மலர்களே மலருங்கள்
1980 இல் வெளியான திரைப்படம். விஜயன், ராதிகா, சுதாகர், வனிதா நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு இசை கங்கை அமரன். அநேகமாக பாடல்களையும் அவரே எழுதி இருக்கவேண்டும். ஒரு பாரதியார் பாடலும் படத்திலுண்டு. அதுதான் இந்த வாரப் பாடல்.
இந்தப்படத்தில் (எனக்குத்தெரிந்து) மூன்று பாடல்கள். ஜெயச்சந்திரன் குரல் எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவர் குரலில் ஜானகியுடன் இணைந்து பாடி இருக்கும் இந்தப் பாடல் நீலாம்பரி சாயல் அடிக்கிறது. கேட்டுச் சொல்லும் கீதா ரெங்கன் நீண்ட விடுப்பில் இருக்கிறார்.
விஜயனும் ராதிகாவும் நடித்திருக்கும் இந்தக் காட்சியில்
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண் மூடி மௌனமாய்
நாணமேனியில் கோலம் போடும் போது
நாணமேனியில் கோலம் போடும் போது
இசைக்கவோ
ராச லீலை வாசல் திறப்பாய் பூஜை நேரத்தில்
ராக தாள மேடை அழைப்பாய் பாதி ஜாமத்தில்
தேவி வலம் போகும் நாளிலே தேவன் தோளிலே மலர்வேனே
நாதஸ்வரம் பாட தூண்டும் மனம் காண வாழ்த்தவே தருவேனே
சிரிப்பில் புது ராகமாலிகை நீ
நாதஸ்வரம் பாட தூண்டும் மனம் காண வாழ்த்தவே தருவேனே
சிரிப்பில் புது ராகமாலிகை நீ
ரசிக்கவோ நம் கல்யாண ராகம்
கண் மூடி மௌனமாய்
நாணமேனிபில் கோலம் போடும் போது
ரசிக்கவோ
பாதை மூடு ஜாதி மலர் போல் பார்வை ஏங்குதே
ராஜவீதி மார்பில் மலர்வேன் பாரிஜாதமாய்
போதும் இது காதல் போதையே காணும் பூவையே போராடு
மீதி வரும் நாளில் நாமும் திருநாளை காணவே நீயாடு
ரசிப்பில் ஒரு ராஜ பல்லவன் நீ
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண் மூடி மௌனமாய் நாணமேனிபில்
கோலம் போடும் போது ரசிக்கவோ
கோலம் போடும் போது ரசிக்கவோ
ஒரே பாடலில் பழைய நினைவுகள் திரும்பும் வரிசையில் வரும் பாடல் இது.
கே ஜே யேசுதாஸ் - ஜானகி அம்மா குரலில் வரும் பாடல்.
காட்சியில் சுதாகர், வனிதா.
ஞாபகம் இல்லையோ
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில் என் மனம் பாடும் பாடல்
அதில் உன் ஆசையில் என் மனம் பாடும் பாடல்
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ .
ஞாபகம் இல்லையோ .
பாடுவது உனைப் பார்த்தாடும் நெஞ்சம்
பார்வைகளில் பல பாவங்கள் கொஞ்சும்
ஓடும் நீரானதே எண்ணமே ஆ ஆஆஆ…
ஓடும் நீரானதே எண்ணமே
இசை தேவன் சன்னிதி
இசை தேவன் சன்னிதி
அதில் காணும் நிம்மதி
தினம் தேடித்தேடி
தினம் தேடித்தேடி
பாடும் ஏழை மனம் .
நெஞ்சமதில் அந்த நினைவென்னும் வண்ணம்
எண்ணுகின்றேன் அவை அழியாத எண்ணம்
எந்தன் முன் ஜென்மத்தின் புண்ணியம் ஆ ஆஆஆ…
எந்தன் முன் ஜென்மத்தின் புண்ணியம்
உனை காண நேர்ந்தது
உனை காண நேர்ந்தது
இசை பாட சேர்ந்தது
இனி இன்றுபோல
வாழும் என் மனது .
இனி இன்றுபோல
வாழும் என் மனது .
ஞாபகம் இல்லையோ கண்ணா
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில் என் மனம் பாடும் பாடல்
ஞாபகம் இல்லையோ கண்ணா
ஞாபகம் இல்லையோ. ..
ஞாபகம் இல்லையோ கண்ணா
ஞாபகம் இல்லையோ. ..
இரண்டு தினங்களுக்குமுன் கடந்த பாரதியார் பிறந்தநாளை ஒட்டி அடுத்து வரும் இந்தப் பாடல்.
சுசீலாம்மாவின் இனிய குரலில் சுட்டும் விழிச்சுடர்தான்... என் சகோதரிக்கு சிறுவயதில் மிகவும் பிடித்த பாடல். இந்தப் பாடலுக்கு காட்சி எதுவும் இல்லாமல் கானம் மட்டும்...
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி
சோலை மலர் ஒளியோ உனது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடல் அலையே உனது நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரல் இனிமையடி
வாலைக் குமரியடி கண்ணம்மா
மருவ காதல் கொண்டேன்
மருவ காதல் கொண்டேன்
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்து இருப்பேனோ இதோ பார் கன்னத்து முத்தமொன்று
காத்து இருப்பேனோ இதோ பார் கன்னத்து முத்தமொன்று
வணக்கம். பாரதியை நினைத்ததற்கு நன்றி!
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார்... நன்றி.
நீக்குஅறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லால்
பதிலளிநீக்குபிறவாழி நீந்தல் அரிது...
வாழ்க நலம்....
வாழ்க நலம்.
நீக்குதிருவள்ளுவர் வைதீக மதத்தை சேர்ந்தவர் என்றால் பொங்குகிறவர்கள் இந்த குறளை படித்திருக்க மாட்டார்களோ? எனக்கு எதற்கு அக்கப்போர்? பிகில் அமேசான் பிரேமில் வந்து விட்டதாம், அதைப் பார்க்கலாம். ஹி! ஹி!
நீக்குஎன்னுடைய இலவச அமேஸான் காலம் விடைபெற்றுக் கொண்டு விட்டது. காசுகொடுக்க விருப்பமில்லை!
நீக்குஇறைவனது திருவடிகளை மனதில் நிலைநிறுத்தி வணங்குபவர்களை (அதாவது இறைச் சிந்தனையோடு இருப்பவர்களை)த் தவிர மற்றவர்கள் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரை சேர முடியாது. (பிறவிக் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் என்ற குறளின் பொருளும் அதுவே). திருவள்ளுவர் கடவுள் பக்தி உடையவர், வாழ்க்கையைத் தொலைத்த நாத்திகர்களைச் சேர்ந்தவர் அல்லர் என்பதை மட்டும் நாம் தெரிந்துகொள்ள முடியும். எது வைதீக மதம், எது வைதீக மதம் அல்ல என்பதை நான் அறியேன்.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க.
நீக்குசுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
பதிலளிநீக்குசூரிய சந்திரரோ...
மகாகவி வாழ்க....
அவர் புகழ் வாழ்க...
நீக்குஎல்லாமே அருமையான பாடல்கள் ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.... காலை வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... காலை வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், நல்வரவு, பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவணக்கம். வாங்க. நன்றி!
நீக்குதாமதமாகவேனும் பாரதியை நினைத்ததுக்கு நன்றி. பாடலைக் காலம்பரத் தான் கேட்கணும்.
பதிலளிநீக்கு//தாமதமாகவேனும் பாரதியை நினைத்ததுக்கு நன்றி//
நீக்கு:))))
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா...
பதிலளிநீக்கு81 ல் சிங்கப்பூரில் இருந்த போது வானலையில் - மகாகவியின் இந்தப் பாடல் அடிக்கடி தவழும்...
AKOI டேப் ரெகார்டர் 2 in 1 வாங்கிய பிறகு ஓய்வு நேரங்களில் பாடல்களைப் பதிவதுதான் வேலை..
இந்தப் பாடலை மட்டும் இரண்டு மூன்று கேசட்டுகளில் பதிவு செய்து வைத்திருந்தேன்...
Akoi அல்ல AKAI ! Dubai, Hong Kong மார்க்கெட்டுகளில் மிகப் பிரபலமான மாடல். National Panasonic, Sharp, Toshiba -க்களைவிட விலை மலிவு என்பதும் ஒரு காரணம்.
நீக்குதவறைத் திருத்தியதற்கு நன்றி...
நீக்குவிலை மலிவு ஒரு காரணம் என்றாலும்
அதன் வடிவமைப்பு அழகாக இருக்கும்...
ஆம். அப்போது இவை எல்லாமே புகழ்பெற்ற பிராண்டுகள்.
நீக்கு"அக்கோய்" நு என்னைத் தான் கூப்பிடறாரோனு நினைச்சுட்டேன்! :) எங்க வீட்டில் டேப் ரெகார்டர் மத்தவங்க வீட்டிலே பார்த்திருக்கோம், அதிலே பேசச் சொல்லிப் பேசி இருக்கோம். ஆனால் அப்பா வீட்டில் இருந்தவரை ரேடியோவே ஆடம்பரம்! வாங்கியதில்லை. தினசரிப் பேப்பர் கூட அப்பா வாங்க மாட்டார். கல்யாணம் ஆகிக் குடித்தனம் வைச்சப்போத் தான் அவர் புனேயில் பயன்படுத்திய ரேடியோவைக் கொண்டு வந்தார். அதை எப்படிப் போடணும்னு சொல்லிக் கொடுத்தார். அதைக் காலை மங்கள இசையிலே இருந்து காலை ஒன்பதரைக்கச்சேரி முடியும் வரை போட்டுக் கேட்பேன். அப்புறமா மத்தியானம் விவித்பாரதி, இல்லைனா இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தில் மத்தியானம் போடும் ஹிந்திப்பாடல்கள், தமிழ்ப்பாடல்கள்!
நீக்குடேப் ரெகார்டர்னு வாங்கியது எண்பதுகளில் குழந்தைகளுக்கு ஓரளவு விபரம் தெரிந்ததும்! நாங்க அம்பத்தூர் சபா ஒன்றில் உறுப்பினராக இருந்ததால் மாதம் இரு நாடகங்கள், ஒரு கச்சேரி, சொற்பொழிவு, மெல்லிசைக்கச்சேரி ஆகியவற்றிற்கு 2 டிக்கெட் வந்துடும். சில சமயங்களில் நாங்க போகாமல் இன்னொரு டிக்கெட் எடுத்து மாமியாருடனோ அல்லது பக்கத்துக் குடித்தன மாமியுடனே குழந்தைகளை அனுப்பி வைப்போம். அப்போ அவங்க எஸ்.வி.சேகர், கிரேசி மோகன், மெரினா, அப்புறம் அப்போப் பிரபலமாக இருந்த மாஸ்டர் ஸ்ரீதரின் சங்கராசாரியா போன்ற நாடகங்களைப் பார்த்துட்டு அதைக் கேசட்டிலும் கேட்க ஆசைப்பட்டதால் அவங்க கையாலேயே உண்டியலில் பணம் போடச் சொல்லிப் பணம் சேர்த்து வாங்கிக் கொடுத்தோம். அது சுமார் பத்து வருஷங்களுக்கும் மேலாக உழைத்தது. பின்னர் தொலைக்காட்சியில் மெட்ரோ சானல் வந்ததுமே டேப் ரெகார்டரின் மேல் உள்ள ஆவல் மெல்ல மெல்லக் குறைந்து பின்னர் அதை வாங்க ஆளில்லாமல் வாசலில் பழைய பேப்பர்காரரிடம் கொடுத்தோம். பானசோனிக் வாங்கினோம்னு நினைக்கிறேன்.
நீக்குநேற்றைய பதிவுக்கு(ம் சேர்த்து) இங்கே பதிலோ!
நீக்குஆனால் சில அனுபவங்கள் பொதுவாக இருக்கின்றன என்று தெரிகிறது!
இப்படி ரெண்டு மூன்று கேசட்டுகளில் மறுபடி மறுபடி பதிவு செய்து வைத்திருந்த வேறு சில பாடல்களும் உண்டு....
பதிலளிநீக்குஅதெல்லாம் என்ன என்ன என்று கேட்கிறீர்களா!?..
நானொரு பாடலை ஒரு கேசெட் முழுவதும் பதிந்து வைத்திருந்தேன். இன்னொரு சம்பவம். பாஸ் திருமணத்துக்கு முன் என்னிடம் ஒரு கேசெட் பதிவு செய்து தரச்சொல்லிக் கேட்டிருந்தார். நான் அந்த கேசட்டில் லிஸ்ட்டில் இல்லாத பாடலாக கோடீஸ்வ்ரன் மகள் திரைப்படத்தில் எஸ் பி பி பாடும் பாடலை முதல் நாலுவரியை மட்டும் கேசெட்டின் இரண்டு பக்கங்களிலும் ஆரம்பத்திலும் முடிவிலும் ரெகார்ட் செய்து கொடுத்திருந்தேன். கடைக்காரர் முதல் முறை முழுப்பாடலையும் பதிந்து கொடுக்க, நான் மறுபடி அவரிடம் முதல் நான்கு வரி மட்டும் என்று சொல்லி ரீரெகார்ட செய்து கொடுத்தேன்!!!
நீக்குhahahahahahaa secret code?
நீக்குஹிஹிஹிஹிஹி....
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குஇரண்டு பாடல்களையும் கேட்டு வெகு நாள் ஆச்சு.
பதிலளிநீக்குஇன்று இரண்டையும் கேட்டேன்.இனிமையான பாடல்கள்.
நன்றி.
மூன்று பாடல்களாச்சே... இரண்டுதான் கேட்டீர்களா? எதை விட்டீர்கள்?!!
நீக்கு'இசைக்கவோ நம் கல்யாண ராகம்' பாடலை விட்டு இருக்கிறேன்
நீக்குஇப்போது கேட்டேன். இந்த பாடல் கேட்ட நினைவே இல்லை
நன்றாக இருக்கிறது.
ஓ... நன்றி கோமதி அக்கா.
நீக்குஎல்லாமே இனிமையான பாடல்கள். ஞாபகம் இல்லையோவை அடிக்கடி கேட்ட ஞாபகம் இருக்கிறது. சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா என்றதும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஹரிஹரன் பாடியதோ என்று நினைத்தேன். சில பாடல்களுக்கு ஆண்களின் கணமான குரல் வேண்டும். அதுவும் இது ஒரு ஆண் பாடும் பாடல்.
பதிலளிநீக்குவிடமுடியாமல் இந்தப் படத்தின் மூன்று பாடல்களையும் ஷேர் செய்துவிட்டேன். இலலாவிட்டால் சுட்டும் விழிச்சுடர் பாடல் மட்டுமே ஷேர் பண்ண எண்ணியிருந்தேன்! ஹரிஹரன் பாடிய பாடல் ஏனோ எனக்கு ரசிக்கவில்லை! இதே பாடலை எம் கே டி கூட பாடி இருக்கிறார் தெரியுமோ? என் அப்பாவுக்கு அதுதான் ரொம்பப் பிடிக்கும்.
நீக்குT.R. மகாலிங்கம் அவர்களும் பாடியுருக்கின்றற்கள்...
நீக்குஆமாம். என் தந்தை அதையும் கேட்பார். அவர் டிஆர் மகாலிங்கத்தின் பெரும் ரசிகர்!
நீக்குசுட்டும் விழிச் சுடர்தான் - இந்தப் பாடலை பல விதங்களில் பாடமுடியும். சந்தம் அந்த மாதிரி. எனக்கு எம்.கே.டி அவர்களது பாடலும் பிடிக்கும்.
நீக்கு...பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
பதிலளிநீக்குநட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி..//
இதையெல்லாம் அனுபவிக்க கிராமப்புறங்களுக்குத்தான் திரும்பவேண்டும். நகரில் மேலே பார்க்க நேரமில்லை. அப்படித் தப்பித் தவறிப் பார்த்துவிட்டால், கான்க்ரீட் கோபுரங்களின் உச்சிகளுக்கு மேலே, துண்டுவானம் எங்காவது கிடைத்தாலே அபூர்வம்.
அந்தக்காலத்தில் பஞ்சம் அதிகமெனினும், கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்து அவ்வப்போது கிடைத்துக்கொண்டிருந்தது. மனமும் அனுபவிக்கும் வாக்கில் இலகுவாக இருந்தது.
1925 களின் இந்தியச் சூழலை மனதில் நிறுத்த வேண்டும் போல!
நீக்குஇப்போதெல்லாம் கிராமங்களிலும் மெல்ல மெல்ல அடுக்குமாடிக்குடியிருப்புக்கள் ஆரம்பிக்கின்றன.
நீக்கு'இசைக்கவோ நம் கல்யாண ராகம்' பாடல் காட்சியைப் பார்க்கும் பொழுது, தன்னுடைய பழைய படங்களை பற்றி ராதிகா கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது. "என் பழைய படங்களை டி.வி.யில் போட்டால் பார்க்கவே மாட்டேன். சுவற்றில் வெள்ளை அடிப்பது போல முகத்தில் பூசி விட்டிருப்பார்கள். சேனலை உடனே மாற்றி விடுவேன்" என்றிருந்தார். இந்த பாடல் காட்சியில் வரும் அந்த ஸ்லோ மோஷன் டெக்கினிக்கெல்லாம் இப்போது அவுட் டேட்டட் போலிருக்கிறது.
பதிலளிநீக்குராதிகா கூறி இருப்பது சரிதான் என்று தோன்றுகிறது.
நீக்குஅருமையான பாடல்கள்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஅருமையானப் பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குஎன்ன இருந்தாலும் பாரதியார், பாரதியார் தான்!
பதிலளிநீக்குஆமாம்.
நீக்குஇந்த மூன்று பாடல்களும் எனக்கு பிடிக்கும் என்றாலும் சுட்டும் சுடர் விழி கண்ணம்மா என்ற பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குநன்றி ஜோஸப் ஸார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார பாடல் பகிர்வு நன்றாக உள்ளது. மூன்று பாடல்களும் அருமை. இரண்டாவது பாடல் கேட்டதில்லை. முதல் பாடலும், மூன்றாவது பாடலும் கேட்டு ரசித்துள்ளேன். இப்போதும் எல்லாப் பாடல்களையும் கேட்டு ரசித்தேன்.
இந்தப் படமும் இதுவரை பார்த்ததில்லை. நீங்கள் பகிர்ந்துள்ள படங்களை பார்க்கும் போது படம் நன்றாக இருக்கும் போல் தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
எனக்கு கடந்த ஒரு வாரமாக கொஞ்சம் வேலைகள் அதிகம் என்பதால், பதிவுகளுக்கு உடனுக்குடன் வர இயலவில்லை. அதனால்தான் தாமதமாக வருகிறேன். மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.