காது கேட்காத மாற்றுத்திறனாளி மகனுக்கு, பிறர் பேசுவதை உணர வைத்து, நன்றாக பேச வைத்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற வைத்துள்ள, ஈரோட்டைச் சேர்ந்த தாய் அமிர்தவள்ளி:
என் மகன் ரஞ்சித்துக்கு சிறிது பேச வரும் என்றாலும், காது கேட்காது என்பதை, அவன் பிறந்து ஏழு மாதங்கள் கழித்து தான் எங்களுக்கு தெரிந்தது.
சிறப்பு மருத்துவரிடம் காண்பித்த போது, 'காது கேளாதவர்களுக்கு பேச பயிற்சி தரும் சிறப்பு பள்ளியில் சேருங்கள்' என்றார்.அதற்கான பள்ளியை, நாகர்கோவிலில் கிறிஸ்டோபர் என்பவர் நடத்தி வருகிறார் என்பதை கேள்விப்பட்டு அங்கு சென்றோம். கிறிஸ்டோபர், லண்டனில் பயிற்சி பெற்றவர். 'பிறர் பேசும்போது உதடுகளின் அசைவை வைத்து, அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை புரிந்து, காது கேட்கும் சக்தி இல்லாதவர்களால் பேசவும் முடியும்' என்றார். அதன் பிறகு தான் காது கேளாதவர்களும் பேசலாம் என்பதை உணர்ந்தேன். என் மகனை பேச வைக்கும் முறைகளை, கிறிஸ்டோபர் எனக்கு பயிற்சி அளித்தார்.
அதற்காக, காது கேளாதோரை பேச வைக்கும் படிப்பில், பி.எட்., முடித்தேன். அதே சமயம், கோவையில் தனியார் சர்க்கரை ஆலை நிறுவனத்தினர், 'கஸ்துார்பா காந்தி காது கேளாதோர் வாய்மொழி பயிற்சி பள்ளி'யை துவங்கினர். எனக்கு அந்த பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்தது. மகனையும் அதே பள்ளியில் சேர்த்தேன். 'அ' என்று நான் உரக்க சொல்லுகையில், தொண்டையில் ஏற்படும் அதிர்வுகளை ரஞ்சித்தை தொட்டு உணரச் செய்து, எப்படி ஒலி உருவாகிறது என்பதை புரிந்து கொள்ள வைத்தேன்.
ஒற்றை எழுத்துக்களுக்கு பின் வார்த்தைகளை கற்றுக் கொடுத்தேன். பலமுறை உச்சரித்து பயிற்றுவித்தேன். அவன் பேசும் போதும், எழுதும் போதும், ஆரம்பத்தில் தப்பும் தவறுமாக தான் இருந்தது. அதை பொறுமையாக சரி செய்து, அவனை செதுக்கினேன்.எந்தப் பொருள் எங்கு கிடைக்கும் என்று கடைகளுக்கு அழைத்து சென்று பொறுமையாக அவனுக்கு சொல்லித் தருவேன். ஊர்களுக்கு செல்லும் போது வழியில் வரும் ஊர்கள், குளம், மரங்கள், வயல், பயிர் என்று விளக்கிக் கொண்டே போவேன்.தனியார் தொழில்நுட்ப கல்லுாரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தான். ஐ.ஏ.எஸ்., தேர்வையும் தமிழில் தான் எழுதினான். டில்லியில் நடந்த நேர்முக தேர்வுக்கு தனியாக சென்று வந்தான்; தற்போது நன்றாக பேசுகிறான். வரும் டிசம்பரில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி துவங்குகிறது. ஹிந்தி தெரியாது; ஆனால், அதை அவன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவனுக்கும், எனக்கும் நிறையவே இருக்கிறது!
====================================================================================================
சென்னை: உயிரிழந்துவிட்டதாக கருதியவரை தோளில் தூக்கிச்சென்று காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பணிபுரிந்த உதயா, கனமழை காரணமாக கல்லறையிலேயே தங்கி இருந்தார். மழையில் நனைந்ததால், உடல்நிலை மோசமடைந்து மயங்கினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவர் இறந்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். டி.பி. சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வந்து பார்த்த போது, உதயா உடலில் அசைவு இருந்தது தெரியவந்தது. உடனே அவரை, தனது தோளில் தூக்கிக் கொண்டு வந்து ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். உதயாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. துரிதமாக செயல்பட்ட ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மகாராஷ்ட்டிராவின் பூனாவில் ஒரு தினக்கூலி ஒருவர் தன் மனைவியை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பிரசவம் சிஸேரியன் ஆனது. எவ்வளவு ஃபீஸ் ஆகுமோ தெரியலையே. வீட்டை அடமானம் வைத்து விடலாம் என்று நினைத்தார்.
"டாக்டர் சார், என்ன குழந்தை?!
"உங்களுக்கு "தேவதை" பிறந்திருக்கு" என்றார்.
"ஃபீஸ் எவ்வளவு?"
"தேவதைகள் பிறந்தால் நான் ஃபீஸ் வாங்குவதில்லை" என்றார். "ஐயா நீங்க தெய்வம்" என்று காலில் விழுந்தார்.
பூனாவில் டாக்டர் கணேஷ் ராக் என்பவர் 10 வருடங்களாக பெண் குழந்தை பிறந்தால் ஒரு பைசா கூட வாங்குவதில்லை. இதுவரை 1000 க்கும் மேற்பட்ட இலவச பிரசவம் பார்த்து விட்டார்.
"நான் மல்யுத்த வீரராக வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் என் அம்மா, நீ மருத்துவராகி பெண் தேவதைகளைக் காப்பாற்று என்றார்" என்று பெருமையோடு சொல்கிறார்.
BBC, லண்டன் நிறுவனம் "Unsung Indian" என்று இவரைப் பற்றி கட்டுரை வெளியிட்டு பாராட்டியுள்ளது!
நன்றி நாகூர்கனி பாஷா - முகநூல்.
===============================================================================
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவும், வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும் அடுத்ததாக உருவாகி இருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் மக்கள் அவதிப்படாமல் பிரச்னைகள் இல்லாமல் வெள்ளத்தில் சிக்காமல் அமைதியாகவும், மன மகிழ்வுடனும் வாழ்க்கையை நடத்தப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குபெண் காவல் அதிகாரி ராஜேஸ்வரி பற்றிச் செய்திகளில் பார்த்தேன். முதல் செய்தி முற்றிலும் புத்தம்புதியது. அந்த அன்னைக்குக் கோடானுகோடி நமஸ்காரங்கள். மிகவும் பொறுமை.உண்மையிலேயே பெண் தெய்வம் தான்.
பதிலளிநீக்குகடைசிச் செய்தியில் உள்ள மருத்துவர் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கேன். பல ஏழை மக்கள் இதனால் பயன் அடைவார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி.
நீக்குஇன்னும் யாருமே எட்டிப் பார்க்கலை போல! நான் தான் ஃபர்ஷ்ட்டோ ஃபர்ஷ்ட்ட்டு! :)))))
பதிலளிநீக்குபவர் சப்ளை ப்ராப்ளம் ஆக இருக்குமோ?
நீக்குஆமா இல்ல! எனக்கு அது தோணவே இல்லை. :(
நீக்குநான்லாம் வயசுல ரொம்ப ரொம்பப் பெரியவங்க, சில நாட்கள் எபி பக்கம் எட்டிப் பார்க்காமல் கல்யாணத்துல பிஸியா இருந்தவங்க, இன்னைக்காவது முதலில் வந்து தனியாக இருந்து பயப்பட்ட்டும்னு வரலை.
நீக்குஹாஹாஹா! அந்த பயம் இருக்கட்டும்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம். அருமையான பாசிடிவ் செய்திகள்! காவலர் ராஜேஸ்வரி பற்றிய செய்தி தொலைகாட்சி, வாட்ஸாப் என்று அனைத்திலும் வந்து விட்டது.
பதிலளிநீக்குமாற்றுத் திறனாளி மகனை ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற வைத்த அமிர்தவள்ளியின் பொறுமையையும், உழைப்பையும் கை கூப்பி வணங்குகிறேன்.
வணங்குவோம்.
நீக்குஇன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி பாராட்டுக்குறியவர். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துவோம் ஜி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க.
நீக்கு//தொழில்நுட்ப கல்லுாரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தான். ஐ.ஏ.எஸ்., தேர்வையும் தமிழில் தான் எழுதினான். டில்லியில் நடந்த நேர்முக தேர்வுக்கு தனியாக சென்று வந்தான்; தற்போது நன்றாக பேசுகிறான்//
பதிலளிநீக்குதாய் அமிர்தவள்ளி அவர்களின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள் தாயுக்கும், மகனுக்கும்.
இன்ஸ்பெகடர் ராஜேஸ்வரி அவர்களை பாராட்ட வேண்டும். அவர் செய்தி தினமலரில் படித்தேன்.
//பூனாவில் டாக்டர் கணேஷ் ராக் என்பவர் 10 வருடங்களாக பெண் குழந்தை பிறந்தால் ஒரு பைசா கூட வாங்குவதில்லை. இதுவரை 1000 க்கும் மேற்பட்ட இலவச பிரசவம் பார்த்து விட்டார். //
வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள் மருத்துவருக்கு.
வாழ்த்துவோம், பாராட்டுவோம்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குமனதால் மிக உயர்ந்தவர்களைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள்! படிக்கையில் மனம் நெகிழ்ந்து விட்டது! திருமதி.அமிர்தவள்ளியின் மன உறுதியையும் மருத்துவர் கணேஷ், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இவர்களது சேவை மனப்பான்மையையும் எப்படி வார்த்தைகளால் பாராட்டுவது என்று தெரியவில்லை! அவர்களைப் போற்றுவோம்! திருமதி.ராஜேஸ்வரி ஏற்கனவே அனைதையாய் சாலையில் விழுந்து இறந்து கிடந்த ஒரு மூதாட்டியை இடுகாடு எடுத்துச்சென்று தானே தகனம் செய்தவ்ர் என்று படித்திருக்கிறேன்!
வாங்க மனோ அக்கா.. ஆமாம், நானும் அந்த விவரங்கள் படித்தேன்.
நீக்குநல்ல மனங்கள் வாழ்க...
பதிலளிநீக்குவாழ்த்துவோம்.
நீக்குகாவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி முன்பேயே குடந்தை மகாமகம் விபத்தின்போது நிறைய பேரைக் காப்பாற்றியவராம். இதைக்குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவரை டிஜிபி சைலேந்திரபாபு முன்னிலையில் வாழ்த்திப் பேசியதுடன் தன் வீட்டுக்கும் தேனீருக்கு அழைத்து கெளரவித்துள்ளார். இதை இப்போது தான் ' தினத்தந்தி'யில் படித்தேன்.
பதிலளிநீக்குஆமாம், படித்தேன்.
நீக்குஇன்றைய பாசிடிவ் செய்திகள் எல்லாமே அருமை.
பதிலளிநீக்குகாது கேட்கும் குறைபாடுடைய பையனை ஐஏஎஸ் வரை அழைத்துவந்த தாய், காவலர், மருத்துவர் எனப் பலரும் மனதை நெகிழ்த்துகின்றனர்
ஆம் நெல்லை. வாழ்த்துவோம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாங்க துரை செல்வராஜூ சார்... வணக்கம்.
நீக்குநேற்று இரவிலிருந்து மறுபடியும் காய்ச்சல்.. தட்டுத் தடுமாறி சமையல் வேலை முடித்து சாப்பிட்டாயிற்று..
பதிலளிநீக்கு(பீர்க்கங்காய் சாம்பார்!..)
பதிவைப் படித்து விட்டு மறுபடியும் வருகிறேன்..
என்ன ஆச்சு? மறுபடியா? மருத்துவரைப் பார்க்கிறீர்களா? உடல்நலத்தை கவனியுங்கள். இந்தியப்பயணம் எப்போது?
நீக்குஅடக் கடவுளே! விரைவில் நல்ல செய்திகளாகக் கொடுக்கப் பிரார்த்திக்கிறேன்.
நீக்கு@ ஸ்ரீராம்..
நீக்கு//என்ன ஆச்சு? மறுபடியா? ..//
நவம்பர் முதலே சற்று உடல் நலக் குறைவு தான்.. இதற்கு நானே காரணம்..
இரக்கம் கொண்டால் இப்படியும் ஆகுமோ!..
@ கீதாக்கா..
நீக்கு// விரைவில் நல்ல செய்திகளாகக் கொடுக்க.. //
தங்கள் அன்பினுக்கு நன்றியக்கா..
திருப்பதி சாரத்தில் கீதா ரெங்கன் வெள்ளத்தின் நடுவே மாட்டிக் கொண்டிருக்கிறார். உடன் அவரது வயதான அப்பா மட்டும். சுற்றிலும் தண்ணீர். போக்குவரத்து கிடையாது. மின்சாரம் கிடையாது என்பதால் தகவல் பரிமாற்றத்துக்கு செல்போனை ரொம்பக் கம்மியாய் உபயோகிக்க வேண்டிய நிலை. வீட்டி வாசல் படி வரை தண்ணீர். மழை நிற்கவும், தண்ணீர் அளவு குறையவும், அவர்களுக்கு போக்குவரத்துக்கு ஏதாவது வண்டிகள் கிடைத்து பத்திரமாய் ஊர் கிளம்பவும் பிரார்த்தனைகள். அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குதி/கீதா அவர்கள் இந்த இக்கட்டிலிருந்து விரைவில் வெளியேறிப் பாதுகாப்பான இடம் சென்று சேரவும் சௌகரியமாக ஊருக்குத் திரும்பவும் எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கிறோம். செய்தியைக் கேட்டதில் இருந்து ஒரே கவலையாக இருக்கிறது. :(
நீக்குவாட்ஸப்பில் திருப்பதிசாரம் எனப் படித்தவுடன் குழப்பம். இது திருப்பதியேதானா அல்லது வேறொன்றா என.
நீக்குஅவனருளால் விரைவில் இருவரும் பாதுகாப்பாக ஊர் திரும்பட்டும்.
மனதால் செயலால் உயர்ந்தவர்களைப் பற்றியது இன்றைய பதிவு..
பதிலளிநீக்குதிருமதி.அமிர்தவள்ளி, டாக்டர் கணேஷ், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இவர்களது சேவை மனப்பான்மையைச் சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை..
மனதார வாழ்த்துவோம்..
சகோதரி கீதா ரங்கன் அவர்களுக்கு நேர்ந்துள்ள இக்கட்டான சூழ்நிலை இறைவன் அருளால் விலகட்டும்..
பதிலளிநீக்குதெய்வம் துணையிருந்து காத்து அருள்வதற்கு வேண்டிக் கொள்வோம்..
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குசேவை உள்ளங்கள் வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குநல்லபடியாக கீதாரெங்கன் தன் அப்பாவுடன் ஊர் திரும்ப பிரார்த்தனை செய்வோம்.
பதிலளிநீக்கு