திங்கள், 22 அக்டோபர், 2018

"திங்க"க்கிழமை 180827 : ரவா இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


ரவையை நிறைய பேர் வெறுப்பார்கள்.


(ஏஞ்சலினைச் சொல்லலைஒருவேளைகேசரில கவுந்துதானே இந்தப் பெண்ணைக் கட்டிக்கொண்டோம் என்பதினால் இருக்குமோ? எனக்குத் தெரியாதுஎனக்கு ரவை பிடிக்கும்அதுலகேசரிஉப்புமாரவாப் பொங்கல்ரவா இட்லிரவா தோசைஇவைகளைத்தான் நான் பொதுவா சாப்பிட்டிருக்கேன்உடம்பு சரியில்லைனாஉடனடியாக நமக்குக் கைகொடுப்பதுராகி கஞ்சி இல்லைனா ரவைக் கஞ்சிஇந்த இரண்டும் செய்வதும் சுலபம்சாப்பிடுவதற்கும்-உடம்பு சரியில்லாதபோதுநல்லா இருக்கும்.

நான்ரவா இட்லிஎப்போதாவது செய்து சாப்பிடுவேன்அதுவும் கொத்தமல்லி துவையல் செய்தால் ரவா இட்லிக்குத் தொட்டுக்கொள்ள யம்மியாகஇருக்கும்ஓரிரு தடவைரவா இட்லி மிக்ஸ் வாங்கி செய்துபார்த்திருக்கேன் (ஆச்சிஎம்.டி.ஆர்). முந்திரிலாம் போட்டிருக்கும்நல்லாத்தான் இருந்ததுஎன்றாலும் எனக்கு வீட்டில் செய்யும் ரவா இட்லிபோல் பிடிக்கலை.

ரவா இட்லிதான் பஹ்ரைன்ல நான் கடைசியா எங்கள் பிளாக்குக்காக படம் எடுத்து வைத்தது.

தேவையான பொருட்கள்

கப் ரவை, ½ தேக்கரண்டி கடுகு, 1 மேசைக்கரண்டி கடலைப் பருப்பு, 5 கிராம் ஈனோ சால்ட்தேவையான அளவு தயிர்உப்பு
கொத்தமல்லி, கொஞ்சம் கருவேப்பிலை, 2 பச்சை மிளகாய்

ரிச்சா இருக்கணும்னு நினைத்தால் கொஞ்சம் முந்திரிப் பருப்பு.  நாங்கள் உபயோகப்படுத்தலை.  கடைகளில், நெய்யையும் சேர்த்துக்கொள்வார்கள். இஞ்சி, கேரட் திருத்திப் (சீவிப்) போடுவதும் உண்டு.  அப்போ பார்க்க இன்னும் அழகா இருக்கும்.

செய்முறை

மிளகாயை சிறியதாக கட் செய்துதண்ணீரில் அலசிக் கொள்ளுங்கள்அப்போதான் விதைலாம் இருக்காது.

கருவேப்பிலையைச் சிறிதாக கட் செய்துகொள்ளுங்கள்அதுபோல கொத்தமல்லியையும்.

வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகுகடலைப் பருப்பு பிறகு கட் செய்த பச்சை மிளகாயைப் போட்டு லைட்டாக வதக்கிக்கோங்கபிறகு கருவேப்பிலையைச் சேர்த்துக்கோங்கஉடனே ரவையும் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள்ரவையின் நிறம் வெள்ளையாக இருக்கணும்.  ரொம்ப வறுபட்டு பிரவுன் நிறத்துக்கு மாறிடக்கூடாது.

இதைத் தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.

நன்கு ஆறியபின்புஅதனுடன் உப்பும் தேவையான அளவு தயிரும் சேர்த்து ஓரளவு கெட்டியாக கலக்கவும்இதனுடன் கொத்தமல்லியையும்சேர்க்கவும்தோசை மா மாதிரி கலக்கக்கூடாதுகொஞ்சம் கெட்டியா இருக்கணும்.

இப்போ இட்லி தட்டுகளை எண்ணெய் விட்டு ரெடி பண்ணுங்க.

பிறகுரவா இட்லி மிக்சில்ஈனோ சால்ட் சேர்த்து கலக்கவும்இப்போ கொஞ்சம் நுரைத்துக்கொண்டு கொஞ்சம் நெகிழ இருக்கும்.

இட்லி வார்ப்பதுபோல்தட்டில் வார்த்துவேகவைத்து எடுக்கவேண்டியதுதான்.










நல்ல ரவா இட்லிஆறினாலும் நல்லா இருக்கணும்.

இதுக்கு நான் கொத்தமல்லித் துவையல் (தொகையல்தொட்டுக்கொண்டு சாப்பிட்டேன்மிக அருமையா இருந்தது.

நீங்களும் செய்துபார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

அன்புடன்

நெல்லைத்தமிழன்

105 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வழக்கம் போல நல்வரவு..

    பதிலளிநீக்கு
  2. இன்னைக்கு நெ.த., வருவாங்க...ந்னு எதிர்பார்த்தேன்...

    அதே போல வந்திருக்காங்க..
    அதுவும் இட்லி - ரவா இட்லியோட!...

    ஆனா -
    அவங்களே சாப்பிட்டு விட்டார்களாம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார்... வருகைக்கு நன்றி. உங்களைப்போன்ற பேச்சிலர்களுக்கு மிகவும் சுலபமான ரெசிப்பீ. எல்லாம் அங்க சுலபமாக் கிடைக்கும். செய்துபார்த்திருப்பீர்கள்.

      ஆமாம்... நீங்க இட்லிக்கு அரைக்கிறீர்களா இல்லை கடையில் ஃப்ரெஷ் மாவு பாக்கெட் வாங்கிக்கொள்கிறீர்களா?

      நீக்கு
    2. இட்லி மகாத்மியம் எல்லாம் இங்கு இல்லை...
      கொழுக்கட்டை, புட்டு - இவற்றை அவித்துக் கொள்வேன்.. அது வேறொரு தெக்கினிக்!..

      இட்லிக்கு ஆசைப்பட்டால் இங்குள்ள உணவகங்கள் தான் கதி..

      சும்மா கிடந்த சிங்கத்தைத் (!) தூண்டி விட்டீர்கள்..
      இனி இட்லிப் பதிவு போடாமல் ஓயாது - தளம்!...

      நீக்கு
  3. கடைசி இரண்டு படங்கள் ஆசையை தூண்டி விட்டது.

    பகிர்வுக்கு நன்றியும், வாழ்த்துகளும் தமிழரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீங்களும் உங்கள் மகள் திருமண இனிப்பு வகைகளைப் படம் பிடித்திருப்பீர்கள், அதை வெளியிடுவீர்கள் என்று பார்த்தால், அந்தப் படங்களைப் போடவே இல்லையே.... ஆச்சு...இப்போ தலை தீபாவளி வந்திடுத்து. அதுக்காக தயார் செய்த ஸ்பெஷன் இனிப்புகளையாவது படமெடுத்துப் போடுங்கள்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்... தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் உள் சுவற்றில் ஓவிங்கள் இருக்கின்றனவே, அதைப் பார்க்க அனுமதிக்கிறார்களா இல்லை, சிபாரிசோடு செல்லவேண்டுமா? ஒரு நாள் உங்களுடன், முனைவர் ஜம்புலிங்கம் சாருடன் அங்கு செல்ல ஆசை...

      நீக்கு
  5. பார்க்கவே அருமையா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிடவும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுராதா ப்ரேம்குமார்.

      நீக்கு
  6. நான் எப்பவும் MTR RAVA IDLI செய்து சாப்பிடுவேன். இந்த NTR (NELLAI THAMIZHAN RECIPE) ரவா இட்லி செய்துபார்க்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபூர்வ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கேஜிஜி சார்... நானும் ஒரு காலத்தில் ரெடிமேட் அரிசி உப்புமா மிக்ஸ், ரவா இட்லி மிக்ஸ் என்று பல பிராண்டுகள் வாங்கிக்கொண்டு போயிருக்கிறேன். என் மனைவி எப்போதும் சொல்வாள், இதனை நாமே தயார் செய்வது சுலபம் என்று.

      நான் ரவா தோசை செய்முறையைப் படங்களுடன் அனுப்பலாம் என்று எடுத்துவைத்திருந்தேன். அப்புறம், கேஜிஜி சாரே மிக சுலபமாகச் செய்வதைப் போய், நாம் தி.பதிவுக்கு அனுப்ப வேண்டுமா என்று நினைத்து இன்றுவரை அனுப்பலை..ஹாஹா.

      நீக்கு
  7. தாங்க் யூ நெ த அங்கிள் !
    சுந்தரி குணபதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறியும் எனது ரெசிப்பீஸ் போடவே மாட்டேன் இங்கே :) சுந்தரிப்பொண்ணு தயாரா இருக்கு என்னை ஆன்ட்டினு கூப்பிட :))

      நீக்கு
    2. வாங்க ஏஞ்சலின். பஹ்ரைனில் எங்கள் flat building ஒட்டி காம்பவுண்ட் சுவரோடு உள்ள இடத்தில் பில்டிங் பசங்கள்லாம் விளையாடுவாங்க (கிரிக்கெட், கால்பந்து போன்று பல). இது பில்டிங் உடன் உள்ள 20 அடி அகலமுள்ள இடம். நாங்க வெளியே போகணும்னா அந்த இடத்தைக் கடந்துதான் போகணும். அங்க விளையாடிட்டிருந்த பையன் (5-6வது படிப்பவனா இருக்கலாம்), அவங்க தாத்தாகிட்ட பேசிக்கிட்டிருந்தவன், நான் விளையாடும் இடத்தின் குறுக்கே போகும்போது, 'கொஞ்சம் தள்ளிப்போங்க தாத்தா' என்று தவறுதலாகச் சொன்னான். எனக்கு சுர்ர்னு கோபம் வந்துடுத்து. அப்புறம் புரிஞ்சுக்கிட்டு போயிட்டேன். இல்லைனா, 6 வயசுப் பையனாக இருந்தாலும், அவனைக் கூப்பிட்டு, தம்பி, உங்க அம்மாவே என்னைவிட 5 வயசு பெரியவங்களா இருப்பாங்கன்னு சொல்லியிருப்பேன். ஹாஹா (ஆண்களும் வயசை மறைக்க நினைப்பாங்க, எல்லாப் பெண்களையும் போல....)

      நீக்கு
    3. ஹாஹா :) நல்லவேளை இங்கே ஆன்ட்டி அங்கிள் தாத்தா பாட்டி எல்லாம் இல்லியே :)
      என் மைத்துனர்களுக்கு மூவரில் இருவருக்கு எங்களுக்கு முன்னே திருமணமாகி குழந்தைகள் but பெரியம்மா என்று கூப்பிட விடல்லையே நான் சித்தின்னே கூப்பிட சொல்லிக்குடுத்திட்டேன் :) அதே தான் அவங்க அம்மாங்க எல்லாரும் என்னைவிட பெரியவங்க ஹாஹா

      நீக்கு
  8. ஆஹா! ரவா இட்லி! குட்! குட்! பார்க்கவே நன்றாக இருக்கிறது. நான் ஈனோ சால்டிற்கு பதிலாக பேக்கிங்க் பவுடர் சேர்ப்பேன். மு.ப. கண்டிப்பாக உண்டு. இதையே மினி இட்லிகளாக வார்த்து, சாம்பாரில் மூழ்க வைத்து சாப்பிட்டு பாருங்கள் ய...ம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மினி ரவா இட்லி, சாம்பாரில் - நல்ல ஐடியாவாக இருக்கே பானுமதி மேடம். ஒரு தடவை செய்துபார்க்கிறேன்.

      எனக்கு ரவா இட்லியில் முந்திரிப்பருப்பு பிடிக்காது. ஆனால் பாயசம் செய்யும்போது, கை நிறைய முந்திரிப்பருப்பு போடுவேன் (மனைவி, எதுக்கு இவ்வளவு போடறீங்க, உடம்புக்கு ஆகாது என்பாள்)

      நீக்கு
    2. ஈனோ சால்ட், ஒரு பாக்கெட் என்ற அளவு எனக்கு சுலபமா இருக்கு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பா.வெ. மேடம்.

      சமீபத்து திருமண விருந்தைப் பற்றி ஒரு இடுகை உங்கள்ட இருந்து எதிர்பார்க்கலாமா?

      நீக்கு
  9. ரவா இட்லி பார்க்க அருமையாக இருக்கிறது.

    ஈனோ சால்ட் சேர்க்கவில்லை என்றால் நன்றாக வராதா?
    சோடாப்பூவும் என் கணவருக்கு ஒத்துக் கொள்ளாது.
    அதனால் அவை இல்லாமல் செய்து பார்க்கிறேன்.
    ஏஞ்சலோ ! இந்த சுந்தரி குண்பதி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஏஞ்சலோ ! இந்த சுந்தரி குண்பதி?// - அப்படி இருக்காது கோமதி அரசு மேடம். கதைப்படி, சுந்தரிக்கு மிக நன்றாக சமைக்கத் தெரியும். குணபதிக்கு நன்றாக ருசித்துச் சாப்பிடத் தெரியும். அவங்க வீட்டுல இது உல்டா என்பதால் அது நிச்சயம் 'அவங்களாக' இருக்காது. ஹாஹாஹா.

      நீக்கு
    2. ஹாஹ்ஹா : கோமதி அக்கா எனக்கும் முந்தி யாரோ வந்து அங்கிள்னு கூப்பிட்டிருக்காங்க சே சே மிஸ் ஆகிடுச்சு :)

      நீக்கு
    3. அவங்க வீட்டுல இது உல்டா என்பதால் அது நிச்சயம் 'அவங்களாக' இருக்காது. ஹாஹாஹா //

      கர்ர்ர் இருங்க ஒரு நாலஞ்சி பேரை செட் பண்ணி இனிமே உங்க போஸ்ட் எல்லாத்துக்கும் அங்கிள் மழை பொழிய வைக்கிறேன் இது அதிராவின் குழை சாதத்தின் மீது ஆணை

      நீக்கு
    4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி அரசு மேடம். ஈனோ சால்ட், சோடா வேண்டாம் என்றால் நொதிக்கும் பொருளைச் சேர்க்கலாம் (கொஞ்சம் புளித்த தேங்காய் நீர் போன்று). அப்போதால் காற்றுக்குமிழ்கள் சேர்ந்து இட்லி சாஃப்டா இருக்கும்.

      நீக்கு
    5. வாங்க ஏஞ்சலின்.... இந்த அதிராவைக் காணோமே... யாரோ அவருக்கு பலப் பல பட்டங்கள் (கவிதாயினி, ஞானி என்று) கொடுத்ததனால், பறந்து போயிட்டாரா?

      நீக்கு
    6. ////ஏஞ்சலோ ! இந்த சுந்தரி குண்பதி?// - அப்படி இருக்காது கோமதி அரசு மேடம். கதைப்படி, சுந்தரிக்கு மிக நன்றாக சமைக்கத் தெரியும். குணபதிக்கு நன்றாக ருசித்துச் சாப்பிடத் தெரியும். அவங்க வீட்டுல இது உல்டா என்பதால் அது நிச்சயம் 'அவங்களாக' இருக்காது. ஹாஹாஹா.//

      ஹா ஹா ஹா அஞ்சு லிங் அனுப்பியும் இப்போதான் மேலோட்டமாக படிச்சேன்ன்.. இனித்தான் மெதுவாப் படிச்சுப்பார்க்கோணும்:)

      நீக்கு
    7. //நெல்லைத் தமிழன்22 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:51
      வாங்க ஏஞ்சலின்.... இந்த அதிராவைக் காணோமே... யாரோ அவருக்கு பலப் பல பட்டங்கள் (கவிதாயினி, ஞானி என்று) கொடுத்ததனால், பறந்து போயிட்டாரா?//

      அல்லோ நெ.தமிழன் அண்ணா:)) ஹா ஹா ஹா மீ அஞ்ஞானிப் பட்டத்துக்காக வெயிட்டிங்:)) ஹையோ ஹையோ:))

      நீக்கு
    8. //Angel22 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:43
      அவங்க வீட்டுல இது உல்டா என்பதால் அது நிச்சயம் 'அவங்களாக' இருக்காது. ஹாஹாஹா //

      கர்ர்ர் இருங்க ஒரு நாலஞ்சி பேரை செட் பண்ணி இனிமே உங்க போஸ்ட் எல்லாத்துக்கும் அங்கிள் மழை பொழிய வைக்கிறேன் இது அதிராவின் குழை சாதத்தின் மீது ஆணை //

      இதென்ன புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊஊஊ:) ஆணையை வாபஸ் வாங்குங்கோ இல்லாட்டில் உடனடியாகக் குழை சாதம் செய்து “டேவடைக்” கிச்சினில போடோணும் ஜொள்ளிட்டேன்ன்:))

      நீக்கு
    9. ஞானி அதிரா - நிச்சயம் ஏஞ்சலின் குழை சாதம் செய்து தேவதை கிச்சன்ல போடுவாங்க. இப்போ அவங்க ஹஸ்பண்ட் ரொம்ப பிஸி. அவருக்கு விடுமுறை கிடைத்த உடனேயே, ஏஞ்சலின் காய் வாங்கி வைப்பாங்க, குக்கரை அடுப்பில் வைப்பாங்க, அதுக்கு அப்புறம் ஒண்ணும் தெரியாது, சிவனே (ஏசுவே) என்று ஏஞ்சலின் ஹஸ்பண்ட் மீதியைச் செய்வாங்க. கொஞ்சம் (இல்லை நிறையவே) காத்திருங்கள்.

      நீக்கு
  10. ரவா இட்லி ருசியாக இருக்கிறது. ரவையை வறுக்கும்போது கூட ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டால் இட்லி விள்ளும்போது உதிர்உதிராக வரும். பஹ்ரைன் இட்லி என்று பெயர் கொடுத்தருக்கலாம் என்று தோன்றியது. ஒருசிட்டிகை பேக்கிங் பவுடர்தான் சேர்ப்பேன். ஈநோஸ்எல்லாம் கிடைக்காது. பொறுமையாக அடுக்கடுக்காக எழுதி இருக்கிறீர்கள்.காரட் அன்று கைவசம் இருந்திருக்காது. சிவப்பு காப்ஸிகம் கூட போடலாம். இட்லிக்கு கொத்தமல்லி சட்னி வாட்டம்தான். அன்புடன்
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காமாட்சி அம்மா. காரட் போட்டால் நன்றாகத்தான் இருந்திருக்கும். காப்சிகம் - என் பெண்ணுக்குப் பிடிக்கலாம். அடுத்த முறை கூட கொஞ்சம் எண்ணெய் விட்டு ரவையை வறுத்துப் பார்க்கிறேன்.

      மிக்க நன்றி. தீபாவளிக்கு ஒரு ஸ்வீட் இடுகையை உங்கள் தளத்தில் எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
  11. ரவா இட்லி! நம்ம வீட்டில் போணி ஆகாத ஒன்று. எப்போவானும் அவசரத்துக்குப் பண்ணறேன்னு சொன்னாக் கூட வேணாம் உப்புமாவாப் பண்ணிடு! என்பார்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.... எங்க வீட்டுல நான் ரவா இட்லி பண்றேன்னா மனைவி ஒண்ணும் சொல்லமாட்டா. அவளுக்குத் தெரியும் நான் ரவா இட்லி நல்லாச் செய்வேன்னு (ஐயோ... இதுக்குப் போய் இவ்வளவு கோபப்படறீங்களே... அவருக்கு நீங்கள் செய்யற ரவா உப்புமா, ரொம்ப அட்டஹாசமா இருக்குன்னு நினைக்கிறார் போலிருக்கு)

      இன்னும் முழுமையாக நலமாகவில்லையா இல்லை அசதி இன்னும் இருக்கிறதா? பொதுவா, நாலைந்து முறைல செய்முறைகள் போடுவீங்க. இந்த முறை இரண்டு வரிகளோடு காணோமே.... நன்றி..

      நீக்கு
  12. //ரவையை நிறைய பேர் வெறுப்பார்கள்.

    (ஏஞ்சலினைச் சொல்லலை)//

    nooo !! எனக்கு ரவா உப்புமா ரொம்ப பிடிக்கும் ஆனா இந்த பாழாய்ப்போன க்ளூட்டனையும் சேர்த்து கொண்டாருதே ரவைக்கு தான் என்னை பிடிக்கலை .
    ரவா உப்புமாலாம் சாப்பிட்டு வருஷக்கணக்காகுது .நெய்யில் தாளிச்சி ஓட்டத்தில் மாங்காய்த்தொக்கு வைச்சி சாப்பிட கொடுத்து வச்சிருக்கணும் .
    அம்மா ஊரில் இருக்கும்போது மிளகாய்க்கு பதிலா மிளகைஒன்றிரண்டா தட்டி சேர்ப்பாங்க கொஞ்சம் தொண்டைக்கு இதமா காரமா இருக்கும் ..அதெல்லாம் பொற்காலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சலின்.....

      எனக்கு உப்புமா ரொம்பப் பிடிக்கும் எங்க ஹாஸ்டல்கள்ல. நான் 10வரை இருந்த ஹாஸ்டலில், லீவு விட்டு மீண்டும் ஹாஸ்டல் திறக்கும்போது (அதாவது ஸ்கூல் திறக்கும் அன்று) காலையில் உப்புமாதான் டிபன். நல்லா உதிர் உதிரா அதன் மேல ஜீனி தூவி தட்டுல போடுவாங்க. அதை நான் என்றும் மிஸ் செய்ததில்லை. நிறைய ஹாஸ்டல் மேட்ஸ், லேட்டா வருவாங்க. அதனால, ஆள் வர வர, உப்புமா தயார் செய்வது சுலபம் என்பதால் எப்போதும் ஹாஸ்டல் திறக்கும்போது உப்புமாதான்).

      நான் எம்.எஸ்.ஸி படிக்கும்போது இருந்த ஹாஸ்டல்ல (மதுரை.. அதுல பிஎஸ்ஸி, பிஏ மாணவர்களும் ஏராளம். போஸ்ட் கிராஜுவேட்ஸ் 30 பேர்தான். மீதி 300 பேர் அண்டர் கிராஜுவேட்ஸ்) நிறைய தடவை ஹாஸ்டல் மாணவர்கள் சாப்பாட்டுக்கு பிரச்சனை பண்ணுவாங்க. ஒரு தடவை, ஊத்தாப்பம் நல்லா இல்லைனு, இரவு 7 மணி மெஸ்ல, சொல்லி வச்ச மாதிரி ஊத்தாப்பம் போடப் போட, அவனவன் அதை கீழே தூக்கி விட்டெறிந்தான். 5 பெஞ்ச் தள்ளி உட்கார்ந்திருந்த எனக்கு ஏன் இப்படி இவங்க பண்ணறாங்கன்னு தெரியலை. ஊத்தாப்பம் கடினமா இருக்குன்னு உடனே எல்லோரும் ஸ்டிரைக். அப்புறம் கல்லூரி பிரின்சிபால் வந்து என்ன பிரச்சனைனு சமாதானம் பண்ண வந்தார். நாங்க சிலபேர்தான் சீனியர் மாணவர்கள். அவர் என் கிட்ட, என்ன டிபன் இப்போ பண்ணலாம் என்று கேட்க, நான் அவங்களுக்கு சுலபமா இருக்குமேன்னு, உப்புமா பண்ணிடுங்க என்றேன். இதைக் கேட்டு எல்லா மாணவர்களும் ஊளையிட்டாங்க. கடைசில அவங்களுக்காக குஸ்கா தயார் பண்ணினார்கள். எப்படி இந்த அனுபவம்?

      நீக்கு
    2. //இதமா காரமா இருக்கும் ..அதெல்லாம் பொற்காலம்// - ஏஞ்சலின்... இதெல்லாம் நீங்க சொல்லாமலேயே எங்களுக்குத் தெரியும். நீங்க சொல்ல வருவது, என் அம்மா/அப்பா செய்து கொடுத்தவை அவ்வளவு அட்டஹாசமா இருக்கும். அது மாதிரி 10%கூட உங்களுக்குச் செய்யத் தெரியலையே என்று வருத்தமா சொல்றீங்க. நான் புரிஞ்சுக்கிட்டது சரிதானே அதிரா?

      நீக்கு
    3. //நான் புரிஞ்சுக்கிட்டது சரிதானே அதிரா?//

      கரிட்டூஊஊஊஊஊ:) நான் நெ.தமிழனுக்கு ஒரு பொன்னாடை போர்த்தி படு வன்மையாக ஆதரிக்கிறேன்ன் ஹா ஹா ஹா:))

      நீக்கு
    4. ஹாஸ்டல் அனுபவங்கள் நல்லா இருக்கே ..

      நீக்கு
    5. இன்னும் பல அனுபவங்கள் (ஹாஸ்டல்) நேரம் வரும்போது சொல்றேன்...

      நீக்கு
  13. நான் பல வருஷத்துக்கு முந்தி அதாவது மகள் நம்ம ஊர் சாப்பாட்டுகளை டேஸ்ட் செய்ய ஆரம்பிக்குமுன்ன இப்படித்தான் செய்வேன் அடிக்கடி sooji ரவையில்தான் செய்யணும் .தயிர் சேர்ப்பேன் ஆனா ஈனோ சேர்த்ததில்லை அதாலோ என்னவோ கொஞ்சம் தட்டையாதான் வரும் ஆனா ருசியா இருந்தது (இது க்ளோட்டன் அலர்ஜி இருக்குன்னு கண்டுபிடிக்குமுன் )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குப் புரிகிறது ஏஞ்சலின். என் பசங்களுக்கும் டேஸ்ட் வளர வளர மாறிடுத்து. எனக்கு அவங்களுக்குப் பிடித்த பிட்சா, பர்கர், போன்ற அனேகமான எல்லா ஐட்டங்களும் பிடிக்காது. எப்படியோ இளையவர்கள் மேற்கத்திய மற்றும் வட இந்திய உணவுக்கு அவ்வளவு ஆசைப்படுகிறமாதிரி காலம் மாறிடுச்சு.

      நீக்கு
  14. பார்க்கவே அவ்ளோ அருமையா இருக்கு ரவா இட்லீஸ் ..ஈனோ சால்ட் இங்கே ஒரு ஏசியன் கடையில் பார்த்தேன் காஷியர் பின்னிருக்கும் கண்ணாடி கபோர்ட்டில் வைச்சிருந்தாங்க .இதுவரை யூஸ் பண்ணினதில்லை ஆனா நான் திப்பிசம் செய்யும்போது ஒரு முறை (சோடா உப்பு பயன்படுத்த மாட்டேன் அதனால்) ஸ்பார்க்லிங் சோடா வாட்டரை வைச்சி மாவை கரைச்சி விட்டேன் இட்லி நல்லா குண்டா வந்துது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்பார்க்ளிங் சோடாவும் நல்ல ஐடியாதான். பஹ்ரைன்ல ரெடிமேட் ஃப்ரெஷ் ஆப்ப மாவுக்கு, அவங்க கொஞ்சம் புளிக்க வைத்த தேங்காய்த் தண்ணீர் உபயோகப்படுத்தறாங்கன்னு எனக்கு சந்தேகம். அப்போதான் சாஃப்ட்னெஸ் கிடைக்கும்.

      நீக்கு
    2. ஆமா அதேதான் தேங்காய் உடைக்கும்போது அந்த தண்ணியை பாட்டிலில் சேர்த்து ப்ரிட்ஜில் வைப்பாங்க அது அப்படியே புளிச்சு இருக்கும் அதில் ஒரு ஸ்பூன் சேர்க்கிறாங்க இல்லைன்னா ஒரு துண்டு ப்ரெட் ..இதெல்லாம்தான் மென்மையா இட்லி ஆப்பம் பொங்க காரணம் .

      நீக்கு
    3. நல்லவேளை.... மாஸ்டர் செஃப்பில் காண்பிப்பதுபோல், பீர் போன்றவைகளை ஊற்றாதவரை சரிதான்.

      நீக்கு
    4. இலங்கையில் ஆப்ப மாவு புளிக்க சிலர் ஒரு வகை ரம் சேர்க்கிறார்களாம் ஒரு சிங்கள நண்பி சொன்னார் :)

      இங்கே பல உணவுகளில் wine சேர்ப்பதை பார்த்திருக்கிறேன்

      நீக்கு
    5. நெல்லைத்தமிழன் அது ரம் இல்லையாம் :) palm toddy ...பனங்கள்ளு அப்புறம் beerகூட சேர்த்துதான் சிலர் ஆப்பம் செய்வாங்கனு இப்போ போன் போட்டு சந்தேகத்தை க்ளியர் பண்ணிக்கிட்டேன் தோழிகிட்டே :)

      நீக்கு
    6. ஐயோ.... தெரியாத வெளியிடங்களில் சாப்பிடாதே என்று சொல்வதற்குக் காரணம் இதுதான் போலிருக்கிறது.

      எனக்கு எங்கள் செய்முறை இல்லைனா (சாப்பிடும்போதே தெரிஞ்சுடும்), சாப்பிடவே ஓடாது. பாரிசில், இஸ்லாமியர் நடத்தும் சைவ விடுதியில் சாப்பிட்டபோது எனக்குப் பிடிக்கலை, கொஞ்சம்கூட சாப்பிடலை. அவருக்கு நான் ஒன்றும் சாப்பிடாதது (அதாவது மிக மிகக் குறைவாக ஓரிரண்டு ஸ்பூன் உணவுதான் சாப்பிட்டேன். ஒரு கறியையும் சாப்பிடலை) ரொம்ப வருத்தம். அதனால் அவர், பக்கோடா பொட்டலம் இலவசமாகக் கட்டிக் கொடுத்தார். அவரின் நல்ல அன்பிற்காக வாங்கிக்கொண்டேன் (பிறகு அதையும் சாப்பிடலை). (நாங்க ரசம் செய்யும்போது, புளித்தண்ணீர் நல்லா கொதிச்சு பச்சைப் புளி வாசனை போகணும், அவங்க புளித்தண்ணீரை கொதிக்கவைத்திருக்கலை. சாம்பாரிலும் ஏகப்பட்ட பூண்டு)

      சில இடங்களில் முட்டை வெண்கரு, தோசை மாவில் சேர்க்கிறாங்க.

      எனக்கு எப்போவுமே, யாரும், வெஜ், நான் வெஜ் இரண்டுக்கும் இரண்டு செட் பாத்திரங்கள், கரண்டிகள் போன்றவை வைத்திருக்கமாட்டாங்க என்று நம்புறவன். அதனால் அந்த மாதிரி இடங்களில் பழம் சாப்பிடக்கூட யோசிப்பேன் (அதைக் கழுவும் பாத்திரத்தின் மீதுள்ள சந்தேகம்தான் ஹாஹா)

      நீக்கு
    7. வெளியிடங்களில் நானாக சாப்பிடறதில்லை என் உடல்நிலை காரணமாவே .. Lancashire என்ற இடத்தில் ஒரு ரெஸ்டாரண்ட்காரங்க இன்னிக்கு man slaughter வழக்கில் ஜெயிலுக்கு போய்ட்டாங்க ,,ரேஷன் அவங்க தயாரித்த உணவில் வேர்க்கடலை இருந்திருக்கு அதை குறிப்பிடவில்லை ஹோம் டெலிவரி செய்தப்போ அதை சாப்பிட்ட 16 வயது பெண் :( பாவம்.

      இதனால்தான் வெளியுணவுகளை சாப்பிடறதில்லை கஞ்சே ஆனாலும் வீட்டு கஞ்சி தான் .
      அதோட எந்த பாக்கேஜ் பொருளானாலும் அதில் வெஜிடேரியன் வீகன் என்பதை 100 வாங்குவேன் ..
      இங்கே ஒரு தமிழ் ரெஸ்டாரண்டில் 50 இடியாப்பம் 5 பவுண்ட் என்று வாங்கி வந்தார் சாப்பிட்டவுடன் நம்ம அலர்ஜி ஆரம்பிச்சு அப்புறம்தான் கேள்விப்பட்டேன் இலங்கைத்தமிழர் mostly அரிசிமாவையும் ஸ்டிம் செய்த கோதுமை மாவதையும் கலந்தே தோசை இடியாப்பம் செய்றாங்களாம் !!!

      நீக்கு
  15. நம்ம ஊர் வழக்கப்படி இந்த மனைவியரும் வீட்டு தலைவிகளும் ஈஸியா இருக்குன்னு தினமும் உப்புமா செஞ்சிடறாங்க அதனாலதான் எல்லாருக்கும் வெறுப்பு வருது ரவையை பார்த்தா :)
    எனக்கொரு வழக்கம் இருக்கு இன்னிக்கு உணவுவகை ஒரு ப்ரேக்பாஸ்ட செஞ்சா ஒரு வாரம் கழிச்சே அதை மீண்டும் சமைப்பேன் அதனால் எங்க வீட்லயே எப்போ எதை செஞ்சாலும் பலத்த வரவேற்பு கிடைக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... எதையும் எப்போவாவதுதான் செய்யணும். அடிக்கடி செய்தால் போர் அடித்து அப்புறம் அந்த ஐட்டத்தையே செய்ய விட மாட்டாங்க. கருத்துகளுக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்.

      நீக்கு
  16. பெங்களூருவில் ரவா இட்லி மிகவும் பிரபலம்.அதிகமில்லை ரூ.57 மட்டும்தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முத்துசாமி. கருத்துக்கு நன்றி.

      பெங்களூர் ரவா இட்லி எல்லா இடங்களிலும் (எஸ்.எல்.வி, எம்.டி.ஆர், 'பவன்'கள்) சாப்பிட்டிருக்கிறேன். யாராவது தமிழக சாம்பார் மட்டும் விற்றால், அதை வாங்கிக்கொண்டுதான் இந்த எஸ்.எல்.விக்களுக்கு என்னால் போகமுடியும். யார் வெறும்ன சட்னி தொட்டுக்கொண்டு ரவா இட்லி சாப்பிடுவது?

      57ரூ என்று சொல்றீங்களே தவிர, ஒவ்வொரு ரவா இட்லியும், தமிழக 3 இட்லிக்கு சமம்னு சொல்ல விட்டுட்டீங்களே..

      அடிக்கடி வருகை தாருங்கள்.

      நீக்கு
  17. பெங்களூருவில் ரவா இட்லி மிகவும் பிரபலம்.அதிகமில்லை ரூ.57 மட்டும்தான்..

    பதிலளிநீக்கு
  18. நான் வந்துட்டேன்ன்ன்ன்:)).. இந்தக் கிழமை லீவு என்பதனால எதுக்கும் முடியல்ல.. அப்போ உங்களுக்குத்தான் தெரியுமே.. நான் பிஸி எனில் புளொக் எட்டிப் பார்க்கும் பழக்கமில்லை, பிக்கோஸ் எட்டிப் பார்த்தான் என்னை என்னாலேயே கொன்றோல் பண்ண முடியாமல் களம் இறங்கிடுவேன்:)..

    இதலால எட்டியே பார்க்காமல் இருந்தேன், ஆனா கலையில சே.. ஆருடைய ரெசிப்பி எனப் பார்ப்பமே..என ச்ச்ச்ச்சும்மாதான் எட்டிப் பார்த்டேன்ன்:)).. ஆவ்வ்வ்வ் நெ.தமிழன் ரெசிப்பி.. அதுகூடப் பறவாயில்லைங்க:).. அஞ்சுக்கு அடி விழுந்ததையும் பார்த்தேன்:) இதுக்குப் பிறகும் மீ களம் குதிக்காட்டில்.. அது அதிராவே இல்லை எனக் குதிச்சிட்டேன்:))..

    ஆனா ஒண்ணு நான் இங்கு வந்து போனதாக ஸ்ரீராமுக்கும் கீசாக்காவுக்கு ஜொள்ளிடாதீங்க பிளீஸ்ஸ்:).. கீசாக்கா வைரவ சூலத்தோட கலைப்பா ஏன் என்னிடம் வரேல்லை என:)) பின்புதான் எல்லா வீட்டுக்கும் விசிட் பண்ணுவேன்:)..

    அதனால அடிச்சுக் கேய்ட்டாலும் சொல்லிடாதீங்க.. காவிரில தள்ளினலும் நீந்திக் கரையேறிடுங்கோ பட் சொல்லிடாதீங்கோ பிளீஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா... இப்போ வெளியில் சென்றுகொண்டிருக்கிறேன். வந்து பதில் எழுதுகிறேன்.

      நீக்கு
    2. வருகைக்கு நன்றி அதிரா. ஏன் இப்போல்லாம் ரொம்ப பிஸியாகிடறீங்க?

      நீக்கு
    3. //பின்புதான் எல்லா வீட்டுக்கும் விசிட் பண்ணுவேன்:)..// - அதிரா - உங்களைப் போன்றவர்களின் பின்னூட்டம் ரசிக்கும்படி இருப்பதால்தான் எல்லோரும் உங்க, ஏஞ்சலின் கருத்துக்களை எதிர்பார்க்கறாங்க. சுறு சுறுப்பா களம் இறங்குங்க.

      நீக்கு
    4. நெல்லைத்தமிழன் உங்களுக்குத் தெரியாதோ? நான் ஸ்கூல்ல படிப்பிக்கிறேன் எல்லோ[பேமனண்ட் அல்ல, அதனால டெய்லி போகமாட்டேன்].. இப்போ அடிக்கடி போவதால அரட்டை பண்ணுவது குறையுது ஹா ஹா ஹா.

      நீக்கு
    5. எனக்கு இப்போதுதான் தெரியும் அதிரா (அல்லது இதனை கவனித்திருக்கமாட்டேன்). நீங்கள் இப்போ மேற்கொண்டுள்ளது நல்ல செயல். அதுல நிறைய நன்மை உண்டு. பசங்க வரும் வரை வேலை இல்லாது வெறும்ன இருப்பது நல்லதல்ல. தொலைக்காட்சி, கணிணி போன்றவை மட்டும் நம் நேரத்தைப் பயனுள்ளதாக்க உதவமாட்டா. உடலுக்கும் அது உகந்ததல்ல. உங்களுக்கு என் வாழ்த்துகள்.

      நீக்கு
    6. நானும்தான் நெல்லைத்தமிழன் முடிந்த நேரம் வாலண்டியரிங் போய்டறேன் இப்போ சமீப காலமா அடிக்கடி ஒரு ரெஸ்க்யூ sanctuary .
      அதனால் தான் அடிக்கடி கானாம போய்டுவேன்
      ஆடு மேய்க்கும் அனுபவங்கள்னு எழுதலாம் அவ்ளோ அன்பான ஜீவன்கள் ..:)

      அந்த farm ஓனருக்குத்தான் உங்க ரெசிப்பி இனிப்பு போளி செய்து கொடுத்தேன் அவங்க வெள்ளைகாரங்க ஆனா vegan .வெண்ணை கூட சாப்பிடமாட்டாங்க

      நீக்கு
  19. //ரவா இட்லி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி//

    ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. தலைப்பிலே தப்பிருக்கு கர்:).. இது வெறும் ரவா இட்லி அல்ல... ரவ்வை இட்லி எனில் அதிரா செய்யும் இட்டலி. இது “இன்ஸ்டண்ட் ரவா இட்லி” என சொல்லோணும்:)).

    நான் எப்பவுமே செய்வது ரவ்வையிலதான் இட்லி ஓசை எல்லாம்.. அரிசியில் செய்வது பிடிக்குதில்லை, அதிலயும் அரிசியில் செய்வது, உடனே சுடச்சுட சாப்பிடாவிட்டால் காய்ந்ததுபோலாகிடும், ஆனா ரவ்வையில் செய்தது அப்படியே காயாமல் இருக்கும். இன்னொன்றும் சோறு சாப்பிடுவதையே கிட்டத்தட்ட விட்டுவிட்டோம்.. பின்பு எதுக்கு இதிலும் அரிசியைப் போட்டுச் சாப்பிடோணுமோ என நினைப்பேன்.

    ஆனா எனக்கு அடுத்தவர்கள் செய்து தரும்:), அல்லது கடையில் வாங்கும் அரிசித்தோசை பிடிக்கும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா - 'ரவ்வை' என்ற பெயரைப் படித்தாலே ரவையை அப்படியே ரோடு ரோலர் கீழே வைத்து அரைப்பதுபோல் உள்ளது. என்ன பிரச்சனைன்னா, இது இலங்கைத் தமிழர்கள் உபயோகிக்கும் வார்த்தையா என்று செக் செய்ய இங்கு யாருமேயில்லை.

      நீக்கு
    2. ரவ்வை -

      ஒருவேளை அவ்வை உபயோகித்ததாய் இருக்குமோ...

      நீக்கு
    3. //ரவ்வையிலதான் இட்லி ஓசை எல்லாம்..// - ஐயோ அதிரா.. நீங்க இட்லிக்கு நல்லா மாவரைக்காம, அது கல் மாதிரி ஆகி, கீழே விழுந்தபோது ஓசை வந்ததோ என்று கன்ஃப்யூஸ் ஆகிட்டேன். தோசையை ஓசை என்று சொல்கிற 'DAMIL D' இப்போதான் பார்க்கிறேன்.

      நீக்கு
  20. //
    ரவையை நிறைய பேர் வெறுப்பார்கள்.


    (ஏஞ்சலினைச் சொல்லலை) ஒருவேளை, கேசரில கவுந்துதானே இந்தப் பெண்ணைக் கட்டிக்கொண்டோம் என்பதினால் இருக்குமோ? எனக்குத் தெரியாது//

    ஹா ஹா ஹா அது அஞ்சுவுக்கு ரவ்வை பிடிக்காது என்றில்லை நெ.தமிழன்:).. அவவுக்கு எது செய்யத்தெரியாதோ... அது எல்லாம் பிடிக்காது எனும் லிஸ்ட்டில போட்டு விடுவா:) இது அவவோட தெக்கினிக்கீஈஈஈஈஈ ஹையோ ஹையோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவவுக்கு எது செய்யத்தெரியாதோ... அது எல்லாம் பிடிக்காது//

      https://data.whicdn.com/images/96068642/original.gif

      நீக்கு
    2. இத பாருங்க அதிரா... ஏஞ்சலினை இப்படில்லாம் சொல்லாதீங்க. எனக்கு கெட்ட கோபம் வரும்.

      //அவவுக்கு எது செய்யத்தெரியாதோ// - எதுவுமே என்பதற்குப் பதிலா 'எது' என்று போட்டுட்டீங்களா? ஏஞ்சலினுக்கு உதவிக்கு அவங்க ஹஸ்பண்ட் இருக்காருன்னு நமக்குத்தான் தெரியுமே...

      நீக்கு
    3. haaahaa :)

      https://media1.tenor.com/images/a1705a7e2e6ad09f8c6f801b0af080a8/tenor.gif?itemid=7525573

      நீக்கு
  21. // எனக்கு ரவை பிடிக்கும். அதுல, கேசரி, உப்புமா, ரவாப் பொங்கல், ரவா இட்லி, ரவா தோசைஇவைகளைத்தான் நான் பொதுவா சாப்பிட்டிருக்கேன். //

    எனக்கும் ரவ்வை ஐட்டங்கள் அத்தனையும் பிடிக்கும்.. இனிப்பைத்தவிர்த்து...:))

    //உடம்பு சரியில்லைனா, உடனடியாக நமக்குக் கைகொடுப்பது, ராகி கஞ்சி இல்லைனா ரவைக் கஞ்சி. இந்த இரண்டும் செய்வதும் சுலபம், சாப்பிடுவதற்கும்-உடம்பு சரியில்லாதபோது, நல்லா இருக்கும்.//

    இப்பொழுதெல்லாம் இல்லை, இப்போ உடம்பு சரியில்லை எனில் கப் நூடில்ஸ் உம் பச்சுலர்ஸ் சூப்பும் தான் வாய்க்கு சூப்பராக இருக்குது.

    ஆனா குழந்தையில் அம்மா செய்து தருவா, சிவப்புப்பச்சை அரியில ஒரு கஞ்சியும், அதுக்கு- நல்ல புளி, மிளகாய் உப்பு சேர்த்து அரைச்ச ஒரு சட்னியும்.... அத்தோடு காச்சல் போயிடும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இனிப்பைத்தவிர்த்து...// - நோ... நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். நீங்கதானே பீஸ் பீஸா கேசரி செஞ்சிருக்கீங்க. நானும் ஒரு நாள் அப்படிச் செய்யணும்னு நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    2. //சேர்த்து அரைச்ச ஒரு சட்னியும்.... அத்தோடு காச்சல் போயிடும்:)// - ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தபோது நான் எங்கள் பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தேன். அப்போ பயங்கரக் காய்ச்சல். அவங்க ஜவ்வரிசி கஞ்சி ஜீனி போட்டுத் தந்தாங்க. நான் வீம்புக்கு பிடிக்கலைனு சொல்லிட்டேன். (எனக்கு இனிப்பு ரொம்பப் பிடிக்கும்). கொஞ்ச நேரத்துல ஆபீஸ்லேர்ந்து பெரியப்பா வந்தார். அவர், உடம்பு சரியில்லாதவனுக்கு ஜீனி போட்டு கஞ்சியா, எடு உப்பை என்று சொல்லி உப்புக் கஞ்சி கொடுத்து என்னைக் குடிக்கவைத்துவிட்டார்.

      உங்க அம்மாவுக்கும் அந்த தெக்கினிக்கு தெரிஞ்சிருக்கே. நல்லா செஞ்சு கொடுத்தால், அதிராப்பெண் சும்மா காச்சல் என்று 5 நாள் விடுமுறை எடுத்துவிடுவாள் என்று அப்படிச் செஞ்சு கொடுத்தாங்களோ? ஹாஹாஹா

      நீக்கு
    3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) காச்சலுக்கு வாய் கைக்குமெல்லோ அப்போ இனிப்பு எனில் சத்தி வரும்.. அதனாலதான் உறைப்புப் புளிப்பாச் சாப்பிடப் பிடிக்கும்:))..

      நீக்கு
  22. //ரவா இட்லிதான் பஹ்ரைன்ல நான் கடைசியா எங்கள் பிளாக்குக்காக படம் எடுத்து வைத்தது.//

    அப்போ இது மறக்க முடியாத இட்லி:).

    ஈனோ சோல்ட் எனில் ஈஸ்ட் ஐச் சொல்றீங்களோ? அல்லது ஒருவகை உப்போ?

    //மிளகாயை சிறியதாக கட் செய்து, தண்ணீரில் அலசிக் கொள்ளுங்கள். அப்போதான் விதைலாம் இருக்காது.//
    என்னைப்பொறுத்து இது தப்பு, மிளகாயை மெதுவா கை படாமல் கழுவி விட்டு, பின்பு கத்தியால கீறி, மெதுவா கத்தியாலயே பருப்பை எடுத்து விடோணும், வெட்டியபின் கை வச்சு அலசினால் கை படு பயங்கரமா எரியும்...

    சூப்பராக இருக்குது இட்டலி பார்க்க. இச்செய்முறை ஏற்கனவே நான் பார்த்திருக்கிறேன் ஆனா இதுவரை செய்து பார்த்ததில்லை, முயற்சிக்கோணும்.. பிரச்சனை என்னவெனில்.. இட்டலி சாப்பிடுவது நான் மட்டுமல்லவா:).

    போனகிழமை, ரவ்வை இட்டலி.. கறுப்பு உழுந்தில செய்து அதுக்கு கொள்ளு கம்பும் கலந்து.. சூப்பரா வந்துது ஆனா ஒரு தட்டு அவிச்சு ரெண்டு நாளா நானே சாப்பிட்டுப்போட்டு.. மிகுதி ஃபிரிஜ்ஜிலயே கிடந்து முடிவில ஒரு முக்கால்கிலோ அளவில மாவைக் கொட்டி விட்டேன்.. இதனாலதான் நான் இறங்குவதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ரவ்வை இட்டலி.//
      ஹலோவ் மியாவ் உடனே ஒரு விஷயம் க்ளியர் பண்ணுங்க எங்களுக்கு .
      நாங்க ரவைன்னு சொல்றது உப்புமா செய்றா sooji ரவை ..அதுக்கு உளுந்துலாம் சேர்க்கமாட்டோமே !!
      நீங்க சொல்றது இட்லி ரவைன்னு விக்கிறாங்க அதுவா ???

      நீக்கு
    2. //ஈனோ சோல்ட் எனில் ஈஸ்ட் ஐச் சொல்றீங்களோ? அல்லது ஒருவகை உப்போ?//
      இது காஸ்ட்ரிக் ட்ரபுளுக்கு ஊரில் தண்ணில கலந்து குடிப்பாங்க ..ஆனா நான் சுவைச்சி பார்த்ததில்லை .ஒருதரம் எப்படி இருக்குன்னு டெஸ்ட் பண்ண ஆசைக்காக ஒரு ஹாஜமோலா சாப்பிட்டு செஸ்ட் பெயின் வந்தது அதில் இருந்து நம்மூர் ஐட்டம்ஸில் விலகியே இருப்பேன் :)
      இது antacid மாதிரி ஈனோ சால்ட் இங்கே ஆண்ரூஸ் என்ற பேரில் விக்கிறாங்க உங்களுக்காக தேடி எடுத்திட்டு வந்தேன் :)
      இதெல்லாம் பார்க்க மட்டுமே உண்ண இல்லை

      https://cdna1.zoeysite.com/Adzpo594RQGDpLcjBynL1z/cache=expiry:31536000/compress/https://s3.amazonaws.com/zcom-media/sites/a0iE000000MEetKIAT/media/catalog/product/7/4/7441026000200.jpg

      நீக்கு
    3. நான் சொல்லும் ரவ்வை -Semolina அஞ்சு,
      ஓ இப்படி ஒரு உப்போ? கேள்விப்படவே இல்லை...

      நீக்கு
    4. //ரவ்வை இட்டலி.. கறுப்பு உழுந்தில செய்து அதுக்கு// - ஐயோ என்னைக் காப்பாத்துவார் யாருமில்லையா? ரவை இட்லில எங்க உளுந்து வந்தது, அதிலும் கறுப்பு உளுந்து? இது எந்த செய்முறையிலும் இல்லாத புது முறையானா இருக்கு.

      //மிகுதி ஃபிரிஜ்ஜிலயே கிடந்து // - அதிரா - என் பெண் சிலவற்றைச் செய்துபார்ப்பாள். ஆனால் செய்ததுக்காக அவள் சாப்பிடமாட்டாள். வெயிட் போட்டுடும்னு. நானும் இந்த விஷயத்தில் கொஞ்சம் ஸ்டிரிக்ட். பாக்கி இருக்குன்னு சாப்பிடமாட்டேன். நீங்களும்தான் பாவம்... நீங்க செய்யறதை அவங்க சாப்பிடலைனா (சில ஐட்டம்), வேற வழியில்லாமல் நீங்க சாப்பிடவேண்டிவந்துடுது...

      நீக்கு
    5. //உடனே ஒரு விஷயம் க்ளியர் பண்ணுங்க எங்களுக்கு // - ... அந்த வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சு போயிட்டா துன்பப் படறவங்க தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க. அந்த தெய்வமே கலங்கி நின்னா - மொமெண்ட். ஏஞ்சலினுக்கே அதிராவின் பாஷை புரியலைனா, நாங்க அப்பாவிக எங்க போறது?

      நீக்கு
    6. ஈனோ சால்ட் என்பது சாஷேயில் வரும். ப்ளெயின், லெமன், ஆரஞ்சு போன்ற சுவைகளில் உண்டு. வயிற்றில் உப்பிசம் இருந்தால் (செரிக்காத மாதிரி இருந்தால்) தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். படம் போட்டிருக்கிறேனே... பெரிது படுத்திப் பாருங்கள்.

      நீக்கு
    7. ஹையோ இது என்ன புயுக் கதை.. உழுந்தோடு அரிசி சேர்க்காமல் தனிய ரவ்வை மட்டும் சேர்த்தே இட்டலி, தோசை செய்வோம்.. என்னால முடியல்ல முருகா என்ன நடக்குது இங்க:))

      நீக்கு
  23. ஓ நான் நினைச்சேன்ன் ஊருக்குப் போயும் சுவாமிக்கு வைக்காமல் சாப்பிடுவதில்லைப்போல என.. பின்புதான் கிட்னியில தட்டிச்சுது இது பாறைன் சுவாமி ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கும் அதே பழக்கம்தான் அதிரா. இது என் அப்பாவைப் பார்த்து நான் கற்றுக்கொண்டது. என் அப்பா, வெகு வெகு அபூர்வமாக ஹோட்டலுக்கு வந்தாலும், உணவைக் கையில் எடுத்தால் முதலில் கண்ணை மூடிக்கொண்டு கடவுளுக்கு அர்ப்பணிப்பார். நானும் கடவுளை நினைக்காமல் பெரும்பாலும் உண்ணமாட்டேன்.

      நீக்கு
    2. சாப்பிட முன் கும்பிட்டு விட்டு சாப்பிடுவது.. இது என் கணவரும் அப்படித்தான், எப்பவுமே கண்ணை மூடி ஒரு கையை நெஞ்சில் வைத்தபடி ஒரு 2,3 செக்கன்கள் மட்டுமே ஏதோ முணுமுணுப்பார் ஹா ஹா ஹா அதுவும் இங்கிலிஸ் இல்.. நான் சிலசமயம் என்னதான் சொல்கிறார் எனக் காதைக் கிட்டக்கொண்டுபோவேன் சிரிப்பார்.. அது பழக்கத்தில் வந்து விட்டது சின்ன வயதில் இருந்து..

      ஆனா சுவாமிக்குப் படைப்பதென்பது, டெய்லி பண்ண மாட்டோம் ஏனெனில் எப்பவும் விஷேட நாளில் சுவாமிக்குப் படைக்கும்போது, யாரையுமே சாப்பிட விடாமல் படைத்து விட்டுத்தான் சாப்பிடுவோம், அப்படி ஒவ்வொரு நாளும் கொன்றோல் பண்ணுவது கஸ்டமெல்லோ.. தனியே இருப்பின் ஓகே.. அதைத்தான் கேட்டேன்..

      நீக்கு
    3. அப்படி இல்லை அதிரா.. செய்வது நீங்கதானே. செய்து முடித்தவுடன் மனதால் இறைவனுக்கு அர்ப்பணம் செய்தால் முடிந்தது. (ஏஞ்சலின் - நீங்க எனக்கு மெயிலில் எழுதியிருப்பது தவறு. அதிரா, செய்து முடித்த பிறகே எல்லா ஐட்டமும் ரொம்ப நல்லா வரும்னு சொல்ல முடியாது. இதுல பாதி செஞ்சிக்கிட்டிருக்கும்போது யார்தான் அதை சாப்பிட்டுவிடுவார்கள் என்று நீங்க சொன்னதை நான் ஒத்துக்கொள்ளவில்லை.ஹாஹாஹா)

      நீக்கு
    4. ///(ஏஞ்சலின் - நீங்க எனக்கு மெயிலில் எழுதியிருப்பது தவறு//

      karrrrrrrrrrrrrrrrrr:) சொல்ல வந்ததை தெளிவாச் சொல்லோணும்:) அது மெயிலோ இல்ல வட்ஸ்சப்போ?:)) ஹா ஹா ஹா யூப்பர் மாட்டீஈஈஈஈஈஈஈ:))

      நீக்கு
  24. நாங்க
    அண்ணா எண்டாலே
    அடிக்கக் கலைக்கிறார்
    ஆரோ சுந்தரி வந்து
    மாமா எண்டதும் மயங்கி நிற்கிறார்:)

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையை கீழே உள்ளமாதிரி மாத்திப் படிங்க.

      பெண்களுக்குத் தெரியவில்லை,
      யார் 'அண்ணா' என்று சொல்லவேண்டும்,
      யார் 'மாமா' என்று சொல்லவேண்டும் என்று.
      எத்தனை சினிமாப் பாடல் வந்து என்ன பிரயோசனம்.
      சின்னப் பெண்களும்,
      வெகுசுமார் பெண்களும் மட்டுமே
      ஆணைக் கண்டால், 'அண்ணா' எனலாம்.
      மற்றவர்களுக்கு
      நாங்கள் 'மாமா'தான்.

      நீக்கு
    2. //மற்றவர்களுக்கு
      நாங்கள் 'மாமா'தான்.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சென்னைப் பொலிஸ் பிடிச்சுக்கொண்டு போகப்போகினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:)..

      நீக்கு
  25. எனக்கு ரவா இட்லி பிடிக்கும். ஆனா, எனக்கு செய்ய வரலையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜி அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்க நிறைய செய்முறைகளைப் போட்டிருக்கீங்க. அதில் எனக்கு பலவும் பிடித்தவை. உங்களுக்கு ரவா இட்லி செய்ய வராதா? நம்பவே முடியலை. செஞ்சு பாருங்க.

      நீக்கு
  26. அருமையான செய்முறை. படங்களுடன் பிரமாதம்.
    மகள் வீட்டில் ரவா இட்லி மணம் எப்பவும் சுற்றும். எனக்குதான் ரவை நெஞ்சு கரிக்கும். வாங்கிண்டு வந்த வரம்.

    லண்டன் ஸ்காட்லாண்ட் என்று அரட்டைக் கச்சேரி
    இட்லியையைச் சுவையாக்கிவிட்டது.

    அட்டகாசப் பதிவுக்கு நல் வாழ்த்துகள் நெல்லைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க வல்லிம்மா... கருத்துக்கு மிக்க நன்றி. அரட்டையை சுவையாக்குவது அதிரா, ஏஞ்சலின், கீதா சாம்பசிவம் மேடம், கீதா ரங்கன் போன்றவர்கள். அவங்க கலாய்க்க ஆரம்பிச்சாங்கன்னா படிக்க இண்டெரெஸ்டிங் ஆக இருக்கும். இன்றைக்கு கீசா, கீ.ர ரெண்டுபேரும் அடக்கிவாசிச்சுட்டாங்க (கீதா ரங்கன் வரலை... பயணத்தில் பிஸி)

      இப்போ நீங்க எல்லாவற்றையும் சாப்பிடறீங்களா இல்லை சாப்பாட்டுல ரெஸ்டிரிக்‌ஷன் வச்சிருக்கீங்களா?

      நீக்கு
  27. கடந்த வாரம் எங்கள் ஹோட்டல் வந்த குருப்புக்கு இட்லி,தோசை ஆர்டர் செய்திருந்தார்கள்.தோசைக்கு அரிசியும் உழுந்தும் ஊற வைச்சி மிக்சியில் அடிச்சி கலந்து வைத்து விட்டு இட்லிக்கும் அதே மாவா என தோணிச்சு. உடனே ரவாவை ஸ்ரிம் செய்து உழுந்து ஊறவைச்சு மிக்சியில் அடிச்சு இட்லிக்கும் ஊற வைச்சேன்.கொஞ்சம் குளிரான கால நிலையிலும் தோசை மாவை விட ஜம்முன்னு ரவா மிக்ஸ் பொங்கி வந்திருந்தது. அப்படியே எங்க சமையல் காரர் இட்லி சட்டியில் ஊத்தி வைத்தார். ஜம்மி. அரிசி இட்லியை விட சுப்பரா மெதுமையா இருந்தது. வந்திருந்த கெஸ்டு எல்லோரும் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள்.என் பையன் ஆறு இட்லி சாம்பார் சட்னி தொட்டுக்காமல் சும்மா சாப்பிட்டான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நிஷா. ஓ... அடுத்த முறை ரவா வை ஊறவைத்து உளுந்து சேர்ந்து இட்லிக்கு அரைப்பதுபோல் அரைத்துப் பார்க்கிறேன். நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. முந்தய பின்னூட்டம் எழுத்துபிழை கண்டு நீக்கி விட்டேன்.

      ஹாஹா ரவாவை ஊற வைத்து இல்லை ஸ்ரிம் செய்தேன் . ஆவியில் வேக வைத்து எடுத்தேன். ஒன்றுக்கு ஒன்றரை எனும் அளவின் உளுந்தும் ரவாசுவும் சேர்த்தேன். ரவா அரை மணி நேரம் ஆவியில் வேக விட்டேன். ஒரு பிடி சோறும் அள்ளி போட்டேன்.ஜம்முன்னு தான் இருந்தது.

      நீக்கு
    4. தண்ணீர் விடாமல், அவனில் steam செய்தீர்களா? நாங்கள் இதுவரை கேள்விப்படாத முறை. அதனால்தான் அதிரா எழுதியது, தவறுதலாக எழுதியிருக்காங்கன்னு நினைத்தேன்.

      பொதுவா தென்னிந்தியாவில், (1) அரிசி ஊறவைத்து உளுந்துடன் அரைப்பார்கள் (2) அரிசியை மிக மெல்லிய ரவை (அதைவிடச் சிறிதாக) பதத்தில் பாக்கெட்டில் தோசா/இட்லிப் பொடி என்று வரும் பொடியோடு உளுந்தை அரைத்து சேர்த்து இட்லி செய்வார்கள். அரிசியை அரைக்கும்போதும் கர கர வென அரைப்பார்கள் சில ஹோட்டல்களில், பெரும்பாலான கர்நாடகா ஹோட்டல்களில். அப்போ இட்லி உடைக்கும்போது கொஞ்சம் உதிராக இருக்கும். (வட இந்திய பிராண்டுகளில் இன்ஸ்டண்ட் இட்லி பொடி இப்படித்தான் இருக்கும்) ஆனால் எங்களுக்கு அது அவ்வளவாகப் பிடிப்பதில்லை

      நீக்கு
    5. நானும் ஒன்றுக்கு முன்று எனும் அளவில் உழுந்தும் இட்லி அரிசியும் ஊற வைத்து தான் தனித்தனியே மிக்சியில் அடித்து எடுப்பேன்.தோசைக்கு எனில் வெந்தயம் சேர்ப்ப்பேன். மைபோல் பொங்கப்பொங்க அரைத்து எடுக்கணும். இட்லிக்கு நைசா அரைக்கணும்.வாரத்தில் ஒரு நாள் இந்தியன் குருப்புக்கு இட்லி, தோசை வடை மெனு போடும் போது ஒரே மாவில் இட்லியும் தோசையுமா செய்வது என எப்போதேனும் ரவை இட்லி செய்வேன். நான் மா தயார் செய்து கொடுத்தால் நார்த் இந்தியன் குக் சமைத்து எடுப்பார். நார்த் இந்தியன் குக்குகளை இட்லி, தோசை செய்ய சொன்னால் எல்லாவற்றிலும் ஓமம்,பெருங்காயம், கசூரி மேத்தியை கொட்டி வைப்பார்கள். நமக்கு அந்த வாடையே எட்ட நிற்க சொல்லும். நீங்கள் எல்லோரும் இங்கே உணவுப்படஃங்கள் இட்டு பகிரும் போது ஹோட்டல் வைத்து நடத்தும் என்னால் இங்கே எதுவும் எழுத முடிவதில்லை பாருங்கள். ரவையை இட்லி வேக வைப்பது போல் ஆவியில் வேக வைக்கலம. ஹோட்டல் சமையல் அறையில் ஸ் ரீமர் ஆதாவது ஆவியில் வேக வைக்கும் பெரிய மெசின் இருக்கின்றது. அதில் வைத்தும் எடுப்பேன். ஒவணில் அப்படி வைத்து எடுக்க முடியாது. பொதுவாக இங்கே வீட்டுக்கிச்சன்களில் இருக்கும் ஓவண்களில் கிரில் வசதியும் பேக்கிங்க வசதியும் தான் இருக்கும் ஸ்ரிம் செய்யும் வசதி இருக்காது. எனக்கும் இந்த இட்லி, தோசை பொடிகள் இன்ஸ்டண்ட் கலவைகள் பிடிப்பதில்லை. எங்கள் ஹோட்டல் ஸ்பெஷளே பிரெஷாக தரமாக சுவையாக என்பது தான்/

      நீக்கு
    6. எங்கள் பிளாக்கில் ஒரு தடவை எங்கள் ஹோட்டல் கிச்சன் புகைப்படங்கள் எடுத்து பகிரும் படி அனுப்பி வைககணும்.

      எழுத்து பிழைகள் திருத்தி வாசிங்க.
      ஆவியில் வேக வைக்கலாம்
      ஸ்பெஷலே

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!