ஞாயிறு, 20 ஜூன், 2021

மஞ்சள் பூ மகிமை

ஆஸ்டெர்  வெள்ளை மஞ்சள் இரண்டும் உண்டு 

சாதாரணமாக நாம் இந்தப்பூவை பார்ப்பதில்லை  கற்றாழைப் பூ 

வெண்டைப்பூ சற்று அதிகாலையில் எடுத்த போட்டோ . மஞ்சள் வெள்ளையாயிற்று. 

பருப்புக்கீரை. விதை கிடைக்கிறது. நாம் cut  பண்ணப்  பண்ண மென்மேலும் வளரும் . மாதம் இரு முறை அல்லது மும்முறை சமைக்கிறோம். 

இதற்கு பெயர்  தெரியவில்லை !

  

ஆனால் பச்சை இலைகளின் ஊடே மஞ்சள் நன்றாகத் தெரியும். 


ஒரு முறை செடி வந்து விட்டால்  பல வருடங்கள் இருக்கிறது. 


மோனார்க் வண்ணத்துப்பூச்சிக்கு மிகவும் பிடித்தமான செடி / மலர். 


உருண்டை கள்ளிப்  பூ 


மிகவும் சாவகாசமாக பூத்து மெதுவே வாடும் 


நீர்ப்பதம் காயாமல் வைத்திருந்தால்  வருடம் இரண்டு உருண்டையோ  மூன்றோ கிடைக்கும். நண்பர்களுக்கு கொடுக்கலாம். 


இந்த மொட்டு பிரிந்து 


என்ன பூ என்று தெரியும் முன்னர் ஒரு பசித்த புறா வந்து போனதில் 


மஞ்சள் பூவின் close up 


 அதான்டா இதான்டா அல்மோண்டா நான்தான்டா 


இப்போது நன்றாகப் பூக்கிறது 








மொட்டும் 


மலரும் 


ஒரு செடியில் இரு மலர்கள் மலர்ந்ததம்மா .. மலர்ந்ததம்மா ! 

= = = = =

54 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன்
    இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. மஞ்சள் முகமே வருக என்று பாடத் தோன்றுகிறது.
    வித விதமான படங்களை
    வித விதமான கோணங்களில் படம் எடுத்திருப்பது நல்ல
    சிறப்பு.

    கண்களுக்கும் மனதுக்கும் மகிழ்வைத் தருகின்றன.

    பதிலளிநீக்கு
  3. பூக்கள் என்றுமே அழகுதான் ஜி

    பதிலளிநீக்கு
  4. அழகிய பூக்களின் ஊர்கோலம் நன்று.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  6. ஓ... இன்று மஞ்சள் மலர்களின் ஆராதனையா!... நடக்கட்டும்..நடக்கடும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வரிகள் எனக்கு மலேஷியா வாசுதேவன் பாடலை நினைவூட்டி விட்டதால்....

      நீக்கு
  7. அழகான மஞ்சள் பூக்கள். ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பேர் தெரியாத அந்த ஐந்தாவது படம் ...டாமனியானா. மருத்துவ குணமுள்ளது. இதில் நிறைய வெரைட்டிஸ் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட? ஆமாம் இல்ல? பதில் கூடச் சொல்லி இருக்கேனே! என்னையும் அறியாமல் போட்டிருக்கேன் இந்தக் கருத்துரையை! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை, மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் இந்தப் பூக்களைப் போன்ற புத்துணர்வு கிடைத்து மன அமைதியுடன் வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. மஞ்சள் முகமே வருக/பாடலை நினைவூட்டியது. கள்ளிப்பூ முதலில் இருக்கும் வகை நிறையப் பார்த்திருக்கேன். கீழே இருக்கும் இரண்டாம் வகை பார்த்தது இல்லை. பெயர் தெரியாத பூவுக்கு மருத்துவ குணம் உண்டு. பெயர் என்னன்னு மறந்துட்டேன். நினைவூட்டிக் கொண்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ...    அதுதான் சின்ன கீதா சொல்லி இருக்கும் பெயரா?

      நீக்கு
    2. அட? இப்போத் தான் பார்க்கிறேன். நான் முதலில் கவனிக்கலை. இந்தப் பெயராக இருக்கலாம் என்றாலும் வேறு பெயரும் உண்டு. மனதில் இருக்கு! வெளிவரவில்லை. :(

      நீக்கு
  11. பாகல், பீர்க்கை, வெள்ளரி ஆகியவற்றின் பூக்களும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அவை இல்லையோ? அடுத்து என்ன நிறம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா பூஷணிவிட்டுட்டீங்களே...மஞ்சள் வெள்ளை இரண்டுமே.

      கீதா

      நீக்கு
  12. ம்ம்ம்ம்ம் கடுகுப்பூவின் நிறமும் மஞ்சள். அந்த நிறத்தைத் தானே மஸ்டர்ட் நிறம் என்று சொல்லிப் புடைவை எல்லாம் வாங்கிக்கறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் அந்தக் கலரில் பேண்ட்ஸ் வாங்குவதில்லை.  இருவர் மட்டும் அந்தத் நிறத்தில் பேண்ட்ஸ் போட்டிருக்கிறார்கள். எம் ஜி ஆர், ராமராஜன்!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  13. அர்ஜுன், மாடிக்குப் போய், மஞ்சள் நிறத்தில் இருக்கும் பூக்கள் மட்டும்..
    வந்தவற்றில் தர்பூஸ், பாகல் கூட இருந்தன. அவை காய்,பழம் இவற்றுடன் வரலாம் . 1000 சதுர அடியில் இன்னும் என்னென்ன வரும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காய், பழங்கள் இருந்தால் என்ன? பார்த்து வைக்கலாமே! செடி, கொடிகளோடு உறவாடியே பத்து வருஷங்களுக்கும் மேல் ஆகிவிட்டன! :( தோட்டம் மட்டுமே ஆயிரம் சதுர அடி எனில் இன்னும் எவ்வளவோ வருமே! வீடும் சேர்ந்து என்றால் இடம் போதாது. எங்களோட அம்பத்தூர் வீடு ஒன்றரை கிரவுண்டு. வீடு மட்டும் ஆயிரத்து நூறு சதுர அடி. மற்ற இடங்கள் தோட்டம். இரண்டு பக்கமும் செடிகள் இருந்தன. கிழக்கே இருந்த வீட்டுக்காரர்கள் ஆக்ஷேபங்கள் செய்ததால் அந்தப் பக்கம் எடுத்துவிட்டுத் தளம் போட்டிருந்தோம். மற்ற இடங்களில் உண்டு. நான்கு மாமரங்கள், ஒரு எலுமிச்சை, ஒரு மாதுளை, நான்கு தென்னை மரங்கள் தவிர்த்து அரளி, மல்லிகை, தங்க அரளி, வில்வம், துளசிவனம், சிறியாநங்கைச் செடிக்கூட்டங்கள், தூதுவளை, பிரண்டை, சித்தரத்தை, கருகப்பிலை என எல்லாமும் இருந்தன. நிழல் தட்டி விட்டது. பின்னர் வந்த நாரத்தங்காய் பூக்காமல், காய்க்காமல் படுத்தி எடுக்கவே ஒரு கிரஹணப் பௌர்ணமியில் புட்டுச் சமைத்துப் போட்டு நைவேத்தியம் செய்து வேருக்கு அருகே அரிவாளால் ஒரு வெட்டும் போட்டு வைத்தோம். பின்னர் காய்த்துக் குலுங்கியது! வரவங்க போறவங்க எல்லாம் எடுத்துப் போவார்கள். மணம் ஊரைத் தூக்கும். ஒரு பாக்கு மரம் இருந்தது. சிலர் அது பணப்பயிர் என்பதால் நகராட்சிக்குத் தெரிவிக்கச் சொல்ல என்னடா இது எனக் கவலைப்பட்டோம். பாக்குகளும் கிடைத்தன. பின்னர் அதைத் தவறுதலாக வெட்டி விட்டார்கள். :( பாக்குப் பூக்களின் வாசம் காலை நேரத்தில் மனதை மயக்கும்.

      நீக்கு
  14. நாம பெறாமல் பெற்ற குழந்தைகள் செடி, கொடிகள். பேசிக்கொண்டே இருக்கலாம் இவற்றின் பெருமையை! சொல்லில் அடங்காது. நேரம் ஆச்சு இன்னிக்கு. எழுந்ததே தாமதமாக ஐந்தரை மணிக்கு. கடமைகள் அழைக்கின்றன. பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்க உள்ள குளிருக்கும் குளிர் காற்றுக்கும் ஐந்து மணிக்கு எழுந்துகொள்வதே கஷ்டமா இருக்கு.

      நீக்கு
    2. கீதாக்கா ஆமாம் செடி கொடிகள் இருந்தால் என்ன ஒரு சுகம் மனதிற்கு இதம்..

      நெல்லை ஹாஹாஹா இதென்ன இங்க குளிரா?!!! அது சரி...அப்ப பனி சூழ் படம் எல்லாம் போடறப்ப இப்படி பனி சூழ் இடத்துக்குப் போகனும்னு ஆசைன்னு வேற சொல்லுவீகளே! இந்த சாதா குளிரே குளிருன்ன்றீங்க!!!

      கீதா

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இன்று மஞ்சள் பூக்களின் தொகுப்பு அழகாக உள்ளது. பூக்கள் என்றாலே அழகுதான். அதிலும் ஒவ்வொரு வாரமும் விதவிதமாக பகிர்வது நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. மஞ்சள் மலர்களின் ராஜ்ஜியம் அழகோ அழகு!

    பதிலளிநீக்கு
  17. மலரே... மலரே அழகு.
    'என்ன பெயர் என்று தெரியவில்லை ' ஒருமுறை செடிவந்துவிட்டால் பலவருடங்கள் இருக்கிறது ' இது காணிகளில் தானேவளரும் செடி.

    பதிலளிநீக்கு
  18. அழகிய மலர்கள். அருமையான தொகுப்பு.

    படங்கள் 5 to 8 ... பெயர் தெரியவில்லை என நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மலர்ச்செடியின் பெயர் யெல்லோ ஆல்டர் (yellow alder). ஆண்டு முழுவதும் வாடாமல் வாழும் (perennial) வகையைச் சேர்ந்த இதற்கு ‘ஸன் ட்ராப்ஸ் (Sun Drops) எனும் பெயரும் உண்டு. அதற்கான காரணமும் இம்மலரைப் பற்றிய சில ஆச்சரியமான தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளேன்:

    https://tamilamudam.blogspot.com/2020/07/yellow-alder-75.html

    பதிலளிநீக்கு
  19. *காரணத்தையும்.. தகவல்களையும்..

    பதிலளிநீக்கு
  20. Yellow alder பற்றி நிறையத் தெரிப்பித்து கொண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  21. மஞ்சள் மலர்கள் மிக அருமை.
    பூக்களையும் வார்த்தைகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!