ஞாயிறு, 28 அக்டோபர், 2018

ஞாயிறு 181028 : புதர்ப்பூ!

புதர்ப்பூ!



ஒரு கல்யாண வீட்டின் பின்புறம் கைகழுவச் சென்ற இடத்தில கிடைத்த க்ளிக்!


வைகோ ஸார் வீட்டு பால்கனியிலிருந்து மலைக்கோட்டை 


சென்னை திரும்பும் வழியில் வண்ணவீடு!


டிஸைன் தோசை...!


கீதாக்கா வீட்டு மொட்டைமாடியிலிருந்து ஒரு க்ளிக்...



அங்கிருந்து காவிரி...



தூரத்தில் மலைக்கோட்டை!  முதலில் பகிர்ந்திருக்கும் பூ படம் மட்டுமே புதுசு.   மற்ற படங்கள் சுமார் நான்கரை வருடங்கள் பழசு!



63 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. என்ன இருந்தாலும்
      நினைவுகள் மலரோடுதான்
      மலர்ந்திருக்கின்றன...

      அதுசரி...

      விடியற்காலையில் வரும்போது ஒரு கப் காஃபி கொண்டு வந்திருக்கலாம்....

      நீக்கு
    2. காலை வணக்கம் கீதா அக்கா... நேற்றிரவு பதினோரு மணி நான் வெளியிலிருந்து திரும்பியபோது.. சட்டென கிடைத்த சில படங்களை எடுத்துக் பகிர்ந்தேன்!!

      நீக்கு
    3. துரை, காஃபி கொண்டு வந்தேனே, நீங்க தான் குடிக்கலை! :))))

      நீக்கு
    4. @ஸ்ரீராம், ரொம்ப பிசி போல! என்றாலும் படங்கள் அருமை!

      நீக்கு
    5. அந்தக் காபியை நான் எடுத்துக் கொள்கிறேன்.. நான் இன்னும் குடிக்கவில்லை.. எழுந்ததே லேட்!

      நீக்கு
    6. //ரொம்ப பிசி போல! //

      வரிசையாக முகூர்த்தங்கள் அக்கா... நேற்று வேளச்சேரியிலொரு வரவேற்பு அட்டென்ட் செய்தோம். இன்று பெரம்பூர் செல்லவேண்டும்!

      நீக்கு
  2. புதர்ப்பூ காணவரும் பூஞ்சிட்டுகள் அனைவருக்கும் நல்வரவு... ம்

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அனைத்தும் அழகோவியங்கள்...

    பதிலளிநீக்கு
  4. படங்கள் மூலமே சந்தித்த பதிவர்கள் விவரம் சொன்ன நாசூக்கை இரசித்தோம்

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. டிஸைன் தோசை நான் சுட்டது!!!!

      முகநூலில் ஆளாளுக்கு தோசையைப் பிய்த்து தின்கிறார்கள் என்று தேடிக்கொண்டிருந்தபோது அகப்பட்டது!

      நீக்கு
  6. கை கழுவும் இடத்தில் வார்க்கும் ஊத்தப்பம் பார்த்தால் டிஃபனே வேண்டாம்னு போயிருப்பேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊத்தப்பம் வார்ப்பதைப் பார்த்தால்! என வந்திருக்க வேண்டும்.

      நீக்கு
    2. இல்லை அக்கா... சுத்தமான இடத்தில்தான் வார்த்துக் கொண்டிருந்தார்கள். இது கூட உங்கள் ஸ்ரீரங்கம்தான்!!! இதற்குப் போய்விட்டுதான் உங்கள் வீடு வந்தோம் - நான்கரை (?) வருடங்கள் முன்பு..​

      நீக்கு
    3. கொடியாலம் தானே, நாங்க கூட ஒரு உபநயனத்துக்கு அங்கே போனோம்.

      நீக்கு
  7. புதர்ப்பூ மற்றும் எல்லா படங்களும் நன்றாக இருக்கிறது.
    அடை போல் தெரிகிறது. (டிசைன் தோசை!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.. அது கரைத்த தோசை என்று நினைவு... அதுவும் பழைய படமே... முகநூலுக்கு தெரிவு செய்து வைத்திருந்தேன், தேவைப்பட்டால் பகிரலாம் என்று!

      நீக்கு
  8. ஊத்தப்பத்தை மட்டும் படம் எடுத்து கொண்டு மீதியை வெட்டி இருக்கலாம் ஸ்ரீராம்.
    தூரத்தில் தெரியும் குப்பைகளை பார்த்துதான் கீதா சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரளவு வெட்டியதே இவ்வளவு இருக்கிறது கோமதி அக்கா...!

      நீக்கு
  9. அழகிய காட்சிகள் ரசிக்க வைத்தன...

    பதிலளிநீக்கு
  10. படங்கள் 4 1/2 வருடப் பழமை என்று சொல்லும்போதே தொடர்புடைய பதிவுகள் நினைவுக்கு வந்தன. வெண்பொங்கல் பற்றிய கமென்ட், ஆரண்யநிவாஸ் நெல்லிக்காய், பேன்ட் மட்டும் வந்திருக்கும் ஶ்ரீராம் படம் (கோபு சார் வீட்டில் எடுத்தது).....

    நீங்கள் எழுதாமலிருந்திருந்தால், கீசா மேடத்திடமிருந்து சுட்ட இரண்டு படங்கள் என்று நினைத்திருப்பேன். இதே படங்களை அளவில் சிறியதாக அவர் தளத்தில் சிலமுறை (பலமுறை, ஆனால் காவிரியில் தண்ணீரோடு சில முறை) பார்த,திருக்கிறேன்.

    சிலமாதங்கள் முன்பு உபநயநத்தில் காரை டிபனுக்கு தோசை போட்டது ஆச்சர்யமா இருந்தது. ஹாஸ்டல் வாழ்க்கைக,குப் பின் பெரிய தோசைக்கல்லைப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழரே, கல்யாணங்களில் காடரிங் முறை வந்ததுமே காலை டிஃபனுக்கு தோசை போடும் வழக்கம் வந்தாச்சு. அநேகமா 20 வருடங்களுக்கும் மேல் இருக்கும். 94, ஆம் வருடம் நடந்த என் நாத்தனார் பெண் திருமணத்திலேயே ரவா தோசை, மசால் தோசை, பாசந்தி, ரசமலாய் எல்லாம் இருந்தது. ரசமலாய் தான் ருசி சகிக்காது இங்கெல்லாம். :( முதல்நாள் மாலை அநேகமா ரவாதோசை போடுவார்கள். கல்யாணத்தன்று காலை மசால் தோசை அல்லது பூரி மசாலா! சில இடங்களில் கல்யாணத்தன்று இரவு ரிசப்ஷன் வைத்தால் அன்று ஊத்தப்பம் கொடுப்பார்கள். சின்னதாக இருக்கும்.

      நீக்கு
    2. எங்க பெண் கல்யாணம், பிள்ளை கல்யாணங்களில் காடரிங் செர்விஸ்காரங்க விதம் விதமான டிஃபன் பண்ணிப் போட்டு அசத்தினாங்க!

      நீக்கு
    3. ஆமாம், ஆமாம் நெல்லை... சரியாகச் சொல்கிறீர்கள். ஹாஸ்டல் வாழ்க்கை தோசைக்கல்லில் எத்தனை தோசை வார்க்கலாம்?!!

      நீக்கு
    4. @ஸ்ரீராம், அது என்ன ஞானாம்பிகாவா? ஆரம்பிச்ச புதுசுனு நினைக்கிறேன். 90களிலேயே அவங்க கான்ட்ராக்ட் எடுத்துச் செய்த கல்யாணங்களுக்கு விதம் விதமா டிஃபன் போட ஆரம்பிச்சுட்டாங்க! எங்க நாத்தனார் பெண் கல்யாணத்திலும் ஞானாம்பிகா! இன்னொரு கல்யாணத்தில் ஏ.ஆர்.எஸ். என்னும் ராஜசேகரன், திருநெல்வேலிக்காரர், ஆனால் மும்பை வாசம். ஒவ்வொரு சாப்பாடு நேரத்துக்கு மெனு கார்ட் அப்போவே கொடுப்பார். ரொம்ப காஸ்ட்லி! இட்லி எல்லாம் ஸ்டிக்கர் பொட்டு சைஸுக்குத் தான் இருக்கும். ஆனாலும் பலரும் அவரைக் கூப்பிடுவாங. அவர் இல்லைனா ஞானாம்பிகா! எங்க வீட்டில் பல கல்யாணங்கள் 90களில் நடந்தது எல்லாம் ஞானாம்பிகா தான்! தி.நகரில் கொஞ்ச நாட்கள் ஓட்டல் கூட வைச்சுட்டுப் பின்னர் சரிவரலைனு மூடிட்டாங்க! 90களின் கடைசியில் தான் எங்க பொண்ணு கல்யாணமும்! அப்போவும் ரவா தோசை, மசால் தோசை, பூரி, சனா,வெரைடி ரைஸ் என ஒரே அமர்க்களம்! ஐஸ்க்ரீம் வித் குலாப் ஜாமூன்!

      நீக்கு
    5. பெயரெல்லாம் நினைவில்லை அக்கா.

      இப்ப கூட மெனுகார்ட் கொடுக்கறாங்க, என்னென்ன சாப்பிட வச்சிருக்காங்கன்னு...

      நீக்கு
    6. ஞானாம்பிகா அறுசுவை நடராஜனின் குடும்பத்தவர் நடத்துவது! அதான் சென்னையில் பிரபலமானதும் கூட. இப்போல்லாம் கொஞ்சம் கொஞ்சம் ராஜசேகரனும் வந்துட்டார். வட இந்திய முறைப்படி ரிசப்ஷனுக்கு உணவுகள் தயாரிப்பது, ஸ்டால் போடுவது எல்லாம் அவரால் அறிமுகம் ஆனது தான்!

      நீக்கு
    7. //ஹாஸ்டல் வாழ்க்கை தோசைக்கல்லில் எத்தனை தோசை வார்க்கலாம்?!!// - சும்மா இல்லாம இந்தக் கேள்வியைக் கேட்டு என் ஹாஸ்டல் வாழ்வை நினைவுகூர வைத்துவிட்டீர்கள்.

      ஹாஸ்டலில், இரண்டு தோசைக் கல் உண்டு. ஒன்றில் ஊத்தப்பம் (1/2 அடி விட்டம்) 24-30 போடுவார்கள். சுமார் 200+ ஹாஸ்டல் மாணவர்களுக்கு 4+ தோசை வீதம் தயாரிக்கணும். இது 10 வரை, +1/+2 ஹாஸ்டல், இளங்கலை மற்றும் முதுகலைக்குப் பொருந்தும். இளங்கலையில் அவ்வளவாக தோசை போடமாட்டார்கள். முதுகலையில், ஞாயிறு அன்று, ஒரு அடி விட்டமுள்ள மெல்லிய தோசை ஒருவருக்கு 4-5 போடுவார்கள். ஞாயிறு, 5, 10 பேராக போகப்போக தோசை போடுவார்கள் (வார்ப்பது எளிது). ஊத்தப்பத்தில் பெரிய வெங்காயம் அங்கு அங்கு தெரியும். +1/+2வில், ஸ்கூல் விட்டுவிட்டு வந்ததும் டிஃபன் உண்டு. ஒரு காரம், ஒரு ஸ்வீட், டீ. வாரம் ஒரு முறை, மெல்லிய சாதா தோசையும், ஒரு வாழைப்பழமும் டிஃபனுக்கு உண்டு.

      பெரும்பாலும் ஸ்கூல், +1/+2 ஹாஸ்டலில் ஒரு டைம் டேபிள் உணவுக்கு உண்டு. ஸ்கூல் ஹாஸ்டலில், வெள்ளிக்கிழமை காலை 6 சப்பாத்தி, வெள்ளி மதியம் பாயசம், புதன் காலை 2-3 பூரி, 4 இட்லி என்று இருக்கும். +1/+2வில், திங்கள் மதியம் எலுமிச்சை/தயிர் சாதம் (மட்டும்தான்), புதன் மோர்க்குழம்பு, வெள்ளி பாயசம் என்றெல்லாம் இருக்கும். இந்த இரண்டு ஹாஸ்டலிலும் லிமிடட் உணவுதான் (மொத்தச் செலவு எல்லோருக்கும் பகிரப்படும்).

      ஒரு தடவை, +2 ஹாஸ்டல் வார்டன், இரவு டிஃபன் அன்லிமிடட் என்று ஆரம்பித்தார். ஒரு மாதத்தில் உணவுச் செலவு மிக அதிகமாகிவிட்டது (பூரி, சப்பாத்திலாம் அவனவன் 8-10 என்று சாப்பிட ஆரம்பித்துவிட்டான்). அதனால் செலவைப் பகிரும்போது கொஞ்சம் வசதி குறைந்த மாணவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். உணவு செய்வதும் கடினமாகியது. அதனால் அந்த மாதத்தோடு மீண்டும் லிமிடட் டிஃபன் என்று தொடர்ந்துவிட்டனர்.

      நீக்கு
    8. @கீசா மேடம் - //காலை டிஃபனுக்கு தோசை போடும் வழக்கம் வந்தாச்சு. அநேகமா 20 வருடங்களுக்கும் மேல் இருக்கும்.// நான் ஒரு திருமணம் 1989ல் சென்னையில் அட்டெண்ட் பண்ணினேன். அவங்க பணக்காரங்க என்பதால் (பெண் வீட்டில் பெற்றோர்கள் குவைத்திலேயே பலகாலம் பணிபுரிந்தவர்கள், ஒரே மகளின் திருமணம் என்று நினைக்கிறேன்), நல்ல கேடரிங் போட்டிருந்தாங்க. ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் டிஃபன், அதிலும் ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு என்று ரொம்ப ரிச் ஆக இருந்தது.

      சில சமயம் சாப்பாடோ டிபனோ நல்லா ரசிச்சுச் சாப்பிடலாம்னு பார்த்தா, அப்போதான் பார்க்கிறவங்க நிறையபேர் பேச வருவாங்க. அப்புறம் 'இன்னும்'னு கேட்க மறந்துடும், அல்லது வாய்ப்பு இருக்காது. பல சமயங்களில், நமக்கு தேவையில்லாதபோது (அதாவது காய்கறிகள் அப்போதான் போட்டுட்டுப் போயிருப்பாங்க, இன்னும் வேணுமா என்று இரண்டாவது தடவை கேட்டுக்கிட்டே வருவாங்க. இப்படித்தான் இன்னும் கேட்பாங்க போலிருக்கு என்று நினைத்து கறிவகைகளை காலி பண்ணிட்டு ரசம் சாதத்தின்போது பார்த்தால் ஒருத்தரும் பக்கத்திலேயே வரமாட்டாங்க. இதெல்லாம் தெக்கினிக்கு போலிருக்கு ஹாஹா) வேணுமா வேணுமா என்று சாஸ்திரத்துக்குக் கேட்பாங்க போலிருக்கு.

      நீக்கு
  11. தனி வீடு தீரன் அதிகாரம் படத்தை நினைவுபடுத்தியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா.. எனக்குத்தெரிந்து இந்த டிஃபன் பழக்கம் 2000 க்குப்பிறகுதான் ஒரு மாற்றம் வந்தது. ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் ஒரே மாதிரி மெனு!

      நீக்கு
    2. தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இப்படி தனியாக இருக்கும் வீடுகளைக் குறி வைத்துக் கொள்ளைகள் நடக்கும் கீதாக்கா... அதைச் சொல்கிறார் நெல்லைத்தமிழன்.

      நீக்கு
    3. அப்படி எல்லாம் படம் வந்திருக்கா? தெரியாது!

      நீக்கு
  12. காலை வணக்கம்.

    அழகான படங்கள். பூ படம் - அழகாக வந்திருக்கிறது. மற்ற படங்கள் முன்னரே பார்த்த நினைவு. கீதாம்மா வீட்டிலிருந்து நானும் படங்கள் எடுத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட். நன்றி. மற்ற படங்கள் என்பது கீதாக்கா மாடியிலிருந்து, வைகோ ஸார் பால்கனியிலிருந்து எடுக்கப் பட்ட படங்களும் நான் பகிரவில்லை என்றாலும் அவர்கள் எடுத்துக் போட்டிருந்திருப்பார்கள். ஒரே இடம்தானே?

      நீக்கு
  13. மும்பையிலிருந்து வணக்கம்! காவேரியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதால் சமீபத்திய படம் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்திய படம் இல்லை பானுமதி! நாலரை வருடம் முன்னர் எடுத்த படம்! :)

      நீக்கு
    2. நன்றி பானு அக்கா... ஆம், அப்போதும் காவிரியில் தண்ணீர் வரத்து இருந்தது.

      நீக்கு
  14. முதல் பூ புதர்ப்பூ அழகாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுகள்.

    மற்ற படங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
  15. பதிவுகள்போட நான் மட்டும்,அல்ல பின் நோக்கிப் பார்ப்பதில் என்பதும் அற்ப சந்தோஷ்ம்

    பதிலளிநீக்கு
  16. கீசாக்காவும் கோபு அண்ணனும் ஶ்ரீராமை மொட்டை மாடியிலதான் வச்டுப் பேசினவையோ:)..

    பதிலளிநீக்கு
  17. 4 வருடத்துக்கு முன்பும் காவிரியில் தண்ணி இருந்ததோ, நான் இப்போதைய காவிரி என நினைச்சேன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
  18. குளிர்ச்சியான படங்கள்...அழகு

    பதிலளிநீக்கு
  19. படங்கள் பழசாகும் போது நினைவுகள் புதுப்பிக்கப் படும்.
    அத்தனையும் திருச்சிப் படங்களாகக் காவிரியும் மலைக் கோட்டையும் மனசுக்கு மகிழ்ச்சி. தோசை பார்க்கப் பசியைத் தூண்டுகிறது.
    புதர்ப்பூ மிக அழகு.நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  20. டிசைன் தோசையில் மிரட்டல் அனைத்தும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!