திங்கள், 2 டிசம்பர், 2019

'திங்க'க்கிழமை :  அப்பளம் குழம்பு - கீதா ரெங்கன் ரெஸிப்பி 


அப்பளக் குழம்பு


ஹாய் ஹாய் எபி கிச்சன் பிரியர்கள், எங்கள் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்.  (இப்படிக் கிடைக்கிற சைக்கிள் கேப்ல ரசிகர்கள்னு சொல்லிக்குவோம்!!! ) என்னிடம், நீங்கள் செய்யும் பாரம்பரிய உணவு செய்முறை குறிப்புகளைப் பகிருங்களேன் என்று நெல்லை சொல்லிப் பல நாட்கள் ஆயிற்று. சமையல் வித்தகர் கீதாக்கா, மிக அழகாகப் பாரம்பரிய உணவுக் குறிப்புகள் பகிர்ந்து வருவது போல், நான் செய்வது பாரம்பரிய உணவா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இதோ இப்போது இங்கு பகிர்ந்திருக்கும் செய்முறையும் பாரம்பரியமா என்று தெரியவில்லை.

இந்த அப்பளக் குழம்பை சின்ன வெங்காயத்துடன் செய்யலாம். குழம்புப் பொடி போட்டும் செய்யலாம். வற்றல் குழம்பு செய்வது போலவும் செய்யலாம். இப்படிப் பல முறைகளில் ஒவ்வொருவர் ஒவ்வொரு முறையில் செய்தாலும், இது என் அப்பாவின் அம்மா/பாட்டி செய்துவந்த அப்பளக் குழம்பு. எனக்கு, என் மகனுக்கு மிகவும் பிடித்தது. ரொம்ப எளிது. எனவே பாட்டியின்  முறையையே (நான் செய்வதும் இதுவே) இங்கு சொல்றேன்.

கொலாஜ் 1

தேவையானவை :

மிளகாய் வற்றல் – 3 – 4 உங்கள் காரத்திற்கு ஏற்ப. படத்தில் காட்டியுள்ளது போல சின்ன சின்னதாகக் கிள்ளி வைச்சுக்கோங்க.
கடுகு – 1/2 டீஸ்பூன் (படத்தில் அது இல்லை. தட்டில் வைக்க மறந்து போச்சு!)
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பெருங்காயம் கட்டி – படத்தில் உள்ள சைஸ். எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. பெரிய புளியங்கொட்டை அளவுனு சொல்லிக்கலாமா?
புளி – நடுத்தர சைஸ் எலுமிச்சை அளவு. தண்ணீரில் ஊற வைத்து கரைத்து இரண்டு இரண்டரை கப் (200 மில்லி கப்) தண்ணீர் விட்டுக் கரைச்சு வைச்சுக்கோங்க
நல்லெண்ணை – 3 டேபிள் ஸ்பூன்
அப்பளம் – 4 சின்னதாக இருந்தால். பெரிதாக இருந்தால் 3. இது கூடுதல் இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும். படத்தில் காட்டியுள்ளது போல் அப்பளத்தைச் சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து வைச்சுக்கோங்க
கறிவேப்பிலை –
உப்பு – தேவையான அளவு.

கொலாஜ் 2

கல்சட்டி அல்லது மண் சட்டி அல்லது வாணலி உங்கள் விருப்பம் போல் அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணை விட்டு கிள்ளின மிளகாயைப் போட்டுக்கோங்க. (கொலாஜ் ஒன்றில் இரண்டாவது படம்) அது சிவந்து வரும் போது (கொலாஜ் 1 ல் மூன்றாவது படம்) கடுகு போட்டு வெடிக்கும் சமயம் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், பொரிந்து வரும் சமயம் வெந்தயம் போட்டுவிட்டு கறிவேப்பிலையும் போட்டு (கொலாஜ் 1ல் நான்காவது படம்) சின்ன சின்ன துண்டுகளாக வைத்திருக்கும் அப்பளத்தையும் போட்டு பிரட்டிக் கொடுத்து வறுக்கவும் (கொலாஜ் 1ல் 5 வது படம்). அது  இப்படிப் பொரிந்து வரும். (கொலாஜ் 1 ல் 6 வது படம்).

பொரிந்து வந்ததும், வெந்தயமும் சிவந்துவிடும். அதில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை விட்டு நன்றாகக் கொதிக்க வைக்கணும். உப்பும் போட்டுருங்க. (கொலாஜ் 2 ல் முதல் படம்) பச்சை வாசனை போய் நன்றாகக் கொதித்து குறையும் சமயம் (கொலாஜ் 2ல் இரண்டாவது படம்) கொஞ்சம் திக்காக வேண்டும் என்றால் ஒரு ஸ்பூன் அரிசி மாவு கொஞ்சம் தண்ணீரில் கரைத்து விட்டுக் கொதிக்க வைத்துவிடலாம். ஆறும் போது கெட்டியாகிவிடும் என்பதால் அரிசி மாவு பார்த்துக் கரைத்துவிட வேண்டும். கடைசியில் மீதி இருக்கும் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையையும் விட்டு விடலாம்.

பாட்டியின் வேரியேஷன்ஸ்: வெந்தயச்சார் என்றும் அல்லது கிள்ளிப் போட்ட மிளகாய்க் குழம்பு என்றும் இதே செய்முறையில் செய்வார்.
கிள்ளிப் போட்ட மிளகாய்க் குழம்பு : அப்பளம் இல்லாமல் மற்றபடி இதே செய்முறை.

வெந்தயச்சார் : அப்பளம் போடாமல், வெந்தயம் கூட 1 ஸ்பூன் தாளித்து மற்றபடி இதே செய்முறையில் செய்வது.

புளியோதரைக் குழம்பு : கிட்டத்தட்ட இதே அளவுதான். மிளகாய் அளவில் பாதியைக் கிள்ளிப் போட்டு சிவந்து வரும் போது கடுகு தாளித்து, இங்கு கொடுத்திருக்கும் அளவில் பாதி அதாவது ½ டீஸ்பூன் கடலைப் பருப்பு, 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, ½ டீஸ்பூன் வெந்தயம் தாளித்து. பெருங்காயமும் தாளித்துவிடலாம். அல்லது பாதி பெருங்காயத்தை தாளித்துவிட்டு புளிக்கரைசல் விட்டுக் கொதிக்கும் போது உப்பு எல்லாம் போடுவிட்டு,  மீதி இருக்கும் பெருங்காயம், 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல் இவற்றை சிறிது நல்லெண்ணையில் வறுத்து பொடித்து, குழம்பு கொதித்துப் பச்சை வாசனை போனதும் இப்பொடியைப் போட்டு கட்டி இல்லாமல் கலந்துவிட்டுக் கொதித்து க்ரேவி போன்று கெட்டியாகி வாசனை வந்ததும் இறக்கிவிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை மேலே விட்டுவிடலாம். பெருங்காயத்தைத் தாளிக்காமல் வறுப்பதுடன் சேர்த்து வறுத்துப் பொடித்தும் போடலாம்.

இந்த கீதா ஏதேதோ குயம்பு சொல்லி என்னைக் குயப்பிவிட்டா!
ஹலோ பூஸார் ஒளிய வேண்டாம் தைரியமா எபி கிச்சனுக்கு வாங்க! உங்க குழைசாதம் எங்கண்ணன் செஞ்சும் சாப்பிட்டாராம். ரொம்பப் பிடிச்சுச்சாம். இனி ஆரும் இதைச் சொல்லி உங்களை விரட்ட முடியாதாக்கும்...ஏதோ கொத்தவரை வத்தல் எல்லாம் சாப்பிட்டு ஒல்லியாயிட்டீங்களாமே! வாங்க கொஞ்சம் பார்ப்போம்!!!
Image result for black and white cat driving bike gif"
அடப் பாவி! பூஸ் மேல இந்த கண்ணழகி என்னமா பாறை பாறையா ஐஸ் வைக்கிறா? ஏற்கனவே எங்கூர்ல ஐஸ் வரும். ஷ்ஷ்ஷ்...பூஸ்! நான் தான் ஜெஸி மாறுவேஷத்துல வரேன். வெளிய வந்திடாந்தீங்க அவவ உங்க வாலைப் பிடிச்சு ஓட்டத்தான் இப்படி ஐஸ் வைக்கிறா. (பின்ன எங்க பூஸை நான் காப்பாத்தாம யாரு காப்பாத்துவாங்க? எங்கம்மா எழுதின கருத்தை அழிக்க, போஸ்ட் போஸ்ட்டா பப்ளிஷ் பண்ண, விஷமம் செய்ய எல்லாம் கத்துக் கொடுத்ததே இந்த பூஸ்தானே!) நான் வரேன் உங்களைக் காப்பாத்த!

அடுத்த திங்க பதிவில் சந்திக்கும் வரை நம்ம எபி கிச்சன் டைரக்டர் ஸ்ரீராம், அப்புறம் கௌ அண்ணன், மற்ற எபி ஆசிரியர்கள், எப்போதும் ஆதரவு தந்து கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கும் பார்வையாளர்கள்? ரசிகர்கள் உங்க எல்லோருக்கும் அன்புடன் நன்றி சொல்லி விடைபெறுவது உங்கள் அபிமான (ரசிகர்கள்..... அபிமான.....அட! அட! இன்னா பில்டப்பு!!) எபி கிச்சன் கில்லாடிகள்!

99 கருத்துகள்:

  1. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து...

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிய மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையவும் மனமாற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   காலை வணக்கம்.   இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. காலை வணக்கம்.இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அப்பளக்குழம்பெல்லாம் கூடப் போடலாமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! யாரும் சொல்லவே இல்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   நல்வரவு. வணக்கம்.நன்றி...   இதெல்லாம் போடக் கூடத்து என்று யார் உங்களிடம் சொன்னார்கள்?   கர்ர்ர்ர்ர்ர்ர்.....

      நீக்கு
    2. எனக்கும் மிகவும் பிடித்த ஐட்டம் அப்பளக்குழம்பு. இந்த வாரத்தில் செய்து பார்க்க (சாப்பிடவும் ) முயற்சி செய்கிறேன்.

      நீக்கு
    3. ஹாஹாஹா... கீதாக்கா ஹை five நான் நினைச்சேன்....பதிவுல கீழ ஊக்கு குறிப்பா சொல்லவும் நினைச்சு விட்டுப் போச்சு..கீதாக்கா கற்றற்றர் சொல்லி இப்படி போடுவங்கன்னு.ஹாஹாஹா...

      கீதா

      நீக்கு
    4. மிக்க நன்றி கௌ அண்ணா....எங்க வீட்டுலயும் ரொம்ப பிடிக்கும்...செஞ்சு பாருங்க...

      கீதா

      நீக்கு
  4. இதிலே செய்திருக்கும் புளியோதரைக்குழம்பின் காப்புரிமை எனக்காக்கும். நான் முதல் முதலாகச் செய்தது அது தான். பதிவே போட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...சரி சரி கீதாக்கா காப்புரிமை உங்களுக்குத்தான்......என் பாட்டி இல்லையேஏஏஏஏஏஏஏஏ.... போட்டிக்கு.. ஹிஹிஹி...

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
    2. அதெப்படி? நீங்க ஜாஸ்தி புளியோதரை மிக்ஸ் பண்ணிட்டு, மிஞ்சினதை என்ன பண்ணறதுன்னு யோசிச்சு, அதைக் குழம்பாக்கினால் காப்புரிமை உங்களுக்கு வருமா கீசா மேடம்? இது அநியாயமில்லையோ.....

      நான்கூடத்தான் சாதம் எப்படி வடிப்பது என்று முதல் முதலில் இணையத்தில் எழுதினேன். அதுக்காக நீங்கள் தினமும் சாதம் வடித்தால் எனக்கு 25 ரூபாய் அனுப்பணும், காப்புரிமைச் சட்டப்படி என்று கேட்க முடியுமா?

      நீக்கு
  5. பதில்கள்
    1. நீங்கள் முதலில் "குழம்பிய" அனுபவம் இது.   அதில் அப்பளத்தை காணோமே....

      நீக்கு
    2. அன்பு கீதாமா, ஸ்ரீராம், சின்ன கீதா, கமலா மா, அன்பு துரை அனைவருக்கும் வணக்கம்.
      அப்பளக் குழம்பு மதுரை திரு நெல்வேலிக்காரர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் உண்டு. மழ காலத்தில் வேறு குழம்புத்தான் கிடைக்காத போது
      அப்பளம், மணத்தக்காளி,சுண்டை எல்லாம் வெளியே வரும்.
      அருமையாக விவரித்திருக்கும் கீதா ரங்கனுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.

      நீக்கு
    3. //நீங்கள் முதலில் "குழம்பிய" அனுபவம் இது. அதில் அப்பளத்தை காணோமே....//

      மன்னிக்கவும் கீதா அக்கா...   புளியோதரைக்கு அந்தப்பதிவு என்று கொஞ்சம் லேட்டாகப் புரிந்து கொண்டேன்!

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா...   காலை வணக்கம்.  எங்கள் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கூட அப்பள வெந்தயக்குழம்புதான்.  என் பாஸ் அப்பளக்கூட்டு ஒன்று செய்வார். அதுவும் நன்றாயிருக்கும்.

      நீக்கு
    5. வல்லிம்மா மிக்க நன்றி....

      //அப்பளக் குழம்பு மதுரை திரு நெல்வேலிக்காரர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் உண்டு. மழ காலத்தில் வேறு குழம்புத்தான் கிடைக்காத போது
      அப்பளம், மணத்தக்காளி,சுண்டை எல்லாம் வெளியே வரும்.//

      அதே அதே...மகனும் இப்ப ங்க செஞ்சு சாப்பிடுக்கறான்...நானும் ட்ரையா ரெடிமேடா கொடுத்துவிட்டேன் ...

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
    6. ஸ்ரீராம் ராஜஸ்தான் அப்பளம் சப் ஜி நல்லாருக்கும்..செய்யும் போது படம் எடுத்து வைச்சுருக்கேன்...கணினி சரியானதும் அனுப்பறேன்....அப்பளம் கூட்டு செய்திருக்கேன்...பாஸ் கிட்ட அவங்க குறிப்பும் கேட்டுக்கறேன்...

      கீதா

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அப்பளக் குழம்பு.... நன்று.

    என் பதிவில் வெளியிட்ட அப்பள சப்ஜி நினைவுக்கு வந்தது....

    http://venkatnagaraj.blogspot.com/2018/09/blog-post_4.html?m=1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்.   காலை வணக்கம்.     

      // http://venkatnagaraj.blogspot.com/2018/09/blog-post_4.html?m=1 //

      ஹா... ஹா...   ஹா...   சென்று பார்த்தால் அங்கேயும் எங்கள் அப்பளக்கூட்டு பற்றிச் சொல்லி இருக்கிறேன்!

      நீக்கு
    2. மிக்க நன்றி வெங்கட்ஜி...

      கீதா

      நீக்கு
  7. கார் காலத்துக்கு ஏற்ற காரக்குழம்பு மாதிரி ..

    ஆனால் காரம் கொஞ்சம் குறைவாகவே தெரிகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை ஸார்...   நாங்கள் காரம் கொஞ்சம் தூக்கலாகவே போடுவோம்!   அதற்கான பலனையும் அனுபவிப்போம்!

      நீக்கு
    2. எனக்கும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள செய்முறையில் மிளகாய் அதிகம் என்று தோன்றியது.

      நீக்கு
    3. துரை அண்ணா மிக்க நன்றி கருத்திற்கு. இங்கு மிளகாய் கொஞ்சம் காரமாகத்தான் இருக்கு. குண்டூர் மிளகாய்.

      அப்புறம் இங்க இருக்கற கைக்குழந்தை சாப்பிட வேண்டாமா ஒரு மிளகாய் னாலே அவங்களுக்கு கூடுதல்...அதான்..

      எங்க வீட்டுலயும் இப்பல்லாம் காரம் குறைச்சல்தான்...

      கீதா

      நீக்கு
    4. கௌ அண்ணா காரம் அதிகமில்லை அண்ணா...புளி நல்ல புளிப்பு...ஏற்றுக்கொண்டது...

      நன்றி கௌ அண்ணா

      கீதா

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் பதிவிட்டிருக்கும் அப்பள குழம்பு மிகவும் நன்றாக உள்ளது. இதே முறையில்தான் நானும் செய்வேன். இதற்கு பருப்புத் துவையல் ஜோடி தொட்டுக் கொள்ள பொருத்தமாக இருக்கும். ஒரு வாய் சாதம் கூடவே சாப்பிட முடியும். (சாதமே வேண்டாம் குறைத்துச் சாப்பிட வேண்டும் என்கிறவர்கள் கூட. ) இதற்கு பின் சாப்பிடும் தயிர்/மோர் சாதத்திற்கும் இந்த அப்பள குழம்பு மிகப் பொருத்தம்.

    எத்தனையோ பல விதமாக விருந்து சாப்பாடு சாப்பிட்டால் கூட இந்த மாதிரி சாப்பாட்டின் திருப்தி அதில் வராது. வெந்தயக்குழம்பு, கிள்ளி வைத்த குழம்பு, எல்லாமே ருசிதான். சுவையாக வர்ணித்து எழுதிய சகோதரி கீதாரெங்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சுவையாக எழுதியிருக்கிறீர்கள்! நன்றி!

      நீக்கு
    2. கமலாக்கா வழக்கம் போல சுவையான கருத்து...ஆம் அக்கா எங்க வீட்டிலும் இப்படியான குழம்பு செஞ்சா செகண்ட் செர்விங் இருக்கும்..!!!!!!நீங்களும் செய்வது மகிழ்ச்சி....அப்ப அப்பளம் குழம்பு இங்கும் போனியாகுது...

      நன்றி கமலா அக்கா

      கீதா

      மிக்க

      நீக்கு
    3. கமலா அக்கா பருப்புத்துவையால் நம்ம வீட்டுல மிளகு ரசம், மிளகு குழம்பு செய்யறப்ப கோம்போ...

      இதுக்கும் செஞ்சு பார்த்துட்டா போச்சு...
      மிக்கnanri kamala akka
      கீதா

      நீக்கு
  9. சமையலறை கைவசம் இருந்தபோது
    சின்ன வெங்காயம் பூண்டு வதக்கி புளிக்கரைசலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் மசாலா பொருட்களைச் சேர்த்து இறக்குவதற்கு முன் உளுந்து மாவில் செய்யப்பட்ட (!) அப்பளத்தை உடைத்துப் போட்டு இறக்குவேன்...

    இரண்டு நாளைக்கு வைத்துக் கொள்ளலாம்...

    ஆனால் இரண்டு வேளையில் காலியாகி விடும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன...   நாங்கள் மசாலா சேர்க்க மாட்டோம்!   அவ்வளவுதான்!

      நீக்கு
    2. எனக்கும் மசாலா வாடை அலர்ஜி.

      நீக்கு
    3. மசாலா!...

      அது ஒன்றும் பயங்கரமான வஸ்து அல்லவே!...

      துவரம் பருப்பு + கடலைப் பருப்பு , ஆறேழு மிளகாய் வற்றல், சிறிது கொத்த மல்லி (சென்னை வழக்கில் தனியா) சிறிது வெந்தயம் இவற்றை இளஞ் சிவப்பாக வறுத்து அதனுடன் விரலளவு மஞ்சள் சேர்த்து அரைத்துக் கொண்டால் இது தான் காரக்குழம்புக்கான மசாலா..

      மிளகாய் வற்ரலைக் குறித்துக் கொண்டு மிளகு சேர்த்துக் கொண்டால் இன்னும் உத்தமம்...

      தேவதா ப்ரீதி கிடைக்கும்...

      சரி...
      மசாலா என்பது தமிழ்ச் சொல் அல்ல..

      ஆகவே பலசரக்குப் பொடி என்று சொல்லலாமா!...

      காசா.. பணமா...
      தாராளமாகச் சொல்லலாம்..

      நீக்கு
    4. நீங்க சொல்லியிருக்கும் மசாலா நல்லா இருக்கு. ஆனால், ஹோட்டல் மசாலாக்கள் வினோத வெறுப்பு வாடை வருகின்ற வஸ்துகள். ஏன் என்று தெரியவில்லை.

      நீக்கு
    5. துரை அண்ணா நீங்க சொல்லியிருக்கும் குறிப்பிலும் செய்வதுண்டு..சின்ன வே போட்டால். அந்த மண ம்....அதிலும் அப்பளம் போட்டு...செமையா இருக்கும். இதுவும் எங்க வீட்டுல நல்லா போகும்....

      கீதா

      நீக்கு
  10. அதென்ன...
    அந்தப் பூச்சையிடம் லைசென்ஸ் இல்லையா?..

    இந்த முழி முழிக்கிறது!...

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  12. அப்பளக்குழம்பு அருமை. கமலா சொல்வது போல் நாங்கள் பொட்டுக்கடலை துவையல், அல்லது சிறுபருப்பு(பாசிபருப்பு) வறுத்து அரைத்த துவையலுடன் இரவு சுட சுட சாப்பிடுவோம். வல்லி அக்கா சொன்னது போல் மழை காலத்தில் காய் கிடைக்காத சமயம் இந்தக் குழம்பு எல்லோருக்கும் பிடித்த குழம்பு.

    செய்முறை அருமை. நாங்கள் அரிசி மாவு கலக்க மாட்டோம்.

    மேலே சொன்ன துவையலுடன் புளியோதரைக் குழம்பு என்று கீதா சொல்வதை புளித்த்ண்ணீர் என்று சொல்வோம் அது ஒரு நாள் வைப்போம். கொஞ்சம் தளர்த்தியாக இருக்கும் குழம்பு .

    படங்களும் சொல்லிய விதமும் மிக அருமை.

    கீதாரெங்கனை வெகு நாட்களாக பார்க்கவில்லை, இப்போது அவரை பார்த்தார் போல் இருக்கிறது .

    நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் முக்கியமாக நான் அரிசிமாவு கரைத்து விடுவதில்லை.

      நீக்கு
    2. கோமதிக்கா மிக்க நன்றி...

      கோமதிக்கா அண்ட் கீதாக்கா நானும் அரிசி மாவு கரைத்து விடுவதில்லை. எதற்குமே கரைத்து விடுவதில்லை....சுவை கம்மி ஆகும்னு.

      கோமதிக்கா உங்க குறிப்பும் பார்த்துக்க கொண்டேன்.... மிக்க நன்றி அக்கா

      கீதா

      நீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம். அப்பளக்  குழம்பு என் மகளுக்கு மிகவும் பிடிக்கும். அனுப்பி விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! அப்பளக் குழம்புக்கு இவ்வளவு ரசிகர்கள் உள்ளனரா!

      நீக்கு
    2. ஹை பானுக்கா சுபாக்கும் பிடிக்குமா சூப்பர் அனுப்புங்க. .கௌ அண்ணா சொல்றது போல குழம்பு நல்லா போகுது ...மிக்கnanri naanum kaa

      Geethaa

      நீக்கு
  14. நாம வத்தக்குழம்பு செயது சாப்பிடும் போது அது மேலே அப்பளம் போட்டு சாப்பிடுவோம் அதையே இந்த கீதா சேச்சி சுத்தி வழச்சி ஏதோ சொல்லுறாங்களே..... சேச்சி படங்கள் எல்லாம் அழகாக வந்துருக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சுத்தி வழச்சி// - 'சேராத இடம் தன்னில் சேர வேண்டாம்' மூதுரை படிச்சதில்லை போலிருக்கு. டமிள் டி யோட சேர்ந்து உங்க டமிளும் கெட்டுப்போச்சுது.

      ஏதோ சின்னப் பையன் நான் கீதா ரங்கன்(க்கா) என்று கூப்பிட ஆரம்பிச்சால், எல்லாரும் கீதா ரங்கனை அக்கா, சேச்சி என்று விளிச்சால் அது தப்பில்லையோ?

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா மதுரை அண்ட் நெல்லை சிரிச்சிட்டே ன்....

      மதுரை அட.. ஆமாம்ல...கரற்ற உங்களுக்கும் நான் சேச்சியா...ஏதோ போனா போகுது. நம்ம நெல்லைதான் சொல்லிக்கட்டும்னு விட்டா...ஹாஹாஹா

      நெல்லை ஹாஹாஹா..மீக்கு சாப்போர்ட்?!!!!! இது ஏதோ ஒரு வசனத்தை நினைவு படுத்துதே....!!!!!
      ஹிஹிஹி

      மிக்க நன்றி மதுரை அண்ட்nellai

      Geethaa

      நீக்கு
  15. ஆஆஆ இன்று கீதா ரெசிப்பியோ... ரெசிப்பிதான் வருது ஆளைக் காணம்:).... அப்பளக் குழம்பைத் தூக்கி வருவதற்கு, ஏதோ அம்மியத் தூக்கி வருவதைப்போல என்னா பில்டப்பூஊ:) ஹா ஹா ஹா
    கீதாவைக் காணமே எனும் தைரியம்தேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hahahaha aahaa வாங்க கார்த்திகை பிறைஏ.....

      இன்னா தேகிரியம்...உங்க வாலை பிடிக்கத்தான் ங்க பாருங்க ஆள் போட்டிருக்கேன்....ஹாஹா

      கணினி சரியானதும் வரேன் அதிரா....மொபைல்ல அடிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு....

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
    2. உண்மைதான் ஆனா பெரும்பாலும் பகலில் நான் மொபைல் கொமெண்ட்ஸ்தான் போடுகிறேன்:)..

      நீக்கு
  16. ஆஹா அருமையா இருக்கு கீதா அக்கா ..


    இதுவரை செஞ்சதும் இல்ல சாப்பிட்டதும் இல்ல ..

    பதிலளிநீக்கு
  17. மிக அழகாக செய்து காட்டியிருக்கிறீங்க கீதா.
    என் குழைஜாதம்:) இன்னும் செய்யாதோர்:) இந்த ரெசிப்பியையாவது செய்கினமோ பார்ப்போம்:).

    நாங்கள், அப்பளத்தைப் பொரிச்செடுத்தே குழம்பு வைப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க குழம்பு வைத்த பிறகு, தொட்டுக்கொள்ள அப்பளத்தைப் பொரிப்போம். ஹா ஹா

      நீக்கு
    2. அதிரா பொறிச்செடுத்துதானே குழம்பு செஞ்சுருக்கு இங்க...

      உங்க குழை சாதம் நம் வீட்டில் நல்லா போனியாச்சு அதிரா மிக்க நன்றி என் பையனும் உங்களுக்கு சொல்ல சொன்னார்...

      ஸ்ரீலன்கண் யாழ் கறி பொடியம் செஞ்சு அனுப்பினேன் அவனுக்கு ..

      கீதா

      நீக்கு
    3. இலங்கைக் கறிபவுடர் நல்லாயிருக்கும் கீதா, அங்கு தமிழ்க்கடைகளில் கிடைக்கும்.

      நெல்லைத்தமிழன் என் குழைசாதத்துக்கு இந்த அப்பளக் குழம்பூ யூப்பராஆஆஆ இருக்கும் செய்யுங்கோ:)... ஹா ஹா ஹா காலைச்சுத்தின பாம்பு கடிக்காமல் விடாதாமே:)...

      நீக்கு
  18. அப்பளக் குழம்பு முன்பு சின்னனில் அம்மா செய்து தந்தா, ஆனா எங்களுக்குப் பெரிசாகப் பிடிக்கவில்லை, பொரித்த அப்பளமாகச் சாப்பிடுவதுதான் ரேஸ்ட், அதனால பின்னர் செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா... ஒரு கேள்வி... Rape என்பதையும், Tape என்பதையும் Rap Songs, Top என்பதையும் எப்படி தமிழில் எழுதுவீங்க?

      நீக்கு
    2. றேப், ரேப், றப், ரொப்... ச்ச்சோஓ ஈசி ஹா ஹா பெல் அகிக்கபோகுது மிகுதிக்கு பின்பு வாறேன்ன் எனி டவுட்ஸ்?:)

      நீக்கு
    3. இதெல்லாம் நான் முன்பே ஒரு பதிவின் பின்னூட்டத்தில் கேட்டு அலுத்துப்போயிட்டேன்! அவங்க டேஸ்ராறேண்டுக்குப் போய் ரீ குடிச்சிட்டு (குரிச்சிட்டு ?) நமக்கு தலை சுத்தும்படியா பதில் சொல்வாங்க!

      நீக்கு
    4. Rap Songs, Top என்பதையும் எப்படி தமிழில் எழுதுவீங்க?//


      @நெல்லை தமிழன் இதுக்கு நான் நானே கண்டுபிடிச்சதை சொல்றேன் தமிழில் ரே / டே /டி /டீ டோ /ரோ இப்படிப்பட்ட எழுத்துக்கள் சொற்களுக்கு ஆரம்பத்தில் வரலை நடுவில்தான் யூஸ் செய்கி/றோ /ம் இந்த லெட்டர்ஸ் ஆங்கில எழுத்தில் தான் துவக்கத்தில் வருது அதனால்தான் பூஸ் மாத்தி எழுதறாங்க 

      //Rap Songs, Top என்பதையும் எப்படி தமிழில் எழுதுவீங்க? /// 
      //
      ரப் சோங் 
      TOP =ரொப் /றொப் இப்படித்தான் பூஸ் சொல்லக்கூடும் .நேத்து டைவர்ஸ் பேப்பரில் கைவச்சிட்டேன் பெரிய சண்டை எனக்கும் பூனைக்கும் ..நான் பூனையை நலம் விசாரிக்கலைன்னு சொல்லிடுங்க நெல்லைத்தமிழன் 

      நீக்கு
    5. எனக்கும் பூனைக்கும் மிசண்டர்ஸ்டேண்டிங் ..எல்லாம் இந்த சண்டே போஸ்ட் தேதியால் :))

      நீக்கு
    6. ////
      Angel2 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 4:42
      எனக்கும் பூனைக்கும் மிசண்டர்ஸ்டேண்டிங் ..எல்லாம் இந்த சண்டே போஸ்ட் தேதியால் :)///
      எல்லாத்துக்கும் காரணம் ஶ்ரீராம்தான் ஆனா வாயே திறக்காமல் இருக்கிறார் கர்ர்ர்ர்ர்:).. ஞாயிறு போஸ்ட் எனப் போட்டுவிட்டு ஏன் டிலீட் பண்ணினார்ர்ர்ர்ர்ர்?:)

      நீக்கு
    7. R =ற, ற்
      T=ர், ர
      D=ட, ட்
      இப்பூடித்தான் வரோணும் இதுதான் சரியான முறை நீங்களெல்லோரும் டப்பூ டப்பாஆஆ எஉதுறீங்க கர்ர்ர்ர்ர்:)... ஹையோ மீ இங்கில்லை:)...
      இன்று கோப்பி குடிக்கிறேன் கெள அண்ணான்:)

      நீக்கு
  19. ஹா ஹா ஹா அவ கண்ணழகியோ என்ன அழகா சுவரால எட்டிப் பார்க்கிறா:)

    நீங்க , தைரியமா எபி கிச்சினுக்கு வாங்கோ எனக் கூப்பிட்டது எனக்கு எலிக்கிச்சினுக்கு வாங்கோ எனக் கேட்டிட்டுதூ ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா அதிரா ஹை பைவ் முதசல்ல எலி கிச்சன்னுதான் றைப்பிருந்தேன்...டைப்போ மிஸ்டேக்கில்...பி லி ஆகிருந்துச்சு...ஏனோ மாத்திட்டேன்...இப்ப தோணுது அதை அப்படியே விட்டிருக்கலாம்னு..!!!!😊

      அது கண்ணழகி தான்....

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  20. இந்த கீதா ரங்கன்(க்கா) தொல்லை தாங்கலை. கொலாஜ் தெக்கினிக்கு கத்துக்கிட்டாலும் கத்துக்கிட்டாங்க. கொலாஜ் படங்களாகப் போட்டுத் தள்ளறாங்க. அவங்களோட ஸ்ரீரங்கம் பயணத்தில் ஆரம்பித்தது இது. ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா...நெல்லை கோலாஜ் ஸ்ரீரங்கம் பதிவுக்கு முன்ன்னன்னாடியேஏஏஏஏஏஏஏஏ தொடங்கியாச்சே...

      கீதா

      நீக்கு
  21. தலைப்பில் 'அப்பளக் குழம்பு' என்றும் இடுகைத் தலைப்பில் அப்பளம், குழம்பு என்றும் குழம்பி எழுதியிருப்பது ஏனோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா குயம்பிட்டேன்....நெல்லை....எலி னு டைப்போ..ஆனா அது நல்லாருந்துருக்கும்னு இப்ப அதிரா சொன்னதுபார்த்து...ஹூம் தடையாய் லேட்....ஏ பி னு மாத்தினேன்...இது கண்ணுல படாம போயி...

      கீதா

      நீக்கு
  22. ரெசிப்பியைக் காலையில் படித்துவிட்டேன். இதனை சென்னை சென்று செய்துபார்க்கிறேன். (அப்பளம் போட்டது மற்றும் மனைவி அனுமதித்தால் சின்ன வெங்காயம் போட்டும்). நன்றாக இருக்கும்னு தோன்றுகிறது.

    இரு நாட்களுக்கு முன்பு மனைவியின் அக்கா வீட்டில் வற்றல் குழம்புக்கு வாழைத் தண்டுத் தான் போட்டிருந்தார்கள். மிக அருமையாக இருந்தது. இதுவரையில் அப்படிச் சாப்பிட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சி வெ போட்டும் செஞ்சா நல்லாருக்கும்

      வாழைத்தண்டு புளிக் குழம்பு /வற்றல் குழம்பு? ..நல்லாருக்கும்ம் நெல்லை

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  23. அப்பளக் குழம்பு செய்முறை கொலாஜ் படத்தில் பூனையின் படத்தைப் பார்த்தவுடன், என்னடா.... சைவச் சமையல் என்று நினைத்து தவறான தளத்துக்கு வந்துவிட்டேனோ என்று சந்தேகம் எழுந்தது.

    புளியோதரைக் குழம்பு - எல்லாம், வெந்தயக் குழம்பின் அடிப்படையை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக மாற்றி புதுப் புதுப் பெயர் வைக்கிறாரோ இந்த கீதா ரங்கன்(க்கா). ஆண்டவா... பதில் சொல்லக்கூட இங்கு வரமாட்டாரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....பதில் சொல்ல வந்துட்டேன்..நெல்லை..பூனை பார்த்து...சைவ சமையலா..??!!!!

      ஹாஹாஹா...புது புது பெயர்...எல்லாம் பாட்டிகள் உபயம்...!!!!

      கீதா

      நீக்கு
  24. எங்க பாட்டி இந்த டிஷ் ரொம்ப நல்லா செய்வாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீமலையப்பன் மிக்கnanri antha kaala.ம்..பாட்டிகள் எல்லாரும் செய்வங்கன்னு நினைக்கிறேன்...

      கீதா

      நீக்கு
  25. அப்பளம் குழம்புக்குள் விழுந்து தவிப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளகிய மனம்! அப்பளத்தை நொறுக்காமல் சாப்பிடுவீர்களா?

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா ஏகாந்தன் அண்ணா குழம்பு ரசத்துடன் அப்பளம் சாப்பிடும் போது அதோடு சேர்த்துதான் சாப்புடுவோமே...இது பாருங்க அப்டிக் கூட மெனக்கெட வேண்டாம்னு குழ்ம்புலேயே போட்டு ஈஸியா சொன்னா..ஹாஹா சரி மனசு தாங்க லைனா...சரி கொதிக்க விடாம கடைசியா கூடபி போட்டுக்கலாம் நம்ம ஸ்ரீராம் வீட்டுல செய்வது போல...என்ன சொல்றீங்க!!!

      கீதா

      நீக்கு
    3. //..கொதிக்க விடாம கடைசியா கூடபி போட்டுக்கலாம் ..//
      என்னமோ செய்யுங்க!
      //.. அப்பளத்தை நொறுக்காமல் சாப்பிடுவீர்களா?//
      பொறிச்ச அப்பளம் அழகாக இலையில் வந்து உட்காரும்போதெல்லாம், இதை உடைத்தா உள்ளே தள்ள வேண்டும் என்று சில நொடிகள் யோசிப்பவன்தான் நான்..!

      நீக்கு
  26. என்னது வெங்காயமா...? அதுவும் சின்னதா...? ஐயோ... மில்லியனர் கீதா அவர்களுக்கு வாழ்த்துகள்...

    அனைத்தும் கொலாஜ் ஆகி விட்டது...! அதிசயமாக எங்க ஊரில் மழையும் குளிரும்..! வெந்தயச் சாரிடம் சென்று வேறு விவரம் கேட்க வேண்டும்...!

    புளியோதரைக் குழம்பு - எங்க ஊரில் சின்ன குழந்தையும் செய்யும்...! ஹா... ஹா...

    நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா டிடி.... சிரிச்சுட்டேன்...வார்த்தை8 விளையாட்டு...வெ ன்னு சொல்லுங்க முழுப் பெயர் கூடச் சொல்லக்கூடாதாக்கும்...!!! ஹாஹாஹா...

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  27. ஸ்ஸ்ஸ்ஸ் ஹயோ எனக்கு நேரம் எக்ஸ்ட்ராவா ருந்தா கொஞ்சம் கடன் தாங்க யாராச்சும் :)இப்போல்லாம் பறந்திட்டிருக்கேன் ...கீதா APPALAM குழம்பு சூப்பர் ..நா ன் அடிக்கடி செய்வேன் இட்லி தோசைக்கும் சூப்பரா இருக்கும் .ஆனால் உளுந்து அப்பளம் தான் இதுக்கு சூப்பர் 

    பதிலளிநீக்கு
  28. அஆவ் கண்ணழகி எதை ஒளிஞ்சி வாட்சிங் 

    பதிலளிநீக்கு
  29. டைரக்டர் ஸ்ரீராம் அவர்களுக்கு முதலில் என் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன் !!! o.k o.k அதான் வாழ்த்து சொல்லியாச்சுல்ல .... இனி கிச்சன்ல போய் நீங்க ஆக்கிவச்சிருக்கிற ''அப்பளக் குழம்பை'' சாப்பிடுவோமா !!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!