வியாழன், 19 டிசம்பர், 2019

பெரியாருக்கு வாரியார் பதில்!




மூன்று வயதில் பேசக் கற்றுக்கொள்கிறோம்.  எத்தனை வயதானாலும் எப்படி பேசவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதில்லை என்று சொல்வார்கள்.  என் விஷயத்தில் பல சமயங்களில் அது சரியாகவே இருக்கும்.

முடிந்த வரை மௌனமாக இருக்கும் நான் முக்கியமான நேரங்களில் எப்படிப் பேசவேண்டும் என்று தெரியாமல் சொதப்பி விடுவது உண்டு.  அதுவும் குறிப்பாக என்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் பேசும்போது அதிகபட்ச மரியாதையில் சறுக்கி வி(ழு)டுவது உண்டு!  இயல்பாகவே எப்போதும் இருந்துவிட்டால் இல்லை ஒரு தொல்லை என்று அப்புறமாய்த் தோன்றும்.

சாதாரணமாக துக்க வீடுகளில் நடக்கும் விசேஷங்களில் சாப்பிடுவதில் நிறைய அபிப்ராயங்கள் இருக்கும்.   சிலர் சாப்பிடுவார்கள்.  சிலர் தவிர்த்து விடுவார்கள்.  என் தந்தையின் காரியங்கள் முடிந்து சுபத்தை கையில் எடுக்கும் நாள்.  இதுபோன்ற நாளில் நண்பர்கள், உறவினர்களை சாப்பிட அழைக்கலாம் என்பதால் அழைப்பேன்.  வருபவர்கள் வருகிறேன் என்பதை உறுதி கூறிவிட்டு வருவார்கள்.  கணக்கெடுக்க சௌகர்யம்!  இந்த நாளில் எனக்கு இரண்டு அடுக்கு மேலே உள்ள அதிகாரியை சாப்பிட அழைத்தேன்.  அதாவது வேறு சில நண்பர்களை அழைத்துக்கொண்டிருக்கும்போது இவரும் அந்த இடத்துக்கு வந்துவிட, மரியாதைக்கு அழைக்கவேண்டும்.  ஓவர் மரியாதையில் வார்த்தைகள் தடுமாற, நான் அழைத்த விதம் "ஸார்...   நாளைக்கு அவசியம் நீங்க வரணும்.   நாளை நாங்கள் விசேஷமாக சமைத்து சாப்பாடு போடுகிறோம்..."  அவர் தலையாட்டி விட்டுச் சென்றுவிட்டார்.


ஆனால் அழைத்துவிட்டு அந்தப் பக்கம் சென்ற உடனேயே என் அசட்டுத்தனம் எனக்கு புரிந்தது.  ஒன்று அழைக்காமலேயே இருந்திருக்கலாம்.  அல்லது 'நாளை எங்க வீட்டுக்கு வந்து விசேஷத்தில் கலந்துக்க வேணும்' என்று சொல்லி இருக்கலாம்.  அவர் என்ன விசேஷ சமையலுக்கு வீங்கி கிடப்பவரா என்ன?   என் பாஸ் அப்புறம் என்னை வறுத்தெடுத்து விட்டார்.  

சமீபத்தில் இன்னொரு சம்பவம்.  வங்கியின் உயர் அதிகாரி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு எங்களுடன் ஒரு பதிவுக்காக வந்து காத்திருந்தார்.  நாங்கள் தேநீர் அருந்த, வடை சாப்பிடக கூப்பிட்டும் வரவில்லை.  (அதுதான் அங்கே கிடைத்தது)  உறவுகள் பத்திரப்பதிவில் கவனமாக இருக்க, நான் அவருடன் "மரியாதையாக" பேசிக் கொண்டிருந்தேன்!  நான் மரியாதையாகப் பேசினால் என்ன ஆகும்?!!

அவர் பார்க்க மலையாளி போல இருந்தார்.   "மலையாளியா, தமிழா?" என்று கேட்டேன்.  "தமிழ்தான்" என்றார்.  என் சம்ப்ரதாயம் தொடங்கியது!  எங்களுக்காக அவரும் வந்து காத்திருப்பதைப் பற்றி சொல்ல நினைத்தேன்.  அவர் பெருந்தன்மையைக் குறிப்பிட நினைத்தேன்.    "ஸார்...   தமிழ்ல சொல்வாங்க...   எள்ளுதான் எண்ணெய்க்குக் காயுது..."  அடுத்த வரியைத் தொடரும் முன்னரே ரகசியமாய் நாக்கைக் கடித்துக்கொண்டு நிறுத்தி விட்டு (மனதுக்குள் பஞ்ச தந்திரம் கமல் "வேணாம்...    அது தப்புப்பழமொழி" என்றார்!)  "பாவம் நீங்களும் எங்களுக்காக காத்திருக்கிறீர்கள்" என்று முடித்து விட்டேன்.  அவரும் "அதனால் என்ன...    இதுதானே எங்கள் வேலை?" என்று சொல்லி விட்டு மௌனமாகிவிட, எ ன் பாஸ் என்னை முறைத்த முறை...!  'அவரென்ன உங்களுக்கு எலிப்புழுக்கையா?'!

என் பையன் ஒரு சம்பவம் சொன்னான்.  அவர் பணியில் சேர்ந்த சமயம் பயிற்சியின்போது நடந்த சம்பவமாம்.  பயிற்சி கொடுத்த பயிற்சியாளர் அவர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில்கள் வராததால், ஒரு கட்டத்தில் கோபத்துடன் "இனி நீங்கள் அழைத்தாலும் வரமாட்டேன்.  உங்கள் அணியே மோசமான அணி...   இதோடு நான் கடைசி" என்றெல்லாம் சொல்லி விட்டு காணொளியைத் துண்டித்து விட்டாராம்.

இவர்கள் பயிற்சி எடுத்த அணியில் ஒரு பெண் எப்போதும் முன்னால் நின்று, கையைத் தூக்கி, பேச முற்பட்டு பேசி, என்று 'ஓவர் எந்த்து'வாக இருந்து நல்ல பெயரெடுக்க முயற்சிசெய்பவர்,  இவர்கள் எல்லோரையும் அழைத்து "நாம் மன்னிப்புக் கேட்போம். அவரை மீண்டும் அழைப்போம்" என்று கூறி விட்டு இவர்கள் பதிலுக்காகக் காத்திராமல் (மற்றவர்கள் முந்திக்கொண்டு நல்ல பெயர் வாங்கி விடக்கூடாதே) வீடியோ பட்டனை ஆன் செய்து "Mam...  Please mam.  we won't report again mam...." என்றாராம். மற்றவர்கள் சிரிக்க, மறுமுனையில் பயிற்சியாளர் கடும் கோபத்துடன் காணொளியை அணைத்து விட்டாராம்.  இந்தப் பெண் சொல்ல வந்தது "Please mam..   we won't repeat it again mam..."   அதுதான்...  ஓவர் மரியாதை, அவசரம்...   ஓவர் enthu....!


===============================================================================


மழைக்காலத்தில் சாலையோரங்கள் மரங்களாலும் செடிகளாலும் நிறைந்திருக்கின்றன.   இந்த வாரம் இந்தப் பூ...

காலையில் இப்படி மலர்ந்திருந்த பூ..

மதியம் இப்படி இருந்தது....!



================================================================================================

குமுதத்தில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு வாரியார் பதில்... 



======================================================================================================


தீயாய் சமைக்கிறாங்கப்பா.....



=====================================================================================================

கோவை ஆவி என்னை வைத்து எழுதி இருந்த ஒரு சைக்கிள் அனுபவம்...!



=========================================================

182 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் நல்லா இருக்கு. ஆனால் அசட்டுத்தனமாகப் பேசி எல்லோருமே எப்போதேனும் ஒரு முறையானும் மாட்டிப்போம். நீங்க அதிலே பி.எச்.டி. பண்ணி இருப்பீங்க போல ! :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களை எல்லாமும் சொன்னால் ரசிக்கலாமே...!

      நீக்கு
    2. பொதுவாகவே நான் கொஞ்சம் கலகலப்பாகவும் அரட்டையாகவும், வம்புக்கு இழுத்தும் பேசும் வழக்கம் உள்ளவள். ஆனால் அதெல்லாம் கல்யாணம் ஆகும் முன்னர் தான்! கல்யாணம் ஆகி வந்ததுமே அப்படிப் பேசிக் கொண்டிருந்தவளைப் புக்ககத்தில் கேலி செய்து இப்படி எல்லாம் பேசக்கூடாதுனு சொல்லி விட்டார்கள். அதோடு வீட்டுக்கு வருபவர்களிடமும் அதிகம் என்னைப் பேச அனுமதிக்க மாட்டார்கள். ஆகவே நாளாவட்டத்தில் நான் இங்கே மௌனம், பிறந்த வீடு போனால் பேசாத நாளைக்கெல்லாம் சேர்த்துப் பேசுவதுனு மாறி விட்டேன். இணையம் வந்த பின்னரே மறுபடி நண்பர்களிடம் இந்தக் கேலி, கிண்டல், வம்பு எல்லாமும் ஆரம்பம். ஆனால் ஆரம்பத்தில் எங்க புக்ககத்தில் யாருக்கும் நான் இணையத்தில் எழுதுவதோ இம்மாதிரி அரட்டை அடிப்பதோ, கேலிப்பேச்சுப் பேசுவதோ தெரியாது! இப்போத்தான் ஐந்தாறு வருஷங்களாக எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வந்திருக்கிறது. ஆகவே பெரிசா அனுபவங்கள்னு சொல்ல முடியாது.

      நீக்கு
    3. //அதுவும் குறிப்பாக என்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் பேசும்போது அதிகபட்ச மரியாதையில் சறுக்கி வி(ழு)டுவது உண்டு! இயல்பாகவே எப்போதும் இருந்துவிட்டால் இல்லை ஒரு தொல்லை என்று அப்புறமாய்த் தோன்றும்.// ம்ம்ம்ம், நீங்க உயர்ந்த நிலையில் உள்ளவங்களை ரொம்பவே உயரத்தில் வைச்சுப் பார்த்துத் தடுமாறி இருக்கீங்க! என்னிடம் முக்கியமா அந்தக் குணம் இல்லாததே புக்ககத்தினரின் வருத்தம். உறவினரில் சிலருக்கு அதீத மரியாதை கொடுப்பாங்க! அப்படியே என்னிடமும் எதிர்பார்ப்பாங்க! ஆனால் நான் சாதாரணமாக எல்லோரிடமும் நடந்துக்கறாப்போலவே அவங்களிடமும் நடந்துப்பேன். அது அவங்களுக்குக் கஷ்டமா இருக்கும். சாப்பாடு பரிமாறினாப் பாத்திரம் கூட உள்ளே இருந்து புதுசா எடுத்து அதில் வைத்துப் பரிமாறுவாங்க! நானெல்லாம் வீட்டில் அன்றாடம் புழங்கும் பாத்திரங்களையே பயன்படுத்துவேன். யார் வந்தாலும் அப்படித்தான் இருப்பேன்/இருந்தேன். இப்படி நிறைய இருக்கு!

      நீக்கு
    4. அச்சச்சோ...    பொசுக்குன்னு முடிச்சுட்டீங்களே...   என் பாஸ் பிறந்த வீட்டிலிருந்த அதே அரட்டை, கலகலப்பு புகுந்த வீட்டிலும் தொடர்கிறது. என் பக்க உறவினர்களிடம் என்னைவிட அவர் அதிகம் பேசுவார்.  ஆனால் அவர் இப்படி மாட்டிக்கொண்டு நான் பார்த்ததில்லை!

      நீக்கு
    5. வீட்டில் பெருந்தனக்காரர்களிடமிருந்து நான் சற்று விலகியே நின்று விடுகிறேன்!  அலுவலக வட்டாரத்தில் சமயங்களில் இப்படி ஆகி விடுகிறது!

      நீக்கு
    6. பொதுவாகத் தென்மாவட்டப் பெண்களே முக்கியமாத் திருநெல்வேலி, மதுரை, நாகர்கோயில் பக்கமெல்லாம் அனாவசியமான வெட்கம், கதவுக்குப் பின்னாடி மறைந்து கொண்டு குரல் கொடுப்பது, ஆண்களைப் பார்த்துப் பேசுகையில் முகத்தைத் திருப்பிக் கொள்ளுவதுனு பார்க்க முடியாது! எங்க வீட்டில் அம்மாவெல்லாம் பெரியப்பா கூடவெல்லாம் சகஜமாகப் பேசுவாங்க. எங்க தாத்தாவும் மாமிகளிடம் நன்றாய்ப் பேசுவார். ஆனால் இங்கே நான் மாமனாரை சாப்பிடக் கூப்பிடுவது எனில் நேரில் சொல்லக் கூடாது! பொதுவாகச் சொல்லணும். சமையல் ஆயிடுச்சு. தட்டுப் போடவானு மாமியாரிடம் கேட்கணும். வயதில் சின்னவர்களாக இருந்தாலும் மைத்துனர்களைத் தட்டுப்போட்டுக்கொண்டு சாப்பிட வாங்கனு சொல்லக் கூடாது! தட்டை அலம்பிப் போட்டுவிட்டு அவங்க எப்போ வருவாங்கனு பார்த்துட்டுக் காத்திருக்கணும்! நேருக்கு நேர் பேசக் கூடாது! இப்படி எத்தனையோ! எனக்கு ஆரம்பத்தில் இதெல்லாம் பார்த்துச் சிப்புச் சிப்பாய் வரும். பின்னால் பழகிவிடவே பேச்சுக் குறைந்து போச்சு!

      நீக்கு
    7. //நான் சற்று விலகியே நின்று விடுகிறேன்! அலுவலக வட்டாரத்தில் சமயங்களில் இப்படி ஆகி விடுகிறது!//நான் கவனிச்சிருக்கேன் உங்களிடம் இந்த சுபாவத்தை! அதிலே இருந்து வெளியே வாங்க முதல்லே! எல்லோரும் நண்பர்களே! எங்க வீட்டிலும் இப்படித் தான் உறவினரில் பெருந்தனக்காரர்கள் வந்துட்டால் வீடு அல்லோலகல்லோலப்படும். மாமியார் பேச்சே ஜாடையில் தான் இருக்கும். பாயசம், பச்சடி, இரண்டு கறி, இரண்டு கூட்டு, வடை, போளினு அமர்க்களப்படும் சமையல். ஆனால் அவங்க வீட்டிலே போனால் எளிமையான சாப்பாடாகத் தான் போடுவாங்க! இதிலே நம்ம வீட்டு சமையல் எல்லாம் அவங்களுக்கு ஒண்ணுமே இல்லை. அவங்க தரத்துக்கு நாம் சாப்பாடு போடலைனு வேறே வருத்தப்படுவாங்க.

      நீக்கு
    8. //பொதுவாகத் தென்மாவட்டப் பெண்களே முக்கியமாத் திருநெல்வேலி, மதுரை, நாகர்கோயில் பக்கமெல்லாம் அனாவசியமான வெட்கம்..... //

      இருக்கலாம்.  என் பாஸ் பத்தமடை!   ஆனால், நீங்கள் சொல்லியிருக்கும் வழக்கங்கள் இப்போது எந்த ஊரிலுமே நடைமுறையில் இல்லை என்றே நினைக்கிறேன்.இதெல்லாம் நான் முன்னால் ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் படங்களாகப் பார்த்திருக்கிறேன், அவ்வளவுதான்!

      நீக்கு
    9. //அதிலே இருந்து வெளியே வாங்க முதல்லே!  //

      இனிமேலயா? ஊ...  ஹூம்!  சான்ஸே இல்லை!

      நீக்கு
    10. //ஆனால், நீங்கள் சொல்லியிருக்கும் வழக்கங்கள் இப்போது எந்த ஊரிலுமே நடைமுறையில் இல்லை என்றே நினைக்கிறேன்.//

      என்னோட கடைசி நாத்தனார் இப்போவும் மைத்துனர்களிடம் நேரிடையாகப் பேசமாட்டார். அவங்களோட பேசணும்னாலே அவங்க குரலே ரொம்பவே மெதுவா ஆயிடும். ஓர்ப்படியிடம் தான் பேசுவாங்க. ஆனால் அவங்க பேசுவது மைத்துனரிடம். கல்யாணம் ஆகிப் புக்ககம் போன புதுசிலே அவங்க வீட்டுக்கு (இத்தனைக்கும் கூட்டுக் குடும்பம் தான் ஆரம்ப காலங்களில்) முதல்முறை வெளியூரிலிருந்து கடைசி மைத்துனர் வந்தப்போ வீட்டில் யாரும் இல்லையாம்! இவங்க உள்ளே இருந்து வெளியேயே வரலையாம்! மைத்துனர் வெறுத்துப் போயிட்டேன் என எங்களிடம் சொல்லி இருக்கார்.

      நீக்கு
    11. பெருந்தனக் கார்ரகளுடமிருந்து விலகி இருப்பது அனேகமாக எல்லோரிடமும் உள்ள குணம்தான்.

      ஆனா நிறைய தடவை, இவர் பெருந்தனக்கார்ர் என்ற அனுமானத்தில் அந்தத் தவறைச் செய்துவிடுகிறோமோ

      நீக்கு
    12. இருக்கலாம்.   பெருந்தனக்காரர் என்றில்லை....ம்ம்ம்ம்...

      நீக்கு
  3. பெரியார் திருச்சியில் தான் ஒரு பொதுக்கூட்டத்தில் இப்படிக் கேட்டதாகச் சொல்லுவார்கள். வாரியார் சொன்ன பதிலும் கேள்விப் பட்டிருக்கேன்.கோவை ஆவி உங்களைப் பார்க்காமலேயே சைகிளில் அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் நல்லவேளையா உங்களைக் கீழே தள்ளலை. அவர் தான் விழுந்திருக்கார். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவி ஒரு மரியாதைக்காக மாற்றிச் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  4. சமையல் ஜோக்கெல்லாம் ஏற்கெனவே படிச்சது தான். என்றாலும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னே?  ஏற்கெனவே படிக்காமல் இருந்திருப்போமா?  சும்மா சுவாரஸ்யம்தான்!

      நீக்கு
  5. தேவைக்கு மேலேயே நிறையப் பேசியாச்சு. காலம்பர வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவைக்கு மேலயா?  இதுவா?  ஒண்ணுமே சொல்லலையே!!

      நீக்கு
    2. குட்டிக்குஞ்சுலு சாப்பிடப் போறது. அடுத்த குட்டிக்குஞ்சுலு நாங்க ரெண்டு பேரும் தான் சாப்பிட்டுவிட்டு முடிஞ்சால் வரேன்.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   காலை வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது...

    வாழ்க நலன்...

    பதிலளிநீக்கு
  8. நண்பர் கில்லர் ஜி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கில்லர் ஜி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்....

      நீக்கு
  9. மழை என்பதற்கு பதில்...

    // பெய்யெனப் பெய்யு மிழை (பெய்+என+பெய்யும்+இழை) // எனும் சந்தேகம் உள்ளது...

    காரணம் அதிகாரம் வாழ்க்கைத் துணைநலம் + முதல் குறள் :-

    வாழ்க்கைத் துணையாக வரும் (boss) எவ்வாறு தனது புகுந்த வீட்டிற்கு ஏற்றது போல், வாழ்வை நடத்த வேண்டும் என்பதைத் தான் பத்து குறள்களில் விளக்கம் தருகிறது... +

    முதல் குறளில் தனது கணவன் ஈட்டும் வளத்திற்கு ஏற்ப, வாழ்க்கை நடத்துபவளே சிறந்த வாழ்க்கைத் துணை என்று கூறுகிறது...

    இழை = அணிகலன்

    சிந்திக்க வைத்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய சிந்தனையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி DD.  அதுவும் நன்றாய்தான் இருக்கிறது.

      நீக்கு
  10. மற்ற தளங்களை விட இந்த தளத்தில் கருத்துரைகளை படிப்பது சுவாரசியமாக உள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் உரையாடுவது போல கருத்துரைகள் உள்ளன. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் காலை வணக்கம். ஹாஹா! பேச்சு ஒரு கலை, அது எல்லோருக்கும் கை வந்து விடாது. பேச்சில் சொதப்புவதில் நான் உங்களுக்கு அக்கா. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானு அக்கா.   எல்லோருமே சொதப்புவார்கள்தான்.  நான் கொஞ்சம் அதிகம்!  எனக்கு நீங்கள் அக்காவா?   ஆறுதலாயிருக்கிறது!

      நீக்கு
    2. @பானுமதி, நீங்க எழுதுவதைப் போலவே பேசுவதும் சுருக்கமாய்த் தான் இருக்கும். அதனால் சொதப்ப வாய்ப்பே இல்லை.

      நீக்கு
  12. பல்சுவைச் செய்திகள். வாரியார் பதில் மிகவும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  13. //ஆனால் நான் சாதாரணமாக எல்லோரிடமும் நடந்துக்கறாப்போலவே அவங்களிடமும் நடந்துப்பேன். அது அவங்களுக்குக் கஷ்டமா இருக்கும்.//ஒரு high five குடுங்க கீதா அக்கா. 

    பதிலளிநீக்கு
  14. ஆயிரம் வார்த்தைகள் பேசுவதைவிட மௌனம் பலம் வாய்ந்தது என்பது எனது அனுபவத்தில் உண்மை என்றே தோன்றுகிறது.

    ஊமையாக பிறந்தவர்களுக்கும் இவ்வுலகில் வாழ வழிகள் உண்டு.

    எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன, சொல்லும் உள்ளங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      அன்பு தேவகோட்டைஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
      கீதாமா கதைதான் நமக்கும்.
      எட்டுருக்குத் தெரியும்படி வாயாடி என்று பெயர் எடுத்த காலம் ,திருமண
      ரிசப்ஷன் போதே மாறியது.
      ஒரு பிரபலம் வந்து,
      இவருடன் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்த என்னை,
      கெக்கே பிக்கேன்னு சிரிச்சுப் பேசாதே
      என்று சொல்லி விட்டுப் போனதும்
      கொஞ்சம் அடக்க ஆரம்பித்தேன். இவர்
      உன் இஷ்டப்படி இருமான்னு சொன்னால் கூட நா எழவில்லை.

      இப்பொழுதும் என்னால் பெரியவர்கள், என்று வரும்போது
      தயக்கம் உண்டு.

      இப்பொழுது இன்னும் ஜாக்கிரதையாக இருக்கணும்.
      நமக்கு வயதில் குறைந்தவர்களிடத்திலும்
      அளவோடுத்தான் பேச வேண்டி இருக்கிறது.

      எனக்குத் தெரிந்து இணையத்தில் அதனால் தான் அதிகமாக எழுத
      விருப்பம் வருகிறது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. பெரியார் வாதமும்(அனல்) ,வாரியார் பதிலும் புனல்).
      அவ்வையார் பாடலிலும் அழகாகச் சொல்லுவார்.
      எல்லோர்க்கும் பெய்யும் மழை.
      தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல்// என்று.

      பத்தினிகளுக்கு இந்த வரம் உண்டு.

      சமையல் ஜோக் நான் படித்ததில்லை. புன்னகைக்க வைக்கிறது.

      ஆவியின் அனுபவம் +கனவு ஆஹா சிரிப்பு.
      எப்படி எல்லாம் கற்பனை போகிறது.
      கனவானாலும் சூப்பர்.
      இரண்டு பேரும் விழுந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்:)

      நீக்கு
    3. இந்த பேச்சுதான் எப்படி சோதிக்கிறது. உங்கள் பதிவை மிக
      ரசித்தேன். ஸ்ரீராம்.
      ஊமத்தம் பூவே வாடும்படி வெய்யில் அடிக்கிறதா.

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா...   பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு வரும் பெண்கள் அனைவரும் தங்கள் சில இயற்கையான குணங்களை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது இல்லை?  சிரமம்.

      நீக்கு
    5. பதிவை ரசித்ததற்கு நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  15. மூன்று வயதில் பேசக் கற்றுக்கொள்கிறோம். எத்தனை வயதானாலும் எப்படி பேசவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதில்லை

    உண்மை

    பதிலளிநீக்கு
  16. கில்லர்ஜிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. ஒரு விவசாயிக்கு மிகவும் முக்கியமானது மழை. சில சமயம் அது அதிகமாக பொழிந்தும், சில சமயங்களில் பெய்யாமலும், காலம் தவறி பொழிந்தும் அவனுக்கு தொல்லை கொடுக்கும். அப்படி இல்லாமல் அவன் பெய் என்று சொல்லும் பொழுது பெய்தால் எத்தனை நலமாக இருக்கும்? அது போல கணவனே தனக்கு மிகவும் முக்கியம். என்று நினைக்கும் மனைவி ஒரு விவசாயிக்கு அவன் பெய் என்று கூறும் பொழுது பெய்யும் மழை போல் நன்மையைச் செய்வாள் என்று குறளோவியத்தில் கலைஞர் எழுதியிருந்த விளக்கம் என்னைக் கவர்ந்தது. 

    பதிலளிநீக்கு
  18. பெய்யென பெய்யுமா மழை?சொல் உன் தாயிடம் நாடு நனையட்டும்!என்று உலக நாயகன் என்னும் அசத்து எழுதிய கவிதையும் நினைவுக்கு வருகிறது. பெய்யன பெய்யும் மழை என்பதை கிண்டலடித்து அவருடைய ராஜ பார்வை படத்தில் கூட ஒரு காட்சி வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உ. நா வசனங்களே தனி!  கவனம் ஈர்க்க என்ன வேண்டுமானாலும் செய்வார்!

      நீக்கு
    2. ஶ்ரீராமின் பதில் ரசிக்க வைக்கிறது. புதன் ஹேங்க்்ஓவர்?

      நீக்கு
    3. நன்றி.  புதன்? ஹேங் ஓவர்?   அபுரி!

      நீக்கு
    4. @ நெல்லைத்தமிழன் :)))))))))))))))))))கறகறநறநற :)  ஹாஸ்பிடலில் hand over என்று சொல்றதா நினைச்சி :) hangover னு சொல்லி அசடு வழிஞ்சேன் :)
       binge drinking/ஹாங் ஓவர் இதெல்லாம் once upon a time எனக்கே என்னான்னே தெரியாது :)  

      நீக்கு
  19. அன்புள்ளம் கொண்ட சகோதரர் கில்லர்ஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த நாள் மீண்டும் மீண்டும் வருக!

    பதிலளிநீக்கு
  20. பதில்கள்
    1. அச்சச்சோ....   என்ன ஜீவி ஸார் இப்படிச் சொல்லிட்டீங்க....

      நீக்கு
    2. ஆரம்பத்திலேயே பதினாறு அடி பாஞ்சா அப்படித்தான். இப்போ பாதிக்குப் பாதின்னா அப்படித் தோண்றது, ஸ்ரீராம். அவ்வளவு தான். ஒண்ணு ரெண்டு 'நம்ம ஏரியா'வுக்கு வேறே போயாச்சு.
      புதுசா வேற என்ன செய்யலாம்?.. ம்ம்ம்ம்ம்.

      நீக்கு
    3. ரொம்ப யோசிச்சா மண்டை காய்ந்துபோகும்.   எல்லாம் அவ்வப்போது தானாய் வரும் ஜீவி ஸார்.

      நீக்கு
    4. //இந்த வார அரட்டை சவசவ.// :))))))))))))

      நீக்கு
  21. 'பெய்யனப் பெய்யும் மழை' குறளுக்கு கலைஞர் என்ன பொருள் கொண்டிருக்கிறார் என்று தேடி எடுத்துச் சொல்ல முடியுமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி பானு அக்காவுக்கு என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. இக்குறளுக்கு கலைஞரின் உரையைக் கண்டெடுத்துக் கொடுத்திருக்கிறேன்...

      நீக்கு
  22. நெற்றியில் வெள்ளை அடிப்பது ஏன் என்ற கிண்டலுக்கு வாரியார் சொன்ன பதில் இதை விட சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை நீங்கள் இங்கே பின்னூட்டத்தில் பகிரலாமே...

      நீக்கு
    2. நேற்று வாரியாரைப் பற்றிப் படித்தேன்.

      ஏன் சிவனை வடநாட்டவர் வெண்மை நிறத்தன்னாக உருவகப் படுத்துகிறார்கள், ஏன் தென்னகத்தில், பொன்னார் மேனியனே என பொன் நிறத்ததன்னாக உருவகப்படுத்துகிறார்கள் என்பதற்கு வாரியார் சொல்கிறார்,

      தீக்கங்கை அப்படியே விட்டுவிட்டால் வெளியே நீறுபூத்துவிடும்(வெண்மையா இருக்கும்). அதனை ஊதினால் உள்ளிருக்கும் கங்கு வெளிப்படும். வடவர் மேல்பகுதியைப் பார்த்து வெண்ணிறம் உடையவனாகவும் நாம் உள்ளுணர்ந்து பொன்னார் மேனியனாகவும் காண்கிறோம் எனப் பதிலிறுத்தார்

      நீக்கு
    3. இதோ ஒரு பதில்...    நன்றி நெல்லை!

      நீக்கு
  23. ஓவர் மரியாதை ... ஹா ஹ ஹா:), ரசித்தேன. ஆனா சிலர் சொல்லிவிட்டு மறந்திடுவினம்:), நீங்க இதை மட்டும் மறக்காமல் தப்பைக் கண்டு பிடிக்கிறீங்க:).

    எங்களோடும் ஒருக்கால் ஓவர் மரியாதை காட்டுங்கோவன் ஶ்ரீராம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களோடும் பலதரம் அப்படி  மாட்டியிருக்கிறேனே அதிரா...    நன்றல்லாததை  அன்றன்றே மறந்து விட்டீர்கள் போல...

      நீக்கு
    2. அதிராக்கா அடிக்கடி பின்னூட்டம் போடுங்கோவன் என்று சொன்னால் அது ஓவர் மரியாதையாகுமா?

      நீக்கு
    3. கோவன் என்று முடிவதால் என்னை கோபக்காரர் என்று சொல்வதாக நினைத்தேனே...    அப்படி இல்லையாமா?!!!

      நீக்கு


    4. நெல்லைத்தமிழன்19 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:55
      அதிராக்கா///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
    5. ///என்னை கோபக்காரர் என்று சொல்வதாக நினைத்தேனே... அப்படி இல்லையாமா?!!!///
      ஹையோ வைரவா... இப்பூடி ஏதும் டவுட்டு வந்தால் உடனே கேட்டுத் தெளிவாகிடுங்கோ ஶ்ரீராம்... காசா பணமா:)... ஹா ஹா ஹா..
      அது கோவன் எனச் சேர்த்தால்... இன்னும் கொஞ்சம் அன்பாக சொல்வதாக அர்த்தமாகலாம் என நினைக்கிறேன்... அது எங்கட ஊர்ப் பாசை...
      தாங்கோவன்
      சொல்லுங்கோவன்
      :).... இப்பூடி

      நீக்கு
    6. தெரியும் அதிரா....   புரிந்துகொண்டேன்.    சும்மா ஜோக்குக்காகத்தான் அப்படிச் சொன்னேன்!

      நீக்கு
    7. ////நெல்லைத்தமிழன்19 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:55
      அதிராக்கா அடிக்கடி பின்னூட்டம் போடுங்கோவன் என்று சொன்னால் அது ஓவர் மரியாதையாகுமா?///

      ஹாஹாஆ ஹாஹ்ஹஹ்ஹாஹாஆ ஹையோ ஹாஆஆஆ ஹஆஹூஹூ ஹாஆ ஹாஹாஆ ஹாஹ்ஹஹ்ஹாஹாஆ ஹையோ ஹாஆஆஆ ஹஆஹூஹூ ஹாஆ 

      நீக்கு
    8. எங்க அண்ணா கிட்ட சொல்லிடுவேன் :) bee careful 

      நீக்கு
  24. உந்தப் பூக்கள் இங்கும் உண்டு , செப்டெம்பர் ஒக்டோபரில் பூக்கும் நிலத்தில் படர்ந்து, ஆனா நச்சு தொடக்கூடாது என என் பிரெண்ட் சொன்னா.

    அது ஒரே பூவா? வேறு வேறு பூப்போல தெரியுதே... பூக்கள் என்றாலே அழகுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே பூ தான்.  அது மடங்கி இருப்பதால் உள்ளே உள்ள வெள்ளை தெரிகிறது பாருங்கள்.

      நீக்கு
    2. பல்லைக் காட்டும்போது ஒரு வண்ணமும், பணிந்திருக்கும்போது ஒரு வண்ணமும் தெரிகிறதோ!

      நீக்கு
    3. பணியாதபோதும் அந்த வண்ணம் தெரிகிறதே...!

      நீக்கு
    4. ஏகாந்தன் சார்.. பயணத்தில் படிக்கும்போது,

      பல்லைக் காட்டும்போது முக வண்ணமும்
      பணியும்போது அவள் கன்னமும் தெரிகிறதோ

      என்று படித்தேன்

      நீக்கு
    5. //அவள் கன்னமும் தெரிகிறதோ//
      அல்லோ நெ டமிலன்:)... இதில் “அவள் “ என எங்கும் ஏ அண்ணன் சொல்லவே இல்லையே:) கர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
    6. //அதை நீங்கள் இங்கே பின்னூட்டத்தில் பகிரலாமே...//

      கூகுளாண்டவர் தான் தோன்றாத் துணையாய் இருக்கிறாரே! :)

      நீக்கு
    7. கூகுளில் கிடைக்கவில்லை ஸார்.

      நீக்கு
    8. //இதில் “அவள் “ என எங்கும் ஏ அண்ணன் சொல்லவே இல்லையே:)//

      பூவை = பெண்!   

      பூக்களை ஆண்களுக்கு உவமைப்படுத்திப் பேசுகிறார்களா என்ன!

      நீக்கு
    9. அழகு, ரசனை, இனிமை இவை எல்லாவற்றிர்க்கும் பெண்களுக்கு உதாரணமாக்கிடுவாங்க. ஆண்மை, வீரம், கோபம் இவற்றிர்க்கெல்லாம் ஆண்கள்.

      இப்படீலாம் எழுதி எத்தனை பெண்ணியவாதிகளைக் கோப்ப்படுத்தப் போறேனோ

      நீக்கு
    10. //..பயணத்தில் படிக்கும்போது,
      பல்லைக் காட்டும்போது முக வண்ணமும்
      பணியும்போது அவள் கன்னமும் தெரிகிறதோ
      என்று படித்தேன்//

      பெண்ணைப் புகழ்ந்து புகழ்ந்து பழக்கப்படுத்திக்கொண்டால் பெருங்கவிஞன் ஆகிடலாம்! சரியான ராஸ்தாவில்தான் போய்க்கொண்டிருக்கிறீர்கள் நெல்லைஜி!

      நீக்கு
    11. //கூகுளில் கிடைக்கவில்லை ஸார்.//

      இங்கே பாருங்கள். வாரியார் சுவாமிகள் பற்றி சில தகவல்கள்.

      https://groups.google.com/forum/#!topic/friendindia/zkbbJTEuOFE

      நீக்கு
    12. //இப்படீலாம் எழுதி எத்தனை பெண்ணியவாதிகளைக் கோப்ப்படுத்தப் போறேனோ//

      ஹா ஹா ஹா நல்லவேளை அஞ்சு இங்கின இல்லையாக்கும்:)).. மீ பெண்ணினவாதி இல்லை:)) மீ ஒரு அப்பாவீஈஈஈஈஈஈஈ:)).. எனக்குத்தேவை நீதி நேர்மை கடமை எருமை:))

      நீக்கு
  25. ஒன்று சொல்ல நினைக்கிறேன், ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் உங்களைப் பொறுத்தது.
    வியாழக்கிழமைப்போஸ்ட் எப்பவும் ஒரு அழகிய கதம்பமாகப் போடுவீங்க... அதனால தலைப்பையும் கொஞ்சம் உற்சாகமாக, நகைச்சுவையாக வைத்தால் நன்றாக இருக்குமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு உற்சாகமாக இருக்க வேண்டுமா?  இந்தத்தலைப்பு கொஞ்சம் கவர்ந்து இழுக்கும் என்று நினைத்து விட்டேன்.   இன்றைய பதிவுக்கு தலைப்பு உங்கள் சஜஷன்  என்ன அதிரா?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர் உதவிக்கு வந்தவரையே உப்பூடி மாட்டிவிடக்குடா:)...

      பெரியார், காந்தி, அல்லது சுவாமிப்பெயர்கள் பார்த்தால் மரியாதையும் அடக்கொடுக்கமும்தான் வருது:)... நகைச்சுவை பண்ணும் மூட் போய்விடுது:)

      நீக்கு
    3. ஓவர் மரியாதை காலை வாரி விடுமோ?:)

      காலையில் ஊதா, மதியம் திருநீறு பூசி விட்டதோ?:)

      தினம் ஒரு புத்தகம் எரியுதாமே:)

      ஆவிக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுதோ?:)...

      ஹா ஹா ஹா 4 தலைப்புக்கள் தந்திட்டேன்:)

      நீக்கு
    4. ஓகே...     ஓகே...     ஸூப்பர் .  ஆனா பாருங்க.... எனக்கு என் தலைப்புதான் பிடிச்சிருக்கு!   ஹிஹிஹிஹி....

      நீக்கு
    5. இதுக்குத்தான்... இதுக்குத்தான் அம்மம்மா அப்பவே சொன்னா.. ஆருக்கும் எதுவும் சொல்லிடாதை பிள்ளை என:)) நான் கேட்டனோ.. கேட்டனோ:)).. சரி சரி விடுங்கோ ஸ்ரீராம்..

      //ஆனா பாருங்க.... எனக்கு என் தலைப்புதான் பிடிச்சிருக்கு//
      தன்னைத்தானேதான் புகழோணும் இக்காலத்தில:)).. அடுத்தவர்களோ நம்மைப் புகழப்போகினம்:)).. ஹா ஹா ஹா:))

      நீக்கு
    6. ஹா....   ஹா...   ஹா...  ஹி....ஹி...ஹி....ஹி.... 

      நீக்கு
  26. ராமர் கற்புடையவர் என்கினமே ஆனா அவரால எங்காவது மழை பொழிந்ததோ?.... எதுக்குப் பெண்களை மட்டும் இப்படியெல்லாம் பண்ணுகிறார்கள்... மழை பெய்யவில்லை எனில், அப்பெண் கற்பில்லாதவ என அர்தமாகிடுமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... எதுக்குப் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கினம் இப்பவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இல்லை?   அதென்ன, பெண்களை மட்டுமே வம்புக்கிழுப்பது?  

      நீக்கு
    2. இது என்ன கேள்வி?

      யாரால எது முடியுமோ அவங்கள்டதான் அதை எதிர்பார்க்க முடியும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு இயல்பு உண்டு இல்லயா?

      என்ன இது.. பெண்கள் கூட்டம் மாதிரி சள சளன்னு பேசிக்கிட்டு, அட இவ என்ன ஆம்பளை மாதிரி நடக்கறா- இந்த மாதிரி கேள்விப்பட்டதில்லையா?

      நீக்கு
    3. இதுகூட சரிதான்.   அதிரா...  கொஞ்சம் வாங்க...  நெல்லை என்னவோ சொல்றார்...

      நீக்கு
    4. //என்ன இது.. பெண்கள் கூட்டம் மாதிரி சள சளன்னு பேசிக்கிட்டு, அட இவ என்ன ஆம்பளை மாதிரி நடக்கறா- இந்த மாதிரி கேள்விப்பட்டதில்லையா?

      இது பொதுவாக இருபாலாருக்கும் பேசப்படுவதால இதில ஒரு ஞாயம் இருக்குது.. ஆனா மழைக்கு மட்டும் பெண்கள் கற்பு என்பினம், ஆனா ஆண்களுக்கு கற்பையும் சொல்வதில்லை மழைக்கதையும் இல்லை.. இது எந்த வகையில ஞாயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்?:)..

      எங்கே நெல்லைத்தமிழன் இப்போ செனையிலதானே இருக்கிறார்ர், மழை பெய்யச் சொல்லுங்கொ நெ தமிழன்:))[மாட்டினீங்களா மாட்டினீங்களா?:)) பூசோ கொக்கோ?:))]. ஸ்ரீராம் கொஞ்சம் மொட்டை மாடிக்கு ஓடுங்கோ .. மழை கொட்டுதோ எனப் பார்ப்போம்ம்..:)) மீயும் கூகிள் வெதரை ஓபின் பண்றேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா

      நீக்கு
    5. //
      ஸ்ரீராம்.19 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:03
      இதுகூட சரிதான். அதிரா... கொஞ்சம் வாங்க... நெல்லை என்னவோ சொல்றார்...//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓவர் மருவாதை:) மாதிரி ஓவரா நல்லபிள்ளையாகவும் இருக்கக்கூடா:)).. இப்போ நீங்க ஆரு கட்சி?:) பெண்கள் .. எம்பாலார் கட்சியோ இல்லை எதிர்க்கட்சியோ?:)) டக்குப்பக்கென ஒரு முடிவுக்கு வாங்கோ ஸ்ரீராம்.. ஈவினிங் டின்னர் வீட்டில வேணுமோ இல்ல ஹோட்டலிலோ என்பதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளவும்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    6. பிறன் மனை நோக்காப் பேராண்மை உடையவர்கள் அனேகமா சங்க காலத்திலேயே வழக்கொழிந்து போய்விட்டதால் பெய் எனப் பொய்யும் மழை என்றாகிவிட்டது. ஹா ஹா

      இப்போல்லாம், நல்லார் ஒருவர் உளரேல் (உளனேல் இல்லை) அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை தான்

      நீக்கு
    7. அப்போ எதுக்கு பெண்களுக்கு மட்டும் இன்னும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டும், பழைய உடைகள் அணிவதில்லை எனத் திட்டிக்கொண்டும்[துரை அண்ணனைச் சொல்லலே:))] இருக்கிறீங்க?:). ஆண்களுக்கு கற்பில கையை வச்சவுடன மட்டும்.. ஆ அதெல்லாம் சங்ககாலம் என டக்குப்பக்கென வேர்க விறுவிறுக்க சப்டரை மூடுறீங்க ஹா ஹா ஹா ...

      வைரமுத்து அங்கிளில் பாட்டு வரி நினைவுக்கு வருது ஆனா மீ பாட மாட்டேனே:)) ஹா ஹா ஹா அடி வாங்க இன்று மீ ரெடி இல்லை:)) கிரிஸ்மஸ் ஷொப்பிங் இருக்குதாக்கும் எனக்கு:))

      நீக்கு
    8. சபா.....ஷ்...     சரியான போட்டி...!

      நீக்கு
    9. //இப்போ நீங்க ஆரு கட்சி?:) பெண்கள் .. எம்பாலார் கட்சியோ இல்லை எதிர்க்கட்சியோ?:)) //

      நான் இப்போ சாலமன் பாப்பையா!!!

      நீக்கு
  27. டெய்லி புதுப்புத்தகம் தேவைப்படுகிறதே:)... பின்ன சாப்பாடு மட்டும் டெய்லி புதுசா வேணுமாம்:)... புத்தகம் மட்டும் பழசையே பார்த்துச் செய்யோணுமாம் கர்ர்ர்ர் ஹா ஹா ஹா வேணுமெண்டே எரிச்சிருப்பா:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..    ஹா..  ஹா...  புதுசு புதுசா புத்தகம் எரிப்பாங்க போல!

      நீக்கு
  28. கோவை ஆவி..... ஆவியாகிட்டாரோ?:)... ஶ்ரீராம் அந்தச் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்திருக்கலாம்:)

    பதிலளிநீக்கு
  29. புத்திசாலித்தனமாகப் பேசுவதாக எண்ணிக்கொண்டு, அவ்வப்போது, ஆங்காங்கே வழிவது எல்லோருக்கும் நடப்பதுதான். ஆனால், உண்மையைச் சொன்ன உத்தமர் நீங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்...    நண்பர்களின் அந்த அனுபவங்களை வாங்கி ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிடலாமா என்று யோசிக்கிறேன்!

      நீக்கு
    2. அவர் புத்திசாலித்தனமாக எண்டெல்லாம் யோசிக்கவில்லை ஏ அண்ணன்:)).. அது ஓவர் மரியாதை குடுக்கிறாராமாம்ம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா:))..

      நீக்கு
    3. நான் சொல்லி இருப்பதற்கு பதில் உண்டா அதிரா?

      நீக்கு
    4. ஓ அது ஏ அண்ணனைக் கேட்டிருப்பதால், ஓவர் மரியாதை பண்ணி:) நான் அதற்குள் நுழையவில்லையாக்கும்:)) ஹா ஹா ஹா.

      நல்ல விஷயம்.. ஞாயிற்றுக்கிழமையை விறுவிறுப்பாங்குங்கோ இந்தக் ஹொலிடேக் காலத்தில்:)..

      நீக்கு
    5. உங்களது ஞாயிறுகளை revamp செய்யவேண்டிய தருணமிது. எபி-வாசகர்களின் அனுபவக் கிடங்குகளிலிருந்து அள்ளுவது நல்ல ஐடியா! சுவாரஸ்யத்திற்குப் பஞ்சம் இருக்காது.

      நீக்கு
    6. அது சரி...    எதிர்பார்த்தபடி அனுபவங்கள் வரவேண்டுமே...!

      நீக்கு
    7. /நல்ல விஷயம்.. ஞாயிற்றுக்கிழமையை விறுவிறுப்பாங்குங்கோ இந்தக் ஹொலிடேக் காலத்தில்:)..//

      அது சரி...    நீங்களோ வருவதில்லை...    அப்புறம் உங்களுக்கு எப்படித்தெரியும்?

      நீக்கு
    8. வருவேன், பயணப்படங்கள் என்பதாலும் அதில் அவர் பதில் சொல்வதில்லை என்பதாலுமே மீ வருவதில்லை மற்றும்படி நைட்டாவது வருவேன் ஶ்ரீராம்.

      நீக்கு
    9. வாங்க...    வாங்க...   வாங்க அதிரா....

      நீக்கு
  30. எப்போதும்போல் வியாழன் இடுகை அருமை. இன்னும் பின்னூட்ட ஜோதீல ஐக்கியமாக முடிலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.  பெங்களுருவில் 144 ஆமே?

      நீக்கு
    2. அதனால் சென்னையை நோக்கி பயணிக்கலை. சென்னையிலிருந்து பத்து நாட்கள் தென் தமிழகப் பயணம். அதனால் குளிர் பிரதேசத்தை விட்டு வனண்ட நிலத்துக்கு வந்துகொண்டு இருக்கிறேன்

      நீக்கு
    3. ///அதனால் குளிர் பிரதேசத்தை விட்டு வனண்ட நிலத்துக்கு வந்துகொண்டு இருக்கிறேன்///
      ஆஆஆஆஆஆஅ வறண்ட நிலமோ வறண்ட நிலமோ?:) அப்போ மழை பெய்யச் சொல்லுங்கோ இப்போ:)) ஹா ஹா ஹா ..

      நீக்கு
    4. பயணம் ஒத்திப்போடப்பட்டுள்ளதா நெல்லை?

      நீக்கு
    5. ஆனால் சென்னை இப்போது வறண்ட நிலமாக இல்லை அதிரா...     பரவாயில்லை.  ஜில்லென்று ஈரமாகத்தான் இருக்கிறது...

      நீக்கு
    6. ஶ்ரீராம்.. இன்று இரவு தெரிந்துவிடும் எப்படி ஜில்லுனு ஈரமா இருக்குன்னு

      நீக்கு
    7. ஆஆவ்வ்வ் நெ தமிழன் நைட் சென்னைக்கு வந்திடுவாராம்ம்ம்ம்ம்ம்:)...
      மழை பெய்கிறதோ இல்ல வேர்க்குதோ எனச் சொல்லுங்கோ பிளீஸ்:)

      நீக்கு
    8. இதோ...   இந்த நிமிடம் வரை வியர்வைதான்!

      நீக்கு
    9. ஹா ஹா ஹா விடாதீங்கோ ஸ்ரீராம்.. வெதரை அப்டேட் பண்ணிக்கொண்டே இருங்கோ:))

      நீக்கு
    10. ஹா....   ஹா...   ஹா...   இப்பவும் அதே...   அதே!

      நீக்கு
  31. கில்லர்ஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சுற்றம் சூழ வாழ வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///சுற்றம் சூழ வாழ வாழ்த்துகிறேன்//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பொ சுற்றம் அவரைச் சூழ்ந்து, இன்னும் அவரிடம் இருக்கும் பணத்தை எல்லாம் பிடுங்கிட்டுப் போவதற்கோ இந்த வாழ்த்து:)) ஹா ஹா ஹா

      நீக்கு
    2. அதிரா... கில்லர்ஜியின் ஸ்ட்ராங் பாயின்ட் அவருக்கு இருக்கும் நண்பர்கள்தாம். ஹா ஹா

      நீக்கு
  32. ஓகே மீக்கு யோகா ... போயிட்டு வாறேன்ன்.. இன்னொரு நியூஸ்ஸ் எனக்கு ஹொலிடே ஆரம்பமாகிட்டுதூஊஊஊஊஊஊஉ.. மூத்தவருக்கும் ஹொலிடே விட்டிட்டுதூஊஊஊஊ.. இரு மகன்களுக்கு அம்மாவாக இருப்பது எவ்ளோ பிசி தெரியுமோ வீட்டில:)) பின்பு வாறேன்ன்ன்... ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரு மகள்களுக்கு அம்மாவாக இருந்திருந்தால், கொஞ்சம் ஃப்ரீயாக இருந்திருப்பீர்களோ, அதிராஜி!

      நீக்கு
    2. இது என்ன கணக்கு ஏகாந்தன் ஸார்?

      நீக்கு
    3. இந்தக் கணக்கின் மூலம், ஆதாரம் எல்லாம் அதிராவேதான். அவரது கருத்தை ஆராய்க!

      நீக்கு
    4. என் இனிசல் ஜி என எப்பூடித் தெரியும் ஏ அண்ணன் ஹா ஹா ஹா:)...

      எங்கள் பிள்ளைகள் குட்டியாக இருந்தபோது, கணவரோடு வேர்க் பண்ணியவருக்கு ம் 2 ஆண்பிள்ளைகள், வளர்ந்தவர்கள் அப்போ.

      அப்போ அவர் சொன்னாராம், பெண் பிள்ளைகள் எனில் மேக்கப் பொருட்கள் வாங்குவதிலேயே பணம் செலவாகிடும் ஆனா ஆண்பிள்ளைகளுக்கோ விதம் விதமான சாப்பாடுகள் குடுப்பதிலேயே செலவாகிடும் என ஹா ஹா ஹா... இப்போ புரியுதோ ஆண் பிள்ளைகள் வீட்டில் நின்றால்... அம்மாக்கள் எவ்ளோ பிசியாக இருக்க வேண்டி வரும் என:)...

      நீக்கு
  33. உங்களை பார்த்தெ இராத ஆவி யின் கனவில்உங்களை எப்படி அவர் அடையாளம் கண்டுகொண்டாராம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி எம் பி ஸார்...  அவர் எண்ணெய் பார்த்ததில்லை.  ஆனால் என்னை அறிவார்.   அறிமுகம் உண்டு.  அப்புறம் கனவில் வர கேட்பானேன்?  முகமா முக்கியம்?

      நீக்கு
  34. எனக்கும் இதே சந்தேகம் வந்தது. சில சமயம் நம் கனவில் வரும் நம் உறவினரோ, நண்பரோ பார்ப்பதற்கு அப்படி இருக்க மாட்டார், ஆனால் நமக்கு அப்படி தோன்றும். அது போல ஆவியின் கனவில் வந்த நபர் ஸ்ரீராம் என்று அவருக்குத் தோன்றியதோ என்னவோ?  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனசில் ஸ்ரீராம் என்று தோன்றியிருக்கிறது...   அவ்வளவுதான். சீனு, ஆவி எல்லாம் அப்போ என்னைப் பார்க்க ஆவல் கொண்டிருந்தார்கள். 

      நீக்கு
  35. இன்றைய ப்லாக் மிகவும் சுவையாகவும் ஸ்வாரஸ்யமாகவும் இருக்கிறது. பல சமயங்களில் நான் இதே சங்கடத்தில் மாட்டிக்கொண்டு ஆடு திருடிய கள்வனைப் போல் முழித்திருக்கிறேன்.  திருமணம் ஆன புதிதில் எனக்கு என் புகுந்த வீட்டாரின் standard அறிவுறை : "ஆழகாக புத்தாடை உடுத்திக்கொள், நன்றாக அலங்காரம் செய்துக்கொள், நிறைய நகை நட்டு அணிந்து கொள்.  வாயை மட்டும் திறக்காதே" என்பது.  என் புக்ககத்தில் யாவரும் தஞ்சாவுரைச் சேர்ந்தவர்கள்.  பேச்சாற்றலில் மிகவும் வல்லவர்கள்.  ஆகவே, ரமா என்றும் மௌனமானவள், என்றும் சிக்கலில் மாட்டாதவள்.  ஆனால், இன்று நீங்கள் காணும் ரமா முற்றிலும் மாறுபட்டவள்.  என் இயல்பு சிரிப்பு, உற்சாகம், கலகலப்பு மற்றும் கும்மாளம்.  வயது முதிர்ந்து மனமுதிர்ச்சி அடைந்த பின், நான் நானாக இருக்க கற்று கொண்டேன். இந்த மௌன நாடகம், இந்த கலகலப்பில்லாத வாழ்க்கையை விட்டெரிந்து, நான் நானாகிய பின், அனைவரும் என்னை விரும்பி நாடினர்.  அதுவே, எனக்கு ஒரு அங்கீகார முத்திரையாய் மாறியது.  எனவே நண்பர்களே, நீங்கள் நீங்களாகவே இருக்க கற்று கொள்ளுங்கள். நன்றி நண்பர்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  நன்றி ரமா ஸ்ரீநிவாசன்.  

      //என் புக்ககத்தில் யாவரும் தஞ்சாவுரைச் சேர்ந்தவர்கள்.  பேச்சாற்றலில் மிகவும் வல்லவர்கள். //

      அப்படியா?   நானும் தஞ்சாவூர்தான்.  நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்?!

      //எனவே நண்பர்களே, நீங்கள் நீங்களாகவே இருக்க கற்று கொள்ளுங்கள். //

      உண்மை.   உண்மை.

      நீக்கு
    2. அதே, அதே! என் புகுந்த வீட்டிலும் பேச்சாற்றல் உள்ளவர்களே! அந்த மாதிரி எனக்குப் பேசத் தெரியலை என்பது இப்போதும் அவங்களுக்கு ஒரு மாபெரும் குறை! சொல்லப் போனால் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருந்த நான் மீண்டு வந்ததும் இணையத்தால் தான்!

      நீக்கு
    3. யாராவது மதுரை என்றால் .. நானும் மதுரை என்கிறார்ர்.. தஞ்சாவூர் என்றால்.. நானும் தஞ்சாவூர் என்கிறார்ர்.. சென்னை என்றால்.. நானும் சென்னை என்கிறார்.. ஒண்ணுமே பிரியல்ல நேக்கு ஸ்ரீராம்:))

      நீக்கு
    4. இதில் குழப்பமே இல்லை அதிரா...    மூன்று ஊர்களிலும் நான் வசித்திருக்கிறேன்.  தஞ்சையில்தான் படித்தேன்.   மதுரையில் வேலையில் சேர்ந்தேன். சென்னையில் தொடர்கிறேன்!

      நீக்கு
  36. பேச்சுக்கலை ஒரு சிலருக்குத்தான் கைவரபெறும்.
    எல்லோருக்கும் பிடிப்பது போல் பேச கற்றுக் கொள்ள வேண்டும்.
    உங்கள் பாஸை பார்த்தவுடன் பிடிக்கும், பேசியவுடன் மிகவும் பிடிக்கும்.
    கற்றுக் கொள்ளுங்கள் பாஸிடம் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா..  கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்கிறேன்!

      நீக்கு
  37. காலை, மதியம் வண்ணம் மாறும் மலர் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்ணம் மாறவில்லை.   அதிலேயே இருக்கும் வண்ணம்தான்.  மடிந்து காணப்படுகிறது மலர்.

      நீக்கு
    2. பூவின் இதழ்கள் மடிந்து அது ஒரு அழகிய தோற்றம் தருகிறது.

      நீக்கு
  38. வாரியார் பேச்சு, சமையல் தீயாய் சமைப்பது எல்லாம் அருமை.
    சமையல் புதிதாக கற்றுக் கொண்டு திருமண ஆன புதிதில் கையை சுட்டுக் கொண்டே இருப்பேன்.
    அது இப்போதும் தொடர்கதையாக இருக்கிறது.
    நீ அக்கினி புத்திரியோ! ஆசையாய் மகளை தீண்டி செல்கிறதோ என்று ஜோக் அடிப்பார்கள். அவதி படுவது நான். இப்போதும் வலது கையில் பல புள்ளிக் கோலங்கள் போட்டு இருக்கிறது தீக்காயம். ஒரு காயம் மட்டும் பெரிது.

    பதிலளிநீக்கு
  39. ஆவியின் கனவு சிரிப்பை வரவழைத்து விட்டது.
    ஸ்ரீராம் நடந்து போகிறராரா? நடந்து போவது தலைகீழாவா?
    விழுந்து கொண்டு இருப்பது ஆவியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. One ointment named "Right" contains Alovera. Apply this and you can find immediate relief from burned injuries. Will send you in WhatsApp also

      நீக்கு
    2. கீதா அக்கா...    அவங்க பழையானுபவத்தைச் சொல்றாங்க...   அதன் தழும்பு இப்பவும் இருக்குன்னு சொல்றாங்க...   சரியா கோமதி அக்கா?

      நீக்கு
    3. //பழையானுபவத்தைச்//

      *பழைய அனுபவத்தை 

      நீக்கு
    4. பழைய அனுபவம் மட்டும் அல்ல ஸ்ரீராம், புது அனுபவம். சனிக்கிழமை ஏற்பட்டது. இன்னும் சரியாகவில்லை வலி இருக்கிறது.

      நீக்கு
    5. ஆயின்ட்மென்டை எங்கேயோ வைச்சிருக்கேன். தேடி எடுத்துப் படம் பிடித்து வாட்சப்பில் அனுப்பறேன். நீங்க அனுப்பியதையே இப்போத் தான் காலம்பரப் பார்த்தேன். :)

      நீக்கு
  40. எல்லோர் பின்னூட்டங்களையும் நாளைதான் பொறுமையாக படிக்க வேண்டும்.

    அரட்டை கதம்பம் அருமை.

    இன்று என் மாமியாருக்கு நினைவு தினம். கோவில் வழிபாடு, வீட்டில் பூஜை . அப்புறம் அஷ்டமி சப்பரம், மருத்துவரை பார்க்க போனால் கூட்டத்தைப் பார்த்து விட்டு நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று வந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  41. தெய்வம் தொழாள்.. என்ற குறளுக்கு கலைஞர் அளித்திருக்கும் விளக்கம்.. இதோ..

    தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை.

    கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி
    அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி
    நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக்
    கொள்பவளாவாள்.

    நன்றி - http://www.tamilvu.org

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜூ ஸார்...   வியாழன், வெள்ளி இரண்டுக்கும் சேர்த்து!

      நீக்கு
    2. இதை பா.வெ. பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  42. சகோதரர் கில்லர்ஜீக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  43. அந்த மலர்கள் morning glory ..இது wild வெரைட்டினு நினைக்கிறேன் .இங்கே  ஊதா பிங்க் னு கிடைக்கும் சம்மரில் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு புதரில் வெவ்வேறு வண்ணங்களில் மலர்கள் - சிறு மலர்கள்தான் -  பார்க்க ரம்மியமாய் இருக்கும்!

      நீக்கு
  44. பேச்ச்சு /// ஹாஹா எனக்கும் ஒரு குட்டியூண்டு பிரச்சினை இருக்கு ..எந் வார்த்தையும் முடிக்காமா பாதியிலேயே நிறுத்துவேன் ..:)நிறையபேரை குழப்பிவிட்டிருக்கேன் . முந்தா நேத்து காலை நீங்க ................ இப்படி நிறுத்திடுவேன் ..மற்றபடி பெரிசா பேச மாட்டேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அலுவலகத்திலும், என் உறவிலும் கூட பாதி சொல்லி, பாதி சொல்லாமல் நிறுத்துபவர் இருக்கிறார்கள் ஏஞ்சல்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!