திங்கள், 7 ஜூன், 2021

'திங்க'க்கிழமை :  பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி 

 

 பிஸிபேளா பாத் 




நான் ஏற்கனவே ஒரு முறை பிஸிபேளாபாத் திங்கற கிழமைக்கு அனுப்பியிருக்கிறேன். இது என் அக்கா திருமதி.கலா கோபாலின் செய்முறை. 

தேவையான பொருள்கள்:



பச்சை அரிசி(சாப்பாட்டு அரிசி)   - 1 ஆழாக்கு 

துவரம் பருப்பு  - 1 ஆழாக்கு 

புளி     - ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவிற்கு வெந்நீரில் ஊறவைத்து, மூன்று முறை கரைத்து எடுத்துக் கொள்ளவும்.  

உப்பு  -  2 டீ ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப 

நெய்  மற்றும் நல்லெண்ணெய்  -  தலா அரை ஆழாக்கு.(வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளலாம்).

பிஸிபேளா பாத்திற்கு கறிகாய்கள் அதிகம் தேவையில்லை. வேண்டுமென்றால் கொஞ்சமாக கேரட், பீன்ஸ், பட்டாணி போடலாம். வெங்காயம் தேவையே இல்லை. 

வறுத்து அரைத்து போடுவதற்கு:


கொத்தமல்லி விரை  -  2 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு  -  1 டேபிள் ஸ்பூன் 

கசகசா  -  1 டீ ஸ்பூன் 

மிளகாய் வற்றல்  -   மினிமம்  6 அவரவர் தேவைக்கேற்ப  வேண்டுமானால் கூட்டிக் கொள்ளலாம்.

கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு 

தேங்காய் துருவல்  -  2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் 

பட்டை - சிறு துண்டு 

எல்லாவற்றையும் சிவக்க வறுக்க வேண்டும். 

ஏலக்காய், கிராம்பு,  போன்றவை தேவையில்லை.

செய்முறை: 

குக்கரில் அரிசியையும், பருப்பையும் தனித்தனி பாத்திரங்களில் வைத்து, மூன்று விசில் வந்த பிறகு அடுப்பை தணித்து ஒரு விசில் விடலாம்.    ஒரு ஆழாக்கு அரிசிக்கு மூன்றரை ஆழாக்கு தண்ணீர் விட வேண்டும். அரிசி, பருப்பு இரண்டுமே நன்றாக குழைய வேக வேண்டும்.  அவை ரெடியானவுடன் குக்கரை இறக்கி வைத்து விட்டு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, கொஞ்சம் தாராளமாக கடுகு, கருவேப்பிலை தாளித்து, கரைத்து வைத்துள்ள புளி ஜலத்தை சேர்க்கவும். அதில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கறிகாய்கள் போடுவதாக இருந்தால் அவற்றை இப்போது சேர்க்கலாம். 

பச்சை வாசனை நீங்கி, காய்கள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள சாமான்களை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடுங்கள். பிறகு பருப்பை நன்றாக மசித்துக் கொண்டு கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் சேர்க்கவும். பருப்பு நிறைய இருப்பது போல தோன்றும், அதற்காக நிறுத்திக் கொண்டு விடாமல் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கொதி விடவும். 

சாதத்தை சற்று அகலமான ஒரு பாத்திரத்தில் எடுத்து போட்டுக் கொண்டு,லேசாக மசித்து விட்டு, தயாரான சாம்பாரை அதில் சேர்த்து நன்கு  கிளறி நெய் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து கிளறி விடவும். நெய்+எண்ணெய் அதிகம் இருப்பது போல் தோன்றினாலும் அந்த அளவு தேவை. பிஸிபேளாபாத் தளர இருக்க வேண்டும்.என் அக்காவின் வார்த்தையில் சொன்னால் தொங்கத்தொங்க இருக்க வேண்டும். அதனால் நெய் சிக்கனம் கூடாது. 

இந்த பிஸிபேளாபாத்திற்கு சிலர் உருளை ரோஸ்ட்தான் சரியான காம்பினேஷன் என்பார்கள். எனக்கு பொரித்த அப்பளம் வேண்டும். 

இதன் செய்முறையை யூ டியூபிலும் பார்க்கலாம். https://www.youtube.com/watch?v=lCmQ4HwW1T0&t=8s



68 கருத்துகள்:

  1. அட? நான் தான் போணியா? பிசிபேளா பாத் என்றால் காய்களே சேர்க்கக் கூடாதே! இவர் சேர்க்கலாம்னு சொல்லி இருக்கார். கொஞ்சம் கொஞ்சம் வெங்கடேஷ் பட்டின் செய்முறை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நீங்கள்தான் முதல்!

      நீக்கு
    2. போனாப் போறதுன்னு விட்டுக்கொடுத்திருக்கேன் கீசா மேடம்..

      நீக்கு
    3. நெல்லை! எதை விட்டுக் கொடுத்திருக்கீங்க? பிசிபேளாபாத்? எனக்கு இந்த சாம்பார் சாதம், வத்தக்குழம்பு சாதம் இதெல்லாமே அவ்வளவாப் பிடிக்காது. ஓரமாக் கொஞ்சம் போல் சாம்பார்/வத்தக்குழம்பு/மோர்க்குழம்பு/பொரிச்ச குழம்புனு விட்டுக் கொண்டு தொட்டுக் கொண்டு சாப்பிடுவேன். இதான் எங்க வீட்டிலும் சண்டை வரும். நான் மட்டுமே எல்லாமும் சாப்பிடணுமா என்பார் நம்ம ரங்க்ஸ்! இஃகி,இஃகி,இஃகி! ரசம் மற்றும் மோர் தான் சாதத்தில் விட்டுக் கொண்டு பிசைந்து சாப்பிடுவேன்.

      நீக்கு
    4. எனக்குமே சாம்பார் சாதம்லாம் பிடிக்காது. யாத்திரை போகும்போது அவங்க போட்டாலும் கொஞ்சம்தான் வாங்கிப்பேன். அதுபோல, யாத்திரைலலாம் புளியோதரை பக்கமே போகமாட்டேன். உளுந்து சாதம் சாப்பிடுவேன்.

      எப்போடா தமிழக மதிய உணவு சாப்பிடாலாம்னு இருக்கு. அப்புறம் நம்ம ஊர் தோசை.

      நீக்கு
  2. அனைவருக்கும் காலை மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்று முதல் தொடங்கப் போகும் தளர்வுகள்/நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு வெற்றிகரமாய்ச் செயல்பட்டு அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா..  வணக்கம்.  இணைந்தே பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. இந்தக் கசகசாவை மட்டும் வறுத்தாலும் சரி, ஊற வைச்சு அரைச்சாலும் சரி சரியாகவே அரைபடுவதில்லை (எனக்கு மட்டும்?) ஆனால் சேர்க்கிறேன். வெறும் அரிசி+பருப்புச் சேர்த்த சூடான சாதமே பிசிபேளா பாத். இங்கே ஒரு மாத்வ ராயர் வீட்டு கிரஹப்ரவேசத்துக்குப் போட்டாங்க! சாம்பார் சாதம்/பிசிபேளா/போன்றவை கிட்டேயே போகாத நானுமே சாப்பிட்டேன். அவ்வளவு ருசி, அபாரம்!

    பதிலளிநீக்கு
  4. சரி, சரி, நான் மட்டுமே தனியா எத்தனை நாழி பேசிட்டு இருப்பேன்? போறேன், அப்புறமா எல்லாச் சாதத்தையும் நானே சாப்பிட்டுட்டேன்னு சொல்றதுக்கா? எனக்கு எதுக்கு வம்பு? போயிட்டு அப்புறமா வரேன். இல்லைனா கொஞ்ச நாழியிலே எட்டிப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   நான் சொன்ன பதிலை நீங்க கேட்கலையோ?  அப்போ நானும் தனியாத்தான் பேசி இருக்கேன்!!!

      நீக்கு
    2. அன்பின் அனைவருக்கும் இனிய திங்கள் காலை வணக்கம்.
      தொற்றின் தொல்லை நீங்கி அனைவரும்
      நலமாக இருக்க வேண்டும்.
      இறையருள் என்றும்வேண்டும்.

      நீக்கு
    3. ஹாஹாஹா, ஶ்ரீராம், நான் உடனே போயிட்டேன்னு நினைக்கிறேன். :) அதான் நீங்களும் தனியாப் பேசிட்டு இருந்திருக்கீங்க!

      நீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  6. திருமதி கலாகோபாலுக்கு நல்வரவு.
    பிசி பேளா நன்றாக வந்திருக்கிறது.
    அளவும் எங்க வீட்டில் செய்வது போல இருக்கு.
    நெய் இட்டு செய்தால் தான் நன்றாக இருக்கும்.

    கிராம்பு ,பட்டை போட்டு செய்வதும் வழக்கமில்லை.
    கசகசா நன்றாக மணம் கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நானும் கிராம்பு/பட்டை போட மாட்டேன். காரமாக வந்துடுது.

      நீக்கு
    2. சரியாக பாருங்கள் கலாவும் கிராம்பு போடவில்லை.

      நீக்கு
    3. //ஏலக்காய், கிராம்பு, போன்றவை தேவையில்லை.// ஆமாம், அவர் எழுதி இருக்கார். காலையிலேயே கவனித்தேன். நான் பதில் சொன்னது ரேவதிக்கு. :)))))

      நீக்கு
  7. பிஸிபேளா பாத் கன்னடத்துக்காரர் சமையல்.. அவர்கள் சமையல் தமிழ்நாட்டுக்காரர் சமையல் போல காரமாக இருக்காது. அதுமட்டுமல்ல இந்த பிஸிபேளா பாத்தில் அவர்கள் சின்னமன் பவுடர் சேர்ப்பார்கள் அப்படி சேர்ப்பது எனக்கு பிடிக்காது .. அது சேர்க்காமல் செய்தால் சாப்பிடலாம்.


    பிஸிபேளா பாத் பிடித்தவர்களுக்கு இங்கு தந்து இருக்கும் செய்முறையும் குறிப்பு படமும் மிக உதவியாக இருக்கும் . பிஸிபேளா பாத் பார்க்கவே தள தளவென்று நன்றாக வந்து இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்நாடகாவில்/பொதுவாகத் தமிழ்நாட்டில் வசிக்கும் கன்னடக்காரங்களும் சரி, கொஞ்சம் வெல்லம் சேர்ப்பாங்க.

      நீக்கு
  8. திருமதி கலாகோபாலின் வீடியோ மிக அருமை.
    செய்முறையில் அப்படியே எடுத்து ருசிக்கும்படி செய்திருக்கிறார்.

    மிக மிக நன்றி மா.
    நிறைய செய்முறைகள் இவர் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்
    கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடியோ வந்து நாளாகிவிட்டதுனு நினைக்கிறேன். முன்னரே வீடியோ பார்த்துட்டேன். எங்கேனு நினைவில் இல்லை.

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம். அட! என் அக்காவின் செய்முறையா? அவருக்கு லிங்க் அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. கலா அக்காவின் வீடியோவை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஜேபி சானல் என்பதால் வந்திருப்பது தெரிந்துவிடும். அக்கா நிறைய செய்முறைகள் போடுறாங்க அப்பப்போ...

    நல்லா செய்திருக்காங்க.

    எங்கள் வீட்டில் பெரியவர்களுக்குச் செய்வது போல் நல்ல ரெசிப்பி. பட்டையும் அவர்களுக்காகச் சேர்க்காமல் செய்வதுண்டு. கலா அக்காவுக்கு வாழ்த்துகள். வீடியோவும் நன்றாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிறைய செய்முறைகள் போடுறாங்க அப்பப்போ...// நகை முரண் ஹாஹாஹா!நன்றி கீதா.

      நீக்கு
  11. பிஸிபேளா பாத் -- எந்த மொழி வார்த்தை இது? அந்த வார்த்தையை பிரித்துப் பிரித்து யாராவது அர்த்தம் சொன்னால் தெரிந்து கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது கர்நாடகா ஸ்பெஷல். கன்னட மொழி. பிஸி-சூடான பேளா - பருப்பு பாத்-சாதம்.

      ஏதோ இதுக்கு விளக்கம் சொன்னேன் என்பதற்காக, மைசூர்பாக் எந்த மொழி வார்த்தை, பிரித்துப் பிரித்து அர்த்தம் சொல்லுங்க என்று என்னைச் சிக்கலில் மாட்டிவிடாதீங்க.

      அதுசரி..நம்ம ஊரில் சர்வசாதாரணமாக பகாளாபாத் என்று உபயோகிப்போமே

      நீக்கு
    2. நான் சொல்ல நினைச்சேன்.நெல்லை சொல்லிட்டார். வெங்கடேஷ் பட் தன்னோட பிசிபேளா பாத் ரெசிபியிலும் இந்த அர்த்தத்தைச் சொல்லி இருப்பார்.

      நீக்கு
    3. நன்றி நெல்லை.

      மைசூர் பாக் எனக்கு பிடித்த ஸ்வீட்.
      மான் கி பாத்-தாய் உங்கள் நினைவில் அது வந்தது ஆச்சரியம்.

      நீக்கு
    4. கன்னடியர்கள் பிசிபேளாஹூளி அன்னா என்பார்கள். ஹூளி என்றால் புளி. அதன்படி பார்த்தால் சூடான,பருப்பு,புளி சாதம் எனலாமா?
      @நெ.த.: பகாளா பாத என்பது தயிர் சாதம். அதற்கு பதம் பிரித்து பொருள் கூறுங்கள்.
      இந்த ஊர்காரர்கள் கேசரியை ஹல்வா என்கிறார்கள்.

      நீக்கு
    5. வடக்கேயும் கேசரியை ஹலுவா என்றே சொல்வார்கள்.

      நீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன் சகோதரி

    உங்கள் அக்காவின் சமையல் செய்முறையாகிய பிஸிபேளா பாத் அருமையாக உள்ளது. பதிவில் முதல் படமும், மற்ற படங்களும் நன்றாக உள்ளது. விளக்கமும் அருமை. காணொளியிலும், படிப்படியாக செய்முறை அனைத்தையும் விளக்கி செய்து காண்பித்திருக்கிறார். பிஸிபேளா பாத் பார்க்கவே அவ்வளவு ருசியாக உள்ளது. அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்ன அநியாயமா இருக்கு. கஷ்டப்பட்டு செய்திருக்காங்க ஒருத்தர். அவரைப் பாராட்டாம அவங்க தங்கையைப் பாராட்டறீங்களே...

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்!பின்னூட்டத்தை சரியாக படிப்பதில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள் நெல்லை. கமலா முதலில் என் சகோதரியைத்தான் பாராட்டியிருக்கிறார், அதை பகிர்ந்ததற்காக எனக்கும் ஒரு நன்றி,இது பொறுக்கவில்லையா உங்களுக்கு?

      நீக்கு
    3. அதானே! பானுமதி சொல்வது சரி! ஜிங்சக்க, ஜிங்சக்க, ஜிங்சக்க! ஜிங்க், ஜிங்க்! ஜிங்க்!

      நீக்கு
    4. நம்ம கமலா ஹரிஹரன் மேடம் எல்லோரையும் சகோதரி, சகோதரரே என்றுதான் விளிப்பார். பெண்களுக்கு பெண்கள் ஜால்ரா போடறதுல அதிசயம் இல்லை.

      நீங்கள் பகிர்ந்தீர்கள் என்று எப்படிக் கண்டுபிடித்தார்?

      நீக்கு
    5. வணக்கம் நெல்லைத்தமிழர்சகோதரரே

      /நான் ஏற்கனவே ஒரு முறை பிஸிபேளாபாத் திங்கற கிழமைக்கு அனுப்பியிருக்கிறேன். இது என் அக்கா திருமதி.கலா கோபாலின் செய்முறை./ என்று சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள்தான் எடுத்த எடுப்பிலேயே கூறி உள்ளார் என ஏதோ அனுமானித்தேன்.

      இரண்டாவது சகோதரிகளுக்குள் உள்ள முக சாயல் ஒற்றுமை. கீழே வீடியோவில் உள்ள திருமதி கலா கோபால் அவர்களையும் நம் பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் பதிவில் அடிக்கடி அவர்கள் சமையல் ரெசிபி மூலமாக பார்த்து கருத்துக்கள் இட்டுள்ளேன். அதனால் எனக்கு இவர்கள்தான் (சகோதரி பானுமதி) இங்கு பகிர்ந்துள்ளார்கள் என்பது புரிந்தது. (சரியோ.. தவறோ.. தெரியவில்லை. ஓரளவு விளக்கி விட்டேன் என நினைக்கிறேன். நான் சொல்வது உங்களுக்கு ஜால்ரா சப்தத்தின் இடையே கேட்கிறதோ..? ஹா.ஹா.ஹா.)

      நீங்கள் விளக்கமாக மிக அற்புதமாக சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்கள் பதிவில் அவர் பதிவுகளை குறித்து விமர்சனம் எழுதியது அருமையாக இருந்தது. பாராட்டுக்கள். அங்கேயும் சொல்லியுள்ளேன். இங்கேயும் சொல்ல வேண்டுமென தோன்றியது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. இந்த முறையில் ஒரு நாளைக்கு செய்து விட வேண்டும்.... பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து,சுவைத்து விட்டு சொல்லுங்கள். நன்றி.

      நீக்கு
  16. திருமதி கலாகோபால் அவர்களின் பிஸிபேளா பாத் நன்றாக இருக்கிறது.
    செய்முறையும் படங்களும் நன்றாக இருக்கிறது. காணொளி பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  17. இதே முறையில் செய்து பார்க்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  18. பார்க்கவே அழகாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  19. செய்முறை நன்றாக சொல்லியிருக்காங்க. காணொளியை பொறுமையா பார்த்தேன்.

    முதல்ல அவங்க சேனையையும் பீன்ஸையும் போடறாங்கன்னு நினைத்தேன். இதற்கு காய் சேர்க்கணும்னா வெண் பூசணி, சேனை இவைகளையும் சேர்க்கலாம்னு நினைக்கறேன்.

    கடைசில அவங்க விடற நெய் மற்றும் எண்ணெயைப் பார்த்துத்தான் கதி கலங்குது. இவ்வளவு ஆய்லி ஐட்டமா நான் இங்க சாப்பிட்டிருக்கேன்..அட ஆண்டவா... சர்க்கரைப் பொங்கல் பண்ண வெல்லம் கரைத்த ஜலம் சேர்ப்பது போலனா நெய்/எண்ணெய் சேர்க்கறாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெண் பூசணி,சேனை சேராது நெல்லை. பிஸிபேளாபாத்திற்கு நெய் விட்டால்தான் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  20. இட்டு அவிப்பதால் இட்லி

    தோய்ந்த மாவை வார்த்து எடுப்பதால் தோசை.

    இந்த மாதிரி பிஸிபேளா பாத்திற்கும் அர்த்த பூர்வமான பெயர்க் காரணம் ஏதேனும் உண்டோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை தமிழன் பதம் பிரித்து விளக்கியிருகிறாரே ஜீ.வி.சார்.

      நீக்கு
    2. வழக்கமா திங்கட்கிழமை இப்படி இருக்காதல்லவா?

      ஒரு மாறுதலா இருக்க்ட்டுமேன்னு தான் இதெல்லாம், பா வெ.

      நீக்கு
  21. இதுக்கு காம்பினேஷன் உருளை ரோஸ்டோ இல்லை பொரித்த அப்பளாமோ... இங்க பெங்களூர்ல காராபூந்தி ஒரு ஸ்பூன் தொட்டுக்கப் போடறான். வேற எதுவும் கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க ஓட்டலில் எல்லாம் பிசிபேளா பாத்/சௌசௌபாத் என வாங்கியதே இல்லை. மினி மீல்ஸில் அநேகமாய்ப் புளியஞ்சாதம், வெஜிடபுள் சாதம்/புலவு எனப்படும் ஃப்ரைட் ரைஸ், தயிர்சாதம் போன்றவையே வரும். ஒரு சப்பாத்தியோ/இரண்டு பூரியோ கொடுப்பாங்க. ரசம்னு பெயரில் ஒரு கிண்ணத்தில் சில ஓட்டல்களில் கிடைக்கும். பாயசம்ங்கற பேரிலே ஜவ்வரிசிக் கஞ்சி கிடைக்கும் அநேகமாய்! அம்பத்தூர் ஓ.டி.பேருந்து நிலையத்தில் இருக்கும் பாலாஜி பவனில் வெள்ளிக்கிழமை அன்னிக்குச் சர்க்கரைப் பொங்கல் தருவாங்க. நன்றாக இருக்கும். அங்கே சாம்பார் இட்லி/(மினி இட்லிகள்) சாம்பாரிலும் நெய்யிலும் குளித்துக் கொண்டு சூடாகக் கொடுப்பாங்க.

      நீக்கு
    2. பூ வந்துவிட்டது. முல்லைப்பூ. தொடுக்கப் போறேன். வரேன். அப்புறமா வரமுடியுமானு தெரியலை.

      நீக்கு
    3. உருளை ரோஸ்ட்+பொரித்த அப்பளம் இரண்டும்தான்.

      நீக்கு
    4. //பாயசம்ங்கற பேரிலே ஜவ்வரிசிக் கஞ்சி கிடைக்கும் // - நிறைய ஹோட்டல்கள்ல பாயசத்துக்கு மெனெக்கிடறதில்லை. சூடான பால், மில்க் மெயிட், குழைஞ்ச அரிசி. இல்லைனா இருக்கவே இருக்கு சேமியா கஞ்சி, ஜவ்வரிசி கஞ்சி, ரவா கஞ்சி, பயத்தம் கஞ்சி. அவங்களைப் பொறுத்தவரையில் மேல ஒரு முந்திரிப்பருப்பு சேர்த்தாச்சுன்னா பாயசம்.

      நீக்கு
  22. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள். தொற்று நீங்கி மக்கள் நலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


    பதிலளிநீக்கு
  23. பிஸிபேளா பாத் அருமை. பருப்பும் காய்கறிகளுடன், சத்தான உணவு. குழைவாக இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். நான் செய்யும் முறையில் பட்டை சேர்க்க மாட்டேன். one pot one shot ரெசிபி என்பதால் செய்வதும் எளிது. ரெசிபிக்கு நன்றி அம்மா!

    பதிலளிநீக்கு
  24. இன்னும் ஸ்ரீராம் வரலை. அதுக்குள்ளேயே 'அது' அறுபது தேறியாச்சு.

    பதிலளிநீக்கு
  25. பிஸிபேளா பாத் - வீட்டில் செய்வதில்லை என்றாலும், பல முறை சுவைத்த உணவு - கன்னட நண்பர் வீட்டில்!

    பதிலளிநீக்கு
  26. கன்னட நண்பர் வீட்டில் என்றால் ஒரிஜினல் பிஸிபேளாஹுளியனனா.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!