சின்னாம்பதி பழங்குடியின பகுதியில் உள்ள, 20 குழந்தைகளுக்காக, தனது வீட்டையே பள்ளிக்கூடம் போல மாற்றி, தினசரி வகுப்பு எடுக்கிறார் அப்பகுதியை சேர்ந்த, முதல் பட்டதாரி சந்தியா.
இந்நிலையில் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டதால், படிப்பு வாசனையே அறியாத அப்பெற்றோரின் குழந்தைகள், வீதி வீதியாக விளையாடியபடி, பொழுதை கழித்து வந்தனர். இக்குழந்தைகளை திரட்டி, தனது வீட்டையே பள்ளியாக மாற்றியுள்ளார், அப்பகுதியின் முதல் பட்டதாரியான சந்தியா.இங்கு, காலை 9:00 மணிக்கு துவங்கும் வகுப்புகள், மதியம் 3:00 மணி வரை செயல்படுகிறது. வாசித்தல், எழுதுதல், ஓவியம் வரைதல், கணக்கு போடுவது என, ஒற்றை ஆளாக, தனது கிராம குழந்தைகளை வழிநடத்தி, அமைதியாக புரட்சி செய்து வருகிறார் சந்தியா.
இவரை தொடர்பு கொண்டபோது, ''நான் 2018ல், தனியார் கல்லுாரி ஒன்றில், பி.காம்., முடித்தேன். கடந்தாண்டில் கல்லுாரி படிப்பு முடித்ததும், திருப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றில், மனிதவள மேம்பாட்டு பிரிவில் பணி கிடைத்தது.கல்லுாரி படித்த போது, மாலை நேர சிறப்பு வகுப்பு எடுத்து வந்தேன். ஊரடங்கு காரணமாக, தற்போது வீட்டிலிருப்பதால், இக்குழந்தைகளுக்கு முழு நேர வகுப்பு எடுத்து வருகிறேன். எங்கள் பகுதியில் எட்டாம் வகுப்பு வரை, குழந்தைகள் படித்து வருகின்றனர்.ஊரடங்கு தளர்வு முடிந்ததும், வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால், எங்கள் பகுதி குழந்தைகளுக்கு, யாராவது வந்து வகுப்பு எடுத்தால், பயனுள்ளதாக இருக்கும். கல்வி மட்டுமே, எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என உறுதியாக நம்புகிறேன்,'' என்கிறார். கோவையின் புதிய கலெக்டர், நிச்சயம் இக்குழந்தைகளை கைவிட மாட்டார் என்று நம்புகிறார் சந்தியா.
=====================================================================================================
"நல்ல பேரோடு புகழ் பெற்ற பெருமை.. வீரப் பெண்ணாக அவர் வாழும் மகிமை ."
மூணாறு :பெண் ஒருவர் முறத்தால் புலியை விரட்டியதை கேள்விப்பட்டுள்ளோம். அதேபோல் சற்று வித்தியாசமாக கேரளா மூணாறு அருகே வளர்ப்பு நாயை தாக்கிய சிறுத்தையை ராஜம்மா 65, என்பவர் கம்பால் அடித்து விரட்டிஉள்ளார்.
மூணாறு அருகே காந்தலுார் ஊராட்சி பாம்பன்பாறையில் கடந்த 15 ஆண்டுகளாக தனியே வசித்து வருபவர் ராஜம்மா. 'குக்கூ' என பெயரிட்டு ஆண் நாய் வளர்க்கிறார்.
===============================================================================================================
காதலியைக் கொன்றுவிட்டு, பொய் சொல்லித் தப்ப முயன்ற கொலையாளியை விவேகத்துடன் பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்... கேரளாவில் அந்தந்த சம்பவம்...
================================================================================================================
வாட்ஸ் அப் மூலம் ஒரு நண்பர் அனுப்பிய தகவல் :
ஃபெமி ஓடெடோலா: நைஜிரியாவை சேர்ந்தவர். உலக பணக்கார வரிசையில் 1000 கிட்ட இருப்பவர்.
ஒரு தொலைபேசி நேர்காணலில் கோடீஸ்வரர் ஃபெமி ஓடெடோலாவை வானொலி தொகுப்பாளர் பேட்டி எடுத்த போது,
"உங்களை வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு ..
ஃபெமி கூறினார்:
"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்."
1.முதல் கட்டமாக செல்வத்தையும் வழிமுறைகளையும் குவிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.
2.பின்னர் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பொருட்களை சேகரிக்கும் இரண்டாம் கட்டம் வந்தது. ஆனால் இந்த விஷயத்தின் விளைவும் தற்காலிகமானது என்பதை நான் உணர்ந்தேன், மதிப்புமிக்க பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது.
3.பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை.
4. நான்காவது கட்டம், என் நண்பர் ஒருவர் ஊனமுற்ற சில குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கச் சொன்ன நேரம். சுமார் 200 குழந்தைகள்.
நண்பரின் வேண்டு கோளின்படி, நான் உடனடியாக சக்கர நாற்காலிகள் வாங்கினேன்.
ஆனால் நண்பர் நான் அவருடன் சென்று சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நான் தயாராகி அவருடன் சென்றேன்.
அங்கே நான் சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு என் சொந்த கைகளால் கொடுத்தேன். இந்த குழந்தைகளின் முகங்களில் விசித்திரமான பிரகாசத்தை நான் கண்டேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து, சுற்றி நகர்ந்து வேடிக்கை பார்த்தனர்.
அவரகள் ஏதோ சுவர்க்கத்தை கண்டது போல் மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருந்தனர்.
எனக்குள் உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்தேன்.
நான் வெளியேற முடிவு செய்த போது குழந்தைகளில் ஒருவர் என் கால்களைப் பிடித்தார். நான் என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன், ஆனால் குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்து என் கால்களை இறுக்கமாக பபிடித்துக் கொண்டது.
நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: உங்களுக்கு வேறு ஏதாவது தேவையா?
இந்த குழந்தை எனக்கு அளித்த பதில் எனக்கு மகிழ்ச்சி அளித்தது மட்டுமல்லாமல், வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகு முறையையும் முற்றிலுமாக மாற்றியது.
இந்த குழந்தை கூறியது :
"நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களை சொர்க்கத்தில் சந்திக்கும் போது, நன்றி சொல்ல உங்கள் முகம் சரியாக அடையாளம் காணப்பட்டு இருக்க வேண்டும்.
(நன்றி : திரு M. தக்ஷிணாமூர்த்தி - அசோக் லேலண்ட் )
= = = =
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகடைசி வாட்சப் செய்தி ஏற்கனவே படித்ததுதான். பொதுவாக கொடுப்பது மட்டுமே சந்தோஷத்தை வழவழைக்கும் என்பது உண்மைதான். அதற்கு இயல்பான குணம் அமையப்பெறணும். பணம் இருந்தாலும் கொடுக்கும் இயல்பு யாருக்கும் வந்துவிடாது.
வாங்க நெல்லை... வணக்கம்.
நீக்குகம்பால் சிறுத்தையை விரட்டியதையும் பாசிடிவ்்செய்திகளில் சேர்த்துவிட்டீர்களே. உங்களை நம்பி கடிக்க வரும் நாயை கம்பால் தாக்கினால் PETAவுக்கு பதில் சொல்ல உங்கள் நம்பரைக் கொடுத்துவிட வேண்டியதுதான் போலிருக்கு.
பதிலளிநீக்குஇந்த நிகழ்ச்சி சம்பந்தமாக நான் படித்தது ஒன்று நினைவில் வருகிறது. முடிந்தால் எழுதுகிறேன்.
முறத்தால் அடித்து விரட்டினால் கொண்டாடுவீர்கள், கம்பால் அடித்து விரட்டினால் பெண்ணைக் கொண்டாட மாட்டீர்களோ!!!!
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா அக்கா.. வாங்க...
நீக்குவாட்சப் செய்தி நெகிழ வைத்தது. அட? நைஜீரியாக் கோடீஸ்வரர்! :) கேரளச் செய்திகள் இரண்டுமே படித்தவை. சந்தியா பற்றிய தகவல் அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் என்னாட்களும் ஆரோக்கியமமைதியுடன் வாழ
பதிலளிநீக்குஇறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்கு"நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களை சொர்க்கத்தில் சந்திக்கும் போது, நன்றி சொல்ல உங்கள் முகம் சரியாக அடையாளம் காணப்பட்டு இருக்க வேண்டும்.////////////// என்ன ஒரு மகிழ்ச்சி ,இதுதானே வேண்டும். மிக மிக நன்றி மா.
பதிலளிநீக்குநெகிழ்வு.
நீக்குகேரளத்தில் குற்றம் இழைத்தவரைச் சாதுர்யமாகப் பிடித்துக் கொடுத்த
பதிலளிநீக்குஆட்டோ ஓட்டுனருக்கு மனம் நிறை
வாழ்த்துகள்,
ஆம்!
நீக்குசிறுத்தையைக் கம்பால் விரட்டுவதாவது!!!!
பதிலளிநீக்குஎத்தனை ஆச்சர்யம். தன் அருமைச் செல்லத்தைக்
காக்கக் கம்பெடுத்தவர். நாய் மீண்டு வந்ததுதான்
மகிழ்ச்சி.
:>)))
நீக்குஇளஞ்சிறுமி சந்தியாவின் உதவிக்கரம்
நீக்குசலிக்காமல் செயல் பட்டிருக்கிறார்.
அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் மிக மகிழ்ந்து
இருப்பார்கள். நல்லெண்ணெங்களும்
உதவிகளும் தொடரட்டும் . அன்பு வாழ்த்துகள்.
அத்தனை நல்ல செய்திகளுக்கும் மிக நன்றி மா. Sriram.
__/\__
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க..
நீக்குஉண்மை நிகழ்வுகளுக்கும் உண்மைக் கதைகளுக்கும் வித்தியாசம் தெரிந்ததால் தான் இவற்றிற்கு உண்மைக் கதைகள் என்று நீங்கள் பெயரிடவில்லை போலும்.
பதிலளிநீக்கு:-)))
நீக்குநல்ல செய்திகள்,மனதை நிறைக்கும் செய்திகள். அவற்றில் எல்லாமும் நடந்தவை. ஆகவே உண்மை நிகழ்வுகள் என்றே சொல்ல வேண்டும். அதோடு இங்கே அவற்றைச் சுட்டுவதில் பொருளும் இல்லை. தேவை இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் இப்படியான செய்திகளே வருகின்றன.
நீக்குஆமாம் கீதாமா. நம் வாழ்வின் உண்மைகள்
நீக்குஎப்போதும் கவனத்தில் வைக்கப் படவேண்டியவை.
எங்கள் ப்ளாகின் நற்செய்திகள் ஊக்கம் கொடுப்பவை. நம் வாழ்வின்
நிகழ்வுகள் நம் குழந்தைகளுக்கு உரம் கொடுக்கும்.
இதில் கற்பனைக்குக் கட்டாயம் இடம் இல்லை.
என்றும் வாழ்க வளமுடன்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா.. வாங்க...
நீக்குஅந்தக் குழந்தை சொன்ன வாக்கியம் மனதை கவர்ந்தது.
பதிலளிநீக்குஆம்.. நன்றி ஜி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் , வாழ்க வளமுடன்.
நீக்குசந்தியாவின் நம்பிக்கை பலிக்கட்டும்.
பதிலளிநீக்குராஜம்மா அவர்கள் தன் வளர்ப்பு செல்லத்தை தைரியத்துடன் காப்பாற்றி விட்டார்.
குழந்தை கூறியது மனதை நெகிழ வைத்து விட்டது.
நன்றி.
நீக்குசொர்கத்தில் சந்திக்கையில், அடையாளம் காண...
பதிலளிநீக்குசில குழந்தைகள் வயதுக்கு மீறிய சிந்தனை உடையவை.
ஆம்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குஅனைத்தும் சிறப்பான செய்திகள்! வாட்ஸ் அப் செய்தி கருணை என்பது அனைத்து சந்தோஷங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதை அழகாய் எடுத்துக்காட்டுகிறது!
இனிய காலை வணக்கங்கள்!
நீக்கு@கௌதமன் சார்! புதன்கிழமைப் பதிவைப் பார்த்தீர்களோ? பதிலே வரலையே! பதினைந்து (அசட்டு?க்) கேள்விகள் கேட்டிருக்கேனே!
நீக்குபார்க்கிறேன்.
நீக்குஅருமையான செய்திகள்...
பதிலளிநீக்குமுடிவில் :
226.அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
நன்றி.
நீக்குசிறப்பான செய்திகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வு.
பதிலளிநீக்குவாட்ஸ் அப் தகவல் நெகிழ்வு.
நன்றி.
நீக்குநல்ல செய்திகளுடன் இன்றைய பதிவு..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
நலமே வாழ்க. நன்றி.
நீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்