திங்கள், 17 பிப்ரவரி, 2020

திங்கக்கிழமை  :  'நம்ம வீட்டு' மிளகுக்குழம்பு! - ரமா ஸ்ரீனிவாசன் ரெஸிப்பி 

என் வீட்டில் என் பெண் குழந்தைகள் இருவரும் வீட்டில் சமைத்த உணவை விரும்பி சாப்பிடுபவர்கள்.  எனவே, மிக உற்சாகத்துடன் நான் சமைத்து பரிமாறுவேன்.  எங்கள் வீட்டு வழக்கப்படி சமைக்கும் சில சமையல் குறிப்புகளை இங்கு படிப்படியாக பகிர்ந்து கொள்கிறேன்.

இதுதான் என் முதல் சமையல் குறிப்பாகும். உங்கள் கருத்துக்களை தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளுங்கள். அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.    



நம்ம வீட்டு மிளகுக்குழம்பு!

தேவையான பொருட்க்கள் : (நான்கு பேருக்கு)
து. பருப்பு :  1 டேபிள் ஸ்பூன்
க. பருப்பு :  1 டேபிள் ஸ்பூன்
உ. பருப்பு :  1 டேபிள் ஸ்பூன்
மிளகு     :  1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் : நான்கு
புளி       : ஒரு எலுமிச்சம்பழ அளவு
உப்பு            : சுவைக்கேற்ப
வெல்லம் : ஒரு சிறு கட்டி (வேண்டுமானால்)

முதலில், வாணலியை நன்றாகச் சுட வைத்து, மிளகு, து.பருப்பு, க.பருப்பு, உ..பருப்பு, மிளகாய் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை 4 டேபிள் ஸ்பூன்  எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.





பின்னர், வேண்டிய அளவு உப்பையும் புளியையும் இவைகளுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் ஒரு பேஸ்ட் அளவிற்கு அரைத்துக் கொள்ளவும்.



இப்பொழுது, நான்கு டம்ளர் தண்ணீரை அதே வாணலியில் சேர்த்து, இந்த அரைத்த விழுதையும் அதனுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.  அடுப்பு எப்போதும் “சிம்” சூட்டில் இருக்க வேண்டும்.


ஒரு 10 அல்லது 15 நிமிடங்களுக்குப் பிறகு, வேண்டுமானால் ஒரு சிறு கட்டி வெல்லத்தை சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.  அடுப்பிலிருந்து இறக்கும் முன்னர் ஒரு சிறிய கொத்து கருவேப்பிலையை குழம்பில் சேர்க்கவும்.


இப்போது, கம கம மிளகு குழம்பு சாப்பிடத் தயார்.

இந்த குழம்பை இன்னும் மிகுதியளவில் செய்து ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

67 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   வணக்கம், நல்வரவு, நன்றி, பிரார்த்தனைகள்.

      நீக்கு
  2. இதோ மிளகு குழம்பு சாப்பிட வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமாஸ்ரீனிவாசன் மேடம்...  இவங்களுக்குக்கொஞ்சம் மிளகுக் குழம்பு கொடுங்க....

      நீக்கு
    2. எங்கள் வீட்டிற்கு வாருங்கள். எல்லோருக்கும் தருகின்றேன்.

      நீக்கு
  3. இதை நானும் அடிக்கடி செய்வதுண்டு இதே மெத்ட் தான் ஆனால் அதில் சிறிது வெந்தயம் மற்றும் சீரகம் கொஞ்சம் கறிவேப்பிலையையும் சேர்த்து வறுத்து அரைத்து உபயோகிப்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சீரகம் சேர்ப்பதில்லை.  அது வேறு வாசனையைக் ஒடுக்கும்.  குறிப்பக ரசத்தை நினைவுபடுத்தும் என்று தோன்றும்!

      நீக்கு
    2. மதுரைத் தமிழன்... கருவேப்பிலை ஓகே... கருவேப்பிலைக் குழம்பாக மாறும் அபாயம் இருந்தாலும்.

      இதில் சீரகம் எங்கு வந்தது? எப்போதும் சீரக ரச நினைப்புதானா?

      நீக்கு
    3. ஸ்ரீராம் சொல்வது போல், எங்கள் வீட்டில் யாருக்கும் மிளகு குழம்பில் ஜீரக வாசம் பிடிக்காது. எனவே, நானும் சேர்ப்பதில்லை.

      நீக்கு
  4. மிளகு குழம்பு சுவை அருமையா இருக்கும்னு நினைக்கிறேன். நான் கடலைப்பருப்புச் சேர்ப்பதில்லை. அதைச் சேர்த்தால் மிளகுக் காரம் எடுபடாது. அதோடு ஒரு டீஸ்பூன் மிளகெல்லாம் பத்தாது. 2 டீஸ்பூனாவது வைச்சுப்பேன். கருகப்பிலையையும் எண்ணெயில் வறுத்துச் சேர்த்து அரைத்துக் கொள்வேன். புளியை வறுத்த சாமான்களோடு சேர்த்து அரைக்காமல் கரைத்து இரண்டு அல்லது மூன்று கிண்ணம் வைத்துக்கொண்டு. கல்சட்டியில் நல்லெண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்துக்கொண்டு அரைத்த விழுதைப் புளி ஜலத்தில் நன்கு கரைத்து ஊற்றிக் கொதிக்க வைப்பேன். வெல்லம் புளிக்காய்ச்சல், தோசை மிளகாய்ப்பொடி இவற்றுக்கு மட்டும் தான்! மிளகு குழம்பில் சேர்ப்பது இல்லை. பெருங்காயம் வறுக்கும்போதும் சேர்ப்பேன். தாளிப்பிலும் சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் வயதானவர்கள் உள்ளனர். காரம் ஒரு ப்ரச்சனை. எனவே, மிளகாய் கிடையாது. பெருங்காயம் அவசியம் உண்டு. எழுத மறந்து விட்டேன். ஞாபகப் படுத்தியதற்கு நன்றி.

      நீக்கு
    2. நானும் மிளகாய் வைக்கச் சொல்லவில்லை. மிளகு தான் இரண்டு டீஸ்பூன் என்று சொன்னேன். நன்றி. :))))) இங்கே சின்னவங்களுக்குக் கூடக் காரம் இப்போல்லாம் அதிகம் சாப்பிட முடியலை!

      நீக்கு
  5. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார்.... இந்தக் குறளை, கீதா சாம்பசிவம் மேடத்தின் செய்முறைக்குக் கீழே கொடுத்திருக்கீங்களே.

      இப்போ நான் ரமா ஶ்ரீநிவாசன் அவர்களின் மெதடிர் மிளகு குழம்பு செய்துபார்ப்பதா இல்லை கீசா மேடத்தின் முறையிலா?

      காலையிலேயே குழப்பிவிட்டீர்களே

      நீக்கு
    2. சந்தேகமே இல்லை. என்னைத் தான் சொல்கிறார் நெல்லை! குட்டிக் குஞ்சுலு என்னோட புடைவை, செருப்புனு எல்லாத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு, "என்னோடது!" என்றே சொல்லும். அதான் நானும் இங்கே சொல்லிட்டேன். இன்னிக்குச் சீக்கிரமாவே தூங்கி விட்டது! வீடே வெறிச்! :( அதான் நானும் கணினியை எடுத்து வைச்சுண்டேன். இல்லைனா அதோட விளையாடாமல் கணினியில் உட்கார்ந்தால் கோவிச்சுக்கும்.

      நீக்கு
    3. கீசா மேடம்... தி. பதிவுகளில் உங்களது பின்னூட்டம் (நிறைய மெதட்ஸ்) எனக்குப் பிடிக்கும். அதைத் தொடருங்கள்.

      நீக்கு
  6. பதிவு வெளியிடப்படும் நேரம் மாற்றப்பட்டு விட்டதா!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.    முன்னரே சொல்லியிருந்தேனே,,,     சில வசதிகள் காரணமாக அனைத்துப் பதிவுகளுமே புதன்கிழமை பதிவு போல காலை ஐந்தரைக்கு வெளியாகும்!

      நீக்கு
  7. அருமையான கைப்பக்குவம்...

    மணத்தக்காளி வற்றலுடன் செய்வேன்....
    இங்கு எண்ணெய் என்று சொல்லப்பட்டிருக்கிறது...

    நல்லெண்ணெய் ஒன்றே முக்கியமானது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்லெண்ணெய் ஒன்றே முக்கியமானது...//

      உண்மை, உண்மை...

      நீக்கு
    2. நல்லெண்ணெய் என்று ஒன்று இருப்பதையே கன்வீனியண்ட்டாக மக்கள் மறந்துவிட்டார்கள். விலை அதிகம் என்பதால் கிட்டே வருவதில்லையோ..

      நீக்கு
    3. ஆனால் எங்களைப் பொறுத்தவரை நல்லெண்ணெய் இல்லாமல் நாங்கள் இல்லை!

      நீக்கு
    4. மிகு, வெந்தய மற்றும் புளி அடிப்படையில் செய்யும் குழம்புகளுக்கு நல்லெண்ணெய்தான் நன்றாக இருக்கும்.

      எண்ணெய் வியாபாரிகள் மக்களன் அறியாமையைப் பயன்படுத்தி 30% நல்லெண்ணெய், மீதி பாமாயில் என்று கலப்படம் செய்து "நல்ல நல்லெண்ணெய்" என்ற பெயரில் சட்டப்படி கலப்படம் செய்து விற்பது நம் நாட்டில்தான் சாத்தியம்.

      30% கோதுமை மாவ, மீதி சுண்ணாம்புப் பொடி சேர்த்து சட்டப்படி தூய கோதுமை மாவு என்று விற்றாலும் ஆச்சர்யம் இல்லை

      நீக்கு
    5. ஶ்ரீராம்... இப்படிச் சொல்லிவிட்டு நல்லெண்ணெய் சித்ரா படம் நீங்கள் வெளியிட்டதே இல்லையே.. எப்போதும் அ. தானா? நல்லெண்ணெயைப் பிரபலப்படுத்தியவரின் படம் கிடையாதா?

      நீக்கு
    6. 30% நல்லெண்ணெய், மீதி பாமாயில் என்று கலப்படம் செய்து //"நல்ல நல்லெண்ணெய்" என்ற பெயரில் சட்டப்படி கலப்படம் செய்து விற்பது நம் நாட்டில்தான் சாத்தியம்.// நிஜமாகவா??. அதிக விலை"கொடுத்து வாங்கு்ம் இதயம் எண்ணெயிலுமா??

      நீக்கு
    7. நல்லெண்ணெய் இல்லாமல் என்ன தளிகை துரை சார்.

      நீக்கு
    8. நெல்லை... நல்லெண்ணெய் என்றால் எனக்கு ஜோதிகாவும் நினைவுக்கு வருகிறார்!

      நீக்கு
    9. 'இதயம்’ நல்லெண்ணெய் authentic. நம்பி வாங்கும் நல்லெண்ணெய்.
      அதன் பேக்கட்போல் டிசைன் காப்பி செய்து சில கம்பெனிகள் வேறுபெயர்களில் விற்கின்றன. டெல்லியிலும் பார்த்திருக்கிறேன். அவைகளில் சில இப்படி (நெல்லை சொன்னபடி) golmaal செய்கின்றனவோ என்னவோ!

      நீக்கு
    10. ஶ்ரீராம் - அநியாயம். ஒரு பதில்ல, சித்ராவை நான் சொல்லி நீங்க ஜோதிகா பேரைச் சொல்லி என்னை உங்களைவிட 20 வயசு ஜாஸ்தி ஆக்கிட்டீங்களே. இது நியாயமா?

      நீக்கு
    11. @ பானுமதி வெங்கடேச்வரன் மேடம் - நான் பஹ்ரைனில் ஒரு தடவை சூர்யகாந்தி எண்ணெய் 1 லிட்டர் சுமார் 700 ஃபில்ஸ் என்ற விலையைப் பார்த்து அதைக் கேட்டேன். (இது மார்க்கெட்டில்). கடைக்காரர் தெரிந்தவர் என்பதால் என்னிடம், நீங்கள் எப்போதும் வாங்கும் அஃபியா எண்ணெயையே வாங்குங்கள். விலை மலிவான பாக்கெட் எல்லாம் லேபர்களுக்காக. அதில் இன்க்ரெடியண்ட் லிஸ்ட்டைப் படித்தால் தெரியும், பாமாயில் கலப்படம் உள்ளது என்றார். அதன் பிறகு எந்த எண்ணெய் பாக்கெட்டையும் இன்க்ரெடியண்ட்ஸ் பார்க்காமல் வாங்குவதில்லை.

      இன்று கூட, சூரியகாந்தி எண்ணெய் வாங்க முனைந்தேன். (இது பசங்க சில சமயம், கடலை எண்ணெய், நல்லெண்ணெயில் பொரித்த ஸ்மெல் பிடிக்கலை என்று சொல்வதால் அவர்களுக்காக). லிட்டர் 97 ரூபாய், ஆனால் அதில் 11% சூரியகாந்தி, 15% ஆலிவ் ஆயில், 24% அரிசித் தவிடு ஆயில் என்றெல்லாம் போட்டிருந்தான் (மீதி ஒருவேளை குருடாயிலாக இருக்குமோ என்னவோ). பிறகு கோல்ட் வின்னர் வாங்கினேன். அதில் சில ப்ரிசர்வேடிவ்ஸ் தவிர மொத்தமும் சூரியகாந்தி எண்ணெய்.

      இதயம் மாதிரி பாக்கெட்டை காப்பி செய்து நிறைய நல்லெண்ணெய் வருகிறது. ஒழுங்கா பாக்கெட் பெயர் படிக்கலைனா, இதயம் என்றே நினைப்போம் (இது பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளிலும் உள்ளது). அடுத்த ஃப்ராடு, தீபம் ஆயில் என்ற பெயரில் வருவது. இன்னொன்று, சில மாதங்கள் முன்பு மைலாப்பூரில் பிடிபட்ட போலி வெண்ணெய். அந்தக் கடைக்காரர் சொல்லியிருந்தார், இந்த போலி வெண்ணெயை, கோவிலுக்கும் அனுமாருக்குச் சாத்தவுமே தயாரித்து அனுப்புகிறோம், சாதாரண வீட்டு உபயோகிப்பாளர்களுக்குக் கொடுப்பதில்லை என்று ஜஸ்டிஃபை செய்தார் (பேப்பரில் படித்தது). கோவில்களில் 2 ரூபாய்க்கு வாங்கும் நெய் தீபம்-ஹா ஹா ஹா ரகம். நாமும் இதனை வாங்கி விளக்கேற்றி புண்ணியத்தின் பலனை ரொம்பவும் அதிகரித்துக்கொண்டதாக நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.

      இதைவிட அதிர்ச்சி, குரூடாயிலை உபயோகித்து சவுதியில் தேன் தயாரிக்கும் தொழிற்சாலை சமீபத்தில் பிடிபட்டதுதான். அவர்கள் அந்தத் தேனை, வெளிநாட்டுக்கு மட்டும் ஏற்றுமதி செய்கிறார்களாம் (குரூடாயில், சர்க்கரை சேர்ந்தது ஹா ஹா). பாலில் சேர்க்கப்படும் பொருட்கள் விபரம், எப்படி வட நாட்டில் பால் தயாரிக்கப்படுகிறது (இனிப்பு செய்ய) என்றெல்லாம் எழுதினால், நமக்கு சாப்பிடும் ஆசையே போய்விடும். (10% பால், மிகுதி சோப் பவுடர் எட்சட்ரா சேர்த்து செய்வது. இணையத்தில் காணொளி காணலாம்).

      உபயோகிப்பாளர்கள் இதில் கவனமாக இல்லை என்றால், மட்டமான சரக்கை கோவிலுக்குக் கொடுத்து, அனேகமாக பாபத்தைத் தேடிக்கொள்வோம்னு நினைக்கிறேன். நாமும் உபயோகித்து, எதனால் நமக்குப் பிரச்சனை வந்தது என்றே தெரியாமல் போய்விடும் அபாயமும் உண்டு.

      நீக்கு
  8. இந்த குழம்பில் சேர்மானமாகும் பொருத்களைப் பற்றி எங்கோ படித்தது...

    அதன்பின் சமையலறை வசதி இருந்த வரைக்கும் இப்படியே அரைத்துக் கொள்வது..

    மிளகுக் குழம்பு என்றில்லாமல் பிஞ்சு கத்தரி & வெண்டைக்காய், தேறிய வாழைக்காய், முருங்கைக்காய் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் சின்ன வெங்காயமும் மலைப்பூண்டும் சேர்த்துக் கொள்வது வழக்கம்...

    இதற்கு நல்லதொரு கூட்டாளி -
    தணலில் சுடப்பட்ட அப்பளம்...

    ஆகா!..

    பதிலளிநீக்கு
  9. இன்றைய நவீன சமையற்கட்டில்
    தணலுக்கு எங்கே போவது?...

    இது மைக்ரோ ஒவன் காலம் என்பதை மறந்து விட்டேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேஸ் ஸ்டவ்விலேயே கூட சுடலாமே...! கரி அடுப்பே வாங்கி வைத்துக் கொள்வதும் சாத்தியம்தானே!

      நீக்கு
  10. அன்றைக்கு ஒரு காணொளி வந்தது...

    தமிழ் மாதங்களின் பெயர் தெரியாது அசடு வழிந்தவர்களைப் பற்றி...

    அவர்களுக்கெல்லாம் இப்படியான குழம்பு வகைகளைப் பற்றி த் தெரிந்திருக்குமா!...

    பதிலளிநீக்கு
  11. மிளகு கழம்பு அருமை. இங்கு இருக்கும் குளிரில் சுடச் சுட நல்லெண்ணெய் விட்ட சாத்த்தில் மிளகு குழம்பு கலந்து சாப்பிட்டால் அட்டகாசமா இருக்கும்.

    பதின்ம வயதில் ஊட்டியில் ஒருவர் சீரக ரசமும் சூடான சாதமும் போட்டது நினைவுக்கு வந்தது. அந்தக் குளிரில் தொட்டுக்க எதிர்பார்க்காமல் அவுக் அவுக் என சாப்பிட்டதும் நினைவிலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப நாளைக்கு அப்புறம் வரேன் திட்டாதீங்க!
    ஒரு கரண்டி மிளகு குழம்புக்கு ஒரு பானை சோறு சாப்பிடலாம் என்று என் அத்தைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். உடம்புக்கும் நல்லது.
    என் இரண்டாவது மகனுக்கு மிளகு குழம்பு பிடிக்காது. அவரை சாப்பிட வைக்க குழம்புக்கு வறுத்ததுடன் சிறிது வெங்காயம் தக்காளி புதினா இலை இவற்றையும் அரைத்து சேர்ப்பேன். மசாலா மிளகு குழம்பு என்று நாமகரணம் சூட்டி விடுவேன்!! மகனும் சாப்பிட்டு விடுவார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதவி, உங்கள் யோசனை மிக வித்தியாசமாக இருக்கின்றது. இதை நான் என் பெண்களுக்கும் செய்து பார்க்கின்றேன். இருவரும் மிளகு குழம்பு என்றால், எகிரி குதித்து ஓடுவார்கள்.

      நீக்கு
  13. சிறு பிள்ளைகளுக்கு இந்த மாதிரியான உணவுகள் கொடுத்து பழக்கப்படுத்தப்பட வேண்டும். நல்ல ரெசிப்பி.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    ----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஐந்து வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று (16) ஐந்து வலைத்தளங்களில் வெளியான பதிவுகள் 16.02.2020 எனும் தலைப்பில் பரீட்சார்த்தமாக வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம். கீதா அக்கா போல நானும் க.பருப்பு சேர்க்க மாட்டேன். புளியை அரைப்பதும் இல்லை. கெட்டியாக கரைத்து விடுவேன். நிறம் இன்னும் கொஞ்சம் டார்க்(கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு). எண்ணெய் மிதக்கும். நல்லெண்ணெய்தான். நெ.த. சொல்லியிருப்பது போல குளிருக்கு சூடான சாதத்தில் கலந்து கொண்டு அவுக் அவுக்கென்று விழுங்கி விடலாம். துரை செல்ராஜீ சார் கருத்துதான் சரி. இதற்கு சுட்ட அப்பளத்தை போல் வேறு துணை உண்டோ?. நன்றி ரமா நாவில் நீர் ஊற வைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு, சுட்ட அப்பளம், மிளகு குழம்பு, கொட்டு ரசம். என்ன combination. மிகச் சுவையான authentic தளிகை.

      நீக்கு
  15. எங்கள் வீட்டிலும் இப்படி செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ரமாஜி அருமையாகச் செய்திருக்கிறார் மிளகு. குழம்பை.
    தங்கள் புளி கெட்டியாகக் கரைத்து, கொதித்த பிறகே , அரைத்ததைச் சேர்ப்போம் பூண்டும போடுவதண்டு.
    பல கலைகளிலும் பிரகாசிக்கிறார் ரமா. வாழ்ததுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லி மாமி. இங்கு பூண்டு ப்ரச்சனை. ரமாஜி எல்லாம் இல்லை. உங்கள் யாவருக்கும் நான் வெறும் ரமாதான்.
      // பல கலைகளிலும் பிரகாசிக்கிறார் ரமா.// Jack of all trades. Master of none.

      நீக்கு
    2. ஞாபாகம் இல்லாமல் எழுதிட்டேன் மா. சின்ன மாமியின் பெண்கள்
      இனிஷியலோடு சேர்த்து ரமாஜி, லதாஜி என்று சொல்வோம்.
      அந்த நினைவில் உன்னையும் சொல்லிட்டேன்.
      சூப்பர் குழம்பு.

      நீக்கு
  17. வித்தியாசமாக இருக்கிறது, ஆனால் பெயர்தான் இடிக்குதே:)... பருப்புக்குழம்பு என வைத்திருக்கலாமோ..

    முடிவு அழகாக வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப்பின்னூட்டத்தைப் படித்துவிட்டேன். என்னை யாரும் தடுக்காதீங்க. நேர தாமிரவருணி கரைல போய் நின்னு, காத்திருந்து ஸ்காட்லாந்த் வந்ததும் தள்ளிவிடணும்.

      புளிவிட்டுச் செய்த மிளகு குழம்பு செய்முறையைப் படித்து பருப்புக் குழம்பாமே..

      இது கன்ன கே வா போ கதையா? முடிவு அழகாக வந்திருக்காம்.

      சரி.. உடனே தாமிரவருணியை நோக்கிக் கிளம்பறேன்

      நீக்கு
    2. ஆஆஆஆஆ நெ தமிழனை ஆராவது காப்பாத்துங்கோ:)...
      ஹையோ தா பரணி மாசாகிடப்போகுதே:) ஹா ஹா ஹா... புளியும் மிளகும் பொதுவாக் குழம்புகளுக்குச் சேர்ப்போமெல்லோ அதனால ஜொன்னேன் அது டப்போ......

      நீக்கு
    3. டப்பில்லை அதிரா. நீங்க ஜெனரெஸ். உங்க பின்னூட்டத்தை வைத்து கலாய்க்க வாய்ப்பு கொடுக்கறீங்களே. பாராட்டறேன்

      நீக்கு
  18. மிளகு குழம்பு நன்றாக இருக்கிறது. புளியை அரைக்காமல் கரைத்து செய்வேன்.

    பதிலளிநீக்கு
  19. மு. வரதராசன் அவர்கள் ஒரு கதையில் குடும்ப தலைவி காய்கள் இல்லை என்று குடும்பதலைவனிடம் சொல்லும் போது இன்று மிளகு குழம்பு வை என்பார். அது நினைவுக்கு வந்து விட்டது.
    மிளகு குழம்பு சுட்ட அப்பளம், சுவையாக இருக்கும். மிளகு ரசம் சுட்ட அப்பளமும் நன்றாக் ஐருக்கும்.சிறு பருப்பு வறுத்து அரைத்த துவையலும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  20. சுவையான மிளகுக் குழம்பு குறிப்பு. வீட்டில் அம்மா/மனைவி செய்து சாப்பிட்டதுண்டு. இங்கே நான் செய்ததில்லை. செய்து பார்க்கத் தோன்றுகிறது. முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. பார்க்கவே சுவையூறுது .வ .குழம்பு மி குழம்பு வெ குழம்பு எல்லாமே பிடிக்கும் ..ஆனா உங்க செய்முறையில் தனியா aka கொத்தமல்லி பவுடர் இல்லையா ??  .இந்த முறையில் செய்து பார்க்கிறேன் 

    பதிலளிநீக்கு
  22. மிளகுக்குழம்பு மணக்குது...😊😊..

    எனக்கும் புதிய முறை செய்து பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரி

    அருமையான மிளகு குழம்பு. சுவையான பக்குவத்தில் செய்துள்ளீர்கள். எங்கள் வீட்டில் நானும் இதே முறைப்படிதான் செய்வேன். ஆனால் புளியை கரைத்து விடுவேன். இந்த பக்குவத்தில் ஒரு தடவை செய்து பார்க்கிறேன். இதற்கு நல்லெண்ணெய்தான் மிகப் பொருத்தம். இந்த குழம்புக்கு சுட்ட அப்பளமும். பருப்புத் துவையலும், சேர்ந்தால் சுவையோ.. சுவை.
    பகிர்வுக்கு மிக்க நன்றி. தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!