வழக்கம்போல முதலில் நேய விருப்பம்!
பீம்சிங்கின் திரைக்கதை இயக்கத்தில், சிவாஜி, சௌகார், எஸ் எஸ் ஆர் நடித்து, 1964 இல் வெளிவந்த திரைப்படம் பச்சை விளக்கு. கண்ணதாசன் பாடல்களுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. இந்தப் படத்தின் "கேள்வி பிறந்தது அன்று" பாடலை நான் பகிரும் வரிசையில் வைத்திருந்தேன். இப்போது அந்தப் படத்திலிருந்து ஜீவி ஸார் கேட்டிருக்கும்படி "ஒளிமயமான எதிர்காலம்" பாடல். இதில் வரும் 'வாராதிருப்பாரோ... வண்ணமலர்க் கன்னியவள்' பாடலும் 'தூது செல்ல ஒரு தோழி இல்லையென' பாடலும் கூட எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
'ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது' பாடல் வரியைக் கேட்கும்போது எவ்வளவு நம்பிக்கையுடன் பாடப்பட வேண்டிய பாடல் என்று தோன்றும். ஆனால் பாடல் ஆரம்ப இசையும் சரி, பாடலும் சரி ஒரு மெல்லிய சோகத்தில் இருப்பது போல தோன்றும்.
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது (ஒளிமயமான)
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் -
அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் -
அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க
என்றவர் பாடுகின்றார் (ஒளிமயமான)
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும்
மணம்பெறவே வருக
----------------------------------------------------------------
ஆறுமுகம் என்கிற ருத்ரய்யா இரண்டு படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார். ஒன்று 'அவள் அப்படிதான்'. இன்னொன்று 'கிராமத்து அத்தியாயம்'. இரண்டு படங்களுக்கும் இசை இளையராஜா. இரண்டு படங்களிலும் இனிமையான பாடல்கள் உண்டு.
மூன்றாவதாக கமலை வைத்து அவர் எடுக்கத் தொடங்கிய 'ராஜா என்னை மன்னித்துவிடு' இவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது!
கமல் படத்தில் இன்னும் ஸ்டார் வேல்யூ 'ஏற்ற' நினைத்து செய்த குழப்பத்தில் படம் நின்று போனதாம். இதற்கு இளையராஜா போட்ட டியூன்களை அப்புறம் வேறு படத்தில் உபயோகித்துக் கொண்டார்களாம்.
இன்று கமல் பாடிய ஒருபாடல், அவள் அப்படிதான் படத்திலிருந்து. கங்கை அமரன் பாடலுக்கு இளையராஜா இசை. 1978 இல் வெளிவந்த படம்.
பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ புது ராகமிட்டு
ஆண் கொண்ட தாகம் தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ இது யார் பாவம்
ஆண் செய்த சட்டம் அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ இது யார் சாபம்
நியாயங்களோ பொதுவானது புரியாமல் போனது
பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை நிஜ வாழ்க்கையிலே
பலபேரைச் சேரும் பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு இந்த பூமியிலே
நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது
பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குமங்களகரமான வார்த்தைகளுடன்
பதிலளிநீக்குகவியரசர் இயற்றிய பாடல்...
மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது...
நம்பிக்கை என்பதே மெல்லிய சோகம் தானே ஸ்ரீராம்!...
இந்தப் பன்னீர் புஷ்பங்களே எனும் பாடல் அப்போதிருந்தே பிடிக்காது...
பதிலளிநீக்குஇப்போது அந்தப் பாடலின் வரிகளைப் படிக்கும் போது சுத்தமாகவே பிடிக்கவில்லை..
க்ருஷ்ண தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் எவர்?...
அதை சாமானியர்களால் அளவிடவும் கூடுமோ?...
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம். வாங்க...
நீக்குஅன்பு ஸ்ரீராம் துரை அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குகேள்வி பிறந்தது எப்பொழுதுமே பிடிக்கும்.
அந்த நடையும், கெத்தும் யாருக்கு வரும்.
ஒளிமயமான எதிர்காலம் முழங்கிய காலம் நன்றாகவே முழங்கியது.
கேள்வி பிறந்தது மிகப் பிடித்தது அத்தோடு அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல
நினைத்தாள் இன்னும் பிடிக்கும்.
ஒளிர்கிறது வெள்ளி. இன்று எங்கள் கோவிலில் விசெஷம்.
சாப்பாடு எல்லாம் அங்கே தான்.
சுங்கப்பூர் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் வேத விற்பன்னர்கள்,
சமையல் விற்பன்னர்கள் எல்லாம் காலை நாங்கு மணியிலிருந்து கலகலா.
முக நூலில் பதிந்திருக்கிறேன்.
திருமலை அப்பனைப் பதிந்திருக்கிறேன்.
அனைவரும் வாருங்கள்.
அவன் அனைத்தும் தந்தருள்வான்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பன்னீர்ப் புஷபங்கள் ரசித்ததில்லை .மன்னிக்கணும் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஎனக்கு ரொம்பப் பிடிக்கும் வல்லிம்மா. மாலையாகத் தொடுக்கலாம். சீசனின்போது மரத்தில் கொத்துக் கொத்தாகப் பூத்துத் தொங்கும். மலர்கள் கீழே விழுந்து மரத்தின் அடியில் ஒரே மலர்க்குவியலா இருக்கும். விரைவில் படத்தைப் பகிர்கிறேன்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குநேயர் விருப்ப பாடலுக்கு ஜீவி சாருக்கும், உங்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குமிகவும் பிடித்த பாடல். கேட்டேன்.
பன்னீர் புஷ்பங்களையும் கேட்டேன்.
ஆறுமுகம் என்கிற ருத்ரய்யா பற்றி தெரிந்து கொண்டேன்.
ஒளிமயமான எதிர்காலம் பாடல் மிக அருமை. பாடல் ரொம்ப பாசிடிவ் ஆக இருப்பதால் அதற்குப் பின் வரும் நிகழ்ச்சிகள் சோகமாக அமைகிறதோ படத்தில்?
பதிலளிநீக்குபன்னீர் புஷ்பங்கள் பாடல் பிடிக்கும். இரண்டாவது சரணம் நல்லா எழுதப்படலை. கண்ணதாசனா தவறா எழுதியிருக்கார்னு நினைத்திருக்கிறேன். ஓ... எழுதியது கங்கை அமரனா... அவருக்கு விவரம் போதாது.
கண்ணதாசனா தவறா எழுதியிருக்கார்னு நினைத்திருக்கிறேன். ////
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...
உங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உண்மைதான். கண்ணதாசன் இந்த மாதிரி விஷயங்களில் மிகச் சரியா எழுதுவார், ஆனா இதை எப்படித் தவறா எழுதியிருக்கார்னு நினைத்தேன்.
நீக்குநீங்க கர்ணன் படப் பாடல்கள் கேட்டிருக்கீங்களா? கண்ணதாசனின் மேதமை புலப்படும் பாடல்கள் அவை.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல்கள் அருமை. பாடல்கள் இரண்டும் அருமை. முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன்.,"ஒளிமயமான எதிர்காலம் அனைவரும் விரும்புவதுதானே..!" இந்த படமும் தொலைக் காட்சியில் பார்த்துள்ளேன்.
இரண்டாவது பாடல் கேட்டதில்லை. படம் கேள்வி பட்டதுதான். ஒருவேளை பாடல் கேட்டால் நினைவுக்கு வரும். விபரங்கள் அறிந்து கொண்டேன். நன்றி.
சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் பகிர்ந்த இன்றைய திருக்குறளுடன் முதல் படம் ஒத்து வருகிறது.( எல்லா விளக்கும்.. பச்சை விளக்கு.. ஆக வெள்ளியில் ஏற்றப்பட்டுள்ள விளக்குகளின் ஒளியில் ஒளிமயமான எதிர்காலம் எல்லோருக்கும் அமையட்டும்.) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள்,பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபச்சை விளக்கு படம் பார்த்தது இல்லை. ஆனால் பாடல்கள் அத்துபடி! அதிலும் ஒளிமயமான எதிர்காலம் எல்லோருக்கும் வேண்டுமே! பன்னீர் புஷ்பங்கள்னு படம் வந்திருக்குனு தெரியும். பார்த்ததில்லை. அவள் அப்படித்தானும் அப்படியே! இது பாலசந்தர் படம்னு நினைச்சிருந்தேன். இல்லையா?
மத்தியானம் முகநூலில் யாரோ ஒரு நண்பர் "முதல்மரியாதை" படம் எடுக்கப்பட்ட விதமும், அதன் மூலக்கதை பற்றியும் விரிவாக எழுதி இருந்தார்கள். அதைப் பகிர நினைத்து மறந்துட்டேன். இங்கே வரும் ஜிவாஜி ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்தமான பதிவாக இருக்கும் அது.
பதிலளிநீக்குஇஃகி,இஃகி,இஃகி, பாட்டு பன்னீர்புஷ்பங்களேனு ஆரம்பமா? நான் அந்தப் படத்தின் பாட்டுனு நினைச்சுட்டேன்.
பதிலளிநீக்குஹாஹா! நான் கூட இந்த படத்தில் வரும் உறவுகள் தொடர் கதை, என்ற பாடல் உறவுகள் தொடர் கதை என்ற படம் என்று நினைத்துக் கொண்டு என் தோழியிடம் பெட் கட்டி தோற்றுப்போனேன். ஹி ஹி!
நீக்குஆறுமுகம் என்கிற ருத்ரய்யா இரண்டு படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார். ஒன்று 'அவள் அப்படிதான்'. இன்னொன்று 'கிராமத்து அத்தியாயம்'. இரண்டு படங்களுக்கும் இசை //
பதிலளிநீக்குஇந்த இரண்டு படங்களுமே அருமையான படங்கள்.
பச்சை விளக்கு, அவள் அப்படித்தான் இரண்டுமே நான் மஸ்கட்டில் இருந்த பொழுது கேசட் எடுத்து பார்த்தேன். ப.வி.யில் சௌகார் ஜானகியின் நடிப்பு பிடித்தது.
பதிலளிநீக்குநேயர் விருப்பம், நேய விருப்பமானதை கீதா அக்கா கூட சுட்டிக் காட்டவில்லையே.
பதிலளிநீக்குஅவள் அப்படித்தான் படம் ஒரு துணிகர முயற்சி. எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் வெளிச்சத்தை வெளிச்சமாகவும், இருட்டை இருட்டாகவும் காண்பித்த முதல் படம். அனால் படம் பெரும்பான்மையும் இருட்டாகவே இருக்கும். A film made much ahead of it's time. அதனாலேயே வெற்றி பெற முடியவில்லையோ என்னவோ? இந்தப் படம், கே.பாலச்சந்தரின் அவர்கள் போன்றவை இப்போது வெளியாகியிருந்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கலாம். அவள் அப்படித்தான் ப்ரி வியூ முடிந்த பிறகு டிஸ்ட்ரிபியூட்டர்கள் தன்னை கன்னாபின்னாவென்று திட்டியதை மறக்கவே முடியாது என்று கூறியிருந்தார். பின்னாட்களில் அவர் மிகவும் வறுமையில் இருந்ததாகவும், தன்னுடைய 67வது வயதில் இறந்து விட்டார் என்றும் படித்த பொழுது மனசுக்கு வருத்தமாக இருந்தது.
பதிலளிநீக்குஅவள் அப்படித்தான் படத்தில் ஸ்ரீப்ரியா ஒரு ஃபிரீக் ஆக வருவார். இதற்கு வசனம் எழுதியது ஒரு பிரபல எழுத்தாளர். யார் என்பது இப்போது மறந்து விட்டது(ஞானி? வண்ணதாசன்? வண்ண நிலவன்? பிரபஞ்சன்?). அந்த படத்தில் ஒரு சமூக சேவகியை கமலும், ஸ்ரீப்ரியாவும் பேட்டி காணுவார்கள்.அந்த சமூக சேவகி போலியான அடக்கத்தோடு,"இதையெல்லாம் நான் எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை, அபலை பெண்களுக்கு வாழ்வு அளிப்பது எனக்கு ஒரு சந்தோஷம்" என்பார். உடனே ஸ்ரீப்ரியா,"அப்போ, நீங்க சந்தோஷமா இருக்கணும்னா தினம் தினம் யாராவது ஒரு பெண் அபலை ஆகிக்கொண்டிருக்க வேண்டும்" என்பார்.
பதிலளிநீக்குமூன்றுபேர் வசனம் எழுதினார்களாம். வண்ணநிலவன், ருத்ரையா உட்பட.
நீக்கு//ஒளிமயமான எதிர்காலம்//
பதிலளிநீக்குஎல்லோருக்குமே பிடித்தமான பாடல்தான்...
இரண்டாவது பாடல் வரிகள் அபத்தம். யாரெல்லாம் பாட்டு எழுதுவது என்கிற விவஸ்தையில்லாமல் போய்விட்டது என்பதை அப்போதே சொல்லியிருக்கலாம் போலிருக்கிறது. ஒருவேளை, ’குழப்பம்’ அதைப் பாடப்போகிறது என்பதாலேயே ஒரேயடியாய் குழம்பி, மய்யமாகப் போய்விட்டதோ அந்தப் ‘பாடல்’ !
பதிலளிநீக்குஒளிமயமான எதிர்காலம்.. பாட்டு மனதில் அப்படியே பாடம்... இதைக் கேட்காதோர் இருக்க மாட்டீனம்.
பதிலளிநீக்கு2ம் பாட்டு கேட்டதாக இல்லை எனக்கு... முதல் படம் பார்த்திட்டேன் திரும்ப பார்க்கவேண்டும், 2ம் படம் பார்த்ததில்லை பார்க்க ஆசையாக இருக்கு.
'ஒளி மயமான எதிர்காலம்' பாட்டிற்கு சிவாஜியின் உதட்டசைவை பற்றி குறிப்பிட்டு யாராவது சொல்வார்களா என்று எதிர்பார்த்தேன்.
பதிலளிநீக்குரயில் என்ஜின் டிரைவருக்கான, கரி அள்ளிப் போடும் மஹாகலை ஞனுக்கான (உபயம்: கமல்) ஒப்பனை எல்லாம் கனக்கச்சிதம்,
என்ஜின் பிஸ்டன் அசைவில் நிழலாக விஜயக்குமாரியைக் காட்டுவது,
கால ஓட்டத்தைக் குறிக்க காலண்டர் தாள் நகர்வுகள் -- அந்தக் காலத்திற்கு இதெல்லாம் புதுமை. 'ப' பட வரிசை பீம்சிங் கொடிக்கட்டிப் பறந்த காலத்தின் துவக்கம்.
நான் மத்திய அரசுப் பணியில் சேர்ந்த அடுத்த வருடம் வெளிவந்து புதுவை ஆனந்த் தியேட்டரில் பார்ந்த நினைவு.
"நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் -
அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார் ..
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும்
மணம்பெறவே வருக....
-- பிள்ளைத்தமிழாய் தமிழ் மொழியை தன் வார்த்தைகளில் நடைபயில வைத்து நம்மை ஆனந்திக்க வைத்த கவியரசர். இப்படியெல்லம் எழுத இனி யார் இருக்கிறார்கள் என்ற ஏக்கமே மிஞ்சுகிறது...
பாடல் கேட்டு மனம் நிறைந்தது. நான் கேட்ட பாடலை ஒளிபரப்பிய எங்கள் பிளாக் குழுவினருக்கு நன்றி.
ஜீவி ஐயா அவர்களுக்கு நன்றி...
நீக்குஅந்த நாளில் கேட்ட போதே மனதில் பதிந்தது இந்தப் பாடல்...
என் தங்கைகளுக்காக எந்நேரமும் நான் பாடிக் கொண்டிருப்பது இந்தப் பாடலைத் தான்...
இன்று வெள்ளிக்கிழமை... ஆதலால்
இங்கே வழக்கம்போல இணையம் இழுவை..
கைபேசியில் தட்டச்சு அதிகமாகச் செய்வதற்கு இயல வில்லை...
எனினும் தங்களது கைவண்ணம் கண்டதும் எனக்குள் ஆர்வம்...
இன்றைய வறட்டு விடலைகளுக்கு
ஆணாகட்டும் பெண்ணாகட்டும்...
அங்கயற்கண்ணியையும் தெரியாது..
மங்கையர்க்கரசியையும் புரியாது...
அதனால்தான் பெற்றோர்களுக்குத் தீராப் பழியைத் தேடி வைக்கின்றனர்...
எப்படியோ இன்று காலையில்
நல்லதொரு சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது..
இது ஆரம்பமாக இருக்கட்டும்...
ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினியின்
வீரத் தாண்டவம் எங்கெங்கும் நிகழட்டும்...
ஓம் சக்தி...
அன்பின் துரை ஐயாவின் பதில் மனசை நெகிழச் செய்கிறது. கைப்பேசி சரிவர ஒத்துழைக்காத நேரத்தும் அவரை உந்தித் தள்ளி பதிலெழுத வைத்த அந்த உணர்விற்கு நன்றி. மரணமில்லா கவிஞர்கள் வரிசையில் பாரதிக்கு அடுத்த இடத்தை தனதாக்கிக் கொண்ட கண்ணதாசனாரின் தமிழுக்கு நன்றி.
பதிலளிநீக்குபடத்தில் சில நிகழ்வுகள் மனதில் படிந்து விட்டால் அப்படப்பாடல்களும் பிடிக்கும் போல் இருக்கிற்து
பதிலளிநீக்குஅர்த்தமுள்ள அழகிய பாடல்...
பதிலளிநீக்குஅருமையான பாடல்
பதிலளிநீக்கு