ஞாயிறு, 6 ஜூன், 2021

ஞாயிறு : ஒரு அந்திமந்தாரையும் சில பட்டன் ரோஸ்களும்

                     இன்று  பட்டன் ரோஸ் , பட்டர் கப் , ஒரே ஒரு அந்திமந்தாரை

ஒரு கிளையைக் கிள்ளிநட்டால்  இன்னொரு செடி !


குறைந்த இடத்தில் நிறைய பூ 


வாசனை?


ஊஹூம்  

பச்சை இலைகளுக்கு நடுவே பிங்க் அழகுதான் 


இதுக்கு மேலே போன் காமெராவில் .....


நேரில் பார்க்க பார்க்க அழகு 







நாளை வந்தால்  செடி முழுதும் பூ 









தப்பி வந்த ஒரு அந்திமந்தாரை 












62 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம்.

    இந்த வாரம் பட்டன் ரோஸ் வாவாரம்ம்மமா?

    பதிலளிநீக்கு
  2. கண்களும் மனமும் குளிர்ந்தன..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்து, பிரார்த்தனை. அனைவர் வாழ்விலும் தொடர்ந்து தளர்வுகளும்/நிபந்தனைகளும் நீங்கி சாதாரணமான வாழ்க்கை நடைமுறைக்கு மீண்டும் வருவதற்குப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடைமுறைகள் நார்மலாகும் நாளை ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறது மனம்.  பிரார்த்திப்போம்.  வாங்க கீதா அக்கா..  வணக்கம்.

      நீக்கு
  5. இந்த ரோஜாவை நாங்க டேபிள் ரோஜா என்று அழைத்திருக்கோம். பட்டன் ரோஸ் எனச் சொல்லப்பட்டது வேறு வகை. இதழ்கள் அழுத்தமாகவும் பல வண்ணங்களிலும் பொக்கே கட்டுவதற்கு முன்னிலையும் வகிக்கும். இப்போதெல்லாம் பெரும்பாலான திருமணங்கள் இந்த வாசனைகள் அற்ற ரோஜாமாலைகளே! மணமக்கள் செல்லும் தனி வண்டியிலும் இவற்றாலேயே அலங்கரித்து வந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நாங்களும் டேபிள் ரோஜா என்றே அழைத்துப் பழக்கம்!

      நீக்கு
    2. இந்த ரோஜாவை நாங்க டேபிள் ரோஜா என்று அழைத்திருக்கோம்.// இந்த பெயரை நினைவூட்டியதற்கு நன்றி. நாம் வேறு ஏதோ பெயர் சொல்வோமே என்று யோசித்தேன்.

      நீக்கு
    3. இங்கே ஶ்ரீரங்கத்தில் அடுக்கு நந்தியாவட்டையோடு சிவந்த நிற பட்டன் ரோஸை வைத்துக் கட்டி மல்லிகைச் சரம் என்னும் பெயரில் விற்கின்றனர். வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதவர்கள் மல்லிகைச்சரம்னு நினைச்சே வாங்கிடுவாங்க. நம்ம ரங்க்ஸும் ஏமாந்திருக்கார் ஓரிரு முறை! :(

      நீக்கு
  6. அந்திமந்தாரையும் அழகோ அழகு தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பெயரில் ஒரு படம் வந்தது தெரியுமோ...!

      நீக்கு
    2. தெரியும் (அதிசயமாக) சொல்ல நினைச்சு விட்டுப் போயிடுத்து. :)

      நீக்கு
    3. பாரதிராஜாவோ/பாக்யராஜோ! யாருனு தெரியலை. அநேகமாய் பாரதிராஜாவாய் இருக்குமோ?

      நீக்கு
    4. பானுமதி வந்தால் சொல்லிடுவாங்க.

      நீக்கு
    5. பாரதிராஜாதான்.  ஏதோ விருது கூட பெற்றது.  ஆனால் பலர் நினைவில் இருக்காது!

      நீக்கு
    6. ஓ! விருதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் இவங்க இருவரில் யாரோனு நினைவில் இருந்தது.

      நீக்கு
    7. பானுமதி வந்தால் சொல்லிடுவாங்க.// இல்லை கீதா அக்கா, எனக்கு சுத்தமாக நினைவு இல்லை. இப்படி ஒரு படம் வந்ததோ என்று தோன்றியதே தவிர, பாரதிராஜா படம், அவார்ட் வாங்கியது என்பதெல்லாம் எனக்கு செய்திகள்.

      நீக்கு
    8. அப்பாடி..    ஒரு சின்ன அல்பதிருப்தி...   அக்காவுக்கு தெரியாத ஒரு விஷயம் நமக்குத் தெரிந்திருக்குன்னு...!

      நீக்கு
    9. திரைத் துறை தகவல் களஞ்சியமாகிய ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு அந்தி மந்தாரை என்றொரு படம் வந்தது தெரியாதா!.. ஆச்சர்யம்!..

      நீக்கு
    10. நம்ம "மன்னி"க்குத் தெரிஞ்சிருக்கும். அவங்களுக்குத் தெரியாத படமே இல்லை. பேசாத மௌனப்பட காலத்தில் இருந்து இப்போ வரை உள்ள எல்லாப் படங்களும் அத்துபடி!

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    தொற்று இல்லை என்ற செய்தி விரைவிலேயே வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. பிங்க்,வயலெட் என்று கண்ணுக்கு இதமான பூக்கள்.
    அந்தி மந்தாரை ஸ்பெஷல் அழகு. வாடாமல்லி கூட மதுரையில் நிறைய
    கிடைக்கும்.

    சற்றே பெரிதாக இருக்கும் டேபிள் ரோஸ்.
    பட்டன் அளவில் வரும் பட்டன் ரோஸ்.
    எல்லாமே பார்த்தே நாளாகிவிட்டது.

    மலர் உலாக் காலமும் அருமையாக இருக்கிறது.
    மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாடாமல்லி கெட்டிக் கதம்பத்தில் வைத்துக் கட்டுவார்கள் மதுரையிலே! மலர்கள் கண்களுக்குக் குளிர்ச்சி தான்!

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. பட்டன் ரோஸ் பலவண்ணங்களில் எங்கள் வீட்டில் இருந்தது.
    எப்போதும் பூத்து மகிழ்விக்கும்.
    படங்கள் எல்லாம் அழகு.
    அந்திமந்தாரையும் அழகு. அதுவும் அம்மாவீட்டில் எல்லா கலர்களும் இருந்தது. முதன் முதலில் பூ கட்டி பழகியது அந்தி மந்தாரை பூவால் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அந்திமந்தாரையின் பல வண்ணங்கள் பற்றிச் சொல்ல நினைத்து விட்டுப் போச்சு! வெள்ளை நிற டேபிள் ரோஸ் அம்பத்தூர் வீட்டில் வைத்திருந்தோம்.

      நீக்கு
    2. கீதா சாம்பசிவம் மேடம் என்ன சொல்றாங்க? வெள்ளை நிற டேபிளில் ரோஸ் (ரோஜாப்பூ) வைத்திருந்தாரா இல்லை டேபிள் ரோஸே வெள்ளை நிறத்தில் இருந்ததா? நான் இதுவரை வெள்ளை நிற டேபிள் ரோஸ் (பெயர்-நகைமுரண்) பார்த்ததே இல்லை

      நீக்கு
    3. இதிலென்ன நகைமுரண் எனப் புரியலை! டேபிள் ரோஸ் பூக்கள் வெள்ளை நிறத்திலும் பூக்கும்.

      நீக்கு
  11. நாங்களும் கீதா சொல்வது டேபிள் ரோஸ் தான் சொல்வோம்.

    பட்டன் ரோஸ் சின்னதாக பூக்கும் ரோஜாபூவை சொல்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பட்டன் ரோஸ் என்பது ரோஜாவின் வகை! ஆனால் பூவில் மணம் இருக்காது.

      நீக்கு
  12. மலைப்பாதைன்னா அடுத்தடுத்து மலைப்பாதை; பூக்கள், பூச்செடிகள்னா, வரிசைய்யா பூச்செடிகளே. வாராவாரம் வரிசைகளை மாற்றி வைரைட்டி காட்டக் கூடாதா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே...   

      வியாழன்களில், செவ்வாயில் உங்களைக் காணோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்...ஜீவி ஸார்...   

      நீக்கு
  13. தனித்துத் தெரிகிற மாதிரி பின்னூட்ட கருத்துக்களைத் தெரிவிப்பதின் மூலம் எபி-யை மென்மேலும் செழுமை படுத்த இனி முடிந்த பொழுதெல்லாம் வருவேன், ஸ்ரீராம். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. எங்க பக்கம் இது டேபிள் ரோஸ்... அவ்வளவு அழகாக இருக்கும்... படிக்கும் போது வீட்டில் சின்னச் சின்ன டப்பாக்களில் சுவர் முழுவதும் வைத்திருப்போம்... இப்போதும் எங்கள் வீட்டில் பூக்கிறது. பூக்கள் அழகு அண்ணா.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. ரோஜா மலர்கள் படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. அந்தி மந்தாரையை பார்த்து நீண்ட வருடங்கள் ஆகி விட்டன. அம்மா வீட்டில் இருக்கும் போது தோட்டத்தில் வளர்ந்தது. அப்போது அது மலரும் அழகிய வண்ணத்தை காண்பதற்காக அதனுடன் நானும் அந்திப் பொழுதை எதிர்நோக்கி காத்திருப்பேன். அது ஒரு காலம்.. நல்ல மலரும் நினைவுகளை கொண்டு தந்த பதிவுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. தஞ்சாவூர் பக்கம் இந்தப் பூக்களை பட்டு ரோஜா என்பார்கள்.. காலையில் பூத்து மாலையில் வாடி விடக்கூடிய இவற்றில் பல வண்ணங்கள்... இப்படிக் கிள்ளி அப்படி நட்டு வைத்தால் புதிய செடி..

    சின்ன வயதில் வண்ணங்களைப் பொறுத்து பட்டு ரோஜாச் செடிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்வதுண்டு..

    பதிலளிநீக்கு
  19. அழகான மலர்கள். பட்டன் ரோஸ் என்றே எங்களுக்கும் அழைத்துப் பழக்கம்.

    அந்தி மந்தாரை - பாரதிராஜா படம் - ஏ.ஆர். ரகுமான் இசை என நினைவு. பாடல்கள் ஒன்று கூட நினைவில் இல்லை! - வழக்கம் போல! ஹாஹா...

    பதிலளிநீக்கு
  20. இது மேசை ரோசா இல்லையோ?

    பொத்தான் ரோசா செடியில் வளர்வதுதான் மணம் இருக்காது. இதழ்கள் கொஞ்சம் கெட்டியாக இருக்கும். இங்கு பூஜைக்கு என்று கிடைப்பது பட்டன் ரோஸ்தான். கடைகளில் பார்த்திருக்கிறேன் எல்லாரும் வாங்கிச் செல்வார்கள்.

    படங்கள் நன்றாக இருக்கின்றன. சன் டிவியில் முன்னர் அதிரடி வாரம், காதல் வாரம் அப்படின்னு சொல்றாப்ல இந்த வாரம் மேசை ரோசா வாரம்!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  21. இந்த மேசை ரோசா சீக்கிரம் வளர்த்துவிடலாம். கிள்ளி நட்டால் போதும். டக்கென்று வளர்ந்துவிடும்.

    கிண்ணங்களில் கூட வைத்துவிடலாம். உரி போன்று தொங்கவும் விடலாம்...அழகாக இருக்கும். அதுவும் பல வண்ணங்களில் வைத்தால்

    கீதா

    பதிலளிநீக்கு
  22. நடுவில் அந்திமந்தாரை ஒன்று அழகாக இருக்கிறது. அந்திமந்தாரையிலும் வண்ணங்கள் உண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
  23. அழகு. அந்தி மந்தாரையும் அதே வண்ணத்தில்.. மனதைக் கவருகின்றது.

    பதிலளிநீக்கு
  24. அழகிய வண்ண மலர்கள். கண்ணுக்கு விருந்து.

    டேபிள் ரோஜா எங்களிடம் ரோஸ்,மஞ்சள், சிகப்பு, சிகப்பு வெள்ளை கலந்த இனங்கள் இருக்கின்றன. அந்திமந்தாரை நாட்டினேன் வரவில்லை.

    பதிலளிநீக்கு
  25. அழகு மலர் பல வருடங்களுக்கு முன் பார்த்தது., படங்கள் அத்தனையும் சிறப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!