செவ்வாய், 29 ஜூன், 2021

சிறுகதை :  அந்த ஒரு நாள் - கீதா ரெங்கன் 

அந்த ஒரு நாள்

கீதா ரெங்கன் 


முதுமை! நீண்டநாள் வாழும் பாக்கியம்? பெற்றவர்கள் எல்லாரும் கடக்க வேண்டிய பருவம்தான் என்றாலும் பாக்கியமா அது? நீடூழி வாழ் என்று என்னை யார் வாழ்த்தினார்களோ தெரியவில்லை. எதற்கு என்றும் இன்னும் புரியவில்லை. இப்படி உங்களில் யாருக்கேனும் நடந்திருக்குமா என்றும் தெரியவில்லை. இருக்கலாம்! இல்லை என்றாலும் என் அனுபவத்தைச் சொல்லிவைக்கிறேன்.

முதுமையைக் கொண்டாட வேண்டுமாம். ஹூம் என்னத்த கொண்டாடுவது? என்னைப் போன்றோர் எப்படிக் கொண்டாடுவது?

அந்த ஒரு நாள். இப்போது நினைத்தாலும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். முதுமைக் காலத்தில் டென்ஷன் தேவையில்லாத ஒன்று. அப்படி என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்? அதுக்குத்தானே இதைச் சொல்கிறேன்.

அந்தநாள். இரவு 7.30 இருக்கும். நான் டாய்லெட்டில் மதுகௌன்ஸ் ராகப் பாடலைப் பாடிப் பார்த்துக் கொண்டே என் கடமையை ஆற்றிக்கொண்டிருக்க.... ஒலியுடன் மினு மினுக்கும் லைட் மினுமினுத்தது. வாசலில் யாரோ வந்திருக்கிறார்கள் போலும். காதில் ஹியரிங்க் எய்ட் இருந்தாலும் சத்தம் எல்லாம் தாறுமாறாதான் கேட்கிறது. இப்படி டாய்லெட்டில இருக்கறப்ப பாதில போகவா முடியும். நேரங்கெட்ட நேரத்துல. ஹூம் யாராக இருக்கும்? இந்த நேரத்துல?

எனக்குக் காதுசரியாகக் கேட்பதில்லை என்று காலிங்க்பெல் அடித்தால் ஒலியுடன் மினுமினுக்கும் லைட் ஒன்றை டாய்லெட் உட்பட எல்லா ரூமிலும் பொருத்தி வைத்திருக்கிறார்கள். என்னை அப்படிப் பார்த்துக்கிறார்களாம்! தனியாக வைத்துவிட்டு இப்படி எல்லாம் வசதிகள் செய்து கொடுத்து தாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்பதற்கான அத்தாட்சி! எல்லாரிடமும் சொல்லிக்கொள்ள. இதுவா எனக்கு ரொம்ப முக்கியம்? யார் கேட்டார்கள்? 

“இருங்க இதோ வரேன்” இங்கிருந்து சொன்னா கேட்குமோ வந்திருப்பவருக்கு? ம் டக்குனு எழுந்து ஓட சின்ன வயசா?

டாய்லெட் கதவை எல்லாம் தாழ்பாள் போடக் கூடாது என்று பிள்ளைகளின் கட்டளை. இதுக்கொன்றும் குறைச்சலில்லை. இல்லாட்டாலும் இங்கு ஆரு இருக்கா? ஒண்டிக்கட்டை நான். மெதுவாக வெளியே வந்தேன். வேகமாக நடக்கவா முடிகிறது?

“ஆரு?” இது வேண்டாத கேள்வி. வாசலில் இருப்பவர் பதில் சொன்னாலும் என் காதில் விழப்போவதில்லை. மனம் மூளையைக் கன்சல்ட் செய்யாமல் தன்னைத் தானே முடிவெடுக்கிறது. அவருக்குக் கேட்கிறதோ இல்லையோ சொல்லுவோம், “இதோ வந்துட்டேன்”

க்ரில் சாவியை எடுத்துக் கொண்டு போய் நடையில் உள்ள க்ரில் வழியாக உற்றுப் பார்த்தால் இருட்டில், தெருவிளக்கின் வெளிச்சத்தில் யாரோ இருப்பது பசபசப்பாகத் தெரிந்தது. வாசல் லைட்டைப் போட்டேன். வெளிச்சத்திற்கும் இருட்டிற்கும் கண் மாறிமாறி பழகியதும் ஒரு பெண் நிற்பது தெரிந்தது. மனதில் பதற்றம். யாரென்று சரியாகத் தெரியவில்லை. இதுவும் வயதானதின் அடையாளம். 

“………………………………”

“ஆரு?”  கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்த்தேன்.

“ஜெயா......ஜெயா….”

“கத்த வேண்டாம். காது கேக்கறது”

ஹியரிங்க் எய்ட் போட்டிருப்பவர்களின் வெத்து ஜம்பம் இது. ஜெயாவேதான். மனம் அதிர்ந்தது. இவள் எதற்கு இங்கு வந்தாள்? நாக்பூரில் இல்லையோ இருக்கிறாள். மனதில் பயம். இருந்தாலும் வீட்டு வாசலில் நிற்பவளை விரட்டவா முடியும்?

“வா உள்ளவா. என்ன திடீர்னு இந்தப் பக்கம்?”

க்ரில்லைத் திறந்தேன். அவள் பின்னாலேயே ஒருவன் பெட்டி, மடக்குக்கட்டில், படுக்கை என்று கொண்டு வந்தான். அதிர்ந்துவிட்டேன். தனியாக இங்கு என்னை விட்ட காரணத்தின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரும் வேளைல இப்ப மீண்டும் அதிர்ச்சி. மூளை வேலை செய்ய மறுத்தது.

“கோபு நான் இங்க கொஞ்ச நாள் தங்கி கோயில் தரிசனம் செஞ்சுட்டுப் போலாம்னு வந்திருக்கேன்.”

”எனக்குக் காது கேட்கவில்லை என்று சத்தமாகச் சைகையோடு பேசினாள். என் ஹியரிங்க் எய்டின் வால்யூமை கொஞ்சம் கூட்டிக் கொண்டேன். ஏதேதோ சத்தங்கள் கேட்டது. ஜெயா பேசியது அதிர்வுடன் கேட்டது.

“அதுசரி, உன் பொண்ணோடுதானே இருக்க இல்லையா?”

“ஆமாம். யாரோட இருந்தா என்ன? என்னவோ போ, வாழ்க்கைல நிம்மதியே இல்லை. இப்ப கொஞ்ச நாளா இங்க பக்கத்துல இருக்கற ஆசிரமத்துலதான் இருந்தேன். அங்கருந்துதான் வரேன்”

நான் என்னவோ இங்க சொகுசா, சந்தோஷமா இருக்காப்ல பேசறாளே. உள்ளே சென்று கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அவளுக்கும் எடுத்து வந்தேன்.

“வேண்டாம் கோபு. நீ ஹால்லதான் படுக்கறே போல? நான் இந்த ரூம்ல தங்கிக்கிறேன். கட்டில் என் லக்கேஜ் எல்லாம் அங்க கொண்டு போட்டாச்சு.”

நான் உள்ளே போய் வர சமயத்துக்குள்ள ஒட்டகம் புகுந்த கதையாகிட.....இதென்னாடா புது விவகாரம். நாளைக்கே இவகோயில் போகும் போது ஊர்ல எல்லாக் கண்களும் பார்த்ததுனா உடனே, 85 வயசு கிழவனுக்கு பெண்ணாசை ஒரு பொண்ணோட சல்சானு கரித்துண்டால சுவத்துல வரைஞ்சு எழுதிப் போடுற ஊராச்சே. என் தலைஎழுத்து. 30 வருஷத்துக்கு முன்ன என் அண்ணா பெண்ணைப் பத்தியும் இப்படி எழுதிப் போட்ட அதே ஊர்தான் இப்பவும். ஒரு சுக்கும் மாறலை.

கூடவே பிள்ளைகளிடமிருந்து மாறி மாறி ஃபோன் வந்திடுமே! தொலைஞ்சேன் போ! பகவானே!

ஏற்கனவே அப்படி ஒரு பெயர் சூட்டி இங்க தனியா வைச்சுருக்காங்க. எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. அங்கு எல்லாரும் இருக்கறப்பவே நான் “அப்படி”ன்னு சொல்றவங்க இங்க தனியா இருந்தா நான் என்ன வேணா செய்யலாம்னு ஏன் தோணலையோ?

என்னை வைச்சுக்க விருப்பமில்லைனா ஏதேனும் ஒரு காரணத்தை உறவுகளுக்குச் சொல்லித் தங்களை நியாயப்படுத்திக்கணுமே. அதைத்தானே சுற்றமும் நம்பும்! எனக்கு எந்தச் சொத்தும் இல்லை என்பதையும் சொல்லிடறேன். உங்களுக்குப் புரிந்திருக்குமே இப்ப!

“நான் இங்க சமைக்கறது இல்ல. ஒரு வீட்டுலதான் பிள்ளை ஏற்பாடு செஞ்சு அங்க சாப்பிடுறேன். உனக்கும் அங்க சொல்றேன். ஆனா நீதான் பே பண்ணனும். நானே என் பிள்ளையைச் சார்ந்துதான் இருக்கேன். அங்க சொல்லட்டுமா? எனக்கு மட்டும்தான் செஞ்சுருப்பாங்க”

“இல்ல எனக்கு எதுவும் வேண்டாம்.”

தப்பித்தேன்.  அங்க போனா கண்டிப்பா முதல் வேலையா அந்தப் பையன் என் பிள்ளைக்கு.....அதென்ன? ஆங் வாட்சப்பாமே அதுல தகவல் சொல்லிட்டுத்தான் இலையே போடுவான். அது சுற்றம் முழுசும் சுத்தும். அவர்கள் சொன்ன காரணத்துக்கு ப்ரூஃப் ஆகிடும். இருந்தாலும் சாப்பிடறியான்னு கேக்காம என்னால இருக்க முடியலையே. இப்படித்தான் நான் மாட்டிக்கிறது. நாளை காலை ஜெயாவிடம் பேசிவிட வேண்டும், இங்கு சரிப்படாது என்று.

“கோபு பால் வைச்சிருக்கியோ? இருந்தாஅது போதும்”

“இங்க ஃப்ரிட்ஜ் எதுவும் இல்லை. பாலும் இல்லை. இனி காலைலதான். நான் போய் சாப்பிட்டுட்டு வரேன்” பதில் எதிர்பாராமல் நான் வெளியில் இறங்கினேன். கால்கள் நடுங்கியது.

இவள் யார்ன்னு உங்களுக்குச் சொல்ல வேண்டுமே. என் அண்ணா பெண்ணின் புகுந்த வீட்டினரும் எனக்கு நெருங்கிய உறவினர்கள்தான். அந்தக் குடும்பத்தின் உறவுப் பெண்தான் வந்திருந்தவள். சிறு வயதிலேயே கணவனை இழந்து வேலை பார்த்துக் குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியவள். மூத்த மகன் பல வருடங்களுக்கு முன்னரே சாமியாராகிவிட்டான். பெண்ணோடு இருக்கிறாள் .இப்ப திடீர்னு இங்கு.

நான் சாப்பிட்டு வீடு வரும் போது மணி 9. ரூம் கதவு மூடியிருந்தது. ஜெயா படுத்திருப்பாள். தூங்கியிருப்பாளோ? பாத்ரூம், டாய்லெட் எல்லாம் பார்த்துவிட்டு வந்தேன்.

மகளின் அழைப்பு. அதற்குள் விஷயம் போய் விட்டது போலும். எப்படி போயிருக்கும்? 4ஜி மாறி 6ஜி?

 “அப்பா, ஜெயா எதுக்கு அங்க வந்திருக்கா?” என்றதற்கு அப்புறம் அவள் பேசியது தெளிவாகக் கேட்கவில்லை. ஃபோனில் வேகமாகப் பேசினால் தெளிவாகக் கேட்பதில்லை. எத்தனையோ இயலாமைகள். இம்சைகள்.

“கொஞ்சம் நிறுத்தி நிதானமா சொல்லும்மா. உனக்கே தெரியுமே...” அதன் பின் அவள் பேசியது இதுதான்.

“இப்பதான் பத்மா ஃபோன் செஞ்சு சித்தப்பா எதுக்கு இந்த ஜெயாவை வீட்டுக்குள்ள விட்டார்? அவ எதுக்கு இப்படி வந்திருக்காளாம்? ஊர், வம்பு பேசி கதை பரப்பறதுக்கா?’ ந்னு கேக்கறா. அவ மாமனாரும் மாமியாரும் அவளைப் போட்டு பிடுங்குறாங்களாம். ஜெயாவை உடனே வெளிய போய் வேற எங்கயாவது தங்கச் சொல்லி உன் சித்தப்பாவை சொல்லச் சொல்லுன்னு சொல்றாங்களாம்”

மகள் என்னை நன்றாகப் புரிந்து கொண்டவள், என்றாலும் கோபம். அவளுக்கு என் அண்ணா பெண்ணிடமிருந்து ப்ரஷர். எல்லோரும் அவரவர் இடத்திலிருந்து பேசுகிறார்கள். என் இடத்திலிருந்து யார் யோசிக்கப் போகிறார்கள்? என்றுமே அது கிடையாதே.

“எல்லாரும் மெத்தப் படிச்சவங்கதானேம்மா. சின்ன வயசுலருந்தே என்னை நல்லா தெரிஞ்சவங்களே இப்படிப் பேசறாங்களே. வீட்டு வாசல்ல அதுவும் இந்த சமயத்துல வந்தவள நான் எப்படிம்மா விரட்ட முடியும். நமக்கு நெருங்கிய சொந்தம் சின்ன வயசுலருந்து தெரிஞ்சவதானேம்மா….இந்த அளவுக்குக் கூட புரிஞ்சுக்க மாட்டாங்களா? மனிதாபிமானம் இல்லாம என்னால இருக்க முடியலைமா…”

கதவு மூடியிருந்தாலும் நான் சத்தமாகப் பேசியது ஜெயாவின் காதில் விழுந்திருக்குமோ? மகள் கவலைப்பட்டாள். என் நிலைமையையும் புரிந்து கொண்டவள்தான. இருந்தாலும் பத்மா வீட்டாரிடமிருந்து ப்ரஷர்.

வீட்டின் பின்புறம் சென்று பேசச் சொன்னாள். பத்மாவும் என்னைக் கூப்பிடுவாள் என்று சொன்னாள். பத்மா கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். ஏன் எனக்கு இப்படி ஒரு சோதனையோ. எனக்கென்று எதுவும் இல்லாததால்தான் எல்லோரும் என்னை இப்படி நடத்துகிறார்களோ? என்னிடம் பணம் இருந்திருந்தால்?

“நானே நாளைக்குக் காலைல ஜெயாகிட்ட பக்குவமா பேசறதாத்தான் இருக்கேன். சரிம்மா. நீ கவலைப்படாம நிம்மதியா தூங்கு.”

சொல்லிவிட்டேனே தவிர எனக்குப் பதற்றத்தில் தூக்கம் வரவில்லை. பத்மா அழைத்தாள். கையிலேயே ஃபோன் இருந்ததால் தெரிந்தது. நான் தூங்கினால்தானே? வீட்டின் பின்புறம் சென்று பேசினேன்.

ஜெயா வந்ததும், உறவினரும் என் பால்ய சினேகிதருமான அவள் மாமனாரைக் கூப்பிட்டு நான் ஏன் சொல்லவில்லை என்று கடிந்து கொண்டாள்.

எனக்குத்தான் பயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றுமே தோன்றவில்லையே. எல்லாம் சொன்னேன். வேறு ஒரு உறவு மூலம் அவர்களுக்குத் தெரிந்ததாம். ஜெயாவையே கூப்பிட்டுப் பேசலாமே. ஏன் என்னை அழைத்து டென்ஷனாக்க வேண்டும்? ஓ ஒண்ணுமில்லாத என்னைத்தானே விரட்ட முடியும்.

மகள், மாப்பிள்ளைக்குத் தெரியாதபடி பார்த்துக் கொள்வாள். ஆனால் பிள்ளைக்குத் தெரிந்தால் மருமகளுக்குத் தெரியாமல் இருக்காது. வேறு வினையே வேண்டாம். குடும்பத்திற்குள் வந்தவர்கள்தானே எனக்குப் பெயர் சூட்டியது. என்னைப் போல இப்படி யாரும் வயதானகாலத்தில் தன்னந்தனியே அவஸ்தைப்படக்கூடாது. உலகம் பணத்தின் பின் அலையக்கூடியது. கருணையை எதிர்பார்க்க முடியாது. தூங்காமலேயே இரவு விடிந்தது.

ஜெயா விழிக்கவில்லை போலும். கதவு மூடியே இருந்தது. மனம் கொஞ்சம் பதற்றமாகியது. அவள் எழுந்து வர வேண்டும் என்று பிரார்த்தனை. வேறு ஏதேனும் என்றால்……நாவலே எழுதிவிடுவார்கள்.

அவளுக்கு எப்படி உறக்கம் வந்ததோ?  பால்காரன் வந்து, நான் காபி போட்ட வேளையில் ஜெயா எழுந்து வந்தாள். மனம் ஆசுவாசமானது.

“ஓ கோபு நீ இப்பவும் அப்போ போலவே சீக்கிரம் எழுந்துடுறியா?”

“ஆமா. பழக்கம் எப்படி விடும்? காபி கலக்கவா?”

“கல. சரி, நீ எப்ப கோயிலுக்குப் போவே?”

“போணும்” கூடவே பயமும் வந்தது. எங்கேனும் தானும் வருகிறேன் என்று சொல்லிவிடுவாளோ என்று.

“நான் அப்புறம் போய்க்கிறேன்” எனக்குப் பெரிய ஆசுவாசம்

நீ வேறு இடத்தில் தங்கிக்கொள் என்று எப்படிச் சொல்லுவது? மனதில் மீண்டும் பதற்றம். ஊரில் அப்படி எதுவும் தங்கும் இடமென்று இல்லை.

காஃபி எடுத்துக்கொண்டு ஃபோனில் பேசிக் கொண்டே வந்தாள் ஜெயா. யார் பேசினார்களோ தெரியவில்லை. ஆனால் முகம் பிரசன்னமாகத்தான் இருந்தது.

அவளிடம் சொல்லிவிட்டுக் கோயிலுக்குச் சென்றேன். பார்த்தவர்கள் என்னிடம் ஏதோ கேட்க வந்தது போலத் தோன்றியது. இந்த விஷயமோ? இதுதான் மனப்பிராந்து என்பது. கவனிக்காதது போல வேகமாக கோயிலினுள் சென்றேன்.

சட்டென்று ஐடியா தோன்றியது. கோயில் அர்ச்சகரிடம் சொல்லிக் கேட்டால் என்ன? அவர் குடும்பத்துடன்தானே இருக்கிறார். அவர்களுடன் கூடத் தங்கிக் கொள்ளலாம் அல்லது நான் சாப்பிடும் இடத்தில் பேசி அவள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து விட வேண்டியதுதான்.

அவர்களுக்கும் ஒரு வருமானம். அவளுக்குப் பணத்திற்குக் குறைச்சல் கிடையாது. அவள் வேண்டுமளவு தங்கி கோயில் தரிசனம் செய்யட்டுமே. அதுதான் நல்லது. அர்ச்சகரிடம் யாத்ரீகப் பெண் என்று சொல்லி தங்க இடம், சாப்பாடு என்று சொன்னதும் முதலில் யோசித்தார். நல்லகாலம் கடைசியில் சரி என்று சொல்லிவிட்டார். அவள் பணம் தருவாள் என்றும் சொன்னேனே!

வீட்டிற்கு வந்து நான் ஜெயாவிடம் விவரம் சொல்லும் முன்னரே...

“கோபு, நான் இன்னிக்கே ஃப்ளைட்ல நாக்பூர் போயிடறேன். மதியஃப்ளைட்டா இல்லை சாயங்கால ஃப்ளைட்டானு புக் பண்ணிட்டு சொல்லறேன். எனக்கு ஏர்போர்ட் போக ஒரு டாக்சி மட்டும் சொல்லணும். மூணு மணிநேரம் தானே ஏர்போர்ட்போக…பிரச்சனை இல்லை. சாப்பாடு எதுவும் நீ சொல்லவேண்டாம். எங்கிட்ட ப்ரெட், பழம் இருக்கு போறும்.”

ஓ நான் முந்தைய தினம் சத்தமாகப் பேசியது அவள் காதில் விழுந்திருக்கலாம்? ஹாங் அதனால் என்ன? எப்படியோ அவள் போனால் போதும். இனியும் என்னால் பலரின் பல்லில் மாட்டிக்கொள்ள முடியாது. மகள், பத்மா எல்லோரிடமிருந்தும் மாறிமாறி ஃபோன்.

“ஜெயாகிட்ட போகச் சொல்லிட்டியா? ‘என்ன? கிளம்பிட்டாளா?’ ‘எப்போ கிளம்பறா....?”

சரியாக விடியக் கூட இல்லை அதற்குள் இத்தனை ஃபோன். இதற்கு மட்டும் இப்படிக் கூப்பிடுபவர்கள் நீ எப்படி இருக்கேன்னு கேட்டுப் பேசுவது என்பது....ம்ம் சரி வேண்டாம். யாரையும் நான் குறை சொல்லப் போவதில்லை. என் விதி.

“ஆஸ்ரமத்துக்காகத்தான் என்னை விட்டாளாம். இப்படித் தனியா தங்கக் கூடாதுன்னு கரிசனம் பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும்” என்றாள் ஜெயா. 

பரவாயில்லை ஜெயாவுக்கேனும் தனியா இருக்கக் கூடாது என்று வைத்துக் கொள்ள மாப்பிள்ளை! அவள் சென்றதும் என் ரத்த அழுத்தத்தை சோதித்துக் கொண்டேன்.

= = = =

70 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். குறையும் தொற்று முழுவதும் குறைந்து அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாக்கா... வணக்கம்.

      நீக்கு
    2. கௌ அண்ணா படம் ரொம்பப் பொருத்தமாக நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி கௌ அண்ணா. காலையில் படம் வரவே இல்லை. இப்போதுதான் தெரிகிறது.

      மிக்க நன்றி மீண்டும்

      எபி ஆசிரியர்கள் ஸ்ரீராம் மற்றும் கௌ அண்ணாவிற்கு நன்றி.

      கீதா

      நீக்கு
    3. எபி தளத்திற்கும் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த தாமதமான வாழ்த்துகள்! இதுக்குத்தான் ..இன்னும் பல அகவை வலையுலகில் பிரகாசித்திட மனமார்ந்த வாழ்த்துகள்!

      இன்று.. (நேற்று)

      //எங்கள் நம் தளம்
      ​பதிமூன்றாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது..
      உங்கள் ஆதரவு, அன்பு, ஆசிகளுடன்..
      உங்கள் ஆதரவை தொடர்ந்து நாடும்
      - எங்கள் ப்ளாக் குழு -//

      கீதா

      நீக்கு
  2. இன்னிக்கு என்ன எல்லோரும் தூக்கம்? இன்னிக்கு துரையோட கதை இல்லைனா தி/கீதாவோட கதைனு நினைச்சுட்டுத் தான் வந்தேன். கதையைப் படிச்சுட்டேன். மனசு சரியா இல்லை. இப்படியுமா மனிதர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ எல்லோருமே கொஞ்சம் மெதுவாகத்தான் வருகிறார்கள்!

      நீக்கு
    2. @ கீதாக்கா...

      // இன்னிக்கு துரையோட கதை இல்லைனா தி/கீதாவோட கதைனு நினைச்சுட்டுத் தான் வந்தேன்... //

      தங்களது அன்பினுக்கு நன்றியக்கா...

      நீக்கு
    3. போன வாரமே நினைத்தேன் சரியாக நான், பயணம் மற்றும் கடமையில் இருக்கும் போது நம் கதை வரப் போகிறதே அடுத்த செவ்வாய் வந்துவிடுமோ என்று தோன்றியது அதுதானே நம்ம ராசி!! ஹாஹாஹா

      அது போல் இன்று....சரி பதில் கொடுத்துவிடுவோம் கிடைக்கும் கொஞ்சம் கேப்பிலும் என்று...

      நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  3. காலை வணக்கம் கீதாமா. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் என்றும் ஆரோக்கியத்துடனும் அமைதியுடனும் இருக்க
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. எனக்கு லக்ஷ்மியும், எஸ்பிபியும் நடிச்ச "ஜன்னல்" தொடர் நினைவில் வந்தது. ஆனால் அதில் இன்னமும் கொஞ்சம் வயசில் சின்னவங்க. இதில் பெரியவருக்கு எண்பதைத் தாண்டிய வயசு. முடியாதவர்! அப்படியுமா? மனிதனைப்போன்ற கேவலமான மிருகம் வேறில்லை என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு கதையைக் கொடுத்திருக்கும் சின்ன கீதாவுக்கு வாழ்த்துகள்.

    இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களே
    என்று வருத்தமாக இருக்கிறது. காது கேட்காமல் 85 வயதில் தனியாக இருக்குமந்த
    முதியவரின் நிலை பரிதாபம்.

    எல்லோருக்கும் சமாதானம் சொல்லிக் கொண்டே
    இருக்கிறாரே.

    மிக அருமையாகக் கதையை நடத்திச் சென்றதற்கு மனம்
    நிறை பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ல இந்தத் தொடர் ரொம்ப நல்லாருக்கும்னு என் தங்கை சொன்னாள் ஆனால் நான் ஒரே ஒரு சீன் மட்டும் பார்த்தேன். முழுவதும் பார்த்ததில்லை. அவளும் உங்களைப் போன்றே இப்படியும் எல்லாம் தப்பா பேசறாங்க பாரு என்று...பல ஊர்கள் அப்படித்தான் இருக்கு. இங்கு நம்மால் ஒரு நல்ல உறவை நட்பை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அது எத்தனை வயதானதாக இருந்தாலும்

      மனிதனைப்போன்ற கேவலமான மிருகம் வேறில்லை என்றே தோன்றுகிறது.// பல சமயங்களில் அப்படித்தான் தோன்றுகிறது கீதாக்கா மகன் அடிக்கடி சொல்லுவான்

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  6. “ஆரு?” இது வேண்டாத கேள்வி. வாசலில் இருப்பவர் பதில் சொன்னாலும் என் காதில் விழப்போவதில்லை. மனம் மூளையைக் கன்சல்ட் செய்யாமல் தன்னைத் தானே முடிவெடுக்கிறது. அவருக்குக் கேட்கிறதோ இல்லையோ சொல்லுவோம், “இதோ வந்துட்டேன்”....../////////“ஆரு?” ????கொடுமை மிகக் கொடுமை. இதெல்லாம்
    அனுபவித்துக் கொண்டு எத்தனை வயது இருப்பது:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியாக இருக்கும் நிறைய வயதானவர்கள் ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி பல இன்னல்களைக் கடந்து வர வேண்டியுள்ளதாக இருக்கிறாது வல்லிம்மா...என் உறவினர் ஒரு பெண் பாவம் தனியாக இருந்த போது தனக்கு ஒரு துணை வேண்டும் என்று ஓர் ஆணை ஜஸ்ட் ஒரு பாதுகாப்பு துணை நட்பு என்று இருந்தப்ப வேண்டாம் அது இங்கு. வேறு ஒரு வடிவத்தில் வரும் வல்லிம்மா ஆனால் எப்போ என்றுதான் தெரிவில்லை வழ்க்கம் போல் கீதா ஹிஹிஹிஹி

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  7. அந்த ஜெயாவுக்கும் சோதனைக்காலமோ. இரண்டு நாட்கள்
    இருப்பதாகச் சொல்லி வந்தவள்
    உடனே கிளம்புகிறாளே !!!
    அவளையும் பேசிப் பேசிக் கிளப்பி விட்டார்களே.
    என்ன உலகமடா இது!!

    நிஜமாகவே ஊருக்குப் போகிறாளா வேறெங்கையும் போகிறாளா.
    மனசே சரியில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பாவம் ஜெயா. கதை எழுதும் போது //நிஜமாகவே ஊருக்குப் போகிறாளா வேறெங்கையும் போகிறாளா.// எனக்கும் இது மனதில் வந்தது வல்லிம்மா.....

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  10. பணம் சேமிப்பு இல்லாமல் மற்றோரை நம்பியுள்ள முதியோரின் பாட்டை சிறப்பாக எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள் கீதா மேடம்.
    நல்ல சிறுகதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரவிந்த் மிக்க நன்றி.

      பணம் உள்ள முதியோருக்கும் வேறு விதமான பிரச்சனைகள் உண்டு. அதுவும் மனதில் உண்டு அது பற்றி எழுத. ஆனால் எப்போது என்பதுதான் இந்தக் கீதாவைப் பொறுத்தவரை கஷ்டமான கேள்வி!!!

      கீதா

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. //எனக்குக் காதுசரியாகக் கேட்பதில்லை என்று காலிங்க்பெல் அடித்தால் ஒலியுடன் மினுமினுக்கும் லைட் ஒன்றை டாய்லெட் உட்பட எல்லா ரூமிலும் பொருத்தி வைத்திருக்கிறார்கள். என்னை அப்படிப் பார்த்துக்கிறார்களாம்! தனியாக வைத்துவிட்டு இப்படி எல்லாம் வசதிகள் செய்து கொடுத்து தாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்பதற்கான அத்தாட்சி! எல்லாரிடமும் சொல்லிக்கொள்ள. இதுவா எனக்கு ரொம்ப முக்கியம்? யார் கேட்டார்கள்?// அந்த வயதானவரின் மனதை படம் பிடித்த வரிகள்.
    தனியாக வசிக்கும் ஒரு முதியவர், அவர் ஏன் தனிமை படுத்தப்பட்டிருக்கிறார் என்பதற்கான காரணத்தை பூடகமாக சொன்னது சிறப்பு.
    சிறப்பான கதை. கதாசிரியருக்கு பாராட்டுகள். எ.பி.க்கு நன்றி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியாக வசிக்கும் ஒரு முதியவர், அவர் ஏன் தனிமை படுத்தப்பட்டிருக்கிறார் என்பதற்கான காரணத்தை பூடகமாக சொன்னது சிறப்பு.
      சிறப்பான கதை. கதாசிரியருக்கு பாராட்டுகள். எ.பி.க்கு நன்றி.//

      நன்றி பானுக்கா உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  13. ..தூங்காமலேயே இரவு விடிந்தது//

    85 வயது ப்ரக்ருதிக்கு தூங்காமல் இரவு விடிந்தால்தான் என்ன இப்போ? நாட்டுல என்னடான்னா.. நாப்பது வயசுங்களுக்கே தூக்கம் வரமாட்டேங்குது.. பொழுது விடிஞ்சிருது..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஏகாந்தன் அண்ணா, அவருக்குப் பிரச்சனை வேற வந்துவிட்டதே அதனால்தான்..

      மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  14. பெரியவர் எத்தனை துன்புறுகிறார். இப்படியும் தவறாக பேசுகிற ஊர். இது போல காசிப் வகைகள் உடனே பரவிவிடும். வயோதிகம் சில பேருக்கே நல்லதாய் வாய்க்கிறது. பலருக்கு இக்கதையில் வருவது போல, நித்ய கண்டம் பூரண ஆயுசு. இதே பெண்ணாய் இருந்திருந்தால் கூடவே வைத்துக்கொண்டு புண்படுத்தியிருப்பர். பெரியவர் தனியாக இருக்கிறாரே. இந்தமட்டுக்கும் பரவாயில்லை. நெகிழ்ச்சியாய் உணர்ந்தேன். உண்மைகளை உரைக்கும் கதைக்கு நன்றி கீதாக்கா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய பெரியவர்கள் இப்படித் துன்பப்படுபவர்கள் உண்டு வானம்பாடி, அதுவும் தனியாக இருந்தால். இது மட்டுமில்லை இன்னும் நிறைய உண்டு

      மிக்க நன்றி வானம்பாடி/காயத்ரி உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  15. தனித்துவிடப்பட்ட வயோதிகத்தின் தவிப்பு, தடுமாற்றம், படபடப்பைக் கூர்மையாக அவதானித்த கதை.

    அந்த ஒரு நாளில் எனக்கே 85 ஆகிவிட்டது போலிருக்கிறது. ஜெயா புறப்பட்டதும் நெற்றி வியர்வையை ஒற்றிக்கொண்டேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஒரு நாளில் எனக்கே 85 ஆகிவிட்டது போலிருக்கிறது.//

      ஆ! அண்ணா கதை வாசித்து முடித்ததும் மீண்டும் கிரிக்கெட் பற்றி ஆர்வமாய் எழுதும் இளைஞர் ஆகிட்டீங்க தானே!!!!

      ஜெயா புறப்பட்டதும் நெற்றி வியர்வையை ஒற்றிக்கொண்டேன்..//

      ஆஹா ஏகாந்தன் அண்ணா அழகான முடிவு. ரொம்ப ரசித்தேன். ச்சே எனக்கு அப்போது இது மனதில் தோன்றவே இல்லையே...அண்ணா உங்கள் எழுத்து, வாசிப்பு அனுபவத்திற்கு முன் நான் ஜுஜூபி!

      மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா.

      கீதா

      கீதா

      நீக்கு
  16. நல்லதொரு சிறுகதை. பாராட்டுகள்.

    எத்தனை சிக்கல்கள் பெரியவருக்கு. யாரையும் எதையும் சொல்லிவிடக்கூடிய மனிதர்கள் நிறைந்த உலகமிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த உலகிற்கு நாக்கு என்பதே கிடையாது வெங்கட்ஜி. அடுத்தவர் விஷயத்தில் எட்டிப்பார்ப்பதுதான் பலருக்கும் வேலை..

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  17. வணக்கம் கீதாரெங்கன் சகோதரி

    நல்ல கதை. முதுமையில் தன் பிள்ளைகளினால் தனித்து விடப்பட்ட அந்த மனிதரின் உள்ளுணர்வை புரிந்து கொள்ளும்படியான எழுத்துக்கள். அந்த ஒரு நாளில் தன் உறவுகள் ஏதேனும் அனாவசியமாக சொல்லிவிடப் போகிறார்களே என அவர் தவிக்கும் தவிப்பு கதையில் நன்றாக காட்டப்பட்டுள்ளது. யாராக இருந்தாலும், பணம் என்ற மதிப்பும், இளமையும் கடந்து போனால் கஸ்டந்தான். ஆனால், இவை உலகில் சாசுவதமில்லை என கூடவேயிருக்கும் உறவுகள் எவரும் அறிந்து கொள்ளாத அந்த நிலை அந்த பெரியவருக்கு வந்திருப்பதை நீங்கள் விளக்கிய விதம் மனதை சஞ்சலமுறச் செய்கிறது. மனித வாழ்வியல் உண்மைகளை உங்கள் எழுத்தாற்றலில் காட்டியுள்ளீர்கள். நெகிழ்ச்சியான கதை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கமலாக்கா முதுமை வரமா சாபமா என்பது ஒவ்வொருவரைப் பொருத்து என்று தோன்றுகிறது.

      //மனித வாழ்வியல் உண்மைகளை உங்கள் எழுத்தாற்றலில் காட்டியுள்ளீர்கள். நெகிழ்ச்சியான கதை//

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  18. வெகு நாட்களுக்குப் பிறகு திரும்பத் திரும்ப வாசித்த கதை... கத்தியின் மீது நடப்பது போல எழுத்து நடை..

    பாவம் அந்த ஜெயாவும் கோபுவும்...

    அவர்களுக்கு என்று ஆசாபாசங்கள் இருக்கக் கூடாதா?..

    தொலைபேசியில் துளைத்தெடுத்த வண்டுகளுக்கு தோள்கள் இருக்கின்றன தானே சாய்ந்து கொள்ள?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு நாட்களுக்குப் பிறகு திரும்பத் திரும்ப வாசித்த கதை... கத்தியின் மீது நடப்பது போல எழுத்து நடை..//

      மிக்க நன்றி துரை அண்ணா. திரும்ப திரும்ப வாசிக்கும் அளவிற்கு!! துரை அண்ணா மிக்க ந்னறி.

      ஆமா கொஞ்சம் நழுவினாலும் கதை வேறு ட்ராக்கில் போகும் அசிங்கம் கலந்துவிடும் என்பதால் மிகக் கவனமாக எழுத வேண்டியதானது.

      இங்கு எல்லோரும் நீங்களும் //அவர்களுக்கு என்று ஆசாபாசங்கள் இருக்கக் கூடாதா?.//.சொல்லியிருப்பது போல் முதுமையில் ஒரு நட்பு துணை இருந்தால்தான் என்ன! ஏனோ இந்தச் சமூகம் அதை அசிங்கமாகப் பார்க்கிறது.

      மிக்க நன்றி துரை அண்ணா.

      கீதா



      நீக்கு
    2. //முதுமையில் ஒரு நட்பு துணை இருந்தால்தான் என்ன! ஏனோ இந்தச் சமூகம் அதை அசிங்கமாகப் பார்க்கிறது.// - அது எப்படி அப்படிப் பார்க்கும்? அந்த நட்பு டபக் என்று வந்ததாக இல்லாமல் இயல்பாகவே பல வருடங்களாக இருக்கும்போது அதனைப்பற்றி யாருமே அசூயை கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  19. பள்ளிக்கூட ஆசிரியர் அவர்.. மனைவியை இழந்தவர்.. அதே பள்ளியில் இடைநிலை வேலை செய்யும் பெண் கணவனைப் பறி கொடுத்தவர்.. இருவருக்கும் மனம் ஒன்றிப் போனது.. அருகிலிருந்த மாரியம்மன் கோயிலில் மாலை மாற்றிக் கொண்டனர்.. அதற்கான சான்றிதழ் மட்டும் கையில்.. திருமணப் பதிவு செய்யவில்லை.. அதற்குள் சுற்றுலா சென்று விடுதியில் தங்கிய போது போலீஸ் பிடித்து கூண்டுல் ஏற்ற - வழக்கு தள்ளுபடியாகி விட்டது...

    பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ கடவுளே! பாவம்! எதை எதையோ ஆதரிக்கும் இந்தச் சமூகம் இதை ஆதரிப்பதில்லை!

      நன்றி துரை அண்ணா...

      கீதா

      நீக்கு
    2. இப்போதெல்லாம் விளம்பரங்களின் மூலம் இந்தக் கருவை எடுத்துக்காட்டி மனித மனதை மாற்ற முயற்சிக்கின்றனர். ஒரு விளம்பரம் வந்து கொண்டிருந்தது. இப்போது காணவில்லை.

      நீக்கு
  20. கீதா அவர்களுக்கு நல்ல மனது... இருந்தாலும் கதை மிகவும் நெஞ்சை அழுத்திற்று...

    இன்னும் சில நாள் இருந்திருந்தால் அவரவர் தனிமைத் துயர் தீர்த்திருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அவர்களுக்கு நல்ல மனது...//

      அண்ணா நீங்கள் சொல்வது போலான ஒரு கதை மனதிலும் எழுத்தில்ரும் இருக்கிறது...மனம் முடித்துவிட்டது ஆனால் கை இன்னும் முடிக்கவில்லை.

      மிக்க நன்றி துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
  21. ஐயோ கஷ்டம். இப்படியும் ஸந்தேகம் உண்டாவயோதிகம் இப்படியுமா. இன்னும் எவ்வளவோ எழுதலாமா? அன்புடன்

    பதிலளிநீக்கு
  22. மனம் விட்டுச் சொல்கின்றேன்...

    அந்தச் சூழலில் அவர் தன்னைப் பிறரது சொல்லம்புகளில் இருந்து காத்துக் கொள்ளப் போராவது மனதை நெகிழ்த்துகின்றது...

    மலையாளத்தில் துளசி என்றொரு திரைப் படம்... மோகன்லால், திலகன், ஸ்ரீவித்யா நடித்தது.. மகனுக்கு இருபத்தைந்து வயதாகும் போது தாய் தாங்கும் கர்ப்பம்.. அதனால் பிறத்தியாரின் சுடுமொழிகள்...
    அதன் மேல் விளைவுகள்..

    இன்று அந்தக் கதையை நினைத்தாலும் குலை நடுங்குகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயகாந்தன் எழுதிய ஒரு நெடுங்கதையும் இதே கருவில் உள்ளது. தமிழில் அதைத் தொலைக்காட்சித் தொடராக எடுத்தார்கள். தூர்தர்ஷனில் வந்ததா? பொதிகையா? நினைவில் இல்லை. எஸ்.எஸ்.ஆர். வெண்ணிற ஆடை நிர்மலா அந்தப் பெற்றோராக நடிப்பார்கள். நன்றாகவே எடுக்கப்பட்ட தொடர்.

      நீக்கு
  23. இப்படியான கதை என்பதை விட அதை எப்படிச் சொல்லியிருக்காங்க என்ற சாகசத் திறமை தான் என்னைப் பொறுத்த மட்டில் முக்கியமாகிப் போகிறது.

    கதை எழுதுகிறேன் பேர்வழி என்று ஏதோ கம்பெனி ஆண்டறிக்கை வாசிக்கிற தோரணையில் சுரத்தே இல்லாமல் போராடிக்கிற இக்கால வழக்கங்களின் பாதிப்புகளிலிருந்து விலகியிருந்து கதை சொன்ன பாங்கு என்னைக் கவர்ந்தது. வாழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  24. பதில்கள்
    1. அடுத்த செவ்வாய் அல்லது அதற்கு அடுத்த செவ்வாய் எபிலே கூட ஆ.அ. வராமப் போகாது. :))

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதைக்கு பொருத்தமான படங்களை வரைந்த கெளதமன் சகோதரருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். முதல் படமும் இரண்டாம் படமும் வேறுபாடில்லாமல் அச்சு அசல் அப்படியே வந்துள்ளது. இதை கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல... கை தேர்ந்த ஓவியர்களுக்கே வரும் கலை..வாழ்த்துகள். . கருத்துரையில் சொல்ல வேண்டுமென இருந்ததில் விட்டுப் போய் விட்டது. மன்னிக்கவும். நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. படங்களை mirror image செய்யும் வசதி Autodesk Sketch book app ல் உள்ளது. அதைப் பயன்படுத்தி கோபு படத்தை இரண்டாவது படத்தில் கொண்டுவந்து, mirror image செய்து, ஜெயா படத்தை மட்டும் சேர்த்துள்ளேன்.

      நீக்கு
    2. நீங்க சொல்லும் தொ.நு.நுணுக்கங்கள் ஒண்ணும் எனக்குப் புரியலை. ஆனாலும் தி/கீதா சொல்றாப்போல் படங்கள் எனக்கும் இப்போத் தான் தெரிந்தன. கணினி கோளாறோ?

      நீக்கு
  26. முதியவருக்கு வரும் பிரச்சனைகள், மற்றும் சகல வசதிகளுடன் தனிமையில் இருக்க வைத்து இருக்கும் குழந்தைகள் . என்று காலத்தின் கட்டாயத்தை சொல்லி இருக்கிறார் அருமையாக.

    மற்றும் பெண் முதியவர் வந்து தங்கினால் ஊர் உலகம் என்ன சொல்லும் என்பதையும் நன்றாக சொல்லி இருக்கிறார்.
    கதைக்கு பொருத்தமான படம் கெளதமன் சார் வரைந்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  27. கதை மிக வித்தியாசமான கரு மற்றும் நிகழ்வு. அதற்காகவே கீதா ரங்கனுக்குப் பாராட்டுகள்.

    ஒருவருக்கு எத்தனை வயது என்பது கணக்கில்லை. அவர் எந்த மாதிரியான இமேஜை மற்றவர்களிடத்தில் ஆரம்பத்திலிருந்து வளர்த்திருக்கிறார் என்பதும் மிக முக்கியம்.

    எப்போதுமே எந்த வயதாக இருந்தாலும், இன்னொரு பெண் (அவள் மகளாகவோ, சகோதரியாகவோ இல்லை சித்தி போன்றோராக இல்லாதவரை) கூட இருப்பதை சமூகம் ஒத்துக்கொள்வதில்லை.

    கதை சொன்ன விதம் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  28. //முதுமையில் தன் பிள்ளைகளினால் தனித்து விடப்பட்ட அந்த மனிதரின் உள்ளுணர்வை புரிந்து கொள்ளும்படியான எழுத்துக்கள். // - இது ரொம்பவே யோசிக்க வைக்கும் உணர்வு. தன் குழந்தைகளை எது முக்கியம் என்று சொல்லியும், செயலில் காட்டியும் வளர்க்காமல், பிறகு எதை நினைத்தும் பிரயோசனமில்லை. நாம் செய்யாததை, நாம் சொல்லிக்கொடுத்து வளர்க்காததை, நம் பசங்க நமக்குச் செய்யணும் என்று எதிர்பார்ப்பதே மடைமை என்று நான் நம்புகிறேன்.

    நாம்தான் நம் பயணத்தைத் தொடரணும், இறைவன் நம்மால் தாங்கமுடியாததை நமக்குக் கொடுத்துவிடமாட்டான் என்ற நம்பிக்கையுடன்.

    நிறைய எழுதலாம் இதனைப்பற்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!