சென்ற வாரக் கேள்விக்கு எல்லா பிரிவுகளிலும் பதில் கூறிய அதிராவுக்கு 'சகலகலா செஃப் ஞானி மியாவ் அதிரா' என்ற பட்டம் கொடுக்கப்படுகிறது. பரிசு அறிவிக்கப்படாத கேள்விகளுக்கு இப்படி விழுந்து விழுந்து பதில் சொல்கிறாரே!
1,காரணமேயில்லாம ஒருவர் மீது அல்லது எதோ ஒன்றின் மீது வெறுப்பு வருவதன் காரணம் என்ன ? அப்படி சமீபத்தில் உங்களை வெறுப்படைய வைத்தது என்ன ?
.காரணமில்லாத என்ற பின் காரணம் கேட்பது சரியல்ல.
எனினும், நியாயமற்ற வெறுப்புக்கு சில காரணங்கள் உண்டு. அழகு - ஒழுங்கு - புறத்தூய்மை மனதுக்குப் பிடிக்கும். இது குறைந்தவிடத்து வெறுப்பு சகஜம்.
2,அட இவருக்குள்ளும் இப்படி புன்னகைக்கவைக்கும் நகைச்சுவை உணர்வா ? நற்குணங்களா என்று ஆச்சர்யப்படுத்தியவர்கள் உண்டா ?அது யார் ?
ஊழல் மிகுந்த தலைவர் ஒருவரது புலமை சாதுரியம்.
3,பப்புவுக்கு எப்போ கல்யாணம் :) ?
எந்த பப்புன்னு கேள்வி கேக்க கூடாது ..
எந்த பப்புன்னு கேள்வி கேக்க கூடாது ..
பப்பு சரின்னதும். ஜோடி யார் என்று கேட்கக்கூடாது.
இப்படியும் இருப்பர் என்பதுதான்.
சூடாக பாதாம் குங்குமப்பூ பால். மாலையில் வேதகாலத்து சோமபானத்தை வேறு வேறு பெயர்களில்.
6,அப்பாடா தப்பிச்சோம்னு நினைச்ச சம்பவம் எது ?
ஓரிரு கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று இல்லாத போது.
ஒருமுறை அவர் கேட்ட கேள்வியை நான் கவனிக்கவில்லை. வரிசையாக எல்லோரையும் கேட்டுக்கொண்டே வந்தார். என்னுடைய முறை வந்ததும், 'நீ உட்காரு' அடுத்த ஆள், அடுத்த ஆள் என்று கேட்டுக்கொண்டு சென்றார். யாரும் சொல்லவில்லை என்றால் இறுதியில் என்னிடம் கேட்பார். நான் பதில் சொன்னதும் மற்றவர்களுக்குத் திட்டு கிடைக்கும். என்னுடைய பின் பெஞ்சுல உட்கார்ந்திருக்கும் தியாகராஜன், என் முதுகில் விரலால் குத்தி என்ன பதில் என்று கேட்டான். In the same boat என்றேன். அவன் அதை பதில் என்று நினைத்துக் கொண்டு சொல்லப்போக, கிளாஸ் முழுவதும் பயங்கர சிரிப்பு. ஆசிரியரும் சிரித்துவிட்டு, எல்லோரையும் உட்காரச் சொல்லி, அந்தப்பகுதி பாடத்தை மீண்டும் எல்லோருக்கும் விளக்கினார். அப்பாடி தப்பித்தேன்!
7,அன்புமணி /லவ்பெல் , பனிவீடு குமார் /ஐஸ்ஹவுஸ் குமார் ,இப்படி யாருக்காவது அடைமொழி வச்சிருக்கீங்களா ?
யாராவது உங்களுக்கு அப்படி அடைமொழி வைச்சிருக்காங்களா ?
எனக்கு "தீனிப்பண்டாரம்" என்ற பெயர் இருந்ததுண்டு.
நான் பலருக்கும் சமத்காரமாக புனைபெயர் வைத்ததுண்டு.
8,சிம்டங்காரனுக்கு மிக அருமையாக விளக்கம் அளித்ததால் இன்னும் எனக்கு புரியாத வார்த்தைகளுக்கு கோனார் நோட்ஸ் மீனிங் /விளக்கவுரை வேண்டுகிறேன் :) ??
லொள்ளு ??
அல்லு ?
அசால்ட்டு ?
கேப்மாரி ?
சோப்லாங்கி ?
தற்சமயம் நினைவுக்கு வந்தவை இவை ..டவுட்ஸ் தொடரும் :)
6 க்கான விடைக்கு நிரூபணம்.
96 என்றால் என்ன ? 1996 பார்த்தாயிற்று. அடுத்த 96 க்கு 16 ௵.
பார்க்கலை.
பார்க்கலை.
10, அரை டிக்கட் வாண்டுகளிடம் மாட்டிக்கொண்டு அவர்கள் கேள்விகளுக்கு திணறியதுண்டா ?
அப்படி உங்களை அசர அலற வைத்த வாண்டின் கேள்வி என்ன ?
அது A கேள்வி.
11,நம்மை சுற்றி எப்போதும் இவர்கள் இருந்தால் நல்லா இருக்கும்னு நினைத்ததுண்டா ? அப்படி நினைக்க வைத்தவர்கள் யார் ???
அதை வெளியிட்டால் அவர்களுக்கு எரிச்சல் வரும்.
12, உங்களுக்கு மிகவும் பிடித்த quote என்ன ? அதற்கு காரணம் ?
"You don't *believe* the sun rises in the east. Do you?" from J Krishnamurti. காரணம் வெளிப்படை.
13, பயத்துக்கும் பலவீனத்துக்கும் தீனி போட்டு வளர்ப்பவர் அல்லது நம்பிக்கைக்கும் கனவுகளையும் வளர்ப்பவர் இவற்றில் நீங்கள் யார் ?
அனைவரையும் போல நானும் இரண்டின் கலவை.
14, மனசுக்கு நிம்மதியும் அமைதியும் தந்தது /தருவது எது ?
புத்தகம் - இசை - சத்சங்கம் - நடை.
15, அட இது சூப்பர் ஐடியானு நீங்களே உங்கள் கண்டுபிடிப்பை பற்றி வியந்திருக்கிறீர்களா ?
அந்த ஐடியா எது ?
அது உங்களுக்கு சூப்பராகத் தோன்றாது.
16, அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன ?
கண்டுபிடித்த அம்மணி நினைவாக ?
இது தெலுங்கு தேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். தெலுங்கில், அம்மனி (அம்மநி ?) என்றால் விற்காத என்று அர்த்தம். பூரணம் எல்லாம் முடிந்துபோனபின் மீதி உள்ள மாவு, விற்கமுடியாத அல்லது விலைபோகாத மாவு. அதை வைத்துத் தயாரிக்கும் கொழுக்கட்டை, அம்மனி கொழுக்கட்டை என்று அழைக்கப்படுகிறது!
வாட்ஸ் அப் கேள்விகள்:
பானுமதி வெங்கடேஸ்வரன் :
இது தெலுங்கு தேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். தெலுங்கில், அம்மனி (அம்மநி ?) என்றால் விற்காத என்று அர்த்தம். பூரணம் எல்லாம் முடிந்துபோனபின் மீதி உள்ள மாவு, விற்கமுடியாத அல்லது விலைபோகாத மாவு. அதை வைத்துத் தயாரிக்கும் கொழுக்கட்டை, அம்மனி கொழுக்கட்டை என்று அழைக்கப்படுகிறது!
வாட்ஸ் அப் கேள்விகள்:
பானுமதி வெங்கடேஸ்வரன் :
நவராத்திரியில் நீங்கள் அதிகம் ரசித்தது/ரசிப்பது
1. கொலு
2. சுண்டல்
3. அழகாக அலங்கரித்துக் கொண்டு வரும் பெண்கள்.
நவராத்திரி என்றால் எல்லாமும் தான். ராதா கிருஷ்ணா, பரமசிவன் பார்வதி என்று விதம் விதமாக வேஷம் அணிந்து கொண்டு கொலுவுக்கு அழைக்க செல்லும் சிறுவர் சிறுமிகள், எளிமையாகவோ அல்லது மிகவும் செலவு செய்தோ அழகான பொம்மைகளை ரசனையாக அடுக்கி வைத்து கொலு அமைத்திருக்கும் இல்லத்தரசிகள்.
சுவையான சில சமயம் மிக எளிய பிரசாதம்.
ஒருமுறை கோதுமையை வறுத்து மாவாக்கி அதில் நெய் சர்க்கரை சேர்த்து சிறு சிறு பொட்டலங்களாகக் கட்டி ஒரு வீட்டில் கொடுத்தார்கள். ஆஹா அந்த சுவையை இன்று வரை மறக்கவில்லை.
பத்து வயதுவரை 2.
முப்பது வயதுவரை 3 & 2
அப்புறம் 1.
லுங்கி, பூப்போட்ட சட்டை அணிந்து கச்சேரி செய்ததன் மூலம் எதை நிறுவ முயல்கிறார் டி.எம். கிருஷ்ணா?
The singer, not the song என்ற ஒரு ஆங்கிலப் படத்தின் பெயர் நினைவுக்கு வருகிறது.
எது பிரதானம் ? பாட்டா, பாடகரா ?
அரியக்குடி மூக்குப் பொடி .. சிலரது "தள்ளாட்டம்" , MD ராமநாதன் சஞ்சய் சுப்பிரமணியம் முக பாவங்கள், எம் எஸ் பட்டுப் புடவை, சுதா ரகுநாதன் மோதிரங்கள் காதணி, மீரா சிவராமகிருஷ்ணன் ஜிமிக்கி இவையெல்லாம் அவர்களின் இசைபோலவே பிரபலம்.
ஆடை அணி முக்கியமில்லை இசை அதைத் தாண்டி இருக்கிறது என்று கிருஷ்ணா சொல்ல வருகிறாரோ ?
என்றாலும் இசைக்கு இணையாக சூழலும் நம்மை ஈர்க்கும் என்பது (என் வரை) உண்மைதான்.
TMK mannerisms பற்றி அப்பாவைத்தான் கேட்கவேண்டும் (அப்பா = APA = American Psychiatric Association). எனக்கு ASS (Attention seeking syndrome) என்று தோன்றுகிறது.
இப்போதெல்லாம் ஏன் கொலுவிற்கு வருபவர்களை யாரும் பாடச் சொல்வதில்லை?
உங்களை பாடச் சொல்ல வில்லை என்றால் யாரும் யாரையும் பாடச் சொல்வதில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா என்ன ? எங்கள் வீட்டுக்கு இப்போதும் யார் கொலுவுக்கு வந்தாலும் ஒரு பாட்டுப் பாடு என்று சொல்ல நாங்கள் தவறுவதில்லை.
"என்னைப் பாடச் சொல்லாதே, நான் கண்டபடி பாடிப்புடுவேன் ..." என்று தகரக் குரலில் பாடிவிடுவார்களோ என்ற பயமாக இருக்குமோ?
=============================================
இந்த வாரக் கேள்வி :
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
3 தோலா = 1 பலம்.
8 பலம் = 1 சேர்
5 சேர் = 1 வீசை.
1 வீசை = 1400 கிராம்.
என்றால், ஒரு ரூபாயின் எடை எவ்வளவு கிராம்? துல்லியமான எடையைச் சொல்லவேண்டும்.
===========================
வாழ்க நலம்..
பதிலளிநீக்குஅன்பின் Kgg அவர்களுக்கும், அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குகாலை வணக்கம் !
நீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குகாலை வணக்கம் 🙏.
பதிலளிநீக்கு1 Rs. =10 gram. எனக்குத் தெரிஞ்சு என் கல்யாணம் வரை வெள்ளியை ஒரு ரூபாய் எடைனு தான் நிறுத்துச் சொல்வாங்க.
பதிலளிநீக்குநாளைக்கும், நாளன்னிக்கும் வரமுடியுமா தெரியலை. பதிவுகள் ஷெட்யூல் செய்துடுவேன். ஆகவே கருத்துகளுக்கு பதில் வரலைனு நினைக்க வேண்டாம். இங்கே எல்லோரும் வருவதால் இங்கேயே சொல்லிடறேன். :) இப்போவே எழுந்து போகணும். வேலை இருக்கு. :)))))
பதிலளிநீக்குஅப்போ வியாழன் பகிர்வை எப்போ படிப்பீங்க கீதா அக்கா?!!!
நீக்கு//அப்போ வியாழன் பகிர்வை எப்போ படிப்பீங்க கீதா அக்கா?!!!//
நீக்குரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான கொஸ்ஸன்ன்ன்ன் ஹா ஹா ஹா:))
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்கு11.6666667
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅனைத்து கேள்வியும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//கடவுளே! என்னால் மாற்ற முடிகின்றவைகளை மாற்றுகின்ற மனோதைரியத்தையும், மாற்ற இயலாதவைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், எனக்கு அருள். எனக்குப் பிடித்த கோட். //
நன்றாக இருக்கிறது பிரார்த்தனை.
அம்மிணி கொழுக்கட்டை விளக்கம் அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குகே.ப. ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குஒரு தோலா 11.6666667 கிராம்.
பதிலளிநீக்குடி எம் கிருஷ்ணா "பிறர் கவனம் ஈர்க்கும் நோயுற்றவர்". அந்த அந்த இடங்களுக்கு என்று உடை உண்டு. கடவுளை கோவிலில் தரிசிக்கப் போகிறேன் என்று பர்முடாஸ் பனியனில் போவது பிறர் கவனத்தைக் கவரத்தானே தவிர பக்தி அல்ல. இவரைப் பார்த்து கொலுவுக்கு நீச்சலுடையில் வர ஆரம்பிக்காமல் இருந்தால் சரிதான். திறமையைவிட நன் நடத்தையே ஒருவனுக்குப் புகழ் தரும். நல்ல பாடகியை வீட்டில் முடக்கிவிட்டு சருகுகள் ஊர்வலம் வருகின்றன.
அம்மிணிக் கொழுக்கட்டை விளக்கம் அருமை
பதிலளிநீக்குஎன்ன கருத்து சொன்னாலும் ஒருபக்கமா பேசுற மாதிரிதான் தோணும்.
பதிலளிநீக்குவேணும்ன்னா கமல்மாதிரி புரியாத மாதிரிக்கு பதில் சொல்லலாம்.
ஒரு ரூபாயின் எடை 11.666 கிராம்.
பதிலளிநீக்குவழி விடுங்கோ வழி விடுங்கோ அதிரா வந்துகொண்டிருக்கிறா:) பராக் பராக் பராக்:))..
பதிலளிநீக்கு//அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன?/
இதுக்கு உங்கள் யாருக்குமே ஒழுங்கான பதில் தெரியல்ல:) இதுக்குத்தான் அதிரா தேவை என்பது..:)
இது அம்மிணி அல்ல:)).. “அம்மிணிக்கு” என வந்திருக்கோணும் அது க்கு மிஸ் ஆகிடுச்சூ பேச்சு வழகில:). அதாவது வீட்டுக்கார அம்மிணிக்கு.. வீட்டுக்கார “அம்மிணன்”.. [ஹையோ எதிர்ப்பால் கரீட்டுத்தானே?:)].. அதாவது கணவர் அவிச்சுக் கொடுக்கும் கொழுக்கட்டை ஆக்கும்:)) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா இப்பவாவது பரிசைத்தாங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
//
பதிலளிநீக்குசென்ற வாரக் கேள்விக்கு எல்லா பிரிவுகளிலும் பதில் கூறிய அதிராவுக்கு 'சகலகலா செஃப் ஞானி மியாவ் அதிரா' என்ற பட்டம் கொடுக்கப்படுகிறது.//
ஹையோ இது என்ன புது வம்பாக்கிடக்கூ:)) ஹா ஹா ஹா
https://media.giphy.com/media/xFOc3rYIGE3aE/giphy.gif
// பரிசு அறிவிக்கப்படாத கேள்விகளுக்கு இப்படி விழுந்து விழுந்து பதில் சொல்கிறாரே!
பதிலளிநீக்கு///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
“வர வர என் பொழைப்பு நாறின பொழைப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆப் போச்சேஏஏஏஏஏஏஏஏஏஏடியம்மா:))”
ஹையோ இப்ப பார்த்து பிபிசில சிட்டுவேசன் செண்டென்ஸ் போடுறாங்களாம்:).. கருத்தம்மா படத்தில சரண்யா பொன்வண்ணனின் வசனம்:)).. பாட்டு முடிஞ்சு இப்போ அதிராவுக்கு வசனம் போட ஆரம்பிச்சிட்டாங்க ரேடியோவில:)) தாங்க முடியல்ல வைரவா ஹா ஹா ஹா:)
அஞ்சுட 3 வது கிளவில சே சே கேய்வில:) கடசிவரைக்கும் பப்பு ஆரென ஆருமே சொல்லவே இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா பதிலை ரசிச்சேன்ன்ன்:)
பதிலளிநீக்குபப்பு யாருன்னு எங்க எல்லாருக்குமே தெரியுமே தெரியுமே :) உங்களுக்கு மட்டும்தான் தெரியாதுஹாஆஹாஆ
நீக்குசத்தியமா தெரியாது, இது சும்ம ஒரு ஜோக் என நினைச்சேன் பின்பு இப்போதான் தீவிர ஆராட்சியில் இறங்கி கண்டுபிடிச்சேன்( எனக்குத்தான் ஆராட்சி பண்ணுவது பிடிக்காதே:)))
நீக்கு//5,அந்த காலத்து ராஜா ராணிங்க காலை காப்பிக்குப்பதில் என்ன குடிச்சிருப்பாங்க ?
பதிலளிநீக்குசூடாக பாதாம் குங்குமப்பூ பால். மாலையில் வேதகாலத்து சோமபானத்தை வேறு வேறு பெயர்களில். //
எக்ஸாம் பேப்பரில ஆன்சர் பண்றமாதிரி ரொம்ப சீரியசா பதில் சொல்றீங்க ஹா ஹா ஹா:).
இந்தக் கேள்விக்கு பதில் தவறு. பால் குடிப்பது போன்ற சோம்பேறித்தனங்கள் 1940+ல்தான் வந்திருக்கக்கூடும். எல்லோரும் நீராகாரம் மட்டுமே சாப்பிட்டிருப்பார்கள்.
நீக்குஅரசனுக்கோ அல்லது வீர்ர்களுக்கோ, காலை உடற்பயிற்சி. அதற்கு முன்பு எதையும் கொடுத்திருக்க மாட்டார்கள். குங்கும்ப்பூ பால்லாம் இரவில் கொடுத்திருக்கலாம். அரசன், இளவரசர்கள் நேராக மதிய உணவுதான் சாப்பிடுவர் எனவும், இரவு சீக்கிர உணவு என்றும் மதியம்தான் ஹெவி மீல்ஸ் எனவும் படித்திருக்கிறேன்.
விட்டால் ஹார்லிக்ஸ், போர்ன்விட்டாலாம் சொல்லிடுவாங்க போலிருக்கு
அந்தக்காலத்தில குங்குமப்பூவெல்லாம் கண்டு பிடிச்சிட்டினமோ?:) ஹையோ ஹையோ..
நீக்குகிரேக்கத்தில் இருந்து பட்டு வந்த மாதிரி இதுவும் வந்திருக்கும் .3,500 இயர்ஸுக்கு முன்னாடியே குங்குமப்பூ வந்திருச்
நீக்கு// பால் குடிப்பது போன்ற சோம்பேறித்தனங்கள் 1940+ல்தான் வந்திருக்கக்கூடும். எல்லோரும் நீராகாரம் மட்டுமே சாப்பிட்டிருப்பார்கள்.// ஆண்டாள் திருப்பாவையில், பாவை நோன்பு நோற்கும் பெண்டிர், "நெய்யுண்ணோம், பாலுண்ணோம் " என்று உள்ளதே. ஆண்டாள் காலம் ஏழாம் நூற்றாண்டு.
நீக்கு//
பதிலளிநீக்குநவராத்திரியில் நீங்கள் அதிகம் ரசித்தது/ரசிப்பது
1. கொலு
2. சுண்டல்
3. அழகாக அலங்கரித்துக் கொண்டு வரும் பெண்கள். //
பத்து வயதுவரை 2.
முப்பது வயதுவரை 3 & 2
அப்புறம் 1. ///இந்தப் பதில் ஸ்ரீராமுக்குப் பொருந்தாதே:) ஏனெனில் அவர் இப்பவும் சுண்டல் தேடித்தானே கோயிலுக்குப் போகிறார்:) அப்போ அவருக்கு வயசு பத்தா?:) ஹா ஹா ஹா
//இந்த வாரக் கேள்வி :
பதிலளிநீக்கு.... ஒரு ரூபாயின் எடை எவ்வளவு கிராம்? துல்லியமான எடையைச் சொல்லவேண்டும். ///
ம்ஹூம்ம்ம்:)) பரிசு அறிவிக்கப்படாத கிளவிகளுக்கெல்லாம்.. [சே..சே ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))] கேள்விகளுக்கெல்லாம் விழுந்து விழுந்து:) அதிரா பதில் ஜொள்ள மாட்டாவாக்கும்:)) பூஸோ கொக்கோ?:)) என்னா நினைச்சுக் கொண்டிருக்கினம் எல்லோரும்:)) மீ ரொம்ப ஷார்ப்பாக்கும் ஹா ஹா ஹா ஹையோ ஓடியே தப்பிடுவோம்ம் இப்போ நிலைமை கவலைக்கிடம்:).
இனி என் கேள்விகள் ஆரம்பமாகப்போகுது:)) ஓடாதீங்கோ பிளீஸ்ஸ் நோட் பண்ணிக்கோங்க:)
பதிலளிநீக்கு.. கிளவி நெம்பர் வன்:
1. கடவுள் ஒருநாள் உலகைக்காண[அந்த மன்சனுக்கு வேற வேலை இல்லைப்போல:))] தனியே வந்தாராம்.. கண்ணில் கண்ட “எங்கள்புளொக்” ஆசிரியர்களைப்பார்த்து நலமா என்றாராம்:).. இதுக்கு உங்கள் பதில்????
கொஸ்ஸன் நெம்பர் ரூஊஊ
பதிலளிநீக்கு2. ஸ்ரீராமும் நெல்லைத்தமிழனும் ஏன் படம் போட்டுக் காட்டீனம் இல்லை?:))
ஹா ஹா ஹா:)).. மருமக்களுக்கு[ஒரு ஃபுளோல வந்திட்டுது முறைக்காதீங்க:)] ஜாதகமா பதில் சொல்லப்படுவதற்கு இங்கு தடா போடப்பட்டிருக்கு:)).[ஜூப்பர் மாட்டி:) அதிரா இப்போதான் வாழ்க்கையில உருப்படியா ஒரு கிளாவி கேட்டிருக்கிறா:) ஹா ஹா ஹா]
ஸ்ரீராம் ஏன் தன் படம் போட்டுக்கறதில்லைனு எனக்குத் தெரியும். முதலில் அவருடைய படத்தைப் போட நினைத்தார், அப்புறம் இப்போ உள்ளதைவிட 6 மாதம் முன்னால் எடுத்த படம் இன்னும் இளமையாக இருக்குமேன்னு அதை எடுத்தார். அப்புறம் இன்னும் ஆறு மாதம் முன்னால் உள்ள படம் என்று ஒவ்வொரு படமாக செலெக்ட் செய்வது, பிறகு இதற்கு முந்தைய படம் என்று செலக்ட் செய்ய முயல்வது என்று செய்து, கடைசியில் குழந்தையில் எடுத்த போட்டோவை இங்கு வெளியிடுவதற்காக கேஜிஜியிடம் கொடுத்தாராம், கேஜிஜி அவர்கள் அதை ரிஜெக்ட் செய்துட்டார். அவ்வளவுதான் விஷயம்..
நீக்கு
நீக்குபிக்கோஸ் படம் போட்டுக்காட்ட அவங்ககிட்ட பயாஸ்கொப் இல்லை :))))))))
நில்லுங்கோ எல்லோரும்.. நாங்க விரைவில் சென்னை வரபோறோம்ம் ஹா ஹா ஹா:)).. செல்வி:) எடுக்க:).
நீக்கு//ஸ்ரீராம் ஏன் தன் படம் போட்டுக்கறதில்லைனு எனக்குத் தெரியும். முதலில் அவருடைய படத்தைப் போட நினைத்தார், அப்புறம் இப்போ உள்ளதைவிட 6 மாதம் முன்னால் எடுத்த படம் இன்னும் இளமையாக இருக்குமேன்னு அதை எடுத்தார்.//
நீக்குஹலோ நெல்லை.. உங்களை பற்றியும்தான் கேட்டிருக்காங்க அதிரா...!!!!!
ஹா ஹா ஹா “ யானையைப் பார்த்து, நீ கறுப்பு எண்டதாம் கரிச்சட்டி”... அந்தக் கதையாவெல்லோ இருக்கு இக் கதை ஹா ஹா ஹா.
நீக்குஎல்லா பதில்களும் அருமை நன்றி :)
பதிலளிநீக்கு1,பிரவுன் கரும் பச்சை அப்புறம் கருப்பு நிறத்தில் பதில் அளித்தது யார் யார் ? (tmk மேனரிசம் பற்றிய பதில் சூப்பர் )
2,அப்புறம் என்ற வார்த்தை எதிலிருந்து மருவி வந்திருக்கும் ?
பிறகு என்பதுதானே சரியான சொற்பதம் ?
3,நவராத்திரி கொலுவில் பெண்களுக்கு மட்டும் ரவிக்கைத்துண்டு மற்றும் சில பொருட்கள் கொடுக்கிறார்கள் ஆண்களுக்கு என்ன தருவாங்க ? உங்களுக்கு என்ன கிடைத்தது ?
4,சிண்ட்ரெல்லா கதை நினைவிருக்கா அதில் சிண்ட்ரெல்லாவின் ஷூ கரெக்ட் சைஸா இருந்தா எப்படி ஓடும்போது கழண்டு விழும் ?
சாமி சத்தியமா இந்த டவுட் நானா கேக்கலை இவ்ளோ அறிவும் எனக்கில்லை ஒரு அரைடிக்கட் கேட்ட கேள்வி இது ..உங்கள் பதில் என்ன ?
5,உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்/நடிகர்கள் யார் ? 5 பேரை வரிசைப்படுத்தனும் காரணத்துடன் ?
வெர்றி இம்பார்ட்டண்ட் நடிகைகள் இல்லை ஒன்லி நடிகர் கர் கர்ர்ர் கள் :)
அப்புறம் - அதற்குப் பிறகு - மருவி அதுக்குப்பிறகு - அப்புறம்
நீக்குநவராத்திரி - இங்கு ஆண்களுக்கு என்ன வேலை? சும்மா மனைவியை வண்டியில் கொண்டுவிடுவதால், போனப்போகுதுன்னு உள்ள அனுமதிக்கறாங்க. ஆண்களும் டிரைவர் வேலைக்காகவா மெனக்கெட்டு கூட்டிட்டுப் போறாங்க. இதுக்கு மேல சொன்னா வம்பு.
ஓஹோ அப்படியா ஆனாலும் ஒரு பேனா லிப் balm,கர்சீப் இப்படி ஏதாச்சும் கொடுக்கலாம் ரெங்கமணிகளுக்கு :)
நீக்கு/ஆண்களும் டிரைவர் வேலைக்காகவா மெனக்கெட்டு கூட்டிட்டுப் போறாங்க. //
நீக்குஆஹா ஆஹா !! இந்த //வேலைக்காகவா // இப்போதான் கவனிச்சேன் :))))
என்னைப் பொறுத்து அப்புறம் பிறகு என்பதெல்லாம் சரியான தமிழ் அல்ல, அது பேச்டு வழக்கு, பின்பு என்பதுதான் சரியான தமிழ்.
நீக்குசுவாராஸ்யமான கேள்வி பதில்கள் பாராட்டுக்குரியது
பதிலளிநீக்கு/ ஒருமுறை கோதுமையை வறுத்து மாவாக்கி அதில் நெய் சர்க்கரை சேர்த்து சிறு சிறு பொட்டலங்களாகக் கட்டி ஒரு வீட்டில் கொடுத்தார்கள். ஆஹா அந்த சுவையை இன்று வரை மறக்கவில்லை.//
பதிலளிநீக்குஅரிசி ,பொட்டுக்கடலை இவ்விரண்டை வறுத்து சர்க்கரை சேர்த்து பவுடராக்கி தவாவில் நெய்யோடு ஒரு பிரட்டி கொடுப்பாங்க எங்க வீட்டில்சும்மா சாப்பிட மாலை வேளைகளில் அதுவும் நல்லா இருக்கும் (10 வயசில் சாப்பிட்டது )இதை என் பொண்ணுக்கு கொடுக்க ட்ரை பண்ணேன் ஆனா அவளுக்கு பிடிக்கலை ஆனால் வீட்டின் பெரிய குழந்தை ஆவலுடன் அள்ளி சாப்பிட்டது
கொஸ்ஸன் நெம்பர் த்றீ:))
பதிலளிநீக்கு3. மந்தையிலே இருந்து இரண்டு ஆடுகள்.. எங்கோ திசை மாறிச் சென்று விட்டன:) இரண்டும் சந்திச்சபோது.. பேச முடிய வில்ல்ல்ல்ல்லையேஏஏஏஏஏ.. அது ஏன்?:)..
http://www.whisperingtalesgoats.com/photos/Random%20Herd%20Photos/Marg_grass_comp_crop.JPG
நீக்குஅது இரண்டு ஆடுகளின் வாயில் முழுக்க புல்லு :) அதான் பேசமுடியல
ஹா... ஹா... ஹா...
நீக்குஇந்த ஆட்டை எங்கயோ பார்த்திருக்கிறேனே:)...
நீக்கு/96 என்றால் என்ன ?//
பதிலளிநீக்குரீசண்டா விஜய் சேதுபதி அப்புறம் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் ..ரத்தம் வன்முறையில்லாம நல்லா இருந்தது பார்க்க
இதோ இந்த குர்தா கூட பேமஸாகி தீபாவளி சேல்ஸில் டாப்பில் இருக்காம் :)
ஹிஹி எனக்கு பிடிச்ச யெல்லோ கலர் .ஆன்லைனில் நானும் தேடிட்டுஇருக்கேன்
http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/images/kaathale-kaathale-song-from-96-photos-pictures-stills-1.png
கடைசிலே ஒரு ரூபாயின் எடை என்னனு யாருமே சொல்லலையே?
பதிலளிநீக்கு