ஏறக்குறைய சொர்க்கம்
"என்னது மணி அஞ்சே முக்காலா? என்ன இப்போ இந்த கடிகாரம் நின்று விட்டதா? இப்பதானே ஹால் கடிகாரத்துக்கு பேட்டரி மாத்தினேன்.. என்ன இது மாற்றி மாற்றி..."
மீசையை சரிசெய்ய கத்தரிக்கோல் தேடிக்கொண்டிருந்த ரவி முணுமுணுத்துக்கொண்டே பேட்டரியைத் தேடத் தொடங்கினான்.
Thanks Google
சமையலறையில் இடுக்கியைத் தேடிக்கொண்டிருந்த சுபா இவன் முணுமுணுப்பு கேட்டு வெளியே வந்தாள்.
"நாலு பேட்டரி வாங்கி வந்தேன். ஒன்று போக இன்னும் மூன்று அங்கே இருக்கணும்...""
"அதைத்தான் தேடறேன்..."
"நீங்க கத்தரிக்கோல் இல்ல தேடிக்கிட்டிருந்தீங்க..."
"அதையும்தான் தேடறேன்.."
"ஜூனியர் விகடனையா தேடறீங்க? நானும் அதைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்..." அம்மா உள்ளே இருந்து பரபரப்புடன் வந்தாள்.
"நீ வேறம்மா...."
பேட்டரி தேடவும், கத்தரிக்கோல் கிடைக்க, மீசையை ட்ரிம் செய்யக் கிளம்பினான் ரவி.
இடுக்கி கிடைக்காததால், அடுப்பை அணைத்துவிட்டு பொங்கிய பாலை துணி வைத்து இறக்கினாள் சுபா. ஜூவியைத் தேட உள்ளே சென்றாள் அம்மா.
"யம்மா... பாத்திரம் தேய்க்கற நாரு எங்கம்மா காணோம்.. இங்கதான இருந்தது?" பாத்திரம் தேய்க்க வந்திருந்த அலமேலு உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள்.
"அங்கதான் இருக்கும் தேடிப் பாரு அலமேலு..."
"யம்மா... பாத்திரம் தேய்க்கற நாரு எங்கம்மா காணோம்.. இங்கதான இருந்தது?" பாத்திரம் தேய்க்க வந்திருந்த அலமேலு உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள்.
"அங்கதான் இருக்கும் தேடிப் பாரு அலமேலு..."
கவனமாக மீசையை சீப்பால் வருடி அளவெடுத்து நறுக்... மேலே வந்து இடித்த மகனைப் பார்த்து கடுப்படித்தான் ரவி... "ஏண்டா... பார்த்து வரமாட்டியா?"
"அப்பா... என் ஒரு ஷூவைக் காணோம் பார்த்தியா...? ஒன்றுதான் இருக்கு.. இன்னொன்று காணோம்.."
"இன்னொண்ணுதாண்டா அது.." அவனிடமிருந்து சற்று விலகி நின்று மீசையில் கவனம் செலுத்தினான் ரவி.
கண்ணாடிக்குப் பின்னாலிருந்து ஒரு ஜோடி மீசை அசைய, ஒரு கரப்பு சுவர் இடுக்கிலிருந்து வெளியில் வந்து எட்டிப்பார்த்து விட்டு உள்ளே சென்றது.
கண்ணாடிக்குப் பின்னாலிருந்து ஒரு ஜோடி மீசை அசைய, ஒரு கரப்பு சுவர் இடுக்கிலிருந்து வெளியில் வந்து எட்டிப்பார்த்து விட்டு உள்ளே சென்றது.
இரவு திடீரென்று விழித்துக் கொண்ட ரவி எழுந்து விளக்கைப் போட்டான். மணி ஐந்தே முக்கால் ஆகியிருக்க, பரபரப்புடன் எழுந்தான். "ஐயோ... நேரமாயிடுச்சு..."
Thanks Google
படுக்கையை ஒதுக்கி, கைலியை இறுக்கிக்கொண்டு எழுந்து வெளியில் செல்ல முயன்றவனை சுபாவின் குரல் நிறுத்தியது.
"எங்கே போறீங்க?"
"மணி அஞ்சே முக்கால்... இப்போ எழுந்தாதான் ஆறரை மணி பஸ்ஸைப் பிடிக்க முடியும்..."
செல்லை எடுத்துப் பார்த்த சுபா.. "அட, படுங்க.. மணி 1.15 தான் ஆவுது.. அது ஓடாத கடிகாரம்..."
"அட..." மகிழ்ந்து போனான் ரவி. "அப்போ இன்னும் நாலு மணிநேரம் தூங்கலாம்..." சொர்க்கம் சாங்க்ஷன் ஆன ரிஷி மாதிரி படுத்துத் தூங்கிப் போனான் ரவி.
==========================================================================================================
அப்பால நான் என்ன செய்ய...! எங்கே போனார்கள் என்று நான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்!
=======================================================================================================
அப்பால நான் என்ன செய்ய...! எங்கே போனார்கள் என்று நான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்!
=======================================================================================================
சுப்ரமணிய ராஜு சிறுகதைகள் தொகுப்பை முடித்து விட்டேன். எனவே சுப்ரமணிய ராஜு பற்றி படித்ததிலிருந்து சில பகிர்வுகள்.
சென்னையின் சாயலே இல்லாத நல்ல மனுஷன் என்று சுப்ரமணிய ராஜு பற்றி கல்யாண்ஜி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாராம்.
சென்னை அவ்வளவு கெட்ட ஊரா என்ன?
எழுத்தாளர் பிரபஞ்சன் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு விலை உயர்ந்த பேனாவை சுப்ரமணிய ராஜுவுக்கு பரிசாக அளித்தாராம். சுப்ரமணிய ராஜு நெகிழ்ந்தே போனாராம். இதில் என்ன இருக்கிறது, தனக்கு கூட பாலகுமாரன் ஒரு பேனா வாங்கித் தந்ததாக இன்னொரு எழுத்தாளர் நண்பர் சொன்னபோது, "புதிதாக வாங்கித் தரலாம், அவர் எழுதிக் கொண்டிருப்பதைத் தருவது பெரிய விஷயம்" என்று நெகிழ்ந்து போனாராம்.
============================== ============================== ============================== =====
'இது நிஜம்' என்கிற சுப்ரமணிய ராஜுவின் சிறுகதைத் தொகுதிக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது. (இப்போது நான் வாங்கி இருக்கும் சுப்ரமணிய ராஜு சிறுகதைகள் புத்தகத்தில் இது ஒரு நல்ல கதை)
76 ஆம் வருட வாக்கில் சுஜாதா கணையாழி கற்றதும் பெற்றதும் பகுதியில் தனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் லிஸ்ட்டில் புதுமைப்பித்தனைப் பற்றிக் கூடச் சொல்லாமல் சுப்ரமணிய ராஜு பெயரைச் சேர்ந்திருந்தது அப்போதைய சில பிரபல எழுத்தாளர்களுக்கு வருத்தம் ப்ளஸ் கோபமாம். 'அந்த வகையில் இந்த விருது சுஜாதாவை ஜஸ்டிஃபை செய்த மாதிரி ஆனது' என்றாராம் சுப்ரமணிய ராஜு. நண்பர் சுப்ரமணிய ராஜுவிடம் "யுவர் லாஜிக் இஸ் கியூரியஸ்" என்றபோது ராஜு "லாஜிக்கே கியூரியஸ்தான் மூர்த்தி" என்றாராம்.
============================== ============================== ============================== ====
அதற்கான அனுபவமாக சொல்லப்படும் சம்பவம் : ஆண்டுக்கொருமுறை டிஸம்பரில் மாலைவேளைகளில் ஜேகே கூட்டத்தொடர் ஒன்று சென்னையில் நடக்கும். அதில் ஆர்வத்துடன் கலந்து கொள்வாராம் ராஜு.
"யாருமே சிந்தித்து செயலாற்றுவதில்லை. வாழ்க்கையின் எல்லா நேரங்களுமே பழக்கத்தின் பாதையிலேயே செல்கின்றன..." என்று ஜேகே கூற, உடனே சுப்ரமணிய ராஜு எழுந்து "இந்தக் கூட்டத்துக்கு நான் வந்தது எந்தப் பழக்கத்தின் அடிப்படையிலும் இல்லை. மிகவும் தீர்மானித்து நான் செய்தது நான் இங்கு வந்தது. இதற்கு என்ன ஸார் உங்கள் பதில்?" என்றதற்கு ஜேகே "நீங்கள் கேள்வி கேட்கும் பழக்கத்தில் இருக்கிறீர்கள் ஸார்" என்றாராம்.
கூட்டம் மொத்தமும் சிரித்ததாம்.
"ஜேகே என் கேள்விக்கு பதில் சொன்னாரா மூர்த்தி?" என்று நண்பரிடம் ராஜு கேட்டாராம். லாஜிக்கே கியூரியஸ்தான் என்கிற ராஜுவின் நியதி நண்பருக்கு புரிந்ததாம்.
இப்படிக் கேள்வி கேட்ட அதே ராஜு ஒருமுறை தன் ஆப்த நண்பன் பாலகுமாரன் பெருங்களத்தூரில் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் கேட்ட கேள்வி திருப்தி இல்லாமல், நிகழ்ச்சிக்கு எதிர்பாராமல் வந்து அவரைச் சந்தோஷப் படுத்தியிருந்த ராஜூவையும் நண்பரையும் பார்த்து "அண்ணே.. நீங்கள் கேள்வி கேளுங்க" என்றபோது ராஜு கேள்வி எதுவும் கேட்காமல் சிரித்தபடி அமர்ந்திருந்தாராம்.
கணையாழியில் "விஸ்வாமித்ரன்" என்கிற பெயரில் சுப்ரமணிய ராஜு சில விமர்சனக் கட்டுரைகள் எழுதுவது உண்டாம். அப்துல் ரகுமானின் ஒரு கவிதைத் தொகுதியை அந்தப் பெயரில் கிழிகிழி என்று கிழித்திருந்தாராம். அதே பிறிதொரு சமயம் கேபியின் 'அவர்கள்' திரைப்படம் பற்றி கொஞ்சம் தாராள மனதோடு விமர்சித்திருந்தாராம். "பாலச்சந்தரிடம் அதிகமாக எதிர்பார்ப்பதில் தப்பில்லையே?" என்பது சுப்ரமணிய ராஜுவின் பதில்.
பாலகுமாரன் பற்றி எப்போதுமே ஒரு பெருமிதம் உண்டு சுப்ரமணிய ராஜுவிடம். வீட்டில் இருப்பவர்கள் பாலகுமாரனின் படைப்புகளை பற்றி குறைவாகப் பேசினால் கூடப் பொறுக்காதாம் ராஜுவுக்கு. "நீங்கள் எல்லாம் பாலகுமாரனை விமர்சனம் பண்ற அளவுக்குப் பெரிய ஆளாயிடல" என்று லேசான கோபம் காண்பிப்பாராம். பாலகுமாரன் அஸோஸியேட் ஆகப் பணிபுரிந்த சிந்துபைரவி படத்துக்கு நண்பர்கள், குடும்பம் புடைசூழ சென்று பார்த்தாராம்.
============================== ============================== =============================
இறுக்கமான நெசவு கொண்ட பட்டுச்சேலை போன்ற (இது பாலகுமாரனின் எழுத்துப் பிரயோகமாம்) ராஜுவின் குறுநாவல் ஒன்றை வெட்டிச் சிதைத்து குறுக்கி "செல்லிக்குப் படிப்பு வரவில்லை" என்ற தலைப்பில் சிறுகதையாக குமுதம் தீபாவளி மலரில் பிரசுரித்திருந்தார்களாம். இதுவும் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. அதைப் பற்றி குறை சொல்லிப் பேச யாரையும் ராஜு அனுமதிக்க மாட்டாராம். எஸ் ஏ பி மேல் அவ்வளவு மதிப்பு அவருக்கு உண்டாம். அதே போல சாவி மேலும் மதிப்பு உண்டாம்.
============================== ============================== =============================
இதை எல்லாம் முன்னுரையாக எழுதி இருப்பவர் தேவகோட்டை வா மூர்த்தி எனும் எழுத்தாளர். யார் அவர் என்று எனக்குத் தெரியவில்லை.
கிழக்கு சொல்கிறது இது சுப்ரமணிய ராஜுவின் முழுமையான கதைத் தொகுப்பு என்று..
எனக்கு உடனே 'எங்கோ ஒரு இரவில்' நினைவு வந்தது. உள்ளே பொருளடக்கத்தில் தேடினேன். காணோம்.
அதாவது சட்டென நினைவில் எனக்குத் தெரிந்தே ஒரு கதை விடுபட்டிருக்கிறது.
ஒரு சமயம் மாலைமதி என்று நினைவு, அல்லது ஏதோ ஒரு மாத மலரில் இந்தப் பக்கத்திலிருந்து பாலகுமாரன் "ஏதோ ஒரு நதியில்" என்று ஒரு கதை எழுதி இருந்தார். (இதை முகநூலில் பகிர்ந்தபோது பாலகணேஷ் அந்த மாத இதழ் மோனா என்று சொல்லி இருந்தார்)
அப்படியே புத்தகத்தைத் தலைகீழாக பின்பக்கம் திருப்பினால் பின்பக்கம் சுப்ரமணிய ராஜு "எங்கோ ஒரு இரவில்" என்று இந்தப் பக்கமாக ஒரு கதை எழுதி இருந்தார்.
அதைக் காணோம் இந்த லிஸ்ட்டில். என் நினைவில் பழுதா?
என்னிடம் உள்ள பைண்டிங் கலெக்ஷனில் நிறைய சுப்ரமணிய ராஜு சிறுகதைகள் இருக்கின்றன. அவற்றை அலசிப் பார்த்தால் இன்னும் எந்தெந்த கதைகளை இவர்கள் விட்டு விட்டார்கள் என்று தெரியும்.
=====================================================================================================
நேற்று நாளை இன்று ...
வாழ்க நலம்..
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...
நீக்குஏறக்குறைய சொர்க்கம்...
பதிலளிநீக்குஅப்படியா!?...
இல்லையா பின்னே?
நீக்குஇனிய காலை வணக்கம். அந்தக் கதையும் கனவா. முடிந்து எழுந்துவிட்டார்களா. அருமையாக இருந்தது. எட்டிப்பார்க்கும் மீசைக் கரப்பான் பூச்சி உள்பட.
பதிலளிநீக்குநிறைய விஷயங்கள் கவிதைகள் எழுதி இருக்கிறீர்கள். மெதுவாகப் படித்துவிட்டு வருகிறேன். சுப்ரமணிய ராஜு வை மிகப் பிடிக்கும். வெகு அன்யோன்யம் அவர் எழுத்தில்.
பாலகுமாரனைவிட அதிகம் பிடிக்கும்.
காலை வணக்கம் வல்லிம்மா... அது கனவில்லைம்மா... புரிகிற மாதிரி நான் எழுதவில்லை என்று நினைக்கிறேன்!
நீக்குசுப்ரமணிய ராஜு பற்றி அவர் புத்தகம் படிக்கப் படிக்க எடுத்துக் கொண்ட குறிப்புகள். அதுதான் கொஞ்சம் நிறையவே வந்து விட்டது.
நீக்கு///புரிகிற மாதிரி நான் எழுதவில்லை என்று நினைக்கிறேன்!//
நீக்குஓ அப்போ ஸ்ரீராம் இது நீங்கள் எழுதும் கதையோ? அப்போ நான் என்பக்கம் காவிப்போய்ப் போட்டிருப்பதும் நீங்கள் எழுதிய கதையோ? அவ்வ்வ்வ்வ்வ்வ் சொல்லவே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நீங்க பலசமயம் குட்டி குட்டியா ஏதாவது கதைப்பகுதி கட் பண்ணிப் போடுவீங்கதானே.. அப்படி எடுத்துப் போட்டிருக்கிறீங்க எனத்தான் நினைச்சேன்.
இனிமேல் நீங்கள் எழுதியதாயின் கீழே பெயர் போடலாமெல்லோ...
பெயர் போடாமலேயே புரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்? யாராவது ஒருவராவது யூகித்திருக்கிறீர்களோ, இவை நான் எழுதும் கதை என்று? கோவிலில் ஐநூறு ப்ளஸ் ஐநூறு விடுவதும் நான் எழுதிய கதைதான்!
நீக்குஆம்... நீங்கள் "காவிப்போய்"ப் போட்டிருப்பதும் நான் எழுதிய கதைதான்! ஹிஹிஹி...
மற்றவர்கள் இந்த தளத்தில் எழுதினால் அவர் பெயர் போடலாம். நானே என் பெயர் போட்டுக்கொள்ள வேண்டாமென்று.. சுப்ரமணியராஜு கதை என்றெல்லாம் இருந்தால் அவர் கதை என்று சொல்லி விடுவேன்!
ஹையோ முருகா.. அதிரா மேல் ஆணையாக இன்று நீங்க வல்லிம்மாவுக்குப் பதில் சொல்லியிருக்காட்டில் எனக்குத் தெரிஞ்சே இருக்காதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இதனால்தான் அக்கதைக்கு எல்லோரும் பம்மிப் பம்மி அடக்கி வாசித்துக் கொண்டு ஒரு அப்பாவி பொயிங்குவதைப் புதினம் பார்க்கிறார்களோ:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. இப்போதான் சொல்றா.. அஞ்சுவுக்கும் தெரிஞ்சிருக்காம் அது நீங்கள் எழுதிய கதை என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..
நீக்குஆராவது என்னைத்தூக்கித் தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))..
//மற்றவர்கள் இந்த தளத்தில் எழுதினால் அவர் பெயர் போடலாம். நானே என் பெயர் போட்டுக்கொள்ள வேண்டாமென்று.//
நீக்குஅது தனிக்கதை எனில் பெயர் இல்லை எனினும் கேட்போம், இது கதம்பத்தில் போட்டிருப்பதால் புரியவில்லை.. யோசிக்கக்கூட இல்லை..
சுப்ரமணிய ராஜுவின் எழுத்துக்கும் பாலகுமாரன் எழுத்துக்கும் வித்தியாசம் உண்டு. சுப்ரமணிய ராஜுவின் எழுத்து முதிர்ந்த எழுத்து! கணையாழி காலத்தில் இருந்தே அவர் கதைகளை விரும்பிப் படிப்பேன். அந்த வகையில் பாலகுமாரன் அலுப்புத் தட்டிவிட்டார் வெகு விரைவில். என்றாலும் வெகுஜன அபிப்ராயத்தில் பாலகுமாரன் முந்திய அளவுக்கு சுப்ரமணிய ராஜு முந்தவில்லை.
பதிலளிநீக்கு//சுப்ரமணிய ராஜுவின் எழுத்து முதிர்ந்த எழுத்து!//
நீக்குஉங்கள் அபிப்ராயத்தில் எனக்கு சற்றே மாறுபாடு உண்டு. அதுவும் இந்தப் புத்தகம் படித்தபின்.
அல்லது பாமரன் எனக்குதான் சாதாரணமாகப் பட்டதோ!
கனவில்லை என்பது எனக்குப் புரிந்தது. அதோடு ஒரு காலத்தில் எப்படி இருந்த ஜூனியர் விகடன் இன்று எப்படி ஆகி விட்டது என்பதும் தோன்றியது!
பதிலளிநீக்குஜூனியர் விகடன் ஒருவார்த்தையில் அந்த அம்மா தேடுவது கீதாக்கா... அதற்கு முக்கியத்துவம் தேவை இல்லை!
நீக்குகடைசியிலே குறட்டை விட்டுத் தூங்குவது அதிராமியாவ் தானே?
பதிலளிநீக்குஎன்னது.. அதிரா மாமியா?...
நீக்குஓ.. குழப்பம்.. குழப்பம்!..
அதிராமியாவ்!..
இருந்தாலும்
நீக்குகுறட்டை... ண்டு சொல்லப்படாது..
அது ஞானானந்த தவம்...
அப்பிடித்தான் ஜொல்லோணும்!..
க்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு அதிராமியாவ் நு தான் தெரியுது. அதிரா எப்போ மாமி ஆனார்? பாட்டி இல்லையோ? :P
நீக்குபாட்டி - மாமி..
நீக்குவித்தியாசம் அதிகமில்லையே!...
துரை சார்... பாட்டிக்கும் மாமிக்கும் வித்தியாசம் தெரிந்துகொள்வது மிகவும் சுலபம். ஒரு 40 வயது மாமி, வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது (குறிப்பா சப்பாத்தி அல்லது அப்பளம் இட்டுக்கொண்டிருக்கும்போது), அவங்களை 'பாட்டீ' என்று கூப்பிடுங்கள். 65 வயது பாட்டியை 'மாமீ' என்று கூப்பிட்டுப்பாருங்கள். உங்களுக்கு என்ன பரிசு கிடைக்கிறது என்று தெரியும்.
நீக்குஆனால் அதற்கு உங்களுக்கு 35 வயசு இருக்கணும். 60 வயசுக்காரர், 45 வயசை பாட்டீ என்று கூப்பிட்டால், அடுப்போடு சேர்ந்து எல்லாம் 60 வயசுக்காரர் தலை மேல் விழும்.
ஹா ஹா ஹா என்ன நடக்குது இங்கின:)).. மீ ஒரு அஞ்சாத... ஞானி ஆக்கும்:)) அதாவது அஞ்ஞானி:)) ஹா ஹா ஹாஆஆஆஆஆஆ
நீக்குமாமி எனச் சொன்னால் கொஞ்சம் வயசானவராக்கிடும் என்பதனாலதான் என் அண்ணாவின் பிள்ளைகள் அத்தை எனக் கூப்பிடுவார்கள் என்னை:)). எப்பூடி?:)
நீக்குஎங்க ஊர்ல மாமியாரை நாங்க அத்தைனு தான் கூப்பிடுவோம் :)
நீக்குஉங்களுக்காவது இவ்ளோ மரியாத என்னை நேத்து முளைச்சா காளான் கூட பேர் சொல்லித்தான் கூப்பிடுது
//என்னை நேத்து முளைச்சா காளான் கூட பேர் சொல்லித்தான் கூப்பிடுது//
நீக்குஇது வெளியில்தானே? உறவிலுமோ?
நீக்கு// கடைசியிலே குறட்டை விட்டுத் தூங்குவது அதிராமியாவ் தானே?//
அதிரா தூங்குகிறாரா.... இங்கிருந்து காவிக்கொண்டுபோய் அவர் தளத்திலிட்டு வெளுத்து வாங்குகிறார்... அவர் சிந்தனைகளை அங்கு பார்க்கலாம். இந்து படுத்து யோசித்துக் கொண்டிருக்கிறார்!!!!
ஹா ஹா ஹா:)
நீக்கு//இது வெளியில்தானே? உறவிலுமோ?// உறவிலும் தான் ஏஞ்சல்&அதிரடி, இது எங்க வீட்டிலேயே இப்போ நடக்குது. என் அண்ணன் மகள் தன்னைவிட 13 வயது பெரிய அண்ணாவைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதோடு "டா" போட்டும் பேசுகிறாள் என நினைக்கிறேன். அவள் அண்ணன் மனைவி இவளை விட எட்டு வயது பெரியவள். அவளையும் பெயர் சொல்லித் தான் அழைக்கிறாள். நாங்கல்லாம் ரொம்பவே ஃபார்வர்ட் என்பதால் பெயர் சொல்லி அழைப்பதால் மரியாதைக் குறைச்சல்னு அர்த்தம் இல்லைனு சொல்லி விட்டாள் என் அண்ணன் மகள். மரியாதை இருக்கு, இல்லை என்பதை விட இத்தகைய உறவு முறைகளின் பெயர்கள் நாளாவட்டத்தில் மறைந்து விடுமோ, மறைந்தே விட்டதோ என்னும் எண்ணம் எனக்கு. ஏற்கெனவே அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. :(
நீக்குதேவகோட்டை வா! மூர்த்தி என்று சொன்ன எழுத்தாளர் திரு.லேனா தமிழ்வாணனாக இருக்ககூடும்...!
பதிலளிநீக்கு"லேனா" தமிழ்வாணனின் இயற்பெயர் லக்ஷ்மணன் எனப் படித்த நினைவு.
நீக்குலேனா இல்லை கில்லர்ஜி... அவர் கூட ஒரு புத்தகம் (மட்டும்) வெளியிட்டிருக்கிறாராம்... கூகிலிட்டுப் பார்த்தாலும் தெரியவில்லை. ஆனால் பாகு, சுரா, இவர் மூவரும் அத்தியந்த நண்பர்கள் என்று தெரிகிறது.
நீக்குசின்ன சின்ன உரையாடல்கள் சுவாரஸ்யம்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன். (ஏறக்குறைய சொர்க்கம் பற்றிதான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்!)
நீக்குகதம்பம் நல்லா இருந்தது. எனக்கும் சில சமயம் எக்ஸாம் இன்றைக்கு இருக்கு, போர்ஷன் படித்து முடிக்கவேண்டும் என்று கனவு வரும். ரொம்ப டென்ஷனா இருந்து முழிப்பு வந்தவுடன், அட இப்போ வேலை பார்க்கிறோமே என்ற நிம்மதியும் வரும். ஹாஹா.
பதிலளிநீக்குஎப்போதும் நான் 1 மணிக்கு முன்னாலேயே அலார்ம் வைத்துக்கொள்வேன். அப்போ இன்னும் கொஞ்சம் நிம்மதியாத் தூங்கலாம்.
///எனக்கும் சில சமயம் எக்ஸாம் இன்றைக்கு இருக்கு, போர்ஷன் படித்து முடிக்கவேண்டும் என்று கனவு வரும். ரொம்ப டென்ஷனா இருந்து முழிப்பு வந்தவுடன், அட இப்போ வேலை பார்க்கிறோமே என்ற நிம்மதியும் வரும். ஹாஹா.///
நீக்குஹா ஹா ஹா சத்தியமா நானும் இப்படிக் கனவு அடிக்கடி காண்பேன்ன்..
கனவு இல்லை நெல்லை..
நீக்குசரி சுருக்கமாகச் சொல்கிறேன்...
விடிந்து விட்டது என்று அரக்கப்பரக்க எழும்போதுதான் தெரிகிறது அது நள்ளிரவு என்று... ஓடாத கடிகாரத்தால் அந்த நிலை என்று.. அப்போது கிடைக்கும் ஒரு சிறு சொர்க்கம் (இன்னும் கொஞ்சம் தூங்கலாமே) பற்றி சற்றே இழுத்து, காலையே ஓடாத கடிகாரம் பார்த்தும் பேட்டரி மாற்றவில்லை என்று நீட்டி முழக்கி எழுதி இருக்கிறேன்.
கோனார் நோட்ஸ் போடுவது சற்றே கொடுமைதான்.. ஆனால் என்ன செய்ய, முதலில் சரியாய் எழுதவில்லை!!!!!
பகல் பொழுதும் பர பர.
பதிலளிநீக்குஇரவு பொழுது எழுந்தால் மீண்டும் தூக்கம் வராது, வந்தால் சொர்க்கம்தான்.
கதை பாத்திரங்கள் ஏன் இப்படி விழுந்து அடித்து ஓடுகிறார்கள்? விட்டலாச்சாரியார் எடுக்கும் சினிமாவில் கதாபாத்திரங்களை திடீர் என்று நாய், நரி, ஆடாக மாற்றிவிடுவார், அது போல் உங்கள் கதை கதாபாத்திரங்க்களை அப்படி சொல்லி பயமுறுத்தி விட்டீர்களோ!
அதுதான் இப்படி ஓடுகிறார்களா?
நன்றி கோமதி அக்கா... கதாபாத்திரங்கள் அப்போது காணாமலேயே போய்விட்டார்கள்!
நீக்குபின்னே இப்படி யாருக்கும் புரியாமல் எழுதினால் அவர்கள்தான் என்ன செய்வார்கள்!
சென்னையின் சாயலே இல்லாத நல்ல மனுஷன் என்று சுப்ரமணிய ராஜு பற்றி கல்யாண்ஜி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாராம்.
பதிலளிநீக்குசென்னை அவ்வளவு கெட்ட ஊரா என்ன? //
அவர் சென்னையின் சாயல் என்றால் அங்கு உள்ள பேச்சு வழக்கை சொல்லி இருக்கலாம்.
நல்ல மனுஷன் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்காரே...!
நீக்குசுப்பிரமணிய ராஜூவைப்பற்றிய செய்திகள் படிக்க சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குநிறைவு கவிதை கனவின் காரணத்தை சொல்லுது.
பதிலளிநீக்குபூனையார் தூங்கும் போது வந்த கனவில் கண்டதை நினைத்து பார்க்குதோ!
மீண்டும் செல்லத்தூக்கமோ?
அல்லது மல்லாக்கப் படுத்து யோசிக்குதோ....!
நீக்குஎதையோ எங்கேயோ யாவரும் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.முடிவே இல்லை.தேடவும் நிறைய இருக்கிறது.லிஸ்ட் போடமுடியாத தேடல்கள். அன்புடன்
பதிலளிநீக்குஅந்த வீட்டில் எப்போதும் எல்லோரும் எதையோ தேடிக்கொண்டே இருப்பார்கள் காமாட்சி அம்மா. தேடித்தேடி ஞானி ஆகப்பார்க்கிறார்கள்! ஹா... ஹா... ஹா...
நீக்குநன்றி காமாட்சி அம்மா.
உந்தப் பூஸாரை முன்பும் இங்கு பார்த்த நினைவா இருக்கே... கனவு காணோனும் என்பதற்காக இப்பூடி அடிச்சுப் போட்டுத்தூங்கினால் ஆராவது ஏறி உளக்கிடப்போகினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா:)..
பதிலளிநீக்குஇல்லை அதிரா... இது சில வருடங்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் பகிர்ந்த படம். பூனை நெட்டிலிருந்து சுட்டது!
நீக்கு///"அட..." மகிழ்ந்து போனான் ரவி. "அப்போ இன்னும் நாலு மணிநேரம் தூங்கலாம்..." சொர்க்கம் சாங்க்ஷன் ஆன ரிஷி மாதிரி படுத்துத் தூங்கிப் போனான் ரவி.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா இது உண்மையிலேயே சொர்க்கம்தான்.. நானும் இதை அனுபவிச்சிருக்கிறேன்:)..
வல்லிம்மாவுக்குச் சொன்ன பதிலை வச்சே 2ம் தரம் வாசிச்சுக் கண்டு பிடித்தேன், ஏனெனில் பாதியில, காலைச் சம்பவத்தோடு விட்டுப்போட்டு, பின்பு நித்திரையில் முழிச்சு நேரம் பார்ப்பதைப்போல இருந்தமையால எல்லாமே கனவெனத்தான் நானும் நினைச்சேன் முதல் தரம் படிச்சபோது..
அழகாக எழுதி இருக்கிறீங்க.. இது ஜத்தியமா ஸ்ரீராமின் சொந்த அனுபவமேதான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் டவுட்டே இல்லை:)) ஹா ஹா ஹா..
காலை என்று நினைத்து நள்ளிரவில் எழுந்து மீண்டும் படுத்த அனுபவம் என்னுதுதான், என்னுதுதான், என்னுதுதான் யுவர் ஹானர் அதிரா...
நீக்குவீட்டில் எப்பவும் எதையும் தேடிக்கொண்டே இருப்பதும் எங்கள் அனுபவம்தான். சும்மா சுவாரஸ்யத்துக்கு இரண்டையும் முடிச்சு போட்டேன்! ஹா.. ஹா.. ஹா...
முதல் களையாழிக்கும் 2ம் கணையாழிக்கும் எழுத்து வித்தியாசம் கவனிச்சீங்களோ..85/ 90 களின் பின் எழுத்து மாற்றம் வந்திருக்கோணும் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇதுபற்றி நீங்கதான் ஏற்கனவே சொன்னீங்களோ ஏனெனில் கேள்விப்பட்ட பெயராகவும் நான் வாசிக்க வேணும் எனும் விருப்பமாகவும் இருக்கும் புத்தகம் இக்கணையாழி.. தமிழ்க்கடைப் பக்கம் போனால் வாங்க வேண்டும்.
அதென்ன மேலே கணையாழி எனப் போட்டு கீழே கடசிப் பக்கம் என இருக்கு..?..
கணையாழி என்பது மாதம்தோறும் வந்து கொண்டிருந்த புத்தகம். இலக்கியப்புத்தகம். அறுபது, எழுபதுகளில் அந்தப் புத்தகத்தின் கடைசிப் பக்கங்களை சுஜாதா எழுதிக் கொண்டிருந்தார். முதல் கொஞ்ச நாட்கள் யாரென்று பெயர் போடாமலேயே... சுஜாதாவையே, அதாவது தன்னையே கூட அவர் கலாய்த்திருப்பார் அதில். முதலில் இருப்பது ஜஸ்ட் சும்மானாச்சுக்கும் கணையாழி என்கிற புத்தகத்துக்கான அறிமுகமாய் நெட்டிலிருந்து எடுத்துக் போட்டது.
நீக்குஇரண்டாவது இருப்பது சுஜாதாவின் அந்தத்தொகுப்பு புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
அறுபதுகளில் "கணையாழி" யின் நிர்வாக ஆசிரியராகச் சித்தப்பா இருந்தார். எழுத்தாளர்களிடமிருந்து வரும் பிரதிகளைத் திருத்தி எடுத்துக் கொண்டு பிரஸ்ஸுக்குக் கொண்டு போவார் சித்தப்பா. அதைக் கையெழுத்துப் பிரதிகளாகவே படித்து எழுத்துப் பிழைகளைச் சரி செய்து தருவேன். பின்னர் ப்ரூஃப் பார்க்கவும் சொல்லிக் கொடுத்தார். புத்தகம் அச்சடித்து வந்ததும் அதில் யார் யாருக்கு அனுப்பணுமோ அந்தப் பட்டியல் படி விலாசம் டைப் செய்து ஸ்டாம்ப் ஒட்டித் தபால் அலுவலகம் மூலம் சேர்க்கும் வேலையும் என்னுடையதாகவே இருந்தது. தி.நகர் தபால் நிலையத்தில் போய்ப் போட்டு விட்டு வருவேன். கணையாழி பிரஸ்ஸிலிருந்து வந்த உடன் படித்த அனுபவங்கள் நிறைய. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்னும் பெயரில் கடைசிப்பக்கம் எழுதுபவர் சுஜாதாதானே எனச் சித்தப்பாவிடம் கேட்டிருக்கேன். உனக்கு எப்படித் தெரிஞ்சது எனச் சித்தப்பா கேட்டார். எழுத்தில் சில வாக்கியங்கள் ஒரே மாதிரி இருப்பதையும் நடையும் ஒரே மாதிரி இருப்பதையும் பார்த்துச் சொன்னேன் என்று சித்தப்பாவிடம் சொன்னேன். இவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்கிறாயா எனச் சித்தப்பா ஆச்சரியப்பட்டார்.
நீக்குகீசா மேடம்.. நீங்க 60கள்ல என்று நினைத்தேன். கணையாழி, புரூஃப், பிரஸ்லிருந்து சுடச் சுட என்றெல்லாம் படிக்கும்போது 80, 90கள்ல இருப்பீங்க போலிருக்கே...
நீக்குநான், நீங்க பிறந்த வருஷத்தைச் சொன்னேன்... ஹாஹாஹா
ஹாஹாஆ இன்னிக்கு இந்த கதைக்கு ஒரு எதிர்பதிவும் போட முடியல்லியே ஹையோ ஹயோ :) மியாவ் மைண்ட் வாய்ஸ் :)
பதிலளிநீக்குஎல்லாரும் எதையாவது ஒன்றை தேடிகிட்டே இருக்கிறார்கள் /இருக்கிறோம் இலக்கில்லாமலேயே .இன்னிக்கு தேடுவது நாளைக்கும் கிடைக்கலாம் இல்லைன்னா இன்னைக்கே கிடைக்கலாம் ஆனா கிடைக்காம போகாது ஆனா தேடாமலே கிடைச்சிடுச்சு பாருங்க சொர்க்கம் ..கரைப்பானின் மீசை ரசித்தேன் அதுவும் ட்ரிம் செய்யும் ஆசையில் எட்டிப்பார்த்ததோ :)
//கரப்பானின்//
நீக்கு///ஹாஹாஆ இன்னிக்கு இந்த கதைக்கு ஒரு எதிர்பதிவும் போட முடியல்லியே ஹையோ ஹயோ :) மியாவ் மைண்ட் வாய்ஸ் :)//
நீக்குஎனக்கு இன்றுவரை தெரியாது அஞ்சு அது த்றீராம் எழுதிய கதை என்று ஹையோ ஹையோ:)).. முன்பு சீதை ராமனை மன்னிச்சபோது நிறையப் பொயிங்கினோம்.. இப்போ பொயிங்கி எழக்கூடியளவுக்கு ஒண்ணும் கிடைக்குதில்ல:) கிடைக்கும்போது நேரம் கை கொடுப்பதில்லை:))..
பார்ப்போம் துரை அண்ணன் ஏதோ எழுதி வச்ச்சிருக்கிறாராம்.. அங்கு போய்ப் பொயிங்க முடியுதோ என:))..
ஆனா ஒன்று, என்னவெனில், துரை அண்ணன் எல்லார் பக்கத்திலயும் மட்டும்தான் நகைசுவையாகக் கதைக்கிறார், ஆனா அவரின் பக்கத்தில மட்டும் சாமியாராகிடுறார்ர்:).. அதனால அங்கு எதுக்கும் பொயிங்கப் பயம்ம்ம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊஊ ஹா ஹா ஹா:)..
//எனக்கு இன்றுவரை தெரியாது அஞ்சு அது த்றீராம் எழுதிய கதை என்று ஹையோ ஹையோ:)).///
நீக்குgarrrrr http://upload.wikimedia.org/wikipedia/en/c/cb/Quacker_The_Duck.JPG
எனக்கொண்ணும் பசிக்கேல்லை இப்போ:) பயப்பிடக்கூடா ஓகேஏஏஏஏ?:))
நீக்குhttp://shared.frenys.com/assets/1023908/6154841.jpg
//கரைப்பானின் மீசை ரசித்தேன்//
நீக்குஎங்கள் வீட்டில் எவ்வளவு கரப்பான்கள் தெரியுமா ஏஞ்சல்? அடிக்கலாம் என்று பார்த்தல் நீங்கள் வருத்தப்படுவீர்களே என்று விட்டு விடுகிறேன்!
//பார்ப்போம் துரை அண்ணன் ஏதோ எழுதி வச்ச்சிருக்கிறாராம்.. அங்கு போய்ப் பொயிங்க முடியுதோ என:))..//
நீக்குஎனக்கு இதில் ஒரு வருத்தம்... அவர் அனுப்புவதை நீண்ட நாள் கழித்துப்போட்டால் அது ஆறிப்போய்விடாதோ...
//ஆனா ஒன்று, என்னவெனில், துரை அண்ணன் எல்லார் பக்கத்திலயும் மட்டும்தான் நகைசுவையாகக் கதைக்கிறார், ஆனா அவரின் பக்கத்தில மட்டும் சாமியாராகிடுறார்ர்:)..//
ஹா... ஹா... ஹா... அட்டென்ஷன் துரை ஸார்...
//http://shared.frenys.com/assets/1023908/6154841.jpg//
நீக்குDD கமெண்ட் பாக்ஸ் எல்லாம் சீராக்கிக் கொடுத்தும்கூட உங்கள் தளம் போல நீங்கள் அனுப்பும் படங்கள் இங்கேயே பார்க்க முடியவில்லையே, ஏன் அதிரா?
bay லீவ்ஸ் வாங்கி கிச்சன் அப்புறம் இடுக்கில் எல்லாம் போடுங்க வாசனைக்கு கரப்ஸ் வராது . விட இது பெட்டர்
நீக்கு///DD கமெண்ட் பாக்ஸ் எல்லாம் சீராக்கிக் கொடுத்தும்கூட உங்கள் தளம் போல நீங்கள் அனுப்பும் படங்கள் இங்கேயே பார்க்க முடியவில்லையே, ஏன் அதிரா?//
நீக்குஅது ஸ்ரீராம், அதுக்கென html கோட் இருக்குது, அதை எடுத்து நம் புளொக்கில் செட்டிங்கில் போய் இணைக்க வேண்டும் அப்போதான் இங்கு படம் வரும்... ஆனா அந்தக் கோட் ஐ எப்படிக் கண்டு பிடிச்சு எடுப்பது என எனக்குத் தெரியவில்லை... கண்டு பிடிக்க முடிஞ்சால் அதை உங்களுக்குத் தரலாம்.
டிடி க்கு ஒருவேளை தெரிஞ்சிருக்கலாம் என நினைக்கிறேன்.
என் பக்க கொமெண்ட்டில் கலர் கலராக எழுத்துக்கள் போடும் வசதியும் செய்து வச்சேன்.. ஆனா அது இப்போ வேலை செய்யவில்லை..
//அப்பால நான் என்ன செய்ய...! எங்கே போனார்கள் என்று நான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்!//
பதிலளிநீக்குஎதை பார்த்து ஓடறாங்க :) ட்ரெயின் பிடிக்கவோ ? அநேகமா வெள்ளி வீடியோவில் ஜெய் தாத்தா எக்ஸ்பிரெஸ்ஸன் பார்த்து ஓடற மாதிரி இருக்கு
ஜெய் அங்கிள் பாவம் ஏஞ்சல்... எஸ் பி பி குரலுக்கு வாயசைப்பதோட சரி... அவர்கள் நான் எழுதுவது புரியாமல்தான் ஓடியிருக்கிறார்கள் என்று இன்று தெரிந்தது!
நீக்குசுப்ரமணிய ராஜு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் உங்களில் ..இப்போ எனக்கும் அவர் கதைகளை படிக்கணும்போலிருக்கு
பதிலளிநீக்குஎதுக்கூஊஊஊஊஊ?:) ஏற்கனவே மருந்தடிச்ச பூச்சி மாதிரி அப்பப்ப மயங்கிக்கிடப்பது போதாதென்றோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவரின் கதை படிச்சு தாக்கத்தை உண்டாக்கப்போறாவாம் தன்னிலையும்...:)) ஒரு நீதி நியாயம் வாணாம் பேச்சில?:) ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா வாயில வந்ததை எல்லாம் சத்தமா முணுமுணுத்துக் கொண்டு கர்ர்ர்ர்ர்ர்:))..
நீக்குஹா ஹா ஹா ஹையோ ஸ்ரீராம் ஒளிச்சிருந்து படிச்சது போதும் இது கனவல்ல நிஜம்ம்ம்ம் ஓடி வந்து காப்பாத்துங்கோ ஒரு அஞ்ஞானியை:)) ஹா ஹா ஹா:))
https://mbtskoudsalg.com/images/mouse-cheese-png-2.png
நீக்குசுப்ரமணிய ராஜு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் உங்களில்
நீக்குஅப்படீன்னு இல்லை. படிக்கும்போதே குறிப்புகள் எடுத்துக்கொண்டே வந்து விடுவேன்!
//https://mbtskoudsalg.com/images/mouse-cheese-png-2.png//
படம் லிங்க் வேற காபி செய்து தனியாய்ப் போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டியிருக்கு...!!!
கம்பியூட்டரில் ஈஸி பார்க்க ஹைலைட் ரைட் க்ளிக் :) கோ
நீக்குhttps://www.youtube.com/watch?time_continue=11&v=cBQgnD0G1jM
பதிலளிநீக்குஇந்த காணொளியில் மூணாவதா பேசுபவர் தான் வா.மூர்த்தி .உங்களுக்காக தேடிபிடிச்சி கொண்டாந்தேன் .கீதாக்காவின் சித்தப்பாவை பற்றி பேசறாங்க
ஓ.. நன்றி ஏஞ்சல்.. பின்னர் பார்க்கிறேன். முன்னர் பாரதி பாஸ்கர் சொன்ன கல்கி கதை கூட நீங்கள்தான் தேடிக்கொடுத்தீர்கள்.
நீக்குஅந்த பூஸாருக்கு என்ன ஒரு நிம்மதியான தூக்கம் :) மீசை ட்ரிம் பண்ணும்போது எட்டிப்பார்த்தகரப்பானை பிடிச்சி மேலே விடுங்க :) ஹாஹா
பதிலளிநீக்குஒரு அப்பாவின் பூஸின் தூக்கத்தைக் கெடுப்பதே புழைப்பாப்போச்சூஊ கர்ர்ர்ர்ர்ர்ர்:))
நீக்குஹலோவ் நேத்து என் தூக்கத்தை கெடுத்தீங்க அதனால் ஒரு வாரம் உங்கள தூங்க விட மாட்டின்
நீக்குஅப்போ ஸ்ரீராம் சொன்ன சு.ரா வின் ஸ்டோரியை வாங்கிப் படிங்கோ:)) ஹா ஹா ஹா:).. விதி வலியது.. நான் என்ன பண்ண:))
நீக்குபூனை எலிக்கு பயப்பபடுமோ...
நீக்குஇதை எழுதும்போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. முன்னர் சாலையில் அமர்ந்திருக்கும் நாலுகால் செல்லம் படம் போட்டிருந்தேன். அவர் இரவானதும் படாத பாடு படுகிறார். கொசு அவரைப் பாடாய்ப் படுத்துகிறது! ஊவ் ஓவ் என்று சத்தமிட்டபடி இங்குமங்கும் ஓடுகிறது... இப்போ இங்கு சென்னையில் பயங்கர கொசு தெரியுமோ....
அச்சோ பாவம் ..கொசுக்கள் நாலுகால் செல்லங்களை பாடாய்படுத்தும் ..உங்க ஏரியாவில் நீர் அதிகமா தேங்குதோ ?
நீக்குமாரிகோல்ட் செடி நட்டுவைங்க
நீர் தேங்கவில்லை. ஒரே செடிகொடி புதர்... பாவம் செல்லம். அதற்கு ரௌடி என்று பெயர் வைத்திருக்கிறேன். என்னடா ரௌடி என்று கேட்டதும் அருகில் வந்து என் கைகளில் முகத்தை வைத்து கண்களுக்குள் ஆழமாக ஒரு சோக லுக் விட்டது பாருங்க....
நீக்குஅந்த ரெளடிச் செல்லத்துக்கு வேப்பெண்ணை அல்லது நல்லெண்ணெய் முகத்தில பூசி விடுங்கோ.. முக்கியமாக காதுகளில் .. அப்போ நுளம்புப் பிள்ளைகள் நெருங்க மாட்டினம்.. வேறு என்ன பண்ண முடியும் நெட் போட்டு விடவா முடியும்:)
நீக்குஅந்தந்த பொருளை அந்தந்த இடத்துல வச்சாலே பாதி வேலை குறையும். ஆனா எங்க வீட்டில் அப்படி இல்ல. சின்னதும் மாமனும் பண்ணும் அட்டகாசமிருக்கே!
பதிலளிநீக்குஉண்மைதான் ராஜி. எங்க அம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்திருப்பதுவும் அதுதான்.
நீக்குஉங்கள் எழுத்தை என்னால் சுலபமாக அடையாளம் காண முடிகிறது ஶ்ரீராம்.
பதிலளிநீக்குசுப்பிரமணிய ராஜு ஹேங்க் ஓவர் இன்னும் முடியவில்லையா?
நீங்கள் கேள்வி கேட்கும் பழக்கத்தில் இருக்கிறீர்கள் என்ற ஜே.கே.யின் பதில் சூப்பர்! அதனால் தான் அவர் ஜே.கே.
//உங்கள் எழுத்தை என்னால் சுலபமாக அடையாளம் காண முடிகிறது ஶ்ரீராம். //
நீக்குஅப்பாடி... நன்றி பானு அக்கா. சுப்ரமணிய ராஜு புத்தகம் முடித்து விட்டேன் என்பதால் அவ்வளவுதான். இனி வராது (என்றுதான் நினைக்கிறேன்!)
சிலரது எழுத்துகள் பிடித்துவிட்டால் எல்லாமே அருமையாய்த் தெரியும்பிடிக்காவிட்டால் என்ன எழுதினாலும் கண்டு கொள்ளப்படாமல் போகும் பிரபலமானவர் எழுத்துகள் பற்றிச் சொன்னேன்
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார்.
நீக்குஅன்பு ஸ்ரீராம். சரியாகப் புரிந்து கொள்ளாததற்கு மன்னிக்கணும். உங்கள் கதை என்று தெரியும். அதனால் தான் உங்களுக்குப் பதில் போட்டேன்.
நீக்குஇந்தத் தேடும் நாட்கள் இந்த வீட்டில் தொடர்கிறது. அம்மாக்காரி மேலயும் கீழயும் ஓடி எடுத்துக் கொடுப்பாள்.
கதை மாந்தர் ஓடவில்லை. உங்கள் கவிதையைப் படிக்கப் போகிறார்கள்.
ஜெகே way above my head. சுப்ரமணிய ராஜு எப்பொழுதும் தேடிப்படிப்பேன்.
ஞானி அஞ்ஞானி அதிரா, ஏஞ்சல் சம்பாஷணை மிகப் பிடித்திருக்கிறது.
பா.கு. அப்பம் வடை தயிர்சாதத்துக்குப் பிறகு படிக்கவில்லை.
ஆர்வம் குறைந்துவிட்டது.
உங்கள் பெயரைப் போட்டு எழுதுவதில் என்ன தப்பு இருக்க முடியும். பாதி சமயம் யார் எழுதுகிறார்
என்று தெரியாமலயே புதன் கிழமை போகிறது.
கரப்பான் பூச்சிகளுக்கு பெஸ்ட் கண்ட் ரோல் கூப்பிடவும். அதிக ஆபத்து அவை விளைவிக்கும்.
கொசுக்கள் ஒழிப்பு ஆரம்ப்க்கலையா. டெங்கு டெங்கு என்று அலறுகிறார்களே. கவனம் மா.
/////
நீக்குஞானி அஞ்ஞானி அதிரா, ஏஞ்சல் சம்பாஷணை மிகப் பிடித்திருக்கிறது.////
🙏_()_
தாங்க்ஸ் வல்லிம்மா :)
நீக்குநன்றி வல்லிம்மா... பெயர் போட்டுக்கொள்வது தவறு என்று சொல்லவில்லை. தேவை இல்லை என்று நினைத்தேன்.
நீக்கு
பதிலளிநீக்குசுப்ரமணிய ராஜுவுக்கு பாலகுமாரன் நண்பராக இருக்கலாம். அதனால் இருவரது எழுத்தும் ஒரே தரத்தினது அல்ல என்று சொல்ல நினைத்தேன். கீதா சீனியர் எழுதிவிட்டாரே!
ராஜு , ஜேகே-யின் டிஸ்கோர்ஸ்களுக்குப் போயிருக்கிறாரா? இதை இதற்குமுன் அறிந்ததில்லை. பிரமிள்தான் அடிக்கடி ஜேகே-யின் உரை கேட்கப்போகிறவர், அவர்பற்றித் தன் ஆத்ம நண்பர்களுடன் பேசுகிறவர் என அறிந்திருந்தேன்.
அனுபவத்தை அருமையாக எழுதினால் கதை. அதை விளக்கவேண்டிவருவது சித்திரவதை!
பூஸார் சவாசனம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏன் வந்ததோ!
நேற்றெல்லாம் கிரிக்கெட். இன்று பகலெல்லாம் வேதாந்த தேசிகன். அதனால்தான் இரவில் வருகை..
ஏகாந்தன் ஸார்...! கதை அருமையாக வந்திருக்கிறது என்கிறீர்களா? அல்லது இல்லையா?
நீக்குபாகு - சுராஜூ இருவரும் வெவ்வேறு வகை. தரம் பற்றி மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்!
கதை நன்றாகத்தான் இருக்கிறது. டைட்டிலில்தான் சுஜாதா வாடை..!
நீக்கு* ஒரே தரத்தினது என்று அர்த்தமல்ல ..
பதிலளிநீக்குமீசையை நறுக்கக் கத்திரிக்கோல் தேடும் பேர்வழியிடம் மீசையையே காணோமே (படம்) ! இல்லாத மீசையை எப்படி நறுக்குவதெனக் கருதித்தான் கத்திரிக்கோல் கையிலகப்படவில்லை..
நன்றி ஏகாந்தன் ஸார்... இப்போது மீசை வைத்துவிட்டேன்!!!!
நீக்குஅட! மீசை தாறுமாறா வளர்ந்துகிடக்கே.. கத்தரிக்கோல் தேவைதான் !
நீக்குபயனுள்ள அருமையான தகவல்கள்
பதிலளிநீக்குஆஹா.. கதை பிரமாதம். கதைமாந்தர்களே காணாமற்போய்விட்டால் கதாசிரியருக்கு அங்கென்ன வேலை? :))))
பதிலளிநீக்குசுப்ரமணியராஜு அவர்கள் பற்றி பல சுவையான தகவல்கள். இப்போதுதான் அவரைப்பற்றியும் அறிகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.