞ்சியிருக்கிறது. நீங்கள் குறிப்பிடாதிருந்தால் இது கண்ணதாசனாயிருக்கும் என நினைத்திருப்பேன்!
பதிலளிநீக்குஎன்னாதூஊஊஊஉ பொன் எழில் பூத்ததாஆஆஆஆ? எங்ங்ங்ஙேஙேஙே?:)
நீக்குஏகாந்தன் ஸார்... இரண்டு நாட்களுக்கு முன்தான் கவிஞர் முத்துலிங்கம் தினமணி கட்டுரையில் இந்தச் சம்பவம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். படகோட்டி படத்தில் இரண்டு பாடல்கள் மட்டும் வாலி. மற்றவை பஞ்சு அருணாச்சலம். கண்ணதாசனோடுதான் எம் ஜி ஆருக்கு பிணக்கு ஆயிற்றே... ஆயினும் அவர் உதவியாளரான பஞ்சு கவிஞரிடம் கேட்டுக்கொண்டுதான் பாடல் எழுத வந்தாராம். 'எம் ஜி ஆர் படங்களில் பாடல் எழுத வாய்ப்பு வருவது அதிருஷ்டம். போய் எழுது' என்றாராம் கவிஞர்.
நீக்குஅந்த தினமணி கட்டுரையை நான் படிக்கவில்லை. படகோட்டியின் பாடல்கள் பிடிக்கும். யார் எந்தெந்தப் பாடலை எழுதியதென எனக்குத் தெரிந்திருக்கவில்லை!
நீக்குசூப்பர் பாட்டு.. கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. தாலாட்டுப்போல மனசை அமைதியாக்குது... முன்பு கேட்டிருக்கிறேன்...
பதிலளிநீக்குதாலாட்டு போல மனதை அமைதி ஆக்குதா? அதிரா கிண்டல் சுண்டல் ஒன்றும் இல்லையே...?
நீக்குநானும் கேட்டுட்டு சொல்றேன் இது தாலாட்டா வாலாட்டா ன்னு :)
நீக்குமியாவின் வாலாட்டான்னு படிக்கவும்
நீக்கு//அதிரா கிண்டல் சுண்டல் ஒன்றும் இல்லையே...?//
நீக்குஇல்ல ஸ்ரீராம்.. அப்படி புரியாதமாதிரிக் கிண்டல் எப்பவுமே பண்ணமாட்டேன் மீ..
இது எனக்குச் சொல்லத் தெரியவில்லை.. மனதை வருடுது அப்படியே.. அதைச் சொன்னேன்.
//Angel12 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:29
நீக்குமியாவின் வாலாட்டான்னு படிக்கவும்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பாடல் கேட்டா வால் தானா ஆடுதே ஹா ஹா ஹா ஆனா வீடியோப் பார்க்காமலே கேட்டிட்டேன் விடிஞ்சதுக்கு 2,3 தடவை.
வெள்ளிக்கிழமை பதிவுல இடம் பெறணும்னா அட்டு பாடலா இருந்தால்தான் இடம் பெற முடியுமா? பாடல் இசை இரண்டும் நல்லாவே இல்லை. இதுக்குப் பதிலா "பொன்னெழில் பூத்தது புதுவானில்" பாடலைப் போட்டு புண்ணியம் தேடிக்கொண்டிருக்கலாம்...
பதிலளிநீக்குநெல்லை... நீங்கள் சொல்லும் அளவு இது அட்டு பாடல் இல்லை என்பதைச் சொல்லிக்கொள்கிறேன். பாருங்கள் கில்லர்ஜி கூடச் சொல்லி இருக்கிறார்! எல்லோரும் கேட்ட பாடலையே போடாமல் உங்களுக்குத் தெரியாத பாடல் ஒன்றை போட்டிருப்பதில் மகிழ்ச்சி எனக்கு.
நீக்குஹலோவ் ஸ்ரீராம் அண்ட் நெல்லைத்தமிழன் ..அட்டு அப்டீன்னா என்ன ??
நீக்குஇதை 17 வது கேள்வியா கௌதமன் சாருக்கு கேக்க நினைச்சேன் ஆனா எனக்கு நீங்களே பதில்சொல்லிடுங்க
அட்டுன்னா மட்டமான, நல்லாவே இல்லாத, சகிக்க முடியாத என்று அர்த்தம் ஏஞ்சல்.
நீக்குOH OK:)
நீக்குநெல்லைத்தமிழன் நீங்க வீடியோவோடு சேர்ந்து பார்த்திருக்கிறீங்க.. அதுதான் அட்டை ஆகிட்டுது பாட்டு:)).. ஒருநாளும் வீடியோப் பார்த்துப் பாட்டுக் கேட்டிடாதீங்கோ.. பல நல்ல பாடல்கள் எல்லாம் அநியாயமாப் போயிருக்கு நல்லாவே இல்லாத வீடியோவால்..
நீக்குபாட்டை மட்டும் கேளுங்கோ.. அதுவும் அந்த முதல் பராவை மட்டும் திரும்பத்திரும்பக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் சூப்பரா இருக்கு.. எங்கே இப்போ கண்ணை மூடிட்டுக் கேளுங்கோ பார்ப்பம்:) ஹா ஹா ஹா:).
//
நீக்குஸ்ரீராம்.12 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:35
அட்டுன்னா மட்டமான, நல்லாவே இல்லாத, சகிக்க முடியாத என்று அர்த்தம் ஏஞ்சல்.//
எனக்கு விளக்கம் தெரியவில்லை ஆனா இப்படித்தான் இருக்கும் என ஊகிச்சேன்ன் பிக்கோஸ் மீக்கு டமில்ல டி எல்லோ:)) ஆங்ங்ங்ங்ங்:)
அவ்வ்வ்வ் கோட் சூட் போட்டு ஒருத்தர் பீச்சோரம் டான்ஸ் ஆடறதை இப்போதான் பார்க்கிறேன்
பதிலளிநீக்குஅவ்வ்வ் இந்த பாட்டெல்லாம் நான் பார்த்துமில்லை கேட்டதுமில்லை .அந்த காலத்து படங்களில் அப்போவே இப்படியா !!!
பதிலளிநீக்குஆனா இசையும் அந்த குரலும் நல்லா இருக்கு கண்ணை மூடி பாட்டை கேட்கவும் னு இனிமே முக்கிய டிஸ்கி போட்ருங்க :)
ஏஞ்சல்... நான் எப்பவுமே சொல்வேன்... வெள்ளி வீடியோ என்பதால் வீடியோ பகிர்கிறேன். பாடலைத் தனியே கேட்பதுதான் எப்பவுமே நல்லது. எப்போதாவதுதான் காட்சி நன்றாயிருக்கும்.
நீக்கு//அவ்வ்வ் இந்த பாட்டெல்லாம் நான் பார்த்துமில்லை கேட்டதுமில்லை .அந்த காலத்து படங்களில் அப்போவே இப்படியா !!!//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுக்குத்தான் அதிராவைப்போல எப்பவும் ரேடியோக் கேட்கோணும் என்பது.. எனக்கு ஜிக்கி ஏ எம் ராஜா பாடல்கள்கூட பலது பிடிச்சுப் போச்சு ஆனா ரேடியோவில் கேட்பதால் யார் நடிச்சது, என்ன படம் எனும் விபரம் தெரியாது.
இந்த கீரோயின் :) முகத்தை எங்கியோ பார்த்த நினைவு :) ஆங் புடிச்சேன் புடிச்சேன் கண்டுபுடிச்சேன் எங்கப்பாவுக்கு பிடித்த ஒருவரின் மகன் நடித்த தொலைக்காட்சி தொடரை வீடியோ காஸெட்டை செஞ்சு வச்சிருந்தார் ..அதில் இவங்கதான் கீரோயின் :)
பதிலளிநீக்குஅது குறிஞ்சி மலர் :) ஹீரோ :) தளபதி .மறக்கமுடியுமா :) இந்த வீடியோவை
இந்தப் படத்தின் பெயர் கேட்ட மாதிரி இருக்கிறது. பாடல் கேட்க முடியவில்லை. கணிணியில் ஒலி சரியாக இல்லை. ஹெட் ஃபோனில் கணவர் ஏதோ கேட்டுக்கொண்டிருக்கிறார். பிறகு கேட்கிறேன். யார் அந்த ஹீரோ?கபில்தேவ் சாயலில் இருக்கிறார்? பானுசந்தரா? அந்த ஹீரோயின் யாராவது தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டாரா?
பதிலளிநீக்குஸ்ரீராம், நேற்று நீங்கள் குறிப்பிட்ட, சுப்பிரமணிய ராஜுவின் எழுத்தை குறைவாக பேசிய அந்த குறுந்தாடி+ஜோல்னா பை எழுத்தாளர் சுதாங்கன் தானே?
பதிலளிநீக்குஅடடே... இன்னொரு குறுந்தாடி எழுத்தாளர்! ஆனால் அப்போது அவர் மற்றவர்களிடம் உதவி பெறும் நிலையில் இல்லை என்று நினைக்கிறேன்.
நீக்குஇந்த சுதாங்கன் தானே ஜூ.வில ரொம்பவும் ஆதிக்கம் செலுத்திவந்தார். ஒரு சமயத்தில், ஜூவி கண்டுபிடிக்கும் புகார்களை (புலனாய்வு செய்த செய்திகளை வைத்துக்கொண்டு, பத்திரிகையில் போடவா இல்லை விட்டுவிடவா என்று சம்பந்தப்பட்டவரிடம் பேரம் பேசி) வைத்து இவர் தனிப்பட்ட முறையில் பணம் பார்த்தார் என்று விகடன் குரூப்பிலிருந்து அனுப்பப்பட்டவர்.
நீக்குபொதுவாக யாரும் கேட்டிராத பார்த்திராதபடண்ங்ளில் இருந்துடு தேடிப்பிடித்து பதிவிட ரொம்பவே மெனக்கெடுகிறீர்கள்என்று தோன்று கிறது
பதிலளிநீக்குதேடி பிடித்து பாடல் பதிவிட்டமைக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஹாங்... ஹாங்.... ஹாங்.....!
பதிலளிநீக்குFunny costume. பாடல் இனிமை
பதிலளிநீக்கு