செவ்வாய், 30 அக்டோபர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : பத்தினி கட்டளைகள் - ரிஷபன்


பத்தினி கட்டளைகள்
ரிஷபன்


நான்கு வீடுகள் தள்ளி குடியிருக்கும் மணிமாலா அசோகன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

"ஸார்"

கோமதி உடனே உள்ளிருந்து வெளியே வந்து விட்டாள்.

"யாரு"

"ஸார் இல்லியா"

"ஏன் என்கிட்ட பேசக் கூடாதா"

அசோகன் பாதி ஷேவிங் முடித்த முகத்தோடு வெளியே தலையை நீட்டினான்.

நன்றி இணையம் 

" ரொம்ப நன்றி. உங்ககிட்ட வாங்கின நூறு ரூபாயைத் திருப்பித் தர வந்தேன்'

அசோகன் கோமதியின் பக்கமே திரும்பவில்லை. மணிமாலா கொடுத்த ரூபாயை வாங்கிக் கொண்டான்.

"வரட்டுமா'

போய் விட்டாள்.

" நில்லுங்க"

கோமதியின் குரலில் அதட்டல்.

"என்ன"

"எப்ப.. ஏன் அவளுக்கு ரூபா கொடுத்தீங்க"

"ஹிஹி அன்னிக்கு சூப்பர் பஜார்ல நான் போனப்போ.. ஏதோ பணம் குறையுதுன்னு வாங்கினாங்க"

"உங்களுக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அடுத்த வீட்டு பொம்பளைங்க கூட பேச்சு வார்த்தை வேணாம்னு"

அசோகன் பேந்தப் பேந்த விழித்தான்.


" யம்மாடி. நான் தேடிப் போய் பேசல. அவங்களா வந்து உதவி கேட்கிறப்ப"

கோமதியின் முகத்தில் கடுமை தகித்தது.

' வந்தா என்ன. இல்லைன்னு நறுக்குத் தெறிச்சாப்ல பதில் சொல்றது"

" வச்சுகிட்டே எப்படி பொய் சொல்றது"

'ஆஹா இதுவே நான் கேட்டிருந்தா.. மாசம் 1ம் தேதி சுளையா 3000 கொடுத்தேனே.. அதுக்குக் கணக்கைச் சொல்லுன்னு பிடுங்கி இருப்பீஙகளே"

அசோகன் வாயடைத்துப் போனான்.
என்னமாய் லா பாய்ண்ட் படிக்கிறாள்.

" இனிமே எவளாவது பணம் கேட்டா.. கொடுத்தேன்னு வந்தீஙக.. தெரியும் சேதி"

"சரி"

பூம்பூம் மாடு போலத் தலையாட்டினான்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள்.

ஸ்கூட்டரை நிறுத்திப் பூட்டியவன் வாசலை மறித்துக் கொண்டு கோமதி நிற்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான்.

இன்று என்ன பிரச்சினை..

"கோமு"

" ஸ்ஸ்.. இந்த பொய் கொஞ்சல் எல்லாம் வேணாம்"

"கண்ணம்மா"

"நிறுத்துங்க. இன்னிக்கு என்ன செஞ்சீங்க"

"காலைல ஆபிஸ் போனேன். வேலை பார்த்தேன். உன்னோட பட்டுக் கையால் செஞ்சு கொடுத்த அமிர்தம்.. அதான் மதிய டிபனைச் சாப்பிட்டேன். இதோ நேரா கட்டின பசு மாதிரி ஆபிஸ் விட்டதும் வீட்டுக்கு நேரா வரேன்"

"இந்த டயலாக்கெல்லாம் வேணாம். காலைல ஆபிஸ் போறப்போ என்ன செஞ்சீங்க"

கோமதி மடக்கிக் கேட்டாள்.

"என்ன செஞ்சேன்" 

அசோகன் தலையில் பல்ப் எரிந்தது. அட. வம்பில் மாட்டினேனே.

' இல்லம்மா. ஏதோ பஸ் பிரச்னை. பஸ் வராதுன்னு பேசிகிட்டாங்க. வந்தனா.. அதான்.. எங்க ஆபிஸ் ஸ்டெனோ ஸார் லிப்ட் தரீஙகளான்னு கேட்டாங்க. எப்படி மறுக்க முடியும். சொல்லு. ஒரே ஆபிஸ் "

அசோகன் கெஞ்சினான்.

" நான் என்ன சொல்லியிருக்கேன்"

" பைசா தானே தரக்கூடாது. இது ஒத்தாசை தானே"

கோமதி குறுக்கிட்டாள்.

"அந்தப் பேச்சே வேணாம். இனி மேல் என்னைத் தவிர வேற எவளையும் வண்டி பின்னால ஏத்தக் கூடாது. புரியுதா"

அசோகன் தலை சம்மதம் என்று வேகமாக ஆடியது

மறு வாரம்..

"ஸ்ஸ் அப்பாடா" என்று பெருமூச்சு விட்டபடி உள்ளே வந்தான்.

கோமதி தனது துணிகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். முகத்தில் அனல் வீசியது

" கோம்ஸ் என்னது"

நன்றி இணையம் 

"உங்களை என்னால் திருத்தவே முடியல. இனிமேல் உங்க கூட நான் இருக்கப் பிரியப்படல. எங்கம்மா வீட்டுக்குப் போறேன்"

" என்னம்மா இது. நீ சொன்னபிறகு நான் இப்பல்லாம் எந்த லேடீஸ் கூடவும் பேசறதில்ல. பணம் தரதில்ல. ஸ்கூட்டர்ல ஏத்தறதில்ல"

" பொய் சொல்லாதீங்க. இன்னிக்கி ஸ்கூட்டர்ல ஒரு பொம்பளையோட ஒண்ணா வந்ததை பக்கத்து வீட்டு பானு பார்த்திருக்கா. என்கிட்ட வந்து சொல்லிட்டா"

" ஓ அதுவா. நான் இன்னிக்கு பெட்ரோல் இல்லேன்னு என் வண்டியை எடுக்கவே இல்ல"

கோமதி சமாதானமாகவில்லை.

" பின்னே அவ பார்த்தது பொய்யா"

" நிஜம்தான். ஆனா ஒரு திருத்தம். எங்க ஆபிஸ் ரோஸி எனக்கு லிப்ட் கொடுத்தா. நான் கண்டிஷனை சொல்லிட்டேன். பின்னால லேடிஸை உட்கார வச்சு ஓட்ட மாட்டேன்னு. உனக்கு பிராமிஸ் பண்ணதால. அப்புறம் அவளே என்னை வச்சு ஓட்டிகிட்டு வந்தா. நீயே சொல்லு. உன் வார்த்தையை நான் மீறினேனா"

கோமதிக்குத் தலை சுற்றியது.

55 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா எல்லோருக்கும்!
    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஒரு சம்சாரியா இருக்கிறது எத்தனை கஷ்டமா இருக்கு!....

    (பேசாம ஆஸ்ரமம் கட்டியிருக்கலாம்!:(..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா துரை அண்ணா கட்டிடுங்க...இங்க ஃபாலோயர்ஸ் நிறைய இருக்காங்களே!! ஆனா ஒன்னு புலியூர் பூஸானந்தா கூட போட்டி போட வேண்டியிருக்கும்....ஆனா டீல் மட்டும் போட்டுறாதீங்க!

      கீதா

      நீக்கு
    2. நீங்க ஆஸ்ரம்ம் கட்டியிருக்கலாம்னு சொல்லும்போது எனக்கு மட்டும்தான் நித்யானந்தா ஆஸ்ரம்ம் நினைவுக்கு வருதா இல்லை அது நினைவுக்கு வந்ததால்தான் இப்படி எழுதியிருக்கீங்களா துரை செல்வராஜு சார்?

      நீக்கு
    3. அன்பின் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு..

      >>> எனக்கு மட்டும்தான் நித்யானந்தா ஆஸ்ரமம் நினைவுக்கு வருதா..
      இல்லை.. அது நினைவுக்கு வந்ததால்தான் இப்படி எழுதியிருக்கீங்களா?.. <<<

      இல்லையில்லை...

      நித்தி நினைவுக்கு வந்ததால் தான் எழுதினேன்...

      நேர்மையான கணவனாக - தலைவனாக -
      ( இது வேற வம்பா?.. குடும்பத் தலைவனாக!... )

      இருந்தாலும்
      தலைவி (அதாவது - மனைவி!..)
      தலைவிதி வசத்தால் சரியாக அமையாவிட்டால்!..

      நித்ய கண்டம் பூர்ண ஆயுசு தானே!...

      கீதா அவங்க சொன்ன மாதிரி கேஸ், கோர்ட் ... ந்னு
      புதாகாரமாகி வாழ்க்கையே புஸ்வாணம் ஆகிப் போகின்றது...

      இதுக்கு
      ஔவையார் அந்தக் காலத்திலேயே..

      ஏறுக்கு மாறாக இருப்பாளே யாமாகிற்
      கூறாமல் சந்நியாசம் கொள்!...

      - அப்படின்னு, சொல்லியிருக்காங்களே.... ன்னு
      சந்நியாசமாப் போனா -

      அங்கே,
      தேன்குடத்தில - ஈ விழுந்த மாதிரி அதோகதி ஆயிடுது!...

      இருந்தாலும்
      நம்ம சாமியார் ஒருத்தர் பூனை வளர்த்த கதை
      உங்களுக்குத் தெரியுமா!..

      நீக்கு
    4. சாமியார் பூனை வளர்த்த கதையும் தெரியும். சடங்குகளைப் பற்றிய இன்னொரு கதையை நீங்கள் படித்திருக்கிறீர்களா?

      ஒரு வயதான குரு, தன் மாணவர்களுக்கு பாடம் போதித்துக்கொண்டிருந்தபோது பூனை ஒன்று குறுக்கே குறுக்கே போய்க்கொண்டிருந்தது. இது தொல்லையாயிருப்பதைக் கண்ட குரு, மறுநாள் முதலில் அந்தப் பூனையை ஒரு ஓரமாக கட்டி வைத்துவிட்டு, பாடம் நடத்தத் தொடங்கினார். பாடம் முடிந்ததும் அதனை அவிழ்த்துவிட்டுவிடுவார். ஒரு நாள் குரு இறந்தார். மறுநாள் அடுத்த சீனியர், குருகுலத்தில் பாடம் நடத்த வந்தார். அவருக்கு, எதனால் குரு முதலில் பூனையைக் கட்டினார் என்பது புரியவில்லை. ஒருவேளை பூனையைக் கட்டிவிட்டு பிறகு பாடம் நடத்தினால்தான் அறிவு விசாலமாகுமோ என்ற சந்தேகம் வந்தது. அதனால், குரு செய்தபடியே அவரும் பூனையைக் கட்டவேண்டும் என்று நினைத்து பூனையைத் தேடினால் அதனைக் காணவில்லை. உடனே வெளியில் ஒருவரிடம் சொல்லி ஒரு பூனை வாங்கிவந்து அதனைக் கட்டிவைத்தபின்னர் பாடம் நடத்தத் தொடங்கினார். இப்படித்தான் நாம் தொடர்ந்து செய்யும் பல சாங்கியங்கள். ஹாஹா.

      சரி.சரி...நீங்கள் ஆஸ்ரமம் கட்டினால், அதில் எனக்கு இடம் கிடையாது என்பதை இப்படி நேரடியாகவே சொல்லிவிட்டீர்கள்.... சரிதான்.

      நீக்கு
    5. ஆகா....

      அன்பின் நெ.த...

      உபாசனாமூர்த்தி சொன்ன மாதிரி
      நாமெல்லாம் ஞான பரம்பரை...

      ஆனாலும்
      ஆஸ்ரமம் எல்லாம் எந்தப் பிறவியில் என்று தெரியவில்லை...

      ஸ்வாமிகளே -
      இல்லறமே நல்லறம்!...

      சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றிய கதை - அறிந்ததே ஆயினும்
      பதிவில் தந்ததற்கு மகிழ்ச்சி...

      இருப்பினும்
      நான் சொல்ல வந்த சாமியார் கதை வேறு!...

      நீக்கு
    6. //நான் சொல்ல வந்த சாமியார் கதை வேறு!...// - பூனை வளர்க்க ஆரம்பித்து, பாலுக்காக பசுமாடு வளர்த்து, அதைப் பார்த்துக்கொள்ள ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து கடைசியில் அவளையே திருமணம் செய்துகொண்ட கதையா?

      ம்ம்ம்ம்ம் ஆஸ்ரமம் ஆரம்பிப்பது என்றே தீர்மானித்துவிட்டீர்கள். நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

      நீக்கு
    7. ஆகா...

      நாந்தான் சொன்னேனே..
      நாமெல்லாம் ஞானபரம்பரை என்று..

      சரியாக கதையைப் பிடித்து விட்டீர்கள்.. ஆனால் இதற்கு வேறொரு கிளைமாக்ஸ்...

      சாமியார் தாடியைக் கழற்றி விட்டு
      பெண்டாட்டியே சரணம் என்று ஓடி விடுவார்....

      நீக்கு
    8. ஏறுக்கு மாறாக இருப்பாளே யாமாகிற்
      கூறாமல் சந்நியாசம் கொள்!...

      - அப்படின்னு, சொல்லியிருக்காங்களே.... ன்னு
      சந்நியாசமாப் போனா -

      அங்கே,
      தேன்குடத்தில - ஈ விழுந்த மாதிரி அதோகதி ஆயிடுது!...//

      ஹா ஹா ஹா....

      துரை அண்ணா அண்ட் நெல்லை கருத்து மூலம் புதிய கதை எல்லாம் தெரிஞ்சுக்க முடியுது

      கீதா

      நீக்கு
  4. ஹாஹா..... தப்பிக்கவே முடியாத விஷயம்.....

    கதையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. அசோகன்..ற பேர் ராசிக்கு சீட்டு ஒன்னு..

    காலநேரம் சரியில்லை..ந்றது சரிதான்!..

    பதிலளிநீக்கு
  6. ஹை ரிஷபன் அண்ணா கதை!

    காபி ஆத்த கொஞ்சம் லேட்!. சென்னையில் ஃப்ரிட்ஜ் இருந்தது அதனால் பால் ஒரு பேக்கெட் இருக்கும். ஃப்ரிட்ஜ் விற்றுவிட்டோம். இங்கு ஃப்ரிட்ஜ் இல்லை எனவே 5.45 க்குத்தான் பால் கடை திறப்பார்கள். ஸோ லேட்..

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வழக்கமான ரிஷபன் அவர்களின் நடை! பஞ்ச்! கணவன், மனைவிக்குள் ஏற்படும் சின்னச் சின்ன உரசல்களை அருமையாக எடுத்துச் சொல்லி இருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா இது சின்ன சின்ன உரசல்னு தோணலாம் ஆனா பல குடும்பங்களில் பெரிய பூதமாகி கோர்ட் வரை போயிடுதே.. பிரிதலும் உட்பட...

      இந்தக் கதையில் கோம்ஸ். வைஸ் வெர்ஸாவாகவும் நடப்பதுண்டு.

      கீதா

      நீக்கு
    2. ஆண்கள் எப்போவானும் தன் மனைவி அக்கம் பக்கத்துப் பெண்களோட பேசறதைத் தவறா எடுத்துக்கறாங்களா? இந்தப் பெண்கள் மட்டும்தான் மோசம் போலிருக்கு. ஆண்கள் பெண்கள்ட பேசறதைக் குறை சொல்றாங்க. சரியா கீதா ரங்கன்?

      நீக்கு
  8. படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

    ’பத்தினியின் பத்து கட்டளைகள்’ என்று தலைப்புக்கொடுத்து மேலும் மேலும் பத்து சம்பவங்கள் வரக்கூடும் என்ற ஆவலில் படித்தேன்.

    ஆனால் வெறும் மூன்றே சம்பவங்களை மட்டும் சொல்லி முடித்துவிட்டீர்கள். எனினும் சூப்பர் ! :)))

    பதிலளிநீக்கு
  9. ஆஹா. வீட்டுக்கு வீடு வாசப்படி. இது நிற்காது தொடரும். ரிடயராகும் வரை. வெகு சுவாரஸ்யம். ஆண்கள் வழிவதும் மாட்டிக் கொள்வதும் எப்படியோ மனைவிகள் கண்களுக்கும் காதுகளுக்கும் தப்புவதில்லை.

    பாவம் இந்த நல்ல அசோகன் மாட்டிக் கொண்டார். ரிஷபன் சார் எழுத்தில் கதையோட்டம் வெகு ஜோர்..

    பதிலளிநீக்கு
  10. இப்படிப்பட்ட மனைவியிடம் எப்படி குப்பை கொட்டுவது ?
    முடிவில் ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  11. ஹா ஹா ஹா ஹா ஹா முடிவில் //நான் கண்டிஷனை சொல்லிட்டேன். பின்னால லேடிஸை உட்கார வச்சு ஓட்ட மாட்டேன்னு. உனக்கு பிராமிஸ் பண்ணதால. அப்புறம் அவளே என்னை வச்சு ஓட்டிகிட்டு வந்தா. நீயே சொல்லு. உன் வார்த்தையை நான் மீறினேனா"//

    செம அசோகன்!! அதானே பின்னாடி உக்காத்தி வைச்சுத்தானே ஓட்டக் கூடாது பின்னாடி உக்காந்து வரலாம்தானே!! கோம்ஸ் கு மெய்யாலுமே தலை சுத்திருக்கும்!!! ஹா ஹா ஹா

    கதையை மிகவும் ரசித்தேன் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  12. பொதுவாகவே குடும்பத்தில் சந்தேகப்பிராணி நுழையக் கூடாது....நுழைந்தால் அந்த உறவு நீர்த்துத்தான் போகும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. கதை நன்றாக இருக்கிறது.
    கட்டளைகளும் அவை கடைபிடிக்க முடியாமல் விழிப்பதும் அருமை.

    பதிலளிநீக்கு
  14. ரிஷபன் சார்... கோபுசார் சொன்னமாதிரி இன்னும் இரண்டு சம்பவங்கள் (அவர்ட்ட கேட்டாவது... நான் அ சோ க னைச் சொன்னேன்) சேர்த்திருக்கலாம்... ஆனால் கதை நீர்த்துப் போயிருக்கலாம். எப்போதும்போல் அருமை. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ரிஷபன் சார்... கோபுசார் சொன்னமாதிரி இன்னும் இரண்டு சம்பவங்கள் (அவர்ட்ட கேட்டாவது... நான் அ சோ க னைச் சொன்னேன்) சேர்த்திருக்கலாம்... ஆனால் கதை நீர்த்துப் போயிருக்கலாம். எப்போதும்போல் அருமை. ரசித்தேன். //

      ’அ சோ க ன்’ = ’அந்த சோ க மா ன அனுபவங்கள் நிறையவே உள்ள கோபு‘ என்பதை சிஷ்யனாகிய இந்த ’கோபு’வே டக்குன்னு புரிந்து கொண்டுள்ளபோது, என் எழுத்துலக மானஸீக குருநாதர் நிச்சயமாகப் புரிந்து கொண்டிருப்பார் என்பதை நானும் அறிவேன், ஸ்வாமீ.

      இவ்வாறான என் அனுபவங்களில் சிலவற்றை நான் ஏற்கனவே ஒரு சிறுகதையில் கொண்டு வந்துள்ளேன். http://gopu1949.blogspot.com/2014/01/vgk-03.html அந்த வரிகளை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்:

      >>>>>

      நீக்கு
    2. ......................................................

      சமீபத்தில் ஒருநாள் நான் வாங்கிக் கொடுத்தப் புதுப் புடவையொன்றை சம்பந்தியம்மாள் தந்த ஒப்புதல் மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் என் மனைவி கட்டிக்கொள்ள நேர்ந்தது.

      அது சமயம், எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து மிகவும் சுவாதீனமாகப் பழகும் பெண் ஒருத்தி, “மாமி, வாவ்..... இந்தப்புடவை உங்களுக்கு சூப்பராக இருக்கு, திடீரென்று ஒரு பத்து வயசுக்குறைஞ்சாப்போல இருக்கிறீங்க, நல்ல கலர், நல்ல டிசைன், லைட் வெயிட்டாக, ஷைனிங் ஆக இருக்கு. பார்டரும், தலைப்பும் படு ஜோர் மாமி; எங்கே வாங்கினேள்? நம்ம ஊரா - வெளியூரா? எந்தக்கடையில் வாங்கினேள்? யார் செலெக்‌ஷன்? என்ன விலை?” என ஆச்சர்யமாகப் பல கேள்விகளைக் கேட்கலானாள்.

      அவளின் எந்தக்கேள்விகளுக்குமே பதில் அளிக்க முடியாத என் மனைவி, “எனக்கு ஒன்றுமே தெரியாதும்மா; எல்லாம் எங்காத்து மாமாவைக் கேட்டால் தான் தெரியும். அவர் தான் வாங்கிவந்தார்” என்று சொல்லி நழுவப்பார்த்தாள் .

      வந்தவள் சும்மா இல்லாமல், ”அதானே பார்த்தேன், சும்மா சொல்லக்கூடாது மாமி, உங்காத்து மாமா கற்பனையும், ரசனையும் அலாதியானது, நீங்க ரொம்பக்கொடுத்து வச்சவங்க; அடிக்கடி அவர் பெயர் பத்திரிகைகளில் வருகிறது என்றால் சும்மாவா பின்னே?

      அடுத்த முறை நான் புடவை எடுக்கப்போகும் போது, என் ஸ்கூட்டர் பின்னாடி உங்காத்து மாமாவை உட்கார வைத்துக்கொண்டு கடைக்குக் கூட்டிப்போய், அவரைவிட்டே செலெக்ட் செய்யச்சொல்லி, அவர் எது எடுத்துத்தருகிறாரோ அதைத்தான் வாங்கிக்கட்டிக்கப் போகிறேன் ” என்று உசிப்பி விட்டாள்.

      என்னவளுக்கு கண்ணில் நீர் வராத குறை தான். விட்டால் அந்தப்பெண் என் கைகளைப்பிடித்து குலுக்கி பாராட்டவும் செய்வாள் என்பது எனக்கும் என் மனைவிக்கும் நன்றாகவே தெரியும். அந்தளவு மிகவும் சோஷியல் டைப் அந்தப்பெண்.

      என்னவள் என்னைப்பார்த்து ”நீர் எதற்கு இன்னும் இங்கு நிற்கிறீர்?” என்பதுபோல ஒரு முறை முறைத்துவிட்டு, கையில் கிடுக்கியுடன் சமையல் அறைக்குள் புகுந்தாள். நானும் வெளியில் எங்கோ புறப்படுவதுபோல கிளம்பி விட்டேன். பிறகு முழுசா மூன்று நாட்களுக்கு என்னுடன் பேசவே இல்லையே. அவ்வளவு ஒரு பொஸஸிவ்நெஸ், அவளுக்கு என் மேல்.

      அன்பையும், பாசத்தையும், பிரியத்தையும் நேருக்குநேர் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள மாட்டாளே தவிர, இதுபோல வேறு யாராவது உசிப்பிவிட்டால் போச்சு! “நம்மாளு, நமக்கு மட்டும் தான்; இவள் யாரு குறுக்கே” என்று கொதித்தெழுந்து விடும் சுபாவம் கொண்டவள்.

      >>>>>

      நீக்கு
    3. மேற்படி கதையை நான் APRIL 2011 இல் முதன்முதலாக வெளியிட்ட போது என் எழுத்துலக மானஸீக குருநாதர் அவர்கள் [ http://gopu1949.blogspot.com/2011/04/1-of-3.html & http://gopu1949.blogspot.com/2011/04/3-of-3.html] கொடுத்துள்ள பின்னூட்டங்கள் இதோ:

      -=-=-=-=-

      ரிஷபன் April 22, 2011 at 3:31 PM
      //விட்டால் அந்தப்பெண் என் கைகளைப்பிடித்து குலுக்கி பாராட்டவும் செய்வாள் என்பது எனக்கும் என் மனைவிக்கும் நன்றாகவே தெரியும். அந்தளவு மிகவும் சோஷியல் டைப் அந்தப்பெண்.//

      Ha Ha Ha...

      மீண்டும் படித்தேன் ரசித்தேன்

      -=-=-=-=-

      ரிஷபன் April 27, 2011 at 7:58 PM

      சுடிதார் ஒண்ணு வாங்கணும்.. கூட வரேளா..

      -=-=-=-=-

      நீக்கு
    4. மேற்படி என் சிறுகதைக்கு தங்களின் (நெல்லைத் தமிழனின்) ’பொடி வைத்த’ சிறப்புப் பின்னூட்டங்கள் ஏதும் இல்லாததை எண்ணிப் பார்த்ததும், என் கண்களில் ஜலமே வந்து விட்டது ...... ஸ்வாமீ.

      என் கதைகளையெல்லாம் படிக்கவும் ஓர் கொடுப்பிணை வேண்டும். அது உமக்கு இல்லை. :(((((

      அன்புடன் கோபு

      நீக்கு
    5. கோபு சார்... நான் இந்தக் கதையை அங்கு ரசித்துப் படித்தேன். (அதாவது சம்பவமாகச் சொல்லியிருந்ததை). ஆனால் நான் படித்தது 2016ல். அப்போ லேட்டா பின்னூட்டம் இடக்கூடாது என்று எண்ணி பின்னூட்டம் இடவில்லை. அதற்கு அப்புறம் பல கதைகளுக்கு லேட்டா பின்னூட்டம் வெளியிடுட்டு நீங்களும் மறுமொழி கொடுத்திருக்கீங்க.

      இங்க இப்போ அந்தக் கதையை (சம்பவத்தை) மீண்டும் படித்து ரசித்தேன்.

      ஆனால்,

      ரிஷபன் சார் எழுதியுள்ள, ''சுடிதார் ஒண்ணு வாங்கணும்.. கூட வரேளா..' என்ற வாக்கியம், எனக்கென்னவோ அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டுள்ளமாதிரிதான் தோன்றியது. நீங்கள் என்னவோ, அவர் உங்கள் மீதுள்ள பாசத்தால் உங்கள்ட கேட்டார்னு (தப்பா) நினைத்து மகிழ்ந்திருக்கிறீர்கள் ஹாஹா.

      நீக்கு
  15. அருமையான கதை. அதுவும் இளவயதுக்காரர்களிடம் இது அதிகமாகவே இருக்கும். மற்ற பெண்களிடம் பேசினாலே மண்டகபடிதான். ஆப்டுண்டு முழிக்க வேண்டியதுதான். படிக்க,ரஸிக்க யதார்த்தம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  16. ரிஷபனின் எழுத்துகளைப் படித்துள்ளேன். இன்று மற்றொரு வாய்ப்பு உங்கள் மூலமாக. அவருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ, மனம் பொறுக்குதில்லை, நேற்றைய கொழுக்கட்டைப் போஸ்ட்டின் கடசிப் பின்னூட்டங்கள் படிக்காதோர் கொஞ்சம் படித்துப் பாருங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது அது பொய்த்தகவலாகத்தான் இருக்கும் என்று. முகநூல் ஸ்டேட்டஸ் அப்டேட் கீதாக்கா, ஸ்ரீராம், அனு எல்லோரும் உறுதி செய்திருக்காங்க...அக்டோபர் 14 ஆனால் அந்த வருண் சொல்லியிருப்பது செப்டெம்பர் 22 காலமானார் என்று. யாரோ சில்மிஷம் செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

      கீதா

      நீக்கு
    2. அந்த விஐசி யாரென்றும் தெரியவில்லை....தனது ஐடென்டியை வெளியிடலாமே அவர்...

      கீதா

      நீக்கு
    3. அந்த வி.ஐ.சி, மதுரைத் தமிழனாகவே இருந்தால்? அதற்கும் வாய்ப்பு இருக்கு. அவருக்கு அந்த அளவு நகைச்சுவை உண்டு.

      நீக்கு
    4. அவர் அம்மாதிரி செய்யக் கூடியவர் தான். எங்களுக்குள் கடுமையான கருத்து மோதல் உண்டு. எனினும் இது உண்மையாக இருக்கக் கூடாது என்றே மனம் பதறுகிறது. :(

      நீக்கு
    5. நெல்லை அந்த விஐசி ம த வாக இருக்குமோ என்ற எண்ணம் எனக்கும் வந்தது....

      கீதா

      நீக்கு
    6. கண்டிப்பாக அவருக்கு எதுவும் ஆகியிருக்காது என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அவர் நிறைய அரசியல் பதிவுகள் எழுதக் கூடியவர். எனவே இப்படி யாரோ சில்மிஷம் செய்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது..

      ஆனால் நெல்லை நகைச்சுவை சரிதான் நகைச்சுவையோ அல்லது அது எதுவானாலும்... ஆனால் இப்படியான தகவலை நகைச்சுவை என்ற பெயரில் தருவது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது... அது மதுரை தமிழனாகவே இருந்தாலும் நான் கண்டிப்பாக அவருடன் சண்டை போடுவேன்...

      கீதா

      நீக்கு
    7. //இப்படியான தகவலை நகைச்சுவை என்ற பெயரில் தருவது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது... அது மதுரை தமிழனாகவே இருந்தாலும் நான் கண்டிப்பாக அவருடன் சண்டை போடுவேன்...

      கீதா//

      அதே தான் கீதா நானும்சண்டை போடுவேன் .
      நேற்று நான் மதுரை தமிழனை தேடினபின் திடீரென இப்படி ஒரு பின்னூட்டம் .நான் பெரும்பாலும் யாரவது தொடர்ந்து காணல்லைனா தேடுவேன் .அது பொய்த்தகவல் என்றே மனம் சொல்லுது

      நீக்கு
  18. அட ரிஷபன் சார் கைவண்ணத்தில் நகைச்சுவை கதை. சூப்பர்!😐😂😂

    பதிலளிநீக்கு
  19. அரிது அரிது நம்பிக்கை இல்லா பெண்ணுடன் வாழ்தல் அரிது பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே

    பதிலளிநீக்கு
  20. அருமையான கதை. இது பல ஆண்களின் அனுபவமாக இருக்கத்தான் செய்கிறது.

    முடிவில் அசோகனின் சொல்லுவது நல்ல வார்த்தையாடல் என்று சிரிக்க வைத்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. அருமையான கதை பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  22. 'கோமு’ ஓகே. ‘கண்ணம்மா’வும் செரி. அது என்ன ‘கோம்ஸ்’? எனக்கு ’அந்த கோம்ஸ்’ (Larry Gomes, famous West Indian cricketer of the 80s) ஞாபகம் வந்து, அவரைப்பற்றிப் படிக்கப் போயிட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் ஸார் கோம்ஸ் //னா Mary Kom கூட நினைவுக்கு வரலாமே :)

      நீக்கு
  23. @ ஸ்ரீராம்: (படம்)

    ட்ரம்ப் கணக்கா ஒருத்தன் கையப் புடிச்சி இழுத்தா, பொண்ணு பதறிப்போய் ஓடத்தானே செய்வா, பொட்டியத் தூக்கிகிட்டு?

    பதிலளிநீக்கு
  24. ஹாஆஹா :) பாவம் அசோகன் போன்றோர் தப்பே செயலேனாலும் அடி வாங்கறாங்களே வீட்டில் .

    பதிலளிநீக்கு
  25. @ Angel: //ஏகாந்தன் ஸார் கோம்ஸ் -னா Mary Kom கூட நினைவுக்கு வரலாமே :)//

    வராதம்மா, வராது!

    கோமதி (Gomathi) என்பது இங்கே அசோகனின் தர்மபத்தினியின் பெயர். அதனால் ஆசிரியர் Gomes என்று நாயகன் செல்லமாக அழைப்பதாக சொல்கிறார். சரிதான்.
    Koms என்று அழைக்கமுடியாது. ஏனெனில் அந்தப் பெயர் Komathi இல்லை! அதனால்தான் மேரி
    Kom-ன் நினைவு வரவில்லை!

    மற்றபடி, Mary Kom என்கிற வீராங்கனையை எனக்கும் பிடிக்கும்!

    பதிலளிநீக்கு
  26. வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!