ஒரு குழு பிரிந்து காமாக்யா கோவிலுக்கு சென்றுவிட்டதால்
தாத்தாவுக்கு வேறு வேலை இல்லை. ஜன்னல் வழியே தெரிந்தவற்றை எடுத்துத் தள்ளிவிட்டார் .... கௌஹாத்தி ஹோட்டல் De Saphire மாடியிலிருந்து...
காலை ஐந்தரை ...ஊரே உறங்கிக்கொண்டிருந்தது...
இன்னும் கரும்பு சீசன் ஆரம்பிக்கவில்லை.
கட்டடம் கட்ட அனுமதி வாங்கிவிட்டார்களாம்!
காலையில் சைக்கிள் ஒட்டிப்பழகுகிறார்.
தகரக்கூரை உயர் அழுத்த மின்சாரம் மரம் .....
நம் பார்வையில் சிவப்புச்சட்டைக்காரர் என்னசெய்யப் போகிறார் என்ற ....
ரொம்ப late ஆகப் பார்க்கிறோமோ?
இந்த அம்மாவின் reaction என்ன என்று பார்க்கலாமா?
??
அட இது வேறு குறுக்கே!
இந்த அம்மாவின் reaction ஆவது என்ன என்று பார்க்கலாமா?
இவரும் திரும்பி நடப்பதைப் பார்த்தால்.....
இந்த வழியே புகுந்து ஓடப்பார்க்கிறதுபோல் இல்லை?
கிடைத்த இடத்தில் தண்ணீர் தொட்டி!
சந்தடியில சிவப்பு சட்டைக்காரர் எங்கே போனார் என்று தெரியவில்லையே?
காலை களை கட்டிவிட்டது!
பள்ளி நேரம் நெருங்கிவிட்டது.
இன்னும் கோவிலுக்குப் போனவர்களைக் காணோம்
மறுபடியுமா? நான் வரலை!
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது...
பதிலளிநீக்குவாழ்க நலம்....
வாழ்க நலம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. காலை வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குகாட்சியே கவிதையாக
பதிலளிநீக்குகவிதையே ஆட்சியாக...
வாழ்க அழகின் ஆட்சி!......
நன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குபடக்கதை நன்று ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். காமாக்யா போகலையானு கேட்கணும்னு நினைச்சு நினைச்சு நினைச்சு நினைச்சு! ஒவ்வொரு வாரமும் மறந்துடும். அடுத்த வாரம் காமாக்யா படங்களை எதிர்பார்க்கலாமா?
பதிலளிநீக்குலாமா? தெரியவில்லையே!
நீக்குநன்றி கீதா அக்கா.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் அருமையாக வந்துள்ளன. (யார் அந்த தாத்தாவோ? நன்றி அவருக்கும்.)
கடைசியில் அந்த அம்மாவும், சிகப்பு சட்டைக்காரரும் எதனைத் தேடி அலைகிறார்கள் என்பது தெரியவில்லையே! ஒருவேளை அவர்களே ஒருவருக்கொருவரை காணாமல் தேடிக் கொண்டிருக்கிறார்களோ? அப்படியும் இருக்கலாம்...! "இவரும் திரும்பி நடப்பதைப் பார்த்தால்..." என்ற வரிகளுக்கு காரணம் அவரின் மகனான அந்த சிகப்பு சட்டைக்காரர் கிடைத்து விட்டார் போலும்.. ஹா. ஹா. ஹா.
படங்களும் கேப்ஷன்களும் ஒரு கதையை உருவாக்கி தந்து விட்டன. அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குஇனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநல்லதொரு கதை உருவாகிப் பாதியில் நின்று விட்டது.
வாழ்க்கைப் பயணம் படங்களாக.
நன்றி ஸ்ரீராம்.
நன்றி வல்லிம்மா.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க...
நீக்குபடங்களும் குறிப்பிட்டு இருக்கும் வாசகங்களும் அருமை.
பதிலளிநீக்குகதை உருவாக்க கரு நிறைய இருக்கிறது.
சிறு கதை, குறுங்கதை, எல்லாம் எழுத தெரிந்தவர்கள் எழுத வாய்ப்பு உள்ளது.
ஆஹா... யாராவது எழுதினால் நன்றாயிருக்கும். நன்றி கோமதி அக்கா.
நீக்குபறவைப் பார்வையில் படங்கள் நன்று. இப்படி தெரியாமல் எடுப்பது ஒரு கலை! ஆனால் மனிதர்களை அவர்களுக்குத் தெரியாமல் படம் எடுப்பது கொஞ்சம் ரிஸ்க் ஆன வேலை! ஹாஹா...
பதிலளிநீக்குதொடரட்டும் படங்களும் கருத்துகளும்.
நீங்க வேற வெங்கட்... கேரளா கோவில்களில் கருவறை அமைந்த பகுதி தவிர மற்றவற்றை படங்கள் எடுக்கலாம் என எண்ணியிருந்தேன், திருவனந்தபுரம் போன்ற கோவில்கள் தவிர... நேற்று திருநாவாய் கோவிலில் உள்ளே எடுத்த படங்களை அங்கிருந்தவர் கடு கடு முகத்துடன் மொபைலை வாங்கி ஒவ்வொண்ணா அழித்தார். அதுல வேற, என் கண்ணில் மண்ணைத் தூவி இத்தனை படங்களா என்ற பார்வை வேறு.
நீக்குஉண்மைதான்.. தெரியாமல் எடுப்பது ஒரு கலை. ஆனால் தூரத்தில்தானே படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன...
நீக்குநன்றி வெங்கட்.
ஹா... ஹா... ஹா... நெல்லை... இதே போன்ற ஒரு அனுபவம் சில வருடங்களுக்கு முன் எனக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்டது!
நீக்குதாத்தா கெட்டிக்காரர் தான். ஜன்னல் வழியாகத் தெரிந்த ஒரே இடத்தைப் பார்க்கும் பொழுது இத்தனை கோணங்களா?.. சபாஷ்!
பதிலளிநீக்குநன்றி ஜீவி ஸார்.
நீக்குபடங்களுடன் அதுபற்றிய விவரங்களை குறுஞ்செய்தியாய் வெளியிடலாமே
பதிலளிநீக்குலாம். அவ்வப்போது அப்படியும் செய்திருக்கிறோம்!
நீக்கு