உங்கள் வீட்டில் எப்போது முதல் டேப்ரெக்கார்டர் வாங்கினீர்கள்?
முதலில் C- 60 என்றும் பின்னர் C -90 என்றும், முறையே ஒரு மணி நேரம், ஒன்றரை மணிநேரம் இசைக்கும் ஒலிநாடாக்கள் வந்த காலம். C -45 என்று கூட ஒன்றிருந்தது! அந்த வகையில் C-45 நான் ஒன்றே ஒன்று வைத்திருந்தேன். எம் ஆர் ராதாசிங்கப்பூரில் ஆற்றிய உரை அது. அதன் அருமை தெரியாமல் சில நாட்களுக்குப்பின்னர் அதை அழித்து அதில் எஸ் பி பி - வாணி ஜெயராம் பாடல்கள் ரெகார்ட் செய்து வைத்திருந்தேன்! (அதில் முதல் பாடல் 'அன்பு மேகமே....' கடைசிப்பாடல் 'இதோ என் காதலி கண்மணி...!')
டி எம் எஸ் தனிப்பாடல்கள், டி எம் எஸ் சுசீலா, எஸ் பி பி தனிப் பாடல்கள், எஸ் பி பி சுசீலா, எஸ் பி பி -ஜானகி, எஸ் பி பி -வாணி ஜெயராம் என்றெல்லாம் தனித்தனியாக கேசெட் வைத்திருந்தேன்! சுசீலாம்மாவுக்கு மட்டும் ஐந்து கேசட்டுகள்!
காலி கேசெட் வாங்கி ரேடியோவிலிருந்து ரெகார்ட் செய்வதும் உண்டு. அதிலும் புதுமைகள் (!!) செய்வேன். இசையே இல்லாமல் வரிகள் மட்டும் ரெகார்ட் செய்வேன். ஆண்குரல் மட்டும் பாடியதை ரெகார்ட் செய்வேன். (என்னிடம் 'கண்ணில் என்ன கார் காலம்' என்று எஸ் பி பி மட்டும் மூன்று முறை பாடியது மட்டும் இருக்கும். பெண் குரல், ஆண் குரலுடன் இணைந்து பாடிய டூயட் பாடல்களில் எஸ் பி பி குரல் மட்டும் இருக்கும்!)
ரேடியோவில் ரெகார்ட் செய்யும்போது தனியாக ஒரு டிரான்சிஸ்டரை வைத்து இசை ரெகார்ட் செய்து அதனுடன் கூடவே நான் பாடி (!!)ரெகார்ட் செய்திருக்கிறேன். அப்போது என் மாமா மைக்ரோபோன் மைக் அறிமுகம் செய்து வைத்தார். டூ இன் ஒன்னில் ரெகார்ட் செய்யும்போதே இசை முடிந்த உடன் வால்யூமை சற்றே குறைத்துவிட்டு மைக்கில் நாம் பாடலாம். இசையுடன் நம் குரல் ஒலிக்கும். வாணி ஜெயராமுடன், சுசீலாம்மாவுடன் ஜானகியம்மாவுடன் என்றெல்லாம் சேர்ந்து பாடலாம்!
முதன்முதலில் கேசட்டில் தனியாக பாடியது / பேசியது ஒரு அனுபவம். அதற்கான முஸ்தீபுகளை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
அப்புறம் நாங்கள் குடும்ப உறவுகளுக்குள் ஒருவர் ஊருக்குச் செல்லும்போது கடிதம் எழுத்துவதற்கு பதிலாக கேசட்டில் பேசி அனுப்பி, அதிலேயே பதில் வாங்கியிருக்கிறோம். அதை எல்லாம் அழிக்காமல் இருந்தால் இப்போது பல சுவாரஸ்யமான பொக்கிஷங்கள் குடும்பத்துக்குள் இருந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. இப்போதும் என் பையன் சின்ன வயசில் பேசிய பாடிய குரல் கேசட்டில் இருக்கிறது. என் அப்பா அம்மா, தாத்தா குரல்களும் இருக்கின்றன. ஆனால் அதை ஓடவிட டேப்ரெக்கார்டர் இல்லை. அவற்றை சிடியாக மாற்றவில்லை.
கேசெட் வேறொரு வகையில் எனக்கு மிகவும் உதவியது. அது தனிப்பட்ட விஷயம்! டேப் ரெக்கார்டர் பற்றிய என் நினைவுகள் இன்னும் ஏராளம் உண்டு. ரொம்ப போரடிக்காமல் நிறுத்திக்கொள்கிறேன் இங்கு!
இதை எல்லாம் நினைவுகூர வைத்தது எஸ் பி பி சொன்ன அவர் அனுபவம்!
அவர் காளஹஸ்தியில் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் அவர் முதல் ரெக்கார்டிங் நடந்தது என்றும், அவர் குரல் சற்றே பெண்குரலாய் இருக்கும் என்றும், சுசீலாம்மா, ஜானகியம்மா பாடல்களை எல்லாம் பாடுவார் என்றும் சொன்னார். அவர் குரலை முதன்முதலில் ரெகார்ட் செய்தது திரு ஜி. பாலசுப்ரமணியம், விஞ்ஞான ஆசிரியர்.
ஒரு நாள் பள்ளிக்குச் சென்றபோது எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது அவர்கள் முன்னே காட்சியளித்த க்ரண்டிக் டேப்ரெக்கார்டர். இவரை அழைத்து அவர் பாடச் சொன்னதும் இவர் செஞ்சு லக்ஷ்மி படத்தில் வரும் சுசீலாம்மா பாடிய "மந்தார மகரந்த" பாடலை பாடினாராம். அதை அவர் ரெகார்ட் செய்து திருப்பிப் போட்டுக் காட்டியது புதியதொரு அனுபவமாக இருந்ததாம். செஞ்சு லட்சுமியில் அந்தப் பாடலைத் திரையில் பாடி நடித்தவர் பாபுஜி என்றும், அவர் ஜெமினி மகள் ரேகாவின் இளைய சகோதரர் என்றும் எஸ் பி பி சொல்கிறார். (ஜெமினி ரேகாவை ஆரம்ப காலங்களில் தன் மகள் என்றே ஒத்துக்கொள்ளவில்லையாம். இந்தக் காரணத்தால் ஜெமினி மரணமடைந்தபோதுகூட ரேகா வரவே இல்லையாம்! இதை எஸ் பி பி சொல்லவில்லை!!)
===========================================================================================
சில வாரங்களுக்குமுன் வாயுபுத்திரன் கதை பற்றிச் சொல்லும்போது அதுதான் கெளரவம் படத்தின் கதை என்று பேஸ்புக் நண்பர் ஒருவர் சொன்னதையும், படத்தில் டைட்டில் கார்டில் அவர் பெயர் கர்ட்டஸி எதுவும் கொடுக்கவில்லை என்பதெல்லாம் பேசியிருந்தோம். சமீபத்தில் பார்த்த ஒரு காணொளியில் சிறு விளக்கம் கிடைத்தது. அதிலிருந்து கிடைத்த சில சுவாரஸ்யங்கள்..
யு ஏ ஈ ட்ரூப்பில் வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிக்கொடுத்த நாடகம் கண்ணன் வந்தான். அதுதான் கெளரவம் ன்ற பெயரில் படமாக வந்தது. இதை YGM சித்ரா லகஷ்மணனுக்கு கொடுக்கும் பேட்டியில் கூறியிருக்கிறார். கௌரவம்தான் YGM முதலில் சிவாஜியோடு இணைந்து நடித்த படமாம். வியட்நாம் வீடு, பரீட்சைக்கு நேரமாச்சு எல்லாமே அப்படிதான். நாடகமாக வந்து படமானவை.
YGM திருமணத்துக்குமுன் மனைவியாக வரப்போகும் சுதாவிடம் ஒரு கேள்வி கேட்டாராம். "எனக்கு சிவாஜின்னா உயிர். எம் எஸ் வி ன்னா உயிர்... உனக்கும் பிடிக்கும்னா சொல்லு... நாம கல்யாணம் பண்ணிக்கலாம்' னாராம். திருமதி சுதா அப்போது "ஆமாம்... எனக்கும் பிடிக்கும்" என்று சொல்லி விட்டு பதிலுக்கு "எனக்கும் ஒரு டீல்... உங்களுக்கு சரோஜா தேவியைப் பிடிக்குமா?" என்று கேட்டாராம். இவருக்கும் சரோஜா தேவியைப்பிடிக்கும் என்பதால் 'ஆமாம்' என்றதும் திருமணம் நிச்சயமாயிற்றாம்!
=================================================================================================
ஜெ.. தான் இது மாதிரி படங்களுக்கு அப்போது பிரபலம். மாயாவும் இப்படி ஒரு படம் வரைந்திருக்கிறார். சமீபத்தில் ஃபேஸ்புக் கீழ் இந்தப் படத்தைப் போட்டு இப்படி எழுதியிருந்தேன்.
"நேத்திக்கே ட்ரெஸ் அயர்ன் பண்ணி வாங்கி வைச்சுருக்கலாம்... அவர் எப்ப கொடுத்து ரெண்டு பேரும் எப்போ ஆபீஸ் கிளம்பறது?"
இதற்கு துரை செல்வராஜூ ஸார் ஒரு கவிதை எழுதி இருப்பதாகச் சொல்லி இருந்தார். இதுவரை அதை அவர் அனுப்பாததால் வெளியிட இயலவில்லை.
=====================================================================================
மனைவிக்கு மரியாதை! இது 1960 ஸ்டைல்!
=========================================================================================
இதை நான் எழுதிய தேதியைப் பார்த்தால் எதற்காக எழுதினேன் என்று தெரிந்திருக்கும்.
=================================================================================================
மழைக்காலத்தில் சாலையோரங்கள் மரங்களாலும் செடிகளாலும் நிறைந்திருக்கின்றன. இந்த வாரம் இந்தப் பூ... வாழைப்பூ.... கல்வாழைப்பூ!
இதை நான் எழுதிய தேதியைப் பார்த்தால் எதற்காக எழுதினேன் என்று தெரிந்திருக்கும்.
=================================================================================================
மழைக்காலத்தில் சாலையோரங்கள் மரங்களாலும் செடிகளாலும் நிறைந்திருக்கின்றன. இந்த வாரம் இந்தப் பூ... வாழைப்பூ.... கல்வாழைப்பூ!
ஒருமையுள் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து...
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம். வாங்க....
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் இறைவனை மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா...காலை வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குஇந்தப் படத்துக்கான கவிதை எழுதுனது எழுதியபடியே இருக்கு கைத் தொலைபேசியில்....
பதிலளிநீக்குஅதை கணினிக்கு மாற்றுவதற்கு..
இன்னும் நேரம் வாய்க்கவில்லை...
நேற்று தான் நினைத்தேன்...
வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் சொல்லியாயிற்று..
கவிதையை அனுப்பி வைக்காமல் இருந்தால்
ஸ்ரீராம் என்ன நினைப்பார் என்று!...
ஹிஹிஹி...நானாவது மறுபடியும் கேட்டிருக்கலாம். நானும் நேற்றிரவுதான் எடிட் செய்தேன்! எனவே நேரமில்லை!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... காலை வணக்கம்.
நீக்குபாக்கிஸ்தானியர்கள் படிப்பறிவு குறைவானவர்கள் கடிதம் எழுத தெரியாதவர்கள் பலர். டேப் ரெக்கார்டரில் பேசி ஊருக்கு கேசட் அனுப்பி விடுவார்கள்.
பதிலளிநீக்குஎனக்கு அவனை பிடிக்கும், இவளை பிடிக்கும் என்ற டீல் பைத்தியக்காரத்தனமானது. இதையும் வெட்கமில்லாமல் வெளியில் சொல்கின்றார்களே மடந்தைகள்.
எனக்கு அம்மாவை பிடிக்கும், அப்பாவை பிடிக்கும் என்று டீல் பேசினால் அர்த்தம் உண்டு.நாளை கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் ?
சரோஜாதேவி வந்து சமாதானம் செய்வாளா ?
கூத்தாடி புத்தி கூத்தியாளை சுத்தும்"னு தேவகோட்டை(யான்) பழமொழிக்கு அர்த்தம் இருக்கு....
வாங்க கில்லர்ஜி... படிக்காததால் அல்ல, அவரவர்கள் குரலிலேயே விசாரித்துக்கொள்ள டேப்ரெக்கார்டர் கேசெட் உபயோகித்தோம் நாங்கள்.
நீக்குஶ்ரீராம்.. காதல் கடிதங்களாக உங்களுக்கு கேசட் உபயோகமாயிருக்கும்.
நீக்குநான் சிவாஜி வெறியன். அவரைக் குறை சொன்னாலோ இல்லை படங்களுக்கு வர மறுத்தாலோ எக்கச்சக்க கோபம்வரும் என்பதால் இதனைக் கேட்டிருக்கிறார்.
நேரமில்லை ஆமேல பர்த்தினி
ஸ்ரீராம்ஜி நான் படிக்காதவர்கள் அதிகம் என்று சொன்னது பாக்கிஸ்தானியர்களை...
நீக்குவாங்க நெல்லை... கன்னடம் பேச ஆரம்பிச்சுட்டீங்க... நம்ம ஏரியா கதை தொடர ஆரம்பித்து விட்டீர்கள் போலவே...!
நீக்குதெரியும் நண்பர் கில்லர்ஜி. நான் சும்மா சீண்டத்தான் சொன்னேன்! ஹா...ஹா.. ஹா....
நீக்குஜெயராஜின் பாப்புலாரிட்டி கொடுத்த தாக்கம் மாயாவின் இந்த ஓவியம்! வேறொன்றுமில்லை.
பதிலளிநீக்குஅறுபதுகளில் ஆண்கள் - தமிழ்நாட்டு ஆண்கள் -கொஞ்சம் மென்மையாக, இங்கிதம் தெரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. முதலில் மன்னிப்பு.. பின்பு, நான் என்ன செய்துவிட்டேன்.. என்று பாடும் ரகம்! இப்போது ஆண்கள் என்று சொல்லித் திரியும் ஆசாமிகள் எப்படி மாறிவிட்டிருக்கிறார்கள் என்பதை நமது பத்திரிக்கைகளும், டிவி சேனல்களும் விலாவாரியாகப் பேசும்..
வாங்க ஏகாந்தன் ஸார்...
நீக்குஆமாம். ஏன், நாங்களெல்லாம் இப்படி வரையமாட்டோமா த்வனி அந்தப் படத்திலிருக்கிறது! மாறிய ஆண்கள் பற்றி தனிப்பதிவு எழுதலாம் போல...
will come tomorrow morning. Good Morning/Good Evening to one and all. Our prayers and greetings to all for a happy day.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... மெதுவா வாங்க.
நீக்குஎட்டாம் வகுப்பு படிக்கும்போது என் தந்தையின் நண்பர் டிரங் பெட்டி அளவுக்கு பேட் ரெகார்டர் கொண்டு வந்திருந்தார்..
பதிலளிநீக்குஅவர் அப்போது பினாங்கில் கடை வைத்திருந்தார்... என் தந்தையின் இசை நிகழ்ச்சியைப் பதிவு செய்து கொண்டதோடு என்னையும் பாடச் சொன்னார்கள்..
அறுபடை வீடு கொண்ட திருமுருகா!..
என்று பாடி வைத்தேன்....
போட்டுக் காட்டினார்.. எல்லாருக்கும் சந்தோஷம்....
81 ல் சிங்கப்பூர் சென்றதும் National Panasonic - Cassette Player வாங்கி
என் தங்கையின் கல்யாணத்தோடு TDK கேசட்டில் பேசி அனுப்பினேன்..
ஊரிலிருந்தும் பேசி அனுப்பியிருந்தார்கள்...
அந்தக் ஒலி நாடாக்கள் இப்போதும் வீட்டில் இருக்கின்றன...
ஆனால் கேட்க முடியுமா!.. தெரியவில்லை...
அம்மாடி... எத்தனாம்பெரிய டேப்ரெக்கார்டர்?
நீக்குஇப்போதும் அந்த ஒலிநாடாக்கள் வீட்டில் இருக்கின்றன என்பது ஆச்சர்யம்.
எங்கள் வீட்டில் இன்னும் கிடப்பது 90 களில் வாங்கிய TDK, SONY கேசட்டுகள்...
நீக்குஎன் மகன் கேட்டான் - தூக்கிப் போட்டு விடவா.. என்று...
எனக்கு மனமில்லை.. அதனால் தப்பிப் பிழைத்திருக்கின்றன...
எனது சேமிப்பில் உள்ள சில பக்திப் பாடல்கள் இணையத்தில் கூட இல்லை..
அவைகளை மீட்டெடுக்க ஆவல்...
நான் பாடிக் கொடுத்த கேசட்டை ஒருமுறை தான் கேட்டேன்...
அப்புறம் அது பினாங்குக்குப் போய் விட்டது...
ரசிகர்களுக்கு நல்லகாலம்..
எனக்கு வாய்ப்பு ஏதும் வரவில்லை...
95 களில் வாங்கிய டேப் ரெகார்டர்கள் ஒலி நாடாக்கள் இன்னும் வீட்டில் இருக்கின்றன...
பதிலளிநீக்குஅவற்றை வைத்தே பல கதைகள் எழுதலாம்...
எங்கள் வீட்டு கேசட்டுகளை எல்லாம் தூரப்போட்டுவிட்டேன். நிறைய தரமான கம்பெனி கேசட்டுகளை சீந்தக்கூட நாதி இல்லை. சுவரில் வைத்திருந்தேன்,
நீக்குடேப் ரெக்கார்டர் வாங்கிய வருடம் நினைவில்லை ஆனால் அதை போட்டு அடி அடி என்று அடித்தது நன்றாக நினைவில் உள்ளது. தஞ்சாவூர் தூத்துக்குடி போன்ற நகரங்களில் இந்த டேப் ரெக்கார்டர் தான் எனக்கு பொழுது போக பயனுள்ளதாக இருந்தது. சிடி பிளேயர் வந்தவுடன் அதன் மவுசு போய்விட்டது
பதிலளிநீக்குஎன்ன தவறு செய்தேன் என்று தெரியாமலே மன்னிப்பு கேட்பது பல ஆண்களின் பழக்கமாகிவிட்டது .என்ன செய்வது வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் திட்டு விழுவதற்கு முன்பே மன்னிப்பு கேட்டு விடுவது நல்லதுதானே?
டேப்ரெக்கார்டர், அதன்பின் சிடிக்கள்... அவற்றையும் தூரப்போட்டாகி விட்டது ஜோஸப் ஸார்.
நீக்குநீங்கள் வழக்கமாகவே பழைய ஜோக்ஸ் ரசிப்பீர்கள். இன்றும் ரசித்திருக்கிறீர்கள். நன்றி ஸார்.
நேற்று ரேடியோ பற்றிய பதிவு. இன்று டேப் ரெக்கார்டர் பதிவு. நாளை என்ன டீ வீ யா? கவிதை JJ மறைவு பற்றி நினைவூட்டுகிறது ஸ்ரீ ராம்.
பதிலளிநீக்குதற்போதும்
லாபம் உண்டெனில்
வீழ்பவர் வீழ்வார்
கால்கள் யாருடையதாகினும்
அதுவே அவர் தம் வாழ்வு.
Jayakumar
வாங்க ஜேகே ஸார். உண்மையில் இந்தப்பதிவு அதற்கும் முன்னாலேயே தயார் செய்யப்பட்டிருந்தது! கடைசி நேர எடிட்டிங்குகளை மட்டும் நேற்றிரவு முடித்தேன்!
நீக்குஉண்மைதான். ஜெ மறைவுக்குப் பிறகு எழுதியதுதான் இது. நீங்கள் சொல்லி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.
டேப்ரெக்கார்டர் - எஸ் பி பி அனுபவம் சுவாரஸ்யம்...
பதிலளிநீக்குகல்வாழைப்பூ அழகு...
நன்றி DD.
நீக்குடேப் ரீகார்டர் பழைய நினைவலைகளை மனதில் வலம் வரச் செய்கிறது
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குகல்ஃப் பூம் பீரியட் இருந்த பொழுது அங்கிருந்து வருபவர்கள் எல்லோருடைய கையிலும் ஒரு நேஷனல் பேனசோனிக் டேப் ரிகார்டர் இருக்கும். எங்கள் நெருங்கிய உறவினர்கள் எல்லோருடைய வீடுகளிலும் என் கணவர் வாங்கித்தந்த டேப் ரிகார்டர் உண்டு. கடைசியாக என் சகோதரிக்கு கேசட், சிடி, யூ.எஸ்.பி. பிலேயர் எல்லாம் இணைந்த சிஸ்டம் வாங்கி தந்தோம். அதி அவள் இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள். அதில் கேசட் பிலேயர் பழுதாகி சரி செய்ய மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்றாளாம். அவர்,"இப்போதெல்லாம் யாருமா? கேசட் கேக்கிறாங்க?" என்று கூறி விட்டாராம். இப்போது யூ.எஸ்.பி.யில் மட்டும் தினமும் ஸ்லோகங்களை போடுவாள்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... ஆம்... அங்கிருந்து செட் வாங்கியவர்கள் ஏராளம். அதுபோலவே அங்கு ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாக்கள் கூட தரமானவையாக இருக்கும். நான் அப்படி நீங்கள் கேட்டவை படத்தின் பாடல்கள் கொண்ட ஒலிநாடா வைத்திருந்தேன்!
நீக்குஎக்கச்சக்கமாக கேசட் இருந்தது. ராமாபுரம் வீட்டிற்கு சென்ற பொழுது சினிமா பாடல்கள் கேசட்டுகளை எங்கள் வீட்டிற்கு பால் சப்ளை செய்தவரிடம் கொடுத்தேன். பெங்களூர் வந்த பொழுது வேறு வழியில்லாமல் ஹரிதாஸ் கிரி பஜன், மற்றும் பல கர்னாடக சங்கீத கேசட்டுகளை தூக்கிப் போட்டேன். யார் வாங்கி கொள்வார்கள்?
பதிலளிநீக்குஓட்ட பிளேயர் இல்லாமல் ஒலிநாடாக்களை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய என்று நானும் அவற்றை ஒழித்து விட்டேன்.
நீக்குஅனைவருக்கும் மதிய வணக்கம். டேப் ரெகார்டர் ஹ்ம்ம்ம்.
பதிலளிநீக்குஎல்லாம் இனிமையான நிகழ்வுகள். நானும் எல்லாவற்றையும் பதிவு செய்வேன். முதலில் ரேடியோவிலிருந்து பாட்டு.
பிறகு கதாகாலட்சேபங்கள் மாமியார் கேட்பார். பாலகிருஷ்ண சாஸ்திரிகள்,
சேங்காலிபுரம் என்று போகும்.
பசங்க திருட்டுத் தனமாக அவர்கள் குரலைப் பதிவு செய்வார்கள். டிடிகே
காசட் நிறைய கிடைக்கும்.
நான் பாடி இருந்த மேகமே மேகமே கூட இருந்தது.
அதற்கப்புறம் எத்தனையோ விதவிதமாக,
மகன் கள் இருவரும் வாங்கினார்கள்.
இப்போ போஸ் சிஸ்டத்தில் வந்து வெறூமே கிடக்கிறது.
நான் கணீனி ,யூ டியூப் என்று அமைதியாகிவிட்டேன்.
கால்களில் விழுவது இப்போது நின்றுவிட்டது என்று நினைக்கிறேன். பாவம்
ஜெ.
மாயாவின் ஓவியம் ஜெ.... மாதிரி இல்லை.
அப்பாவிக்கணவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
வாங்க வல்லிம்மா... நீங்களும் பாடி வைத்திருந்தீர்களா? அதுவும் மேகமே மேகமே பாடல்... அடடே.... எங்கள் வீட்டில் முதல் முதல் காசு கொடுத்து வாங்கும் கேசெட் சாமி கேசெட்டாக இருக்கவேண்டும் என்று சுப்ரபாதமும், கந்த சஷ்டி கவசமும் வாங்கினார்கள்! அதற்கு முன்னாலேயே அந்த செட்டில் ஓசி வாங்கி சினிமா கேசட்டுகள் கேட்டு விட்டோம் என்பது தனிக்கதை!
நீக்கு1980 first two in one.
பதிலளிநீக்குநாங்கள் அப்போதுதான் பெட் டைப் டேப் வாங்கியிருந்தோம்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குஉங்கள் வீட்டில் எப்போது முதல் டேப்ரெக்கார்டர் வாங்கினீர்கள்?
பதிலளிநீக்குநாங்கள் வாங்கியது 1980ல் குழந்தைகளின் பேச்சு, மாமனாரின் தேவார பாட்டு, அத்தையின் அம்மா, சாரின் அத்தை பேச்சுக்களை பதிவு செய்தோம். எங்களுக்கு பிடித்த ப்ழைய பாடல்களை, பதிவு செய்தோம்.
two in one sony டேப்ரெக்கர்டர்.
கெட்டு போன பின் அதன் உள்ளே கெட்டு போன பாகங்கள் கிடைக்காது என்ற நிலை வந்தபின் வேறு வாங்கினோம், அதுவும் கெட்டு அப்புறம் ஒன்று அதுவும் கெட்டு இப்போது இருப்பது பிலிப்ஸ்.
சில கேசட்டுகள் சிக்கி கொள்ளும் சிலது நன்றாக இப்போதும் பாடுது. நிறைய கேசட்டுக்கள் சேகரிப்பு இருக்கிறது.
//கேசெட் வேறொரு வகையில் எனக்கு மிகவும் உதவியது. அது தனிப்பட்ட விஷயம்! டேப் ரெக்கார்டர் பற்றிய என் நினைவுகள் இன்னும் ஏராளம் உண்டு. ரொம்ப போரடிக்காமல் நிறுத்திக்கொள்கிறேன் இங்கு!//
உங்கள் மலரும் நினைவுகளில் கேசட் வேறொரு வகையில் உதவியதை ஊகிக்க முடிகிறது.
உறவினர்கள் இடையே கடிதம் போல கேசட்டை உபயோகம் செய்தது அருமை.
உறவினர் குரலை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி ஏற்படும்.
நீங்கள் சோனி செட்டா?... நாங்கள் நேஷனல் பானசானிக். ஒரு கட்டத்தில் அதில் சிறு சிறு ரிப்பேர் வேலைகளை நானே செய்வது உண்டு! மலரும் நினைவுகளை புரிந்து கொண்டதற்கு நன்றி. நெல்லையும் சொல்லி இருக்கிறார். ஆம்! டேப்ரெக்கார்டர் விஷயத்தில் நான் நன்றி சொல்ல வேண்டிய முக்கியமான நபர் சுகுமார். அவரின் புத்தம்புது நேஷனல் பானசானிக் ஸ்டிரியோ டூ இன் ஒன்னை என்னிடம் பல வருஷங்களுக்கு விட்டு வைத்திருந்தார்.
நீக்குஎஸ் பி பி சொன்ன அவர் அனுபவம்!
பதிலளிநீக்குநாடகமாக வந்து படமானவை.
விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
1960 சிரிப்பு மனைவிக்கு நல்ல மரியாதை
இது எல்லா வீடுகளிலும் நடக்காது.
//இதை நான் எழுதிய தேதியைப் பார்த்தால் எதற்காக எழுதினேன் என்று தெரிந்திருக்கும்.//
நன்றாக தெரிகிறது.
பாதையில் பூத்த கல்வாழை பூ அழகு.
கோவையில் மாமியார் வீட்டில் கல்வாழை பூ கலர் கலராக முன்பு இருந்தது.
கதம்பம் நன்றாக இருக்கிறது.
அனைத்தையும் ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.
நீக்கு//ஜெமினி ரேகாவை ஆரம்ப காலங்களில் தன் மகள் என்றே ஒத்துக்கொள்ளவில்லையாம். இந்தக் காரணத்தால் ஜெமினி மரணமடைந்தபோதுகூட ரேகா வரவே இல்லையாம்!//
பதிலளிநீக்குசென்ற வருடம் நடிகையர் திலகம் திரைப்படம் வந்து பொழுது ஏற்பட்ட காண்ட்ரவர்ஸி சமயத்தில் ரேகாவின் பேட்டி ஒன்று காணக்கிடைத்தது. அதில் அவர்,"சின்ன வயதில் எனக்கு ஃபாதர் என்றால் என்னவென்று தெரியாது. சர்ச்சில் வெள்ளை அங்கியை போட்டுக் கொண்டிருப்பார்களே அவர்களைத்தான் நினைத்துக் கொள்வேன்". என்று கூறிவிட்டு, எங்களுக்கெல்லாம் அம்மா என்றால் எப்போதுமே மூணு அம்மாக்கள். புஷ்பவல்லி அம்மா, பாப்ஜி அம்மா, சாவித்ரி அம்மா" என்றும் கூறினார். அவருடைய சகோதரர்தானே ஞான ஒளியில் மேஜர் சுந்தர்ராஜனின் மகனாக நடித்தார்? அப்புறம் என்ன ஆனார்?
அவருடைய சகோதரர் பெயர் ராம்ஜி என்று எஸ் பி பி சொல்லியிருப்பதாக நினைவு.. நீங்கள் சொல்லியிருக்கும் விவரங்கள் எனக்கு நினைவு இல்லை.
நீக்குதுரை செல்வராஜு இன்னொரு தனபாலனாக தெரிகிறார் நான் டேப் ரெகார்டரை வேண்டியவர் குரல்களைப்பதிவு செய்யவே உபயோகித்தேன் மறக்கமுடியுமா குரல்கள் என்றுஒருபதிவும் எழுதி இருந்தேன் டேப்ரெகார்டர் பழுதானபோது மாற்றாக வேறு வாங்கவில்லைபழைய டேப்களை முடி
பதிலளிநீக்குந்தவரை டிஜிடலைஸ் செய்து சேமித்திருக்கிறேன்
நான் கூட டிஜிட்டலைஸ் செய்து வைத்திருந்தேன் சிலவற்றை... இப்போது எங்கு இருக்கிறதோ... நன்றி ஜி எம் பி ஸார்.
நீக்குபாலசுப்ரமணியத்தை முதலில் ரெகார்டு செய்தவரும் பாலசுப்ரமணியம்தானா!
பதிலளிநீக்குஅவரது ஆரம்பப் பாடல்கள் அருமையானவை. பின்னாடி எதையோ நினைத்து அடிக்கடி சிரிக்க ஆரம்பித்துவிட்டார்!
ஆமாம். ஆனால் அவரின் பெரும்பாலான சிரிப்புகளை நான் ரசிப்பேன் ஏகாந்தன் ஸார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதம்பம் அருமை.
டேப் ரெக்கார்டு நினைவுகள் நன்றாக இருந்தது. எங்கள் நினைவுகளையும் மலரச்செய்தது. நம் குரலை நாமே கேட்கும் போது ஒரு மகிழ்ச்சி உண்டாவதை தடுக்க இயலுமா? நாங்களும் குழந்தைகளின் பேச்சுக்களை/பாடல்களை கேசட்டுகளில் பதிவு செய்து அவ்வப்போது அவர்கள் வளரும் போது போட்டு காண்பித்தோம்.
அதன் பின் சிடிக்கள் ஏகப்பட்டவை. இரண்டுமே தற்சமயம் பீரோக்களில் தூங்குகின்றன. இப்போது கையிலேயே ரெக்கார்ட்ரர் வைத்து கொண்டு பல சித்து வேலைகள் அனைத்தும் நாம் செய்யும் போது அவை அனைத்தும் ஓய்வெடுக்க வேண்டியதுதானே!
எஸ்.பி. பி சொன்ன அனுபவம் நன்றாக இருந்தது. ஓய்.ஜி.எம் சினிமா துறையில் இருந்ததினால் அவரின் நினைவுகள் ஸ்வாரஸ்யமாக உள்ளது.
மாயாவின் ஓவியம் அருமை. அதில் அவர் வரையும் கண்கள், மற்றும் முக அமைப்பு அவர்தான் என்பதை காட்டிக் கொடுத்து விடும்.
அதற்கு நீங்கள் எழுதியிருப்பது மிகப் பொருத்தமாக உள்ளது. ரசித்தேன்.
ஜோக்கை ரசித்தேன். அப்போதே கணவர்கள் நிலை அப்படித்தானா?
கால்கள் கவிதை நன்றாக புரிகிறது.
கல் வாழைப்பூ நன்றாக உள்ளது. அதன் டபுள் கலர் எடுப்பாக மிக அழகாக உள்ளது.
அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்குமிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா...
நீக்குமீண்டும் வந்து நிதானமாக எல்லாவற்றையும் படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.
//எம் ஆர் ராதாசிங்கப்பூரில் ஆற்றிய உரை அது. அதன் அருமை தெரியாமல்..//
பதிலளிநீக்குஎந்த விதத்தில் அருமை?..
சிலபேச்சு நயங்களை, கிண்டல்களை ரசிக்க முடிந்திருக்கிறது ஜீவி ஸார்.
நீக்குஎன் மகன் ஜீவா, AMIE படிக்கும் காலங்களில் தனக்குத் தானே பாட சம்பந்தமாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டு அதற்கான தனது பதில்களையும் கோர்வையாக பதிந்து வைத்துக் கொள்வான். அதையே திருப்பித் திருப்பி போட்டுக் கேட்கையில் எளிதில் மனத்தில் பதிந்து போய் விடும் என்பான. இப்படியெல்லாம் முயற்சி செய்து தான்
பதிலளிநீக்குநான்கே வருடங்களில் அத்தனை பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ந்தான்.
நானும் என் படிப்பு சம்பந்தமானவற்றை அப்படி ரெகார்ட் செய்து உபயோகித்துப் பார்த்திருக்கிறேன் ஜீவி சர்.
நீக்குசித்ரா லட்சுமணன் மாம்பலம் பேச்சுலர் குவார்ட்டர்ஸ் ஒன்றின் மாடிப் போர்ஷனில் (எஸ்.ஆர்.எம். ஆசுபத்திரி அருகில்) தங்கியிருந்த பொழுது போய்ப் பார்த்ததுண்டு. ஒரு நாவல் கூட கொடுத்திருக்கிறேன். அந்த நாவல் குமுதம் ஆபிஸ், நா.பா. எல்லோரிடம் உலா வந்து கடைசியாக சி.ல. கைக்கு வந்து சேர்ந்தது.
பதிலளிநீக்குசினிமாக்காரர்கள் கைக்குப் போனால் யா.வா.கரும்பு தான் என்று தெரியாத காலம். சி.லட்சுமணனும் அப்பொழுது பிரபலமாகாத காலம்.
ஓ... ஆச்சர்யமான செய்தி ஜீவி ஸார்.
நீக்குஇன்றும் என்னிடம் எம்.பி.3 ஒன்று பிரமாதமான கண்டிஷனில் இருக்கிறது. நூற்றுக்கணக்கில் கேசட்டுகள். இப்பொழுது கூட ஒருபக்கம் கேசட் போட்டு ஜேசுதாஸை ரசித்துக் கொண்டு தான் மடிக் கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஎம் பி த்ரீயென்றால் சிடியா ஸார்... டேப்ரெக்கார்டரில் எதுஎம் பி த்ரீ? நான் கேசெட் போடாமல் இணையத்தில் நிறைய பாடல்கள் கேட்கிறேன்.
நீக்குThomson company MP3 ஸ்ரீராம். இதில் ரேடியோ, VCD, Cassette deck என்று மூன்று வித ஜாலங்களையும் உள்ளடக்கிய ஒரே பெட்டி. நீங்கள் எங்கள் வீட்டிற்கு வரும் பொழுது காட்டுகிறேன். மறக்காமல் ஞாபகப்படுத்த வேண்டுகிறேன்.
நீக்குஎத்தனையோ எழுதலாம். இன்று எழுத முடியலையே.
பதிலளிநீக்குமூணு நாளா கதையை ரிஃபைன் பண்ணலை. கதை வடிவம் ரெடி, assuming i have considered different angle
வாங்க நெல்லை... சென்ற வியாழனும் நீங்கள் வரவில்லை! பின்னர் வந்தீர்கள்.
நீக்கு