புதன், 11 டிசம்பர், 2019

புதன் 191211 :: சினிமாவுக்குச் சென்று தூங்கும் குழுமத்தில் நீங்களும் உண்டா?




கீதா சாம்பசிவம் : 

                
(இந்தக் கேள்வியைக் கேட்கலாமா வேண்டாமா எனப் பலத்த சிந்தனை/ ஆனாலும் இது பொதுவாகக் கேட்பது தான். யாரையும் குறிப்பிட்டுச் சொல்லுவது இல்லை.)
               
பெண்கள் எப்படி உடை அணிந்தாலும் ஆண்களுக்கு அவர்களிடம் ஈர்ப்பு வருவதை ஒத்துக்கலாம். ஆனால் அந்த ஈர்ப்பு பலாத்காரம் செய்வது, கொல்வது வரை போவது சமீப காலங்களில் அதிகரித்து வருவது ஏன்?






# ஈர்ப்பு கொடூரமாக மாறுவது மாபெரும் சோகம். அது ஏன் என்பது குற்றம் புரிவோரின் வளர்ப்பு, பின்னணி, அறிவு,  புலன் இன்ப நாட்டத்தின் தீவிரம் ஆகியவற்றைச் சார்ந்திருக்கும்.  பிள்ளைப் பிராயத்தில் நல்ல பின்னணி மிக முக்கியம்.
"போட்டுத் தள்ளிடுவாங்க" எனும் பயம் உண்டாக்கப் பட்டுள்ளதை வரவேற்பதா என்று புரியவில்லை.
                  
தான் பாட்டுக்குத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு செல்லும் பெண்ணிடம் கூட பலாத்காரம் செய்து அவளை எரித்துக்கொல்லும்வரை போகும் ஆண்கள் உண்மையில் மனிதர்களா?
               
# இவ்வகை நபர்கள் விலங்கினும் இழிந்தவர்கள்.

//மேலுள்ள கேள்வியைக் கொஞ்சம் திருத்திக் கேட்டிருக்கேன்! // கோயில் சிலைகளில் ஆண், பெண் இணைந்திருப்பதைக் காட்டுவது ஆன்மிகத்தின் அடிப்படையே என்பதைப் புரிந்து கொள்ளாமல் அனைவருக்கும் ஆபாசமாகத் தோன்றுவது ஏன்? ஏன் இங்கே அனைவரும் வந்து போகும் இடங்களில் இவைகள் வைக்கப்பட்டுள்ளன என்பதன் தாத்பரியத்தை அறிந்து கொள்ளாமல் நம் வசதிக்கு ஏற்பப் பேசுவது சரியா? நம் முன்னோர்கள் இவற்றின் உண்மையான தாத்பரியத்தைப் புரிந்து கொள்ளாமலா வைத்திருப்பார்கள்?

# Explicit சிலைகள் எனக்கு உறுத்தவே செய்கின்றன. தாத்பரியம் தத்துவம் எனக்குப் பிடிபடவில்லை.
          
             
கோயில்களின் கட்டுமானத்தின் அடிப்படையைப் புரிந்து கொண்டு எல்லோரும் தரிசிக்க இயலாது. ஆனால் இத்தகைய சிலைகள் ஏன் வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா? அதை விடுத்து ஆபாசத்தை மட்டுமே முன்னிறுத்துவது ஏன்?


# பார்க்க ஆபாசமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.
             
சங்கத்தமிழ், சிலப்பதிகாரக் காலத் தமிழ், பக்தி காலத்தின் தேவார, திருவாசகங்களின், பிரபந்தங்களின் தமிழ் இவற்றில் நிறைய வேறுபாடு காண முடியும். ஆனாலும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்பது எதைக் காட்டுகிறது?

# பழைய இலக்கியங்கள் எல்லாம் புரிந்து கொள்ள எளியனவல்ல. காலாகாலமாக செய்யுள் தமிழ் தனித்தன்மையதாய் இருந்திருக்கிறது.
 
வடமொழி ஆதிக்கம், ஆரியப் படையெடுப்பு என்றெல்லாம் சொன்ன காலத்தில் தமிழில் ஏற்பட்டிருந்த மறுமலர்ச்சி இப்போது நிலைத்து இருக்கிறதா?

# சமீப காலமாக தமிழ் மறுமலர்ச்சி என் கண்ணில் படவில்லை. அது என் தவறினால் கூட இருக்கலாம்.

கம்பரும் சரி, வில்லிபுத்தூராரும் சரி, சம்ஸ்கிருதம் படித்தே முறையே ராமாயணம், மஹாபாரதம் எழுதினார்கள். அப்படி இருக்கையில் சம்ஸ்கிருதம் வந்து தமிழை அழித்துவிடும் என்று சொல்லுவது சரியா?
சம்ஸ்கிருத வெறுப்பு இடையில் வந்தது தான் அல்லவா? ஏனில் ஸ்தபதிகளும், சிற்பிகளும், மருத்துவர்களும், நடனக்கலை ஆசிரியர்களும் கட்டாயம் சம்ஸ்கிருதம் படித்தே ஆகவேண்டும். அப்படி இருக்கையில் அதனால் தமிழ் அழிந்து விடும் என நம்ப வைப்பது சரியா?
         

# மொழி ஆதிக்கம் வேறு பயன்பாடு வேறு. வடமொழி ஆதிக்கம் என்பது ஒரு மாயை.
             
தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆங்கிலத்தை ஏன் யாருமே எதிர்ப்பதே இல்லை? அது நம் நாட்டு மொழியா?

# ஆங்கிலக் கலப்பை எதிர்ப்போர் எப்போதும் உண்டு. அது கிட்டத்தட்ட நம் நாட்டு மொழி அந்தஸ்துடன்தான் இருக்கிறது.
            
நெல்லைத்தமிழன் : 
                     
1. 60 வயது தாண்டியவர்கள் செய்யக்கூடாதது என்ன என்ன? - 


# 30 வயதுக்காரராக எண்ணிக் கொள்ளக் கூடாது. 

&கடந்த காலங்களை எண்ணி சந்தோஷமோ அல்லது துக்கமோ படாமல் நிகழ்காலத்தில் சந்தோஷமாக. நிம்மதியாக வாழ வேண்டும். 

2. நெட் ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார்.... போன்ற பல வாய்ப்புகள் இருக்கும்போது  இந்தியாவில் மிகவும் செலவு பிடிக்கும் படியாக ஏன் திரை அரங்கத்தில் படம் பார்க்கணும்? 

 # "என்ன இருந்தாலும் தியேட்டரில் பார்ப்பது மாதிரி ஆகாது" எனப் பரவலாகப் பேசப்படுவதைக் கேட்டதில்லையா ? இது ஒரு அன்வைண்டிங்.

& என்னதான் வீட்டில் சௌகரியமாக அமர்ந்து கிரிக்கட் பார்க்க முடியும் என்றாலும், ஸ்டேடியத்தில் சென்று பார்க்க எக்கச்சக்க செலவு செய்து பார்க்கின்ற ஒரு த்ரில் வராது என்று சொல்பவர்களும் உண்டுதானே! 

என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் அந்தக்காலத்தில், இசைவிழா சீசனில் என்னோடு சேர்ந்து நிறைய சபாக் கச்சேரிகளுக்கு வருவார். காசெட் சங்கீதம் கேட்பது அவருக்குப் பிடிக்காது. 'ஏன்' என்று கேட்டேன். 
அவர் சொன்ன பதில்: 
கச்சேரி என்றால், சும்மா பாட்டுக் கேட்பது இல்லை. 
கச்சேரி ஆரம்பிப்பதற்கு முன்பு நமக்காக ரிசர்வ் செய்துள்ள இருக்கையில் அமர்ந்து அதன் ஏ சி குளிரை அனுபவிக்கணும். அப்படியே சுற்றிலும் பார்த்து, நம்மைப்போல இந்த பாடகருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்து சந்தோஷப்படணும். அப்படியே சுற்றிலும் உள்ள ரெட்டை சடை, பாவாடை தாவணிகளை பார்த்து ஜொள்ளு விடணும். கச்சேரி ஆரம்பிப்பதற்கு முன்னால வயலின்காரர், மிருதங்கக்காரர், தம்பூரா ஸ்ருதி சப்தம் எல்லாவற்றையும் கேட்டு ஆனந்திக்கணும். ஆலாபனையின் போது பாடகர் பாடும் இராகத்தைக் கண்டுபிடித்து சந்தோஷப்படணும். முழுக் கச்சேரியையும் கேட்டு, மங்களம் பாடி முடித்தபின், எழுந்து நின்று கை தட்டணும். வெளியே வந்து சூடாக ஒரு ஸ்ட்ராங் காபி - பித்தளை டம்ளர் / டபரா செட்டில் வாங்கி, ஆற்றிக் குடிக்கணும். இப்படி எல்லாம் செஞ்சாதான் அது ஒரு முழுமையான அனுபவம். 

இவை யாவுமே, தியேட்டரில் பார்க்கும் பட அனுபவம் கிரிக்கட் பார்க்கும் அனுபவம் எல்லாவற்றுக்கும் பொருந்தும். ஆனால் இவற்றை ரசிக்க இருபது முதல் நாற்பது வயதுக்குள் இருந்தால் உத்தமம்!  


3. ஸ்கைப் போன்ற வழிமுறைகள் இருக்கும்போது நேரில் ஒருவர் வீட்டிற்குச் சென்று சந்திப்பது எந்த விதத்தில் வித்தியாசமானது? 

 # பாடி லாங்வேஜ் ஸ்கைப்பில் மிஸ்ஸிங்.   

& ஸ்கைப், வாட்ஸ்அப் வீடியோ கால் எல்லாமே குறைந்தபட்சம் ஒருநாள் / அதிகபட்சம் ஒருமாதம் நினைவில் இருக்கும். ஆனால், நேரில் நடக்கும் சந்திப்புகளை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது. (எப்போ வருகிறீர்கள்?) 

4. எபி ஏன் அவர்களது வாசகர் சந்திப்பை நடத்துவதில்லை?

# பல சமயம் அநாமதேயம் சௌகரியமானது.

& ஆரம்பகாலத்தில் நாங்கள் கொஞ்சம் முயன்று பார்த்தோம். அலைபேசியில் எங்களைத் தொடர்புகொண்டு பேசலாம் என்று சொல்லியிருந்தோம். ஒன்றிரண்டு வாசகர்கள் தொடர்புகொண்டு பேசினார்கள். 
அப்புறம் ஒரு ஜனவரி ஒன்றாம் தேதி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம். 
2011 என்று நினைக்கிறேன். அப்போது பதிவர் + முகநூல் நண்பர்கள் என்று சொல்லியிருந்தேன். சந்திப்புக்கு, நண்பர்கள் பால கணேஷ், கோவை ஆவி, தீபக் ராம், 'திராவிட மாயை' எழுதிய சுப்பு மணியன் (மேலும் ஒருவர் - பெயர் மறைந்துவிட்டது!) ஆகியோர் வந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பிரிந்து சென்றனர். 

வாசகர் சந்திப்புக்கு வருகின்ற வருடம் ஏதேனும் வழி கிடைக்கிறதா என்று பார்ப்போம். 

5. Buy 1 Get 2, 70% விலை குறைப்பு - இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?

# அதில் உள்ள உண்மை சாதாரண விலை அநியாயமாக மிகைப் படுத்தப் பட்டது என்பதே.

& நம்பிக்கை இல்லை. ஆனால், எப்படியோ நான் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடையில் சோன் பப்டி வாங்கும் சமயங்களில் மட்டும் Buy 1, get one free ஆஃபரில்தான் எப்பொழுதும் வாங்கியிருக்கிறேன்! 

6. பதிவுக்கு பின்னூட்டம் இடும் அனைவரும் இடுகையை படிக்குறார்கள் என நினைக்கிறீர்களா?

# அது கருத்தில் பிரதிபலிக்கும் ஆகையால் ஐயத்திற்கிடமில்லை.

& ஹி ஹி ! என்னங்க உங்களுக்குத் தெரியாதா! 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

சினிமாவுக்குச் சென்று தூங்கும் குழுமத்தில் நீங்களும் உண்டா?

# இரண்டொரு முறை உண்டு.

& உண்டு. 
           
நாகையில் சுமதி என் சுந்தரி படத்தை இரண்டாம் முறை பார்ப்பதற்கு, செகண்ட் ஷோ காண அண்ணன் கூப்பிட்டதால் சென்றேன். படத்தின் ஆரம்பக் காட்சிகளையும் பாட்டு காட்சிகளையும், நாகேஷ் காமெடியும் மட்டும் பார்த்துவிட்டு, மீதி நேரங்களில் தூங்கினேன். 

அலுவலக டூர் நாட்களில் ஒருமுறை ஹோசூர் தொழிற்சாலைக்குப் போயிருந்தேன். வந்த வேலை இரண்டு மூன்று நாட்களில் முடிந்தது. ஹோட்டலில் தங்குகின்ற செலவைக் குறைக்க ( தங்க ஆரம்பித்த நேரத்திலிருந்து ஒவ்வொரு  இருபத்து நான்கு மணி நேரமும் ஒருநாள் என்ற  கணக்கு ஆனால், மாலை ஆறுமணிக்கு மேலே தங்கினால் ஒருநாள் கணக்கு ஆகிவிடும்.) மாலை மூன்றரை மணிக்கே அறையைக் காலி செய்து  பேருந்து  நிலையத்திற்கு வந்தேன். ஆனால், இரவு பத்துமணி பேருந்து பயனத்துக்குதான் டிக்கெட் கிடைத்தது. என்ன செய்வது? 
பக்கத்திலிருந்த ஹோட்டலுக்குப் போய் நிதானமாக டிபன் சாப்பிட்டு, காபி சாப்பிட்டு, நிதானமாக பணம் கொடுத்து வெளியே வந்தாலும் மணி நாலே முக்கால்தான் ஆகியிருந்தது. 

பேருந்து நிலையத்தி சுற்றிச் சுற்றி வந்து கால்கள் வலித்தன. மேலும் வெளிப்பிரகார சுற்று செய்யும்போது ஒரு தியேட்டர் கண்ணில்பட்டது. 

ரிக்-ஷா மாமா என்ற படம். 

சந்தோஷமாக  டிக்கெட் வாங்கி, உள்ளே சென்று உட்கார்ந்து நன்றாகத் தூங்கினேன். படம் முடிந்து எல்லோரும் வெளியே சென்றபின் கடைசி ஆளாக வெளியே வந்து, ஓட்டலில் சப்பாத்தி சாப்பிட்டு, பேருந்தில் ஏறி உட்கார்ந்து, தூக்கத்தை பயணத்தின்போது தொடர்ந்தேன். 

மதுரை மீனாட்சி லட்டு ப்ரசாதம் கிடைத்ததா?

# இன்னும் இல்லை. 

& இல்லையே! எங்கே கொடுக்கிறார்கள்? 

பெண் வேடம் போட்ட நடிகர்களில் யாருக்கு அது கச்சிதமாக பொருந்தியதாக நினைக்கிறீர்கள்?

 # யாருக்கும் இல்லை. போனால் போகிறது என்று பார்த்தால் சோ & கமல் சண்முகி.

& என் வோட்டு கமல் & பிரசாந்த். 

 ==================================================

அவல், பொரி & கடலை 

சென்ற வாரம் கேட்டிருந்த படம் இதுதான் : 

பூன்ஜி 



எனக்கொரு டவுட்டு. இந்த 'மூஞ்சி'யை எல்லாம் பார்க்க, 'பூன்ஜி' படத்துக்கு அப்போ எத்தனைப் பேர் போயிருப்பாங்க? 



இதை எழுதிய எழுத்தாளர் யார்? 




காரின் விலை இவ்வளவு குறைந்து இருந்த நாட்களில், ரேடியோவின் விலை என்னவாக இருந்திருக்கும்? 
எல்லோரும் பதில் சொல்லுங்க / எழுதுங்க. 
யார் சொல்வது சரியாக இருக்கிறது என்று பார்ப்போம். 

கொக்கி : 


====================================================

மீண்டும் சந்திப்போம்! 

====================================================

117 கருத்துகள்:

  1. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்...

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க! நம்ம ஏரியா பதிவில் பாதி கதை படித்தீர்களா? மீதி கதை உங்கள் கோணத்தில் எழுதினால் வரவேற்போம்!

      நீக்கு
    2. அப்போ, மத்தவங்க அவங்க கோணத்தைல எழுதினா வரவேற்பு கிடையாதா?

      போட்டியை விளையாட்டா எடுத்துக்கிட்டு பின்னூட்டத்துல கால் பக்க கதை எழுதறவங்களைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க? (நான் ஶ்ரீராமைச் சொல்லலை)

      நீக்கு
    3. பிராக்கெட் கமெண்ட்தான் சந்தேகத்தைக் கிளப்புது!

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பான வணக்கங்கள் - நண்பர்கள் எல்லோருக்கும்!

      நீக்கு
  3. பொங்கி வரும் பூம்புனலாய் புதன்...

    அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.  காலை வணக்கம்.

      நீக்கு
    2. பொங்கி வரும் பூம்புனலாய் புதன்...
      தங்கு தடையின்றி யாவரும்
      பங்கு பெற வாருங்கள்.

      நீக்கு
  4. இன்று காமக்கொடூரன்கள் பெறுகி வருவதற்கு காரணம் தாய்மார்கள் முக்கிய பங்கு எல்லோருமே ஆண் பிள்ளையை பெற்றுக் கொள்ளவே விரும்புகின்றனர்.

    பெண் பிள்ளைகளையும் கலந்து பெற்று சகோதரிகளோடு பழகி வாழும் பழக்கத்தை நாம் மறந்து விட்டோம் இதுவே அடிப்படை காரணம்.

    சகோதரியை தொட்டு, தூக்கி வளராதவன் சமூகத்து பெண்களை போதைக் கண்ணோட்டத்துடன் காண்கிறான்.

    இதற்கு இன்றைய ஊடகங்களும், திரைப்படங்களும் தூபமிடுகின்றன...

    இத்துடன்....
    பொதுவெளியில் பெண்களின் அவசியமற்ற ஆபாச உடைகளும் காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா எழுதியிருக்கீங்க கில்லர்ஜி...

      ஆனா பெண்ணியவாதிகள் பொங்கிடப் போறாங்க

      நீக்கு
  5. ஈர்ப்பு எல்லை கடந்து போவது ஏன்?...

    வளர்ப்பு சரியில்லை... பிள்ளைகள் வளர்ப்பில் பிறத்தியார் மீது பாசம் எனும் நூலிழை அறுந்து / அறுக்கப்பட்டு வெகு காலமாகி விட்டது....

    குடும்ப கௌரவம் என்ற ஒன்று அந்த காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்றைக்கு கற்பிக்கப்பட்டது..

    அதைக் கற்பிப்பவர்கள் பெரும்பாலும் தந்தை வழி சித்தப்பா, அத்தை இவர்கள் தான்...

    இன்றைக்கு அந்த நடைமுறை இருப்பதாகச் சொல்ல முடியுமா?..

    தஞ்சை மாவட்டத்தின் பல பகுதியிலும்
    தாம் பெற்ற பிள்ளைகளையே

    பெரிய தங்கச்சி சின்ன தங்கச்சி என்றும்
    பெரிய தம்பி சின்னத் தம்பி என்றும் அழைப்பது பாரம்பரியம்....

    இன்றைய காலகட்டத்தில்
    ஒற்றை ஒற்றையாய் பெற்றுக் கொண்டு
    அதையும் கள்ளியாய் கற்றாழையாய் வளர்த்துக் கொடுக்கிறார்கள்.. கொடுக்கிறார்கள்...

    கள்ளி கற்றாழையால் கூட பயன் இருக்கிறது..

    உள்ளங்களை ஒழுங்குபடுத்தும்
    உறவு முறைகள் அற்றுப் போயின...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்துகள்.
      சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.
      வளர்ப்பும், சூழ்நிலையும்தான்
      குற்றவாளிகள் பெருகக் காரணம்.

      நீக்கு
  6. ஆகா..

    தூரங்கள் தொலைவாக இருக்க
    எண்ணங்கள் ஒன்றாக இருக்கின்றன..

    அன்பின் கில்லர் ஜி அவர்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இங்கே சாயங்காலம் என்பதால் இன்னிக்குத் திருக்கார்த்திகை விளக்குக்ள் ஏற்றுவதில் மும்முரமாய் இருந்ததால் வரலை. படங்கள் எடுத்திருக்கேன். ரொம்பவே எளிமையான கார்த்திகை தீபத் திருநாள். அங்கே எல்லோருக்கும் அண்ணாமலை தீபம் முடிந்து, சர்வாலய தீபத்திருநாள் வந்திருக்கும். அனைவருக்கும் உளமார்ந்த தீபத்திருநாள் வாழ்த்துகள். (சீர் கொடுக்கிற அண்ணன், தம்பி எல்லோரும் மறக்காமல் அனுப்பி வைங்கப்பா! டாலர்லேயே இருக்கட்டும். :P)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க ஊர்ல திருவிழா நடக்கும்போது வித விதமான டாலர்களுடன் சங்கிலி கிடைக்கும். என்ன டாலர் வாஎண்டும் சொல்லுங்க. முருகன்? பிள்ளையார்?

      நீக்கு
    2. கேஜிஜி சார்.. அவசரம் வேண்டாம்.

      முதல்ல நமக்கு பொரி உருண்டை, மாவிளக்குலாம் கொரியர்ல வரட்டும். அப்புறம் எந்த டாலர்னு தீர்மானிச்சுக்கலாம்

      நீக்கு
  8. அடுத்துப் பொங்கலுக்குக் கனுச்சீர் வேறே இருக்கு! சேர்த்தே அனுப்பறவங்க சேர்த்தே அனுப்பிடுங்க! இஃகி,இஃகி,இஃகி! வழக்கமா பதிவிலேயும் , முகநூலிலேயும் தான் போடுவேன். இன்னிக்கு இங்கேயே போட்டாச்சு! இங்கே தான் கூட்டம் அள்ளுமே! (இன்னிக்குனு யாரும் வராமல் இருந்துடப் போறாங்க! ம.சா.சொல்லுது!)

    பதிலளிநீக்கு
  9. //# Explicit சிலைகள் எனக்கு உறுத்தவே செய்கின்றன. தாத்பரியம் தத்துவம் எனக்குப் பிடிபடவில்லை.// இது குறித்து எங்க குரு விளக்கங்கள் கொடுத்திருக்கார். விரிவாக ஒரு முறை சொல்லணும்/எழுதணும்! பார்ப்போம். இரண்டு நாட்களாக இங்கே சீதோஷ்ண நிலை சரியில்லாததால் உடல் நலம் சரியில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செலவு வரப் போகுதுன்னா அந்த இடத்துக்குப் போகத் தயங்குவார்கள்தாமே.

      நான் உங்க இரண்டு பின்னூட்டங்களையும்படிக்கலை கீசா மேடம். ஏதேனும் எனக்கு செலவு வைப்பதாக இருக்கும், வரவுக்கு வழியின்றி

      நீக்கு
    2. // இரண்டு நாட்களாக இங்கே சீதோஷ்ண நிலை சரியில்லாததால் உடல் நலம் சரியில்லை.// விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனைகள்.

      நீக்கு
  10. ரேடியோவெல்லாம் அந்தக் காலங்களில் ஆடம்பரம்/ பணக்காரங்க தான் வைச்சுப்பாங்க! அதோடு தபால் நிலையத்தில் பணம் கட்டி உரிமம் வாங்கணும்! இல்லைனா ரேடியோ வைச்சுக்க முடியாது! நானெல்லாம் சுமார் பதினெட்டு வயது வரை(கல்யாணம் ஆகும்வரை) பக்கத்து வீட்டு ரேடியோவிலோ தாத்தா வீடு போனால் அங்கேயோ தான் பாட்டுக் கேட்பது வழக்கம். நிலையத்தில் பாடல்களை ஒலிபரப்புச் செய்யும் விதம் புரியாமல் பக்கத்து வீட்டு மாமாவிடம் எனக்குப் பிடித்த பாடல்களைச் சொல்லி அதைப் போடுங்க மாமா என்று கேட்பேன். அவர் சிரிப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஏழாங்கிளாஸ் படிக்கும்போது எமரால்ட் என்ற ஊரில் எனக்கு வெங்கடாசலம் என்ற ஆறாம் வகுப்புப் படிக்கும் நண்பன் இருந்தான். அவன் அப்போ சொன்னது: " ரேடியோ ஸ்டேஷனுக்கு லெட்டர் எழுதப் போறேன். நீ 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி பாட்டை வைக்கவில்லை என்றால் உன்னுடைய ரேடியோவை நான் வாங்கமாட்டேன்!" என்று. அப்போ எனக்கு அது நியாயமாகத்தான் பட்டது!

      நீக்கு
    2. //..ஏழாங்கிளாஸ் படிக்கும்போது எமரால்ட் என்ற ஊரில் எனக்கு ..//

      இந்த எமரால்ட்-தானே ‘கைலாஸா’வின் தலைநகர் ? அப்போதே உங்களுக்கு இங்கெல்லாம் சம்பந்தம் இருந்திருக்கிறதா!

      நீக்கு
    3. அடக்கடவுளே! இப்படி வேற ஒன்று இருக்கா! நான் சொன்ன எமெரால்ட் நீலகிரிப் பகுதியில் இருக்கு.

      நீக்கு
    4. ஏகாந்தன் சார்... சரியான சந்தேகம். பாராட்டறேன்.

      கைலாஸா வெளியுறவுத்துறைல தலைமைப் பதவிக்கும் ஆள் தேவையாயிருக்கு

      நீக்கு
  11. பதில்கள்
    1. அவங்க, யார் பண்ணின டின்னர்னு சொல்லவே இல்லையே. அதுக்குள் எஞ்சாய்னு சொல்லிட்டீங்க?

      நீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த இனிய நாள் பொன்னாளாக பிரகாசிக்கவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. /// காம கலா சிற்பங்களைப் பற்றி!...///

    நான் 9,10, 11 என மூன்று வகுப்புகளையும் படித்த பள்ளி புகழ் பெற்ற சிவ ஆலயத்தின் மிக அருகில் இருந்தது...

    அருகிருந்த கிராமத்தில் இருந்து மூன்று மைல் நடந்து வருவதில் முதல் ஆளாக வந்து விடுவதும் உண்டு...

    எஞ்சியிருக்கும் நேரத்தில் சக மாணவர்களுடன் கோயிலுக்குள் சுற்றி வருவது வழக்கம்...

    அந்தக் கோயில் அப்போது தான் கும்பாபிஷேகம் முடிந்து பொலிவுடன் இருந்தது...

    கண்ணுக்கு எட்டிய அளவில் ராஜ கோபுரத்தின் இப்படியான சுதை சிற்பங்கள்...

    கோயிலுக்கு எதிரில் தெப்பக்குளம்..
    அதன் அருகில் பெரிய தேர்கள்..

    அவற்றிலும் இப்படியான சிற்பங்கள்...

    காலை நேரத்து கோயில் வழிபாடு என்பதால் சக மாணவிகளும் இளம் பெண்களும் கோயிலில் இருப்பர்...

    பாலியல் கலை காட்டும் சிற்பங்கள் எல்லாருடைய கண்களிலும் படுவதாகவே இருந்தன...

    சரி... நேரமாகி விட்டது...
    முடிந்தால் (!) பிறகு சொல்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டத்தில் கூட சஸ்பென்ஸ் !

      நீக்கு
    2. இதோ.. வந்து விட்டேன்..

      பின்னொரு நாள் சக மாணவன் ஞான சேகரன் துணிந்து கேட்டு விட்டான் தமிழாசிரியரிடம்....

      அவர் திருமிகு பாலசுந்தரம் ஐயா அவர்கள்..

      பிரசாதம் கதையில் கூட அவரைச் சொல்லியிருக்கிறேன்...

      வீட்டிலிருந்து அவர் ஒருவருக்காக நான்கு பேர் அளவுக்கு மதிய சாப்பாடு வண்டியில் வரும்...

      தனக்கு சிறிதளவு போக மீதத்தை ஏழை மாணவர்களுக்குக் கொடுத்து விடுவார்...

      70 ல் சபரி மலைக்கு சென்று வந்ததும் துறவுக் கோலம் கொண்டார்..

      அப்படியாகப்பட்ட ஆசிரியர் கொடுத்த விளக்கம் தான் இன்று வரை என் மனதில்...

      காம, குரோத, மோக,லோப, மத, மாச்சர்யம் - என்ற எல்லாவற்றையும் கடந்தால் தான் இறை தரிசனம்..

      மோகம் என்பதும் ஒரு யோகம்.. அதையும் கடக்க வேண்டும்... அந்த சிற்பங்கள் உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் பரீட்சை...

      தேர்வதும் தேறாததும் உங்களுடையது...

      ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அதீத அறநெறியில் நின்ற மக்களைப் புலன் நுகர்ச்சியில் திருப்புவதற்கும் இந்த சிற்பங்கள் மறைமுகமாக உதவின...

      நீங்கள் பக்குவமடையும் காலத்தில் கனிவும் கருணையும் அந்தச் சிலைகளில் வெளிப்படுவதை உணர்வீர்கள் - என்று தெளிவுபடுத்தினார்...

      முணுமுணு என்று சிரித்துக் கொண்டிருந்த வகுப்பறையில் நிசப்தம்...

      முதலில் வெட்கித் தலை குனிந்திருந்த மாணவிகளும் ஐயாவின் உரையில் ஐயம் நீங்கப் பெற்றனர்...

      அதெல்லாம் விகற்பம் இல்லாமல்
      இளம் பிள்ளைகள் பழகிய நாட்கள்......

      இனியொரு முறை அந்த நாட்கள் கிடைக்குமா?..

      நீக்கு
    3. கடைசி கேள்விக்கு பதில் கிடைக்காது.

      நீக்கு
    4. அதுசரி....

      எங்கள் தமிழாசிரியர் அவர்களது விளக்கவுரை குறித்து திரு கௌதம் அவர்கள் கருத்து ஒன்றும் சொல்ல வில்லையே!...

      நீக்கு
  14. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். கார்த்திகை தீப ஒளி
    எல்லோர் வாழ்விலும் இனிமை தரட்டும்.
    கேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யம்.
    நான் இசைக் கச்சேரி சென்றால் தூங்கும் ரகம்.
    அதுவும் முதல் வரிசையில்.

    கோவில்களில் அதுவும் இப்போது சென்ற பயணத்தில் சில் சிற்பங்கள்
    சங்கடமாகத் தான் இருந்தது.
    அதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கலாம். முன்பு
    ஒரு படம் வந்தது. இல்லற வாழ்க்கையை அறிந்து கொள்ள ஒரு பெண்ணை
    கஜுராஹோ அழைத்துச் சென்று அவளுக்கே வாழ்க்கை புரியும்படி செய்திருப்பார்கள்.

    அதுபோல இந்தச் சிற்பங்களும் ஏதாவது வாழ்க்கைப் பாடமாக உபயோகமாகி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  15. கதை எழுதினவரைக் கணிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  16. காம உணர்வை கட்டுப்படுத்துவதில் படிப்பறிவு மிக முக்கியத்துவம் பெறுகிறது. அது இல்லாதவர்கள்தான் அதற்காகவே கொலை செய்யும் அளவுக்கு செல்கின்றனர் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். படிப்பிருந்தும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கூட வழி தவறுவது உண்டு.

      நீக்கு
    2. /// காம உணர்வைக் கட்டுப் படுத்துவதில் படிப்பறிவு மிக முக்கியத்துவம் பெறுகிறது..///

      இன்னைக்கு எல்லாவித அயோக்கியத் தனத்திலும் முன்னணியில் இருப்பவன் படித்தவனே... பட்டம் பெற்றவனே!...

      இதுதான் உண்மை...

      நீக்கு
    3. அதற்காக
      படிக்காதவன் தவறு செய்வதில்லை என்று ஆகாது...

      படிப்பு ஏறாமல் பழம் விற்க வந்தவன் கூட நவீனத்துவமாக ஏமாற்றுவதிலும் தெரிந்தே ரசாயனம் கலந்து காய்களைப் பழுக்க வைத்து உண்பவர்களின் நலன் கெடுப்பதிலும் தேர்ந்தவனாக இருக்கிறான்...

      நீக்கு
    4. உண்மைதான். தனிமனித சிந்தனைகள் கோட்பாடுகள் குற்றவாளிகளை உருவாக்கும்தான்.

      நீக்கு
    5. திரு டி.பி.ஆர். ஜோசஃப் அவர்கள் படித்த கொடூரர்களைப் பார்த்ததே இல்லை போல!

      நீக்கு
  17. நம்மைச் சுற்றி நடப்பவைகளை சற்றே
    உற்றுக் கவனியுங்கள்...

    எல்லாம் புலப்படும்....

    பதிலளிநீக்கு
  18. சினிமாவுக்குச் சென்று தூங்கியதாக நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை. ஏதேனும் ஊரில் பொழுதுபோக்குக்காக முன்பின் தெரியாத படத்துக்குப் போனால், போரடிக்கும் படமாக அமைந்தால், தூக்கம் ஒரு தவிர்க்க இயலாத விஷயமாகிவிட வாய்ப்புகள் அதிகம்!

      நீக்கு
  19. பணம் வழங்கும் இயந்திரங்களின் கை வைப்பவன் படிப்பறிவு பெற்றவனா.. பாமரனா?...

    அந்தக் கயவர்களுக்கு உடந்தையாய் இருப்பவர் எல்லாம் யார்?...

    பதிலளிநீக்கு
  20. காமத்திற்கும் கல்விக்கும் சம்பந்தமே இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமனித சிந்தனைப் போக்குதான் காரணமாக இருக்கலாம்.

      நீக்கு
  21. பள்ளி ஆசிரியர்களே
    மாணவிகளைச் சிதைத்ததாக செய்திகள்
    நாளிதழ்களில் வருகின்றனவே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்.. 80கள்ல தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் குடித்துவிட்டு பள்ளிக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். என் பத்தாம் வகுப்பு ஆசிரியர் உற்சாக பானம் சிறிது அருந்திவிட்டு மதியம் வகுப்புக்கு வருவார் அவ்வப்போது

      நீக்கு
    2. 80-களிலேயே ஆ’சிறியர்களுக்கு’ உற்சாக பானம் தேவைப்பட்டிருக்கிறது. அப்போதே ‘தகுதியானவர்களை’ இந்த வேலைக்குத் தேர்வு செய்து பணியில் அமர்த்தல் என்பது ஆரம்பிக்கப்பட்டுவிட்டது!

      எப்போதிருலிருந்து சமூகம் இந்த வேகத்தில் முன்னேற ஆரம்பித்தது என சிந்தித்ததுண்டு..

      நீக்கு
  22. சகோதரிகளோடு வளராதது, குடும்ப பின்னணி, போன்றவைகள் பெண்களை வன் கொடுமை புரிவதற்கு சில காரணங்கள், முக்கிய காரணம் பெண் என்பவள் ஒரு போக வஸ்து என்னும் எண்ணம். நம் சினிமாக்கள் இந்த எண்ணத்தை எண்ணெய் ஊற்றி வளர்கின்றன. இதை மாற்ற வேண்டியது குடும்பம் முக்கியமாக தந்தையின் பங்கு இதில் அதிகம். படிப்பு இதை மாற்றும் என்று எனக்குத் தோன்றவில்லை. சாமர்த்தியமாக, திட்டமிட்டு பெண்களை கவிழ்ப்பது எப்படி என்பதை படித்தவர்கள் செய்கிறார்கள். இன்று வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியில் தொந்தரவுகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாயின் பங்குதான் இதில் மிக அதிகம். பாலகுமாரன், அவர் தாயால்தான் தன் பார்வைகள் விரிவடைந்தன என்று எழுதியிருக்கிறார் (ரெண்டு பெண்டாட்டிக் கார்ராக இருந்தபோதும்)

      நீக்கு
    2. பாலகுமாரன் ஒரு விதிவிலக்காக இருக்கலாம். விதி விலக்குகள்  உதாரணமாகாது. தாய் என்ன நெறிப்படுத்தினாலும் ஒரு பையன்  தன் தந்தையைத்தான் தன்னையறியாமலேயே ரோல் மடலாகக் கொள்வான். "நான் ஆம்பிளைடி"  என்று விசுத்தனமாக பேசாமலும், பொம்பளைங்களை வைக்கிற இடத்தில வைக்கணும்" என்று கூறாமலும், எதிராளியை திட்டும் பொழுது அவனுடைய தாயையும், சகோதரியையும் இழிவு படுத்தும் வார்த்தைகளை பேசாமலும் இருக்கும் தகப்பன்கள்தான் நல்ல மகன்களை உருவாக்க முடியும். பாலகுமாரனின் தகப்பனார் ஒரு மோசமான தந்தையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் நொந்து போன தான் அப்படி இருக்கக்கூடாது என்று அவருக்கு  தோன்றியிருக்குமாயிருக்கும்.

      நீக்கு
    3. தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சீலை

      நீக்கு
  23. கதாசிரியர் கல்கி என்று தோன்றுகிறது. அந்த காலத்தில் ரேடியோவின் விலை அறுபத்தைந்து ரூபாயாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதாசிரியருக்கு, நான் அந்த செய்தியை எழுதிய நாளில் பிறந்தநாள்.

      நீக்கு
    2. அன்றைய ரேடியோ விலை பற்றி அடுத்த வாரம் எழுதுகிறேன்.

      நீக்கு
  24. அந்தக் காலத்தில் படித்தவர் என்று சொல்வதே ஆசிரியர்களைத் தான்...

    அவர்களே - இன்னதென்று இல்லாமல் பலவிதத்திலும் அடாதது செய்யும் போது அவர்களைக் கல்விமான் என்று கருதுவதே தவறு...

    பதிலளிநீக்கு
  25. உண்மையாகச் சொன்னால், கோவில்களுக்குச் செல்லும் பொழுது, இந்த மாதிரி சிற்பங்களை பார்ப்பவர்கள் மிகக் குறைவு. மணியன் என்னும் மூன்றாம்தர எழுத்தாளர் இதை எழுதிய பிறகுதான் பலருக்கு பார்க்கத் தோன்றியது.  புடவைதான் மிகவும் செக்சியான உடை என்றும், மடிசார் கட்டிக் கொண்டு பெண்கள் நடக்கும் பொழுது கால் தெரியும், இடுப்பு தெரியும் என்றெல்லாம் எழுதிய மகராஜன் அவர். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜொள் பார்ட்டியை மூன்றாம்தர எழுத்தாளர்னீங்கன்னா சுஜாதாவை என்ன சொல்வீங்களோ!

      காஷ்யபன், பரணீதரன் வாசகி போலிருக்கு

      நீக்கு
    2. எங்கள் வீட்டில் தூண்கள் இல்லை,அதனால் மணியனோடு சுஜாதாவை ஒப்பிட்டதை படித்து விட்டு எங்கே முட்டிக் கொள்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். அதிராவுக்காக காத்திருக்க முடியாது, அல்சூர் ஏரியில் பிடித்து தள்ளுகிறேன்.  

      நீக்கு
    3. மணியனை ஒரு நல்ல எழுத்தாளராக (கதாசிரியராக) நானும் நினைப்பதில்லை. அவருடைய திறமை முழுவதும் அவர் எழுதிய உன்கண்ணில் நீர் வழிந்தால் (?) கதையோடு காலியாகிவிட்டது என்று சொல்லலாம்.

      நீக்கு
    4. பதின்ம வயதில் மணியனின் பயணக் கட்டுரைகள் எனக்கு ரொம்பவும் பிடித்தவை. இப்போ கிடைத்தால் படித்துவிட்டுச் சொல்லிடுவேன் அவர் நல்ல எழுத்தாளரான்னு.

      சுஜாதா ஜொள் கதைகள் என் கல்லூரிப் படிப்பைக் கெடுத்து லைப்ரரி பக்கம் ஒதுங்க வைத்திருக்கிறது. ஹா ஹா.

      நீக்கு
    5. பா.வெ மேடம் - சிவசங்கரி இந்திரா காந்தியை அவர் அலுவலகத்தில் பேட்டி கண்டபோது இந்திராவும் புடவையைப் பற்றி இதே கருத்துகள் சொன்னார். விகடனில் படித்திருக்கிறேன்.

      ஆனா இப்படி எழுதி எழுதித்தான் ஆண்கள் மனசை பெண்குலம் கெடுக்கிறது என்று சொன்னால் அதற்காக நீங்கள் தூணைத் தேட வேண்டாம். அவைகள் இப்போ கோவில்களில்தான்இருக்கின்றன (By the by என்அம்மா பிறந்த வீட்டில் இப்போதும் முழுவதும் கட்டிப் பிடிக்க முடியாத பெருய அழகான மரத்தூண் இப்போதும் பள பளான்னு இருக்கு. இப்போலாம் வீடுகள்ல மரத் தூணே பார்க்க முடியாது)

      நீக்கு
    6. நெல்லைஜி! சுஜாதாவின் கதைகளை ‘ஜொள் கதைகள்’ என்கிறீர்கள்.. ஏற்கனவே அல்சூர் ஏரியில் தள்ளப்பட்டுவிட்ட உங்களின்மீது மேற்கொண்டு கோபம் கொள்ளல் தர்மம் ஆகாது!

      சுஜாதாவின் ‘நகரம்’, ‘சில வித்தியாசங்கள்’, ’எல்டொராடோ’, 'குதிரை’, ’ஒரு லட்சம் புத்தகங்கள்’ , ’ஃபிலிமோத்சவ்’, ’அரிசி’, ‘ஜன்னல்’ போன்ற சிறுகதைகள் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

      நீக்கு
    7. ஏகாந்தன் சார்... சுஜாதா ரசிகன் நான். அவருடைய நாவல்களில் வெகுஜன ரசனைக்குத் தேவையான ஓவியர் ஜெயராஜுக்கு வேலை கொடுக்கும் விஷயங்கள் உண்டு.

      அவர் வெர்சடைல் எழுத்தாளர்.

      இங்க கொஞ்சம் வம்பிழுத்திருக்கிறேன். அவ்ளோதான்

      நீக்கு
    8. @KGG, "உன் கண்ணில் நீர் வழிந்தால்" நாவலைத் தொடராக விகடனில் எழுதியவர் "சேவற்கொடியோன்" என்னும் புனைப்பெயரில் விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள்.

      நீக்கு
  26. அந்த காலத்தில் கோவில்கள் கட்டுவது மிகப்பெரிய வேலை. நீண்ட நாட்களுக்கு குடும்பத்தை பிரிந்திருக்கும் சிற்பிகள் தங்கள் மனவெழுச்சிகளை இப்படிப்பட்ட சிற்பங்களை  வடிப்பதன் மூலம் தனித்து கொண்டார்கள் என்றும் ஒரு கருத்து உண்டு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் கோவிலில் இத்தகைய சிற்பங்கள் கொஞ்சம் சங்கடமான விஜயம்தான்.

      ஒருவேளை காலத்தால் நம் பார்வை மாறிவிட்டதோ?

      நீக்கு
    2. ஆம்...

      காலத்தால் காட்சி கெட்டது...

      நீக்கு
    3. இதைப் பற்றி கூடிய விரைவில் எழுதணும்.

      நீக்கு
  27. கதை எழுதியது தேவன் என்று ஊகம். ரேடியோவின் அன்றைய விலை 125 ரூபாய், ஷார்ப் ஜங்கார் , மர்பி பிலிப்ஸ் போன்றவை அன்று பிரபலம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவன் இல்லை. ரேடியோ விலை அடுத்த வார புதன் பதிவில் வெளியிடுகிறேன்.

      நீக்கு
    2. தேவன், கல்கி ஆகியோரின் நடை இப்படி இருக்காது.

      நீக்கு
  28. ரேடியோ விலை தெரியாது. எனக்கு முந்தைய ஜெனரேஷனோட அப்பா, தன் 60 வயதில் 1-2 கிலோ வெள்ளிக் கட்டியை விற்று வால்வ் ரேடியோ பெரியமு 21 இஞ்ச் டிவி போல, வாங்கினார்

    பதிலளிநீக்கு
  29. பாசமலர், அப்புறம் குழந்தை காணாமல் போகும் படம், ஒரு தலை ராகம் இவற்றை இரண்டாம் முறை பார்த்தபோது நல்லாத் தூங்கியிருக்கேன் நெல்லை பாலஸ் டி வேல்ஸ் தியேட்டர்லயும், சேலத்திலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அளவுக்கு மோசமான படங்கள் பார்த்ததில்லை இதுவரை! மேலே சொன்னவற்றை ஒரு முறை கூடப் (நல்லவேளையாக) பார்த்ததே இல்லை. பிழைச்சேன்.

      நீக்கு
  30. நெட்பளிக்ஸ், ஹாட்ஸ்டார் கேள்விக்கான பதில் சிறப்பா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  31. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    கேள்விகளுக்கு பதில்கள் நன்றாக சொல்லி இருந்தீர்கள்.

    முதலில் மர்பி ரேடியோ 350 ரூபாய்க்கு வாங்கி இருந்தார்கள், 60ல் பெரிய பிலிப்ஸ் ரேடியோ 750, 850 என்று நினைவு. எங்கள் வீட்டு ரேடியோவை படம் போட்டு பதிவு போட்டு இருக்கிறேன். தேடி பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  32. நாங்கள் இரண்டாவது காட்சி பார்த்த்தே இல்லை, அதனால் தியேட்டரில் தூங்கியது இல்லை.

    நாங்கள் திருவெண்காட்டில் இருந்த போது மதுரை, கோவையிலிருந்து இரவு பேருந்தில் கிளம்பி மாயவரம் அதிகாலையில் வருவார்கள். அவர்களை அழைத்து வர பேருந்து நிலையத்திற்கு என் கணவர் போவார் இரவே. அப்போது கடைசி காட்சி படம் பார்த்து விட்டு பேருந்து நிலையம் போய் உறவினரை அழைத்து வருவார்கள். நல்ல படமாய் இருந்தால் பார்ப்பர்களாம், இல்லையென்றால் தூங்கி விடுவேன் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  33. கேள்விகளும் அதற்கான பதில்களும் மிக அருமை...

    பதிலளிநீக்கு
  34. அம்மா தொக்குத்து வைத்த குமதம் புத்தக விள்மபரத்தில் யு . எம். எஸ் ரேடியோ கோயமூத்தூரில் தயாரிக்கும் ரேடியோ

    6 வால்வுகள், 3 பாண்டுகள் டோன் கண்ட்ரோல் , அழகிய மரக் காபினட் என்று விலை ரூபாய் 290 என்று போட்டு இருக்கிறது. உள்ளூர், சுங்க வரி தனி என்று போட்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  35. உஷா ரேடியோவை குடும்பத்துடன் கேட்கும் விள்ம்பரம் இருக்கிறது ஆனால் விலை போடவில்லை.
    கோபுலூ அவர்கள் வரைந்த ஓவியம் அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  36. படித்தேன் ரசித்தேன்.... அதிகம் பேச முடியவில்லை... கிளவிக்கும் பதில் சொல்ல தெரியவில்லை, காரின் விலையைவிடக் கூடுதலாக இருந்திருக்குமோ ரேடியோவின் விலை? எனவும் ஜந்தேகம் வருதே...

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் சகோதரரே

    கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. படித்து ரசித்தேன்.

    வீட்டில் சேனல்களில் படங்களை போட்டு பார்க்கும் போது பிடிக்கவில்லையென்றால், இல்லை, பின்பு பார்க்கலாம் என்ற எண்ணம் வந்தால் நிறுத்தி விட்டு அடுத்தநாளோ, இல்லை நம் விருப்பபடி பார்க்கலாம். ஆனால் தியேட்டரில் அப்படியில்லை... முழுதாக பார்த்துத்தான் ஆகவேண்டும். அப்போது தூக்கம் தானாக வருவதையும் தவிர்க்க இயலாது.

    மர்பி ரேடியோவின் விலை ஒரு நானூறுக்கு மேல் அறுநூறுக்குள் இருந்திருக்கலாம். ஆனாலும் கதை எழுதியவரையும், ரேடியோவின் உண்மை விலைகளையும் அடுத்த புதனன்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  38. //கதாசிரியருக்கு, நான் அந்த செய்தியை எழுதிய நாளில் பிறந்தநாள்.//

    க்ளூ பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  39. மதுரை மீனாக்ஷி லட்டுப் பிரசாதம் பற்றி நானும் கேள்வி தான் பட்டேன். போய்ப் பார்க்கணும். எப்போ கூப்பிடுவாளோ!

    பதிலளிநீக்கு
  40. சினிமாவுக்காக என்றால் கூட ஆண்கள் பெண் வேஷம் போடுவதையோ, பெண்கள் ஆண் வேஷம் போடுவதையோ என்னால் ரசிக்க முடிவதில்லை! அது ஏனென்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  41. திருச்சி அல்லிமால் தெருவில்நானுமென்நண்பனும் தங்கி இருந்தபோது தினமொரு சினிமா என்றிருந்த்சதுஇன்ன் சினிமா என்று இல்லாமலெல்லா சினிமாக்களுக்கும் செல்வோம் அப்போது இன்வேரியபிலி சென்றதும் தூக்கம்தான் கொவில்களில் சிலைகளேந்தானுறுத்த வேண்டுமந்தரங்கமக அனைவரும் ஈடுபடுவதுதானே எக்ஸ்ப்லிசிட்டாக காட்டப்படுவதால் அந்ச்தரங்கம் அத்தனைபுனிதம்அல்ல என்பதைக்காட்டுவதால் ஒரு வேண்டா வெறுப்பாக தொன்றுகிறதோ

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!