2014 ஜூன் மாதம் பதிமூன்றாம் தேதி முகநூலில் வெளியிட்ட பதிவு கீழே.. தளத்தில் வெளியிட்டதாய் நினைவில்லை! சென்னை வெயிலின் ஒரு நாளின் அலைச்சலினால் ஏற்பட்ட பதிவு..! ஆச்சர்யம் என்ன என்றால் இப்போது செப்டம்பர் 29 ஆம் தேதி ஒரு ரிட்டயர்மெண்ட் பார்ட்டிக்கு அதே இடம் சென்று வந்தேன்.
***
கசகச வேர்வைக் கூட்டத்தில் முன்னும் பின்னும் அலைபாய்ந்து, எச்சில் தொட்டு சீட்டு கிழிக்கும் பேருந்து நடத்துனர்...
மின்தொடர் வண்டியில் நெரியும் கும்பலில் கைகொண்டு கூட்டம் விலக்கி சிறு குச்சியுடனும் சிறு துணையுடனும் பாடி வரும் பார்வையில்லாப் பெண்...
நன்றி இணையம்.
யாருமில்லாக் கடையில் கிழிந்த செருப்பொன்றை வைத்துத் தைத்துக் கொண்டே இன்றைய பிழைப்பை ஓட்ட யாராவது வருவார்களா என்று காத்திருக்கும், அனல் வெயிலின் தெருவோர, சிறுபடுதா செருப்பு தைக்கும் தொழிலாளி...
வறண்ட (அடை)ஆறின் ஓரம், காய்ந்த சில காய்களோடோ, மீன்களோடோ வெயிலை கைவிரல்களால் மறைத்து தடுப்பேற்படுத்திக் கொண்டு போவோர் வருவோரில் ஒருவராவது இந்தப் பக்கம் திரும்ப மாட்டார்களா என வாங்குவோருக்குக் காத்திருக்கும் வயதான பெண்மணி...
மர நிழல்களிலேயே கையில் சாக்குப் பையுடனும், கால்களில் பொருந்தாத அளவுகளிலும், காலுக்கொரு ரகத்திலும் செருப்பணிந்து நடந்து குப்பை பொறுக்கும் சிறுவர்கள், கிழவர்கள்...
வேர்க்கும் வெயிலில் தள்ளுவண்டி வெள்ளரியில் அவ்வப்போது தண்ணீர் தெளித்து, ஓரமாக, இல்லாத சிறு நிழலொன்றில் ஒதுங்கி நின்று பத்து ரூபாய் வியாபாரத்துக்குக் காத்திருக்கும் நடைபாதை வியாபாரி...
நன்றி இணையம்.
ஆளில்லாக் கூரையின் கீழே மூடி வைத்திருந்த பானையைத் திறந்து, குனிந்து உள்ளே பார்த்து, நீர் தேடி ஏமாந்து, தள்ளாடும் நடையைத் தொடரும், வயதான குச்சி ஊன்றிய பெண் யாசகர்...
'அக்னி' நேரம் முடிந்து விட்டதை சூரியன் இன்னும் கவனிக்கவில்லை போலும்.. அரபிக்கடல் புயல் மேல் சாக்கு சொல்லி அன்றாடம் அனல் காய்ந்தாலும் அவரவர் பிழைப்பு அவரவர்களுக்கு...
வெயில் அதிகமாகவும், மழை மட்டும் குறைவாகவும்... எப்போதுமே...
===============================================================================================
நன்றி இணையம்.
சுப்ரமணிய ராஜுவிடம் உதவிகள் பெற்றுவந்த ஜோல்னாப்பை, குறுந்தாடி இளம் எழுத்தாளர் ஒருவர் ராஜு நல்ல மனிதரே தவிர, நல்ல எழுத்தாளர் இல்லை என்று வாதிட்டாராம். யாரிடம்?
சுப்ரமணிய ராஜுவின் சொந்த சகோதரரிடம். இருவருக்கும் சண்டையே வந்ததாம். இதுபற்றி வீட்டில் பின்னர் பேச்சு வந்தபோது அவருக்கு இனியும் உதவிகள் செய்யவேண்டாம் என்றாராம் சகோதரர். சுப்ரமணிய ராஜு ஒப்புக்கொள்ளவில்லையாம். "அவரே தேவலாம் போலவே... என் எழுத்து நல்லாயிருக்குன்னு சொல்றவருக்குதான் நான் காசு உதவி பண்ணணும்ங்கிறது என்ன நியாயம்?" என்று கேட்டாராம்.
அந்த குறுந்தாடி, ஜோல்னாப்பை இளம் எழுத்தாளர் - கிட்டத்தட்ட 80 களில் - யாராயிருக்கும்?
சுப்ரமணிய ராஜு என்றால் எனக்கு மைக்கேல் மதனகாமராஜன் கமலும் நினைவுக்கு வருகிறார். உங்களுக்கு?
சுப்ரமணிய ராஜு என்றால் எனக்கு மைக்கேல் மதனகாமராஜன் கமலும் நினைவுக்கு வருகிறார். உங்களுக்கு?
=======================================================================================================
மனம் பதைக்கும் இந்நிகழ்வை அப்போது தினகரனில் படித்ததும் முக நூலில் பகிர்ந்திருந்தேன். சாதாரணமாக அதற்கான லிங்க் கூடவே கொடுத்திருப்பேன். இதற்குத் தரவில்லை. சிறுவன் உயிர் பிழைத்தது மிகப்பெரிய ஆச்சர்யம்தான்.
வாழ்க நலம்..
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் பானு அக்கா.
நீக்கு//அந்த குறுந்தாடி, ஜோல்னாப்பை இளம் எழுத்தாளர் - கிட்டத்தட்ட 80 களில் - யாராயிருக்கும்?// Yes. I know him personally. Now he also is no more! :( :)))))
பதிலளிநீக்குஉங்கள் பதிலினால் வரும் என் யூகம் தவறாகவும் இருக்கலாம் கீதா அக்கா.
நீக்குரிஷபன் என்ன எழுதி இருப்பார்? தெரியலை. விமானத்தின் சக்கரத்தில் ஒளிஞ்சுண்டு வந்த சிறுவன் பத்தின செய்தி படிச்ச நினைவு இருக்கு.
பதிலளிநீக்குரிஷபன் ஸார் என்ன அப்போ எழுதி இருந்தார்னு ஞாபகம் எனக்கும் இல்லை. ஞாபகம் இருந்திருந்தால் அதையும் இணைத்திருப்பேன்!
நீக்குமுதல் பத்திக்கு அப்புறமா எழுதி இருக்கும் தத்துப்பித்துவம் உங்களோடது தானா?
பதிலளிநீக்குதத்துபித்துவம்? வெயிலை பற்றிய விவரணங்களை சொல்கிறீர்களா? ஆம் என்றால் ஆம்!!
நீக்குஅனைத்தையும் ரசித்தேன். இளம் தாடி பாலகுமாரனா?
பதிலளிநீக்குBalakumaran and Subramaniya Raju are thick friends. Balakumaran wrote about Subramaniya Raju's sudden death. He felt his death very bad in his life. So!!!!!!!!!!!!!!!! It is/may be some intellectual writer! :)))))
நீக்குகீசா மேடம் கிசு கிசு எழுதறதுலயும் இப்போ கை தேர்ந்துட்டாங்க. ஆனால் இதுல பிரச்சனை என்னன்னா, மனம் அப்பாவிகளையும் குற்றவாளிகளாக எண்ணும். (அந்தப் பாவம் கிசு கிசு எழுதறவங்களுக்கா இல்லை எண்ணுகிறவர்களுக்கா? ஹாஹாஹா)
நீக்குஇஃகி, இஃகி, எல்லோருக்கும் தெரிஞ்சவர், ஏகாந்தனுக்கும் தெரிஞ்சவர் தான்! இது பத்தி அப்போவே கேள்விப் பட்டிருக்கேன். :))))))
நீக்குஆம் நெல்லை... பாலகுமாரனும் சுப்ரமணியராஜூவும் அத்யந்த நண்பர்கள். அவர் இல்லை. கோமதி அக்கா சொல்லி இருப்பது போல ஸ் ல ஆரம்பிச்சு ஸ் ல முடியற பேர் கொண்ட எழுத்தாளர்னு தெரிகிறது!
நீக்குகீதாக்கா சொன்னது இவரை இல்லை என்று நினைக்கிறேன் (என் யூகம் சரியானால்)
நீக்குசொல்ல மாட்டேனே, சொல்ல மாட்டேனே! ஜாலியா இருக்கு!
நீக்கு@ கீதா சாம்பசிவம்: ’ஏகாந்தனுக்கும் தெரிஞ்சவர் தான்’
நீக்குஆ! நானெங்கே வந்து சிக்கினேன் இங்கே!
எஸ் -இல் ஆரம்பித்து எஸ்-இல் முடியும் பேர்கொண்டவர், பணக்கஷ்டத்தில் இருந்ததாகத் தெரியவில்லையே. ம்ஹூம். அவர், அவரில்லை!
இல்லை ஏகாந்தன், நானும் அவரைச் சொல்லலை! திருமதி கோமதி தான் சொல்லி இருக்கிறார்கள். ஸ்ரீராமும் அவர் தான் என நினைக்கிறார். இஃகி, இஃகி!
நீக்குயார் சொன்னார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்பதே நான் சொல்வது! இது வெளிப்படையாக நடந்த ஒன்றும் கூட, சொல்லப்பட்டதும் கூட! :))
நான் அப்படி நினைக்கவில்லை கீதாக்கா... நான் நிலைத்திருப்பது வேறு ஒருவரை.
நீக்குஸாரி, நினைத்திருப்பது....
நீக்குசென்னையை, அதன் வெயில், கசகசப்மை நல்லா விவரித்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநன்றி நெல்லைத்தமிழன்.
நீக்குசிறுவன் உயிர் பிழைத்த நிகழ்வு வியப்பு...
பதிலளிநீக்குஆமாம். நன்றி டிடி.
நீக்குசிறுவனுக்கு ஆயுசு கெட்டி வியப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குடயர் உள்ளே சுருங்கியபோது எப்படி வெளியில் இருக்க முடியும் ?
ஒருவேளை டயர் உள்ளே போகாத பழைய கால விமானமாக இருக்குமோ...
அதோடு ஆக்சிஜன் இல்லாமல் எப்படி உயிர்பிழைத்தானோ... அதுவும் ஆச்சர்யம். நன்றி கில்லர்ஜி.
நீக்குசக்கரத்தில் பயணித்த சிறுவன் உயிர் பிழைத்த நிகழ்வினை நானும் வாசித்திருக்கின்றேன்..
பதிலளிநீக்குநன்றி துரை ஸார்.
நீக்குஎன்ன இன்று சற்று சுருக்கமாக முடித்து விட்டீர்கள்? அல்லது எனக்கு அப்படி தோன்றுகிறதா?
பதிலளிநீக்குவெயில் வேதனை உணர முடிகிறது.
சுப்ரமணிய ராஜு என்றால் எனக்கு
'தேய்த்து தேய்த்து குளித்துப் பார்த்தேன்
அழுக்குப் போகவில்லை
கையில் எடுத்து உற்றுப் பார்த்தேன்
நீரே அழுக்கு'
என்னும் அரசியலைப் பற்றி அவர் எழுதியிருந்த புதுக்கவிதைதான் நினைவிற்கு வரும். அப்புறம் பாலகுமாரன்.
சுப்பிரமணிய ராஜுவைவின் எழுத்தை குறை கூறிய அந்த எழுத்தாளர் சற்று குள்ளமாக இருப்பாரோ? சினிமாவிற்கு கூட வந்தார். பெயர் 'எஸ்' இல் துவங்கும்.
சுருக்கமாகவா? அப்படியா தோன்றுகிறது? அப்பாடா... வாராவாரம் வளவளவென்று இழுக்கிறேனோ என்று சந்தேகம் எனக்கிருந்தது பானு அக்கா. ஸ் சினிமாவுக்கு வந்திருக்கிறாரா?
நீக்குஅன்பின் ஸ்ரீராம்...
பதிலளிநீக்கு>>> அன்றாடம் அனல் காய்ந்தாலும்.. <<<
இந்தப் பதிவுக்கு இது தொடர்புடையதோ.. இல்லையோ!..
கருத்துரையாய் ஒரு கவிதை (!?)
அறிவில் ஆதவன்
அஞ்சுவனோ...
மட மானிடனை
அவன் கொஞ்சுவனோ?..
அகன்றான் இல்லை
ஆதவன்... அனல்
குறைந்தான் இல்லை
ஆதவன்!..
முழுக்கவிதையும் - நமது தஞ்சையம்பதியில்!..
( சும்மா ஒரு விளம்பரந்தேன்!.. )
கருத்துரையாய் கவிதை அருமை.
நீக்குகருத்துக் கவிதை அருமை துரை ஸார். இதோ வருகிறேன்!
நீக்குசிறுவனுக்கு ஆயுசு கெட்டி
பதிலளிநீக்குஆமாம். நன்றி ராஜி.
நீக்கு@ஸ்ரீராம்: //..அந்த குறுந்தாடி, ஜோல்னாப்பை இளம் எழுத்தாளர் - கிட்டத்தட்ட 80 களில் - யாராயிருக்கும்?
பதிலளிநீக்குஇதென்ன அந்தக்காலத்து புதன்கிழமைப் புதிர் போல இருக்கிறதே? கேஜிஜி-யின் உதவி தேவைப்படுமோ?
சுப்ரமணிய ராஜுவின் கதை ஒன்றில் சர்ச்சைக்குரிய வர்ணனை ஒன்றுபற்றி ஒருமுறை கமல் ஹாசன் குறிப்பிட்டதாக சுஜாதா தன் ‘கற்றதும் பெற்றதும்’-ல் எழுதியிருக்கிறார். ’கபெ’-எந்த வால்யூமில் என ஞாபகமில்லை!
சு. ரா சர்ச்சைக்குரிய வர்ணனை எது என்று சொல்லிவிட்டால் மண்டை வெடிக்காமல் இருக்கும் ஏகாந்தன் ஸார்.
நீக்கு@ Sriram: // .. சு ரா சர்ச்சைக்குரிய வர்ணனை எது என்று..//
நீக்குசுந்தர ராமசாமி இங்கே எங்கே வந்தார் என அதிர்ந்துபோனேன் உங்கள் கமெண்ட் பார்த்து!
’சர்ச்சைக்குரிய..’ என்றபின் எல்லாவற்றையும் பொதுவெளியில் போட்டுடைத்தால், அதுவேறு சர்ச்சைக்குரியதாகி..?! - இப்போதிருக்கும் தமிழ் அரசியல்/கலை/இலக்கிய சூழலில் யார் உள்ளே, யார் வெளியே என்பதே பெரும் சிக்கலாகிக்கொண்டிருக்கிறதே..!
சு ரா என்றால் சுந்தரராமசாமியை இங்கு எடுத்துக்கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை ஏகாந்தன் ஸார்! போட்டு உடைக்க வேண்டாம். சு.ராஜுவின் இந்தப் படைப்பில் வெளிவந்தது என்று நினைவிருக்கிறதா? அதை அங்கு பேசி இருந்தார்களா?!!
நீக்கு@ஸ்ரீராம்: சுஜாதாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ராஜுவின் அந்தக் கதையின் பெயரைக் குறிப்பிடவில்லை கமல் ஹாசன். அதில் வரும் ஒருவரியை குறிப்பிட்டு, ‘.. இப்படில்லாம் எழுதறாரு சார்!’ என்று சொன்னதாக சுஜாதா சொல்லியிருக்கிறார்.
நீக்கு//.. இலைகள்...வாசம் போவதில்லை!!//
பதிலளிநீக்குகருவேப்பிலையையா இப்படி சுற்றிவளைத்து..
இந்த வாசம் போகா இலை பதிவுக்கு கே ஜி ஜி முழு நூலில் நிறைய சண்டை போட்டார். எடுத்து வைத்திருந்தேன். தேடிப்பார்த்தேன். காணோம்!
நீக்கு@ஸ்ரீராம்: எடுத்துவைத்திருந்தேன்.. காணோம்! -என்றால்? கேஜிஜி ’முழுநூலில்’(!) நிறைய சண்டைபோட்டும் பிரயோஜனமில்லாமல் போய்விட்டதே!
நீக்குK G Gouthaman இலைகள்? வாசம்? எங்கேயோ இடிக்குதே தலைவா!
நீக்குK G Gouthaman எனக்குத் தெரிந்து யுகலிப்டஸ் மரஇலைகளுக்கு மட்டுமே இயற்கையில் மணம் உண்டு.
Rishaban Srinivasan ஹா ஹா எனக்கேவா.. :)
Sriram Balasubramaniam ஹலோ.... இப்படியெல்லாம் கேள்வி கேட்கப் படாது... ஆமாம் சொல்லிட்டேன்! யுகலிப்டஸ், மாவிலைல வாசம் நுகர்ந்தது இல்லை? :)
Rishaban Srinivasan பழமொழி.. கவிதை .. சொன்னா அனுபவிக்கணும்.. கேள்வி கேட்கக் கூடாது
K G Gouthaman மாவிலைக்கு வாசம் கிடையாது. பறிக்கும் பொழுது வருகின்ற வாசம் - மரத்தில் வடியும் மாம்பாலில் வருகின்ற வாசம்.
Sriram Balasubramaniam நல்லபடி எடுத்துக் கொண்டதற்கு நன்றி ரிஷபன் ஜி!
Rishaban Srinivasan யூ ஆர் ஆல்வேய்ஸ் வெல்கம் !
@ KGG :
நீக்குஎன்ன, யூகலிப்டஸ் இலைக்கு மட்டும்தான் இயற்கையில் மணம் உண்டா? ஆர்.எஸ்.பதி தைலம் தடவிக்கொண்டே எழுதியதா இது!
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, துளசி, துணுத்திப்பச்சை போன்ற இலைகள் எல்லாம் என்ன பார்க் அவென்யூ பர்ஃப்யூம் போட்டுக்கிட்டா அலையுதுங்க !
வெயில் சமயத்தில் கண்ட காட்சிகளை பதிவு செய்து அதை மனகண்ணில் பார்க்க வைத்து விட்டீர்கள்.மழை, வெயில் என்று பார்த்தால் வயிற்று பிழைப்பு சிலருக்கு என்னாவது?
பதிலளிநீக்குதண்ணீர் இல்லாத பானையை திறந்து பார்த்து ஏமாற்றம் அடைந்த முதிய பெண் யாசகர் மனதை கனக்க செய்கிறார்.
அந்த குறுந்தாடி, ஜோல்னாப்பை இளம் எழுத்தாளர் - கிட்டத்தட்ட 80 களில் - யாராயிருக்கும்?//
அவர் பெயர் எஸ் முதல் எழத்து ஆரம்பிக்கும் எஸ் கடைசி எழுத்தில் முடியும்.
தன் மனைவியின் மரணத்தால் மனம் ஒடிந்து அவரும் தற்கொலை செய்து கொண்டவர் என்று நினைக்கிறேன்.
ஸ்டெல்லா புரூஸ் அவர்களையா சொல்றீங்க?
நீக்குநன்றி கோமதி அக்கா. பாராட்டுக்கு நன்றி. அந்த எழுத்தாளர் அவர் என்பதற்கு என்ன ஆதாரம்?
நீக்குகுறுந்தாடி என்றதாக் சொன்னேன்.
நீக்குஆனால் குறுந்தாடி என்றால் இவரைவிட இன்னும் ஓரிருவர் சட்டென நினைவுக்கு வருகிறார்களே!
நீக்குஆமாம் நெல்லைத் தமிழன்.
நீக்குகுறுந்தாடி, ஜோல்னாபை, சினிமாவுக்கு கதை என்ற குறிப்புகள் அவருக்கு ஒத்து போச்சு.
எனக்கு வேறு யாரும் நினைவுக்கு வரவில்லை.
நீக்குஇரண்டு பேர் சேர்ந்து எழுதுவார்களே ! (சுபா)
அவரில் ஒருவர் குறுந்தாடி வைத்து இருப்பாரோ?
சாரு நிவேதிதாவும் குறுந்தாடி வைத்து இருப்பார் ஆனால் 80ல் அவர் பிரபலமா தெரியாது.
நீக்குராஜேந்திர குமார் அவர் கொஞ்சம் நாகரீகமாய் இருப்பார் 80ல் பிரபல எழுத்தாளர். தாடி உண்டு என்று நினைக்கிறேன்.ஆனால் சுப்பிரமணிய ராஜூவை குறை சொல்லி இருப்பார்கள் என்று சொல்லவரவில்லை.
குறுந்தாடி வைத்து கொண்ட எழுத்தாளர்கள் என்றேன்.
சிறுவன் உயிர் பிழைத்தது மிகப்பெரிய ஆச்சர்யம்தான்.//
பதிலளிநீக்குஆச்சிரியமான உண்மை. கடவுளுக்கு நன்றி.
கடைசி கவிதையும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇலை பழுத்தால் கீழே விழ வேண்டியதுதான்.
பாசம் இல்லை என்று ஆகாது.
கவிதை ஒரு குறியீடாகத்தான் எழுதி இருந்தேன். இப்போது முன்னும் நினைவில்லை, பின்னும் நினைவில்லை.
நீக்குஓ ! நானும் முகநூலில் படித்த நினைவு இல்லை ஸ்ரீராம்.
நீக்குவாசம் போகாது என்பது பூர்வஜென்ம வாசமோ?
பதிலளிநீக்கு>>> வாசம் போகாது என்பது பூர்வஜென்ம வாசமோ?.. <<<
நீக்குஅழகு..
நயமான சிந்தனை...
நன்றி.
நீக்குவிமானத்தில் பறந்த சிறுவன் செய்தி மனதை படபடக்கவைத்துவிட்டது.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.
நீக்குகதம்பப் பதிவு அழகு.
பதிலளிநீக்குசென்னை பற்றிய கட்டுரை போன்ற கவிதை அழகு ரசித்தேன். சிறுவன் செய்தி .. விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது....
பூக்கள் தான் வாசமுள்ளவை எனக் கேள்விப்பட்டதுண்டு.. இலைகள் மரத்தை விட்டு விழும்போது பழுத்திருக்கும்.. பழுத்த இலைகள் எல்லாமே ஒரே விதமாகவேதான்[வாசனை] இருக்கும் என நினைக்கிறேன்.
நன்றி அதிரா. சில இலைகளுக்கும் வாசமுண்டு.
நீக்குவிமான சக்கரத்தில் பயணித்த சிறுவன படித்திருக்கிறேன்...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு அண்ணா.
நன்றி குமார்.
நீக்குசுப்ரமண்ய ராஜு எழுதிய கவிதையை யாருமே கண்டுகொள்ளவில்லை. கிசுகிசுவில் புத்தி போய் விட்டது. ஹூம்.. இதுதான் மாயையா?
பதிலளிநீக்குசுப்ரமண்ய ராஜு என்றால் எனக்கு சாவி பத்திரிகையும் அதில் சு.ராஜுவும், பாலகுமாரனும் சேர்ந்து வழங்கிய இரட்டையர் பதிலும் நினைவுக்கு வரும். இந்துமதி கூட அவரைப் பற்றி நிறைய சொல்வார். சுஜாதா மிகவும் சிலாகித்த எழுத்தாளர். ஒரு வேளை குடித்து விட்டு வண்டி ஓட்டி, விபத்தில் சிக்காமல் இருந்திருந்தால் அந்த நம்பிக்கையை நிறைவேற்றியிருப்பாரோ என்னவோ.
பதிலளிநீக்குகவிதை நன்றாக இருந்தது பானு அக்கா. விபத்தில் சிக்கினார் என்பது தெரியும். குடித்துவிட்டு வண்டி ஓட்டினார் என்பதுதான் புது தகவல்.
நீக்குராஜு குடிப்பவராக இருந்திருக்கலாம். குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால்தான் விபத்தா எனத் தெரியவில்லை. எழுத்துச்சித்தரும் ‘தண்ணி’அடித்து, தம் அடித்துத் திரிந்த காலம்தான் அது. குடிப்பழக்கம் மேலும் சில எழுத்தாளர்களுக்கும் இருந்திருக்கிறது/ இருக்கிறது. கட்டுப்பாட்டில் உடலும், உள்ளமும் இருந்தால் சரி.
நீக்குவெய்யில் ... வெய்யில் . உங்கள் விவரணங்கள் அனலாகத் தாக்குகிறது.
நீக்குவிமான சிறுவன் ஆயுசு கெட்டி.
சுஜாதா சாரின் சில நஷ்டங்களுக்கு பாகு காரணம் என்று அவர் மனைவியே சொல்லி இருக்கிறார்.
புரட்டாசிக்கு வெய்யில் சரி. இரவு மழை பெய்யணுமே அது இல்லையா.
சு.ராஜுவின் கவிதை அழகு.
கோமதி அண்ட் கீதா நல்ல படிப்பாளர்கள். இவ்வளவு விவரம் தெரிந்து வைத்திருக்கிறார்களே.
பலரின் அழிவுக்கு இந்தக் குடி போதை காரணமாக இருக்கிறதே. அரக்கனை ஒழிக்க திருமால் வரவேண்டுமோ.
வெகு சுவாரஸ்யமான பதிவு ஸ்ரீராம். மிக நன்றி.
வாங்க வல்லிம்மா... சுஜாதா ஸாரின் சில நஷ்டங்களுக்கு பாகு எப்படி பொறுப்பாவார்? நான் அப்படிப் படித்ததாய் நினைவில்லையே...
நீக்குவெயில் விவரணப் பாராட்டுக்கு நன்றி.
ஏகாந்தன் ஸார்.. எழுத்துச் சித்தருக்கு போதைப்பழக்கம் இருந்தது என்று படித்திருக்கிறேன். சுப்ரமணிய ராஜுவுக்கு இருந்தது என்று படித்ததில்லை என்பதால் ஆச்சர்யம்!
நீக்குநல்ல வேளை டிக்கெட் கட்டணம் கேட்கவில்லை
பதிலளிநீக்கு