நேயர் விருப்பம் :
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு உண்மை நிகழ்ச்சியின் அடிப்படையில் கே ஹரிஹரன் இயக்கத்தில் 1982 இல் வெளியான திரைப்படம் ஏழாவதுமனிதன். அந்த உண்மைச் சம்பவத்தில் படத்தின் தயாரிப்பாளரும் இருந்திருக்கிறார். ஏழாவது மனிதன் என்பது இப்போதும் அது ஒரு வித்தியாசமான தலைப்பாகவே இருக்கிறது பாருங்கள். படத்தில் இடம்பெற்ற பாடல்களை அத்தனையையும் பாரதியார் பாடல்களிலிருந்தே எடுத்திருக்கிறார்கள். இசை எல். வைத்தியநாதன். அப்போது மிகவும் பேசப்பட்ட பாடல்கள். இப்போதும் மறக்கமுடியாத பாடல்கள்.
'வீணையடி நீ எனக்கு' என்று தேடியபோதுகிடைத்த படங்களில் ஒன்று!
மாநில, மத்திய, தேசிய அளவில் விருதுகள் பெற்ற இந்தப் படத்தில் ரகுவரன் கதாநாயகனாக நடித்திருந்தார். கூட ரத்னா என்றொரு நடிகை. தொழிற் சங்க பிரச்னைகள் பற்றிய படம் என்று நினைவு. நம் டெல்லிப் பிரச்னை போல அப்போதே காற்றின் மாசு பற்றி பேசிய படம்.
பாரதியாரின் நூற்றாண்டை ஒட்டி முதலில் அவர் பற்றிய ஒரு டாகுமெண்டரி எடுக்கவே முதலில் முனைந்தார்களாம். ஆனால் பிறகு பாரதியாரின் முரண்பட்ட சில முகங்களை சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் எடுத்தார்களாம். படமும் வெற்றிப்படமாகவே இருந்திருக்கிறது.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், ரகுவரன் முதலில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவே அழைக்கப் பட்டாராம். பின்னர் ஸ்க்ரீன் டெஸ்ட்டில் 'கதாநாயகனுக்குரிய அம்சங்கள்' இருப்பதாகக் 'கண்டுபிடிக்கப்பட்டு' நாயகனாராம்.
இந்தப் படத்திலிருந்து கே ஜே யேசுதாஸ் - நீரஜா பாடிய "வீணையடி நீ எனக்கு" பாடல் இன்றைய நேயர் விருப்பமாக ஒலிக்கிறது. விரும்பிக்கேட்ட நேயர் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன்!
நீரஜா தொடங்க, தொடர்கிறார் யேசுதாஸ். சரணத்தில் வரி வாரியாக மாற்றி மாற்றி பாடுவது அழகு. ஒவ்வொரு சரணத்தின் முடிவும் உயரத்தை அடைவது தனிச்சிறப்பு!
பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு
தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை,
வாழிநின்றன் மேன்மை யெல்லாம்
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!
வீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு
பூணும்வடம் நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு
வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு
ஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்
ஊனமரு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!
காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!
இனி என் விருப்பம்!
கால்களே நில்லுங்கள்
1965 இல் வெளிவந்த திரைப்படம் எங்க வீட்டுப்பெண். தெலுங்கில் சவுகார் ஜானகிக்கு சவுகார் என்று பெயர் வாங்கித்தந்த சவுகாரு என்கிற தெலுங்குப் படத்தைத் தமிழில் 'எங்க வீட்டுப்பெண்' என்று தயாரித்தார்கள் விஜயவாகினி கம்பெனியினர்.
சவுகார் ஜானகி தெலுங்கில் நடித்த பாத்திரத்தில் நிர்மலா என்கிற விஜய நிர்மலா நடிக்க, உடன் நடிக்க வந்த எஸ்வி ரெங்காராவ் நிர்மலா அந்தக் கேரக்டருக்கு பொருத்தமாயில்லை என்று சொல்லி ஸ்ட்ரைக் செய்ய, அன்றையஅந்தப் படப்பிடிப்பு அத்துடன் நிறுத்தப்பட்டது. மறுநாள் விஜயநிர்மலா படப்பிடிப்பு தளத்துக்கு வந்தபோது எஸ் வி ரெங்காராவ் கேரக்டரில் எஸ் வி சுப்பையா நடிக்கக் காத்திருந்தாராம்! நிர்மலா விஜயநிர்மலா ஆனது இந்தப்படத்துக்கு அப்புறம்தானாம். விஜயா தயாரிப்பில் நடித்ததால்!
எம் ஆர் ராதா, ஏ வி எம் ராஜன், ஜெய்சங்கர், விஜயநிர்மலா ஆகியோர் நடித்த இந்தப் படத்துக்கு இசை கே வி மகாதேவன். பாடல்கள் ஆலங்குடி சோமு மற்றும் கவியரசர். இயக்கம் டாபி சாணக்யா. இந்தப் பாடலை எழுதி இருப்பவர் ஆலங்குடி சோமு. சிரிப்புபாதி அழுகைபாதி, தெய்வ மலரோடு வைத்தமனம் திருமணம் போன்றமற்ற பாடல்களும் இனிமையானவை.
இந்த இனிமையான பாடலை பாடியிருப்பவர்கள் டி எம் சௌந்தரராஜன் - பி சுசீலா.
அவசரப்படும் ஆணும், அன்புடனே மறுத்து நிற்கும் பெண்ணும்... அந்தக் கால பண்பாடு...
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
நாணம் என்பது நாடகமா அதில் மௌனம் என்பது சம்மதமா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
ஆசை என்பது நாடகமா அதில் ஆண்மை என்பது அவசரமா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
பூவிருக்கும் கூந்தலிலே நானிருந்தால் ஆகாதா
பூவிருக்கும் கூந்தலிலே நானிருந்தால் ஆகாதா
பால்மணக்கும் பெண்ணழகை பார்த்திருந்தால் போதாதா
பால்மணக்கும் பெண்ணழகை பார்த்திருந்தால் போதாதா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
இன்னொருநாள் தருவதெல்லாம் இன்று தந்தால் ஆகாதா
இன்னொருநாள் தருவதெல்லாம் இன்று தந்தால் ஆகாதா
அன்றுவரை பொறுத்திருந்தால் அந்தமனம் கேளாதா
அன்றுவரை பொறுத்திருந்தால் அந்தமனம் கேளாதா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
ஒருவருமே பார்க்காமல் ஒன்றுதந்தால் ஆகாதா
ஒருவருமே பார்க்காமல் ஒன்றுதந்தால் ஆகாதா
தனிமையிலே தவறு செய்தால் தன்மனமே பார்க்காதா
தனிமையிலே தவறு செய்தால் தன்மனமே பார்க்காதா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
ஒரு சிறு புதிர்!
இதே டியூனில் பின்னாளில் இன்னொரு பாடல் வந்தது. என்ன பாடல் என்று தெரியுமா?
Meeeeeeeee
பதிலளிநீக்குஆ.....
நீக்குமீதான்2ண்டூஊஊ
பதிலளிநீக்குஎன்ன ஆச்சர்யம்!
நீக்குஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு...
பதிலளிநீக்குவாழ்க நலம்....
வாழ்க நலம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... நல்வரவு, வணக்கம். நன்றி.
நீக்குமீதான் 3ட்டூஊஊஊஊஊ ஆஆஆஆஆ
பதிலளிநீக்குநான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு...!
நீக்குஇல்ல:) ஶ்ரீராம் இல்ல:).. 2 சொன்னவுடனேயே எல்லோரும் வந்திட்டினம் ஹா ஹா ஹா
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குஹா ஹா ஹா இன்றைய போஸ்ட் என்னவென்றே இன்னும் பார்க்கவில்லை:)... எல்லோருக்கும் அன்பான காலை வணக்கம்...
பதிலளிநீக்குகீசாக்காவும் துரை அண்ணனும் லேட்டூஊஊஊஊ:)
காலை வணக்கம் அதிரா... வாங்க... போஸ்ட் பாருங்கள்... பாடுங்க...
நீக்குஎப்படினு புரியலை. பதிவு வெளியானதுமே க்ளிக்கினால், பார்த்தால் எனக்கு முன்னால் அதிரடியாக வந்து நிற்கிறார், தியாகத் திலகம். சரி இரண்டில் மூன்றுனு நினைச்சால், இல்லை நாலுனு துரை வந்துட்டார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்(ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு இந்தப் போட்டி வந்ததில் அப்பாடானு இருக்கு)
நீக்குஆமாம்... உற்சாகமா இருக்கு... அதிரா போஸ்ட் போட்டிருப்பார்... பார்க்கணும்!
நீக்குஹா ஹா ஹா கீசாக்காவுக்கு குளிர் அதிகமானதால ஓட முடியவில்லைப்போலும்:)..
நீக்குஇன்னும் போஸ்ட் போடும் மூட் வரவில்லை எனக்கு ஶ்ரீராம்:)..
ஆடிக்கொரு நாள்..
நீக்குஅமாவாசைக்கொரு நாள்!....
கொட்டும் மழையா, குளிரா, வெயிலா...
எல்லா நாளும் பல நிமிடங்களுக்கு முன்னதாகவே வந்து காத்துக் கிடக்கிறது மனம்...
ஹா... ஹா... ஹா... சென்னையில் மழைபொழிந்ததா என்கிற கேள்விக்கான பதிலுக்காய்த் தூக்கம் இல்லாமலிருக்கிறாரோ அதிரா? பெய்யவில்லை அதிரா, பெய்யவில்லை!
நீக்குஎல்லா நாளும் முழிச்சிருக்க முடியாதெல்லோ துரை அண்ணன். நீங்க டெய்லி இவ்ளோ ஏழியா எழும்புறீங்களே... ஏழியா ஸ்லீப் பண்ணுவீங்க போலும்...
நீக்குஆவ்வ்வ்வ்வ்வ் அப்போ வியர்வைதானா?:) ஆஆஆஆ நெல்லைத்தமிழன் இனிமேல் மழை.... பெண்.... கப்பு:) பற்றியெல்லாம் பேசமாட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா:)....
நீக்குஇங்கு ஸ்கொட்லாண்டில வெயில்தான் வரோணும் எனச் சொல்லோணும்... தொடர்ந்து மழையும் இருட்டும்.... சூரியன் அங்கிள் ஒளிச்சிட்டார்ர்:)
அப்போது வெகுவாக பேசப்பட பாடல்...
பதிலளிநீக்குஇப்போதும் என்ன குறை? என்ன ஒருஇனிமையான பாடல்... (ஆமாம், இந்தப் பாடலைச் சொல்றீங்க? முதலா, இரண்டாவதா?)
நீக்குஓ... பூஸார் வந்ததில் ஒந்றும் புரியவில்லை....
நீக்குநான் குறித்தது மகாகவியின் பாடலை...
ஹா ஹா ஹா ஜாமத்தில மீ ஜம்ப்பானேனா:)... துரை அண்ணன் சாக்க்க்க்க் ஆகிட்டார்ர் ஹா ஹா ஹா:)
நீக்கு//நான் குறித்தது மகாகவியின் பாடலை...//
நீக்குஅப்போ இரண்டாவது பாடல் பேசப்படவில்லை அப்போது என்கிறீர்கள்... சரிதானே?
இல்லையில்லை....
நீக்குஇரண்டாவது பாடலைக் கேட்டு பல வருடங்களாகி விட்டன...
மீண்டும் கேட்கலாம் என்றால்
அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் ஆள் வேலைக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டும்...
அதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது...
அதுவரை இருட்டுக்குள் இருந்து தான் தட்டச்சு செய்ய வேண்டும்...
அறைக்குள் வரும்போது
அணில் குட்டியாக வருகிறார்கள்...
அதற்கப்புறம் ஆள் அடையாளம் மாறி விடுகிறது.....
என்ன செய்வது!?...
அடடா... இந்த அனுபவம் உங்களுக்குத் தொடர்கதையாகிறதே.. நாம் அமைதியாக இருந்தால் அதை உபயோகித்துக்கொள்கிறார்கள் போல...
நீக்குஅதிக நல்லவனாக இருக்கக் கூடாது ஸ்ரீராம்....
நீக்குஆனாலும் நான் என் நிலையில் இருந்து மாற மாட்டேன்...
சுதர்மம் காக்க வேண்டாமா!..
என்னைப் பொறுத்தவரை
நீக்குபிறரது குற்றங் கண்டு ஒதுங்கி விடுவது
மேற்சென்று பதிலுக்குப் பதில் செய்யாமல் இருப்பது - சுதர்மம்....
//அதிக நல்லவனாக இருக்கக் கூடாது ஸ்ரீராம்....
நீக்குஆனாலும் நான் என் நிலையில் இருந்து மாற மாட்டேன்...//
இரண்டையும் நீங்கள்தான் சொல்கிறீர்கள்!
:))
இவர் தானே "அலேக்" நிர்மலா?"எங்க வீட்டுப் பெண்!" இந்தப் படம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். பார்த்தது இல்லை. பாடல்களும் அதிகம் கேட்டதில்லை. ஏழாவது மனிதன் படம் பார்க்கணும்னு ஆசையாக இருந்தது. ஆனால் அதைத் தொலைக்காட்சியில் போட்டப்போ எல்லாம் பார்க்க முடியாமல் போய் விட்டது. அதே போல் ஊமை விழிகள் படமும்!
பதிலளிநீக்குஎனக்கும் அந்தக் கேள்வி வந்தது. ஆனால் விடை தெரியவில்லை. ஏழாவது மனிதன் படம் பார்க்கும் தைரியம், பொறுமை எனக்கில்லை. பாடல்கள் ரசிக்கத் தடையில்லை! ஊமை விழிகள் பார்த்திருக்கிறேன் (மதுரை சரஸ்வதி தியேட்டர்)
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமிகவும் பிடித்தமான பாடல்களுள் இதுவும் இன்று...
பதிலளிநீக்குஎனக்கும். பாடலுக்குக்கீழே கேள்வி ஒன்று இருக்கிறது. கவனித்தீர்களா?
நீக்குஇரண்டுமே அழகிய பாட்டுக்கள். முதலாவது தெரியும், 2 வதை இன்றுதான் கேட்கிறேன்.. கேட்க நன்றாக இருக்கு.
பதிலளிநீக்குஉங்கள் புதிருக்கு ... விடை வருகுதில்லை ஆனா கேட்டதுபோலவே இருக்கு இன்னொரு பாடலும்... மியூசிக் கேட்ட மியூசிக் போலவே இருக்கு.
நன்றி அதிரா... இரண்டு பாடல்களுமே இனிமையானவை என்பதில் சந்தேகமில்லை. புதிருக்கு விடை எப்போ சொல்வீங்க? நீங்க சொல்வீர்களா? இல்லை, உங்கள் செக் சொல்வாரா?!!!!!
நீக்குஹா ஹா ஹா என் செக் பதில் சொல்லிட்டால் ,,, நான் இப்பவே தேம்ஸ்ல குதிப்பேன்ன்ன்ன்ன்ன்:)
நீக்குதேம்சுக்குக் கீழே அடுப்பு வைத்து சூடாக்கி வைத்திருந்தால் குதி(ளி)க்கலாம்!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். ஆஹா இன்று நான் விரும்பி கேட்ட பாடலா. நன்றி நன்றி. இருந்தாலும் காலை வேளையில் சினிமா பாடலா? அதுவும் மார்கழியில்?
பதிலளிநீக்குமார்கழியில் மட்டுமாவது
நீக்குஇசைத் தட்டைத் திருப்பிப் போட்டிருக்கலாம்...
ஆனால் இது USB யுகமாயிற்றே...
நாளை பரிகாரம்!
நீக்குவாங்க பானு அக்கா... காலைவணக்கம்.
நீக்குநேற்றைய பதிவில் அன்பின் ஜீவி அவர்கள் கேட்டிருந்தபடிக்கு
பதிலளிநீக்குதெய்வம் தொழாள்.. என்ற குறளுக்கு கலைஞர் அளித்திருக்கும் விளக்கம்.. இதோ..
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி
அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி
நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக்
கொள்பவளாவாள்.
நன்றி - http://www.tamilvu.org
நேற்று கடைசியாகத் தான் வர முடிந்தது...
இதை நேற்று அங்கே போட்டிருக்கிறேன்...
இன்று அனைவருக்காகவும் இங்கே!...
'தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்' என்று உரை பொருளுக்கான குறள் வரி?..
நீக்குதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
நீக்குபெய்எனப் பெய்யும் மழை..
என்ற திருக்குறளுக்கு டாக்டர் மு.வ. அவர்களது உரை...
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!..
நன்றி - http://www.tamilvu.org
>>> தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்' என்று உரை பொருளுக்கான குறள் வரி?..<<<
தேடிப் பார்த்தேன்... தென்படவில்லை!...
எப்படி பூம்புகார் திரைப்படத்தில் இவராக நினைத்துக் கொண்டு சில மாற்றங்களைச் செய்தாரோ
அப்படி இருந்தாலும் இருக்கும் இந்தக் குறளிலும்!...
வள்ளுவர் தம் உருவப் படத்திலேயே அன்றைக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது..
அவரது வரிகள் எம்மாத்திரம்!...
பெய்யெனப் பெய்யும் மழை!..
பதிலளிநீக்குஎரிக என்றதும் எழுந்து நின்றதே தீ!..
எனில் பெய்க என்றதும் பொழியாதோ மழை...
அழிக என்றதும் தொலையாதோ பகை..
வருக என்றதும் பெருகாதோ தமிழ்!...
அருமை.
நீக்குஅருமை ஐயா. பெய்யெனப் பெய்யும் என்றதும் எனக்கும் கண்ணகியின் நினைவு தான் வந்தது. கண்ணகி என்றதும் பூம்புகார் படத்தோடு சம்பந்தப்பட்ட கலைஞர் நினைவுக்கு கலைஞரின் உரையைத் தேடிப் படித்து விட்டேன். மற்ற வாசகர்களும் அறியத் தான் கேள்வியாக அது ரூபமெடுத்தது.
நீக்குஅருமையான பாடல்கள்...
பதிலளிநீக்குமுதல் காணொளி வரவில்லை...
ஓ... வேறு இணைத்திருக்கிறேன். இப்போது பாருங்கள்.
நீக்குஇனிமை...
நீக்குGood. Thank you DD.
நீக்கு// இதே டியூனில் பின்னாளில் //
பதிலளிநீக்குபட்டிக்காடா பட்டணமா (?)
Yes. Correct!
நீக்கு:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
நீக்குஇனிய காலை வணக்கங்கள் அனைவருக்கும். அதிரா
நீக்குஎப்படி இவ்வளவு சீக்கிரம் எழுந்தார். எனக்கே இன்னும் ஆறுமணி ஆகவில்லை.
மார்கழிப் பாடலைக் கேட்டுவிட்டு இங்கு வந்தேன்.
மஹாகவியின் வார்த்தைக்கு ஈடு இணை ஏது.
இசையும் சூப்பர்.
நானும் இந்தப் படம் பார்க்கவில்லை.
யேசுதாசின் குரல் ஆஹா.
பாயும் ஒளி நீ எனக்கு என்று தொடர்கதை விகடனில் வந்ததோ,
இரண்டாவது பாடலும் மிகமிகமிகப் பிடிக்கும்.
ஏவி எம் ராஜன் எங்க கால ஹீடோ.
விஜய நிர்மலா அழகு.
நடுவில சரோஜாதேவி படம் எதற்கு என்று தெரியவில்லையே.
இரண்டுமே அருமையான பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி ஜோஸப் ஸார்.
நீக்குமகாகவி பாடலை பலமுறை கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடலை இலங்கை வானொலியில் கேட்டது. சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு இன்று கேட்டேன் ஜி
நன்றி ஜி.
நீக்குஎ.வீ.பெண் - சிறப்பான பாடல் :-
பதிலளிநீக்குஇயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா... எனது உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா...!
வான் மழை நீரும் மண்ணின் குணத்தால், மாற்றம் அடைவதுண்டு... வஞ்சகர் உறவால் நல்ல மனிதரும், தீயவர் ஆவதுண்டு...
உனக்கு முன்னே பிறந்த நிலம் ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம், உனக்குப் பின்னும் இருக்குமடா, உரிமை என்றால் சிரிக்குமடா...!
இரவும் பகலும் இன்பமும் துன்பமும், இயற்கை வகுத்ததடா - இந்த இரண்டுக்கும் இடையில் அமைதி காண்பவன் இதயம் சிறந்ததடா...!
நான் என்ற அகந்தையினாலே, நன்மை கண்ட மனிதரில்லை... நாம் என்ற ஒற்றுமை வந்தால், நாட்டினிலே துயரமில்லை...
சிறப்பு.
நீக்குஅருமையான பாடல்
நீக்குஅருமையான பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குமுதல் பாடலுக்கு நன்றி. இரண்டாவது பாடல் அவ்வளவாக கவரவில்லை. செளகார் இடத்தில் வி.நிர்மலாவா? என்ன கொடுமை சரவணா இது? எஸ்.வி.ரங்கராவ் வாழ்க.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் நீங்கள் சரியாகக் கேட்கவில்லையோ என்னவோ... என்றாலும் அவரவர் விருப்பம், மாறுபடும்! சவுகார் என்றால் நீங்கள் பின்னாளின் சவுகாரை நினைத்திருப்பீர்கள். அவருக்கும் அது ஆரம்பப் படம் என்பதை நினைத்துப் பாருங்கள்!
நீக்குமுதல் படத்திலேயே மிகச்சிறப்பாக நடித்தவர்கள் இல்லையா? அதுவும் செளகார் என்னும் பட்டப் பெயரையே அந்தப் படம் பெற்றுத்தந்திருக்கிறது என்றால் சும்மாவா? மேலும் வி.நிர்மலா எந்த படத்தில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்?
நீக்குவி.நிர்மலா எந்த படத்தில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்? - எனப் படித்ததும் எழுந்தது ஒரு சிறு கேள்வி (கேஜிஜி-சார் இங்கே உஷாராகிறாரா?):
நீக்கு‘எயந்தப்பயத்தை’ சௌகார் விற்றிருக்கமுடியுமா?
Chiththi. Picture ji.Nirmala does a fine job.
நீக்குSowcar cannot sell that fruit. She fits housewife roles beautifully. Exception Puthiya Paravai. And Uyarntha Manithan.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல ஒரு விஷயம் உண்டு. நான் எப்போதும் சொல்வது. நான் படங்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. பாடல்கள்... பாடல்கள்... பாடல்கள் மட்டுமே... இன்று சொல்லப்பட்டிருக்கும் இரண்டு (மூன்று?) படங்களுமே நான் பார்க்கவில்லை!
நீக்குமுன்பெல்லாம் தூர்தர்ஷனில் மதியம் இரண்டு மணிக்கு அவார்ட் வின்னிங் படங்களை போடுவார்கள். அவற்றை நானும் என் அப்பாவும் பொறுமையாக பார்ப்போம். அவற்றை தர வரிசைப்படி பிரித்தால் பெங்காலி,மலையாளம்,மராட்டி,ஒடிஸா,
பதிலளிநீக்குகன்னடம்,தெலுங்கு,தமிழ்,ஹிந்தி என்று வரும்.
அந்த படங்களை ஒளிபரப்பும் முன் பட இயக்குனர் படத்தைப் பற்றி பேசுவார். ஏழாவது மனிதன் இயக்குனர் ஹரிஹரனும் அந்த படப்பெயருக்கு காரணம் கூறினார். நினைவில் இல்லை. படமும் அப்படியே. அந்த படத்தில் ரகுவரன் ஹீரோவாக அறிமுகமானாலும் அவர் நிலைத்து நின்றது வில்லனாகத்தானே.
நடுவில் சில படங்களில் அவர் மீண்டும் நாயகனாக நடித்திருந்தார். எடுபடவில்லை!
நீக்குமலையாளத்தில் பல நல்ல படங்களை தந்துள்ள ஹரிஹரன் சென்னையில் ஒரு நடிப்புக் கல்லூரி துவங்கியிருக்கிறார்.
பதிலளிநீக்குஅப்படியா?
நீக்குவீணையடி நீ எனக்கு பாடல் என்ன ராகம் என்று தி.கீதா இன்றாவது வந்து கூறுவாரா? We miss you Geetha.
பதிலளிநீக்குகீதா ரொம்ப பிஸி!
நீக்குஅநேகமாக மார்ச் மாசம் வருவார் போல!
நீக்குஅருமையான பாடல் செலக்ஷன் பானு மா.
பதிலளிநீக்குசவுக்கார் எப்பவோ நடிக்க வந்து விட்டாரே.
இந்தப் படம் பின்னாட்களில் வந்ததோ.
எஸ்.வி.சுப்பையாவும் பண்பட்ட நடிகர்.
டிடி சொல்லி இருப்பது போல படப்பாடல்கள் எல்லாவுமெ
நன்றாக இருக்கும்.
மலரோடு வைத்த மனம் திருமணம் இனிமையாக
இருக்கும்.
இங்கே என் விருப்பமாக ஒரு பாடலைக் கேட்கலாமா.
பண்ணோடு பிறந்தது தாளம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
என்று ஒரு பாடல் .
எந்தப் படம் என்று நினைவில் இல்லை,.
பி பி ஸ்ரீனிவாசும் ஜிக்கியும் என்று நினைக்கிறேன்.
முடிந்தால் பதியவும்.நன்றி ஸ்ரீராம்.
நீங்கள் சொல்லி இருப்பது ஸ்ரீதரின் விடிவெள்ளி படப்பாடல் வல்லிம்மா. பார்க்கிறேன். கிட்டத்தட்ட 59 வருடங்களுக்கு முன்னால் வெளியான படம்!
நீக்குநன்றி மா ஸ்ரீராம்.
நீக்கு//பாரதியாரின் முரண்பட்ட சில முகங்களை சொன்னால்....//
பதிலளிநீக்குஅது என்ன பாரதியாரின் முரன்பட்ட முகங்கள்?.. ஓரிரண்டு சொன்னால் தெரிந்து கொள்வேன்.
அது என் கருத்து அல்ல ஜீவி ஸார்.
நீக்கு"Director K. Hariharan was initially approached by Palai N. Shanmugam, a former freedom activist and a leading criminal lawyer from Tirunelveli, Tamil Nadu,[3] to make a documentary film on the Tamil poet Subramania Bharati. The year 1982 marked the centenary of the poet. While carrying out research about Bharati, Hariharan felt Bharati was a "complicated character" and a film about him "would have to tell a few truths that people would not be too comfortable with".[4] Shanmugam and Hariharan abandoned the project and decided to make a film based on a real-life incident that took place in a village..."
என்கிறது விக்கி. அவ்வளவுதான்.
அது உங்கள் கருத்து போல தோற்ற மயக்கம் கொடுப்பதால் பதட்டமானேன். அவ்வளவு தான்.
நீக்குசினிமாவுக்கு பாரதி என்ற யுகப் புருஷன் வாழ்ந்த வாழ்க்கை சரிப்படாது அல்லது ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என்று தீர்மானித்திருக்கிறார். அவ்வளவு தானே?
ஆனால் அந்த மஹாகவியின் பாடல்களை (நாட்டுடமையாக்கப் பட்ட செளகரியத்தில்) உபயோகித்துக் கொள்வதில் மட்டும் யாருக்கும் எந்த அசெளகரியமும் இல்லை, பாருங்கள்!
உண்மை தான் ஜி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க...
நீக்குஏழாவது மனிதன் இயக்கிய கே ஹரிஹரன் எனக்கு உறவு என்மாமா மகன்
பதிலளிநீக்குஓ... கிரேட். அப்போ நீங்கள் அவரிடம் பேசி மேலதிகத் தகவல்கள் சொல்ல முடியும்! நன்றி ஜி எம் பி ஸார்.
நீக்குஅவர் சென்னையில் எங்கோ இருப்பதாக கேள்வி தொடர்பில் இல்லை
நீக்கு//சவுகார் ஜானகி தெலுங்கில் நடித்த//
பதிலளிநீக்குசெளகார் ஜானகி என்று எழுதுவது தான் வழக்கம்.
விடுதலை பத்திரிகையில் ராஜாஜியை ராசாசி என்று தான் அச்சிடுவது வழக்கம். இதைப் பார்த்த ராஜாஜி "யார் இந்த ராசாசி?.. நானில்லை..
என்னைக் குறிப்பிடுவது என்றால் ராஜாஜி என்றே குறிப்பிடுங்கள்' என்று தொலைபேசியில் கூப்பிட்டுச் சொன்னாராம்.
உண்மைதான் ஜீவீ சார்.
நீக்குசவுக்கார் என்றால் ஏதோ சோப் நினைவு வருகிறது.
அவருக்கும் இப்படி அழைத்தால் பிடிக்காது என்று சொன்னதாக நினைவு.
அந்நாட்களில் துணி சோப்பை சவுக்காரம் என்று அழைப்போம் இல்லையா?.. அதனால் தான் சோப் நினைவு.
நீக்குதமிழில் வேகமாக டைப்பும்போது எனக்கு அப்படிதான் வந்தது. சௌகார் என்று அப்போது வரவில்லை. எனக்கும் அது இடித்தது. என்றாலும் விட்டு விட்டேன்.
நீக்குநமது அரைகுறைகளால் நடத்தப்படும் தமிழ்ப் பத்திரிக்கைகள், மீடியா போன்றவை இப்படித்தான் சொல்லிக்கொடுக்கின்றன -படிப்பவருக்கு, கேட்பவருக்கு: சவுகார், சவுமியா, கவுதமி, மவுனம், பவுர்ணமி..
நீக்கு//இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், ரகுவரன் முதலில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவே அழைக்கப் பட்டாராம். பின்னர் ஸ்க்ரீன் டெஸ்ட்டில் 'கதாநாயகனுக்குரிய அம்சங்கள்' இருப்பதாகக் 'கண்டுபிடிக்கப்பட்டு' நாயகனாராம்.//
பதிலளிநீக்குஎத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகும் 'இந்த மாதிரி' விஷயங்கள் ஏதோ சரித்திர உண்மைகள் மாதிரி தொடர்ந்து சொல்லப்பட்டு வருவது
தான் சினிமாச் செய்திகளின் சுவாரஸ்யம் போலும்.
ஹா.. ஹா... ஹா... நமக்கு சுவாரஸ்யமில்லாத விஷயங்கள் இன்னொருவருக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம்!
நீக்குஏழாவது மனிதன் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குபிடித்த பாடல்தான் இது.
நன்றி கோமதி அக்கா.
நீக்குபாரதியின் பாடல் காலங்கடந்தும் மயக்குவது. எல்.வைத்யநாதன் இதமாகக் கொடுத்திருக்கிறார் இசை. இந்த நீரஜா இதற்கப்புறம் பாடவில்லையா?
பதிலளிநீக்குஇரண்டாவது பாடலைத் தந்தவர் ஆலங்குடி சோமுவா? நன்றாக எழுதியிருக்கிறார். ‘தனிமையிலே தவறு செய்தால் தன்மனமே பார்க்காதா?’ என அப்பாவியாகக் கேட்கிறாரே மனுஷன். நல்லகாலம், இந்த மாதிரி கஷ்டமான கேள்வியையெல்லாம் அப்போதே கேட்டுவிட்டு ஓடிவிட்டார்..
//கஷ்டமான கேள்வியையெல்லாம் அப்போதே கேட்டுவிட்டு ஓடிவிட்டார்..//
நீக்குசிரித்து விட்டேன். ஆனால் காட்சியைப் பாருங்கள் ஏகாந்தன் ஸார். ரொம்ப சைவமாக இருக்கும்!
அடுத்த வாரம், ‘அடுத்தவீட்டுப் பெண்’ணைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா ?
பதிலளிநீக்குஅடுத்த வீட்டுப் பெண்ணில்?
நீக்குயார் ரொம்ப அழகோ அவரை
நீக்குஅவரை....?
நீக்கு’கண்ணாலே பேசிப் பேசி..’ (பி.பி.ஸ்ரீனிவாஸ்) அல்லது ‘மன்னவா.. வா.. வா மன்னவா..’ (பி.சுசீலா)
நீக்குஎனக்கும் மிகப் பிடிக்கும். ஜி
நீக்கு'வீணையடி நீ எனக்கு' என்று தொடர்கதை ஒன்று உண்டே? விகடனா? குமுதமா?.. படத்தைப் பார்த்தால் கல்பனா வரைந்த படம் மாதிரி இருக்கு.. கல்பனா என்றால் கல்கி. இல்லை, சாரதியோ?..
பதிலளிநீக்குநடேச அண்ணாச்சி, அம்புஜம் என்று இரண்டு கதா பாத்திரங்கள்.
யார் எழுதியிருப்பார்கள்?..
அதைதான் கேட்டிருந்தேன். எழுதியது யார்?
நீக்கு//திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு உண்மை நிகழ்ச்சியின்..//
பதிலளிநீக்குதிருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சியின்
சரி! டைப்பும்போது சிலவரிகள்வருவதில் தாமதம் ஆகி, அடுத்த வரி போனால் அது விட்டுப்போய் விடுகிறது!
நீக்குஆமாம் அந்தப் படம் வெகு அழகு. இந்தக் கட்டுக் குடுமி யாரையோ நினைவ்வு படுத்துகிறது.
பதிலளிநீக்குயாரை? கதையிலா? சினிமாவிலா? நிஜ வாழ்விலா?
நீக்குஆஹா, வளையல் சிங்காரச் செட்டி. ராவ் பஹதூர் சிங்காரம்
நீக்குகால்களே நில்லுங்கள் பாடல் கேட்டேன்.
பதிலளிநீக்குவிஜய நிர்ம்லா பெயர் காரணம் அறிந்து கொண்டேன்.
"கார்த்திகை விளக்கு திருக்கார்த்திகை விளக்கு கந்தவேலன் கடம்பனுக்கு கார்த்திகை விளக்கு" என்ற பாடல் முன்பு பகிர்ந்து இருக்கிறேன். இந்த படத்தில் என்று தான் நினைக்கிறேன்.
ஓஹோ... நன்றி கோமதி அக்கா.
நீக்குமுதல் பாடல் நிறையதடவை கேட்டிருக்கிறேன். 80களில் பாளையங்கோட்டையில் போஸ்டர் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் - இதுவரை கேட்டதில்லை. எங்கேயிருந்துதான் பிடிக்கிறீங்களோ... பாடலும் சுமார். பட்டிக்காடா பட்டணமாவின் மெதுவான ரிதம்.
கீதா ரங்கன் 'காணாமல் போனவர்கள்' பட்டியலில் சேர்ந்தது வருத்தம்தான். அவங்கனா, ராகம், பாடல் பற்றி நிறைய எழுதுவாங்க. விரைவில் கணிணி ஹார்ட் டிஸ்க் பிரச்சனை தீரணும், மொபைல்ல தட்டச்சு செய்யும்போது கைவலி வரக்கூடாது....
பதிலளிநீக்குஞாயிறு அல்லது சனிக்கிழமைக்கு - இன்னொரு தளத்தில் வந்த கட்டுரையோ, அனுபவமோ பகிரலாம் என்று தோணுது. அது அதை ரெக்கமெண்ட் பண்ணுபவரைக் கவர்ந்த இடுகையாக இருக்கணும், புதியதாக இருக்கக்கூடாது (ஒரு வருடத்துக்குள் வந்ததாக இருக்கக்கூடாது), தளத்தின்-எ.பி தரத்துக்கு ஏற்ற இடுகையாக இருக்கணும் என்று கண்டிஷன்கள் போடலாம்).
பதிலளிநீக்குநான் சமீபத்தில் சில இடுகைகளைப் படித்தேன். மிக அருமையானவை, ஆனால் பின்னூட்டங்கள் இல்லாதவை. அப்போது எனக்குத் தோன்றிய யோசனை.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபாடல்கள் இரண்டுமே நன்றாக உள்ளது. இரண்டாவது கேட்டதில்லை. இப்போது இரண்டையும் கேட்டு ரசித்தேன். பாடல்களை குறித்த தகவல்களுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வீணையடி நீ எனக்கு பிடித்த பாடல்.
பதிலளிநீக்கு