வியாழன், 11 நவம்பர், 2021

(ச)ரசம்

 (ச)ரசம் 

இப்போதெல்லாம் பெரும்பாலும் தனியாகவே ஆட்டோவில் அமர்ந்து போய்வந்து பழகி விட்டதா,  கூட யாராவது இருந்தால் உட்காருவது சிரமமாகத்தான் இருக்கிறது!  அதுவும் பாஸ் கூட உட்கார்ந்து போய்வருவது..  நான் பொதுவெளியில் பேசவே மாட்டேன்.  அவர் ஓயவே மாட்டார்.   சொந்தக்கதைகளை அக்குவேறு ஆணிவேராக அலச அந்த இடம்தான் கிடைக்கும்.  நான் முறைப்பேன்.   புறங்கையால் இடித்து ஓட்டுநரைக் கண்களால் காட்டுவேன்.  சிலசமயம் அமைதியாகி விடுவார்.  

"இங்கே தானே...   பக்கம்தானே..  என்ன அவ்வளவு ரூவா கேக்கறீங்க?" என்றெல்லாம் பேசி அவர் கேட்கும் கட்டணத்திலிருந்து குறைத்து, ஏறி அமர்ந்து சென்று கொண்டிருப்போம்.  இவர் நடுவில் அவர் காதில் விழுவது போல "அப்பா...   எவ்வளவு தூரம்...  போய்கிட்டே இருக்கோம் இல்லை?" என்று கேட்டு முறைக்க வைப்பார்.

சமீபத்தில் ஒருநாள் அதுபோல இணைந்து ஆட்டோவில் சென்று கொண்டிருந்தோம்.


இரு சக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து சென்ற ஒரு பெண் அணிந்திருந்த ப்ளவுஸ் பின்பக்கம் அபாயகரமாக இறங்கி இருந்தது.  மட்டுமில்லாமல் நடுவில் ஒரு அடி ஸ்கேல் அளவே துணி அகலம் இருந்தது.  

பக்கத்திலிருந்து பாஸ் இடித்தார்..  "ஆற வயசுக்கு என்ன பார்வை?''

கல்யாணம் ஆனாலே வயசு டபுள் ஆகிவிடும் போல...

"என்னையா கேட்கறே?"

"உங்களைத்தான்..  உங்கள் பார்வையைத்தான்.."

"எது?   ஓ...   அந்த சில்வர் கலர் புடவை, பச்சை ரவிக்கை போட்டுட்டு டூ வீலர்ல போனாங்களே...  அவங்களை சொல்றியா?   நான் பார்க்கலைம்மா..."

"தூ...  வெக்கமாயில்லை?  மனசுல என்ன நெனப்பு?"

"ஒண்ணுமில்லை..   இந்த மாதிரி ட்ரெஸ் போடறாங்க..   ஃபேஷன் சரி..  போடறதுக்கு முன்னாடி  முதுகில் இருக்கும் அழுக்கை நல்லா தேய்க்க மாட்டாங்களோ...  அங்க பாரு அங்கங்கே படை படையா..."

திரும்பி கிண்டலாக என்னைப் பார்த்தார் பாஸ்.

"நிஜம்மா..  நேற்று கூட இப்படிதான் டூவீலர் ஓட்டிக்கிட்டு ஒரு பெண்..  மாடர்ன் ட்ரெஸ்..  இரண்டு தோள்பட்டையிலிருந்தும் இறங்கின மாதிரி ட்ரெஸ்...  அதான்..   கழுத்துக்கே போகாம ஊசி போடற இடத்துலயே ரெண்டு பக்கமும் நின்னுடுது..  ஏனோ கேஷுவலா உட்கார்ந்து ஓட்டாம நல்லா நிமிர்ந்து செங்குத்தா உட்கார்ந்து ஓட்டிக்கிட்டு போனா...   அவ பழக்கமே அதுதான் போல...  அவ முதுகுலயும் ஒரே அழுக்கு..."

"எவ்ளோ டீப் ஆராய்ச்சி!...  போற வர்ற பொண்ணு முதுகைப் பார்க்கறதுதான் வேலை போல..."

"ஏம்மா... நம்ம வண்டிய தாண்டிட்டு போறாங்க..  கண்ல படறது..."

"ரொம்ப அக்கறைதான்..  அழுக்கைதான் பார்த்தீங்க, அதைத்தான் யோசிக்கறீங்கன்னு நம்பிட்டேன்.  அவங்க முதுகு அழுக்கை பார்க்கறதுக்கு முன்னாடி நாம் நம்..."

"க்கும்...   புரியுது..  புரியுது...  ஆனால் நான் என் முதுகு தெரிய வெளில வரமாட்டேனாக்கும்!"

"ஹு....க்கும்..."

 பாஸின் முகவாய்க்கட்டை ஒருமுறை  வேகமாக அவர் இடது தோளைத் தொட்டுத் திரும்பியது!  

=================================================================================================

புதிய கவிதை..   புனைந்த கவிதை! குறியீட்டுக் கவிதை!


புதிய வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 
துள்ளிக் குதித்து 
கூடையில் வந்து விழுந்த மீனின் 
உடலில் 
ஏற்கெனவே அது 
சில தூண்டில் முள்களிலிருந்து 
தப்பித்திருந்ததன் 
அடையாளங்கள் தெரிந்தன 

=====================================================================================================================

இதயமே...   இதயமே....

இதய மருத்துவர் மதன் மோகன்: 

"உலக சுகாதார நிறுவன தரவு களின்படி உலகளவில் 1.79 கோடி பேர், ஆண்டுதோறும் இதய ரத்த நாள நோய்களால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக தமிழகம், கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் இதய பிரச்னைகளால் ஏற்படும் மரணங்கள் அதிகம். 

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன், அன்றாட வேலைகளை செய்ய முடியாத அளவுக்கு மூச்சு வாங்குவது, மாடிப்படி ஏறும்போது, சிறிது துாரம் நடந்தாலே மூச்சு வாங்குவது, தாடைப் பகுதியில் வலி, நடக்கும்போது பல் வலிப்பது போன்ற உணர்வு, தோள்பட்டை மற்றும் இடது கையில் பரவும் வலி ஆகியவை மூலம் சில, 'அலர்ட்' சிக்னல்களை நம் உடல் கொடுக்கும்.

சாப்பிட்டு 20 - 30 நிமிடங்களுக்கு பின் இதய பகுதியிலோ, தோள்பட்டையிலோ வலியை உணர்ந்தால், அது இதயத்தில் ஏற்படும் வலி.

ரத்த ஓட்டம் குடலுக்கு செல்லும்போது, இதயத்துக்கு போதுமான ரத்தம் இல்லாமல் வலி ஏற்படும்; எனவே, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கட்டுப்பாடில்லாத நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப்பழக்கம், நீரிழிவு, உடல் இயக்கம் இல்லாதது, அதீத மன அழுத்தம், குறட்டை பிரச்னை இருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம்.வீட்டிலுள்ள, 'பல்ஸ் ஆக்சிமீட்டர்' கருவியில் இதய துடிப்பை பரிசோதிக்க வேண்டும்.இதய துடிப்பு 70 - 100க்குள் இருக்க வேண்டும். 100க்கு மேல் சென்றால், இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்க வாய்ப்புண்டு; 50க்கு குறைவாக இருந்தால், இதயம் சார்ந்த வேறு பிரச்னையாக இருக்கலாம்.

உறங்கும்போது குடும்பத்தினர் யாரையாவது இதய துடிப்பை சரிபார்க்க சொல்லுங்கள்.

ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் கருவியில் 120/80 - 130/90 என்ற அளவு வரை இருக்க வேண்டும்.  அதற்கு அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம் என்று அர்த்தம்.  நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்கு பின் பரிசோதித்தால் இயல்பாகவே இந்த அளவுகள் அதிகரிக்கும். எனவே, வேலை செய்யாமல் இருக்கும் போது, இந்த பரிசோதனைகளை செய்ய வேண்டும்.உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை இருந்தால், இதய நோயில் இருந்து தப்பிக்கலாம்.  ஆபத்தான பட்டியலில் இருப்பவர்கள் ஆண்டுதோறும், 'இ.சி.ஜி., எக்கோ மற்றும் டிரெட்மில்' ஆகிய பரிசோதனைகளை செய்தால், ஆரம்ப நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிந்து, உயிரிழப்பை தடுக்க முடியும்.

====================================================================================================

மதன்..  மதன்...

ரோடு தாங்குமா?!


குரல் ஓங்குமா?


மைக் மடங்குமா?!


மேடை தாங்குமா?

===============================================================================================

அப்போ பகிர்ந்தது இப்பவும் பொருந்துதோ!!



155 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆஹா!! தேவதையே வருக வருக! ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களை இங்கு பார்ப்பதில்...

      கீதா

      நீக்கு
    2. கீதா எப்படி இருக்கீங்க .நாங்கள் நலம் 

      நீக்கு
  2. ஆஆஆஆ வ்வ்வ்வ்வ்வ் எங்கூர்ல இப்போதான் 11:30 அங்கே காலை வந்தாச்சா .

    பதிலளிநீக்கு
  3. //இவர் நடுவில் அவர் காதில் விழுவது போல "அப்பா...   எவ்வளவு தூரம்...  போய்கிட்டே இருக்கோம் இல்லை?" என்று கேட்டு முறைக்க வைப்பார்.////

    ஹாஆஅஹா :) நானும் நிறையதடவை என் கணவரின் காலை மிதிச்சிருக்கேன் :) நான் சொன்னதுக்கு ஏறுமாறா யார்கிட்டயாது போட்டுக்கொடுத்திடுவார் 

    பதிலளிநீக்கு
  4. எப்படியோ அனுஷை பதிவுக்குள்ள கொண்டு வந்துட்டீங்க :)

    பதிலளிநீக்கு
  5. மாடர்ன் ட்ரெஸ்.. இரண்டு தோள்பட்டையிலிருந்தும் இறங்கின மாதிரி ட்ரெஸ்..

    //off shoulder tops// இதுதான் அது பெயர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் யாருக்கும் தெரியும்?!!!! இப்போதான் பெயர் கேள்விப்படறேன்.

      நீக்கு
    2. திருத்தம் : யாருக்கும் தெரியும் இல்லை, 'யாருக்குத் தெரியும்?' என்று படிக்கவும்.

      நீக்கு
  6. //எது?  ஓ...   அந்த சில்வர் கலர் புடவை, பச்சை ரவிக்கை போட்டுட்டு டூ வீரல போனாங்களே...  அவங்களை சொல்றியா?   நான் பார்க்கலைம்மா..."///
    ஹாஆஆ இவ்ளோ டீ டெயிலா விவரம் கொடுத்துட்டு பத்திரமா வீடு போய் சேர்ந்திங்களே :) கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லுங்க 

    பதிலளிநீக்கு
  7. இதயமே பகுதி அனைவரும் அறியவேண்டிய ஒன்று .

    பதிலளிநீக்கு
  8. கார்ட்டூன்சில் அம்பத்தூர் பிரதர்ஸா இல்லை அம்பது ஊர் பிரதர்ஸா :) 

    பதிலளிநீக்கு
  9. எல்லாருக்கும் காலை வணக்கம் .நான் துயில போகிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சலினுக்கு தபிழ் படிக்கத் தெரியுது. மறந்து போகலை.

      நீக்கு
    2. வாங்க, வாங்க, வாங்க, எங்கே உங்க தோழியைக் காணோம்? இரண்டு பேரும் பேசி வைச்சுண்டு வருவீங்க போவீங்க போல! :)

      நீக்கு
    3. ஹாஆஅஹா அது ஒருதரம் இங்கேதான் /நான் தூங்க போறேன் // னு எழுதி  வைக்க அப்புறமா வந்த மதுர தமிழன் // தொங்க  போறேன் .// னு கண்ணுக்கு பட்டுச்சுன்னார் .அதான் y வம்புன்னு தூய தமிழில் சொன்னேன் :) 

      நீக்கு




    4. @கீதாக்கா நலமா இருக்கீங்களா .ஊரில் குட்டி குஞ்ஜுலு எப்படி இருக்கு .அப்பப்ப இப்படி சந்திக்கும்போது விசாரிச்சு வச்சிக்கறேன் :))அப்புறம் தீபாவளிக்கு எத்தனை பட்டுப்புடவை கிடைச்சது ?நீங்க எனக்கு அனுப்பி வைச்ச எல்லா பலகாரமும் வந்து சேர்ந்தது அதுவும் அந்த அதிரசம் சூப்பரோ சூப்பர் 

      நீக்கு
  10. மெட்றாஸில் மழைன்னு அறிஞ்சேன் அனைவரும் நலமுடன் பாதுகாப்பா இருக்க இறைவனிடம் பிரார்த்திப்போம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2015 ஐ விட மோசமாய் இருக்கும்னு பயமுறுத்தறாங்க..

      நீக்கு
    2. அட.. சகோதரி ஏஞ்சல்... வாங்க எப்படியிருக்கிறீர்கள்? நலமா? நான் நேற்றுதான் உங்கள் இருவரையும் (சகோதரி அதிரா) வலைப்பக்கம் காணவே முடியவில்லையே என நினைத்தேன். இன்று வந்து விட்டீர்கள். சந்தோஷம். சந்தோஷம். (ஒரு சந்தோஷம் இன்று வரப்போகும் அதிராவுக்கும் சேர்த்து.) நன்றி சகோதரி.

      நீக்கு
    3. நாங்க ரெண்டு பேருமே நல்லா இருக்கோம்க்கா .,இன்னிக்கு வேலை முடிஞ்சி வந்ததும்  பிளாகில் எட்டிப்பார்த்தேன் .இங்கே வந்தா எல்லாரையும் பார்த்த மாதிரி இருக்கும் நிச்சயம் பூஸாரையும் வர சொல்றேன் :)மறக்காம நினைவு வச்சிருக்கீங்க அன்புக்கு மிக்க நன்றி 

      நீக்கு
    4. அதிரா அவங்க அரண்மனையிலேயே செட்டிலாயிட்டாங்க...!

      நீக்கு
    5. அனைவருக்கும் வணக்கம் என்ற கொஞ்சு மொழிக் குரல்மான் எனக்கு ஒலிக்குது. நூடியூபில் சம்பாதித்து மிலியனராக ஆகவேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டுவிட்டார் போலிருக்கு

      நீக்கு
    6. சில சமயம் ஊரைச் சுற்றிக் காட்டுகிறார்.  சில சமயம் கோழியையும் மீனையும் வெட்டிப்போடுகிறார்..   சில சமயம் காய்கறிகளை...

      நீக்கு
    7. சே சே சே.. கண்ணை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டுவிட்டதே என நினைச்சாலும், இல்ல இருளவேயில்லை இன்று நீங்க புளொக் பக்கம் எட்டிப்பார்த்தே தீரோணும் என மிரட்டல் வந்துதா தேம்ஸ் ட அந்தப் பக்கம் இருந்து:)).. பயத்தில ஓடி வந்திட்டேன்:)).. நானே நிமிரமுடியாமல் இருக்கிறேன் கந்தசஷ்டி பால் பழம் இருந்து :)), ஆனா ஒண்டு எல்லோரும் புளொக்கில் தந்த தைரியத்தாலதான் நானும் தைரியமாக பால் பழம் ஆரம்பிச்சு இந்த முறையோடு 3 வருடங்கள் நலமாக உருண்டோடிவிட்டது.. அதனால ஒவ்வொரு வருடமும் கந்தசஷ்டி வந்தாலே புளொக் நினைவும் அதிகமாக வந்திடும்... அப்படி நினைவுடன் இருந்தமையால, அஞ்சு சொன்னதும் ஓடி வந்திட்டேன் எல்லோரும் நலம்தானே.. பார்க்கவே ஆசையாக இருகுது, ஏதோ சந்திர மண்டலம் போய்த் திரும்பிய ஃபீலிங்ஸ்சாக இருகுது ஹா ஹா ஹா...

      கமலாக்கா கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க:)).. நன்றி நன்றி மறக்காமல் இருப்பதற்கு..

      //ஸ்ரீராம்.11 நவம்பர், 2021 ’அன்று’ முற்பகல் 5:58
      அதிரா அவங்க அரண்மனையிலேயே செட்டிலாயிட்டாங்க...///

      ம்ஹூம்ம்ம்:) நீங்க வேற ஸ்ரீராம், வீடியோக்கூட இப்போ ஒழுங்காப் போடமுடியாமல் கஸ்டப்படுறேன், கிழமையில 2 போடுவேன் இப்போ ஒன்று கூடப் போட முடியாமல் அவதிப்படுறேன், வீடியோக்கள் 20 க்கு மேல இருக்குது ஆனா எடிட்பண்ணிப் போட நேரமில்லை.. எல்லாம் ஜனவரியோடு நோர்மலுக்கு வந்திடும் என நினைக்கிறேன், அதன் பின்பு புளொக்குக்கும் வருவேன்???????????:))

      நீக்கு
    8. //நெல்லைத்தமிழன்11 நவம்பர், 2021 ’அன்று’ முற்பகல் 6:17
      அனைவருக்கும் வணக்கம் என்ற கொஞ்சு மொழிக் குரல்மான் எனக்கு ஒலிக்குது. ////

      ஹா ஹா ஹா இதைப் படிச்சு உருண்டூஊஊஊஊ பிரண்டூஊஊஊஉ சிரிச்சதில பாலும்பழமும் சாப்பிட்ட பிஞ்சு வயிறு[சரி சரி கொஞ்சம் கோபத்தைக் கொன்றோல் பண்ணுங்கோ பிளீஸ்:)].. கொழுவிப்போட்டுது ஹா ஹா ஹா..
      பொதுவா நெ தமிழன் எல்லோருக்கும் சப்ஸ்கிரைபேர்ஸ் கிடைச்சிடுவாங்க ஆனா வியூஸ் வராது, 4000 அவேர்ஸ் வியூஸ் எடுத்தால்தான் காசு கிடைக்கும், ஆனா எனக்கு வியூஸ் 4000 தாண்டிட்டுது.. ஆனாலும் சப்ஸ்கிரைபேர்ஸ் இல்லை என்பதால பணம் கிடைக்கல்லே இன்னும் :))).. நான் அதற்கான முயற்சியில் இன்னும் இறங்காமல் இருக்கிறேன், அட்வெரைஸ் இருந்தால்தானே சப்ஸ்கிரைபேர்ஸ் கிடைப்பாங்க... சரி சரி அது வரும்போது வரும்.. நான் யூரியூப்பை விடவும் விதியைத்தான் அதிகம் நம்புவேனாக்கும் ஹா ஹா ஹா..

      நீக்கு
    9. ஸ்ரீராம்.11 நவம்பர், 2021 ’அன்று’ முற்பகல் 11:39
      சில சமயம் ஊரைச் சுற்றிக் காட்டுகிறார். சில சமயம் கோழியையும் மீனையும் வெட்டிப்போடுகிறார்.. சில சமயம்///

      ஹா ஹா ஹா கர்ர்ர்:)) அப்பப்ப நீங்களும் நெ தமிழனும் கோமதி அக்காவும் மறக்காமல் வந்து அங்கு கொமெண்ட்ஸ் போடுறீங்க, அதுக்கு நன்றி.

      அம்மா சொன்னா, நீ ஏன் அதிகம் சைவ ரெசிப்பி போடுகிறாய், அசைவம் குறைவாகவே போடுறாய் என, நான் சொல்லியிருக்கிறேன், என் நட்புக்கள் அதிகமானோர் சைவம் அதனால எனக்கு அசைவம் போட ஒருமாதிரி இருக்குதெண்டு:)).. இந்த அழகில கோழியை மீனை வெட்டுகிறேனாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா:))... இருப்பினும் ஸ்ரீராம் நீங்க ஒரு வித்தியாசமானவர்... அசைவத்தைப் பார்த்தாலும், சைவமாக நினைச்சுக் கொமெண்ட் போட்டிட்டுப் போய்க்கொண்டே இருப்பீங்க.. அது எனக்குப் பிடிக்கும் ஹா ஹா ஹா..

      நீக்கு
    10. அச்சச்சோ கீத்ஸ் ஐ விட்டிட்டேன்ன்.. கீதாவும் அப்பப்ப மறக்காமல் என் ஊஊரியூப் வருவார்:))) நலம்தானே கீதா?

      கீசாக்கா நலம்தானே..கில்லர்ஜி மற்றும் அனைவரையும் நலம் கேட்டுச் செல்கிறேன்:))

      நீக்கு
    11. அதிரா சகோதரி..நலமா?எங்களையெல்லாம் மறவாது சொன்னபடிக்கு வந்து இன்றைய தினத்தை சந்தோஷமயமாக்கி விட்டீர்கள். உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. 🙏. இப்போதுதான் நீங்கள் தந்த கமெண்ட்ஸ்களை எல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன்.பழைய நினைவுகள் இன்று புதுப்பிக்கப்படுகிறது.உங்களை மிரட்டி இங்கே கூட்டி வந்த சகோதரி ஏஞ்சலுக்கும் ரொம்பவும் நன்றி. 🙏.

      நீக்கு
    12. இங்கேயே இவ்வளவு பதில் சொன்னால் எப்படி எல்லாவற்றுக்கும் பதில் சொல்வது?!  

      //வீடியோக்கள் 20 க்கு மேல இருக்குது ஆனா எடிட்பண்ணிப் போட நேரமில்லை//

      ஆமாம்...  அது பெரிய வேலை.  பொறுமை வேண்டும்.  ஆனால் அதில் எல்லாம் நீங்கள் சுணங்கிவிட மாட்டீர்கள் என்று தெரியும்.

      நீக்கு
    13. //ஆனா எனக்கு வியூஸ் 4000 தாண்டிட்டுது.. ஆனாலும் சப்ஸ்கிரைபேர்ஸ் இல்லை என்பதால பணம் கிடைக்கல்லே இன்னும்//

      இப்படி எல்லாம் வேற இருக்கா?  எவ்வளவு பணம் கிடைக்கும்?  சுவிஸ்ஸில் தனி அக்கவுண்ட் ஆரம்பிக்கலாமா?  இப்போ அதை எல்லாம் வேற அவங்க இந்திய அரசாங்கத்துக்கு போட்டுக் கொடுத்துடறாங்க...

      நீக்கு
    14. //அசைவத்தைப் பார்த்தாலும், சைவமாக நினைச்சுக் கொமெண்ட் போட்டிட்டுப் போய்க்கொண்டே இருப்பீங்க../

      அதை எல்லாம் ஃபாஸ்ட் பார்வேர்ட் பண்ணிட விடுவேன்!  எண்ட் ரிசல்ட் மட்டும் பார்ப்பேன்!

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    /எது? ஓ... அந்த சில்வர் கலர் புடவை, பச்சை ரவிக்கை போட்டுட்டு டூ வீரல போனாங்களே... அவங்களை சொல்றியா? நான் பார்க்கலைம்மா/

    ஹா.ஹா.ஹா. (ச)ரசம் ரசமாகத்தான் இருக்கிறது. உண்மைதானே.. கண்கள் காண்பதைதானே வாய் பேச முடியும். இந்த மாதிரி மாடர்ன் டிரெஸ் அணிபவர்களை கண்டால் எனக்கே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். ஆனால் அவர்கள் கொஞ்சமும் பயமின்றி இருப்பார்கள். (எந்த டிரெஸும் அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றும் என்ற தைரியம் போலும்.)

    கவிதை அருமை. புதிய வாழ்க்கைக்கு ஆசைபடுவதால் வரும் சிக்கல்களை பற்றி யோசிக்காத அந்த மீனைப் போலத்தான் சில சமயம் நம் வாழ்வும். ரசித்தேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கே பயமா? ஹா.. ஹா.. ஹா..

      கவிதையையும் ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா்

      நீக்கு
  13. இசை தொடர,பான மதன் ஜோக்ஸ் இப்போதான் படிக்கிறேன். அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த மாதம் இசை விழா சமயம் போடலாமான்னு பார்த்தேன். அப்புறம் இப்பவே போட்டுட்டேன்!

      நீக்கு
  14. நல்லவேளை ஆட்டோல போகும்போது பேசினாங்க. இரயில் பேருந்தில் பேசினால் ராஜா காது கழுதைக் காது பெஉதியில் வெளியாகிவிடும் அபாயம் உண்டு. நல்லவேளை.. அந்தப் பகுதிக்கும் புகைப்படம் எடுத்துப் போடும் வழக்கம் வெங்கட்டிற்கு இல்லை.

    பதிலளிநீக்கு
  15. முதுகு... குக்கு வித் கோமாளியிர் ர.பா இதுபோல முழு முதுகையும் காண்பிக்கும் உடை அணிந்துவந்தார்.

    என்ன ஃபேஷனோ....

    இங்க வளாகத்தில் (பெரும் பணக்கார மார்வாரிகள்) வளரிளம் பெண்கள் முட்டியில் முழுவதும் கிழிந்த ஜீன்ஸ், ஆங்காங்கே நூல்பிரிந்து கிழிந்திருக்கும் ஜீன்ஸ் என்று ஃபேஷன் பைத்தியக்காரத்தனத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

    அது சரி.. இந்த மாதிரி உடையணிவதன் நோக்கமென்ன? புதன் கேள்வி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னைச் சாலைகளிலேயே சகஜமாகி விட்டது!!

      நீக்கு
    2. // அது சரி.. இந்த மாதிரி உடையணிவதன் நோக்கமென்ன? புதன் கேள்வி// அது, அவர்களை அல்லவா கேட்கவேண்டும்! (வியாழன் பதில்)

      நீக்கு
    3. //அது சரி.. இந்த மாதிரி உடையணிவதன் நோக்கமென்ன?//

      துணி சிக்கனம்தான்...   எவ்வளவு எடுப்பது சொல்லுங்கள்...  

      நீக்கு
    4. தையல் கூலி எவ்வளவுனு தெரியுமா? இதிலேயே சாதாரணமாகத் தைத்துக் கொண்டால் ஆயிரம் ரூபாய் ஒரு ப்ளவுஸுக்கு. பத்தாயிரம், இருபதாயிரம் கொடுப்பவர்களும் உண்டாம்/வாங்குபவர்களும் உண்டாம்.

      நீக்கு
    5. ஆமாமாமாம்...    அதுவும் சமீபத்தில்தான் தெரிந்தது!

      நீக்கு
    6. //அது, அவர்களை அல்லவா கேட்கவேண்டும்!// இது என்ன வம்பாக்கீது... புதன் கேள்வி பதிலுக்கு அந்த அனுபவம் இருக்கணுமா?

      நீக்கு
    7. ///நெ தமிழன்
      அது சரி.. இந்த மாதிரி உடையணிவதன் நோக்கமென்ன///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது என்ன கிழவி சே சே டங்கு ஸ்லிப்பாகுதே கேள்வி?:))... நீங்க எல்லோரும் சோட்ஸ் போடுவதை நாங்கள் எப்போதாவது கேட்டமா.. உங்கட நோக்கம் என்ன என கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா அதிரா வர மாட்டா.. ஆரும் எதிர்த்துக் கேள்வி கேய்க்க மாட்டினம் எனும் தெகிறியத்திலதானே இதைக் கேட்டீங்க?:)))))))))...

      உண்மையைச் சொன்னால், நம்மை நாம் அழகு படுத்துவதன் நோக்கமே மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காகத்தானே:)).. அதேபோலவே நடக்குது, ஸ்ரீராம் ஓட்டோல போகும்போது பார்த்தது மட்டுமல்லாமல், அதை இங்கு காவி வந்து சொல்லி, சும்மை இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையா:)) நெல்லைத்தமிழனின் நித்திரை போய்.. புதன் கிழமைக்கு கேள்வியும் முளைச்சிட்டுது எண்டால்ல் இதுவும் பெண்ணுக்கான ஒரு வெற்றிதேன்ன்ன்ன்ன்ன்ன்:)).. ஹா ஹா ஹா அம்மாடி நான் ஓடிடப்போறேன்ன் கனநாளைக்குப் பிறகு வந்ததும் இல்லாமல் தனியா வேறு நிக்கிறேனே.. பயம்மாக்க்க்கிடக்கூஊஊஊஊ:))

      நீக்கு
    8. இங்கேதான் நான் இருக்கேன் பயப்படாதீங்க .நான் கையை  பிடிச்சி மலை பக்கம் சுத்தி காட்றேன் வாங்கோ வாங்கோ 

      நீக்கு
    9. //https://media1.giphy.com/media/3ov9k53PdxeLXjnpIs/giphy.gifAngel11 நவம்பர், 2021 ’அன்று’ பிற்பகல் 5:28
      இங்கேதான் நான் இருக்கேன் பயப்படாதீங்க .நான் கையை பிடிச்சி மலை பக்கம் சுத்தி காட்றேன் வாங்கோ வாங்கோ

      ///
      meeeeeeeeeeee escapeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

      https://media1.giphy.com/media/3ov9k53PdxeLXjnpIs/giphy.gif

      நீக்கு
    10. இங்கு gif படம் சப்போர்ட் பண்ணாது போலும்!

      நீக்கு
  16. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    மழையின் தொடர் ஓய்ந்து நல்ல விடியலாக இருக்கட்டும். நோய்
    உபாதைகள் இல்லாத அமைதி வாழ்வு கிடைக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  17. கடைசிப் படம் எனக்கு இரு சம்பவங்களை நினைவுபடுத்தியது.

    பஹ்ரைனில் பொதுவா கடல் என்பது ஏரி மாதிரி இருக்கும். நூறு மீட்டர்கள்கூட நடந்துபோய்விடலாம். ஒரு தடவை, அப்படி இடுப்புக்கு ஒரு அடி கீழ் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தபோது (பெரிய பந்தை வீசி எறிந்து) சட்என தீர் இடுப்புக்கு மேல் வந்துவிட்டதையும் நீரின் திசை மாறியதையும் கவனித்து விலகிப்போன பந்தை எடுக்காமல் அவசரவசரமாக கரை ஏறியது நினைவுக்கு வந்தது. துபாயில் ஜுமைரா பீச்சில் அந்தக் கவலை கிடையாது. மண் நன்றாகத் தெரியும். 100 மீட்டருக்கு மேல் கயிறு போலக் கட்டியிருப்பார்கள். கண்காணித்துக்கொண்டும் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவுகளைத் தூண்டுகிறது. நாங்கள் அனுபவங்களாகக் கடந்துகொண்டு இருக்கிறோம்!!

      நீக்கு
  18. வெகு நாட்களுக்கப்புறம் ஏஞ்சல் வருகை.
    நான் படிக்கும் போது தூங்கப் போயிருப்பார்.
    அவருக்கும் வரப்போகும் அதிராவுக்கும் நல்லிரவுக்கான
    வணக்கம். பின் நற்காலைக்கான வாழ்த்துகள்.
    அன்பின் கமலாவுக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லா நாட்களும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இனிய நாளுக்கான வணக்கம் சகோதரி. உடல் நலமாக உள்ளீர்களா?

      நீக்கு
    2. நான் நலமா இருக்கேன் வல்லிம்மா .வேலையில் பிசி .அதான் .நேரமிருக்கும்போது இங்கே வந்து அனைவரையும் சந்திச்சுக்கறேன் 

      நீக்கு
    3. வல்லிம்மா, உங்களை இங்கு காணமே எனத் தேடினேன்... நலம்தானே.. நாங்களும் நலம் வல்லிம்மா.. குளிர் தொடங்கிட்டுது இங்கு...இம்முறை லேட்டாகவே குளிர் தொடங்கியிருக்குது அதனால கடுமையான குளிராக இருக்கும் எனவும் சொல்கிறார்கள்.

      நீக்கு
  19. ஆட்டோ பிரலாபங்கள்.:)
    சோளிப் பிரளயங்கள். பிரபாவங்கள். ஹாஹா.

    பாஸ் மாதிரி நானும் பேசி இருக்கிறேன்.
    பிறகு வண்டி வாங்கி விட்டதால் சிங்கம் பிழைத்தார்.:)

    பதிலளிநீக்கு
  20. உயர் அழுத்தம் பழகிவிட்டது.
    வயதானால் ஏறும் என்று இருந்து விடுகிறேன்.
    இதயப் பதிவு சூப்பர்ப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். மருந்துகளை நேரத்துக்கு எடுத்துக் கொண்டால் போதும்.

      நீக்கு
  21. இசைக் கச்சேரி கார்ட்டூன்கள் மிக அருமை. என்னவெல்லாம் யோசிக்கிறார் இந்த மதன்.

    ஆச்சரியமாக இருக்கிறது.!!!

    பதிலளிநீக்கு
  22. இடம் மாறும்போது நிலை மாறும் என்று உணராத மீன்கள் .நாமும்
    அவைகளைப் போலத்தான். சில சமயம் ஏமாறுகிறோம்.

    நல்ல கவிதை ஸ்ரீராம் .வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  24. அனைத்தையும் ரசித்தேன். நகைச்சுவைத் துணுக்குகள் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  26. அனைவருக்கும் வணக்கம். நேற்று கந்த சஷ்டி அதிரா உபவாசம் இருப்பாரே என்று நினைத்துக் கொண்டேன். ஏஞ்சல் வந்திருக்கிறார்.
    கொஞ்சம் சிறிய வியாழன் பதிவோ? இருந்தாலும் ரசனை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா... வணக்கம். நானும் அதிரா உபவாசம் இருப்பாரே என்று நினைத்தேன்.

      நீக்கு
    2. நலமா பானுக்கா .பூஸார் பால் பழம் சாப்ட்டே  தெம்பா உருண்டு வந்திருக்கார் இங்கே 

      நீக்கு
  27. //"இங்கே தானே... பக்கம்தானே.. என்ன அவ்வளவு ரூவா கேக்கறீங்க?" என்றெல்லாம் பேசி அவர் கேட்கும் கட்டணத்திலிருந்து குறைத்து, ஏறி அமர்ந்து சென்று கொண்டிருப்போம். இவர் நடுவில் அவர் காதில் விழுவது போல "அப்பா... எவ்வளவு தூரம்... போய்கிட்டே இருக்கோம் இல்லை?" என்று கேட்டு முறைக்க வைப்பார்.//

    உங்கள் பாஸ் பேசியதை ரசித்தேன்.

    நீங்கள் பேசியதை கேட்டு பாஸ் தன் முகவாய்க்கட்டையை திருப்பி இருக்ககூடாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கடைசி கமெண்ட்டுக்கு அக்கா!

      நீக்கு
    2. அதுதான் அப்படி சொன்னேன்.
      அவர்கள் உண்மைகள் வீட்டு மாமி பூரிகட்டை தூக்கி வருவார், அது போல உங்கள் முகத்தை தோள்பட்டைக்கு உங்கள் திருப்பி இருக்க வேண்டும் என்று.

      நீக்கு
  28. புதிய கவிதை.. புனைந்த கவிதை! குறியீட்டுக் கவிதை!
    கவிதை கதை சொல்கிறது.
    இதய மருத்துவர் மதன் மோகன் அவர்கள் கட்டுரை பயனுள்ளது.
    மதன் ஜோக் நன்றாக இருக்கிறது. டிசம்பர் மாதம் போட வேண்டியதி இப்போதே போட்டு விட்டீர்கள்.

    மழையில் நிற்கும் பெண் பஸ்ஸை காணோம் என்று தேடுகிறாரா? பஸ் நீரில் முழ்கி விட்ட படத்தை சகோ துரைசெல்வராஜூ அவர்கள் பதிவில் பார்த்தேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையை ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.  துரை செல்வராஜூ ஸார் பதிவிலா?  நான் பார்க்கவில்லையே...

      நீக்கு
  29. வீட்டுக்கு வீடு வாசப்படி. யார் பாஸ் என்று மற்றவர்க்கு உரைக்கவே இந்த ஆட்டோ பேச்சு. நம்ம வீட்டிலும் இப்படித்தான். 

    பிளவ்ஸ்சில் ஜன்னல் வைத்த காலம் போய் தற்போது கதவே வைக்கிறார்கள். கதவு வழி பார்வை மறுபக்கம் போகாமல் இருந்தால் சரி. 

    கவிதை முரண்பாடாக  தோன்றுகிறது. தூண்டில் காயப்படுத்துவது மீனின் வாயைத்தான், உடலை அல்ல.  இப்படியும் எழுதலாம்.

    வலையில் இருந்து 
    தப்பித்த மகிழ்ச்சியில் 
    துள்ளி விழுந்தது 
    கூடையில் 

    மீன். 

    மதன் ஜோக்குகள் எப்போதும் போல.

    பஸ்ஸுக்கு ஏன் காமெரா வழி பார்க்க வேண்டும்?  

    அம்பத்தூர் அம்பது ஊர் மருஊ நன்றாக உள்ளது.
    நெல்லையில் கமெண்டுக்கு ஒரு  கமெண்ட் 

    பணக்காரரின் 
    பிச்சை வேஷம் 
    கிழிந்த ஜீன்ஸ்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யார் பாஸ் என்று மற்றவர்க்கு உரைக்கவே//

      எப்ப்பவுமே அவர்தான்!

      // கவிதை முரண்பாடாக தோன்றுகிறது. தூண்டில் காயப்படுத்துவது மீனின் வாயைத்தான், உடலை அல்ல. //

      ஹி... ஹி...  ஹி வாயும் உடலில்தானே உள்ளது?!!!   சமாளிப்ஸ்..    நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் வழக்கமான பாணியில் கவிதையில் திருத்தம் செய்துள்ளீர்கள்.  ரசித்தேன்.  அதைவிட அபாரம் கடைசி ஹைக்கூ.

      நீக்கு
    2. //பஸ்ஸுக்கு ஏன் காமெரா வழி பார்க்க வேண்டும்? /

      அது பார்த்தால் பைனாகுலர் மாதிரி தெரியவில்லை?!

      நீக்கு
    3. ஜேகே ஐயா நலம்தானே.. இது அதிரா வந்தேனாக்கும்:)))

      நீக்கு
    4. ஹலோ குண்டூஸ் பூஸ் என்னை நீங்க விஜாரிக்களை 

      நீக்கு
    5. அவங்க என்னையும் மறந்துட்டாங்க..:((

      நீக்கு
  30. பயனுள்ள தகவல்களுடன் இன்றைய பதிவு...

    ( அந்த முதுகு மகாத்மியத்தையும் சேர்த்துத் தான்..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //( அந்த முதுகு மகாத்மியத்தையும் சேர்த்துத் தான்..)//

      அதானே..    அதைச் சொல்லுங்கள்!

      நீக்கு
  31. வெளியே செல்லும் அன்று மௌன விரதத்துடன் கருப்பு கண்ணாடி அணிவது நல்லது...!

    பதிலளிநீக்கு
  32. சுவாரஸ்யமாக இருந்தது பதிவு.
    கவிதை அருமை ஜி

    பதிலளிநீக்கு
  33. @ ஸ்ரீராம்..

    // அதிரசம் கிடையாதா?!..//

    சமரசம் ஆகிவிட்டால் அதிரசம் தான்.
    'அதி ரசம்' தான்!..

    பதிலளிநீக்கு
  34. சரசம் ரசம்!!! நிஜமாகவே ரசம் தான் ரொம்ப சிரித்து ரசித்தேன் ஸ்ரீராம்.

    பாஸுக்கு...பாஸ் அப்படி எல்லாம் இல்லை.சே சே எங்க ஸ்ரீராம் இப்படி எல்லாம் பொண்ணுங்கள பாக்க மாட்டாறாக்கும். சும்மா.....நம்ம பாஸ் எவ்வளவு சமத்து...அப்படின்ற எண்ணத்துல சொல்லிருக்காராக்கும்!!!!!!!!!!!!! (பாஸ் - நம்பிட்டேன்!!!!!!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராமுக்குக் கவலை, வியாழன் என்ன எழுதலாம் என்பது. அதுக்காகத்தான் பார்த்திருப்பார். அதுபடி ஒரு பதிவையும் தேத்திவிட்டாரே. எபி தளத்தை அவரின் பாஸ் தொடர்ந்து படித்துவந்தால் தெரிந்திருக்கும்

      நீக்கு
  35. "அப்பா... எவ்வளவு தூரம்... போய்கிட்டே இருக்கோம் இல்லை?" என்று கேட்டு முறைக்க வைப்பார்.//

    ஹாஹாஹாஹாஹாஹா....பாஸு இது உங்களுக்குத் தேவையா????

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே...    அப்படிதான் போட்டுக் கொடுப்பார்கள்!

      நீக்கு
  36. ஹாஹாஹா, பெண்கள் இப்படி எல்லாம் உடை அணிவதே பிறர் பார்க்கத் தானே! யாரும் அடிக்க வரதுக்குள்ளே போய்ப் படுத்துக்கறேன். உட்கார முடியலை. பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு ஹிஹின்னு சிரிக்கணுமா, ஹாஹான்னு சிரிக்கணுமான்னு யோசிக்கிறேன்!

      நீக்கு
    2. இக்கி இக்கி என்று சிரிக்கலாம். இடுப்பில் சுளுக்கு பிடித்துக்கொண்டால் கம்பெனி பொறுப்பில்லை

      நீக்கு
    3. ​அது இஃகி இஃகி யாக்கும்!!

      நீக்கு
  37. மட்டுமில்லாமல் நடுவில் ஒரு அடி ஸ்கேல் அளவே துணி இருந்தது. //

    என்னாது? ஒரு அடி ஸ்கேலா....அப்போ நீங்க சரியா பாக்கலை ஸ்ரீராம்!! உங்க கணக்கு தப்பு தப்பு...தப்பு தப்பா கணக்கு போடறீங்க ஸ்ரீராம்!!
    சரியா 3 இன்ச்!!! அல்லது 2 இன்ச்!!! தான் இருக்கும்!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  38. ஸ்ரீராம் எங்க வீட்டுலயும் உங்களைப் போல இப்படி ப்ளௌஸ் பத்தி கமென்ட் வரும்...இன்னும்...

    நானும் கூடச் சேர்ந்துக்குவேன்.ஹாஹாஹா...சிரித்துக் கொண்டே..ஒத்துப் பாடுவேன்....இல்லைனா ...அட போங்கப்பா வேற வேலை இல்லை..இப்ப பெரும்பான்மை இப்படித்தான் போடுறாங்க ....இதப் போய் பெரிசு படுத்திட்டு ன்னு சொல்வது!!!!(ரசமா இல்லைல்ல!!!? ஸ்ரீராம்?!) ஹிஹிஹி

    ஆனா பச்சையாக ஏதாவது சொன்னா மட்டும் "வாயில நல்ல வார்த்தையே வராதான்னு கேட்பதுண்டு அவ்வளவுதான் எங்க வீட்டு ரசம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஏதாவது பதில் சொன்னால் இன்னும் கமெண்ட் அதிகமாகும். பேசாமல் இருந்துவிட்டால் அதோடு நின்றுவிடும்!

      நீக்கு
    2. சும்மா நாங்க கிழிஞ்ச பேண்ட், ஜன்னல், கதவு என்றெல்லாம் சொல்லுவோம். எல்லாப் பெண்களும் முழுதும் போர்த்திக்கொண்டு வந்தால், அப்புறம் நடைப்பயிற்சி போகக்கூட மூடு வராதாக்கும். என்ன சொல்றீங்க ஸ்ரீராம்?

      நீக்கு
    3. ஹிஹிஹி.. நானெல்லாம் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்கிறவன்... நானெங்கே இதையெல்லாம் பார்க்க!​

      நீக்கு
  39. "ஒண்ணுமில்லை.. இந்த மாதிரி ட்ரெஸ் போடறாங்க.. ஃபேஷன் சரி.. போடறதுக்கு முன்னாடி முதுகில் இருக்கும் அழுக்கை நல்லா தேய்க்க மாட்டாங்களோ... அங்க பாரு அங்கங்கே படை படையா..."//

    ஸ்ரீராம் இனிமே முதுகு தேய்க்கற ப்ரஷ் வாங்கி வைச்சுக்கோங்க!! அப்படி பாத்தீங்கனா ஒரு ப்ரஷ்ஷை கொடுங்க அந்த பொண்ணுங்க கிட்ட...பாருங்க உங்களுக்கு ஒரு சமூக சேவை ஐடியா கொடுத்திருக்கேன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை..   முதுகுல பிரஷ் பண்ணி விட்டுடுங்கன்னு சொல்லப் போறீங்களோன்னு திக்திக்க்னு இருந்தது!

      நீக்கு
  40. "நிஜம்மா.. நேற்று கூட இப்படிதான் டூவீலர் ஓட்டிக்கிட்டு ஒரு பெண்.. மாடர்ன் ட்ரெஸ்.. இரண்டு தோள்பட்டையிலிருந்தும் இறங்கின மாதிரி ட்ரெஸ்... அதான்.. கழுத்துக்கே போகாம ஊசி போடற இடத்துலயே ரெண்டு பக்கமும் நின்னுடுது.. ஏனோ கேஷுவலா உட்கார்ந்து ஓட்டாம நல்லா நிமிர்ந்து செங்குத்தா உட்கார்ந்து ஓட்டிக்கிட்டு போனா... அவ பழக்கமே அதுதான் போல... அவ முதுகுலயும் ஒரே அழுக்கு..."

    "எவ்ளோ டீப் ஆராய்ச்சி!... போற வர்ற பொண்ணு முதுகைப் பார்க்கறதுதான் வேலை போல..."//

    வி வி சி!!!!!! அதுக்குப் பேரு ஆஃப் ஷோல்டர் டாப்ஸ்! நம்ம வீட்டுலயும் ஒரு பொண்ணு அப்படி இந்த தீபாவளிக்குப் போட்டுக் கொண்டிருந்தாள் ஆனால் கொஞ்சம் சின்னப் பெண்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  41. ஆனால் நான் என் முதுகு தெரிய வெளில வரமாட்டேனாக்கும்!"//

    ஹாஹாஹாஹா

    ஆனா கிராமத்தில் ஆண்கள் மேல் சட்டையே இல்லாமல்தான் வராங்க அது ஏன் பேசப்படுவதில்லை!???! (புதனுக்கும் ஆச்சு)

    கீதா

    பதிலளிநீக்கு
  42. ஸ்ரீராம் உங்கள் கவிதை அட்டகாசமோ அட்டகாசம். செம ...அதுவும் //ஏற்கெனவே அது
    சில தூண்டில் முள்களிலிருந்து
    தப்பித்திருந்ததன்
    அடையாளங்கள் தெரிந்தன //

    செம செம!! எங்கேயோ போய்ட்டீங்க ஸ்ரீராம். அசாத்தியமான சிந்தனை. ரொம்ப ரொம்ப ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.  ஜெயக்குமார் ஸார் ஒரு திருத்தமும், போனஸாக ஒரு ஹைக்கூவும் கொடுத்திருக்கார் பாருங்க...

      நீக்கு
  43. மதன் ஜோக்ஸ் செம சிரித்துவிட்டேன்.. டிசம்பர் சீசனுக்குப் போட்டிருக்கலாமோ?!!

    அப்போது மழை நினைத்தது இப்பவும் பொருந்திப் போகிறது!

    சென்னை தண்ணீரில் மிதக்கிறது போல! சென்ற முறை போல சைதாப்பேட்டை பாலத்தில் தண்ணீர் மறிந்து பாய்கிறது பார்த்தேன். இந்த முறை மக்கள் வெள்ளத்தில் அப்போது போல் மக்கள் சிக்கவில்லை அதாவது அறியாமல் வெள்ளத்தில் சிக்கி உயிர் இழப்பு இல்லை என்று நினைக்கிறேன் ஸ்ரீராம். ஆனால் மக்கள் எதிர்ப்பு தெரிகிறது.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  44. ஸ்ரீராம் இதயம் பற்றிய பகிர்வு மிக மிக நல்ல தகவல்கள்.

    மட்டுமில்ல.. நம் இதயத்தை மட்டுமல்ல நம் கூட இருக்கும் சொந்த பந்த இதயங்களையும் கொஞ்சம் கேர் பண்ணத்தான் வேண்டும். குறிப்பாக வயசான இதயங்களை!

    கீதா

    பதிலளிநீக்கு
  45. ஏஞ்சல் வந்து விட்டார், அவரை தொடர்ந்து அதிராவும் வருவார் என்ற ஏஞ்சலின் தகவல் மகிழ்ச்சி.நல்வரவு இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவ்வ்வ்வ்வ் வந்தேன் கோமதி அக்கா, ஆனா தொடர்ந்து வருவேன் என்றில்லை ஆனாலும் புளொக்கை தூசு தட்டுவேன் பார்ப்போம்...

      நீக்கு
  46. ஸ்ரீராம் அண்ணியுடன் படும்பாடு பெரும்பாடாக இருக்கும் போலிருக்கே..:))).. இப்போ எனக்குப் புரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்:)).. எதற்காக அண்ணி வீட்டில நிற்கும்போதெல்லாம் ரெலிபோனிலேயே நிற்கிறா என்பது:)) ஹா ஹா ஹா..

    ஆனா ஒன்று, உங்களுக்குப் பெரிசாக் கதைப்பது பிடிக்காது, ஆனா அண்ணிக்கு எப்பவும் பேசிக்கொண்டே இருக்கோணும்[என்னைப்போல ஹா ஹா ஹா].. அப்போ எப்பூடித்தான் லவ் பண்ண்ன வச்சீங்க?:)))).. ஒருவேளை அப்போ நீங்களும் நல்லாப் பேசுவீங்களோ:))) ஹா ஹா ஹா ஓகே ஒக்கே மீ போயிட்டு வாறேன்ன்.. மீண்டும் சந்திப்போம்... மிக்க நன்றி.... இப்போ அஞ்சுவைத்தேடிப்போறேன்ன் தேம்ஸ்ல தள்ள.. ராத்திரி 11.30 கு முழிச்சிருந்திருக்கிறா இந்தக் குளிரில:)))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம் அதிரா... யூடியூப் சேனல்; பார்க்கும்போது ஜீரண சக்தியும் அதிகம் என்று தெரிகிறது!!!

      நீக்கு
  47. அம்பத்தூர் பிரதர்ஸ் ஜோக் அட்டகாசம்.
    புதிய கவிதை புதிய கவிதை மாதிரியே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  48. திருவான்மியூரில் ஒரு தடவை பார்த்திருக்கிறேன்.. பைக்கில் சென்று கொண்டிருந்த ஆண் பெண் இருவருமே, உலக நலன் கருதியா என்ன தெரியவில்லை, ஆடை சிக்கனம் காட்டினர். நடு ரோட்டில் துணிப் பஞ்சம் எடுபடுவில்லை. என்னைப் போல நிறைய பேர் அவர்களுக்காக ஒரு பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது உங்கள் கையில் கேமிரா இல்லையா?  

      நீக்கு
    2. ஒரு திருமணத்தில் முதுகை திறந்து காட்டி பிளவுஸ் அணிந்து கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு பின்னால் சென்று அதை செல்ஃபோனில் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தில் இங்கே சுவரொட்டி ஒட்டக்கூடாது என்று எழுதி குடும்ப வாட்ஸாப் குழுமத்தில் போட்டேன்.. நானும் கொஞ்சம் குறும்பு பண்ணுவேன்...

      நீக்கு
  49. வணக்கம் சகோதரரே

    மதன் ஜோக்ஸ அனைத்தும் அருமை. அதற்கு நீங்கள் தந்த ஒவ்வொரு டைட்டிலும் அதை விட அருமை. வெள்ளத்தின் பாதிப்புகள் இப்போதும் தொடருவதை செய்திகளில் பார்க்கும் போது மனது வருத்தப்படுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  50. கந்தஷஷ்டியுடன் ஏஞ்சல் அதிரா வந்துவிட்டார்கள் இனி கலகலக்கும்.

    ஜோக்ஸ் ரசனை.

    பதிலளிநீக்கு
  51. 154 வாழ்த்துக்கள் கலகலப்பான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  ஏஞ்சலும் அதிராவும் வந்தாலே பதிவு களைகட்டி விடுகிறது!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!