வியாழன், 24 ஜூன், 2021

வளவள எழுத்தா?  வளமையான எழுத்தா?  எது பிடிக்கும்?

 எழுத்தாளர்களின் எழுத்துகளை எப்படி படிக்க விரும்புவீர்கள்?

ஒரு புத்தகக் கண்காட்சிக்கே போகிறோம், அல்லது ஒரு பதிப்பகத்துக்குள் நுழைந்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.  ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் கண்முன்னே கொல்லென விரிந்து கிடக்கின்றன.  அவற்றை எடுத்துக் புரட்டினால் அது உங்களை வாங்கத்தூண்டும் வகையில் இருக்கவேண்டும்.  அப்படி வாங்கத் தூண்டுவது என்றால் உங்களைப் பொறுத்தவரை என்ன?


பாராவே பிரிக்காமல் வளவளவென வந்துகொண்டே இருந்தால் படிக்கப் பிடிக்குமா?

வர்ணனைகள் அதிகம் இருந்தால் விரும்புவார்களா?  அவசியமிருந்தாலொழிய வர்ணனைகளை வெட்டி சம்பவங்களை மட்டும் எழுதினால் பிடிக்குமா?

வட்டார மொழியில் எழுதினால் பிடிக்குமா?  இலங்கைத்தமிழில் எழுதப்பட்ட புதினங்கள் படித்திருக்கிறீர்களா?

பேச்சுமொழியில் எழுதினால் பிடிக்குமா?  தூய தமிழில் அந்தக் கால சிவாஜி ஜெமினி படம்போல வசனங்கள் இருந்தால் பிடிக்குமா?

சிலர் பேச்சு என்பதைக் குறிக்கும் அடையாளக்குறிகள் கூட இல்லாமல் எழுதுவார்கள்.  அதை ரசிப்பீர்களா?

கதை பற்றிய குறிப்புகள் இல்லாமல் உரைநடையிலேயே இருந்தால் ரசிக்குமா?

உங்களுக்கு ஏதோ ஒரு எழுத்தாளரை பிடித்துத்தான் இருக்கும்.  அல்லது ஒவ்வொரு எழுத்தாளரையும் ஏதோ ஒரு காரணத்துக்குப் பிடிக்கும்.  அவரின் எந்த பாணி பிடிக்கும்?     

வரலாற்றுக்கதைகள் - மர்மக்கதைகள் - காதல் கதைகள் - சமூக நீதிக் கதைகள் - இவற்றை எதை அதிகம் ரசிப்பீர்கள், படிப்பீர்கள்?

இப்போது முக்கியமான கேள்வி...


கதை நாவலளவு கட்டுரை படிக்கும் பழக்கமுண்டா?  பிவிஆர் எஸ்ஏபி என்பதுபோல கட்டுரையாளர் பெயர் ஏதாவது நினைவில் உள்ளதா?  உங்கள் நினைவில் உள்ள அக்கட்டுரை எது?  இலக்கியம் என்றால் கதை சம்பந்தப் பட்டதுதானா?  கட்டுரை என்றால் கூட அனுபவம் தோய்ந்த கட்டுரைகள்தானே?    சம்பவ வடிவிலோ, அனுபவ, கதை வடிவிலோ இல்லாமல் தொடர் கட்டுரைகளாக வந்து எதைப் படித்திருக்கிறீர்கள்?  

"....வாழ்வில் நடப்தெல்லாம் புனிதம் என்று சொல்லிவிட முடியாது.  அழுகலே முக்கால்வாசி.  கதை சுலபமாக முடியவேண்டும்.  தர்மம் வெற்றி பெற வேண்டும்; அதர்மம் அழிய வேண்டும்....  அதெல்லாம் நீதியை போதிப்பவர்களுக்குதான்,  இலக்கிய சிருஷ்டி செய்கிறவனுக்கல்ல"  என்று தன் 'கிரண்மயி' என்ற கதையின் கதையில் சொல்கிறார் சரத் சந்திர சட்டர்ஜி.  

சிறுகதை என்பது முறையாக ஒரு ஆரம்பம், அறிமுகம், சம்பவம், முடிவு என்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா?  எங்கு வேண்டுமானாலும் தொடங்கி எங்கு வேண்டுமானாலும் முடியும் சிறுகதைகளில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?  படிப்பவர் யூகத்துக்கு விடுவது என்பதையும் மீறி  சமயங்களில் முடிவு என்பதே இல்லாத சிறுகதைகள் படித்திருப்பீர்கள்.  எப்படி வணர்வீர்கள்?   


இவருடைய பாணி இது என்று பிரபல எழுத்தாளர்களை பாகுபடுத்த முடியுமென்றால் யார் யாரை எப்படி எப்படி வகைப்படுத்துவீர்கள்?

நீங்கள் எந்த வகையில், எந்தக் கருவில் கதை எழுதினாலும் அந்தக் கரு நிச்சயம் மகாபாரதக் காலத்திலிருந்தே எப்போதாவது அல்லது அவ்வப்போது உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் என்பது திண்ணம்.  எல்லோர் வாழ்விலும் நடப்பதுதானே சம்பவங்கள், கதைகளாகின்றன?  இப்படிப்பட்ட கதை வகைகளை மிக மிகச் சுருக்கி ஐந்து வகைகளுள் அடக்கலாம் என்றால் எப்படி அடக்குவீர்கள்?

சிறுகதை என்பதில் அதிகபட்சம் எத்தனை கேரக்டர்கள் இருக்கலாம்?  குறைந்தபட்சம்?  

ஒரு வருடத்துக்கு அல்லது அதற்கும் மேல் நீண்ட ஏதாவது ஒரு புகழ்பெற்ற நாவலை மிகச்சுருக்கி ஒருபக்கக் கதையாக எழுத முடியுமா?  ஓரளவு முன்பு இந்த மாதிரி சுருக்கி சில கதைகளை கணேஷ்பாலா கொடுத்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் இவ்வளவு கேள்விகளையும் கேட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றினாலும், தவணை முறையில் கேட்ட்டால் பொறுமை போய்விடும் என்றும் தோன்றியது.  எத்தனை கேள்விகளுக்குபதில் கிடைக்கிறது என்று பார்க்க ஆவல்.

===================================================================================================

கவிதை முயற்சி...


வானத்தை வண்ணம் குழைத்து 
வளைத்து 
வனத்தை கத்தரிக்கோலால் 
சீர்படுத்தி 
கடலை கண்ணாடியிட்டு 
மூடி 
உனக்காக ஒரு 
வசிப்பிடம் 
தயாரிக்கிறேன் 


======================================================================================================

பழைய கேள்வி ஒன்று...   பத்திரிகையில் வந்தது!


சுரண்டப்படுகிறார்களா எழுத்தாளர்கள்?

தமிழ்ப் பதிப்புத் துறை இப்போது எவ்வளவோ முன்னேறிவிட்டது. சென்னைப் புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகத் தலைப்புகளின் எண்ணிக்கை மட்டும் ஐந்து லட்சம் என்பது, பதிப்பகத் தொழிலில் எவ்வளவு கோடிகள் புரளுகின்றன என்பதற்கு ஓர் உதாரணம். புத்தகத் தயாரிப்பு, விளம்பரங்கள், சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் எல்லாம் ஆங்கிலப் புத்தகங்களுக்கு இணையாக மேம்பட்டிருக்கின்றன தமிழ்ப் புத்தகங்கள். ஆனால், புத்தகங்களை எழுதும் படைப்பாளிகளுக்குக் கொடுக்கும் சொற்பத் தொகையான ‘ராயல்டி’யைத் தருவதில் எந்த அளவுக்கு நியாயமாக நடந்துகொள்கின்றன?
அன்று முதல் இதே கதை!
கடந்த நூற்றாண்டில் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய சமயப் பின்னணி கொண்ட பதிப்பகத்தின் கதை இது. “அந்தப் பதிப்பகத்தில் வெறும் கருப்பட்டி காபி கொடுத்தே நூல்களை எழுதி வாங்கிவிடுவார்கள்” என்று புலம்பினார்கள் கருப்பக்கிளகம் சு.ராமசாமிப் புலவர் போன்றோர். பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாருக்கு பிரியாணி பிரியம் என்பதால், ஒரு பொட்டலம் பிரியாணியை வாங்கிக் கொடுத்து, மொழிபெயர்ப்பு வேலையை வாங்கிவிடுவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. புதுமைப்பித்தன் போன்றோர் பதிப்பக முதலாளியைத் தேடிப்போய் பணத்துக்காக நின்றதையும், அவர்கள் கூடுமானவரை பணம் தராமல் இழுத்தடிப்பதையும் நொந்துபோய் எழுத்திலேயே பதிவுசெய்துள்ளனர்.
பிரபஞ்சனின் கதை அப்படி
“என் அனுபவத்தில் இரு பதிப்பகங்கள் என்னை ஏமாற்றி யிருக்கின்றன. முதலாவது, இடதுசாரி இயக்கத்தோடு பிணைந்திருக்கும் ஒரு நிறுவனம். நான், எஸ். பொன்னுதுரை, வளர்மதி மூவரும் எழுதிய ஆறு நாடகங்களை எங்களது அனுமதி பெறாமலேயே அச்சிட்டு, 30 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்றிருந்தது அது. கடைசியில், தோழர் நல்லகண்ணுவை அணுகி அவர் முன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்குரிய பணத்தைப் பெற்றோம். இன்னொரு பதிப்பகம், இலக்கியப் பத்திரிகை நடத்திக்கொண்டு, தொலைக்காட்சிகளில் சர்வதேசப் பிரச்சினைகள் முதல் டிஎம்டி கம்பிகள் வரை எதுபற்றிக் கேட்டாலும் தொலைக் காட்சிகளில் அபிப்பிராயம் சொல்வாரே அவர் நடத்துகிற நிறுவனம். என் இரண்டு புத்தகங்களுக்கு அவர் எனக்கு ராயல்டியே தரவில்லை. எழுத்தாளர்களின் மரணத்துக்காகக் காத்திருக்கும் பதிப்பாளர்கள் உண்டு. ஏனெனில் அவர்கள் இறந்தவுடன் அவர்களது படைப்புகள் கிட்டத்தட்ட நாட்டுடைமையாகிவிடுவதைப் போல. அதற்குப் பிறகு ராயல்டி தொகையைத் தராமலேயே புத்தகங்களைப் பிரசுரிக்கலாம் என்பதுதான் காரணம் “ என்கிறார் பிரபஞ்சன்.
சாருவின் கதை அப்படி
“ஒரு விஷயம் சொல்லட்டுமா? எனக்குப் பதிப்பாளர்கள் தரும் ‘ராயல்டி’ தொகை செல்பேசி டாப் அப் செய்வதற்கு மட்டுமே உதவுகிறது. என்னுடைய சிறந்த நாவலான ‘ராச லீலா’ 80 பிரதிகள்தான் போயிருப்பதாகச் சொல்கிறார் பதிப்பாளர். என்னைப் போன்ற பிரபல எழுத்தாளர்களுக்கு வருடத்துக்கு 20 ஆயிரம் பிரதிகள் விற்க வேண்டும். அப்போதுதான் ‘ராயல்டி’ கௌரவமாக இருக்கும். அதுவரை இதுபற்றிப் பேசுவதே அபத்தம்” என்கிறார் சாரு நிவேதா.
இது கண்ணதாசன் கதை
“எங்கள் அப்பா எழுதிய புத்தகங்களுக்குச் சரியான ராயல்டி தொகையைப் பதிப்பாளர்கள் கொடுக்கவில்லை. அந்த நிலையில்தான் நாங்களே அப்பா பெயரில் ‘கண்ணதாசன் பதிப்பகம்’ தொடங்கினோம்” என்று சொல்லும் கவிஞர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் “தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிடுவதற்குப் புத்தகத்தின் முகப்பு விலையில் 10%; முன்பணமாக ரூ. 10,000; மொழிபெயர்ப்பாளர்களுக்குக் காப்புரிமைத் தொகையாக அன்றி, உள்ளடக்கத்தைப் பொறுத்து ஒரு பக்கத்துக்கு ரூ. 125 முதல் ரூ. 150 வரை தரும் வழக்கத்தைத் தாம் கடைப்பிடிப்பதாகத் தெரிவிக்கிறார்.
பிரதிகளும் ராயல்டிதான்!
மூன்று விதமான முறைகளை ‘ராயல்டி’ விஷயத்தில் கடைப்பிடிப்பதாகச் சொல்கிறார் ‘அடையாளம் பதிப்பகம்’ சாதிக். “சந்தையில் எப்போதும் தேவை இருக்கக் கூடிய நூலாசிரியர்களுக்கு 5% முதல் 8% தொகையை முன்பணமாகக் கொடுத்துவிடுவோம். ஓரளவு விற்பனை வாய்ப்புள்ள எழுத்தாளர்களுக்கு முகப்பு விலையில் 10% தொகையைப் புத்தகங்கள் விற்க விற்கக் கொடுப்போம். தொடக்க நிலை எழுத்தாளர்கள் என்றால், புத்தகத்தின் 25 பிரதிகளை மட்டுமே ‘ராயல்டி’யாகக் கொடுப்போம்” என்கிறார். புத்தகம் விற்ற எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் 7.5% முதல் 10% வரை ‘ராயல்டி’யாகத் தரும் முறையைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார் ‘கிழக்குப் பதிப்பகம்’ பத்ரி சேஷாத்ரி.
சர்ச்சையின் நாயகன்
சமீப காலமாக இணைய விவாதங்களிலும், முகநூலிலும் காப்புரிமைத் தொகை தொடர்பாக அதிகம் சர்ச்சைக்குள்ளாகிவரும் பதிப்பகம் ‘உயிர்மை பதிப்பகம்’. இதுகுறித்து அதன் பதிப்பாளர் மனுஷ்யபுத்திரனிடம் கேட்டபோது, “நாங்கள் 10% ‘ராயல்டி’ வழங்குகிறோம். அதிகமாக விற்பனையாகும் எழுத்தாளர்களின் நூல்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இந்தத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், இளம் எழுத்தாளர்கள் பெரும்பாலானோரின் நூல்கள் ஆண்டுக்கு 100 முதல் 150 பிரதிகள்கூட விற்பதில்லை. கவிதைத் தொகுப்புகளின் நிலை இன்னும் மோசம். ஆண்டுக்கு 50 பிரதிகள்கூட விற்பனையாகாத ஒரு புத்தகத்தை எழுதிய கவிஞர், ‘பதிப்பாளர் ராயல்டி தராமல் ஏமாற்றுகிறார்’ என்று கூசாமல் எழுதினால் என்ன செய்ய முடியும்? விற்பனையாகாத நூல்கள் மீது ஏகப்பட்ட தொகையை முதலீடு செய்துவிட்டுத் தவிக்கிறேன்” என்கிறார்.
என்னதான் நடக்கிறது?
ஆண்டுதோறும் ஒருபுறம் புத்தக வெளியீடுகளும் விற்பனையும் அதிகரிக்கின்றன; இன்னொருபுறமோ எழுத் தாளர்கள் ‘ராயல்டி’ தரப்படுவது இல்லை என்கிறார்கள்; பதிப்பாளர்கள் ‘நஷ்டத்தைச் சந்திக்கிறோம்’ என்கிறார்கள். எனில், எதை நம்பி ஓர் எழுத்தாளர் எழுதுகிறார்? எதை நம்பி ஒரு பதிப்பாளர் பதிப்பிக்கிறார்?
- தி இந்து -
============================================================================

வல்லிக்கண்ணன் 'மீனுக்குட்டி' என்று ஒரு கதை எழுதி பிரசுரமானதும் ஏதோ சர்ச்சை வந்துள்ளது.. அப்போது குமுதத்தில் வந்த அது பற்றிய கடிதங்கள்...


ஜோக்கு... ஜோக்கு...



209 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இறைவன் அருளால் எங்கும் ஆரோக்கியமும்
    அமைதியும் நிலவ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு வியாழன் பதிவுக்கு நன்றி ஸ்ரீராம்.

    வல்லிக்கண்ணன் மீனுக்குட்டி கதை அருமை.
    இதே போல ஆங்கிலக் கதையையும் படித்திருக்கிறேன்.
    அப்போதெல்லாம் ரீடர்ஸ் டைஜஸ்ட் மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. மனை புலி ஜோக் அரதப் பழசு என்ரளும் புன்னகைக்காக இருக்க முடியவில்லை.

    நாத்திகனுக்குத் தான் எத்தனை நம்பிக்கை!! அட்டகாசம் நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா..   அதுபோல நிறைய நிறைய ஜோக்ஸ் உண்டு!   

      நீக்கு
  4. அட ராமா. கேள்வியின் நாயகனே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. இரண்டு பதில்களுக்கு முன்னால் என்றாலும் என்று இருக்க வேண்டும்.
      !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1 வேண்டுமென்றே போட்டது:))))

      நீக்கு
  6. புத்தகம் , ராயல்டி, ஏமாற்றம் வருத்தம்.
    பின் எதற்கு இன்னும் புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன? வாங்கிக் கொண்டே இருக்கிறோம்!!!!
    எழுத்துக்குத்தானே மதிப்பு. புரியவில்லை இந்த விவகாரம்.
    எழுத்தாளர்கள் பாவம் தான்.
    பத்ரி, காந்தி கண்ணதாசனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிப்பாளர்களுக்கு அவ்வளவு நஷ்டம் வருவதில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  7. கவிதை முயற்சி மிகப் பிடித்திருக்கிறது.
    வானத்தை வில்லாய் வளைத்து
    மணலைக் கயிறாய்த் திரித்து
    காதலன் கயிற்றில் ஏறி
    விண்ணைச் சாடுவான் காதலிக்காக:)

    பதிலளிநீக்கு
  8. சுஜாதா பாணி பிடிக்கும்.
    ராஜ நாராயணன் ஐயா நடை பிடிக்கும்.
    வட்டார மொழியில், பேசுகின்ற பாணியில்

    நல்ல முடிவு கொண்ட,சஸ்பென்ஸ் இல்லாத
    கதை பிடிக்கும்.
    அனாவசிய பெண் வர்ணனைகள் எந்த வர்ணனைகளும்
    அளவோடு பிடிக்கும்.

    காதல் கதை எழுதுகிறேன் என்று வேறு விதமாக
    யாராவது எழுதினால் தூக்கிப் போடத்தான் தோன்றும்.

    நம் ரிஷபன் சார் கதைகளும் நன்றாக இருக்கும்.
    பானு வெங்கடேஸ்வரன் மாதிரி சமீபக் கால கதைகள்.
    சாவி சார் போல இயல்பான கதை.

    கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்கிறேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா.   தொடரக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
    2. ஆஹா! எப்பேர்பட்டவர்களோடு என்னையும் சேர்த்து விட்டீர்கள் அக்கா! மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டேன். நன்றி! நன்றி! நன்றி!

      நீக்கு
    3. பானுமதி யதார்த்தமாக இப்போதைய சூழ்நிலையை ஒட்டிக்கதைகள் படிக்கிறார். ஏற்கும்படியும் இருக்கும். நச்சென்று சுருங்கச் சொல்லியும் விளங்க வைக்கிறார். இயல்பாகவே இது அவருக்குக் கை வந்துள்ளது. இது ஒரு வரம்.

      நீக்கு
    4. கதைகள் "வ"டிக்கிறார் என்பது "ப"டிக்கிறார் என வந்திருக்கு. கண்ணாடிக்கு "வ" "ப" இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை.

      நீக்கு
  9. தி.ஜானகிராமன் மாதிரி ஒரு எழுத்துக்கூட
    விரயம் இல்லாமல் எழுத வேண்டும்.நாவல்கள் இப்போது கூடப்
    புதிதாக லைப்ரரியில் இருந்து வந்திருக்கின்றன.

    எல்லாம் நானூறு பக்கத்துக்குக் குறையாத
    புத்தகங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒரு எழுத்துக்கூட விரயம் இல்லாமல் //

      அடடே...    சூப்பர்.

      நீக்கு
    2. ஆமாம் மா. அந்த மாதிரி எழுதுவது, கண்ணதாசன் மாதிரி சிந்தனை,
      சுசீலாம்மா மாதிரி குரல்'

      எல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான்.
      அந்தக் கால வசன நடை எழுத்து இப்போது வேண்டாம். அதற்காக
      நான் எழுதுவது போல கமா,ஃபுல்ஸ்டாப்
      இல்லாமல் எழுதக் கூடாது.

      நீக்கு
    3. //நான் எழுதுவது போல கமா,ஃபுல்ஸ்டாப் இல்லாமல்//

      அப்படியா?  எனக்கு அப்படித் தோன்றவில்லையே...

      //கண்ணதாசன் மாதிரி சிந்தனை, சுசீலாம்மா மாதிரி குரல்'//

      சூப்பர்மா

      நீக்கு
    4. வல்லிம்மா.... என்ன இது...போகிற போக்கில் சாண்டில்யனை இடித்துவிட்டுப் போறீங்களே... அவர் கதையின் ஆரம்ப வர்ணனையே இரண்டு மூன்று பக்கங்கள் கமா, புல்ஸ்டாப் இல்லாமல் போகும், அதிலேயே கதை நடக்கும் சூழலை அச்சடித்ததுபோல வாசகர் மனதில் கொண்டுவந்துவிடுவாரே... அவர் நாவல்களில் எனக்கு ரசிக்கமுடியாத்து, காதல் கொண்டவர்கள் பேசிக்கொள்ளும் பக்கம் பக்கமான உரையாடல்கள். ஆனால் அதையும் ஏராளமானவர்கள், குறிப்பாக பெண்கள் ரசிப்பார்கள் என நினைக்கிறேன்.

      நீக்கு
    5. சாண்டில்யன் கதைகளில் நான் வர்ணனைகளை விட்டு விடுவேன்.  அவரது போர்க்காட்சிகளை ரசித்துப் படிப்பேன்.  இந்தக் கால தமிழ்ப்படங்களில் ஹீரோவுக்கு கொடுக்கும் மாஸ் என்ட்ரி எல்லாம் அவர் எழுத்தின் முன் பிச்சை வாங்கவேண்டும்.

      நீக்கு
  10. கேள்விக்கணைகள் மலைக்க வைக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ பதில் கிடைக்காதா ஜி?

      நீக்கு
    2. இப்படிப்பட்ட கதை வகைகளை மிக மிகச் சுருக்கி ஐந்து வகைகளுள் அடக்கலாம் என்றால் எப்படி அடக்குவீர்கள்?//////////////////////// அரசியல், சரித்திரம், சமூகக் கண்ணோட்டம்,
      அன்றாட வாழ்க்கை, எதிர்காலப் பார்வை.
      எனக்குத் தெரிந்த ஐந்து.

      நீக்கு
    3. வேறு வகையில் வகைபப்டுத்த முடியுமா?  சுஜாதா யாரோ ஒரு வெளிநாட்டுக்காரர் மொத்தம் 36 தீம்தான் இருக்கிறியாது என்று சொன்னதாகச் சொல்வார்.

      நீக்கு
    4. 36 themes? hmmmmmm. குணங்களின் கோணங்களில்,
      கணவன் மனைவி பிரச்சினைகள்,
      அல்லது பிரேமைகள்,
      வயதானவர்களில் பொறுமை மற்றும் பொறுமை இன்மை,

      பழைய நினைவுகளில் ஓடித் திரும்பி வருவது,
      நட்பும் காதலும்,
      த்ரில்லர் என்ற பேரில் கிடைக்கும் அறுவைகள்.,

      சிறந்த ஆங்கில நாவல்களில் பிரமிப்பூட்டும்
      தியரீஸ் கிடைக்கும்.

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் அமைதியும் நிம்மதியும் மகிழ்வும் மேலோங்கி ஆரோக்கியமான வாழ்க்கைக்குப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. நம் கீதாம்மாவின் உடல் நலம் மேம்படப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாச்சு... காலையிலேயே இப்படி மனதைக் கலவரப்படுத்துறீங்களே

      நீக்கு
    2. நல்லா இருக்கேன் நெல்லை. கொஞ்சம் கால் வலி! கால்கள் நடக்க மறுக்கின்றன. அவ்வளவே! :)

      நீக்கு
    3. இப்போ தேவலாமா?  நடக்க முடிகிறதா?

      நீக்கு
    4. எங்கே! தத்தித் தத்தி நடை பழகிக் கொண்டிருக்கேன். தம்பி இன்னிக்குத் தான் மாத்திரைகளை அனுப்பி இருக்கார். தபால் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்திருக்கு. அநேகமாய் நாளைக்கு வந்துடும். அப்புறம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும்.

      நீக்கு
  13. எழுத்து எது பிடிக்கும் என்றால்? நல்ல எழுத்து எல்லாமே பிடிக்கும். பிடித்த நாவல் ஆசிரியர்கள் பலர் உண்டு. இப்போக் கி.ராஜநாராயணனின் "கரிசல் காட்டுக் கடிதாசி" அநுத்தமாவின் "தவம்" இரண்டும் படிக்கிறேன் மாற்றி மாற்றி. மனம் சஞ்சலமாக இருந்தால் தேவன் நகைச்சுவைக் கதைகள் தான் துணை. கட்டுரையாளர்கள் எனில் எம்.எஸ். உதயமூர்த்தி, எஸ்விவி, பாஸ்கரத் தொண்டைமான், அவர் தம்பி (சட்டுனு பெயர் மறந்துட்டேன்) :(, நாரண.துரைக்கண்ணன், நீதிபதி எம்.எஸ். இஸ்மயில், நீதிபதி மஹாராஜன் இவங்க கட்டுரைகள். எல்லோருமே அந்தக் கால ஆனந்த விகடனில் எழுதினவர்கள் தாம். நாரண.துரைக்கண்ணனின் இலக்கியக் கட்டுரைகள் பிரமாதமாக இருக்கும். சித்ரலேகாவின் ஓவியங்களோடு "சிலம்புச் செல்வம்" என்னும் தலைப்பில் திரு மபொசி எழுதிய இலக்கியக்கட்டுரைகளுக்கு ஈடு இணை இல்லை. கல்கண்டில் தமிழ்வாணனின் கட்டுரைகளும் அப்படியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா என்னாச்சு உடல் நலம்?

      பிரார்த்தனைகள்

      கீதா

      நீக்கு
    2. நான் கிரா படித்ததே இல்லை.  அது போலவே நாநா வும்!

      நீக்கு
    3. கி.ராஜநாராயணனைப் படிக்க ஆரம்பித்தால் விட மாட்டீர்கள். பக்கத்தில் இருந்து பேசுவது போன்ற உணர்வு ஏற்படும்.

      நீக்கு
    4. பாஸ்கரத் தொண்டைமான் தம்பி தொ.மு.சிதம்பர ரகுநாதன்.இவர் புத்தகங்களும் என்னிடம் இருந்தன. தோழர் ஜீவாவுடன் நெருங்கிய தொடர்பு என நினைவு. இவரும் கொஞ்சம் கொஞ்சம் கம்யூனிஸம் சார்ந்தவர் தாம் என்றாலும் இலக்கிய ஞானம் அபாரம். அதைவிட நம் பழைய வரலாற்றின் மேல் அபாரப் பற்று.

      நீக்கு
  14. அனைவருக்கும் காலை வணக்கம். நீண்ட, யோசிக்க வைக்கக்கூடிய பதிவு. மெதுவாகத்தான் பதில் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானு அக்கா வாங்க...  கேள்விகளை கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டிருக்கலாமோ!

      நீக்கு
  15. காலை வணக்கம் எல்லோருக்கும், வல்லிம்மா மாலை வணக்கம்

    ஸ்ரீராம் சூப்பரோ சூப்பர் பதிவு ஆரம்பம். இப்போதான் வாசிக்கத் தொடங்கினேன். ஒவ்வொன்றாக வருகிறேன்.

    வளமையான எழுத்து பிடிக்கும். (ஆனால் நான் எழுதுவது வள வள!!! ஹிஹிஹி)

    பாராவே பிரிக்காமல் வளவளவென வந்துகொண்டே இருந்தால் படிக்கப் பிடிக்குமா?//

    நோ (முக்கியமான கருத்துகள். உணர்வுகள் கொண்டதாக இருந்தால் கூட அதைப் பிரித்து எழுதலாம் என்று தோன்றும்)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிப் பெரிய பாராவாக வசனம் வந்தால் கூட அதைக் கொஞ்சம் உரையாடல்கள் பாணியில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். முக்கியமான விஞ்ஞானத் தகவல்கள் என்றால் பாரா பிரித்து எழுதலாம்.
      (ஸ்கூல் படிச்சப்ப இப்படி பாரா பிரிக்காமல் வரலாறு பாடம் வந்ததால்தானே கண்ணைக் கட்டிச்சு!!!!!!)

      கீதா

      நீக்கு
    2. வாங்க கீதா..  ஒண்ணொண்ணா வாங்க! எனக்கு சில சமயங்களில் சில சாதாரண வார்த்தைகளை சேர்த்து எழுதணுமா, பிரித்து எழுதணுமா என்று சந்தேகம் வந்துவிடும்.  உதாரணமாக வந்துவிடும் சரியா, வந்து விடும் சரியா?  இப்படி!

      நீக்கு
  16. ஒவ்வொரு எழுத்தாளருக்கு ஒவ்வொரு நடை/பாவனை/எழுதும் விதம். பிவிஆர் எனில் உரையாடல்களிலேயே கதையை அதிகம் தொடருவார். ராஜம் கிருஷ்ணன், அனுத்தமா, சூடாமணி போன்றவர்கள் கலந்து எழுதுவார்கள். அதாவது உரையாடலும் நிகழ்ச்சிகளும், சிந்தனைகளுமாகக் கலந்து வரும். லக்ஷ்மியும் அப்படித் தான். சிவசங்கரியும் இந்துமதியும் அவங்களுக்குத் தெரிந்தவற்றை எல்லாம் தங்கள் எழுத்தில் கொண்டு வந்துவிடுவார்கள். சிவசங்கரி கதைகளுக்கு ஊடே சின்னச் சின்னச் சமையல் குறிப்புக்களும் தருவார். சிவசங்கரியும் சுய முன்னேற்றக் கட்டுரைகள் பல எழுதினார். ஆனந்த விகடனில் வந்த அவருடைய "சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?" என்னும் கட்டுரை பிரபலமான ஒன்று. இப்போதைக்குப் போதும். பின்னர் முடிஞ்சால் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா சாம்பசிவம் அம்மா (கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹாஹாஹா) சொல்ற எழுத்தாளர்கள் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தவங்களோ?

      நீக்கு
    2. எனக்குத் தெரிந்து இரண்டு எழுத்தாளர்களின் எழுத்துகளை கேரக்ட்டர்கள் பெயரைக் கொண்டே சொல்லி விடலாம்.  ஊ..  ஹூம்..  இந்த வார்த்தையை இப்படி அமைப்பதைவிட, 

      கிரேசி மோகன், அகஸ்தியன் (கடுகு) போன்றோர் எழுத்தை அவரின் நிரந்தர கேரக்டர்கள் பெயரைக்கொண்டே சொல்லி விடலாம்! மைதிலி,  மாது, சீமாச்சு, கமலா தொச்சு இப்படி!

      நீக்கு
    3. நெல்லை, காலம்பரவே உங்க கிண்டலைப் பார்த்தேன்/படித்தேன். உண்மையில் நான் தமிழின் முதல் நாவலில் இருந்து எல்லாமும் படித்திருக்கிறேன். எத்தனையோ முறை இதைச் சொல்லியும் இருக்கேன். விநோத ரஸமஞ்சரியில் இருந்து, ஆனந்தரங்கம் பிள்ளை டயரி, பாரதியாரின் காலத்தில் வந்த யங் இந்தியாவின் கட்டுரைகள், சுதேசமித்திரனில் வந்த பாரதியின் கட்டுரைகள் எனத் தாத்தாவிடம் ஒரு பெரிய பீரோ நிறையப் புத்தகங்கள் உண்டு. அவற்றை அநேகமாய்ப் படித்திருக்கிறேன். ஆகவே பதினெட்டாம் நூற்றாண்டு என்றே வைச்சுக்கோங்க! :)))))

      நீக்கு
  17. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  18. ஓவ்வொரு எழுத்தாளரின் நடை ஒவ்வொரு விதமாக இருக்கலாம்....இருந்தாலும்

    வர்ணனைகள் அதிகம் இருந்தால் விரும்புவார்களா? அவசியமிருந்தாலொழிய வர்ணனைகளை வெட்டி சம்பவங்களை மட்டும் எழுதினால் பிடிக்குமா?/

    தேவையற்ற, கதையோடு பொருந்தாத (கதை என்றால்)வர்ணனைகள் போரடிக்கும். ஸ்கிப் செய்யத்தான் செய்வார்கள். ஆனால் அதே வர்ணனைகள் ஈர்க்கும் படி அளவோடு இருந்தால் சுவாரசியமாக இருந்தால் பிடிக்கும், நம்மை அந்த உலகிற்கே அழைத்துச் செல்வது போன்றான எழுத்து.

    வட்டார மொழியில் எழுதினால் பிடிக்குமா? இலங்கைத்தமிழில் எழுதப்பட்ட புதினங்கள் படித்திருக்கிறீர்களா?//

    ஓரளவு புரிகிற வட்டார எழுத்து, கதையின் போக்கு, சுவாரசியம் என்பதைப் பொருத்து. இலங்கைத் தமிழில் புதினங்கள் வாசித்ததில்லை, (நம் பூஸாரின் கதைகள் பதிவுகள் தவிர!! ஹஹஹஹா) சில குறும்படங்கள் பார்த்திருக்கிறேன். ஓரிரண்டு சிறுகதைகள் வாசித்திருக்கிறேன். டக்கென்று தலைப்பு நினைவில்லை. வலைத்தளத்தில்தான். புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதியதல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எழுத்தாளர் முத்துலிங்கத்தின் நாவல் கதைகளை வாசித்திருக்கிறேன். புரியாத வார்த்தைகளுக்கு என் அலுவலகத்தில் இருந்த இலங்கைத் தமிழர்களைக் கேட்டுக் குறித்துக்கொள்வேன். சுவாரசியமாக அவர் எழுதுவார். (கனடாவில் வசிக்கிறார்).

      நீக்கு
    2. சில வர்ணனைகளை பின்னர் வரும் வியாழனில் கொடுக்க உத்தேசித்திருக்கிறேன்.  அதேபோல சிலவகை எழுத்துகளையும்...   அந்தக்காலம் அப்புறம் வந்த காலம் இப்படி...

      நீக்கு
    3. முத்துலிங்கம் என்கிற பெயர் நான் கேள்விபப்ட்டதில்லை நெல்லை..   இலங்கை எழுத்தாளர்களில் காஞ்சனா ஜெயதிலகர், கார்த்திகேசு போன்ற பெயர்கள் கேள்விப்பட்டிருக்கிறேன்.

      நீக்கு
    4. வர்ணனைகள் ஆனாலும் நான் விட்டதில்லை. முக்கியமாய்ச் சாண்டில்யன் கதை/நாவல்களில். அவற்றில் பல முக்கியமான விஷயங்கள் பொதிந்திருக்கும். தமிழ் இலக்கியத்தில் அதிகம் ஈடுபாடு உண்டாகும்.

      நீக்கு
    5. சித்தப்பா கொடுத்து முத்துலிங்கத்தின் நாவல்கள் ஒன்றிரண்டு வாசித்திருக்கேன். காஞ்சனா ஜெயதிலகர் மிகவும் பிரபலமான பெண்மணி. கார்த்திகேசுவும் தான். கார்த்திகேசு மின் தமிழ்க் குழுமத்துடன் நெருங்கிய நட்பில் இருந்தார் என நினைவு.

      நீக்கு
  19. இன்றைய பதிவை, புதன் கேள்வி பதில் பகுதியில் சரியான கேள்விகள் வருவதில்லை என்ற கடுப்பில் எழுதியிருப்பாரோ?

    நிறைய கேள்விகள். ஒண்ணொண்ணுமே யோசிக்க வைக்கின்றன. 200க்கும் குறையாத பின்னூட்டங்கள் வரும். ஜீவி சாரே பத்து எழுதினால் ஆச்சர்யம் இல்லை.

    நேரமிருந்தால் நானும் வளவளன்னு எழுதறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேச்சே..   அப்படி எல்லாம் இல்லை நெல்லை.  முதலில் வியாழன்களில் ஓரிரு கேள்விகளாகக் கேட்கலாம் என்று தோன்றியது.  அப்புறம் பொறுமையில்லாமல் போய்விட்டது!!  புதன் எங்களைப் பொறுத்தவரை பதில் சொல்லும் நாளாகத்தான் மனதில் பதிந்துள்ளது!

      நீக்கு
  20. பின்னர் மெதுவாவ யோசிச்சு வந்து வளமமையா (ஹிஹிஹி) போடலாம் என்று நினைத்தால் நம்ம ப்ளாகர் வூப்ஸ் சொல்லிவிடுமே என்ற பயம் அதனால் இப்ப மனதில் தோன்றி போட முடிந்ததை போட்டுக் கொண்டு வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  பதில் சொல்ல நினைத்தாலும் பிளாக்கரும், கணினியும் அனுமதிக்கவே வேண்டுமே..  இல்லையா கீதா?

      நீக்கு
  21. பதிவுலகில் இவங்க இவங்க எழுத்துகள் பிடிக்கும் என எழுத எனக்குப் பிடிப்பதில்லை. எல்லா எழுத்தாளர்களின் எழுத்தையும் வாசித்திருக்க மாட்டோம். ப்ரெஜுடிஸில் சிலரைப் பிடிக்காமல் போயிருக்கும். எழுத்து வேறு எழுத்தாளர் வேறு எனப் பிரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் குறிப்பிடும்போது பலரைக் குறிப்பிட விட்டுப் போயிடும். அப்புறம் இவரை மறந்தேன் அவரை மறந்தேன் என்றால் பலரின் மனவருத்தத்துக்கு, அதிலும் எளுத்தாளர்கள் ஜென்ஜிடிவ், ஆளாகணும்.

    வெறும் கதையை விமர்சித்தாலே, ஒருவேளை நீதிபதி ஸ்தானத்தில் இருந்தால் தூக்குத் தண்டனை கொடுத்துவிடுவார்கள் போன்ற நிலைமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை ஹைஃபைவ்!

      நான் இதை கீழே கடைசியில் உங்களைப் போல் சொல்ல வராவிட்டாலும் இதே கருத்தைப் பொதுவாகச் சொல்ல நினைத்தேன்...இப்ப நான் போட்ட கருத்து வரவும் உங்கள் கருத்து மேலே கண்ணில் பட்டது.. ஸோ ஹைஃபைவ்!

      (நான் ரொம்ப பெரிய விமர்சகரும் கிடையாது!!!)

      கீதா

      நீக்கு
    2. பதிவுலகில் என்று கணக்கெடுத்தால் வருத்தம் வரும் நெல்லை.  கதை, நாவல் கட்டுரை எழுதும் பெரிய எழுத்தாளர்களை பற்றி பேசினால் தொல்லை இல்லை.  எழுத்தாளரின் எழுத்து வேறு, எழுத்தாளர் வேறு என்கிற அறிவே வாசகனுக்கு ரொம்ப லேட்டாகத்தான் வரும்.  ஆனால் இந்த வகையிலும் ஜேகே போன்ற எழுத்தாளர்களை சேர்க்க முடியாது.

      நீக்கு
  22. பேச்சுமொழியில் எழுதினால் பிடிக்குமா? தூய தமிழில் அந்தக் கால சிவாஜி ஜெமினி படம்போல வசனங்கள் இருந்தால் பிடிக்குமா?//

    பொதுவாக உரையாடல்கள் பேச்சு மொழியில் இருப்பது பிடிக்கிறது. யதார்த்தமாக இருப்பது போல் தோன்றுவதால். நாம் அன்றாடம் தூயதமிழில் பேசுவதில்லை என்ற காரணத்தால்.
    தூயதமிழில் சின்னதான உரையாடல்கள் வந்தால் ரசிக்க முடிகிறது. கதை சுவாரசியமாக விறுவிறுப்பாக இருந்தால் அது எந்த நடையில் இருந்தாலும் மனம் அதில் லயித்துவிடும்.

    ஆனால்....அந்தக்காலத்து சிவாஜி, ஜெமினி படங்கள் வசனங்கள் வரலாற்றுக் கதை, ஆன்மீகக் கதைகள் என்றால் நான்றாகப் பொருந்திப் போவது போல் தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணியனின் சில கதைகளிலும், தமிழ்வாணன் கதைகளிலும் அப்போது தூய தமிழ் காணப்பபட்டதுண்டு.  அப்புறம் மெல்ல மெல்ல மாறியது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் இப்போது நினைவுக்கு வருகிறது தமிழ்வாணன் கதைகளில் சரியாக நினைவில்லை. கள்ளத்தனமாக வாசிப்பது எதுவும் நினைவில் நிற்பதில்லை!!! ஏதோ ஒரு கதை தலைப்பும் தூய தமிழில்தான் இருக்கும். பெயர்கள் எல்லாமே. சங்கர்லால் கதை என்று நினைக்கிறேன். எனக்கு திரில்லர், துப்பறியும் கதைகள் மிகவும் பிடிக்கும் என்பதால்...ஒன்றே ஒன்று வாசித்த நினைவு..

      கீதா

      நீக்கு
  23. அதே.. அதே!..

    வானத்தை வளைத்து
    வார்த்தையில் பிழைத்து
    வானவில் குழைத்து
    வண்ணத்தை இழைத்து
    வனத்தைக் கத்தரித்து
    வாழ்வைச் சித்தரித்து
    கண்ணாடி கொண்டு
    கடலினை மூடி
    கட்டினேன் மாளிகை
    கண்மணி..
    கண்கொண்ட மலருடன்
    கைகொண்ட மனதுடன்
    விளக்கேற்ற வா.. வா..
    மின்மினி...

    இன்று பாட்டுக்கும் இசைக்கும்
    பிறந்த நாள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      நலமா? தற்சமயம் தங்கள் உடல்நிலை முற்றிலும் குணமாகியிருக்குமென நம்புகிறேன். தங்கள் கவிதை அருமையாக உள்ளது. அழகான முத்து முத்தான கவிதைக்கு வரிகள் உங்களிடம் கொட்டிக் கிடக்கின்றன. என்றும் வார்த்தைப் பஞ்சமே வந்தது கிடையாது. மனம் நிறைந்த வாழ்த்துகளுடன் கவிதையை படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. இன்னும் சில வரிகளும் ஆங்காங்கே அணிவகுத்து அழகு சேர்த்து அழகியை அழைக்கிறதே...

      நீக்கு
    3. தங்களது அன்பினுக்கும் வாழ்துரைக்கும் நன்றி..

      இந்தப் பதிவில் அன்பின் ஸ்ரீராம் அவர்களது கவிதையின் மறுபதிப்பு தான் இது...

      நீக்கு
    4. அன்பின் ஸ்ரீராம் அவர்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    5. அழகான மறுபதிப்புக்கு வாழ்த்துகள் துரை.

      நீக்கு
    6. துரை அண்ணா அசத்தல்!! அழகான மறுபதிப்பு!!! ரசித்தேன்

      //இன்னும் சில வரிகளும் ஆங்காங்கே அணிவகுத்து அழகு சேர்த்து அழகியை அழைக்கிறதே...//

      ஆம் ஆம் என் கண்ணழகியை!!!!

      கீதா

      நீக்கு
  24. ப்ளாகர் படுத்த தொடங்கிவிட்டது....

    சிலர் பேச்சு என்பதைக் குறிக்கும் அடையாளக்குறிகள் கூட இல்லாமல் எழுதுவார்கள். அதை ரசிப்பீர்களா?//

    கதை வாசிக்கக் கஷ்டமாக இருக்கும். (என் தனிப்பட்டக் கருத்து)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே கருத்துதான் எனக்கும்!

      நீக்கு
    2. சித்தப்பா என்னிடம் கோமகள் என்னும் எழுத்தாளரின் நாவல் ஒன்றைக் கொடுத்துப் படித்துச் சொல்லச் சொன்னார். படித்ததும் நான் சொன்ன முதல் கருத்து, எங்கும் பங்க்சுவேஷனே இல்லை என்பதே! சித்தப்பாவுக்கு ஒரே சிரிப்பு! :)

      நீக்கு
    3. கோமகள் எழுதிய 'இனிக்கும் நினைவுகள்' என்னும் ஒரே ஒரு புத்தகம் படித்திருக்கிறேன்.  இரண்டு மருத்துவர்கள் பற்றிய கதை என்று நினைவு.  எனக்கும் என் இளைய சகோதரிக்கும் அப்போது பிடித்திருந்தது!

      நீக்கு
  25. எனக்கு வாசிப்பு கம்மிதான் ஸ்ரீராம். இப்போதுதான் வாசித்து வருகிறேன். அதுவும் நேரம் கிடைக்கையில். தடங்கல்கள் நிறைய.

    சுஜாதாவின் எழுத்து பிடிக்கும். அவர் கட்டுரை மூளை பற்றியது முழுவதும் வாசித்ததில்லை என்றாலும் ரொம்பப் பிடித்தது.

    அது போல சிவசங்கரியின் சின்ன நூல்கண்டா நம்மைச் சுற்றுகிறது என்பதும் பிடித்தது. அதுவும் முழுவதும் வாசிக்க முடியலை.

    எம் எஸ் உதயமூர்த்தி, இறையன்பு இவர்களின் கட்டுரைகள் சில வாசித்திருக்கிறேன் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் அதுவும் மிகச் சில பகுதிகள் மட்டுமே வாசித்திருக்கிறேன். வாசித்த பகுதிகள் வெகு சுவாரசியாமாக இருந்தது பிடித்தது.

      கீதா

      நீக்கு
    2. நானும் நிறைய எழுத்தாளர்கள் வாசித்ததில்லை கீதா.

      நீக்கு
    3. இறையன்பையும், சுகி சிவத்தையும் விட்டுட்டேன். அவர்கள் எழுத்தும் நன்றாக இருக்கும். ஆன்மிகம் எனில் சுதா சேஷையன், முக்கூர், கிருபானந்த வாரியார், ரா.கணபதி ஆகியோர்.

      நீக்கு
  26. மீண்டும் கோகிலா..
    மீண்டும் புதன்கிழமை!..

    பதிலளிநீக்கு
  27. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  28. வரலாற்றுக்கதைகள் - மர்மக்கதைகள் - காதல் கதைகள் - சமூக நீதிக் கதைகள் - இவற்றை எதை அதிகம் ரசிப்பீர்கள், படிப்பீர்கள்?//

    முதல் இரண்டும் ரொம்பப் பிடிக்கும். வரலாற்றுக் கதைகளில் அனாவசிய வர்ணனை இல்லாமல் இருந்தால் பிடிக்கிறது.

    காதல் கதைகள் எப்போதுமே அத்தனை பிடிப்பதில்லை. அதாவது கதையின் இடையில் வந்தால் ஓகே.

    ஆனால் அதுவே முழுதாக எனும் போது அதுவும் வழக்கமான காதல் உரையாடல்கள் என்று சுவாரசியமும் இல்லை என்றால் போரடிக்கிறது. ஒருவேளை வயதும் காரணமாக இருக்கலாமோ?!!!!

    ஆனால் கல்லூரி சென்ற வயதில் கூட என் தோழிகள் மில்ஸ் அண்ட் பூன்/இங்கு அப்படி எழுதுகிறார் என்று பிரபல எழுத்தாளரின் கதைகளை விழுந்து விழுந்து படித்து விவரிப்பார்கள். அவர்கள் சொன்னதால் புத்தகம் கொடுத்ததால் ஒன்றிரண்டு கல்லூரியிலேயே வைத்து (வீட்டில் கதைகள் வாசிக்க முடியாதே!!) என்னை அவை ஈர்க்கவில்லை.

    சமூக நீதிக்கதைகள் நீதி சொல்வது போல் இல்லாமல் இடையிடையே மறைமுகமாக விரவி வந்தால் அது நம் மனதைத் தொட்டு, அலல்து தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இருந்தால் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழில் ரமணி சந்திரனும், ஆங்கிலத்தில் மில்ஸ் அன்ட் பூனும் என்னை அவ்வளவாய் ஈர்க்கவில்லை. ஆங்கிலத்தில் அகதா கிறிஸ்டிக்கு முதல் இடம்! பின்னர் தான் இர்விங் வாலஸ், அலிஸ்டர் மக்லைன் போன்றோர். ஆங்கிலத்தில் திகில் நாவல்களில் உள்ள ஈர்ப்பு எனக்கு மற்றவற்றில் இருந்ததில்லை. கான் வித் தி வின்ட் நாவலையும் (அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலக் காதல் கதை, படமாகவும் வந்தது) உதரிங் ஹைட்ஸ் இரண்டையும் தவிர்த்து மற்றவை அநேகமாகத் திகில் கதைகளே! நகைச்சுவை எனில் ஆர்ச்சி/ஆர்க்கி(?) மட்டுமே. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வரும் டெனிஸ் தி மெனேஸ் பிடிக்கும். அது பேப்பரில் பார்ப்பதை விடக் கார்ட்டூன் படங்களில் இன்னமும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
    2. ஜெஃப்ரி ஆர்ச்சர் கொஞ்சம் கொஞ்சம் பிடிக்கும். ஆர்தர் ஹெய்லி அதிகம் வாசித்தது இல்லை.

      நீக்கு
    3. கீதாக்கா அண்ட் பானுக்கா

      அகதா கிறிஸ்டி பிடிக்கும். மகனுக்கு நான் அறிமுகப்படுத்தியதில் அகதா கிறிஸ்டி, ஜெஃப்ரி ஆர்ச்செர், ஆர்தர் ஹெய்லி , நான் அப்போது வாசிக்கவில்லை. வீட்டில் இப்போதும் இருக்கு. ஜெஃப்டியின் the prodigal daughter மற்றும் அகதா கிறிஸ்டியின் destination unknown இப்போது.

      கீதா

      நீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    ஆகா.. இன்றைய வியாழன் கதம்பம் மிக அருமை. முதல் பகுதியே படுஅமர்க்களமாக சிந்திக்க வைக்கிறது. நீங்கள் கேள்விகள் கேட்க கேட்க அத்தனை பெரும் எழுத்தாளர்களும் நினைவுக்குள் வருகிறார்கள். அவர்களின் அத்தனை கதைகளையும் ஒரேடியாக புத்தகப்புழுவாக இருந்து படித்ததில்லையே....அதற்கு இந்த வாழ்நாள் முழுதும் போறாதே எனவும் தோன்றுகிறது..ஆனால் எடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் படித்த நாட்கள் உண்டு. மனம் பிற வேலைகளைக் கூட மறந்து விடும் அளவுக்கு பைத்தியமாக்கிய எழுத்துக்கள் உண்டு. எழுத்தாளர்கள் தமிழ்வாணன், சுஜாதா, ராஜேஷ்குமார், கிரைம் நாவல்கள், துப்பறியும் கதை நாவல்கள் அப்படிபட்ட படிக்கும் ஆவலை தந்திருக்கின்றன. லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணன், போன்றோரின் குடும்ப கதைகளையும், அதில் அவர்கள் படும் சிரமங்களையும் படிக்கும் போதும், அவர்களுக்கு நல்லதாகவே நடந்து முடிய வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியில், அவர்களின் கதை நடையில், பல கதைகள் படிக்காமல் புத்தகத்தை மடித்து வைக்கத் தோணாது. தங்களின் கேள்விக்கான பதில்கள் நிறைய உள்ளது. சொல்ல ஆரம்பித்தால், பதிவையும் தாண்டி விடும். ஆனால் உங்கள் கேள்விகளே அத்தனை சுவாரஷ்யமாக உள்ளது. எத்தனை திறமையான கேள்விகள்? வியந்து பாராட்டுகிறேன்.

    தங்கள் கவிதை அற்புதம். அதைப் போய் முயற்சி என கூறி விட்டீர்கள்.. முயலாமல் உங்களுக்குள் எளிதாக வருவது உங்கள் கவிதை திறன்கள். எப்போதுமே அது ரசிக்கும்படித்தான் இருக்கும். உங்களின் நிறைய கவிதைகளை ரசித்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எல்லா எழுத்தாளர்களையும் படித்ததில்லை கமலா அக்கா.  நீங்கள் சொல்லி இருக்கும் எழுத்தாளர்கள் நானும் படித்திருக்கிறேன்.  பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  30. வரலாற்றுக் கதைகள் அதிகம் படித்ததில்லை. பொன்னியின் செல்வன், உடையார், கங்கை கொண்ட சோழன், திருவரங்கன் உலா போன்ற சொற்ப கதைகளே படித்திருக்கிறேன். கால சக்கரம் நரசிம்மா கதைகள் அவ்வளவாக கவரவில்லை.

    தி.கீதா சொல்லியிருப்பது போல கல்லூரி காலத்திலேயே மில்ஸ் அண்ட் பூன் ஈர்த்ததில்லை.ரமணி சந்திரனும் அப்படித்தான்.

    சுஜாதாவின் வர்ணனைகள் போல, சிக்கென்று இருந்தால் பிடிக்கும். உ.ம். "வதனத்தின் இன்றைய ஸ்பெஷல் கண்கள் மையின்றி, பொய்யின்றி இரண்டு கரிய சலனங்கள்".

    ப.கோ.பிரபாகர், சுபா, ராஜேஷ் குமார் போன்றவர்கள் வர்ணிப்பதற்காக கதையை விட்டு வெளியே சென்று விட்டு உள்ளே வருவார்கள்.

    துப்பறியும் கதைகள் பிடிக்கும்.

    ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், கு.ப.ரா.போன்றவர்கள் போன்று எம்பதியோடே எழுதப்படும் சமூக நீதிக்கதைகள் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..ப.கோ.பிரபாகர், சுபா, ராஜேஷ் குமார் போன்றவர்கள் வர்ணிப்பதற்காக கதையை விட்டு வெளியே சென்று விட்டு உள்ளே வருவார்கள்.//

      Cute observation !

      நீக்கு
    2. சுஜாதா உட்பட சில எழுத்தாளர்களின் வார்த்தைகளை அப்படியே நினைவில் வைத்திருக்கிறீர்கள்.  நான் உங்களிடம் வியக்கும் விஷயம் அது.

      நீக்கு
  31. வட்டார வழக்கை அதிகம் பயன்படுத்தினால் கதையோடு ஒன்றுவது கடினமாகி விடும்.



    பதிலளிநீக்கு
  32. அனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  33. பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  போன வார பாசிட்டிவ் செய்திகளில் புலியை கம்பால் அடித்து விரட்டிய பெண் பற்றி பகிர்ந்திருந்தோம்!

      நீக்கு
  34. வானத்தை வண்ணம் குழைத்து
    வளைத்து
    வனத்தை கத்தரிக்கோலால்
    சீர்படுத்தி
    கடலை கண்ணாடியிட்டு
    மூடி ..//

    பாவம் அந்தப் பெண் !

    பதிலளிநீக்கு
  35. ..எத்தனை கேள்விகளுக்குபதில் கிடைக்கிறது என்று பார்க்க ஆவல்.//

    புதன் பார்க்க ஆவலா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் பதில்களோடு எவ்வளவு ஒத்துப்போகிறது என்றும் பார்க்க ஆவல் இருக்குமே!

      நீக்கு
  36. கதை பற்றிய குறிப்புகள் இல்லாமல் உரைநடையிலேயே இருந்தால் ரசிக்குமா?//

    ஸ்ரீராம் ஒரு சின்ன விளக்கம் வேண்டும். உரைநடையா இல்லை உரையாடலா?

    இரண்டிற்கும் வித்தியாசம் உண்டே அதான் கேட்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  37. எத்தனை கேள்விகள் ! நீண்ட பதிவு
    முன்பு கையில் கிடைக்கும் எல்லா விதமான கதை புத்தகமும் படித்து இருக்கிறேன். பொட்டலம் கட்டி வரும் தாள்களில் உள்ளவைகளையும் படிப்பேன்.
    வீட்டில் வாங்கும் வார மாத இதழ்ல்கள் படிப்பேன், அப்புறம் நூலகத்திலில் கதை புத்தகம் எடுத்து வந்து படிப்பேன். இப்போது இணையத்தில் வாசிக்கிறேன், கதை கேட்கிறேன்.

    சிறுகதைகள் நிறைய படிக்கிறேன் , கேட்கிறேன் இப்போது. தி, ஜானகி ராமன், கல்கி, சுஜாதா, தேவன்,லட்சுமி, ராஜம் கிருஷ்ணன், சரோஜா ராமமூர்த்தி,அனுராதா ரமணன், சிவசங்கரி , ஜெயகாந்தன் இவர்களின் சிறுகதைகளை . பார்த்திபன் கனவு பாதியில் நிறகிறது, சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது பாதியில் நிற்கிறது இடை இடையே படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லவே வேண்டுமா என்று யோசித்தால் நீண்ட பதிவாகத் தோன்றும்!  சிறுகதைகள் பிடிக்குமா?  நீண்ட நாவல்களா?

      நீக்கு
  38. கவிதை நன்றாக இருக்கிறது.
    ஜோக் அதிகபடிதான் பாஸ் படிக்க மாட்டார்கள் என்ற தைரியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா..  ஹா...   ஆனால் இந்த டைப் ஜோக்ஸ் நிறைய கிடைக்கும் கோமதி அக்கா.

      நீக்கு
  39. கட்டுரைகள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது எம்.எஸ்.உதயமூர்த்தி. கம்பராமாயணத்தைப் பற்றி நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் எழுதிய கட்டுரைகள், தி.ம.கதிரில் கலைஞர் எழுதிய குறளோவியம், கல்கியில் சுகி சிவம் எழுதிய ஆன்மீக கட்டுரைகள்,சுதா சேஷய்யன் எழுதிய ஆன்மீக கட்டுரைகள், துக்ளக்கில் நெல்லை ஜெபமணி, எஸ்.குருமூர்த்தி இவர்களின் கட்டுரைகள் (எஸ்.குருமூர்த்தி எழுதிய 'தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?" கட்டுரைகளின் தொகுப்பு புத்தகங்களாக வெளிவந்துள்ளது. தமிழ் தெரிந்த ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்கள் அவை).

    இயக்குனர் ப.நீலகண்டன் தி.ம.கதிரில் சினிமாவைப் பற்றி ஒரு தொடர் எழுதினார். இது சினிமா வரலாறோ, சினிமா நட்சத்திரங்களைக் பற்றிய செய்திகளோ இல்லை. திரைக்கதை, காமிரா கோணங்கள் போன்றவை பற்றி எடுத்துக் காட்டுதல்களோடு சுவாரஸ்யமாக எழதியிருந்தார். நான் அப்போது சிறுமிதான் அதனால் முழுவதும் நினைவில் இல்லை.

    கண்ணதாசன் கட்டுரைகள், தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன் கட்டுரைகளும் பிடிக்கும்.

    கல்கியில் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாசாரியார் எழுதிய 'குறையொன்றுமில்லை' படித்து விட்டு புத்தகமும் வாங்கினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடம் தண்ணீர் விட்ட வளர்த்தோம் தொகுப்பு இருக்கிறது.  எம் எஸ் உதயமூர்த்தி கூட இருக்கிறது என்று நினைக்கிறேன்.  அவர் தலைப்புதானே  'உன்னால் முடியும் தம்பி?'  சுகி சிவம் கட்டுரைகள் அவ்வப்போது வாசிப்பிப்பது உண்டு.  என் அக்கா சுகி சிவத்தின் பயங்கர விசிறி!  தமிழ்வாணன் கட்டுரைகளை இப்போதும் படிக்க முடிகிறதா?

      நீக்கு
  40. அனைத்து கேள்விகளையும் சற்றே சுருக்கி நேற்றைய பதிவில் 'கருத்துரையாக போடலாமா...?' என்று யோசிக்கிறேன்... இருந்தாலும் கூடுதலாக ஒரு கேள்வி :+

    வளமையான எழுத்தா...? வழவழப்பான எழுத்தா...? என்பதை அறிய வளவளப்பான எழுத்து உதவுமா...?

    +1

    தேவைப்படும் போது நினைக்கும் ஆத்திகரை விட, எப்போதும் நினைக்கும் - கோவிலுக்கு வர மறுக்கும் அந்த நாத்திகர் சிறந்தவரா...?

    ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்...
    நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்...
    அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்...
    அன்பே சிவம் அன்பே சிவம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா..   அதவாது இந்தக் கேள்விகளுக்கு ஆசிரியர் குழுவிலிருந்து பதிலை எதிர்பார்த்தா?  ஆத்திகரைவிட நாத்திகர் அதிகம் கடவுளை  நினைக்கிறார் என்பதும் சரிதான்!

      நீக்கு
    2. நாத்திகர் அதிகம் கடவுளை நினைப்பதே அவர் இருப்பை சர்வ நிச்சயமாக உணர்ந்ததால் தான். அதோடு இப்போது உள்ள நாத்திகர்கள் ஒண்ணும் புதுசு இல்லை. ராமாயண காலத்திலேயே ஜாபாலி மஹரிஷி ஶ்ரீராமனிடம் பேசாத நாத்திகமா? மூட நம்பிக்கையை அவரை விட அதிகமாய் யாரும் விமரிசிக்கவில்லை. சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றிய கேள்விகளும் அவர் எழுப்பியவையே! இப்போது புதுசா ஒண்ணும் பகுத்தறிவு வரவில்லை. எல்லாம் முன்னரே வந்தது தான். ஆத்திகத்துக்கும்/நாத்திகத்துக்கும் ஓர் மயிரிடை இடைவெளி தான்!

      நீக்கு
  41. வியாழன் புதன் பதிவு போல ஆகிவிட்டது! எத்தனை கேள்விகள்.

    வழமை போல வியாழனின் கதம்பம் நன்று.

    ராயல்டி - இதில் எவருமே - பதிப்பாளரும் சரி, எழுத்தாளரும் சரி உண்மை சொல்வதில்லை என்று தோன்றுகிறது. நிறைய பிரச்சனைகள் இருக்கும் இடம் இது. தற்போது அமேசான் தளம் வழியாக நிறைய மின்னூல்கள் வெளியிட ஆரம்பித்து விட்டார்கள். அங்கே எல்லோருக்கும் ஒரே வித அனுபவம் தான். விற்பனை பொறுத்து எழுத்தாளருக்கு பணம் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு வாரங்களுக்கு முன் வியாழன் திங்களானது.  முன்பு செவ்வாயும் ஆகி இருக்கிறது.  அவ்வப்போது ஞாயிறாகும்! ஓரிருமுறை வெள்ளியாயிருக்கிறது, ஏன் சனியும் ஆகி இருக்கிறது.  இப்போது புதன்!

      நீக்கு
  42. கவிதை (முயற்சி) அருமை... இவ்வளவும் செய்து விட்டு அங்கு தீநுண்மி வராமல் இருந்தால் சரி... ஞாபகம் வந்த பாடல் :-

    'கவிதை என்பது மொழியின் வடிவம்'
    என்றொரு கருத்தும் இன்று உடைந்தது...
    கவிதை என்பது கன்னி வடிவமடா..

    மின்னலை பிடித்து - மின்னலை பிடித்து - மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து - வீதியில் விட்டு விட்டான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீ நுண்மி உலகைவிட்டு விடைபெறும் கால நெருங்கி கொண்டிருக்கிறது!  எனவே பிரானையில்லை.  நல்ல பாடல் ஒன்றை நினைவு படுத்தினீர்கள்.

      நீக்கு
  43. // எதை நம்பி ஓர் எழுத்தாளர் எழுதுகிறார்? எதை நம்பி ஒரு பதிப்பாளர் பதிப்பிக்கிறார்? //

    மின்னூல் காலம்...! ஆமாம் பணம் மட்டும் நோக்கம் என்றால் எழுத்து வருமா...? அதாவது பணமானது மேலும் படைப்புகள் படைக்க ஆர்வமும் உற்சாகமும் வந்து துணை புரிந்தாலும், படைப்பில் உண்மைத்தன்மை இருக்க வாய்ப்பு உண்டா...? +1

    திருப்தி என்றால் என்ன...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணம் வந்தால் கூடுதல் சந்தோஷம் நம் போன்றவர்களுக்கு.  இதையே பிழைப்பாகக் கொண்டவர்களுக்கு?  ஆமாம், திருப்தி என்றால் என்ன?

      நீக்கு
    2. திருப்தியா...? இதோ :-

      https://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_09.html

      வலையுலக ஆரம்பத்தில் எழுதிய 7-வது பதிவு...! அதன் 2.0 இனிமேல் எழுத வேண்டும்...

      நீக்கு
    3. இப்போதுதான் படிக்கிறேன்!

      நீக்கு
  44. இலக்கியம் என்றால் கதை சம்பந்தப் பட்டதுதானா? //

    இல்லை, இலக்கியம் என்பது பரந்து விரிந்து பல வகைகளை உள்ளடக்கியதாச்சே. அதில் கதையும் அடங்கும். அந்தக் கதைகள் கூட இலக்கியத்தில் வகைப்படுத்தப்படுகின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி யாரும் குறிப்பிட்டுள்ளதாகவே தெரியவில்லையே...

      நீக்கு
    2. ஸ்ரீராம் நான் கல்லூரியில் தமிழ்ப்பாடம் உண்டே அப்போது படித்ததை வைத்துச் சொன்னேன்! அதாவது கதை சம்பந்தப்பட்டது மட்டுமில்லைன்னு...

      நினைவு வருவதைச் சொல்கிறேன். உரைநடை, கவிதை, சிற்றிலக்கியம், பேரிலக்கியம், பக்தி இலக்கியம், நீதி இலக்கியம், காப்பியம், அப்புறம் சங்க இலக்கியம், நவீன இலக்கியம் இப்படி...19 ஆம் நூற்றாண்டில் புதினம் வரும்னு நினைக்கிறேன் அப்புறம் 20/நவீன இலக்கியம் ல கதை கட்டுரை, புதுக்கவிதை நு நினைவு. அதை வைத்துச் சொன்னேன். அது இக்கேள்விக்குப் பொருந்தாதோ?

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம் நான் கல்லூரியில் தமிழ்ப்பாடம் உண்டே அப்போது படித்ததை வைத்துச் சொன்னேன்! அதாவது கதை சம்பந்தப்பட்டது மட்டுமில்லைன்னு...

      நினைவு வருவதைச் சொல்கிறேன். உரைநடை, கவிதை, சிற்றிலக்கியம், பேரிலக்கியம், பக்தி இலக்கியம், நீதி இலக்கியம், காப்பியம், அப்புறம் சங்க இலக்கியம், நவீன இலக்கியம் இப்படி...19 ஆம் நூற்றாண்டில் புதினம் வரும்னு நினைக்கிறேன் அப்புறம் 20/நவீன இலக்கியம் ல கதை கட்டுரை, புதுக்கவிதை நு நினைவு. அதை வைத்துச் சொன்னேன். அது இக்கேள்விக்குப் பொருந்தாதோ?

      கீதா

      நீக்கு
  45. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள். தொற்று நீங்கி மக்கள் நலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  46. அருமையான கேள்விகள்!
    நல்ல புத்தகம் என்பது அதைப்படித்து முடித்த பின்னும் நம் மனதை பாதித்து பல நாட்களுக்கு அதன் பாதிப்பு இருக்க வேண்டும்.
    இப்போதெல்லாம் புத்தகக் கண்காட்சிக்கு சென்று, பல ஸ்டால்களில் புத்தகங்களைப் பார்க்கும்போது சில சமயம் தலைப்புகள் ஈர்த்து விடும். அப்ப‌டியும்கூட சில புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். இப்போதெல்லாம் நிறைய பெண் எழுத்தாளர்கள் சமூக நாவல்கள் எழுதி பல பதிப்பகங்கள் வெளியிடுகின்றன. ஒரு லெண்டிங் லைப்ரரிக்கு சென்றால் அதன் உரிமையாளர் சொல்கிற கருத்துக்கும் நாம் படித்த பின் ஏற்படுகிற கருத்திற்கும் உடன்பாடு இருப்பதில்லை.
    இளம் வயதில் படித்த அத்தனை நாவல்களும் நினைவுக்கு வருகின்றன. அப்போதெல்லாம் கல்கியில் வினு, விகடனில் கோபுலு, குமுதத்தில் லதா என்று உயிரோவியங்களாய் தொடர்கதைகளுக்கு வரைவார்கள். வீட்டில் யார் முதலில் படிப்பதென்று ஒரு போட்டியே நடக்கும். . அழகிய ஓவியங்கள் நம்மைப் படிக்கத் தூண்டும். இப்போதெல்லாம் கட்டுரைகள், கருத்துக்களஞ்சியங்கள், நவீன ஓவியங்கள் தான் விகடனில் வருகின்றன. குமுதம் பற்றி சொல்லவே வேண்டாம். நல்ல புத்தகங்கள் என்று எங்கே தேடுவது?
    நா.பார்த்தசாரதி, அகிலன், ஜெயகாந்தன், கல்கி, கிருஷ்ணா, சாவி, சிவசங்கரி, இந்துமதி, கி.ராஜேந்திரன், ஜெகசிற்பியன், வித்யா சுப்ரமணியம் என்று இவர்கள் எல்லாம் பத்திரிகை உலகை ஆண்டார்கள். கண்ணியமும் நேர்மையும் இவர்கள் எழுத்தில் இருந்தன.
    நா.பார்த்தசாரதியின் ' பொன் விலங்கு' அந்தக்கால இளைஞர்களை மிகவும் கவர்ந்த நாவல். அதில் ஒவ்வொரு வாரமும் ஒரு நல்ல வாசகம் இருக்கும். ' தூக்கம் என்பது தற்காலிக மரணம். மரணம் என்பது நிரந்தரமான தூக்கம்' என்ற ஒரு வாசகம் இன்றளவும் நினைவில் இருக்கிறது. இது மாதிரி ஒவ்வொரு வாரமும் வரும் வாசகத்திற்காக காத்திருப்போம். கிருஷ்ணாவின் 'சந்தன மரம்' இன்றும் என் மனதில் முதலிடத்தில் இருக்கும் சமூக நாவல். மாயாவின் ஓவியத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்தது. ஜெயகாந்தனின் ' யாருக்காக அழுதான்' படித்து விட்டு அந்த வயதில் நிறைய அழுதிருக்கிறேன். அவரின் 'கருணையினால் அல்ல' மிகவும் அருமையாக இருக்கும். கல்கியின் 'சிவகாமியின் சபதத்தை கிட்டத்தட்ட 20 தடவையாவது படித்திருக்கிறேன். இப்படி அன்றைய எழுத்தாளர்களைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
    பட்டுக்கோட்டை பிரபாகரின் 'தொட்டால் தொடரும்' நாவல் தொடராக‌ விகடனில் வெளிவந்தபோது எத்தனையோ பேர் விவாதம் செய்து கொண்டும் போட்டி போட்டுக்கொண்டும் படித்தார்கள் என்பது அப்படியே நினைவில் நிற்கிறது. துரதிர்ஷ்டவசமாக அவர் வியாபார உலகில் கலந்து விட்டார்.
    சாண்டில்யனின் வளவளவென்ற வர்ணனைகள், விரசமான காட்சியமைப்புக்களைத் தாண்டி அவரின் விசாலமான சரித்திர அறிவும் சுவாரஸ்யமாக கதையைக் கொன்டு செல்லும் நேர்த்தியும் நம்மை ஈர்த்து விடும்.
    ஆனால் இன்றைய எழுத்து! அவற்றை நாம் கடைகளில் வாங்கிப் படித்துத்தான் அவற்றைப்பற்றி தெரிந்து கொள்ள‌ வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "தூக்கமும் ஒரு தற்காலிகமான சாவு தான். அதிலிருந்து மறுபடி விழித்துக் கொள்ள முடிகிறது. அதே போல் சாவும் ஒரு நிரந்தரமான தூக்கம் தான். ஆனால் அதிலிருந்து மறுபடி விழித்துக் கொள்ள முடிவதில்லை."

      --- நா.பா. (பொன்விலங்கு நாவலில்)

      பிற்காலத்தில் அஞ்சலட்டை போன்ற தனது சொந்த தபால் அட்டையின் முகவரி பக்க பின் பக்கத்தில் இந்த வாசகங்களை அவர் அச்சடித்து வைத்திருந்தார்.

      நீக்கு
    2. உண்மை.  படித்தபின் பல வருடங்களுக்கு நினைவில் நிற்கும் படைப்பு.  அதுதான் உயர்வு.  

      அடுத்தவர் கருத்தும் நம் கருத்தும் பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை.  அவரவர் ரசனைப்படி அவரவர் சுவாரஸ்யம் அமையும்.
      மிக அருமையாக எல்லாக் கருத்தையும் தொகுத்து அழகாகச் சொல்லி விட்டீர்கள்.  நினைவில் நின்ற எழுத்துகள் என்று இப்போது வரை அந்தக் கால எழுத்துகளைத்தான் சொல்கிறோம். 
       
      தன் எழுத்தை தானே ரசிக்காமல் அடுத்தவரை ரசிக்க வைக்க முடியாது.  எனவே வார்த்தைகளை பார்த்துப் பார்த்துச் செதுக்குவேன் என்று லாசரா சொல்லி இருக்கிறார் என்று எங்கோ படித்தேன்.  அதே சமயம் செம்மங்குடி அவர் பாடிய பாடல்களை அவரே கேட்பாரா என்று கேட்டபோது சொன்ன சொன்ன ஒரு கருத்தும் நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
    3. உறங்குவதுபோலும் சாக்காடு என்று திருக்குறளும் இதைத்தானே சொல்கிறது?  நாபா பற்றி தகவல் சொன்னதற்கும் நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு
    4. நா.பா.வின் இந்தப் பொன்மொழிகள் எல்லாவற்றையும் நான் ஓர் எண்பது பக்க நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைச்சிருக்கேன். இன்னமும் இருக்கு பழைய பொக்கிஷங்களுடன். அகிலன் கூட இம்மாதிரிச் சில சொல்லி அவற்றையும் குறித்து வைத்திருந்தேன். கதாகாலட்சேபங்கள் போனால் கையில் நோட்டுப் புத்தகத்துடன் தான் போவேன். முக்கியமான வர்ணனைகளையும், கருத்துக்களையும் குறித்துக் கொள்வேன்.

      நீக்கு
    5. ரசித்த வரிகளைக் குறித்துக் கொண்ட டைரிகள் எங்கே இருக்கின்றன என்றே தெரியவில்லை!

      நீக்கு
  47. சிறுகதை என்பது முறையாக ஒரு ஆரம்பம், அறிமுகம், சம்பவம், முடிவு என்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா? எங்கு வேண்டுமானாலும் தொடங்கி எங்கு வேண்டுமானாலும் முடியும் சிறுகதைகளில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? படிப்பவர் யூகத்துக்கு விடுவது என்பதையும் மீறி சமயங்களில் முடிவு என்பதே இல்லாத சிறுகதைகள் படித்திருப்பீர்கள். எப்படி வணர்வீர்கள்? //

    முடிவு யூகத்திற்கு விடுவது அல்லது வித்தியாசமான எதிர்பாரா முடிவு எனக்குப் பிடிக்கும். வெளிப்படையாக இருப்பதை விட (இருந்தாலும் ஓகே தான்) மறைமுகமாக முடிவு இருப்பதும் எனக்கு விருப்பமானது அது பல யூகங்களுக்கு வழிவகுக்கும்..

    முடிவு என்பதே இல்லாமல்..இது ஆர்ட் ஃபில்ம் போல! ஆனால் இதிலும் கூட இறுதியில் சில சமயம் நம் மனதைத் தாக்கும் விதத்திலிருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்...    இதுவும் ஒரு அனுபவம், ரசனைதான்.

      நீக்கு
    2. மெல்லிய நகைச்சுவை இழையோடு சித்தப்பாவின் சிறுகதைகள் சில படித்துப் பாருங்கள். சிறுகதை சிக்கென்று இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

      நீக்கு
    3. கீதாக்கா எனக்கு நகைச்சுவை ரொம்பப் பிடிக்கும் அதுவும் கதையினூடே விரவி நகைச்சுவை என்று தெரியாமலேயே வருவதும் பிடிக்கும். உங்கள் சித்தப்பா திரு அசோகமித்திரன் அவர்களின் கதைகள் கிடைத்ததை எடுத்து வைத்திருக்கிறேன். வலைத்தமிழில் இருக்கிறது அங்கேயே வாசிக்க...

      பிரயாணம் வாசித்தேன் மனதை மிகவும் தொட்ட கதை.

      ஸ்ரீராம் இதில் முடிவு என்பது அப்படியே கதை போகிற போக்கில் போய் முடியும். ஆர்ட் ஃபில்ம் போல! இக்கதையை கண்டிப்பாக் ஆர்ட் ஃபில்மாக எடுக்கலாம். அதற்குரிய அத்தனையும் இருக்கு. முடிவு மனதை என்னவோ செய்யும்.

      புலிக்கலைஞன், காந்தி, மற்றொரு கதை பெயர் நினைவுக்குவரவில்லை. அது ஒருஏழ்மைக் குடும்பத்த்ப் பெண் அருகில் இருக்கும் தண்ணீர் பிடிக்கச் செல்வது, என்று வரும் பெயர் டக்கென்று வர மாட்டேங்குது.

      கீதா

      நீக்கு
  48. சிறுகதை என்பதில் அதிகபட்சம் எத்தனை கேரக்டர்கள் இருக்கலாம்? குறைந்தபட்சம்? //

    விதிப்படி பார்த்தால் ஒரு மனிதர், அல்லது ஒரு உணர்வு, ஒரு நிகழ்வு, சிக்கல் மட்டும் முக்கியமானதாக இருக்க வேண்டும். அதிக கதைமாந்தர்கள் இருக்கக் கூடாது. விரிவான வர்ணனைக்கும் சூழ்நிலைக்கும் சிறுகதையில் இடம் தரக்கூடாது என்றுதான் சிறுகதை இலக்கணம் சொல்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகபட்ச கதைமாந்தர் இடம்பெற்ற கதை எது?  வாஷிங்டனில் திருமணம்?!!!

      நீக்கு
    2. அருமை கீதா! சிறுகதை இலக்கணம் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். சிறுகதையில் பாத்திரங்கள் குறைவாகத்தான் இருக்க வேண்டும்.

      நீக்கு
    3. வாஷிங்க்டனில் திருமணம் சிறுகதை இல்லையே ஸ்ரீராம். அதனால் ஓகே!!! நான் சிரித்து ரசித்த கதை.

      கீதா

      நீக்கு
  49. கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை தொடர்கள் படிக்க பிடிக்கும். கவிதைகளில் பாரதிக்கே முதலிடம். பின் கண்ணதாசன், வாலி, நா.முத்துக்குமார், தாமரை - இவர்களின் கவிதைகள் பிடிக்கும்.

    கண்ணதாசனின் கட்டுரைகளில் "அர்த்தமுள்ள இந்துமதம்" பொக்கிஷமாய் வைத்திருப்பது. அவருடைய திரை பாடல்களும் கருத்து பொதிந்த அற்புதமான வரிகளையுடைவை.
    சுஜாதா அவர்களின் கட்டுரைகள் பிடிக்கும். "கற்றதும் , பெற்றதும்", "ஓரிரு எண்ணங்கள்", "ஸ்ரீரங்கத்து தேவதைகள் " - நான் விரும்பி படித்த சுஜாதா அவர்களின் படைப்புகள். சுஜாதாவின் கணேஷ்-வசந்த் துப்பறியும் கதைகள் பிடிக்கும்.

    கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், ராஜநாராயணன், இந்திரா சௌந்தர்ராஜன் போன்றோரின் நாவல்கள் பிடிக்கும். கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்" இன்னுமொரு பொக்கிஷம்.

    இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் " இறையுதிர் காடு "இப்பொழுது படித்து கொண்டிருப்பதில் பிடித்தது.
    சு.வெங்கடேசனின் " வேள்பாரி" பிடித்த வரலாற்று நாவல்.
    பெண் எழுத்தாளர்களில் அநுத்தமா , லக்ஷ்மி, இந்துமதி, அனுராதா ரமணன், சிவசங்கரி ஆகியோர் மிகப் பிடிக்கும். சிநேகிதியில் இப்பொழுது தொடராக வந்துகொண்டிருக்கும் சிவசங்கரியின் "சூரிய வம்சம்" நன்றாக இருக்கிறது.அவரின் நினைவலைகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைகள் படிப்பபவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள்.  அதுவும் புகழ்பெற்றவர்கள் எழுதிய கவிதையைத்தான் படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

      கண்ணதாசனின் வன/மனவாசம் படித்திருக்கிறீர்களா?

      சுஜாதா கதைகள் எழுதுவதைவிட கட்டுரைகள் எழுதியத்தையே தான் அதிகம் விரும்புவதாய்ச் சொன்னார்.

      ஓ..   சிவசங்கரியின் கதை இப்போது தொடராக வந்து கொண்டிருக்கிறதா?  எதில்?  கதையா, கட்டுரையா?

      நீக்கு
  50. வானத்தை வண்ணம் குழைத்து
    வளைத்து - வானவில்!!!

    வனத்தை கத்தரிக்கோலால்
    சீர்படுத்தி - க்ராப்பிங்க்! பசுமை போர்த்தி?!

    கடலை கண்ணாடியிட்டு
    மூடி - ஹை! கடல்வாழ் உயிரினக் காட்சியகம்!! சுத்தி சுத்தி பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல!!!

    உனக்காக ஒரு
    வசிப்பிடம்
    தயாரிக்கிறேன்

    ஆஹா ஸ்ரீராம் போட்டி ஜாஸ்தியாகிடப் போகுது!!! அந்த உனக்காக யாரா இருந்தாலும், பரவால்ல எங்க எல்லாருக்கும் ஒரு அபார்ட்மென்ட் கட்டிக் கொடுத்துருங்க!! இப்படி,,ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..  பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க போங்க...!

      நீக்கு
  51. மறக்க முடியாத தமிழ் எழுத்துலகை நினைவு கொள்ளும் விதமாக 'ந. பிச்சமூர்ர்தியிலிருந்து எஸ்.ரா. வரை'
    என்ற பெயரில் என் நூல் ஒன்று 264 பக்கங்களில் வெளி வந்திருக்கிறது. 37 தமிழ் எழுத்தாளர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு, அவர்களின் முக்கிய படைப்புகளின்
    கதை அம்சம், எழுத்தாளர்களின் வரிகளிலேயே படைப்புகளின் பக்கங்கள், விமரிசன ரீதியான படைப்புகளின் அறிமுகம் என்று இது வரை இல்லாத வகையில் புது வகையில் நூலாக்கம் கண்டிருக்கிறது.
    நூலை சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  ஆம்.  நினைவிருக்கிறது ஜீவி ஸார்.

      நீக்கு
    2. நான் உங்களின் அந்தப் புத்தகம் வாங்கி படித்தேன் ஜீ.வி.சார்.

      நீக்கு
    3. எஸ். ஞாபகம் இருக்கு பா.வெ.

      நீக்கு
  52. மீனுக்குட்டி அழகாக இருப்பாள் போலத் தோன்றுகிறது கூடவே சர்ச்சையும் அவளைச் சுற்றி!

    புத்தகம் பதிப்பித்து அது புகழ்பெற்ற ஆசிரியர்கள் என்றால் போகுமோ என்னவோ மற்றபடி புத்தகம் அச்சில் போடுவதை விட இப்போதைய காகலட்டத்துக்கு அமேசான் ஓகே என்றே தோன்றுகிறது. நமக்கும் கையைக் கடிக்காது.

    ஜோக்கு ஜோக்கு படித்த நினைவிருக்கு! பாஸ் மேடைக்கு வருவாங்களா!!!!!? (ஸ்ரீராம் சொல்றார் "நான் அவனில்லை" ன்னு ஹிஹிஹி)

    படித்ததில் பிடித்தது செம. இதை எழுதியவரின் சிந்தனையை நினைத்து பாராட்டத் தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சர்ச்சை கண்ணில் பட்டதுமுதல் மீனுக்குட்டியைத் தேடிப்படிக்க ஆவல்!

      நீக்கு
  53. பதிவு அருமை ரசித்தேன் ஸ்ரீராம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  54. //சிவசங்கரி கதைகளுக்கு ஊடே சின்னச் சின்னச் சமையல் குறிப்புக்களும் தருவார்.// சின்ன சின்ன சமையல் குரிப்புகளா? பாலங்கள் கதையில் அதிரசம் செய்வதையும், விளக்கெண்ணெய் கொடுப்பதற்கு எண்ணெய் காய்ச்சுவதையும் விலாவாரியாக எழுதி படுத்தினார். இதை பலர் கண்டித்தார்கள். ஒரு காலத்தில் சமையல் குறிப்பு இல்லாத அவருடைய கதைகள் இல்லை என்றே சொல்லலாம். நான் பேல் பூரி செய்யவும், பாலக் பனீர் செய்யவும் அவருடைய கதைகள் படித்துதான் கற்றுக்கொண்டேன். படிப்பதற்கு ஆட்கள் இருகிறார்கள் என்று தெரிந்தவுடன் படுத்த ஆரம்பித்து விட்டார்.

    இந்துமதி ஃபில்டரில் காபி பொடியை போட்டு தட்டுவதோடு நிறுத்திக் கொள்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித்தான் -
      எரியாத அடுப்புக்கு எதையோ எழுதி வைத்தார் சிவசங்கரி..

      நீக்கு
    2. ஆஹா..   இவ்வளவு ஆழ்ந்து படித்திருக்கிறீர்களா சிவசங்கரியை?  நான் ஒன்றிரண்டுதான் படித்திருக்கிறேன்.  ராஞ்சியில் நாங்கள் இருந்த வீட்டின் உரிமையாளரின் மருமகள் அவர்.  அதனால் நேரில் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    3. நான் ரொம்பவே விலாவாரியாக எழுதறேனோனு தோணியதால் சும்மாக் குறிப்பு மட்டும் கொடுத்தேன். மற்றபடி நீங்கள் சொன்னவற்றைப் படித்திருக்கேன் பா.வெ.அப்போவே பல கண்டனங்கள் வந்தன என்பதும் தெரியும். இந்துமதியைப் பல முறை சித்தப்பா வீட்டில் அவர் கல்யாணத்துக்கு முன்னேயும்/பின்னாலும் பார்த்திருக்கேன். பேசியதில்லை.

      நீக்கு
  55. // மின்னலை பிடித்து - மின்னலை பிடித்து - மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து - வீதியில் விட்டு விட்டான்...//

    மின்னலைப் பிடிக்கப் போய்
    இடி விழுந்தது தான் மிச்சம்...
    இடிந்து விழுந்தது தான் உச்சம்!...

    பதிலளிநீக்கு
  56. மஹாபாரதத்தை அடிபடையாகக் கொண்டு கதைக்கருவை தீர்மானிக்க வேண்டும் என்றால்
    பாசம்
    காதல்
    த்ரோகம்
    நட்பு
    நன்றி
    மரபு மீறல்
    போன்றவற்றை அடிபடையாக கொண்டு எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  57. குமாரி பிரேமலதா என்ற பெயரில் எழுதிய கதாசிரியர் யார்? புஷ்பா தங்கதுரை ஆணா,பெண்ணா? என்ரு ஒரு சென்சேஷனை சாவி கிளப்பியது போல குமாரி.பிரமலதா என்று ஒரு கதாசிரியரை ஆ.வி.யில் உருவாக்கினார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமாரி பிரேமலதா யார் என்கிறீர்கள்>  W R ஸ்வர்ணலதா தெரியுமா?

      நீக்கு
    2. டபிள்யூ. ஆர். ஸ்வர்ணலதா எழுதின தெருவிளக்கு திகில் கதையை அந்த நாட்களில் போட்டி போட்டுக் கொண்டு படித்திருக்கோம். அதே போல் தமிழ்வாணனின் "மணிமொழி! நீ என்னை மறந்து விடு!" நாவலும். முத்தழகு நடையன்கள், தேநீர் போன்ற அரிய வார்த்தைகளை அப்போதே அறிமுகம் செய்திருக்கார் தமிழ்வாணன்.

      நீக்கு
    3. நானும் அவரின் ஏதோ ஒரு கதை படித்திருக்கிறேன்.

      நீக்கு
  58. ரயிலில் நடக்கிற கதைன்னா ஆப்ட்டா ரயில் - ரயில்வே ஸ்டேஷன் சூழலை பட்டும் படாமலும் சொல்லிச் செல்கிற இரண்டொரு வார்த்தைகள், ஆஸ்பத்திரி, விமான தளம், ஹோட்டல்ன்னா அது அதுக்கு ஏத்த மாதிரி -- இப்படி வாசிக்கிற கதை இண்டு இடுக்குகளில் வந்து போகிற வார்த்தைகளை ரசிச்சிருக்கீங்களா, ஸ்ரீராம்!

    நான் இதையெல்லாம் நுணுக்கமா கவனித்து ரசித்து கதைகளை வாசிப்பதுண்டு. என்ன பிரமாதமா எழுதியிரும்கிறார் என்று வாசிப்பின் நடுவே மனசுக்குள்ளேயே பாராட்டுவது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தேவையான இடத்தில் கொஞ்சமாய் வந்தால் நிச்சயம் ரசிக்க முடியும் ஜீவி ஸார்...

      நீக்கு
    2. இண்டு இடுக்கில் வரும் போது ஒன்று இரண்டு வார்த்தைலேயே வந்து விட்டுப் போய்விடும்.

      நீக்கு
  59. சுருக்கமா இப்படியான கதைங்கறதை விட எப்படி எழுதியிருக்கிறார் என்ற எழுதற நேக்கைத் தான் நான் உன்னிப்பா கவனிக்கறது வழக்கம்.

    எஸ்.ஏ.பி., ராகிரா இவங்களெல்லாம் இந்த விஷயத்தில் குறையே வைக்காம என்னை சந்தோஷப்படுத்தி இருக்காங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  உண்மை.   யோசித்தால் இன்னும் சிலர் கூட சிக்குவார்கள்!

      நீக்கு
    2. லோகத்லே எழுதறதுக்கு இல்லாத விஷயங்களா? நிறைய இருக்கு. ஆனா அதை எப்படி பிரஸண்ட் பண்றாங்கங்கங்கறது தான் முக்கியமாகப் போய் நம்மை வாசிக்க வைக்கறதுங்கறது தான் முக்கியமாப் போறது, இல்லையா?

      சுஜாதாவோட வெற்றியோட சீக்ரெட்டும் இதான்.

      நீக்கு
    3. நீங்க கூட அந்த பிரஸ்ட்டேஷன் விஷயத்தைப் பிரமாதமா செஞ்சிருக்கறதாலே தான் ஒரு நீண்ட கட்டுரை போன்ற விஷயத்தை ரொம்ப ஈசியா வழுவழுன்னு நேர்த்தியான நடைலே படிக்க முடிஞ்சிருக்குங்கறதுங்கறது
      என் அபிப்ராயம்.

      நீக்கு
    4. சுஜாதாவின் குருபிரசாத்தின் கடைசி தினங்கள் படிச்சிருக்கீங்களா? சங்கிலி? ஆரம்ப கால சமூகக் கதைகள்லே பிரமாதமா ஜொலிப்பார்.
      அப்படியே அவர் தொடராதது பெரிய இழப்பா இப்போ எனக்குத் தோண்றது.
      புதுமைப் பித்தனை விட மேலான தடத்தை தமிழ் எழுத்துலகத்தில் பதித்திருக்க வேண்டியவர். ஹ்ம்..

      நீக்கு
    5. //ஆனா அதை எப்படி பிரஸண்ட் பண்றாங்கங்கங்கறது தான் முக்கியமாகப் போய் நம்மை வாசிக்க வைக்கறதுங்கறது தான் முக்கியமாப் போறது, இல்லையா?//

      ஆமாம்.  நானும் அப்படிதான் நினைப்பேன்.  நீங்கள் லோகத்தில் என்று ஆரம்பித்திருப்பது எனக்கு சுந்தர பாகவதரை நினைவு படுத்துகிறது!

      //நீங்க கூட அந்த பிரஸ்ட்டேஷன் விஷயத்தைப் பிரமாதமா செஞ்சிருக்கறதாலே தான் //

      நன்றி ஜீவி ஸார்.

      //சுஜாதாவின் குருபிரசாத்தின் கடைசி தினங்கள் // //சங்கிலி?/

      படித்திருக்கிறேன்.  கே ஜி வொய் மாமா கூட இந்தக் கதை பற்றிச் சொல்வார்.  சங்கிலி என்று நீங்கள் குறிப்பிடுவது 'காகிதச் சங்கிலிகள்' என்று நினைக்கிறேன்.  கிட்னி செயலிழந்த ஒருவன் பற்றிய கதை.

      நீக்கு
    6. எஸ். கா சங்கிலி தான்.

      சாவியில் வந்தது. மனதை உருக்கி யதார்த்த வாழ்க்கையின் மனித மனங்களை படம் பிடித்துக் காட்டிய
      எழுத்தோவியம்.

      நீக்கு
  60. வாசிப்பு, எழுத்துபற்றியெல்லாம் நிறைய கருத்துகள் குதித்து வியாழனை ரொப்பிவிட்டன! முத்துலிங்கம் என்ற பெயரைக் கேள்விப்பட்டதில்லை என்கிறீர்களே. அ.முத்துலிங்கம் என்பவர் ஒரு புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர் எனவும் கேஷுவலாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடமுடியாது. சமகாலத் தமிழின் அருமையான எழுத்தாளர்களில் ஒருவர். புலம்பெயர்ந்து வாழ்வோரின் வாழ்வுச்சிக்கல்களை, அந்தந்த நிலப் பின்புலத்தில் அருமையாக வடித்து கதைகள் புனைந்திருக்கிறார். முதலில் அவருடைய சிறுகதைப் புத்தகம் ஒன்று வாங்கி வாசியுங்கள். ரசிப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  61. ஸ்ரீராம்..

    தெற்கத்திக்கார மூவேந்தர்கள்?

    வண்ண நிலவன்
    வண்ண தாசன்
    நாஞ்சில் நாடன்

    இந்த மூன்று பேரும் ஒவ்வொருவரும்
    ஒவ்வொரு விதத்தில் கலக்கியிருக்கிறார்கள்

    எஸ்ரா -- இன்னொருவிதம்.
    ஜெயமோகன் -- மற்றொருவிதம்

    யாரையும் விட மனசில்லாமல் தான் போகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  அதேசமயம் வெறும் பெயரைக் குறிப்பிடாமல் அவர்கள் பாணி என்ன என்று ஓரிரு வரிகளில் கோடி காட்டியிருக்கலாம்.  அதைதான் நானும் கேட்டிருந்தேன்.

      நீக்கு
  62. செய்யலாம்.

    பின்னூட்டங்கள் 200-ஐத் தாண்டும் என்று நெல்லை கணித்திருந்தார்.
    198 வந்தாச்சு.

    இந்த 198-ஐ வாசித்ததில் உங்கள் அனுபவம் என்ன என்று சொல்லுங்கள். அதை வைத்து வரும் பகுதிகளில் இந்த மாதிரி விஷயங்களை எப்படிக் கையாளுவது என்று நீங்கள் தீர்மானம் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  63. // யாரையும் விட மனசில்லை..//

    ஜீரோ டிகிரி -காரரைக் கூட.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!