திங்கள், 21 ஜூன், 2021

'திங்க'க்கிழமை  :  சேமியா பாலைஸ் -  நெல்லைத்தமிழன் ரெஸிப்பி 

 குச்சைஸ், கல்கோனா, சேமியா ஐஸ், பாலைஸ் என்று எவ்வளவு சாப்பிட்டிருக்கிறோம் சின்ன வயசில். அப்போல்லாம் நாம் காசுக்காக அப்பா அம்மாவையோ இல்லை வீட்டில் பெரியவர்களையோ எதிர்பார்த்திருக்கணும். நாம சம்பாதிக்க ஆரம்பித்ததும், ஐஸ் வாங்கிச் சாப்பிட நமக்கு கூச்சம் வந்துவிடுகிறதோ? கொஞ்சம் கௌரவமாக ஐஸ்கிரீம், கோன் ஐஸ் என்று ஒதுங்கிவிடுகிறோமோ? 


சமீபத்தில் என் உபயோகத்துக்காக ஏதேனும் பாத்திரம் வாங்கலாம் என்று சென்றிருந்த கடையில் Ice Candy moulds பார்த்தேன். அந்த செட் 600 ரூபாய் சொன்னான். என் மனைவியோ, நீங்க ஒரு தடவை உபயோகப்படுத்துவீங்க, அப்புறம் உபயோகிக்க மாட்டீங்க என்றாள். எனக்கே விலை அதிகம் என்று தோன்றியதால் வாங்கவில்லை. அப்புறம் அமேசானில் 350 ரூபாய்க்கு ஒன்று ஆர்டர் செய்தேன்.  அது வந்த அன்றே, சேமியா ஐஸ் செய்துபார்த்தேன். ரொம்ப நல்லா வந்தது. ஆனால் படங்கள் எடுக்க மறந்துவிட்டேன்.  திங்கப் பதிவுக்கு எழுதின மாதிரியும் ஆச்சு என்று இன்னொரு முறை நேற்று செய்தேன்.  


வித வித ஐஸ் வீட்டில் செய்யலாம். நான் சாப்பிட்டதிலேயே, 7ம் வகுப்பு படிக்கும்போது சாப்பிட்ட சேமியா ஐஸ் (35 பைசா), பிறகு பாளையங்கோட்டையில் 10ம் வகுப்பு படிக்கும்போது ஹாஸ்டலில் இருக்கும்போது சாப்பிட்ட 5 பைசா கல்கோனா ஐஸ் ஆகியவற்றை மறக்க முடியாது. கல்கோனா ஐஸ் ஆரஞ்ச், எலுமிச்சை என்று பலவித சுவைகளில் கிடைக்கும். ,  இப்போ நான் செய்தது, சேமியா பாலைஸ்.  


தேவையானவை

 

பாதாம் பருப்பு, தோல் எடுத்தால் பெட்டர் - 1 கைப்பிடி

பிஸ்டா  பருப்பு 1/2 கைப்பிடி

பால் 1/2 லிட்டர்

ஜீனி  3 மேசைக்கரண்டி

சேமியா 2 மேசைக்கரண்டி


ரோஸ் எஸென்ஸ்,  ஏலக்காய்பொடி


 

செய்முறை

 

சேமியாவை தளிகைப்பண்ணிக்கொள்ளவும். கொஞ்சம் தண்ணீர் அதிகமாக விடலாம்.


பாதம் பருப்பை மிக்சியில் ஒரு சுத்து சுத்திக்கொள்ளவும்.  பிஸ்தா பருப்பை ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும்.


பாலை காய்ச்சிக்கொள்ளவும்.


அதில் ஜீனி சேர்த்து, கொஞ்சம் கிளறவும். ஜீனி கரைந்ததும் அதில், பருப்புகளையும் வெந்த சேமியாவையும் சேர்க்கவும்.


கொஞ்சம் காய்ச்சவும். ரொம்ப குறுகவேண்டாம். கடைசியில், ஏலக்காய் பொடியோ இல்லை ரோஸ் எஸென்ஸ் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்துவிடவும்.


நன்கு ஆறின பிறகு, ஐஸ் மோல்டில் விட்டு, குஸிர்சாதனப் பெட்டியில் freezerல் வைக்கவும். 7-8 மணி நேரம் கழித்தால் சேமியா ஐஸ் தயாராகிவிடும்.


அந்த மோல்டை, தலைகீழாக, தண்ணீர் பைப்பில் தண்ணீரில் சில நிமிடங்கள் வைத்தால், மோல்டிலிருந்து ஐஸ் வெளியில் வந்துவிடும்.










பெங்களூர்ல மார்ச் 15 முதல், மே 25 வரை கொஞ்சம் வெப்பமாகத்தான் இருக்கும். வீட்டிற்கு வெளில கொஞ்சம் குளிர் காத்து இருக்கும். இருந்தாலும் வீட்டில் வெக்கையாக இருப்பதுபோலத் தோன்றும். அதனால் ஆசைப்பட்டுச் செய்து (மே 3ம் தேதி) சாப்பிட்டுப்பார்த்து இன்று எங்கள் பிளாக்குக்கு அனுப்புகிறேன். ஏகப்பட்ட செய்முறைகள் குவிந்துவிட்டதால், இது குளிர்காலத்தில்தான் வெளியாகுமோ?


[இன்னும் வெய்யில் பாக்கி இருக்கிறது நெல்லை!!!   - ஸ்ரீராம்! ]

87 கருத்துகள்:

  1. காலை வணக்கம் எல்லோருக்கும்.

    ஆஹா பாலைஸ்!! சூப்பரா வந்திருக்கு நெல்லை. செமையா இருக்கு!!!! பாராட்டுகள்!

    மகன் நினைவு வந்துவிட்டது. அப்போதெல்லாம் என்னிடம் இந்த மோல்ட் இல்லை, மகன் இல்லை ஸோ வாங்கவே இல்லை ஹிஹிஹி...சும்மா ஐஸ் ட்ரேயில் விட்டு கொடுத்துவிடுவேன். அப்புறம் குல்ஃபி மோல்ட் மட்டும் எதற்கோ ஃப்ரீயாக வந்தது இப்போது நினைவில்லை. அதில் செய்ததுதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை எஞ்சாய் மேடி!!!!!

      ஹை! ஸ்ரீராம் மீ ஃபர்ஸ்டா!! இன்று!! கீதாக்கா வந்தாலும் புலம்ப மாட்டாங்க!!! யாரும் வரலை எனக்கு பயமா இருக்குன்னு!!

      கீதா

      நீக்கு
    2. வாங்க கீதா...   வணக்கம்.   ஆம், இன்று நீங்கள்தான் முதல்!

      நீக்கு
    3. 7 மணி ஆகும் போது என் கணினிக்கு ஏதேனும் ஆகிடும் போல. மீண்டும் வூப்ஸ் வூப்ஸ் வருது ப்ளாகரில்மட்டும் தான் மற்ற எல்லா பக்கங்களும், தளங்கள் எல்லாம் வருது வாசிக்க முடிகிறது ஆனால் கருத்து போடுவது மட்டும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் பிரச்சனை ஆகிறது. காலையில் வந்தது...இப்ப மீண்டும் முடியலை..இது வருகிறதா என்று செக்கிங்க்

      கீதா

      நீக்கு
    4. தந்தையர் தினத்தில், திருப்பதிசாரம் அப்பா நினைவு வராமல், மகன் நினைவு வந்துடுத்து என்று எழுதியிருக்கீங்களே கீதா ரங்கன்(க்கா).

      புயல் போல காலைல வந்துட்டீங்க. பிறகு நான் வந்து எழுதறேன்.

      நீக்கு
  2. எங்கள் ப்ளாகின் அனைத்து தந்தையருக்கும் ,
    எல்லா நண்பர்களுக்கும் (தாமத மான )
    அப்பாக்கள் தின வாழ்த்துகள். நிறைவோடு அனைவரும் செழித்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் . இந்த நாளும் வரும் எல்லா நாட்களும்
    அமைதியும் ஆரோக்கியமும் சூழ நலமாக இருக்க வேண்டும்.
    இறைவன் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு நெல்லைத்தமிழனின்
    சேமியா பாலைஸ் பழைய நினைவுகளையும்
    கோடை நாட்களின் குதூகலத்தையும்.
    கொண்டு வந்தது.
    இங்கும் மில்க் ஷேக் செய்து ஃப்ரீஸரில் வைத்து
    மகள் செய்வாள்.

    நீங்கள் சொல்லி இருக்கும் அருமை
    மிகச் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய நினைவுகள் உங்களுக்கும் வந்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா. I miss those old days. எளிமை ஆனால் இனிமை. இப்போ அதுக்கு நேரெதிர்

      நீக்கு
  5. அதுவும் பாதாம் பிஸ்தா எல்லாம் சேர்த்து
    ஒரு ரிச் ஐஸ்க்ரீம் தயாராகி இருக்கிறது.

    பார்க்கவே மிக சிறப்பு. குழந்தைகளும் நீங்களும் சாப்பிட்டு மகிழ்ந்தீர்கள் என்று நம்புகிறேன்.
    மனம் நிறை வாழ்த்துகள் முரளிமா.

    மிக நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசங்க ஆளுக்கு ஒன்று, அதுக்கு மேல வேணாம்னுட்டாங்க. ஆனால் நல்லா இருந்தது.

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியமும் அமைதியும் மேலோங்கி எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடி வாழ்வாங்கு வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. குல்ஃபியும் இந்த மோல்டில் வைத்துச் செய்யலாம். ராஜஸ்தானில் எல்லாம் குல்ஃபியைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவே மாட்டாங்க. சின்னச் சின்ன மண் பானைகளில் செய்து வாயைக் கட்டிப் பெரியதொரு மண் கலயத்தில் நீரில் மிதக்க விட்டிருப்பாங்க. அதுவே ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லென்று இருக்கும். நான் குல்ஃபி மோடிலும் வைச்சுச் செய்திருக்கேன். கிண்ணங்களிலும் வைச்சுப் பண்ணி இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமாகத்தான் வருவேன். அண்டார்டிக்காவிலும் ஆர்க்டிக்கிலும் நேரடியாகவே சேமியா பாலைஸ் செய்வாங்க, குளிர் சாதனப் பெட்டியோ, மண்பானையில் நீரிலோ வைக்க மாட்டாங்க என்று சொல்லி, எங்கள் கீதா சாம்பசிவம் மேடத்தை கோப்ப்படுத்த மாட்டேன்.

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குளிர்சாதனப் பெட்டியில் எல்லாம் வைச்சால் அதன் உண்மையான ருசி போயிடும். சாப்பிட்டுப் பார்த்திருந்தால் புரிஞ்சிருக்கும். :P :P :P :P

      நீக்கு
    3. உண்மைதான். இயற்கையா குளிர்ந்தால் அதன் ருசியே வேறுதான்.

      நீக்கு
  8. குழந்தைகள் இருக்கையில் பிட்சாவில் இருந்து ஹாட் டாக் வரை அவன் ஐடம்ங்களும், குல்ஃபி முதல் ஆரஞ்சு ஐஸ், திராக்ஷை ஐஸ், எலுமிச்சை ஐஸ் என ஐஸ் கான்டிகளும் ஐஸ்க்ரீம் வகைகளும் குல்ஃபி வகைகளும் ஃபலூடா போன்றவையும் செய்து சாப்பிட்டாச்சு. இப்போல்லாம் அவங்க வந்தால் கூடப் பண்ணினால் நான் தான் சாப்பிட வேண்டி இருக்கு. மருமகளுக்குக் கொஞ்சம் பிடிக்கும். கடைசியா ஃபலூடா என் அண்ணா பையர் திருமணம் ஆகி மனைவியோடு விருந்துக்கு வந்தப்போப் பண்ணி இருந்தேன். 2014 ஆம் ஆண்டு? என நினைவு. அதுக்கப்புறமா கோல்ஹாபூரில் நாங்க வாங்கிச் சாப்பிட்டது தான் ஃபலூடா எல்லாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இன்னும் ஃபலூடா செய்து பார்க்கலை. ஆனால் செய்யவேண்டிய லிஸ்டில் இருக்கிறது. நான் ஃபலூடா ரசிகன். எங்க போனாலும், கிடைத்தால் வாங்கிச் சாப்பிடுவேன்.

      நீக்கு
  9. இந்த சேமியா பால் ஐஸிலேயே பாதம், பிஸ்தாவை ஊற வைச்சு அரைச்சும் சேர்க்கலாம். அது ஒரு ருசி. கடிக்க வாயில் அகப்பட்டால் அது ஒரு ருசி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவே ரொம்ப ரிச்சாக இருந்தது கீசா மேடம்... சின்ன வயசுல சாப்பிட்ட எளிமையான ஐஸ் போன்று இருந்தால்தான் இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.

      நீக்கு
  10. குல்ஃபி மோடெல்லாம் இன்னமும் வைச்சிருக்கேன். அவனைத் தூக்கிக் கொடுத்த மாதிரி இதைக் கொடுக்கலை. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்...கீதாக்கா நீங்க அ(ஓ)வனைத் தூக்கிக் கொடுத்தது நீங்க ஏஞ்சல் தளத்தில் ஒரு கருத்தில் சொல்லியிருந்தீங்க. அப்பலருந்து இப்ப பார்த்த போதும் ஆறலை! அதுல கேக், பன் வகையறாக்கள், பேக்கிங்க் மட்டும்தான் செய்யணுமா என்ன உங்களுக்குத் தெரியாததா என்ன ....நல்ல சாமானை...இப்படி ...கர்ர்ர்ர்ர்ர்!!!!!!

      கீதா

      நீக்கு
    2. அதை ஏன் கேட்கறீங்க தி/கீதா! எல்லாம் நம்மவர் வேலை. எப்போவானும் தானே இனிமே பண்ணுவே, குழந்தைங்க இருக்கும்போது பண்ணினாப்போல் அடிக்கடி எங்கே பண்ணப் போறேனு சொல்லிட்டு அதிலும் யாரிடம் கொடுக்கப் போறாங்களோ அவங்க எதிரிலே சொல்லிட்டுத் தூக்கிக் கொடுத்துட்டார். அதே போல் தான் ஜூஸரும். பழங்கள் சாறு தனி/கொட்டை தனி/சக்கை தனினு வரும். அதுவும் அடிக்கடி போடுவதில்லைனு சொல்லி அதே நபரிடம் அவனோடு சேர்த்துக் கொடுத்துட்டார். ரொம்ப ஆசையா வாங்கி இருந்தேன் அந்த ஜூசரை! இப்போ அது மாதிரிக் கிடைக்காது. இப்போ இன்வெர்டர் மிக்சி வாங்கித் தரப்போறேன்னு ஒரே பிடிவாதம். நான் குறுக்கே விழுந்து தடுத்துட்டு இருக்கேன்.

      நீக்கு
    3. அதுக்கேற்றாற்போல் எங்க குழந்தைங்களும் அடிக்கடி எங்கே வராங்க? நாங்க தானே அவங்களைப் பார்க்கப் போறோம்! இப்படித் தான் முதல் முதல் ராஜஸ்தான் போனப்போ நல்ல வெள்ளைக்கல் கல்லுரல், அம்மி வாங்கிக் கொண்டு போயிருந்தேன். அரைக்க அரைக்க அருமையா இருக்கும். அங்கிருந்து சிகந்திராபாத் மாற்றலில் வரும்போது அந்தக் கல்லுரலையும்/அம்மியையும் எனக்குத் தெரியாமல் சொல்லாமல் விலை பேசிட்டார். எடுத்துட்டுப் போக ஆட்கள் வரும்போது தான் எனக்கு விஷயமே தெரியும்! அன்னிக்கு நான் அழுத அழுகை! இப்போ நினைச்சாலும் எனக்கு நல்ல கல்லுரல்/அம்மி போயிடுத்தே என வருத்தமாக இருக்கும். கடைசியில் சிகந்திராபாதில் வாடகை வீட்டில் கல்லுரல் போட்டிருப்பாங்க நினைச்சுட்டுப் போய் எதுவுமே இல்லை. சென்னைக்குத் தந்தி கொடுத்து வாங்கி அனுப்பச் சொன்னார். ஒட்டிக்கு இரட்டிப்பு செலவு, எலக்ட்ரிக் அடுப்புக்கள், ஸ்டவ் என எத்தனையோ! என்னை எல்லாம் கேட்டுக்கவே மாட்டார். கொடுத்துடுவார். எலக்ட்ரிக் அடுப்பு குமுட்டி மாதிரி. அப்பளம், சப்பாத்தி சுடுவதற்குத் தோதாக இருக்கும். :(

      நீக்கு
    4. சொல்லப் போனால் இன்னமும் வரும். புத்தகங்கள், என்னோட எம்ப்ராய்டரி சாம்பிள் வேலைப்பாடுகள்னு எத்தனையோ! :((((( அதனாலேயே இப்போ எந்தவிதமான ஆசையோ, பொருட்கள் மேல் பற்றுதலோ வைச்சுக்கலை. புத்தகங்கள் மட்டும் கொஞ்சம் போல் இருக்கின்றன. எனக்கப்புறமா யாருக்குப் போகுமோனு இப்போவே தூக்கிக் கொடுத்துடுனு சொல்லிட்டு இருக்கார். :))))))

      நீக்கு
    5. மாமா செய்வதில் உள்ள அர்த்தம் எனக்குப் புரியுது.

      இப்போ கேஜிஜி சாருக்கு புதன் கேள்வி... எதையுமே பிறருக்குக் கொடுக்கத் தயங்காத மனம், ஏன் புத்தகங்களை மட்டும் கொடுப்பதற்குச் சம்மதிப்பதில்லை?

      நீக்கு
    6. நெல்லை, உங்களுக்கு என்ன அர்த்தம் புரிஞ்சதோ தெரியலை. அவர் தூக்கிக் கொடுப்பதின் காரணம் இதெல்லாம் வீட்டில் அடைசல் என்பதே. புத்தகங்களை எல்லாம் கொடுக்கணும்னு சொல்லிட்டு எனக்குத் தெரியாமல் நான் இல்லாதப்போப் பல புத்தகங்களை தானம் பண்ணிட்டார். இப்போ உள்ளவை பரிசாக வந்தவை, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் (இன்னும் பைன்டிங்க் செய்யாமல் இருக்கு) அது போலச் சில புத்தகங்களே! அவன்/எலக்ட்ரிக் அடுப்பு எல்லாம் இனிமே உனக்கு என்னத்துக்கு என்பார்! குழந்தைகள் அவங்க அவங்க வாழ்க்கைனு தனியாப் போனதும் இவை எல்லாம் தேவை இல்லாதவை என அவர் கருத்து. நானும் பிறருக்குக் கொடுப்பவளே! சின்ன வயசில் இருந்தே பாவாடைகள், சட்டைகள், நான் படித்த வகுப்புப் புத்தகங்கள்னு தானம் பண்ணி இருக்கேன். என்றாலும் சில பொருட்கள் அவன் மாதிரி! பின்னர் வாங்க முடியாது/தோன்றாது. :( மைக்ரோவேவ் வாங்கும்போதே அதிலேயே அவன் உள்ள மாதிரி வாங்க ஆசை. அதையும் ஒத்துக்கலை! :( என்றாலும் பரவாயில்லை. பேகரி ஐடங்கள் நான் சின்ன வயசில் இருந்தே சீனாச்சட்டியில் மணல் போட்டுச் செய்திருக்கேன். இப்போல்லாம் குக்கரிலேயே உப்புப் போட்டுப் பண்ணச் சொல்றாங்க. தேவை எனில் அப்படிப் பண்ணிக்கலாமே! இதுக்கெல்லாம் அசந்துடுவோமா? விட மாட்டோம் இல்ல! :))))))

      நீக்கு
  11. ஒரு பத்து நாட்களாவது நெல்லையார் வீட்டிலேயே தங்கி இருந்து அவரை எல்லாமும் சமைச்சுப் போடச் சொல்லிச் சாப்பிட்டுட்டு வரணும். எங்கே! :))))) முக்கியமாய் மனோகரம். நம்மவருடைய ஃபேவரிட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் சிவப்புச் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் என நீங்கள் கொண்டாடிக் குதூகலிக்க நான் வாய்ப்பு வழங்கி மாட்டிக்கொள்ளத் தயாரில்லை. ஹி ஹி ஹி

      நீக்கு
    2. கீதாக்கா கரெக்டா பல்ஸ் பிடிச்சிட்டீங்க!!! ஹாஹாஹா

      நெல்லை மாட்டிக் கொண்டார்!

      மீ எஸ்கேப்!

      கீதா

      நீக்கு
    3. நெல்லை! பின்னே? நீங்க பண்ணினதாய்ச் சொல்லுவதெல்லாம் உங்க ஹஸ்பண்டு பண்ணிட்டு நீங்க படம் எடுத்துப் போடறீங்கனு சொல்லுங்க! கட்டாயமாய் "பெண்"களூர் வரப்போறோம். நேரே உங்க வீட்டில் தான் இறங்கப் போறோம்.

      நீக்கு
    4. அப்படீல்லாம் இல்லை. நானும் பண்ணுவேன். என்னைப் பொறுத்தவரையில் நல்லாத்தான் வரும். ஆனாலும் மனைவி செய்வது போல வராது ஹாஹா

      நீக்கு
    5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வாங்க எங்க வீட்டுக்குனு மனசாரக் கூப்பிட வேண்டாமோ? எல்லாம் ஊர் வாகு! :))))))))

      நீக்கு
  12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  13. என்றோ அனுப்பி ஏதோ வரிசையில் வெளியிட்டு... இந்த எபி செய்யும் சேட்டைகள் தாங்க முடியவில்லை. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  14. நெல்லைத்தமிழன் அட்டகாசம் அசத்தீட்டீங்க.. கை கொடுங்க நெல்லைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  15. கண்டிப்பாக இதை செஞ்சு பார்க்கிறேன்... நல்லா வந்துச்சுன்னா இன்னும் அதிகமாக செஞ்சு வரும் வார இறுதியில் நடக்கப் போகும் பார்ட்டிக்கு செஞ்சு எடுத்துட்டுப் போறேன்.

    ஒரு வேளை என் பக்குவம் நல்லா வரலைன்னா காராஜில் இரு ப்ரிஜ் இருகிறது அதை பயன்படுத்திகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேமியா குறைவா போடுங்க. பால் கம்மியாகவும், தண்ணீர் அதிகமாகவும் சேருங்க. ரொம்ப நல்லாவே வரும்.

      இந்த காரேஜ் பற்றி நினைவுபடுத்தி என்னைக் கடுப்படிக்காதீங்க ஹாஹா

      நீக்கு
    2. நெல்லை, அந்த காரேஜ் மதுரையின் கோல்மால் வேலைகளுக்கானது!!! ஹாஹாஅஹா

      கீதா

      நீக்கு
  16. //சேமியாவை தளிகைப்பண்ணிக்கொள்ளவும்.//

    தளிகை பண்ணுவது என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேக வைத்துக்கொள்ளவும். நாங்க உபயோகிக்கற வார்த்தைகள் மனசுலயே இல்லைனாலும், உபயோகப்படுத்தலைனாலும் அடுத்த தலைமைறைக்குக் கடத்த முடியாதுன்னு பிடிவாதமா உபயோகப்படுத்திட்டிருக்கேன்.

      நீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. சேமியா ஜஸ் பார்க்கவே அருமை.
    படங்களும் , செய்முறையும் மிக அருமை.
    பழைய பள்ளி நினைவுகள் வந்து போனது. எத்தனை விதமான ஜஸ் சாப்பிட்டு இருப்போம். அத்தனையும் நினைவுகளில் வந்தது. அப்போது சாப்பிட்ட சேமியா ஜஸில் கொஞ்சம் தான் சேமியா இருக்கும் வெள்ளையாக . இதில் நிறைய இருக்கிறது., பாதாம், பிஸ்தா கூடுதல் சுவை சேர்த்து இருக்கிறது. என்றோ அனுப்பிய குறிப்பு என்றாலும் இப்போது வெயில் காலம் தானே! செய்ய ஆசை ஏற்படும்.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அரசு மேடம்... எனக்கு இவ்வளவு ரிச்சாக இல்லாமல், சாதாரணமாக இருந்தாலே இன்னும் பிடிக்கும்னு தோணுது. ஜலதோஷம் வந்துவிடக் கூடாது என்று அடுத்தது செய்யாமல் இருக்கேன். இப்போ அளவுக்கு அதிகமாக மாம்பழம் வீட்டில் இருப்பதால், மேங்கோ ஐஸ் செய்யலாமா என்று யோசிக்கிறேன்.

      நீக்கு
    2. நெல்லை, மாம்பழ ஶ்ரீகண்ட் செய்யுங்க! ரொம்பவே நல்லா இருக்கும். எங்க பெண்ணுக்குத் திடீர்னு பெண் பார்த்த அன்றே நிச்சயம் என்பதால் எங்க வீட்டிலேயே எல்லாம் வைத்துக் கொண்டிருந்தோம். அப்போ இந்த ஶ்ரீகண்ட் தான் மாம்பழத்தில் செய்து பாதம், பிஸ்தா, முந்திரிப்பருப்புக்கள் போட்டு வைச்சிருந்தேன். எல்லோரும் ஆஹா, ஓஹோ, பேஷ், பேஷ்! என்றார்கள். அதிலும் அப்போல்லாம் தமிழ்நாட்டில் இவ்வளவு தூரம் வட இந்திய உணவு வகைகள் பரவலாக வரவில்லை. சல்வார்/குர்த்தா தான் சுடி/சுடி என்னும் பெயருடன் (அப்போதும்/இப்போதும்) அழைக்கப்பட்டுப் பரவிக் கொண்டிருந்தது. யாருக்கும் சல்வாருக்கும், சுடிதாருக்கும் உள்ள வேறுபாடு அன்றும்/இன்றும்/என்றும் புரியாது போல! :(

      நீக்கு
    3. மனைவிட்ட சொல்லியிருக்கேன். என்னவோ... இனிப்பு ஐட்டங்கள்லாம் நான் மற்றும் குறைந்த அளவில் மனைவியும் சாப்பிடுவோம். பசங்க அவ்வளவாக விரும்புவதில்லை. ஏற்கனவே நான் அமுல் ஏலக்காய் வாசனையில் ஸ்ரீகண்ட் வாங்கி அது ஃப்ரிட்ஜில் தூங்குது. எனக்கு வெயிட் கன்னா பின்னான்னு போட்டுடும்னு பயம். நாந்தான் வாங்கினேன்.

      நீக்கு
  19. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  20. ஆஹா! எனக்கும் நெல்லைக்கும் இப்படி என்ன ஒற்றுமை!? நான் குல்ஃபி ஐஸ்கிரீம் செய்து எ.பி.க்கு அனுப்பியிருக்கிறேனே!! அது கண்டிப்பாக குளிர் காலத்தில்தான் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னெல்லாம், ஸ்டாக் இல்லை, எபி வாசகர்கள் அனுப்புங்க என்று சொல்லி, நாம மெயில் அனுப்பினால் அதிகபட்சம் 2 வாரங்களுக்குள் வந்துவிடும். இப்போல்லாம் மாதக்கணக்காக ஆகிறது. அதனால, நீங்க குல்ஃபி ஐஸ் செய்முறையை நவம்பர்ல அனுப்பினால், நிச்சயம் ஏப்ரல் மேயில் வெளியாகும் என்று சொல்லிவிடலாம்.

      நீக்கு
    2. நான் ஃபலூடா அனுப்பலாம்னு நினைச்சுட்டு வேண்டாம்னு விட்டுட்டேன். அத்தனை எல்லாம் மெனக்கெட்டு யார் பண்ணப் போறாங்க? :))))

      நீக்கு
    3. நீங்க ஃபலூடா அனுப்பினால் யார் வேண்டாம் என்பார்கள். எப்போ கொரியர் பண்ணறீங்க? அதைப் பண்ணுவதுதான் கஷ்டம்.

      நீக்கு
  21. Btw.சேமியா பால் ஐஸ் நன்றாக வந்துள்ளது. அடுத்தது ஜவ்வரிசி ஐஸா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜவ்வரிசில ஐஸ் சாப்பிட்டதே இல்லையே..இது என்ன...புதுக் கரடியாக இருக்கிறது?

      நீக்கு
  22. ஐஸ் சாப்பிடும் ஆசையை கிளப்பி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தையாக மாறும் அசை நம் எல்லோரிடமும் இருப்பதுதானே கில்லர்ஜி.

      அப்போ கேட்டது கிடைக்காது. ஆனால் மகிழ்ச்சி மட்டும் அளவில்லாமல் இருந்தது. இப்போ ஆசைப்படுவது எல்லாமே நம் வசமாக ஆகும் (நியாயமான உணவு உடை போன்றவை). ஆனாலும் மகிழ்ச்சி மட்டும் மிஸ்ஸிங்.

      நீக்கு
    2. உண்மை மகிழ்ச்சி எங்காவது கிடைத்தால் சொல்லுங்கள் இருபது கிலோ வாங்கிப் போடுவோம்.

      நீக்கு
    3. மகிழ்ச்சி நம்முள்ளேயே இருக்கிறது கில்லர்ஜி! தூண்டி விடுங்கள். பிரகாசமாக ஒளிவிடும்.

      நீக்கு
  23. ஆயிரம் தான் சொன்னாலும் குச்சி ஐஸ், கோன் ஐஸ் காலம் இனி வாய்க்காது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோன் ஐஸ் கிடையாது. குச்சைஸ், பாலைஸ்... நமக்கு அறிவும் அனுபவமும் அதிகமானதால, நல்ல தண்ணீரா, சுத்தமா செஞ்சிருப்பாங்களா என்றெல்லாம் ஏகப்பட்ட சந்தேகங்கள் மனசுல எழும்பி எதையும் சாப்பிட மாட்டோம் பசங்களுக்கு வாங்கிக்கொடுக்க மாட்டோம். நாம சுத்தம்னு நினைக்கிறவைகளை மட்டும் சாப்பிட்டாலும் பசங்களுக்கு தடுமன், காய்ச்சல்லாம் வந்துக்கிட்டும் போய்க்கிட்டும்தான் இருக்கு. இதில் இழந்தது அற்ப மகிழ்ச்சித் தருணங்களை.

      பஹ்ரைனில் இருந்தபோது பஞ்சு மிட்டாய் வாங்கித்தந்து நானும் சாப்பிட்டிருக்கேன்.

      நீக்கு
    2. க்வாலிடியில் இப்போவும் கோன் ஐஸ் உண்டு. இப்போ அமுலிலும் புதுசா அறிமுகம் செய்திருக்காங்க. அம்பேரிக்காவில் பையர் அடிக்கடி க்வாலிடியில் கோன் வாங்கித் தருவார். பெரிதாக இருக்கும். பஞ்சு மிட்டாய் நான் அம்பேரிக்காவுக்கு முதல் முதல் போனப்போ வாங்கிச்சாப்பிட்டேன். அப்புறமெல்லாம் பெண்/பையர் வாங்கித்தரவே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. நான் சின்னவனாக இருந்தபோது கோன் ஐஸ்லாம் கிடையாது. பிறகு சினிமா தியேட்டரில் 2 ரூபாய்க்கு கோன் ஐஸ் என்று வந்தது. நீங்க சொல்ற க்வாலிட்டிலாம் இந்தக் காலச் சமாச்சாரம்.

      நீக்கு
    4. நான் அறுபதுகளில் சென்னை வந்து/வந்து போய்க் கொண்டிருக்கையில் உஸ்மான் ரோடில் இருந்து ரங்கநாதன் தெரு முனையில் உள்ள பழக்கடை (பின்னால் அன்பழகன் பழக்கடை எனப் பிரபலம் ஆனது) கோன் ஐஸ் மிஷின் வைத்திருப்பார்கள். நாலணா சின்னக் கோன். பெரிய கோன் எழுபத்தைந்து பைசா. நிறைய வாங்கிச் சாப்பிட்டிருக்கேன். அப்போல்லாம் பால் ஐஸ் ஸ்டேட் ஐஸ் என்னும் கம்பெனியில் இருந்து இந்த மாதிரிக் குச்சிகள்/கிண்ணங்களில் நிரப்பப்பட்டு வாசலில் வண்டியைத் தள்ளிக் கொண்டு வருவாங்க. அதுவும் சாப்பிட்டிருக்கோம். இன்னொரு போட்டிக் கம்பெனி உண்டு. பெயர் நினைவில் இல்லை. எனக்குப் பிடிக்காது. எங்க திருமண நாள் முதலாம் ஆண்டு நிறைவன்று சென்னை மெரினா பீச்சில் அவங்க கிட்டே பால் ஐஸ் கேட்டால் திராக்ஷை ஐஸைக் கொடுத்துட்டாங்க. ஒரே கடுப்பு இரண்டு பேருக்கும். திரும்பியும் கொடுக்க முடியலை. வேறே வழியில்லாமல் சண்டை போட்டுக் கொண்டே சாப்பிட்டோம். அப்போ ஒரு ரூபாய் ஒன்று.

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    உங்களுக்கும், உலகம் வாழ் தந்தையர்கள் அனைவருக்கும், இங்கு (எ.பி) வரும் அனைத்து சிறப்பான தந்தையர்களுக்கும் அன்பான தந்தையர் தின வாழ்த்துகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா மேடம்.. சிறப்பில்லாத தந்தையர்களும் உண்டா?

      நீக்கு
    2. மகனை மது வாங்கி வரச்சொல்பவர் சிறப்பான தந்தையா ?

      நீக்கு
    3. நடிகன், சின்ன வயசுலயே தன்னை மாதிரி தன் மகன்/மகளைத் தயார் படுத்தினால் சிறந்த தந்தை. விளையாட்டு வீரன் அதே மாதிரிச் செய்தால் பாராட்டுவீங்க, கொஞ்சம் பொறாமையா இருக்கும். அரசியல்வாதி அதே செயலைச் செய்தால், ஆஹா ஓஹோ இளைய தலபடி என்று பாராட்டுறாங்க. ஆனால் குடிகாரப்பயல் மட்டும், மகனைச் சின்ன வயசுலயே தன் ப்ரொஃபஷனில் ட்ரெயின் பண்ணினால் மட்டும் நாம் ஏன் பாராட்டுவதில்லை?

      நீக்கு
  25. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

    இன்றைய தங்களின் சேமியா பாலைஸ் செய்முறை, படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பாதாம், பிஸ்தா போன்றவற்றை நீங்கள் அதிகமாக சேர்த்திருப்பதால் மிகவும் ருசியாக வந்திருக்கும். பழைய நினைவுகள் வந்தன. அப்போது இந்த சேமியா ஐஸ் பத்து பைசாவுக்கு வாங்கி உறவு குழந்தைகளுடன் சேர்ந்து சுவைத்தது நினைவுக்கு வந்தது. இப்போது ஐஸ் ஐட்டங்கள் எனக்கு ஒத்து வரவில்லை. ஆனாலும் என்றேனும் ஒருநாள் இந்த மாதிரி செய்து சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மோல்ட் உபகரணங்கள் வாங்க வேண்டும். வாங்கியதும் செய்து சுவைக்கிறோம். (அது எந்த காலத்திலேயோ..:) ) இல்லை.. அவசரத்திற்கு ஐஸ் டிரேயில் விட்டு எடுத்து,ஸ்பூனால் எடுத்து சாப்பிடலாம் எனவும் நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன வயதுல ஆசையா சாப்பிட்டது, இப்போ அவ்வளவாகப் பிடிக்காமல் இருக்கலாம், இல்லை ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். இதெல்லாம் எப்போதோ ஒரு தடவை சாப்பிடும் ஐட்டம் என்றுதான் எனக்குத் தோன்றியது.

      நீக்கு
  26. //இன்னும் வெய்யில் பாக்கி இருக்கிறது நெல்லை!!! // - இங்க இரண்டு மாதம் வீட்டிற்குள் கொஞ்சம் புழுக்கமாக இருந்தது (மார்ச் 15-மே 25). இப்போ குளிர் ஆரம்பித்துவிட்டது.

    சென்னையில் மித வெயில், அதிக வெயில், தாங்க முடியாத வெயில் என்று மூன்றே சீசன்கள்தானே உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே 2 நாட்களாக சூடு/வெயில். காற்று நின்றிருக்கிறது! :( மழையும் குறைந்திருக்கும்.

      நீக்கு
  27. குல்ஃபி ஐஸ் செய்துள்ளோம்... சேமியா பால் ஐஸ் செய்து பார்க்க வேண்டும்... செய்முறை படங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிப்புக்குத் தடா போடும் நீங்க, அந்த குல்ஃபி ஐஸ் சாப்பிட்டிருக்கீங்களா? வீட்டில் கொடுத்தாங்களா திண்டுக்கல் தனபாலன்?

      நீக்கு
    2. குல்ஃபி அச்சு சின்னதாக தான் இருக்கும்... அதனால் 'ஏதோ' என்று ஒன்று மட்டும் தருவார்கள்... மற்றபடி இனிப்பு ஐட்டங்களை பார்க்க மட்டு-மே...!

      நீக்கு
    3. குல்ஃபி இங்கே தான் சின்னதா இருக்குப் போல! வடக்கே எல்லாம் சுமார் 250 கிராம் ஒரு மட்காவில் இருக்கும். விதம் விதமான ஃப்ளேவர்களில் கிடைக்கும். நான் அநேகமாய்ச் சாக்லேட் ஃப்ளேவரே வாங்கிப்பேன். ஐஸ்க்ரீம் எனில் பட்டர்ஸ்காட்ச்!

      நீக்கு
    4. நான் முதன் முதலில் குல்ஃபி சுவைத்தது மும்பையில். அங்கதான் வித வித ருசில, கட் பண்ணி ப்ளேட்ல வச்சுத் தருவாங்க (இப்பயும் அந்த மாதிரி கடைகளை இங்கும் சென்னையிலும் பார்த்திருக்கிறேன்) எனக்கு சாக்லேட் ஃப்ளேவர் எப்போதுமே பிடிக்காது. அது சின்னப் பசங்க லைக் பண்ணும் ஃப்ளேவர். ஹாஹா

      நீக்கு
    5. சென்னையிலும் அண்ணா நகர் "சுக் சாகர்" ஓட்டலில் நீங்க சொன்னாப்போல் ஒரு பவுலில் குல்ஃபி ஐஸ்கீர்ம் கட் பண்ணிச் சின்னச் சின்னச் சாக்லேட் போலக் கிண்ணம் நிறையத் தருவாங்க. ஃபோர்க்கால் குத்திச் சாப்பிடலாம். சுக் சாகர் சாப்பாடு எல்லாமே நன்றாக இருக்கும். அம்பத்தூரில் இருந்தவரை ஒவ்வொரு திருமண நாள்/பெண்,பிள்ளை இந்தியா வருகையில் என்று போவோம்.

      நீக்கு
  28. இந்த சேமியா ஐஸுக்குச் சர்க்கரை கூடப்பொடித்த சர்க்கரை அல்லது பழுப்புச் சர்க்கரை சேர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  29. சேமியா ஐஸ் நன்றாக வந்திருக்கிறது.

    இப்பொழுது மாம்பழ சீசன் நான் மாம்பழத்தில் செய்து கொடுத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் மாம்பழத்தில் ஐஸ் செய்யலாம் என்று நினைத்தேன். அதுக்கு கொஞ்சம் மாம்பழம் இருந்தால் போதும். (ஒரு மாம்பழத்தில் கொஞ்சம்). என்னிடமோ நிறைய மாம்பழங்கள் இருக்கின்றன. சாப்பிட்டுத்தான் தீர்க்கணும்.

      நீக்கு
  30. ஆவ்வ்வ்வ் இன்று நெ தமிழன் ரெசிப்பியோ.. சூப்பராக இருக்குது.. ஆனாலும் ஒரு குறை, அந்த சேமியாவைப் போடாமல் விட்டிருக்கலாம் அல்லது தூளாக்கிப் போட்டிருக்கலாம் போல இருக்குது எனக்கு.. படம் பார்க்க ஏதோ குருகுரு என .. எதையோ நினைவு படுத்துது ஹா ஹா ஹா.

    நானும் இம்முறை ஐஸு ஐஸு செய்யவில்லை இன்னும்... செய்து முடிக்கமுன் வெயில் போயிடும்போலத்தான் இருக்குது...:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை பதிவுலகத்தில் பார்த்து பல காலமாக ஆகிவிட்டது. உங்க ஊரில் சின்ன வயதில் இந்தமாதிரி ஐஸ் விற்பார்களா?

      நீக்கு
  31. ஐஸ் - ஆஹா.. சிறு வயதில் சாப்பிட்டது இன்னமும் பசுமையாய் நினைவில். என்னதான் விதம் விதமாக ஐஸ்க்ரீம் சாப்பிட இங்கே வாய்ப்பிருந்தாலும் இப்போது சாப்பிடுவதில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!