செவ்வாய், 9 ஜூன், 2020

கேட்டு வாங்கிப்போடும் கதை - புது வீடு - துரை செல்வராஜூ

புது வீடு..  

துரை செல்வராஜூ 

=======


வீட்டினுள் நுழையும் முன்பாகவே உள்ளிருந்து குரல் கேட்டது...

'' இவ்வளவு நேரமா ஆச்சு ரெண்டு இட்டிலி வாங்குறதுக்கு?.... ''

'' சின்னையன் கையில இருந்ததை விட இப்ப கடையில கூட்டமா இருக்கு!... ''

'' அவன் மகன் இட்டிலிக் கடைய நல்லா நடத்துறான் போல...  அதான் கூட்டம் வருது... கரும்பு கட்டோட இருந்தா எறும்பு செட்டோட வரும்..ன்னு சொல்லுவாங்க.... ''

'' அது போகட்டும்... பை என்னா பெருசா இருக்கு?...  உங்களுக்கும் சேர்த்து வாங்கிக்கிட்டீங்களா?...  அங்கேயே ரெண்டு தோசை தின்னுட்டு வந்திருக்கலாமில்லே... ''

'' ராத்திரியில எதுக்குத் தோசை?.. நெஞ்சைக் கரிச்சிக்கிட்டு இருக்கும்... ''

'' சரி... அந்தப் பொட்டலத்தைப் பிரிங்க...  இதென்ன ரெண்டு இட்லிக்கு நாலு சட்டினியா?... ''

''உனக்கு நாலு எனக்கு நாலு வாங்கினேன்!...  ரெண்டு இட்டிலி எந்த மூலைக்கு?... ''





''அதுவும் சரிதான்... தண்ணிய எடுத்து பக்கத்துல வெச்சிக்குங்க...

சற்று நேரத்துக்கு அமைதி...

'' என்ன இது சட்டினியில இருந்து நூல் வருது?... ''

'' பொட்டலம் கட்டியிருந்த நூலைப் பிரிச்சு நான் தான் கீழ போட்டேன்...  அது எப்படி இலையில விழுந்தது?... சரி.. சரி... அத அப்படி ஒரு ஓரமா போடு!... ''

'' இந்த பல்பு வேற மங்கலா எரியுது... வேற புதுசு வாங்கி மாட்டணும்

'' உங்களோட கண்ணாடி கூட ரொம்பப் பழசாப் போச்சு...  என்னைக்குக் கையில காசு வர்றது?... என்னைக்கு கண்ணாடி மாத்துறது?..

'' நீயும் தான் கண்ணாடி போடாமயே காலத்தை ஓட்டிட்டே!..  எத்தனை தடவை நானும் கூப்பிட்டேன் ஆஸ்பத்திரிக்கு வா...ன்னு!.... ''

'' ஏன்?... காசுக்குக் காசும் கண்ணுக்குக் கண்ணும் கோளாறு ஆவுறதுக்கா?.... ''

'' உனக்கு இன்னொரு இட்டிலி வைக்கவா?.... ''

''போதும் போதும்!... நாலு இட்டிலியே ஜாஸ்தி... அந்தக் காலத்துல தேங்கா மூடி கனத்துக்கு இட்டிலி இருக்கும்.. எட்டு இட்டிலிக்கு மேல
சாப்பிடுவீங்க... இப்பத்தான் ஓட்டாஞ் சல்லி மாதிரி ஆக்கிட்டானுங்களே!...''

'' இட்டிலியும் அயிர மீனு கொழம்பு..ன்னா இன்னும் ரெண்டு சேர்த்து
சாப்புடுவீங்க... இப்போ அதெல்லாம் மாறிப் போச்சு... பச்சத் தண்ணியக்
குடிச்சாலே வயித்துக்கு ஒத்துக்கிட மாட்டேங்குது... ''

'' அக்கம் பக்கத்துல நல்ல கொழம்பு வெச்சா நாலு வீட்டுக்குக் கொடுத்துட்டு ஆளும் பேருமா சாப்பிட்ட காலம் எல்லாம் மலையேறிப் போச்சு... இப்போ மக்க மனுசங்க எல்லாம் அடுத்து என்னா நடக்குது..ன்னு தெரியாம அடைக்கோழி மாதிரி... ஆகிட்டாங்க... ''

'' மக்க மனுசங்க..ன்னு பிறத்தியார எதுக்கு குறை சொல்லணும்..  பெத்தெடுத்த புள்ளங்களே எத்தி உட்டுட்டுப் போயிடுதுங்க!... ''

'' சரி.. சரி... ரொம்பப் பேசாம இந்த மாத்திரயப் போட்டுக்கிட்டு தண்ணியக் குடி...  எனக்குக் கண்ணச் சுத்துது... ''

'' அப்படியே பாய விரிச்சுப் போட்டுப் படுங்க... ''

'' நல்லாருக்கு.. சாப்பிட்ட எடத்தை ஒருதரம் கூட்டித் தள்ளாம...  எப்பிடி பாயப் போடறது?... ''

சரட்... சரட்.. - என்ற ஒலி... அடுத்த சில நிமிடங்களில் கோரைப் பாய் -
'படார்' என்று உதறப்படும் சத்தம்...

'' கடவுளே... ஈஸ்வரா... நல்ல தூக்கத்தைக் கொடுங்க சாமியளா!...  ஸ்ஸ்ஸ்.... அப்பா...  இந்த இடுப்பும் முழங்கால் மூட்டும் வலிக்கிற வலி...  சொல்ல முடியலை.. போ!... ''

நெஞ்சின் ஆழத்திலிருந்து ஆற்றாமையும் வேதனையும் வெளிப்பட்டன..

'' அதுவும் ஆச்சு... அறுபத்தேழுக்கு மேல... காலம் பூரா கஷ்டப்பட்ட உடம்பு....  இந்த மட்டுக்கு இருக்குறதே புண்ணியம்.... ''

''ஞாபகம் இருக்கா அஞ்சலை... மாலையுங் கழுத்துமா நீ இந்த வீட்டுக்கு
வந்தப்போ உனக்கு பதினெட்டு கூட முடியலை... ''

'' ஞாபகம் இல்லாமயா இருக்கும்?...  நீங்க மட்டும் என்ன?.. இருவதைக் கூட தாண்டலை!.. ''

''இதான் வாழ்க்கை..ன்னு புரிஞ்சுக்குறதுக்குள்ள மூணு வருசம் ஓடிப் போச்சு..  அதுக்குள்ள பெரியவனும் பொறந்துட்டான்!... ''

பொரட்டாசி கடசீயில பொறந்ததனால கோயிந்தராசு...ன்னு பேரு வெச்சோம்...  ஆனாலும் அந்த அடைமழையில ரொம்பவுந்தான் கஷ்டப்பட்டுட்டான்... ''

'' என்னமோ வாயுன்னு சொன்னாங்க... ராத்திரி பூரா வயித்து வலியால
அழுதுக்கிட்டே இருப்பான்... ''

''ஒருத்தரு மாத்தி ஒருத்தர் மார்... லயும் தோள்.. லயும் போட்டு
தாலாட்டிக்கிட்டு இருப்போம்.... மருந்து அரச்சி மருந்து அரச்சி..  எங்கம்மாவுக்கு கையே கடுத்துப் போய்டும்... ''

'' பத்து நாள் அடைமழையில வீடு வேற ஒருபக்கம் சரிஞ்சு போச்சு...
என்னமோ போங்க... அதெல்லாம் நெனப்பெல்லாம் நெஞ்சுக் குழிக்கு வந்துட்டா அதுக்கு அப்புறம் கண்ணு மூடித் தூங்க முடியாது... ''

''அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுபடிக்க வச்சு ஆளாக்கி வேலையும் வாங்கிக் கொடுத்துட்டு... ''

மீண்டும் சில நொடிகள் அமைதியாக நகர்ந்தன...

அடிப் போடி பைத்தியக்காரி!... நாலு தென்னம் பிள்ளைய நட்டு
வைச்சிருந்தாலாவது லாபக் கணக்கைப் பார்த்துருக்கலாம்...

'' நாம கொடுத்து வெச்சது அவ்வளவு தான்!... ''

மெலிந்த விரல்களால் அருகில் படுத்திருந்த ஆசைக் கணவனின் முகத்தை வருடியபடி தலையைக் கோதி விட்டாள் அஞ்சலை...

'' என்னாது.. அழுவுறீங்களா?.... ''

மூக்கைச் சிந்தியபடி தொடர்ந்தார் பெரியவர்....

'' வேற என்ன பண்ணச் சொல்றே!...  இதுக்குத் தான் நான் பழசை எல்லாம் நினைக்கிறதே இல்லை... ''

'' நீங்க தானே பழைய கதையைக் கிளறி விட்டீங்க!...  ஆயிரம் இருந்தாலும் அவன் நம்ம புள்ளை இல்லையா... ''

'' கோவத்தை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டு நம்ம மருமக.. நம்ம பேத்தி.. ந்னு எடுத்துக்கணும்.. கருகருன்னு சுருட்டை முடி... மூக்கும் முழியுமா செக்கச் செவேல்..ன்னு அன்னக்கிளி மாதிரி இருக்காளாம் உங்கபேத்தி... ''


'' உனக்கு யாரு... சொன்னது?... ''

'' நமக்கும் அவனுக்கும் தான் புடிக்கலை... ஆனா அவன் இந்த மூணு நாலு வருசமா உடம்பொறந்தாளுக்கு தீவாளிக்கு சீரு.. பொங்கலுக்கு சீரு..ன்னு செஞ்சிக்கிட்டு இருக்கான்.. தெரியுமா!... ''

'' பவளம் சொன்னாளா!... ''

'' ஆமாம்!... ''

'' எங்கிட்ட அவ சொல்லவேயில்லை... ''

'' ம்... நல்லாருக்கு கதை... அவம் பேரைக் கேட்டாலே நீங்க சாமி வந்த
மாதிரி ஆடுவீங்க!...  அது தெரிஞ்சு தான் நிதானமா அப்பாக்கிட்ட
சொல்லும்மா..ன்னு... பவளம் சொல்லிட்டுப் போனா... ''

கொஞ்ச நேரத்துக்கு அமைதி...

'' கூரையா இருந்த வீட்டை ஓட்டு வீடா எடுத்துக் கட்டி கரண்டு லைட்டு
எல்லாம் போட்டோம்...  புள்ளைங்களுக்கு அவ்வளவு சந்தோசம்...
மூணு புள்ளைங்களும் ஓடி ஆடுன இந்த வீட்டுல பேரப் புள்ளைங்களுக்கு கொடுத்து வைக்கலே... அதுங்களோட ஆட்டம் பாட்டத்தைப் பார்க்க மாட்டோமா...ன்னு இருக்கு... ''

நடுங்கிய குரலில் ஏக்கம் மேலிட்டு வழிந்தது..

'' பெரியவன் தான் இந்தப் பக்கம் வர்றதே இல்லை... பவளமும் சின்னவனும் ஆடிக்கொரு தரம்.. அமாவாசைக்கு ஒருதரம்... அப்படியே வந்தாலும் ஒரு மணி நேரம்.. இல்லேன்னா ரெண்டு மணி நேரம்..  அவ்வளவு தான் நாம கொடுத்து வைச்சது... ''

'' என்னைக்காவது ஒரு நாள் பெரியவன் நிச்சயம் வருவான்...  எதையாவது சொல்லி அவனை விரட்டி விட்டுடாதீங்க... ''

'' இது மட்டுந்தான் ஆசையா... வேறெதுவும் இருக்குதா?..''

"சொல்லவா?.. திகைச்சுப் போய்ட மாட்டீங்களே!..''

"சொல்லு!.." 

"ஒருத்தரு இல்லாம ஒருத்தர் தவிக்கப்படாது!..  சாமி நின்னு வரங் கொடுக்கணும்!... ''

'' புள்ளைங்க தவிச்சுப் போய்டுவாங்களேடி!...''

'' என்னமோ.. மனசு தான் கிடந்து அப்படியும் இப்படியுமா அல்லாடுது...''

'' சரி.. சரி.. கொஞ்ச நேரம் கண்ண மூடித் தூங்கு...  நடுச் சாமத்துக்கு மேல ஆச்சு... ''

எங்கோ தூரத்தில் முதல் கோழி கூவும் சத்தம் கேட்டது...

'' இனிமே எங்கே தூங்குறது... பொழுது தான் விடியப்போகுதே...  எந்திருச்சி கொஞ்சம் வற கசாயம் போட்டுத் தர்றேன்.. குடிக்கிறீங்களா?.. ''

'' அது எதுக்கு!... வெறும் வயத்துல வற கசாயம் வேணாம்... பக்கத்துல காசிச் செம்புல தண்ணி இருக்கு.. அத எடு.. கொஞ்சம் குடிச்சிக்கறேன்...

'' நீங்க... எங்கே கிளம்புறீங்க?... இந்தப் பனியில!.. ''

அப்படியே காலார நடந்துட்டு வர்றேன்!...''

'' சரி.. தலையில மப்ளரை சுத்திக்கிட்டுப் போங்க!... ''

வெளி நடையில் செருப்புகளை மாட்டிக் கொண்டு நடக்கும் சத்தம் கேட்டது...


************
பொழுது புலர்ந்து கொண்டிருந்த வேளையில் - நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்த கணேச மூர்த்தியை நெருங்கிய அவர் -

'' சார்.. வணக்கம்... நான் உங்க பக்கத்து வீடு... பாலகிருஷ்ணன்...  நேத்து கூட கிரகப் பிரவேசத்துக்கு வந்திருந்தேன்... ''

'' வணக்கம் பாலகிருஷ்ணன் சார்...  நேத்து உங்களோட ரொம்ப நேரம் பேச முடியலை!... ''

'' எப்படி சார் இருக்கு புது வீடு?.... ''

'' எங்கே சார்... ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லை... ''

'' புது இடம் தானே... அப்படித்தான் இருக்கும்!... ''

'' அதெல்லாம் இல்லை பாலன்... ராத்திரி பூரா யாரோ வயசானவங்க ரெண்டு பேர் பேசிக்கிற மாதிரி... எனக்குத்தான் பிரமை..ன்னு நினைச்சா மகளும் அப்படியே சொல்றா.. வீட்டுலயும் அப்படியே சொல்றாங்க!... ''

'' சரிதான்... உங்களுக்கு முன்னால இந்த வீட்டுக்கு வந்தவங்களும் இதையே சொல்லிட்டு வீட்டைக் காலி பண்ணிட்டுப் போய்ட்டாங்க... இப்போ நீங்க இரண்டாவது!.. ''.

'' ஆமா... இது என்ன மாதிரியான கதை?... ''

'' கதை இல்லை இங்க... பதினைஞ்சு வருசத்துக்கு முன்னால உங்க மனையில பழைய காலத்து ஓட்டு வீடு.. அதுல வயசான ஐயாவும் அம்மாவும் இருந்து கஷ்டப்பட்டு அநாதரவா போய்ச் சேர்ந்துட்டாங்க... எப்படியோ வாரிசுகளைக் கண்டு புடிச்சி கிரயம் பண்ணி அந்த இடத்துல தான் இந்த வீட்டைக் கட்டி வித்து இருக்கானுங்க.. அந்த ஐயாவும் அம்மாவும் தான் ஆவியா வந்துட்டுப் போறதா பேச்சு..''

'' பாருங்க... இதெல்லாம் தெரியாம வீடு நல்லா இருக்குதே... -ன்னு
வாங்கிட்டோம்!... ''

'' இப்படித்தான் ரொம்பப் பேர் விவரம் தெரியாம வாங்கிட்டுக்
கஷ்டப்படுறாங்க.. பயமா இருக்குது... பிடிக்கலை.. ன்னா சொல்லுங்க... கை மாத்திடுவோம்... பத்திரச் செலவு போனா போகட்டும்... நமக்கு நிம்மதி தான் முக்கியம்.. என்ன நான் சொல்றது!... ''

'' நான் ஒரு யோசனை செஞ்சிருக்கேன் பாலன்!... ''

'' என்னது?... ''

'' நாளைக்கே திருவையாற்றுக்குப் போய் அவங்க ரெண்டு பேருக்கும் திதி கொடுத்து மோட்ச தீபம் ஏத்தி வைக்கிறது...ன்னு.... ''

'' அப்படி வைச்சா!... ''

'' முகந் தெரியாத அவங்களை நம்ம வீட்டுப் பெரியவங்களா ஏத்துக்கிட்டு... திதி, தீர்த்தம், அன்ன தானம்... ன்னு கொடுத்தா அவங்களோட ஆத்மா சாந்தியடைஞ்சிடும்!... ''

'' அதுக்கு மேல அவங்க அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்குனதா சொல்றீங்க!...  பிறத்தியார் மேல பிரியம் காட்டுறது தான் நமக்கு கை வந்த கலையாச்சே!...  ஆளுங்க மேல காட்டுற பிரியத்தை ஆவிகள் மேல காட்டுவோம்!...  அதுக்கு மேல என்ன பிரச்னை!... ''

- கணேச மூர்த்தி சிரித்தார்...

' இந்த ஆளும் பயந்து ஓடி விடுவான்!... அடாவடியாய் அடித்துப் பேசி
குறைந்த விலைக்கு வீட்டை வாங்கி விடலாம்!... ' - என்று நினைத்திருந்த பானா கீனாவின் மனக்கோட்டை காற்றில் கரைந்து கொண்டிருந்தது...


============================

86 கருத்துகள்:

  1. நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறள் 469:
      நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
      பண்பறிந் தாற்றாக் கடை.


      மு.வரதராசன் விளக்கம்:
      அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

      நீக்கு
    2. குறள் விரிவுரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. இன்று எனது கதையைப் பதிவு செய்திருக்கும் அன்பின் ஸ்ரீராம் மற்றும் அன்பின் KGG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...
    மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கும் அதே மகிழ்ச்சி.  நன்றி.  ஆதரவு தொடரட்டும்.

      நீக்கு
    2. எங்களுக்கும் அதே மகிழ்ச்சி. நன்றி. ஆதரவு தொடரட்டும்.

      நீக்கு
  4. கதைக் களம் காண வரும்
    அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  5. உண்மையில் இட்லி சட்னியைக் கண்டதும் பரவசமாக இருக்கிறது...

    இங்கிருந்த தமிழக உணவகங்கள் மூடப்பட்டு நூறு நாட்களுக்கும் மேல் ஆகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் அன்பு துரை, அன்பு ஸ்ரீராம்.இனி வரப் போகிறவர்களுக்கும் இனிய நாளாக இருக்கட்டும்.
      மானம் என்ற தலைப்பில் குறள்கள்
      படித்துக் கொண்டிருந்தேன்.
      உணவுக்காக ஒருவரை அண்டிப் பிழப்பவர் மானம் இல்லாதவர்
      என்ற பொருளை எடுத்துக் கொண்டு வந்தால்
      இங்கே துரையின் கதை.

      அண்டி வாழாமல் அன்பு காணாமல் ஏங்கி இறைவனடி சேர்ந்திருக்கிறார்கள்.

      துரையின் கதை மாந்தர்கள் தவறாகவே
      இருக்க மாட்டார்களே என்று நினைத்தேன்

      நீக்கு
    2. '' கோவத்தை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டு நம்ம மருமக.. நம்ம பேத்தி.. ந்னு எடுத்துக்கணும்.. கருகருன்னு சுருட்டை முடி... மூக்கும் முழியுமா செக்கச் செவேல்..ன்னு அன்னக்கிளி மாதிரி இருக்காளாம் உங்கபேத்தி... '///இதுதான் துரையின் அழகு எழுத்து.

      நீக்கு
    3. ஆம்; சிறப்பான வார்த்தைச் சித்திரங்கள்!

      நீக்கு
    4. >>> துரையின் கதை மாந்தர்கள் தவறாக இருக்க மாட்டார்கள்.. - என்று நினைத்தேன்... <<<

      நீங்கள் அப்படி நினைத்திருந்தாலும்
      கதைகள் ஒரே பேட்றனில் இருப்பதாக வரும் கருத்துரைகளுக்காக
      சற்றே சில மாற்றங்கள்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாமல் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்கும்படிப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. கதை அருமை. ஆனால் இதே கருவை நிகழ்வாகவும் கேள்விப் பட்டிருக்கேன். எந்த ஊர்னு நினைவில் இல்லை. இருந்தாலும் வெளியில், பொதுவில் சொல்ல முடியாது. மூத்த பிள்ளைதான் அப்பா, அம்மா வேண்டாம்னு போயிட்டார். மத்த இரண்டு பேரும் வந்து போய்க் கொண்டிருந்தவங்க! அவங்க மனசும் கல்லாக ஆகிவிட்டது போல! வரும் காலம் இப்படித் தான் இருக்குமோ என்னும் எண்ணமும் வந்தாலும் கணேசமூர்த்தி போல் ஈரமுள்ள மனசுக்காரங்க இருக்கிறவரைக்கும் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      >>> மூத்த பிள்ளைதான் அப்பா, அம்மா வேண்டாம்னு போயிட்டார். மத்த இரண்டு பேரும் வந்து போய்க் கொண்டிருந்தவங்க! ... <<<

      அந்தந்த மாட்டுக்கும் அதனதன் சுமை!..
      என்ன செய்வது?...

      கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  9. பாலகிருஷ்ணனே அந்த வீட்டை வாங்குவதற்காக இப்படி ஒரு புரளியைக் கிளப்பி விட்டிருக்கலாமோ என்னும் எண்ணமும் வருகிறது. எது எப்படியானாலும் அமைதியற்ற அந்த இரு ஆன்மாக்களுக்கும் நற்கதி கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த முதியோரை நினைத்து மனம்கசிகிறது.
      இத்தனை முதியோர் இல்லங்களைப் பார்த்தால்
      இதைப் போன்ற கதைகளின் பின்னணி
      உண்மைதான் என்று எண்ணத் தோன்றுகிறது.

      அந்த இட்லிச் சட்டினி படம் சிறப்பு.
      சரவணபவனோ?

      பால கிருஷ்ணன், கணேச மூர்த்தி சம்பாஷணை சுவை.
      கணேச மூர்த்தியின் தாராள மனது அந்த முதியோரைக் கரை
      சேர்க்கட்டும்.
      ஒரு நல்ல கதைக்கு மிக நன்றி துரை செல்வராஜு.

      நீக்கு
    2. பா கி - புரளியைக் கிளப்பினாலும் உரையாடல்களைக் கேட்டவர் க மூ அல்லவோ? அது எப்படி சாத்தியம்?

      நீக்கு
    3. பொதுவாக ஒரு புரளியிருந்தாலும் கண்ணு மூக்கு வைத்து கிளப்பி விடவும் வாய்ப்புகள் அதிகம்...

      இங்கே பானா கீனா புரளி கிளப்பி விடவில்லை...
      குடித்தனத்தைக் கிளப்பி விட முயற்சிக்கிறார்...

      தங்களது மீள் கருத்துரையும் வல்லியம்மா அவர்களின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்


    //'' என்னமோ வாயுன்னு சொன்னாங்க... ராத்திரி பூரா வயித்து வலியால
    அழுதுக்கிட்டே இருப்பான்... ''//

    என் பேத்திக்கு இருந்தது பிறந்த கொஞ்ச நாளில். பிரளய வாயு என்று அக்கம் பக்கத்தில் சொன்னார்கள்.
    இரவு தொடர்ந்து அழுவாள், வயிற்றை அணைத்தார் போல் வைத்துக் கொண்டு தூக்கி கொண்டு நடப்போம் ஒருவர் மாற்றி ஒருவர் அவள் தூங்கும் வரை.
    நிறைய பிரார்த்தனைகள் இறைவனிடம் செய்தோம்.இறைவன் அருளால்
    டாக்டர் சொட்டு மருந்து கொடுத்தார் அப்புறம் சரியாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      எனக்கும் இப்படி இருந்ததாம்...
      என் மகனுக்கும் இப்படி புரளி வாயு...

      பேத்திக்கும் சில வாரங்கள் இப்படி இருந்து இப்போது நலம்...

      நீக்கு
  11. //"ஒருத்தரு இல்லாம ஒருத்தர் தவிக்கப்படாது!.. சாமி நின்னு வரங் கொடுக்கணும்!...// ''


    நல்ல கதை . கணவன் மனைவி உரையாடல் நன்றாக இருக்கிறது.
    ஒவ்வொரு வீட்டிலும் தனிமையில் இருக்கும் வயது ஆனவர்கள் உரையாடல் இது போல்தான் இருக்கும் .


    //'' முகந் தெரியாத அவங்களை நம்ம வீட்டுப் பெரியவங்களா ஏத்துக்கிட்டு... திதி, தீர்த்தம், அன்ன தானம்... ன்னு கொடுத்தா அவங்களோட ஆத்மா சாந்தியடைஞ்சிடும்!... ''

    '' அதுக்கு மேல அவங்க அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்குனதா சொல்றீங்க!... பிறத்தியார் மேல பிரியம் காட்டுறது தான் நமக்கு கை வந்த கலையாச்சே!... ஆளுங்க மேல காட்டுற பிரியத்தை ஆவிகள் மேல காட்டுவோம்!... அதுக்கு மேல என்ன பிரச்னை!... ''//

    கணேஷ மூர்த்தியின் மனது நல்ல மனது.
    அந்த பெரியவர்கள் ஆசி கணேஷ் மூர்த்தி குடும்பத்திற்கு கிடைக்கட்டும்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      >>> அந்த பெரியவர்கள் ஆசி கணேசமூர்த்தி குடும்பத்திற்கு கிடைக்கட்டும்.. <<<

      கண்டிப்பாகக் கிடைக்கும் அதில் ஐயமில்லை...
      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. ’புதிய’வா, ’புது’ வா ? இது எபி- தந்த குழப்பம் என்று நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது கதை,
      புதுக்கவிதை!
      இலக்கணங்கள்
      இதற்கு இல்லை!

      நீக்கு
    2. குறிப்பிட்டது இலக்கணத்தை அல்ல!
      மேலே காணப்படும் ‘தலைப்புகளில்’ ஏதாவது ஒன்றை (புது அல்லது புதிய) காண்பித்தால் போதாதா.. அதுல வாசகர்களுக்கு ‘சாய்ஸ்’ வேறயா என்பதே கேள்வி!

      நீக்கு
  13. ..ஆளுங்க மேல காட்டுற பிரியத்தை ஆவிகள் மேல காட்டுவோம்!//

    ஆஹா.. அருமையாகச் சிந்தித்தால் ஆவிகளும் நம் வசம்தான்!

    பதிலளிநீக்கு
  14. மனதில் நெகிழ்வை உண்டாக்கிய கதை...

    பல இடங்களில் இப்படி தான் நடக்கிறது...


    கடவுளே நாங்கள் அப்படி இல்லாமல் எங்கள் வீட்டு பெரியோர்களை அன்பாய் பேண வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> கடவுளே நாங்கள் அப்படி இல்லாமல் எங்கள் வீட்டு பெரியோர்களை அன்பாய் பேண வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை... <<<

      எனது பிரார்த்தனையும் இதுவே..

      அன்பின் வருகையும் கருத்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் இன்றைய கதை மனதை தொட்டது .. அவர் இதுவரை எழுதும் கதைகள் அனைத்துமே மனதை தொட்டு, இறுதியில் மனம் மகிழும்படியாக சுபத்துடன்தான முடியும்.ஆனால் இந்த தடவை வித்தியாசமான பாணியில் மிக நன்றாக உள்ளது.

    கணவன் மனைவியின் பேச்சுக்கள் அவர்களின் பரஸ்பர அன்பை காட்டுகிறது. மூன்று குழந்தைகள் பிறந்தும் கடைசி காலத்தில் யாருமற்ற நிலை கண்களை கலங்க வைத்தது.

    அவர்களின் ஆவிகள் பேசிக் கொள்வதை உணர்ந்து தெரிந்த பின் கணேசமூர்த்தி தான் ஒரு மகனாய் இருந்து அவர்களுக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை செய்ய முடிவெடுப்பது நல்ல முடிவு. இறந்த பின்னராவது அவர்களை கவனிக்க ஒரு சொந்தம் உருவானதை கண்டு அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். ஒரு உண்மை நிகழ்வை உணர்ந்த மாதிரியான கதைகளை எழுத துரை செல்வராஜ் சகோவால்தான் முடியும். சகோதரருக்கு என் அன்பான வாழ்த்துகளும், பாராட்டுக்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. சில முதிர்ந்தவர்கள் வாழ்க்கையும் இதேபோல்தான் அமைந்து விடுகிறது என்பது துக்கம். நல்ல ஒரு கதை கரு நன்றாக சொல்லிக்கொண்டு செல்கிறார் வாழ்த்துகள். சுவாரசியமான முடிவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் கருத்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. நிகழ்வு என்று மனம் கனத்து படித்த வேளையில்... திடீர் திருப்பம்.

    பல வீடுகளிலும் இந்த முணங்கல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. >>> பல வீடுகளிலும் இந்த முணங்கல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது..<<<

      இது தான் கதைக்கு அடிப்படை...

      நீக்கு
  18. ஆவிகளுக்கு பயப்படாத பாலகிருஷ்ணனின் அருவருப்பான ஆசை நிறைவேறி...

    சில வருடங்களுக்கு பின்... பதிவின் முதல் வரியான...

    வீட்டினுள் நுழையும் முன்பாகவே உள்ளிருந்து குரல் கேட்டது...

    (!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      ஆவிகளுக்கு பயப்படாத பாலகிருஷ்ணனின் அருவருப்பான ஆசை நிறைவேறி...
      சில வருடங்களுக்கு பின்... பதிவின் முதல் வரியான...
      வீட்டினுள் நுழையும் முன்பாகவே உள்ளிருந்து குரல் கேட்டது...

      (!)

      வித்தியாசமான கோணம்... அருமை.. அருமை..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  19. எப்போதும் சுபமாக எழுதும் துரை செல்வராஜீ சார் இந்த முறை சற்று வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார். எளிய உரையாடல்கள் மூலம் கதையை நகர்த்துவது துரை சாருக்கு கை வந்த கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பிப்ரவரி மாதம் அனுப்பிய கதை...

      இதற்கு முந்தைய கதைக்கே வானவல்லி சொல்லியிருந்தார் ஒரே மாதிரி என்று...
      இன்றைக்கு அவரை இன்னும் காணவில்லை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. ஹா ஹா ஹா வந்துவிட்டேன் துரை அண்ணன்... கொஞ்சம் லேட்டூஊஊஊஉ:))

      நீக்கு
    3. வானவல்லி..
      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  20. என் மகள் கைக்குழந்தையோடு முதன்முதலாக தனிக்குடித்தனம் போன வீட்டில் வயதான ஒரு தம்பதி நோய்வாய்ப்பட்டிருந்து இறந்து போனார்களாம். அங்கு சில அமானுஷ்ய அனுபவங்களை அனுபவித்ததால் வீட்டை மாற்றி விட்டார்கள். அந்த வீட்டில் யாரும் தொடர்ந்து வசித்ததில்லை என்றும் கேள்விப் பட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான அமானுஷ்ய நிகழ்வுகள் பரவலாகப் பேசப்படுவது தான்..

      ஆனாலும் ஆறு, குளங்களை வசப்படுத்தி மனை போட்டு வீடு கட்டுமிடங்களில் பழைமையான மயானங்கள் கூட மறைக்கப்பட்டு விடுகின்றன...

      இப்படியான கால கட்டத்தில் வாழ்ந்து நிறைந்த பழைய வீட்டை கதைக் கருவாக எடுத்துக் கொண்டேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. பானா கீனாவின் அக்கறையைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கும்; இவரு வேறே மாதிரி கதையைக் கொண்டு போகிறாரே என்ற நினைப்போடையே கதையைப் படித்து முடித்தால், நீங்களும் அப்படியே முடித்திருந்ததில் இரண்டு பங்கு திருப்தி!

    'துரை சாரின் கதையா?.. இப்படித்தான் இருக்கும்' என்று யாரும் முன் கூட்டியே யூகித்து விட முடியாதபடிக்கு அடிக்கடி எழுது பொருளை மாற்றிக் கொண்டே இருங்கள்.
    ஆலோசனையோ வேண்டுகோளோ -- சொல்லத் தோன்றியது.

    அடுத்த கதைக்குக் காத்திருக்கிறேன், ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜீவி ஐயா..

      >>> துரை சாரின் கதையா?.. இப்படித்தான் இருக்கும்' என்று யாரும் முன் கூட்டியே யூகித்து விட முடியாதபடிக்கு...<<<

      தங்களது ஆலோசனைக்கு மகிழ்ச்சி ஐயா..

      மார்ச்/ ஏப்ரலில் எழுதப்பட்டு அடுத்ததாக வரவிருக்கும் சில கதைகள் வித்தியாசமாக இருக்கும் என்பதை தங்களிடம் மட்டும் ரகசியமாக சொல்லி வைக்கிறேன்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. மார்ச்/ ஏப்ரலில் எழுதப்பட்டு அடுத்ததாக வரவிருக்கும் சில கதைகள் வித்தியாசமாக இருக்கும் என்பதை தங்களிடம் மட்டும் ரகசியமாக சொல்லி வைக்கிறேன்...//

      ஹா ஹா ஹா ஹா இது ரகசியம்?!! இதையும் ரகசியாமாவே வைச்சிருக்கலாமே துரை அண்ணா!! ஓகேன்னு சொல்லி...

      கீதா

      நீக்கு
    3. எதையும் ஒளிக்கத் தெரியாத
      அன்பு மனசு தி. கீதா!!

      நீக்கு
  22. சுவையான இட்லியுடன் துவங்கிய கதை சுவையாகவே முடிந்திருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  23. அன்பின் வெங்கட்...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  24. //'துரை சாரின் கதையா?.. இப்படித்தான் இருக்கும்' என்று யாரும் முன் கூட்டியே யூகித்து விட முடியாதபடிக்கு அடிக்கடி எழுது பொருளை மாற்றிக் கொண்டே இருங்கள்.//
    நான் சொல்ல நினைத்ததை ஜீவி சார் சொல்லி விட்டார்.
    துரை சார் அருமையான கதையானாலும் முகத்தில் அறைவது போல் முதியவர்களின் நிலையை சித்தரித்திருக்கிரீர்கள். ஆனால், இந்நாட்களில் நாமேதான் நம் பிள்ளைகளை வெளிநாடு அனுப்புகிறோம். அவர்கள் சட்டென்று வர முடியாது என்று தெரிந்தும் அனுப்புகின்றோம். நமது பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக உருவெடுக்க வேண்டிய மட்டும் செய்து விட்டோம். இனி யாவையும் நாராயணன் செயல் என்று பழகிக் கொள்ள வேண்டியதுதான்.
    மறுபடியும் வாழ்த்திக் கூறுகிறேன். அம்ஸமானக் கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்த ஒருவர், தன் பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பத் துணியவில்லை. நீன் சொன்னேன், மனைவி இங்க வேலை பார்க்கிறா, நாலு வருடம் போய் மேற்படிப்பு, இரண்டுவருட வேலை பார்த்துவிட்டு இங்க வந்துட்ட்டுமே என்றால், தங்களுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் பென்சன் வரும், பையன் கூட இல்லாமல் தனியாவா இருக்கணும், எங்க காலம் வரை அவங்க எங்களோடே இருக்கட்டும் என்றார். எனக்கு அது சுயநலமாகத் தெரிந்தது என்றாலும், அவர் மீதும் குறை சொல்லமுடியாது எனத் தோன்றியது.

      நீக்கு
    2. அன்பின் ரமா ஸ்ரீநிவாசன் அவர்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

      இருவேறு இயல்பினதாக இவ்வுலகில்
      இருந்த இடைவெளி இப்போது அதிகமாக ஆகி விட்டது..

      எல்லாவற்றுக்கும் நாமே காரணம்...

      நீங்கள் செல்வதைப் போல
      நடப்பது நாராயணன் செயல்...
      என்று அமைதியுற வேண்டியது தான்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
    3. அன்பின் நெல்லை...

      /// எங்க காலம் வரைக்கும் எங்களோடே இருக்கட்டும்...///

      இப்படியான பெரியவர்களும் இருந்திருக்கிறார்கள் தானே...

      இதுவும் இயல்பே... பிள்ளைகள் புரிந்து கொண்டால் சொர்க்கம் தான்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு
  25. ஒருவர் எழுத்து அவரை அடையாள்ப்படுட்டுவது அவரடு பாட்டெர்ன் தான் தை ஏன் மாற்ற வேண்டும் துரையின் கதா மாந்தர்கள் மாறினால் என்னவோ போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...
      அவரவர் ஏறிக் கொண்ட படகில் அவரவர் பயணம்.. யாரைக் குறை சொல்வது!..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...
      கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு
  26. அருமையான கதை. வயாதனவர்களை நினைத்து வருத்தம்.

    பிள்ளைகள் அப்படி ஆகக் கூடாது என்றாலும் ஆக வாய்ப்பு உண்டு என்று பெற்றோர்கள் அதற்குத் தயார்ப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் போல.

    வாழ்த்துகள் துரை செல்வராஜு சார்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்...

      // பெற்றோர் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்..//

      கால சூழ்நிலையின் கட்டாயம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  27. கதையில் கடைசியில் ஒரு சின்ன திருப்பம்...பாலகிருஷ்ணனின் பேச்சு யூகிக்க முடிந்தது...நல்ல காலம் கணேச மூர்த்தி அழகா சொல்லி அவருக்கு செம ஆப்பு வைச்சுவிட்டார். நல்ல முடிவு துரை அண்ணா. இது கொஞ்சம் வித்தியயசமாக இருந்தது துரை அண்ணா. அழகா எழுதியிருக்கீங்க எதிர்பாரா திருப்பம் கடைசியில் உரையாடல்கள் வெகு யதார்த்தம்

    சூப்பர்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா ..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      பானா கீனா மாதிரியானவர்கள் தாம் நம்மைச் சூழ்ந்திருக்கிறார்கள்...

      நாம் தான் நமது யுக்தியால் தப்பிக்க வேண்டும்....

      அன்பின் கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு
  28. வெளியே செருப்பு மாட்டிக்கொண்டு கிளம்புகிறார் - இது வரைல கதை நல்லா வந்திருக்கு. ஏதோ ஒரு திருப்பத்தில் எந்த விதமான திருப்பங்களோடும், பேசிக்கொள்ளும் நிலைக்காவது போவதுபோல முடித்திருக்கலாம்.

    கதை யூ டர்ன் எடுத்துவிட்டது.

    காலையிலேயே படித்துவிட்டேன். கதை ரசிக்கும்படித்தான் இருந்தது. கதைல இயல்பு வரலையோ என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      பெரியவர்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டதாகச் சொல்லி விட்டேனோ?...

      சில தந்தைகளின் அவசர குணம்..
      முடிவு சுபமாய் இருப்பதில்லை...

      ஏதோ ஒரு தரப்பில் துன்பம்.. துயரம்...
      அடுத்து வரும் கதைகளில் பார்க்கலாம்...

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  29. பிள்ளைகள் தம்மோடயே இருக்கணும்னா, ஒன்று எல்லோரும் விவசாயம், கிராம்ம்னே இருந்திருக்கணும். இல்லைனா பையன் தலையெடுத்துவிட்டால் அவன் குடும்பத்தோடு ஒட்டியிருக்கவேண்டும். இனி அவன் ராஜ்ஜியம் என்ற எண்ணம் வரவேணும். நாமே ஸ்டீரிங்கைப் பிடித்துக்கொள்வோம் என நினைத்தால் வாழ்க்கை ஒட்டாது. அப்புறம் ஔரங்கசீப் வளத்த பிள்ளைகள் மாதிரி அப்பாவிடம் பயம் இருக்கும், அன்பு இருக்கவே இருக்காது என்றாகிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      பிள்ளைகளை ஆளாக்கி வழக்கமான வாழ்க்கை வட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்ட பிறகு நெஞ்சில் இருக்கும் தைரியம் எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான்...

      பிள்ளைகள் தம்முடன் இருந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் விஷயம் எல்லை மீறி நிற்கிறது.. என்ன செய்வது?.

      தங்களது கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு
  30. பதிவை வாசிக்கும்போது இங்கே (பிரிட்டனில்) இரவு 10.45, இட்லியை கண்டவுடன் மீண்டும் பசி எடுத்தது.

    கோ.

    பதிலளிநீக்கு
  31. ஆவ்வ் என்னால நேற்று எங்கும் வரமுடியாததாய்ப் போய் விட்டது, நைட்டாவது வர நினைச்சேன்ன்.. அதுவும் முடியவில்லை...

    கதை இம்முறை வித்தியாசமாக எழுதிட்டார் துரை அண்ணன்... ஹா ஹா ஹா நன்றாக இருக்கு.

    மனைவி இருக்கும்வரைதான் ஆண்களின் வாய் எல்லாம்:)) மனைவி இருக்கும்போதுதான் தனக்கு ஒரு துணை இருக்குது எனும் தைரியத்தில் பிள்ளைகளைத் திட்டுவினம்... மனைவி இல்லை எனில், பெட்டிப்பாம்பாகி விடுவார்கள் வயசான காலத்தில் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      தங்களது கருத்து நியாயம் தான்....

      இனி அவ்வப்போது இப்படியான கதைகளும் வரக்கூடும்..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  32. அந்த இட்லியும் சட்னியும் தான் சாப்பிட்டவையோ.. பார்க்கவே பசிக்குதே.. இதில நாலூஊஊஊஊஊ பத்தாதூஊஊஊஊஊ ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலு இட்டிலி பத்தாதா!..
      அருமையத்தான் இருக்கு...
      அடுத்த வாரம் கேட்டுப் பார்ப்போம்!..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!